|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness
> Spirituality & the
Tamil Nation > Thirumuraikal >
63 Nayanmars - Sri Swami Sivananda
> Periya
Puranam - பெரியபுராணம்
- சேக்கிழார் >
Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்) >
Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam) >
Canto 1, Carukkam -4 (mummaiyAl ulakANTa carukkam)
> Canto 1, Carukkam 5 (tiruninRa carukkam) >
Canto 2 Carukkam - 6 part 1 (vampaRA
varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 2 (vampaRA
varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 3 (vampaRA
varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 >
koRRavankuTi umApati civAcAriyAr's
cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
முதற் காண்டம் (பன்னிரண்டாம் திருமுறை )
சருக்கம் 1 (திருமலைச் சருக்கம்) &
2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்)
Acknowledgements:Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission to release the TSCII version as part of Project Madurai etext collections. TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu
© Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 1.00 | பாயிரம் | (1-10) | மின்பதிப்பு |
| 1.01 | திருமலைச் சிறப்பு | (11-50) | மின்பதிப்பு |
| 1.02 | திரு நாட்டுச் சிறப்பு | (51-85) | மின்பதிப்பு |
| 1.03 | திருநகரச் சிறப்பு | (86-135) | மின்பதிப்பு |
| 1.04 | திருக்கூட்டச் சிறப்பு | (136-146) | மின்பதிப்பு |
| 1.05 | தடுத்தாட்கொண்ட புராணம் | (147-349) | மின்பதிப்பு |
| 2.01 | தில்லை வாழ் அந்தணர் புராணம் | (350-359) | மின்பதிப்பு |
| 2.02 | திருநீலகண்ட நாயனார் புராணம் | (360-403) | மின்பதிப்பு |
| 2.03 | இயற்பகை நாயனார் புராணம் | (404-439) | மின்பதிப்பு |
| 2.04 | இளையான் குடி மாற நாயனார் புராணம் | (440 -466) | மின்பதிப்பு |
| 2.05 | மெய்ப் பொருள் நாயனார் புராணம் | (467-494) | மின்பதிப்பு |
| 2.06 | விறன்மிண்ட நாயனார் புராணம் | (495 - 505) | மின்பதிப்பு |
| 2.07 | அமர் நீதி நாயனார் புராணம் | (506-550) | மின்பதிப்பு |
| 001 |
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். | 1.0.1 | 002 | ஊன் அடைந்த உடம்பின் பிறவியே தான் அடைந்த உறுதியைச் சாருமால்; தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள் மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ. | 1.0.2 | 003 | எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக் கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம். | 1.0.3 | 004 | மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன் துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப் பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே. | 1.0.4 | 005 | அளவிலாத பெருமையராகிய அளவிலா அடியார் புகழ் கூறுகேன் அளவு கூட உரைப்பது அரிது ஆயினும் அளவிலாசை துரைப்ப அறைகுவேன். | 1.0.5 | 006 | தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம் பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப் பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன். | 1.0.6 | 007 | செப்பலுற்ற பொருளின் சிறப்பினால் அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல் இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும் மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால். | 1.0.7 | 008 | மேய இவ் உரை கொண்டு விரும்புமாம் சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய தூய பொன்னணி சோழன் நீடூழிபார் ஆய சீர் அநபாயன் அரசவை. | 1.0.8 | 009 | அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும் தெருளில் நீரிது செப்புதற்காம் எனின் வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே. | 1.0.9 | 010 | இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம். | 1.0.10 |
| 011 |
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப் பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் மன்னிவாழ் கயிலைத் திரு மாமலை. | 1.1.1 | 012 | அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் நண்ணும் மூன்று உலகுந் நான்மறைகளும் எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய புண்ணியந் திரண்டு உள்ளது போல்வது. | 1.1.2 | 013 | நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி இலகு தண்தளிர் ஆக எழுந்ததோர் உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை. | 1.1.3 | 014 | மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர் கான வீணையின் ஓசையும் காரெதிர் தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர் வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம். | 1.1.4 | 015 | பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ் அனித கோடி அணிமுடி மாலையும் புனித கற்பகப் பொன்னரி மாலையும் முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெனலாம். | 1.1.5 | 016 | நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின் நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ கோடி கோடி குறட்சிறு பூதங்கள் பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம். | 1.1.6 | 017 | நாயகன் கழல் சேவிக்க நான்முகன் மேய காலம் அலாமையின் மீண்டவன் தூயமால்வரைச் சோதியில் மூழ்கியொன்று ஆய அன்னமும் காணா தயர்க்குமால். | 1.1.7 | 018 | காதில் வெண்குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான் சோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு மீதெழு பண்டைச் செஞ் சுடர் இன்று வெண்சுடர் ஆனது என்றதன் கீழ் ஆதி ஏனமதாய் இடக்கலுற்றான் என்றதனை வந்தணைதரும் கலுழன். | 1.1.8 | 019 | அரம்பையர் ஆடல் முழவுடன்
மருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க வரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இருகையும் ஏந்தி நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடுயர் வழியினால் ஏறிப் புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப் பொலிவதத் திருமலைப் புறம்பு. | 1.1.9 | 020 | வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும் காதலால் மிடைந்த முதல் பெருந்த் தடையாம் கதிர் மணிக் கோபுரத்துள்ளார் பூத வேதாளப் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும் நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான். | 1.1.10 | 022 | நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர் பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார் மற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் மலக்கையில் சுரிகையும் பிரம்பும் கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான். | 1.1.11 | 022 | கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும் மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன் செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு. | 1.1.12 | 023 | அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து இன்ன தன்மையன் என்றறியாச் சிவன் தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் உன்னாரும் சீர் உபமன் னிய முனி. | 1.1.13 | 024 | யாதவன் துவரைக்கிறை யாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தவன் பூதநாதன் பொருவருந் தொண்டினுக்கு ஆதி அந்தம் இலாமை அடைந்தவன். | 1.1.14 | 025 | அத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டு சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் பத்தராய முனிவர் பல்லாயிரவர் சுத்த யோகிகள் சூழ இருந்துழி. | 1.1.15 | 026 | அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் துங்க மாதவர் சூழ்ந்திருந்தாரெலாம் இங்கி தென்கொல் அதிசயம் என்றலும். | 1.1.16 | 027 | அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள் சிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன் எந்தையார் அருளால் அணைவான் என. | 1.1.17 | 028 | கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசை மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர். | 1.1.18 | 029 | "சம்புவின் அடித் தாமரைப் போதலால் எம்பிரான் இறைஞ்சாயிஃதென்" எனத் "தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன் நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்". | 1.1.19 | 030 | என்றுகூற இறைஞ்சி இயம்புவார் வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் நன்று கேட்க விரும்பும் நசையினோம் இன்றெமக்குரை செய்து அருள் என்றலும். | 1.1.20 | 031 | உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான் " வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும் அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன். | 1.1.21 | 032 | அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு இன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத் துன்னினான் நந்தவனச் சூழலில். | 1.1.22 | 033 | அங்கு முன்னரே ஆளுடை நாயகி கொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திடத் திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார் பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார். | 1.1.23 | 034 | அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் கந்த மாலைக் கமலினி என்பவர் கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி வந்து வானவர் ஈசர் அருள் என. | 1.1.24 | 035 | மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப் போதுவார் அவர் மேல்மனம் போக்கிடக் காதல் மாதரும் காட்சியில் கண்ணினார். | 1.1.25 | 036 | முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர் என்னை ஆட்கொண்ட ஈசனுக்கேய்வன பன் மலர் கொய்து செல்லப் பனிமலர் அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின். | 1.1.26 | 037 | ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே ' மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி மீது தோன்றி அம் மெல்லியலார் உடன் காதல் இன்பம் கலந்து அணைவாய்' என. | 1.1.27 | 038 | கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான் 'செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன் மையல் மானுடமாய் மயங்கும் வழி ஐயனே தடுத்தாண்டருள் செய்' என. | 1.1.28 | 039 | அங்கணாளன் அதற்கருள் செய்த பின் நங்கை மாருடன் நம்பிமற்றத் திசை தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாறுமென்று அங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன். | 1.1.29 | 040 | அந்தணாளரும் ஆங்கது கேட்டவர் "பந்த மானிடப் பாற்படு தென்திசை இந்த வான்திசை எட்டினும் மேற்பட வந்த புண்ணியம் யாதெ"ன மாதவன். | 1.1.30 | 041 | "பொருவருந் தவத்தான் புலிக் காலனாம் அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது பெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று ஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால். | 1.1.31 | 042 | அத் திருப்பதியில் நமை ஆளுடை மெய்த் தவக்கொடி காண விருப்புடன் அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று இத் திறம் பெறலாம் திசை எத்திசை.. | 1.1.32 | 043 | பூதம் யாவையின் உள்ளலர் போதென வேத மூலம் வெளிப்படு மேதினிக் காதல் மங்கை இதய கமலமாம் மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால். | 1.133 | 044 | எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள் தம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக் கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று உம்பர் போற்றும் பதியும் உடையது. | 1.1.34 | 045 | நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து பொங்கு நீடருள் எய்திய பொற்பது கங்கை வேணி மலரக் கனல்மலர் செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது. | 1.1.35 | 046 | தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை ஈசர் தோணி புரத்துடன் எங்கணும் பூசனைக்குப் பொருந்தும் இடம் பல பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை". | 1.1.36 | 047 | என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை அன்று சொன்ன படியால் அடியவர் தொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி இன்று என் ஆதரவால் இங்கியம்புகேன். | 1.1.37 | 048 | மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம் புற்று இடத்து எம்புராணர் அருளினால் சொற்ற மெய்த் திருத்தொண்டத்தொகை எனப் பெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம். | 1.1.38 | 049 | அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை நம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி புந்தி ஆரப் புகன்ற வகையினால் வந்த வாறு வழாமல் இயம்புவாம். | 1.1.39 | 050 | உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும் அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம். | 1.1.40 |
| 051 |
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள் கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில் சூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி நாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன். | 1.2.1 | 052 | ஆதி மாதவமுனி அகத்தியன் தரு பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர் ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால். | 1.2.2 | 053 | சையமால் வரை பயில் தலைமை சான்றது செய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும் உய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது. | 1.2.3 | 054 | மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும் சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால் கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால் போலும் நான்முகனையும் பொன்னி மாநதி. | 1.2.41 | 055 | திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில் பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால் எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே. | 1.2.5 | 056 | வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால் எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது. | 1.2.6 | 057 | வம்புலா மலர் நீரால் வழிபட்டுச் செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி உம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால். | 1.2.7 | 058 | வாசநீர் குடை மங்கையர் கொங்கையில் பூசும் குங்குமமும் புனை சாந்தமும் வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர் தேசுடைத் தெனினும் தெளிவில்லதே. | 1.2.8 | 059 | மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு பூ விரித்த புதுமதுப் பொங்கிட வாவியிற் பொலி நாடு வளம்தரக் காவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால். | 1.2.9 | 060 | ஒண் துறைத் தலை மாமத கூடு போய் மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர் கொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய் அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால். | 1.2.10 | 061 | மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும் சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும் ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும் காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே. | 1.2.11 | 062 | உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாறு நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம். | 1.2.12 | 063 | மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக் கண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள் தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார் வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார். | 1.2.13 | 064 | செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை அங்கை மலர்களைக் கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார் திங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப் பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார். | 1.2.14 | 065 | கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச் கரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம் அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம். | 1.2.15 | 066 | கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி வியல்வாய் வெள்வளைத் தரள மலர்வேரி உலைப்பெய்தங் கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும் வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம். | 1.2.16 | 067 | காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம். | 1.2.17 | 068 | ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும் சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும் ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும் வேலை ஓசையின் மிக்கு விரவுமால். | 1.2.18 | 069 | அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில் துன்னும் மேதிபடியத் துதைந்தெழும் கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன மன்னு வான்மிசை வானவில் போலுமால். | 1.2.19 | 070 | காவினிற் பயிலுங்களி வண்டினம் வாவியிற் படிந்து உண்ணும் மலர் மது மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல் தாவி அப்பொழிலிற் கனி சாடுமால் | 1.2.20 | 071 | சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச் சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர் ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம். | 1.2.21 | 072 | பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல் மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம். | 1.2.22 | 073 | அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார் சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு யாப்பர் விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார். | 1.2.23 | 074 | சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக் காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம் ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல் மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே. | 1.2.24 | 075 | வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச் செய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக் கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால் மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு. | 1.2.25 | 076 | அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப் பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின் விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி வரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும். | 1.2.26 | 077 | கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர் சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப் பெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின் வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும். | 1.2.27 | 078 | நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும் கோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும் தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும் நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும். | 1.2.28 | 079 | சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும் மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும் போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும். | 1.2.29 | 080 | மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும் பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் பொங்கொளிக் கலன்கள் எங்கும் புது மலர்ப் பந்தர் எங்கும் செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும். | 1.2.30 | 081 | மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும் யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும் போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும். | 1.2.31 | 082 | பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும் வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும் தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும் தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும். | 1.2.32 | 083 | மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும் பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும் நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும் தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும். | 1.2.33 | 084 | வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும் ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும் | 1.2.34 | 085 | நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும் பொற் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும் கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால் மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ. | 1.2.35 |
| 086 |
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது மன்னு மாமலராள் வழி பட்டது வன்னியாறு மதி பொதி செஞ் சடைச் சென்னியார் திருவாரூர்த் திருநகர். | 1.3.1 | 087 | வேத ஓசையும் வீணையின் ஓசையும் சோதி வானவர் தோத்திர ஓசையும் மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும் கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே. | 1.3.2 | 088 | பல்லியங்கள் பரந்த ஒலியுடன் செல்வ வீதிச் செழுமணித் தேரொலி மல்லல் யானை ஒலியுடன் மாவொலி எல்லை இன்றி எழுந்துள எங்கணும். | 1.3.3 | 089 | மாட மாளிகை சூளிகை மண்டபம் கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள் நீடு சாளர நீடரங்கு எங்கெணும் ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன . | 1.3.4 | 090 | அங்குரைக்கென்ன அளவப் பதியிலார் தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின் பங்கினாள் திருச் சேடி பரவையாம் மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை. | 1.3.5 | 091 | படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூது போய் நடந்த செந்தாமரை அடி நாறுமால். | 1.3.6 | 092 | செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங் குங்குமத்தின் குழம்பை அவர் குழல் பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன் அங்கண் மேவி அளறு புலர்த்துமால். | 1.3.7 | 093 | உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம் தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள். | 1.3.8 | 094 | விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள் வளத் தொடும் பலவாறு மடுத்தலால் அளக்கர் போன்றன ஆவண வீதிகள். | 1.3.9 | 095 | ஆரணங்களே அல்ல மறுகிடை வாரணங்களும் மாறி முழங்குமால் சீரணங்கிய தேவர்களே அலால் தோரணங்களில் தாமமும் சூழுமால். | 1.3.10 | 096 | தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர் வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார் சூழ்ந்த பல்வேறு இடத்தத் தொல் நகர். | 1.3.11 | 097 | நில மகட்கு அழகார் திரு நீள் நுதல் திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்(து) அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால். | 1.3.12 | 098 | அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான் துன்னு செங் கதிரோன் வழித் தோன்றினான் மன்னு சீர் அநபாயன் வழி முதல் மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே. | 1.3.13 | 099 | மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான் விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள் எண்ணிலாதன் மாண இயற்றினான் . | 1.3.14 | 100 | கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச் சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச் செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப் பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான். | 1.3.15 | 101 | பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர் எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான் துங்க ஆகமம் சொன்ன முறைமையால். | 1.3.16 | 102 | அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில் சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன் பிறந்தனன் உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான். | 1.3.17 | 103 | தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும் சிவ முயன்றடையுந் தெய்வக் கலை பல திருந்த ஓதிக் கவனவாம் புரவி யானை தேர்ப் படைத் தொழில்கள் கற்றுப் பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான். | 1.3.18 | 104 | அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன். | 1.3.19 | 105 | திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக் கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான் பொங்கிய தானை சூழ்த் தேர்மிசைப் பொலிந்து போந்தான். | 1.3.20 | 106 | பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர் விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி. | 1.3.21 | 107 | தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன் பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே. | 1.3.22 | 108 | அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச் செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே உம்பரின் அடையக் கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும். | 1.3.23 | 109 | மற்றுது கண்டு மைந்தன் "வந்ததிங்கு அபாயம்" என்று சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து "பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச் செற்ற, என் செய்கேன்" என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான். | 1.3.4 | 110 | அலறு பேர் ஆவை நோக்கி ஆ |