|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home >
Unfolding Consciousness >
Spirituality & the
Tamil Nation >
The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள்
>
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் >
நான்காம் திருமுறை பாடல்கள் ( 1- 487 ) >
நான்காம் திருமுறை பாடல்கள் (488 - 1070) > ஐந்தாம்
திருமுறை பாடல்கள் (1 - 509 ) >
ஐந்தாம் திருமுறை
பாடல்கள் ( 510 -1016 )
> ஆறாம் திருமுறை பாடல்கள் ( 1-508) >
ஆறாம் திருமுறை பாடல்கள் (509 - 981)
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை இரண்டாம் பகுதி -
பாடல்கள் ( 510 -1016 )
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland . PDF version: Mr. P.I.Arasu, Toronto, ON, Canada.
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 5.051 | திருப்பாலைத்துறை | (510-520) | மின்பதிப்பு |
| 5.052 | திருநாகேச்சரம் | (521-530) | மின்பதிப்பு |
| 5.053 | திருவதிகைவீரட்டம் | (531-542) | மின்பதிப்பு |
| 5.054 | திருவதிகைவீரட்டம் | (543- 552) | மின்பதிப்பு |
| 5.055 | திருநாரையூர் | (553-562) | மின்பதிப்பு |
| 5.056 | திருக்கோளிலி | (563-572) | மின்பதிப்பு |
| 5.057 | திருக்கோளிலி | (573 -582) | மின்பதிப்பு |
| 5.058 | திருப்பழையாறைவடதளி | (583 -592) | மின்பதிப்பு |
| 5.059 | திருமாற்பேறு | (593 -601) | மின்பதிப்பு |
| 5.060 | திருமாற்பேறு | (601-610) | மின்பதிப்பு |
| 5.061 | திருஅரிசிற்கரைப்புத்தூர் | (611 -620) | மின்பதிப்பு |
| 5.062 | திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் | (621-630) | மின்பதிப்பு |
| 5.063 | திருக்குரங்காடுதுறை | (631-641) | மின்பதிப்பு |
| 5.064 | திருக்கோழம்பம் | (642-652) | மின்பதிப்பு |
| 5.065 | திருப்பூவனூர் | (653-663) | மின்பதிப்பு |
| 5.066 | திருவலஞ்சுழி | (664-673) | மின்பதிப்பு |
| 5.067 | திருவாஞ்சியம் | (674- 680) | மின்பதிப்பு |
| 5.068 | திருநள்ளாறு | (681-690) | மின்பதிப்பு |
| 5.069 | திருக்கருவிலி | (691 -700) | மின்பதிப்பு |
| 5.070 | திருக்கொண்டீச்சரம் | (701-710) | மின்பதிப்பு |
| 5.071 | திருவிசயமங்கை | (711-720) | மின்பதிப்பு |
| 5.072 | திருநீலக்குடி | (721-730) | மின்பதிப்பு |
| 5.073 | திருமங்கலக்குடி | (731-740) | மின்பதிப்பு |
| 5.074 | திருஎறும்பியூர் | (741 -750) | மின்பதிப்பு |
| 5.075 | திருக்குரக்குக்கா | (751- 760) | மின்பதிப்பு |
| 5.076 | திருக்கானூர் | (761-769) | மின்பதிப்பு |
| 5.077 | திருச்சேறை | (770-779) | மின்பதிப்பு |
| 5.078 | திருக்கோடிகா | (780-786) | மின்பதிப்பு |
| 5.079 | திருப்புள்ளிருக்குவேளூர் | (787-795) | மின்பதிப்பு |
| 5.080 | திருஅன்பில்ஆலந்துறை | (796- 805) | மின்பதிப்பு |
| 5.081 | திருப்பாண்டிக்கொடுமுடி | (806-810) | மின்பதிப்பு |
| 5.082 | திருவான்மியூர் | (811-820) | மின்பதிப்பு |
| 5.083 | திருநாகைக்காரோணம் | (821-830) | மின்பதிப்பு |
| 5.084 | திருக்காட்டுப்பள்ளி | (831-840) | மின்பதிப்பு |
| 5.085 | திருச்சிராப்பள்ளி | (841-844) | மின்பதிப்பு |
| 5.086 | திருவாட்போக்கி | (845-854) | மின்பதிப்பு |
| 5.087 | திருமணஞ்சேரி | (855-864) | மின்பதிப்பு |
| 5.088 | திருமருகல் | (865- 874) | மின்பதிப்பு |
| 5.089 | தனி | (875-884) | மின்பதிப்பு |
| 5.090 | தனி | (885-894) | மின்பதிப்பு |
| 5.091 | தனி | (895-900) | மின்பதிப்பு |
| 5.092 | காலபாராயணம் | (901-914) | மின்பதிப்பு |
| 5.093 | மறக்கிற்பனே என்னும் | (915-924) | மின்பதிப்பு |
| 5.094 | தொழற்பாலனம் என்னும் | (925-935) | மின்பதிப்பு |
| 5.095 | இலிங்கபுராணம் | (936-946) | மின்பதிப்பு |
| 5.096 | மனத்தொகை | (947-956) | மின்பதிப்பு |
| 5.097 | சித்தத்தொகை | (957 -986) | மின்பதிப்பு |
| 5.098 | உள்ளம் | (987-996) | மின்பதிப்பு |
| 5.099 | பாவநாசம் | (997-1006) | மின்பதிப்பு |
| 5.100 | ஆதிபுராணம் | (1007-1016) | மின்பதிப்பு |
| 510 |
நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக் கோல மாமதி கங்கையுங் கூட்டினார் சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப் பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே. | 5.51.1 | 511 | கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர் தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர் திவள வானவர் போற்றித் திசைதொழும் பவள மேனியர் பாலைத் துறையரே. | 5.51.2 | 512 | மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும் பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ மன்னி நான்மறை யோடுபல் கீதமும் பன்னி னாரவர் பாலைத் துறையரே. | 5.51.3 | 513 | நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங் கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே ஆடி னாரழ காகிய நான்மறை பாடி னாரவர் பாலைத் துறையரே. | 5.51.4 | 514 | சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் பித்தர் நான்மறை வேதியர் பேணிய அத்த னேநமை யாளுடை யாயெனும் பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே. | 5.51.5 | 515 | விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும் மண்ணி னார்மற வாதுசி வாயவென் றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம் பண்ணி னாரவர் பாலைத் துறையரே. | 5.51.6 | 516 | குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை விரவி னார்பண் கெழுமிய வீணையும் மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம் பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே. | 5.51.7 | 517 | தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந் தடரும் போதர னாயருள் செய்பவர் கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற் படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே. | 5.51.8 | 518 | மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை நாகந் தோய்ந்த அரையினர் நல்லியற் போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர் பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே. | 5.51.9 | 519 | வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர் அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர் செங்கண் மாலயன் தேடற் கரியவர் பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே. | 5.51.10 | 520 | உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை நெருக்கி னானை நெரித்தவன் பாடலும் இரக்க மாவருள் செய்தபா லைத்துறைக் கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே. | 5.51.11 |
| 521 |
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர் வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி செல்வர் போல்திரு நாகேச் சரவரே. | 5.52.1 | 522 | நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர் மேவி வந்து வணங்கி வினையொடு பாவ மாயின பற்றறு வித்திடுந் தேவர் போல்திரு நாகேச் சரவரே. | 5.52.2 | 523 | ஓத மார்கட லின்விட முண்டவர் ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம் மாதோர் கூறர் மழுவல னேந்திய நாதர் போல்திரு நாகேச் சரவரே. | 5.52.3 | 524 | சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன் வந்து சீர்வழி பாடுகள் செய்தபின் ஐந்த லையர வின்பணி கொண்டருள் மைந்தர் போல்மணி நாகேச் சரவரே. | 5.52.4 | 525 | பண்டோ ர் நாளிகழ் வான்பழித் தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத் தண்ட மாவிதா தாவின் றலைகொண்ட செண்டர் போல்திரு நாகேச் சரவரே. | 5.52.5 | 526 | வம்பு பூங்குழல் மாது மறுகவோர் கம்ப யானை யுரித்த கரத்தினர் செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை நம்பர் போல்திரு நாகேச் சரவரே. | 5.52.6 | 527 | மானை யேந்திய கையினர் மையறு ஞானச் சோதியர் தியர் நாமந்தான் ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்குந் தேனர் போல்திரு நாகேச் சரவரே. | 5.52.7 | 528 | கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர் தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி அழகர் ஆல்நிழற் கீழற மோதிய குழகர் போல்குளிர் நாகேச் சரவரே. | 5.52.8 | 529 | வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண் சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ் சிட்டர் போல்திரு நாகேச் சரவரே. | 5.52.9 | 530 | தூர்த்தன் றோண்முடி தாளுந் தொலையவே சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல் ஆர்த்து வந்துல கத்தவ ராடிடுந் தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே. | 5.52.10 |
| 531 |
கோணன் மாமதி சூடியோர் கோவணம் நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை பாணில் வீணை பயின்றவன் வீரட்டங் காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.1 | 532 | பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி அண்ண லையம ரர்தொழு மாதியைச் சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம் நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.2 | 533 | உற்ற வர்தம் உறுநோய் களைபவர் பெற்ற மேறும் பிறங்கு சடையினர் சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங் கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.13 | 534 | முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங் கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.4 | 535 | பல்லா ரும்பல தேவர் பணிபவர் நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங் கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.5 | 536 | வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் கொண்டான் கோல மதியோ டரவமும் விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங் கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.6 | 537 | அரையார் கோவண ஆடைய னாறெலாந் திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற் கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.7 | 538 | நீறு டைத்தடந் தோளுடை நின்மலன் ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங் கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.8 | 539 | செங்கண் மால்விடை யேறிய செல்வனார் பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர் அங்கண் ஞாலம தாகிய வீரட்டங் கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.9 | 540 | பூணா ணாரம் பொருந்த வுடையவர் நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற் பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங் காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.10 | 541 | வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந் திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம் உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.11 | 542 | உலந்தார் வெண்டலை உண்கல னாகவே வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச் சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம் புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. | 5.53.12 |
| 543 |
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்ட லரிடு வார்வினை மாயுமாற் கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ ரட்ட னாரடி சேரு மவருக்கே. | 5.54.1 | 544 | நீள மாநினைந் தெண்மலர் இட்டவர் கோள வல்வினை யுங்குறை விப்பரால் வாள மாலிழி யுங்கெடி லக்கரை வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே. | 5.54.2 | 545 | கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண் டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார் தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே. | 5.54.3 | 546 | பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார் வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே. | 5.54.4 | 547 | தேனப் போதுகள் மூன்றொடோ ரைந்துடன் தானப் போதிடு வார்வினை தீர்ப்பவர் மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை வேன லானை யுரித்தவீ ரட்டரே. | 5.54.5 | 548 | ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர் ஊழித் தொல்வினை யோட அகற்றுவார் பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே. | 5.54.6 | 549 | உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிடத் திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால் வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே. | 5.54.7 | 550 | ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற் காலை யேத்த வினையைக் கழிப்பரால் ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே. | 5.54.8 | 551 | தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற் பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார் மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே. | 5.54.9 | 552 | அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண் டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந் தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ ரட்ட னாரடி சேரு மவர்களே. | 5.54.10 |
| 553 |
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர் கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும் நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக் காறு சூடலும் அம்ம அழகிதே. | 5.55.1 | 554 | புள்ளி கொண்ட புலியுரி யாடையும் வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும் நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே. | 5.55.2 | 555 | வேடு தங்கிய வேடமும் வெண்டலை ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும் நாடு தங்கிய நாரையூ ரான்நடம் ஆடு பைங்கழல் அம்ம அழகிதே. | 5.55.3 | 556 | கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும் மிக்க வெண்டலை மாலை விரிசடை நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக் கக்கி னாரமும் அம்ம அழகிதே. | 5.55.4 | 557 | வடிகொள் வெண்மழு மானமர் கைகளும் பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும் நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர் அடிகள் தம்வடி வம்ம அழகிதே. | 5.55.5 | 558 | சூல மல்கிய கையுஞ் சுடரொடு பாலு நெய்தயி ராடிய பான்மையும் ஞால மல்கிய நாரையூர் நம்பனுக் கால நீழலும் அம்ம அழகிதே. | 5.55.6 | 559 | பண்ணி னான்மறை பாடலொ டாடலும் எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும் நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர் அண்ண லார்செய்கை அம்ம அழகிதே. | 5.55.7 | 560 | என்பு பூண்டெரு தேறி இளம்பிறை மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே நன்ப கற்பலி தேரினும் நாரையூர் அன்ப னுக்கது அம்ம அழகிதே. | 5.55.8 | 561 | முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே இரவி னின்றெரி யாடலு நீடுவான் நரலும் வாரிநன் னாரையூர் நம்பனுக் கரவும் பூணுதல் அம்ம அழகிதே. | 5.55.9 | 562 | கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை எடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும் நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல் அடுத்த தன்மையும் அம்ம அழகிதே. | 5.55.10 |
| 563 |
மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத் தொக்க கையினன் செய்யதோர் சோதியன் கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி நக்க னைத்தொழ நம்வினை நாசமே. | 5.56.1 | 564 | முத்தி னைமுத லாகிய மூர்த்தியை வித்தி னைவிளை வாய விகிர்தனைக் கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி அத்த னைத்தொழ நீங்கும்நம் மல்லலே. | 5.56.2 | 565 | வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர் கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக் கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. | 5.56.3 | 566 | பலவும் வல்வினை பாறும் பரிசினால் உலவுங் கங்கையுந் திங்களும் ஒண்சடை குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி நிலவி னான்றனை நித்தல் நினைமினே. | 5.56.4 | 567 | அல்ல லாயின தீரும் அழகிய முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச் செல்வன் சேவடி சென்று தொழுமினே. | 5.56.5 | 568 | ஆவின் பால்கண் டளவில் அருந்தவப் பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல் கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி மேவி னானைத் தொழவினை வீடுமே. | 5.56.6 | 569 | சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும் ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற் கூத்த னாருறை யுந்திருக் கோளிலி ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே. | 5.56.7 | 570 | மால தாகி மயங்கு மனிதர்காள் காலம் வந்து கடைமுடி யாமுனங் கோல வார்பொழிற் கோளிலி மேவிய நீல கண்டனை நின்று நினைமினே. | 5.56.8 | 571 | கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது தேடி நீர்திரி யாதே சிவகதி கூட லாந்திருக் கோளிலி ஈசனைப் பாடு மின்னிர வோடு பகலுமே. | 5.56.8 | 572 | மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை அடர்த்துப் பின்னும் இரங்கி யவற்கருள் கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே. | 5.56.9 |
| 573 |
முன்ன மேநினை யாதொழிந் தேனுனை இன்னம் நானுன சேவடி யேத்திலேன் செந்நெ லார்வயல் சூழ்திருக் கோளிலி மன்ன னேயடி யேனை மறவலே. | 5.57.1 | 574 | விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப் பண்ணு ளார்பயி லுந்திருக் கோளிலி அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே. | 5.57.2 | 575 | நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும் ஏழை மைப்பட் டிருந்துநீர் நையாதே கோளி லியரன் பாதமே கூறுமே. | 5.57.3 | 576 | விழவி னோசை ஒலியறாத் தண்பொழில் பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி அழல்கை யானம ருந்திருக் கோளிலிக் குழக னார்திருப் பாதமே கூறுமே. | 5.57.4 | 577 | மூல மாகிய மூவர்க்கு மூர்த்தியைக் கால னாகிய காலற்குங் காலனைக் கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச் சூல பாணிதன் பாதந் தொழுமினே. | 5.57.5 | 578 | காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண் ணீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை ஆற்ற னையம ருந்திருக் கோளிலி ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே. | 5.57.6 | 579 | வேத மாயவிண் ணோர்கள் தலைவனை ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக் கோதி வண்டறை யுந்திருக் கோளிலி வேத நாயகன் பாதம் விரும்புமே. | 5.57.7 | 580 | நீதி யாற்றொழு வார்கள் தலைவனை வாதை யான விடுக்கும் மணியினை கோதி வண்டறை யுந்திருக் கோளிலி வேத நாயகன் பாதம் விரும்புமே. | 5.57.8 | 581 | மாலும் நான்முக னாலும் அறிவொணாப் பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக் கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி நீல கண்டனை நித்தல் நினைமினே. | 5.57.9 | 582 | அரக்க னாய இலங்கையர் மன்னனை நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற் கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே. | 5.57.10 |
| 583 |
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே அலையி னார்பொழி லாறை வடதளி நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே. | 5.58.1 | 584 | மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக் காக்கி னானணி யாறை வடதளி நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே. | 5.58.2 | 585 | குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில் மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை அண்ட ரைப்பழை யாறை வடதளிக் கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே. | 5.58.3 | 586 | முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப் படைய ரைப்பழை யாறை வடதளி உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே. | 5.58.4 | 587 | ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங் கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை அள்ள லம்புன லாறை வடதளி வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே. | 5.58.5 | 588 | நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ் சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் ஆதி யைப்பழை யாறை வடதளிச் சோதி யைத்தொழு வார்துயர் தீருமே. | 5.58.6 | 589 | திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை அருட்டி றத்தணி யாறை வடதளித் தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே. | 5.58.7 | 590 | ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் *வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை பாத னைப்பழை யாறை வடதளி நாத னைத்தொழ நம்வினை நாசமே. * வேது என்பது - வெப்பம். | 5.58.8 | 591 | வாயி ருந்தமி ழேபடித் தாளுறா ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் பாயி ரும்புன லாறை வடதளி மேய வன்னென வல்வினை வீடுமே. | 5.58.9 | 592 | செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல் எருத்தி றவிர லாலிறை யூன்றிய அருத்த னைப்பழை யாறை வடதளித் திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே. | 5.58.10 |
| 593 |
பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல் வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங் கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு திருமாற் பேறு தொழவினை தேயுமே. | 5.59.1 | 594 | ஆலத் தார்நிழ லில்லறம் நால்வர்க்குக் கோலத் தாலுரை செய்தவன் குற்றமில் மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு ஏலத் தான்றொழு வார்க்கிட ரில்லையே. | 5.59.2 | 595 | துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே. | 5.59.3 | 596 | தீத வைசெய்து தீவினை வீழாதே காதல் செய்து கருத்தினில் நின்றநன் மாத வர்பயில் மாற்பேறு கைதொழப் போது மின்வினை யாயின போகுமே. | 5.59.4 | 597 | வார்கொள் மென்முலை மங்கையோர் பங்கினன் வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே. | 5.59.5 | 598 | பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர் வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு கண்டு கைதொழத் தீருங் கவலையே. | 5.59.6 | 599 | மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரைத் தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும் வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு தொழவ லார்தமக் கில்லை துயரமே. | 5.59.7 | 600 | முன்ன வனுல குக்கு முழுமணிப் பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம் மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும் அன்ன வரெமை யாளுடை யார்களே. | 5.59.8 | 601 | வேட னாய்விச யன்னொடும் எய்துவெங் காடு நீடுகந் தாடிய கண்ணுதல் மாட நீடுய ருந்திரு மாற்பேறு பாடு வார்பெறு வார்பர லோகமே. | 5.59.9 | 602 | கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் தருக்கி னாலெடுத் தானைத் தகரவே வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே. | 5.59.10 |
| 603 |
ஏது மொன்று மறிவில ராயினும் ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் பேத மின்றி அவரவர் உள்ளத்தே மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. | 5.60.1 | 604 | அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள் நிச்ச லுந்நினை யாய்வினை போயறக் கச்ச மாவிட முண்டகண் டாவென வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே. | 5.60.2 | 605 | சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே. | 5.60.3 | 606 | இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள் அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற் பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே. | 5.60.4 | 607 | சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற் கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே. | 5.60.5 | 608 | ஈட்டு மாநிதி சால இழக்கினும் வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங் காட்டில் மாநட மாடுவாய் காவெனில் வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே. | 5.60.6 | 609 | ஐய னேயர னேயென் றரற்றினால் உய்ய லாமுல கத்தவர் பேணுவர் செய்ய பாத மிரண்டும் நினையவே வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே. | 5.60.7 | இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 5.60.8-9 | 610 | உந்திச் சென்று மலையை யெடுத்தவன் சந்து தோளொடு தாளிற வூன்றினான் மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே. | 5.60.10 |
| 611 |
முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப் புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம் பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே. | 5.61.1 | 612 | பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய் உறக்க ணித்துரு காமனத் தார்களைப் புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே. | 5.61.2 | 613 | அரிசி லின்கரை மேலணி யார்தரு புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந் துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. | 5.61.3 | 614 | வேத னைமிகு வீணையின் மேவிய கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம் போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை நாத னைந்நினைந் தென்மனம் நையுமே. | 5.61.4 | 615 | அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல் விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய் திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக் கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே. | 5.61.5 | 616 | பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப் பூம்பு னலும்பொ திந்தபுத் தூருளான் நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ் சாம்பல் என்பு தனக்கணி யாகுமே. | 5.61.6 | 617 | கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர் பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே. | 5.61.7 | 618 | காற்றி னுங்கடி தாகி நடப்பதோர் ஏற்றி னும்மிசைந் தேறுவர் என்பொடு நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப் போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே. | 5.61.8 | 619 | முன்னு முப்புரஞ் செற்றன ராயினும் அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம் மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம் பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே. | 5.61.9 | 620 | செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங் கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல் பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல் பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே. | 5.61.10 |
| 621 |
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே. | 5.62.1 | 622 | யாவ ருமறி தற்கரி யான்றனை மூவ ரின்முத லாகிய மூர்த்தியை நாவின் நல்லுரை யாகிய நாதனைத் தேவனைப் புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே. | 5.62.2 | 623 | அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே. | 5.62.3 | 624 | மாத னத்தைமா தேவனை மாறிலாக் கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே. | 5.62.4 | 625 | குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் அண்ட னைக்கண் டருவினை யற்றேனே. | 5.62.5 | 626 | பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட மைந்த னைம்மண வாளனை மாமலர்க் கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே. | 5.62.6 | 627 | உம்ப ரானை உருத்திர மூர்த்தியை அம்ப ரானை அமலனை ஆதியைக் கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே. | 5.62.7 | 628 | மாசார் பாச மயக்கறு வித்தெனுள் நேச மாகிய நித்த மணாளனைப் பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் ஈச னேயென இன்பம தாயிற்றே. | 5.62.8 | 629 | இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே. | 5.62.9 | 630 | அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட் டிரக்க மாகி அருள்புரி யீசனைத் திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே. | 5.62.10 |
| 631 |
இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப் புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான் தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக் குரங்கா டுதுறைக் கோலக் கபாலியே. | 5.63.1 | 632 | முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர் தொத்தி னைச்சுடர் சோதியைச் சோலைசூழ் கொத்த லர்குரங் காடு துறையுறை அத்த னென்னஅண் ணித்திட் டிருந்ததே. | 5.63.2 | 633 | குளிர்பு னற்குரங் காடு துறையனைத் தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி ஒளிய னைந்நினைந் தேனுக்கென் உள்ளமுந் தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே. | 5.63.3 | 634 | மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக் கணவன் காண்கலை ஞானிகள் காதலெண் குணவன் காண்குரங் காடு துறைதனில் அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே. | 5.63.4 | 635 | ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன் காலத் தானுயிர் போக்கிய காலினன் நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி கோலத் தான்குரங் காடு துறையனே. | 5.63.5 | 636 | ஆட்டி னான்முன் அமணரோ டென்றனைப் பாட்டி னான்றன பொன்னடிக் கின்னிசை வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங் கூட்டி னான்குரங் காடு துறையனே. | 5.63.6 | 637 | மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண் போத்தன் றானவள் பொங்கு சினந்தணி கூத்தன் றான்குரங் காடு துறையனே. | 5.63.7 | 638 | நாடி நந்தம ராயின தொண்டர்காள் ஆடு மின்னழு மின்தொழு மின்னடி பாடு மின்பர மன்பயி லும்மிடங் கூடு மின்குரங் காடு துறையையே. | 5.63.8 | 639 | தென்றல் நன்னெடுந் தேருடை யானுடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன் அன்ற வந்தக னையயிற் சூலத்தாற் கொன்ற வன்குரங் காடு துறையனே. | 5.63.9 | 640 | நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம் உற்ற நன்மொழி யாலருள் செய்தநற் கொற்ற வன்குரங் காடு துறைதொழப் பற்றுந் தீவினை யாயின பாறுமே. | 5.63.10 | 641 | கடுத்த தேரரக் கன்கயி லைம்மலை எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல் அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள் கொடுத்த வன்குரங் காடு துறையனே. | 5.63.11 |
| 642 |
வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய் ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள் கோழம் பத்துறை கூத்தன் குரைகழற் தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே. | 5.64.1 | 643 | கயிலை நன்மலை யாளுங் கபாலியை மயிலி யன்மலை மாதின் மணாளனைக் குயில்ப யில்பொழிற் கோழம்ப மேயவென் உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே. | 5.64.2 | 644 | வாழும் பான்மைய ராகிய வான்செல்வந் தாழும் பான்மைய ராகித்தம் வாயினால் தாழம் பூமணம் நாறிய தாழ்பொழிற் கோழம் பாவெனக் கூடிய செல்வமே. | 5.64.3 | 645 | பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு கோடல் பூத்தலர் கோழம்பத் துண்மகிழ்ந் தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே. | 5.64.4 | 646 | தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர் பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன் குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான் நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே. | 5.64.5 | 647 | நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம் வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற் கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண் டாதி பாத மடையவல் லார்களே. | 5.64.6 | 648 | முன்னை நான்செய்த பாவ முதலறப் பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும் அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர் பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே. | 5.64.7 | 649 | ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண் கோழை மாரொடுங் கூடிய குற்றமாங் கூழை பாய்வயற் கோழம்பத் தானடி ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே. | 5.64.8 | 650 | அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக் குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத் துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே. | 5.64.9 | 651 | சமர சூரபன் மாவைத் தடிந்தவேற் குமரன் தாதைநற் கோழம்ப மேவிய அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் அமர லோகம தாளுடை யார்களே. | 5.64.10 | 652 | துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப் பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான் கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென் றிட்ட கீத மிசைத்த அரக்கனே. | 5.64.11 |
| 653 |
பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான் நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார் பாவ மாயின பாறிப் பறையவே தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே. | 5.65.1 | 654 | என்ன னென்மனை எந்தையெ னாருயிர் தன்னன் றன்னடி யேன்றனமாகிய பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே. | 5.65.2 | 655 | குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர் மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம் புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர் கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே. | 5.65.3 | 656 | ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான் தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான் மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப் பூவ னூர்புகு வார்வினை போகுமே. | 5.65.4 | 657 | புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல் நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர் தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல் வல்ல மூரென வல்வினை மாயுமே. | 5.65.5 | 658 | அனுச யப்பட்ட துவிது வென்னாதே கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார் மனித ரிற்றலை யான மனிதரே. | 5.65.6 | 659 | ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன் வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர் பாதி யானான் பரந்த பெரும்படைப் பூத நாதன்தென் பூவனூர் நாதனே. | 5.65.7 | 660 | பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில் நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங் கோவ லூர்குட வாயில் கொடுமுடி மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே. | 5.65.8 | 661 | ஏவ மேது மிலாவம ணேதலர் பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான் தேவ தேவன் திருநெறி யாகிய பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே. | 5.65.9 | 662 | நார ணன்னொடு நான்முகன் இந்திரன் வார ணன்கும ரன்வணங் குங்கழற் பூர ணன்திருப் பூவனூர் மேவிய கார ணன்னெனை யாளுடைக் காளையே. | 5.65.10 | 663 | மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும் பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே. | 5.65.11 |
| 664 |
ஓத மார்கட லின்விட முண்டவன் பூத நாயகன் பொற்கயி லைக்கிறை மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப் பாத மேத்தப் பறையுநம் பாவமே. | 5.66.1 | 665 | கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம் எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன் மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப் பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே. | 5.66.2 | 666 | இளைய காலமெம் மானை யடைகிலாத் துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல் வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக் களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே. | 5.66.3 | 667 | நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க் குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன் மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய இறைவ னையினி என்றுகொல் காண்பதே. | 5.66.4 | 668 | விண்ட வர்புர மூன்று மெரிகொளத் திண்டி றற்சிலை யாலெரி செய்தவன் வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே. | 5.66.5 | 669 | படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான் மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே. | 5.66.6 | 670 | நாக்கொண் டுபர வும்மடி யார்வினை போக்க வல்ல புரிசடைப் புண்ணியன் மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன் ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே. | 5.66.7 | 671 | தேடு வார்பிர மன்திரு மாலவர் ஆடு பாத மவரும் அறிகிலார் மாட வீதி வலஞ்சுழி யீசனைத் தேடு வானுறு கின்றதென் சிந்தையே. | 5.66.8 | 672 | கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும் வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே. | 5.66.9 | 673 | இலங்கை வேந்தன் இருபது தோளிற நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான் மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி வலங்கொள் வாரடி யென்றலை மேலவே. | 5.66.10 |
| 674 |
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள் உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம் புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம் அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே. | 5.67.1 | 675 | பறப்பை யும்பசு வும்படுத் துப்பல திறத்த வும்முடை யோர்திக ழும்பதி கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே. | 5.67.2 | 676 | புற்றி லாடர வோடு புனல்மதி தெற்று செஞ்சடைத் தேவர் பிரான்பதி சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே. | 5.67.3 | 677 | அங்க மாறும் அருமறை நான்குடன் தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர் செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியந் தங்கு வார்நம் மமரர்க் கமரரே. | 5.67.4 | 678 | நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை ஆறு சூடும் அடிகள் உறைபதி மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியந் தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே. | 5.67.5 | 679 | அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க் குற்ற நற்றுணை யாவான் உறைபதி தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங் கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே. | 5.67.6 | 680 | அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள் திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர் ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம் அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே. | 5.67.7 | இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 5.67.8-10 |
| 681 |
உள்ளா றாததோர் புண்டரி கத்திரள் தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக் கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை நள்ளா றாவென நம்வினை நாசமே. | 5.68.1 | 682 | ஆர ணப்பொரு ளாமரு ளாளனார் வார ணத்துரி போர்த்த மணாளனார் நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார் கார ணக்கலை ஞானக் கடவுளே. | 5.68.2 | 683 | மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில் சோகம் பூண்டழல் சோரத்தொட் டானவன் பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே. | 5.68.3 | 684 | மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார் நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம் வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே. | 5.68.4 | 685 | உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன் இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன் நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன் மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே. | 5.68.5 | 686 | செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார் நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார் வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச் சக்க ரமருள் செய்த சதுரரே. | 5.68.6 | 687 | வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர் விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார் வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார் நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே. | 5.68.7 | 688 | அல்ல னென்று மலர்க்கரு ளாயின சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான் வல்ல னென்றும்வல் லார்வள மிக்கவர் நல்ல னென்றுநல் லார்க்குநள் ளாறனே. | 5.68.8 | 689 | பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும் பூம்ப ணைப்பொலி கின்ற புராணனுந் தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல் நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே. | 5.68.9 | 690 | இலங்கை மன்னன் இருபது தோளிற மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர் நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும் வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. | 5.68.10 |
| 691 |
மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப் பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர் கட்டிட் டவினை போகக் கருவிலிக் கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே. | 5.69.1 | 692 | ஞால மல்கு மனிதர்காள் நாடொறும் ஏல மாமல ரோடிலை கொண்டுநீர் கால னார்வரு தன்முன் கருவிலிக் கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. | 5.69.2 | 693 | பங்க மாயின பேசப் பறைந்துநீர் மங்கு மாநினை யாதே மலர்கொடு கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக் கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. | 5.69.3 | 694 | வாடி நீர்வருந் தாதே மனிதர்காள் வேட னாய்விச யற்கருள் செய்தவெண் காட னாருறை கின்ற கருவிலிக் கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. | 5.69.4 | 695 | உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர் பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக் கையி னானுறை கின்ற கருவிலிக் கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. | 5.69.5 | 696 | ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர் தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி காற்று மாகிநின் றான்றன் கருவிலிக் கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே. | 5.69.6 | 697 | நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப் பொல்லா வாறு செயப்புரி யாதுநீர் கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக் கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே. | 5.69.7 | 698 | பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக் குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே. | 5.69.8 | 699 | நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும் எம்பி ரானென் றிமையவ ரேத்துமே கம்ப னாருறை கின்ற கருவிலிக் கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே. | 5.69.9 | 700 | பாரு ளீரிது கேண்மின் பருவரை பேரு மாறெடுத் தானை யடர்த்தவன் கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக் கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே. | 5.69.10 |
| 701 |
கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால் மண்டி யேச்சுணு மாதரைச் சேராதே சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக் கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே. | 5.70.1 | 702 | சுற்ற முந்துணை நன்மட வாளொடு பெற்ற மக்களும் பேண லொழிந்தனர் குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார் பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே. | 5.70.2 | 703 | மாடு தானது வில்லெனின் மானிடர் பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற் கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப் பாடு மின்பர லோகத் திருத்துமே. | 5.70.3 | 704 | தந்தை தாயொடு தார மெனுந்தளைப் பந்த மாங்கறுத் துப்பயில் வெய்திய கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே. | 5.70.4 | 705 | கேளு மின்னிள மையது கேடுவந் தீளை யோடிரு மல்லது வெய்தன்முன் கோள ராவணி கொண்டீச் சுரவனை நாளு மேத்தித் தொழுமின்நன் காகுமே. | 5.70.5 | 706 | வெம்பு நோயும் இடரும் வெறுமையும் துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை எம்பி ரானென வல்லவர்க் கில்லையே. | 5.70.6 | 707 | அல்ல லோடரு நோயில் அழுந்திநீர் செல்லு மாநினை யாதே கனைகுரற் கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை வல்ல வாறு தொழவினை மாயுமே. | 5.70.7 | 708 | நாறு சாந்தணி நன்முலை மென்மொழி மாறி லாமலை மங்கையோர் பாகமாக் கூற னாருறை கொண்டீச் சுரநினைந் தூறு வார்தமக் கூனமொன் றில்லையே. | 5.70.8 | 709 | அயிலார் அம்பெரி மேருவில் லாகவே எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன் குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப் பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே. | 5.70.9 | 710 | நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான் குலையி னார்பொழிற் கொண்டீச் சுரவனைத் தலையி னால்வணங் கத்தவ மாகுமே. | 5.70.10 |
| 711 |
குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ் வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே இசைய மங்கையுந் தானுமொன் றாயினான் விசைய மங்கையுள் வேதியன் காண்மினே. | 5.71.1 | 712 | ஆதி நாதன் அடல்விடை மேலமர் பூத நாதன் புலியத ளாடையன் வேத நாதன் விசயமங் கையுளான் பாத மோதவல் லார்க்கில்லை பாவமே. | 5.71.2 | 713 | கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில் வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை உள்ளி டத்துறை கின்ற உருத்திரன் கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே. | 5.71.3 | 714 | திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம் அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான் விசைய மங்கை விருத்தன் புறத்தடி விசையின் மங்கி விழுந்தனன் காலனே. | 5.71.4 | 715 | பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள் கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள் விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான் உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே. | 5.71.5 | 716 | கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச் செல்வ போற்றியென் பாருக்குத் தென்றிசை எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே. | 5.71.6 | 717 | கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டு உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே. | 5.71.7 | 718 | பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை ஆண்ட வன்னடி யேநினைந் தாசையாற் காண்ட லேகருத் தாகி யிருப்பனே. | 5.71.8 | 719 | வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே. | 5.71.9 | 720 | இலங்கை வேந்தன் இருபது தோளிற விலங்கள் சேர்விர லான்விச யமங்கை வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும் நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே. | 5.72.10 |
| 721 |
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர் செத்த போது செறியார் பிரிவதே நித்த நீலக் குடியர னைந்நினை சித்த மாகிற் சிவகதி சேர்திரே. | 5.72.1 | 722 | செய்ய மேனியன் றேனொடு பால்தயிர் நெய்ய தாடிய நீலக் குடியரன் மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங் கையி லாமல கக்கனி யொக்குமே. | 5.72.2 | 723 | ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு கூற்றன் மேனியிற் கோலம தாகிய நீற்றன் நீலக் குடியுடை யானடி போற்றி னாரிடர் போக்கும் புனிதனே. | 5.72.3 | 724 | நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர் நீலன் நீலக் குடியுறை நின்மலன் கால னாருயிர் போக்கிய காலனே. | 5.72.4 | 725 | நேச நீலக் குடியர னேயெனா நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால் ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய் நாச மானார் திரிபுர நாதரே. | 5.72.5 | 726 | கொன்றை சூடியைக் குன்ற மகளொடு நின்ற நீலக் குடியர னேயெனீர் என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர் பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே. | 5.72.6 | 727 | கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே. | 5.72.7 | 728 | அழகி யோமிளை யோமெனு மாசையால் ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே நிழல தார்பொழில் நீலக் குடியரன் கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே. | 5.72.8 | 729 | கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே. | 5.72.9 | 730 | தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் அரக்க னாருட லாங்கோர் விரலினால் நெரித்து நீலக் குடியரன் பின்னையும் இரக்க மாயருள் செய்தனன் என்பரே. | 5.72.10 |