|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness >
Spirituality & the
Tamil Nation > Ramalinga Atikal - Vallalar >
திருவருட்பா
-
முதல் திருமுறை (1 - 537) >
இரண்டாம் திருமுறை (571 - 1006) >
இரண்டாம் திருமுறை (1007 - 1543) >
இரண்டாம் திருமுறை (1544 - 1958) >
மூன்றாம் திருமுறை (1959 - 2570) >
நான்காம் திருமுறை (2571- 3028) >
ஐந்தாம் திருமுறை (3029-3266) > ஆறாம் திருமுறை (3267 -3871) >
ஆறாம் திருமுறை (3872 - 4614) >
ஆறாம் திருமுறை -
(4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818)
> திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் >
திருவருட்பா அகவல்
& திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - முதற்
பகுதி பாடல்கள் (3267 -3871)
Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உள்ளுறை
1. பரசிவ வணக்கம் 3 3267 - 3269 2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை 13 3270 - 3282 3. ஆற்றாமை 10 3283 - 3292 4. பிறப்பவம் பொறாது பேதுறல் 10 3293 - 3302 5. மாயைவலிக் கழுங்கல் 10 3303 - 3312 6. முறையீடு 10 3313 - 3322 7. அடியார் பேறு 20 3323 - 3342 8. ஆன்ம விசாரத் தழுங்கல் 10 3343 - 3352 9. அவா அறுத்தல் 13 3353 - 3365 10. தற் சுதந்தரம் இன்மை 10 3366 - 3375 11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு 10 3376 - 3385 12. பிள்ளைச் சிறு விண்ணப்பம் 24 3386 - 3409 13. பிள்ளைப் பெரு விண்ணப்பம் 133 3410 - 3542 14. மாயையின் விளக்கம் 10 3543 - 3552 15. அபயத் திறன் 28 3553 - 3580 16. ஆற்றமாட்டாமை 10 3581 - 3590 17. வாதனைக் கழிவு 20 3591 - 3610 18. அபயம் இடுதல் 10 3611 - 3620 19. பிறிவாற்றாமை 10 3621 - 3630 20. இறை பொறுப்பியம்பல் 10 3631 - 3640 21. கைம்மாறின்மை 10 3641 - 3650 22. நடராபதி மாலை 34 3651 - 3684 23. சற்குருமணி மாலை 25 3685 - 3709 24. தற்போத இழப்பு 10 3710 - 3719 25. திருமுன் விண்ணப்பம் 10 3720 - 3729 26. இனித்த வாழ்வருள் எனல் 10 3730 - 3739 27. திருவருள் விழைதல் 20 3740 - 3759 28. திருக்கதவந் திறத்தல் 10 3760 - 3769 29. சிற்சபை விளக்கம் 10 3770 - 3779 30. திருவருட் பேறு 10 3780 - 3789 31. உண்மை கூறல் 10 3790 - 3799 32. பிரியேன் என்றல் 11 3800 - 3810 33. சிவ தரிசனம் 11 3811 - 3821 34. அனுபோக நிலயம் 10 3822 - 3831 35. சிவயோக நிலை 10 3832 - 3841 36. பெற்ற பேற்றினை வியத்தல் 10 3842 - 3851 37. அழிவுறா அருள்வடிவப் பேறு 10 3852 - 3861 38. பேரருள் வாய்மையை வியத்தல் 10 3862 - 3871 அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
திருச்சிற்றம்பலம்
ஆறாம் திருமுறை - முதற் பகுதி 1. பரசிவ வணக்கம்
| 3267 | எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே | 1 |
| 197. எல்லாம்வல் லான்தாளை ஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு. | ||
| எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
| 3268 | திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச் தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க 2 | |
| 198. 2500 ஆம் பாடலின் உத்தரவடிவம். | ||
| எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
| 3269 | அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும்
அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே. | 3 |
| 3270 | அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால் பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப் இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும் சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும் 1 | |
| 3271 | வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல் அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய் திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான 2 | |
| 3272 | சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப் சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம் 3 | |
| 3273 | இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம் நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம் திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம் 4 | |
| 3274 | எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய் சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும் வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் 5 | |
| 3275 | அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய் மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த் உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி 6 | |
| 3276 | அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள் கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும் கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய் 7 | |
| 3277 | பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப் ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய் நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய் ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே 8 | |
| 3278 | இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர் பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம் விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே 9 | |
| 3279 | ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம் பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர் டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம் ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே 10 | |
| 3280 | வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம் புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம் உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே 11 | |
| 3281 | இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள் செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும் வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார் உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே 12 | |
| 3282 | ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார் அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர் என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார் ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே 13 | |
| 3283 | எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன் வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் 1 | |
| 3284 | கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் 2 | |
| 3285 | கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் 3 | |
| 3286 | நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் 4 | |
| 3287 | செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச் அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர் கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் 5 | |
| 3288 | அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் 6 | |
| 3289 | வாட்டமே உடையார் தங்களைக் காணின் கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் 7 | |
| 3290 | கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் 8 | |
| 3291 | பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் 9 | |
| 3292 | கடியரில் கடியேன் கடையரில் கடையேன் பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் 10 | |
| 3293 | குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன் மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன் நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன் 1 | |
| 3294 | விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம் கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன் களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ 2 | |
| 3295 | அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும் குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன் செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன் எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன் 3 | |
| 3296 | இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர் அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன் தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது 4 | |
| 3297 | ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன் சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன் மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன் வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 5 | |
| 3298 | அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன் பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன் விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன் 6 | |
| 3299 | பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன் வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன் தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 7 | |
| 3300 | தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத் பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன் அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால் நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 8 | |
| 3301 | இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில் பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 9 | |
| 3302 | காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக் நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன் கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது 10 | |
| 3303 | தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித் கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும் ஓவு றாதுழல் ஈஎனப் பலகால் சாவு றாவகைக் கென்செயக் கடவேன் 1 | |
| 3304 | போக மாதியை விழைந்தனன் வீணில் தேக மாதியைப் பெறமுயன் றறியேன் காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும் ஆக மாதிசொல் அறிவறி வேனோ 2 | |
| 3305 | விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன் பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன் 3 | |
| 3306 | மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன் இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன் குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன் சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன் 4 | |
| 3307 | கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக் கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த விடியு முன்னரே எழுந்திடா துறங்கும் அடிய னாவதற் கென்செயக் கடவேன் 5 | |
| 3308 | தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன் ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன் வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன் ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன் 6 | |
| 3309 | வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து பருத்த ஊனொடு மலம்உணத் திரியும் கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன் 7 | |
| 3310 | துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச் தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன் திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன் உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன் 8 | |
| 199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு | ||
| 3311 | கான மேஉழல் விலங்கினிற் கடையேன் மான மேலிடச் சாதியே மதமே ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன் ஞான மேவுதற் கென்செயக் கடவேன் 9 | |
| 3312 | இருளை யேஒளி எனமதித் திருந்தேன் மருளை யேதரு மனக்குரங் கோடும் பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன் அருளை மேவுதற் கென்செயக் கடவேன் 10 | |
| 3313 | மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன் 1 | |
| 3314 | அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன் நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன் மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும் இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன் 2 | |
| 3315 | கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன் சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும் இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன் 3 | |
| 3316 | தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன் யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன் ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன் 4 | |
| 3317 | வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன் நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன் போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன் 5 | |
| 3318 | கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும் கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன் மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும் இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் 6 | |
| 3319 | சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன் ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல் நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில் ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் 7 | |
| 3320 | சாகாத தலைஅறியேன் வேகாத காலின் ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும் மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும் ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் 8 | |
| 200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு. | ||
| 3321 | தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன் அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன் 9 | |
| 3322 | வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் 10 | |
| 3323 | அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம்
அளித்திடுவார் வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம் நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே. | 1 |
| 3324 | பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள் ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன் நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே. | 2 |
| 3325 | பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான் ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும் ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே. | 3 |
| 3326 | மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில் கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே. | 4 |
| 3327 | முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக் கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ. | 5 |
| 3328 | அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல் செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன் எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே. | 6 |
| 201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு; பி. இரா. பாடம். | ||
| 3329 | அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும் தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான் எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே. | 7 |
| 3320 | தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில் சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன் ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே. | 8 |
| 3331 | பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக் கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே. | 9 |
| 3332 | வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும்
வினைத்துயர்கள் பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான் நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ. | 10 |
| 3333 | கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான் அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன் கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச் சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ. | 11 |
| 3334 | படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக் கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன் அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே. | 12 |
| 3335 | நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும் ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல் மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே. | 13 |
| 3336 | நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே. | 14 |
| 3337 | இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார் வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன் அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத் துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே. | 15 |
| 3338 | எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன் சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே. | 16 |
| 3339 | எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்202 பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203. | 17 |
| 202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு. 203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா. | ||
| 3340 | அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில் கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே. | 18 |
| 3341 | எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள் எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல் வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே. | 19 |
| 3342 | கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும் பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில் ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே. | 20 |
| 3343 | போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக் மோகமே உடையேன் என்னினும் எந்தாய் 1 | |
| 3344 | பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப் பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன் கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும் 2 | |
| 3345 | விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் வழுத்தலை அறியேன் மக்களே மனையே கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் 3 | |
| 3346 | புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் 4 | |
| 3347 | கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை நெட்டிலை அனையேன் என்னினும் வேறு 5 | |
| 3348 | நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் 6 | |
| 3349 | அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் 7 | |
| 3350 | தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் 8 | |
| 3351 | வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் 9 | |
| 3352 | உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன் எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் 10 | |
| 3353 | தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே காலையா தியமுப் போதினும் சோற்றுக் 1 | |
| 3354 | சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை 2 | |
| 3355 | விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை 3 | |
| 3356 | உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு 4 | |
| 3357 | கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் 5 | |
| 3358 | பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க 6 | |
| 3359 | உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் 7 | |
| 3360 | மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை 8 | |
| 3361 | தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த 9 | |
| 3362 | வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி உறுத்தலே முதலா உற்றபல் உணவை துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப் 10 | |
| 3363 | பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து 11 | |
| 3364 | அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில் 12 | |
| 3365 | உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் 13 | |
| 3366 | இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை துப்பாய உடலாதி தருவாயோ அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் 1 | |
| 3367 | என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் மன்னேஎன் மணியேகண் மணியேஎன் பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி 2 | |
| 3368 | பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் 3 | |
| 3369 | பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் 4 | |
| 3370 | உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் 5 | |
| 3371 | சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற நோவதின்று புதிதன்றே என்றும்உள ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் 6 | |
| 3372 | இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம் நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் 7 | |
| 3373 | கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந் எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் 8 | |
| 3374 | கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் 9 | |
| 3375 | இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் என்பேதை மனமடங்கி இருப்பதன்றி அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் 10 | |
| 3376 | திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும் உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப் அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய் 1 | |
| 3377 | கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல் சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான் 2 | |
| 3378 | நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும் 3 | |
| 3379 | சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான் பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும் நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான் 4 | |
| 3380 | களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ 5 | |
| 3381 | திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம் கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர் விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம் தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ 6 | |
| 3382 | ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே கானந்த மதத்தாலே காரமறை படுமோ ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ 7 | |
| 3383 | தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன் காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை 8 | |
| 3384 | தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச் காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ 9 | |
| 3385 | ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ 10 | |
| 3386 | தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் 1 | |
| 3387 | பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான் முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ 2 | |
| 3388 | வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் |