|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > உற்பத்திக் காண்டம் (726- 1328) > உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) > யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 4. யுத்த
காண்டம் / படலம் 13-16 (2398 - 2967)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 4 (verses 2398 -
2967)
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2008.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 13. சூரபன்மன் வதைப் படலம் | 2398 - 2904 |
| 14. தேவர்கள் போற்று படலம் | 2905 - 2914 |
| 15. இரணியன் புலம்புறு படலம் | 2915 - 2934 |
| 16. மீட்சிப் படலம் | 2935 - 2967 |
உ
செந்திலாண்டவன்
துணை
திருச்சிற்றம்பலம்
| 2398 | கொற்ற வேற்படை பரித்திடும் ஆயிர கோடி ஒற்றர் தங்களை நோக்கியே சூரனாம் உரவோன் மற்றென் ஆட்சியாம் அண்டங்கள் எங்கணும் வைகிச் சுற்று தானையைத் தம்மினோ கடிதெனச் சொன்னான். | 1 |
| 2399 | சொன்ன காலையின் நன்றென வணங்கியே தூதர் பன்ன ருங்கதி கொண்டனர் விண்டனர் படர்ந்து பொன்னின் மேதகும் அண்டங்கள் இடைதொறும் புகுந்து மன்னர் மன்னவன் தன்பணி முறையினை வகுத்தார். | 2 |
| 2400 | வகுத்த காலையில் ஆண்டுறை அவுணமன்
னவர்கள் தொகுத்த நாற்பெருந் தானையங் கடலொடுந் துவன்றி மிகுத்த அண்டத்தின் புடைதொறும் புடைதொறும் மேனாட் பகுத்து வைத்திடும் வாயிலின் நெறிகளாற் படர்ந்தார். | 3 |
| 2401 | முந்தை அண்டத்தின் நெறிதனில் முழங்கிருஞ
சேனை வந்து வந்திவட் செறிவன விதியொடு மாறாய்ச் சுந்த ரங்கெழு மாயன்இவ் வுலகுயிர் துய்ப்ப உந்தி யின்வழி அங்கவை தோன்றுமா றொப்ப. | 4 |
| 2402 | பூதம் யாவையும் உயிர்களும் புவனமுள்
ளனவும் பேதம் நீங்கிய சுருதியா கமங்களும் பிறவும் ஆதி காலத்தின் அநாதியாம் எம்பிரான் அளப்பில் பாத பங்கயத் துதிப்பவும் போன்றன பகரின். | 5 |
| 2403 | இனைய தன்மையால் அண்டத்தின் நெறிதனில்
ஏகும் வனைக ருங்கழல் அவுணர்தம் படையிவண் வரலுங் கனலி தன்சுடர் மறைந்தன நடுங்கினன் கனலும் அனிலன் தானுமெய் வியர்த்தனன் நெருக்கமுற் றயர்வான். | 6 |
| 2404 | ஆ£¢த்த ஓசையால் அகிலமுந் துளங்கிய
அவுணர் கார்த்த மெய்யொளி கதுவலால் இருண்டன ககனந் தூர்த்த பூழியால் ஆழிகள் வறந்தன துணைத்தாள் பேர்த்து வைத்திடு தன்மையால் அண்டமும் பிளந்த. | 7 |
| 2405 | கூடும் இப்பெருந் தானையை நோக்கிமெய்
குலைவுற் றோடு தற்கிடம் இன்றிநின் றிரங்கினர் உம்பர் வீடி னானென வாசவன் மருண்டனன் விதியும் நீடு மாயனும் முடிவதென் னோவென நினைந்தார். | 8 |
| 2406 | பூத லந்தனில் அம்பர நெறிதனில் புடைசூழ் மாதி ரங்களில் அளக்கரின் வரைகளில் வழியில் பாத லங்களில் பிறவினில் அவுணர்தம் படைகள் ஏதும் வௌ¢ளிடை இன்றியே சென்றன ஈண்டி. | 9 |
| 2407 | மலர யன்பதம் மால்பதம் முனிவர்கள் வைகும் உலகம் வாசவன் தொன்னகர் ஏனையோர் உறையுள் அலரி யாதியர் செல்கதி பிலங்களில் அனிகம் பலவும் நின்றன செல்லிடம் பெறாதபான் மையினால். | 10 |
| 2408 | மாறி லாதன தொல்லையண் டங்களின் வந்த வீறி லாததோர் தூசிகள் படர்ந்திடும் எல்லை நூறு கோடியோ சனைகளென் றறிஞர்கள் நுவன்றார் வேறு பின்வருந் தானையின் பெருமையார் விதிப்பார். | 11 |
| 2409 | குறுமை யாமுயிர் வாழ்க்கையர் கொண்டதொல்
வளம்போற் சிறுமை யோவிது விரித்திட அவுணர்கோன் சேனை அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா பிறிது மற்றிதற் குவமையும் ஒன்றிலை பேசின். | 12 |
| 2410 | அஞ்சு பட்டிடு பூதங்கள் பல்லுரு
வமைந்து நெஞ்சு பட்டிடும் உயிர்கொடு நேருமேல் நிகரும் அஞ்சு பட்டிடு பொருப்பெலாஞ் சூறைமுன் மயங்கும் பஞ்சு பட்டிட நடந்திடு தூசிமுற் படையே. | 13 |
| 2411 | அந்த மின்றியே அகன்புவி கொண்டஅண்
டத்தில் வந்தி டுந்திறற் படைகளின் பெருமையா£¢ வகுப்பார் முந்து தூசிகள் மகேந்திரப் பெருநகர் மூடி இந்த வண்டத்தின் இடமெலாம் நிறைந்தன இமைப்பில். | 14 |
| 2412 | ஆன காலையில் ஒற்றர்போய்ச் சூரனை யடைந்து பானல் மெல்லடி கைதொழு தையநீ படைத்த சேனை வந்தயல் நின்றன தூசிமுற் சென்று வானு லாவுபேர் அண்டத்தை நெருக்கின மன்னோ. | 15 |
| 2413 | என்னும் எல்லையில் நன்றென அவுணர்கோன்
எழுந்து தன்ன தாகிய உறையுள் போய்த் தடம்புன லாடித் துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்த அன்னம் உண்டனன் நஞ்சுகொல் மருந்துகொல் அதுவே. | 16 |
| 2414 | நீற ணிந்தனன் நெற்றிமெய்ந் நிரைவிரை களபச் சேற ணிந்தனன் பூந்தொடை பங்கியிற் செறித்தான் மாறில் பொற்சுடர்க் கலையுடன் அணிகலன் மாற்றி வேறு வேறுநன் கினியன புனைந்தனன் விரைவில். | 17 |
| 2415 | ஈசன் மாப்படை ஏனையோர் பெரும்படை யாவும் மாசில் ஆயிர கோடிதேர் செலுத்தியே அவையுங் கேச ரித்திறல் யானமுங் கேடில்பொற் றேரும் பாச னத்திறல் அவுணர்கொண் டேகுவான் பணித்தான். | 18 |
| 2416 | ஆங்க வெல்லையிற் சூரபன் மாவெனும்
அவுணன் பாங்கர் வந்திடு வலவர்தந் தொகையினைப் பாரா ஓங்கு மோ£¢தடந் தேரினைக் கொணர்திரென் றுரைப்பப் பூங்க ழற்றுணை வணங்கியே நன்றெனப் போனார். | 19 |
| 2417 | வாட்டு கேசரி எழுதி னாயிரம் வயமாக் கூடடம் அங்கணோ ரெழுபதி னாயிரங் கூளி ஈட்ட மாகிய தெழுபதி னாயிரம் ஈர்ப்பப் பூட்டி நன்குறப் பண்ணினார் ஆங்கொரு பொலன்தேர். 20 | 20 |
| 2418 | மண்ட லத்தினும் ஆன்றபேர் இடத்தது
மருங்கில் தெண்டி ரைக்கட லாமென ஆர்ப்பது செறிந்த அண்ட மாயிர கோடியுந் தன்னிடத தாற்றிக் கொண்டு நின்றிடும் வலியது மடங்கலங் கொடித்தேர். | 21 |
| 2419 | முடியும் எல்லையில் எழுதரு மருத்தினும்
உந்திக் கடிது செல்வது சென்றிடு விசையினால் ககுபத் தடநெ டுங்கிரி அலமரத் தபனருங் குளிர வடவை யங்கிகள் விளிந்திடப் புரிவதம் மான்தேர். | 22 |
| 2420 | ஏழு நேமியும் இடைப்படு தீபமும் யாவுஞ் சூழு கின்றபேர் அடுக்கலும் ஒன்றிய தொடர்பின் கேழில்¢ பன்மணி ஓவியப் பத்திகள் கெழுவும் ஆழி தாங்கிய அண்டமொத் திலங்கிய தகன்தேர். | 23 |
| 2421 | தொழுத குந்திறல் அவுணர்கோன் வேள்வியில்
துஞ்சி எழுவ தாகிய எல்லையில் தோன்றிய தெதிர்ந்தார் குழுவி ரிந்திடத் துரப்பது நான்முகக் குரிசில் அழியும் நாளினும் அழிந்திடா திருப்பதவ் வகல்தேர். | 24 |
| 2422 | கண்ண கன்படை அளப்பில பரித்தது காமர் விண்ண வர்க்குள வலியெலாங் கொண்டது மேனாள் அண்ணல் நல்கிய இந்திர ஞாலமும் அனைய தெண்ணின் மேற்படு மியாணர்பெற் றுடையதவ் விரதம். | 25 |
| 2423 | அனைய தாகிய தேரினை வலவர்கொண் டணைந்து தினக ரன்தனை வெகுண்டவன் தாதைமுன் செலுத்தத் துணை மற்றதில் இவர்ந்தனன் இவர்தலுந் தொழுது புனைதி வாகையென் றவுணர்கள் பூமழை பொழிந்தார். | 26 |
| 2424 | பொழிந்த காலையில் வலவர்கள் அங்கதிற்
புக்குக் கழிந்த சீர்த்தியான் ஆணையால் தேரினைக் கடவத் தழிந்த ழீமெனப் பல்லியம் இயம்பின சகங்கள் அழிந்த நாளெழு கடலென அவுணர்கள் ஆர்த்தார். | 27 |
| 2425 | அங்கி யன்னபொற் படியகங் கோடிகம்
அடைப்பை திங்கள் வெண்குடை கவரிகொண் டொழுகினர் சிலதர் துங்க மிக்கவன் சீர்த்தியும் ஆணையுந் தொடர்ந்து மங்க லந்திகழ் உருக்கொடு சூழ்ந்திடும் வகைபோல். | 28 |
| 2426 | அண்ணல் மேவரு கோநகர் எல்லையுள் அடைந்த எண்ணில் மாப்பெருஞ் சிகரியின் வாயில்கள் இகந்தே கண்ண கன்ஞௌ¢ளல் ஆயிர கோடியுங் கடந்து வண்ண மாமணிக் கோபுர முதற்கடை வந்தான். | 29 |
| 2427 | வேறு தானவர் கோமகன் தடம்பொற் றேரொடு மாநகர் முதற்கடை வாயில் போதலும் ஆனது நோக்கியே அங்கட் சூழ்தரு சேனைகள் ஆர்த்தன உடுக்கள் சிந்தவே. | 30 |
| 2428 | ஞெலிததிடு பரவையின் நீல வெவ்விடம் ஒலித்தெழுந் தாலென உலப்பில் தானைகள் கலித்தன படர்ந்தன கண்ண கன்புவி சலித்தது கொடியரைத் தரிக்கொ ணாமையால். | 31 |
| 2429 | நேரியம் பரியதோர் நிசாளஞ் சல்லிகை பேரியம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை தூரியம் காகளந் துடிமு தற்படு சீரியம் பலவுடன் இயம்பிச் சென்றவே. | 32 |
| 2430 | சேயின குஞ்சிகள் செறிந்த தானவர் பாயின தானையில் படர்ந்த பூழிகள் வாயின பரவைமேல் வடவைத் தீவிராய்ப் போயின நாளெழு புகையைப் போன்றவே. | 33 |
| 2431 | வானினும் மண்ணினும் மாதி ரத்தினுந் தானிறை கடலினுந் தணப்பின் றாகியே மேனிறை பூழிகள் மிடைய எங்கணுஞ் சோனைகொள் பின்பனித் தூவல் போன்றவே. | 34 |
| 2432 | சூரனி கரத்தெழு தூளி அந்நகர் ஆரகில் ஆவியும் யாரும் ஆடிய பூரிகொள் சுண்ணமும் பொருந்திப் போவது காரின மின்னொடு கடலுண் டேகல்போல். | 35 |
| 2433 | திண்டிறற் கரிகளில் தேரில் வெண்கொடி மண்டுறு பூழிதோய் வானிற் செல்வன கொண்டலின் இருதுவிற் கொக்கின் மாலைகள் தண்டுளி யுறைப்புழிப் படருந் தன்மைபோல். | 36 |
| 2434 | படைவகை திசையெலாம் படரப் பாயிருள் அடைவது சூரறிந் தண்டம் யாவினும் மிடைதரு கதிர்களை விளிக்க வந்தெனக் குடைநிரை எங்கணுங் குழுமு கின்றவே. | 37 |
| 2435 | வெம்பரி கரியுமிழ் விலாழி மாமதம் இம்பரின் நகரெலாம் யாற்றின் ஏகலால் உம்பர்மற் றல்லதை ஒருவன் தானைகள் அம்புவி சென்றிடற் கரிய தானதே. | 38 |
| 2436 | இவ்வகை தானைகள் ஈண்டிச் சென்றிடத் தெவ்வலி அவுணர்கோன் செம்பொற் றேரின்மேல் மைவரை மேருவின் வருவ தாமெனக் கவ்வையின் அமர்புரி களரி ஏகினான். | 39 |
| 2437 | பூசலின் எல்லையில் புரவ லன்செலத் தூசிய தாகியே தொடர்ந்த தானைகள் ஈசன தருள்மகன் இனிது வைகிய பாசறை சூழ்ந்தன படியும் வானுமாய். | 40 |
| 2438 | உரற்றிய கணமழை உம்பர் சூழ்ந்தென விரற்றொடு சூழ்படை ஈட்டம் நோக்கியே மரற்றுறு பலங்களில வாரி கண்வர அரற்றினர் வெருவினர் அமரர் யாவரும். | 41 |
| 2439 | அழுங்கினன் புரந்தரன் அகிலம்
யாவையும் விழுங்குறும் இருவரும் விம்மி னாருளம் புழுங்கினர் வீரர்கள் பூதர் ஏங்கினார் கொழுங்கனல் இடைப்படு விலங்கின் கொள்கைபோல். | 42 |
| 2440 | ஆவதோர் காலையில் அரியும் நான்முகத் தேவனும் ஏனைய திசையி னோர்களும் மூவிரு முகமுடை முதல்வன் தன்னிரு பூவடி பணிந்திவை புகறல் மேயினார். | 43 |
| 2441 | வேறு அந்தமி லாத அண்டம் ஆயிரத் தெட்டுத் தன்னில் வந்திடு தானை யோடு மாபெருஞ் சூர பன்மன் உந்திய தேரின் மேலான் உறுசமர் புரிவான் போந்தான் முந்திய தூசி நந்தம் பாசறை மொய்த்த தென்றார். | 44 |
| 2442 | என்னலும் முறுவல் செய்தாங் கிலங்கெழில் தவிசின்
வைகும் பன்னிரு கரத்து வள்ளல் பவனனைக் குறிப்பின் நோக்க முன்னம துணர்ந்து வல்லே முளவுகோல் கயிறு பற்றிப் பொன்னவிர் மனவே கப்பேர்ப் புரவிமான் தேர்முன் உய்த்தான். | 45 |
| 2443 | உய்த்திடு கின்ற காலத் தொய்யென எழுந்து
காமர் புத்தலர் நீபத் தாரான் புகர்மழுக் குலிசஞ் சூலஞ் சத்திவாள் பலகை நேமி தண்டெழுச் சிலைகோல் கைவேல் கைத்தலங் கொண்டான் என்னின் அவன்தவங் கணிக்கற் பாற்றோ. | 46 |
| 2444 | மாறிலா அருக்கன் நாப்பண் வைகிய பரம
னேபோல் ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவி மான்தேர் ஏறினான் வீர வாகு இலக்கரோ டெண்ம ராகும் பாறுலாங் குருதி வேலார் பாங்கராய்ப் பரசி வந்தார். | 47 |
| 2445 | இராயிர வௌ¢ள மாகும் எண்டொகைப் பூதர்
யாரும் மராமரம் பிறங்கல் ஈட்டம் வரம்பறு படைகள் பற்றி விராவினர் சூழ்ந்து சென்றார் விரிஞ்சனே முதலோர் யாரும் பராவொடு புடையின் நின்று பனிமலர் மாரி தூர்த்தார். | 48 |
| 2446 | தூர்த்திடு கின்ற காலைச் சுருதியின் தொகைக்கும்
எட்டாத் தீர்த்தன்மான் றேர்மே லாகித் திண்புவி அண்டந் தன்னில் பேர்த்திடும் உயிர்கள் மாற்றப் பின்னறு முன்னோன் போல ஆர்த்திடு தானை வௌ¢ளத் தவுணர்கள் மீது போனான். | 49 |
| 2447 | ஆங்கது காலை தன்னில் ஆறிரு தடந்தோள்
ஐயன் பாங்குறு பூதர் யாரும் பாரொடு திசையும் வானும் நீங்குத லின்றிச் சூழும் நேரலன் படையை நோக்கி ஏங்கினர் தொல்லை வன்மை இழந்தனா¢ இனைய சொற்றார். | 50 |
| 2448 | தீயன புரியுஞ் சூரன் செய்திடு தவத்தாற்
பெற்ற ஆயிர விருநான் கண்டத் தவுணரும் போந்தார் அன்றே ஏயதோ ரண்டம் ஒன்றில் இருந்தனர் இவர்மற் றன்றால் மாயிருந் திசையும் விண்ணும் வையமுஞ் செறிந்து நின்றார். | 51 |
| 2449 | வரத்தினிற் பெரியர் மாய வன்மையிற் பெரியர்
மொய்ம்பின் உரத்தினிற் பெரியர் வெம்போர் ஊக்கத்திற் பெரியர் எண்ணில் சிரத்தினிற் பெரியர் சீற்றச் செய்கையிற் பெரியர் தாங்குங் கரத்தினிற் பெரியர் யாருங் காலனிற் பெரியர் அம்மா. | 52 |
| 2450 | மாகத்தின் வதிந்த வானோர் வன்மையும் வளனும்
வவ்விச் சோகத்தை விளைத்து வெம்போ£¢ தொடங்கியே தொலைவு செய்தோர் மோகத்தின் வரம்பாய் நின்றோ£¢ முழுதுயிர்க் கடலுள் வேட்கை மேகத்தின் வலிந்த தீயோர் விரிஞ்சன்ஏற் றிடினும் வெல்வோர். | 53 |
| 2451 | கூற்றெனும் நாமத் தண்ணல் கொண்டிடும் அரசுஞ்
செங்கேழ் நூற்றிதழ்க் கமல மேலான் நுனித்தனன் விதிக்கு மாறு மாற்றிடுஞ் செய்கை வல்லோர் மாநில முழுதுண் டாலும் மாற்றரும் பசிநோய் மிக்கோ ரண்டங்கள் அலைக்குங் கையோர். | 54 |
| 2452 | வெங்கனல் சொ£¤யுங் கண்ணார் விரிகடற் புரைபேழ்
வாயார் பங்கமில் வயமேற் கொண்டோ£¢ பவத்தினுக் குறையு ளானோர் செங்கதிர் மதியந் தோயுஞ் சென்னியர் செயிர்தீர் ஆற்றல் அங்கத விறையும் பேர அடிபெயர்த் துலவும் வெய்யோர். | 55 |
| 2453 | அங்கிமா முகத்தி னான்போல் அடைந்தனர் பல்லோர்
யாளித் துங்கமா முகத்தி னான்போல் தோன்றினர் பல்லோர் சூழி வெங்கைமா முகத்தி னான்போல் மேயினர் பல்லோர் மேலாஞ் சிங்கமா முகத்தி னான்போல் திகழ்ந்தனர் பல்லோர் அன்றே. | 56 |
| 2454 | மதுவொடு ஆடை பன்போல் வந்தனர் பல்லோர்
யாருந் துதியுறு புகழச்சுந் தோப சுந்தரிற் செறிந்தோர் பல்லோர் அதிர்கழற் சலந்த ரன்போல் ஆர்த்தனர் பல்லோர் ஆற்ற முதிர்சின மகிடன் போல மொய்த்தனர் பல்லோர் அம்மா. | 57 |
| 2455 | அரன்படை பரித்தோர் பல்லோர் அப்புயத் தவிசின்
மேவும் வரன்படை பரித்தோர் பல்லோர் மழுவொடு தண்டந் தாங்குங் கரன்படை பரித்தோர் பல்லோர் கால்படை பரித்தோர் பல்லோர் முரன்படை படுத்த கொண்டல் முதுபடை பரித்தோர் பல்லோ£¢. | 58 |
| 2456 | ஆனதொ ரவுண வௌ¢ளம் அநந்தகோ டியதாம்
என்றே தானுரை செய்வ தல்லாற் சாற்றவோ ரளவும் உண்டோ வானமும் நிலனும் ஏனை மாதிர வரைப்பும் எங்குஞ் சேனைக ளாகிச் சூழின் யாமென்கொல் செய்வ தம்மா. | 59 |
| 2457 | ஒரண்டத் தவுணர் போரால் உலைந்தயாம் ஒருங்கே
யெல்லாப் பேரண்டத் தோருந் தாக்கிற் பிழைப்புறு பரிசும் உண்டோ காரண்ட அளக்கர் சாடிக் கனவரை எறியுங் கால்கள் ஏரண்டச் சூழல் புக்கால் அவைபின்னும் இரக்க வற்றோ. | 60 |
| 2458 | ஒருவரே எம்மை எல்லாம் உரப்பியே துரப்பர்
பின்னை இருவரே சென்று தாக்கின் யார்இவண் உய்ய வல்லார் துருவரே யனைய துப்பிற் சூழுறும் அவுணர் யாரும் பொருவரே என்னில் நேர்போய்ப் பூசலார் தொடங்கற் பாலார். | 61 |
| 2459 | எல்லையில் ஆற்றல் கொண்ட எம்முடைத் தலைவர்
யாரும் அல்லன வீரர் தாமும் அவுணரை எதிர்க்க லாற்றா£¢ கல்லொடு மரத்தால் யாமோ அவர்திறல் கடக்க வல்லேம் ஒல்லைநம் உயிரும் இன்றே ஒழிந்தன போலும் அன்றே. | 62 |
| 2460 | நாற்படை அவுணர் தாக்கின் நாமெலாம் விளிதும்
வீரர் காற்படு பூளை யேபோற் கதுமென இரிவர் வாகைப் பாற்படு திறலோன் நிற்கிற் பழிபடும் இனைய ரோடும் வேற்படை யொருவன் அன்றி வேறியார் எதி£¢க்க வல்லார். | 63 |
| 2461 | நீடுறு திசையும் வானும் நிலனும்வௌ¢ ளிடைய
தின்றிப் பாடுற வளைந்து கொண்டார் பற்றலர் அதனால் யாமும் ஓடியும் உயய லாகா ஒல்லுமா றவரைத் தாக்கி வீடுதல் உறுதி யென்றே விளம்பிமேற் சேற லுற்றா£¢. | 64 |
| 2462 | மற்றத காலை தன்னில் மாபெரும் பூத
சேனைக் கொற்றவர் பலரும் ஏனை வீரர்தங் குழுவி னோரும் வெற்றிகொள் மொய்ம்பன் தானும் மிடைந்துசூழ் படையை நோக்கி இற்றன கொல்லோ நந்தம் வன்மையென் றெண்ண முற்றார். | 65 |
| 2463 | அண்டர்கள் முதல்வன் தானும் அமரரும் அகில
மெங்கு தண்டுத லின்றிச் சூழுந் தானவர் அனிக மெல்லாங் கண்டனர் துளங்கி அஞ்சிக் கவன்றனர் அவருட் காரி வண்டுள அலங்கற் சென்நி வானவற் கினைய சொல்வான். | 66 |
| 2464 | ஆண்டகை முருகன் தன்மேல் ஆயிர விருநா
லண்டத் தீண்டிய தானை யெல்லாம் இறுத்தன இவற்றி னோடு மூண்டமர் இயற்றி வெல்ல வூழிநாள் முடியும் என்றான் மாண்டிடு கின்ற தெங்ஙன் அவுணா¢கள் மன்னன் மன்னோ. | 67 |
| 2465 | அடுதிறல் வலிபெற் றுள்ள அவுணராம் பானாட்
கங்குல் விடிவதும் அமரர் தங்கள் வெஞ்சிறை வீடு மாறும் நெடியதொல் வெறுக்கை தன்னை நீங்கிய நமது துன்பம் முடிவது மில்லை கொல்லோ மொழிந்தருள் முதல்வ என்றான். | 68 |
| 2466 | இந்திரன் இனைய தன்மை இசைத்தலும் இலங்கை
காத்த ஐந்திரு சென்னி யானை அடுதிறல் கொண்டு நின்ற செந்திரு மருமத் தண்ணல் தேவரை அளிக்குந் தொல்லோன் புந்திகொள் கவலை நாடி இனையன புகலா நின்றான். | 69 |
| 2467 | காலமாய்க் காலம் இன்றிக் கருமமாய்க் கரும
மின்றிக் கோலமாய்க் கோலம் இன்றிக் குணங்களாய்க் குணங்கள் இன்றி ஞாலமாய் ஞாலம் இன்றி அநாதியாய் நங்கட் கெல்லாம் மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண் டுற்றான். | 70 |
| 2468 | குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் மேரு
வென்னும் பொன்றிகழ் வெற்பின் வந்து புவனங்கள் முழுதும் அங்கட் சென்றுறை உயிர்கள் முற்றுந் தேவருந் தன்பாற் காட்டி அன்றொரு வடிவங் கொண்ட தயர்த்தியோ அறிந்த நீதான். | 71 |
| 2469 | பொன்னுரு வமைந்த கஞ்சப் புங்கவ னாகி
நல்கும் என்னுரு வாகிக் காக்கும் ஈசன்போல் இறுதி செய்யும் மின்னுரு வென்ன யார்க்கும் வௌ¤ப்படை போலும் அன்னான் தன்னுரு மறைக ளாலுஞ் சாற்றுதற் கரிய தன்றே. | 72 |
| 2470 | பாயிருங் கடலிற் சூழ்ந்த பற்றலர் படையை
எல்லாம் ஏயெனும் முன்னம் வீட்டுஞ் சிறுவனென் றெண்ணல் ஐய ஆயிர கோடி கொண்ட அண்டத்தின் உயிர்கட் கெல்லாம் நாயகன் அவன்காண் நாஞ்செய் நல்வினைப் பயனால் வந்தான். | 73 |
| 2471 | சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க
உன்னின் மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன் வாய்மைச் சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால் நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார். | 74 |
| 2472 | பாரிடர் சேனை யோடு படர்ந்ததும் இலக்கத்
தொன்பான் வீரர்கள் புடையில் போற்ற மேயதும் படைகள் பற்றிச் சூரனை அடுவான் வந்த சூழ்ச்சியுந் தூக்கின் மாதோ வாரண முதலா மேலோற் கனைத்துமோ ராட லேகாண். | 75 |
| 2473 | துய்யதோர் குமர னேபோல் தோன்றிய முதல்வன்
சூழ்ந்த வெய்யதா னவரை யெல்லாம் விரைந்துடன் அறுத்து நீக்கிக் கையில்வேல் அதனாற் சூரன் ஆற்றலுங் கடக்கும் யாதும் ஐயுறேல் காண்டி யென்றான் அறிதுயில் அமா¢ந்த பெம்மான். | 76 |
| 2474 | மாலிவை பலவுங் கூறி மகபதி உளத்தைத்
தேற்றி ஓலமொ டவுண வௌ¢ளம் உம்பருஞ் செறிந்த செவ்வேள் பாலுற நின்று போரின் பரிசினைப் பார்த்து மென்றே வேலைடை முதல்வன் பாங்கா விண்ணவ ரோடும் போந்தான். | 77 |
| 2475 | வேறு அன்ன தன்மைகண் டறுமுகன் முறுவல்செய் தடுபோர் உன்னி யேகலும் வானமும் வையமும் ஒன்றாத் துன்னு தானவப் பெருங்கடல் ஆர்த்தமர் தொடங்க முன்ன மேகிய பாரிடர் யாவரும் முரிந்தார். | 78 |
| 2476 | முரிந்த காலையில் பூதரின் முதல்வர்கள்
முரட்போர் புரிந்து சாய்ந்தனர் இலக்கரோ டெண்மரும் பொருதே இரிந்து நீங்கினர் இன்னதோர் தன்மைகள் எல்லாந் தெரிந்து திண்டிறல் மொய்ம்பினோன் சிலைகொடு சேர்ந்தான். | 79 |
| 2477 | சோ¢பு தன்சிலை வாங்கியே சரமழை சிதறி நேர்பு குந்திடும் அவுணர்கள் நெடுந்தலை புயங்கள் மார்பு வெங்கரங் கழலடி வரைகளாய் வீழ ஈர்பு நின்றமர் இயற்றினன் சிறுவரை இகலி. | 80 |
| 2478 | மாக மேல்நிமிர் ஆயிர கோடிமா கடலுள் நாக மொன்றுசென் றலைத்தென நண்ணலர் எதிர்போய் ஆக வம்புரிந் துலப்புறாத் தன்மைகண் டழுங்கி ஏக நாயகன் தனதுபால் வந்தனன் இளவல். | 81 |
| 2479 | காலை யங்கதில் அவுணர்தந் தானையோர்
கனத்தின் சாலம் ஓடின பூதரில் தலைவருஞ் சாய்ந்தார் கோல வெஞ்சிலை வீரரும் முரிந்தனர் குழவிப் பால னேயிவண் வருமெனச் சூழ்ந்தனர் பலரும். | 82 |
| 2480 | தண்டு நேமியுங் குலிசமுஞ் சூலமுந்
தனுக்கள் உண்டு மிழ்ந்திடு வாளியும் உடம்பிடித் தொகையும் பிண்டி பாலமுங் கணிச்சியும் பாசமும் பிறவும் அண்டர் தந்திடு படைகளுஞ் சொரிந்துநின் றார்த்தார். | 83 |
| 2481 | பாரி டங்களின் படையெலாம் நெக்கதும்
பாங்கர் வீர மொய்ம்பனும் இளைஞரும் வருந்திமீண் டதுவுங் காரி னம்புரை அவுணர்தஞ் செய்கையுங் காணா மூரல் செய்தனன் எவ்வகைத் தேவா¢க்கு முதல்வன் | 84 |
| 2482 | நாட்டம் மூன்றுடைத் தாதைபோற் சிறிதிறை
நகைத்து நீட்ட மிக்கதோர் சிலையினை நெடுங்கரம் பற்றிக் கோட்டி நாணொலி கொண்டிட அண்டருங் குலைந்தார் ஈட்ட மிக்கபல் லுயிர்களுந் துளக்கமெய் தினவே. | 85 |
| 2483 | வேறு முக்கணன் உதவிய திருமுருகன் முரணுறு வரிசிலை முதிரொலிபோய்த் தொக்கன செவிதொறும் நுழைதலுமே தொலைவறும் அவுணர்கள் தொகைமுழுதும் நெக்கன பகிர்வன இரதமெலாம் நிரைபட வருபரி புரள்வனவே மைக்கரி தரைமிசை விழுவனவான் மதிதொடுநெடுவரை மறிவனபோல். | 86 |
| 2484 | மாசறு மறைகளின் மறையதனை மலைமுனி யுணர்வகை
யருள்புரியந் தேசிக முதலவன் வரிசிலையிற் செறிமுகில் உறைவகை சிதறுவபோல் ஆசுகம் அளவில கடவினனால் அடங்கெழும் அவுணர்கள் புடைவளையும் காசினி அகலமும் விரிகடலுங் ககனமும் மிடைவன கணையெனவே. | 87 |
| 2485 | கொடிகளை அடுவன அளவிலவே குடைகளை அடுவன
அளவிலவே படைகளை அடுவன அளவிலவே பரிகளை அடுவன அளவிலவே கடகரி அடுவன அளவிலவே கனையொலி இரதமொ டவுணர்கள் தம் முடிகளை அடுவன அளவிலவே முழுதுல குடையவன் விடுசரமே. | 88 |
| 2486 | பரவிய தருவினம் என அவுணப் படைநிரை விழுவன
தொடுகடலில் திரையென விழுவன புரவிஇனந் திருநெடு வரைகளின் விழுவனதேர் கருமைகொள் மணிமுகில் இனமெனவே கடகரி விழுவன கனவரைசூழ் இரவியும் மதியமும் விழுவனபோல் எழுவன கவிகையும் விழுவனவே. | 89 |
| 2487 | செல்லுறு தாள்களும் அடுபடைகள் சிந்திய
செங்கைகளுந் திறலே சொல்லிய வாய்களும் விம்மலுறுந் தோள்களும் நோக்குறு துணைவிழியுங் கல்லென ஆர்த்திடு கந்தரமுங் கவசமும் வீரர்கள் துவசமுடன் எல்லையி லாதமர் தனிமுதல்வன் எய்திடும் வாளிகள் கொய்திடுமே. | 90 |
| 2488 | வேறு வட்டணை கொண்டிடு மால்வரையும், எட்டெனும் ஓங்கலும் யானைகளும் பட்டுரு விக்கணை பாறினவால், ஒட்டலர் எங்ஙனம் உய்குவதே. | 91 |
| 2489 | பொன்னுல கெல்லைபு குந்துலவும் அன்னமு யர்த்திடும் அண்ணல்பதந் துன்னுறும் அச்சுதர் தொல்லுலகின், மின்னென வேசெலும் வேள்கணையே. | 92 |
| 2490 | மேதினி கீண்டு விரைந்துபுகும், பாதல மூல பரந்துசெலும் மூதகும் அண்ட முகட்டுருவும், மாதிரம் ஏகுறும் வள்ளல்சரம். | 93 |
| 2491 | மூவிரு செய்ய முகத்தொருவன், ஏவிய செஞ்சரம் எங்குமுறா மேவலர் தங்களை வீட்டிடும்வே, றேவர்கள் கண்ணும் இறுத்திலவே. | 94 |
| 2492 | ஆனனம் ஆறுள அண்ணல்சரம், தானவர் சென்னிகள் தள்ளுதலும் வானிடை போயின மாண்கதிர்கள் மேனிம றைப்புறும் வெய்யவர்போல். | 95 |
| 2493 | வாளெழு வேல்பிற வாங்கினர்தந், தோள்களை வாளி துணித்தெறிய நீளிடை சென்று நிரந்திடுதங், கேளிரை அட்டன கீழ்மையர்போல். | 96 |
| 2494 | மாசகல் வானக மாதிரவாய், காசினி வேலைகளத தின்அகம் பாசறை சுற்றிய பாடியெலாம், ஆசற அட்டனன் அற்புதனே. | 97 |
| 2495 | அட்டிடு கின்றுழி அம்புயன்மால், ஒட்டுறு வாசவன் உள்மகிழாக் கெட்டனர் தானவர் கேடில்துயர், விட்டனம் என்று விளம்பினரே. | 9 |
| 2496 | அடைந்தனர் விம்மிதம் ஆங்கவுணர், மிடைந்த நோக்கினர் வேற்படையோன் தடிந்தது காண்சிலர் தாரணிமேற், கிடந்தது கண்டனர் கேசரரே. | 99 |
| 2497 | அலமரு பாரிடர் அவ்வவர்தந், தலைவர்கள் ஏனையர் தானவர்தம் மலிபடை சாய்த்து வயம்புனைவிற், புலவனை ஆர்ப்பொடு போற்றினரே. | 100 |
| 2498 | வள்ளல்ச ரம்பட வான்முகடு, கொள்ளுறு தானை குழாந்தொலைய வௌ¢ளிடை யாயின விண்ணவர்தம், உள்ளக மாற்றவு வப்புறவே. | 101 |
| 2499 | அண்டக டாகம தப்புறமாய்க், கொண்டிடு தானவர் கொள்கையிது கண்டிறை வன்கழல் காணநெறி, உண்டினி யென்றனர் உள்மகிழ்வார். | 102 |
| 2500 | காற்றென அண்ட கடாகநெறி, தோற்றிய வாயில் தொடர்ந்துபுகா மேற்றிகழ் தேர்கரி வெம்பரியின், ஏற்றமொ டொல்லென ஏகினரால். | 103 |
| 2501 | அந்நெறி ஏகியிவ் வண்டமெலாந், துன்னினர் வான்புவி சூழ்ந்துவௌ¤ என்னது மில்லென ஈண்டினரால், முன்னுறவந்து முடிந்தவர்போல். | 104 |
| 2502 | சூரன் எனப்படு தொல்லிறைவன், பேரமர் ஆற்றிடு பெற்றியினால் தேரிடை வந்துறு செய்கைதெரீஇ, ஆர்வமொ டேநெடி தார்த்தனரே. | 105 |
| 2503 | ஆர்த்தனர் தம்முன் அடைந்துளர்தாம்,
பேர்த்திடு கின்ற பிணக்கிரியாய் ஈர்த்திடு சோரி இடைப்படுதல், பார்த்தனர் சிந்தை பரிந்தனரே. | 106 |
| 2504 | பரிந்தனர் நம்படை பட்டிடவே, புரிந்திடு வானொடு போர்புரியா விரைந்து வயங்கொடு மீடுமெனாத், தெரிந்தனர் சிந்தனை தேற்றினரே. | 107 |
| 2505 | தேற்றிடு கின்றுழி தேவரெலாம், போற்றிட வீரர் புடைக்கணுற ஆற்றல்கொள் பூதர்கள் ஆர்த்திடவே, தோற்றினன் ஈறொடு தோற்றமிலான். | 108 |
| 2506 | சேயுரு வாகிய சீர்முதல்வன் மேயது கண்டு மிகச்சிறியன் பாய்பரி யானை படைத்துமிலான், ஏயிவ னேநம தெண்ணலனே. | 109 |
| 2507 | ஆண்டகை மைந்தனிவ் வண்டமெலாம், ஈண்டியதானை இமைப்பொழுதின் மாண்டிட அட்டனன் மற்றிதுதான், ஈண்டிடும் அற்புத நீர்மையதே. | 110 |
| 2508 | அன்னது நின்றிட அங்கவன்மேல், மன்னவர் மன்னவன் வந்துபொரு முன்னமர் ஆற்றி முடிக்குதும்யாம், என்ன இயம்பினர் யாவருமே. | 111 |
| 2509 | தற்பமொ டின்னன சாற்றியவண், முற்படு தானவர் முக்கணுடைத் தற்பரன் நல்கிய சண்முகனை, வற்புடன் ஆர்த்து வளைந்தனரால். | 112 |
| 2510 | வளைந்திடு காலையில் வானவர்கள், உளைந்தனர் பூதர்கள் உட்கிமனந் தளர்ந்தனர் வீரர் சலித்தனரால், விளைந்த பேரமர் மீட்டுமெனா. | 113 |
| 2511 | வேறு ஐயன்ம ருத்தினை அத்துணை நோக்கிக் கையணி நெற்றி கடைக்குழை யாகி வெய்யவர் தானைகள் மேவுழி யெல்லாம் வையம்வி டுக்குதி வல்லையில் என்றான். | 114 |
| 2512 | அட்டுறு நீப அலங்கல் புனைந்தோன் கட்டுரை கொண்டு கரந்தொழு காலோன் ஒட்டுறு நண்ணலர் உற்றுழ காணா விட்டனன் அம்ம விறற்பரி மான்தோ¢. | 115 |
| 2513 | மண்ணிடை சென்றிடு மாதிர நீந்தும் விண்ணிடை சூழ்தரும் வேலையின் மீதாங் கண்ணுறும் எப்படி கைதொழும் வானோர் எண்ணினும் நாடரி தெந்தைபி ரான்தேர். | 116 |
| 2514 | சேயது காலை திறத்திற மாகி மூயின தானவர் மொய்ம்புறு தானை சாய்வுற ஓர்தொடை தன்னில் அநந்தம் ஆயிர கோடிக ளாக்கணை தொட்டான். | 117 |
| 2515 | பரிந்தன சூழ்ந்தவர் பாணிகள் மொய்ம்பு
சிரந்துணி வுற்றன செம்புன லாழி சொரிந்த பிணக்கிரி துற்றிய வற்றால் நெரிந்தது வையம் நௌ¤ந்தது நாகம். | 118 |
| 2516 | பொய்கொலை ஆற்றிய பூரியர் உக்கார் செய்குவர் நன்மை செறிந்துள ரேனுங் கைகெழு ஞாளிக ளேகறித் துண்ட மைகெழு தானவர் மாண்டிடும் யாக்கை. | 119 |
| 2517 | ஒன்னலர் மீதின் உயிர்க்குயி ரானோன் மின்னென வீசிய வெஞ்சர மாரி பின்னுற முந்து பெயர்ந்திடு மென்றால் அன்னவன் தோ¢விரை வா£¢கணிக் கின்றா£. | 120 |
| 2518 | பரத்தினு மேதகு பண்ணவன் வா£¢வில் கரத்தினை யும்விரை வாற்கரந் தூண்டுஞ் சரத்தினை யுந்தடந் தேரினை யுங்கால் உரத்தினை யும்புகழ் வார்புடை யுள்ளோர். | 121 |
| 2519 | வெவ்விச யப்படை வீட்டிடும் வாளிச் செவ்விசை தேர்விசை நாடினர் செவ்வேள் கைவிசை யோநெடுங் கால்விசை தானோ வெவ்விசை யோவிசை என்றனர் வானோர். | 122 |
| 2520 | துய்யவன் வாளி துணிந்திட வீரர் கையொடு வானிடை செல்வ கணிப்பில் ஐயிரு வட்டம ராப்புடை பற்ற வெய்யவர் பற்பலர் விண்ணெழல் போலும். | 123 |
| 2521 | காலொரு பாங்கர் கழுத்தொரு பாங்கர் வாலொரு பாங்கர் மருப்பொ டெருத்தம் மேலொரு பாங்கர் வியன்கையொர் பாங்காத் தோலினம் இவ்வகை யேதுணி கின்ற. | 124 |
| 2522 | பல்லணம் அற்றன பன்முழு தற்ற செல்லுறு தாளொடு சென்னியும் அற்ற ஒல்லொலி அற்ற உரந்துணி வுற்ற வல்லமா¢ நீந்துறு மாத்தொகை முற்றும். | 125 |
| 2523 | மாழைகொள் வையம் மடிந்திட நேமி ஆழிகொள் சோரியின் ஆழ்வன மேருச் சூழுறும் வெய்யவர் தொல்புவி கீண்டே கீழுறும் எல்லை கெழீஇயின போலும். | 126 |
| 2524 | ஏறிய தேர்களும் யானைகள் யாவுஞ் சூறைகௌ¢ வாசிக ளுந்துணி வுற்றே வீறகல் வீரர்மி சைப்பட வீழ்ந்த மாறவை ஆற்றிடும் வல்வினை யேபோல். | 127 |
| 2525 | ஞாலமும் வானமும் நண்ணலர் ஆவி மாலொடு வாரி மடங்கல் உலைந்தான் சாலுமி வற்கிது தாள்வலி யாற்கொல் கால னெனப்புகல் கட்டுரை பெற்றான். | 128 |
| 2526 | எறிபடை யாவையும் ஏமம தாகச் செறிபடை யாவையுஞ் சேயவன் ஏவால் முறிபடு கின்ற முனிந்துவ ணப்புட் கறிபட மெய்துணி கட்செவி யேபோல். | 129 |
| 2527 | முன்னுறு வார்கள் முரட்படை தூவிப் பின்னுறு வார்பெய ராதுபு டைக்கண் துன்னுறு வார்கள் எலாந்துணி வாக மின்னென எங்கணும் வேள்கணை தூர்த்தான். | 130 |
| 2528 | சூலம தேகொல் கணிச்சிகொல் தொல்லை மாலெறி நேமிகொல் வச்சிர மேகொல் காலொடு சென்ற கனற்குழு வேகொல் வேலது கொல்லென வேள்கணை விட்டான். | 131 |
| 2529 | வேறு மழைத்திடு மெய்யுடை மாற்றலர்கள், இழைத்திடு மாய இயற்கைகளும் விழுத்தக வீசும் விற்படையும், பிழைத்தன தாங்கள் பிழைத்திலரால். | 132 |
| 2530 | முக்கணன் மாமகன் மொய்கணைகள், தொக்கவர் யாக்கை துணித்திடலும் மெய்க்கிடு பல்கலன் மீன்விழல்போல், திக்குல விப்படி சிந்தினவே. | 133 |
| 2531 | அண்ணல் சரங்கள் அறுத்திடலும், எண்ணலர் யாக்கைகள் இற்றவைதாம் மண்ணை யளந்தயில் மாலெனவே, விண்ணை யளந்து விழுங்கினவே. | 134 |
| 2532 | சூழுறு தானை துணிந்தஉடல், ஏழெனும் நேமியும் எண்டகுபேர் ஆழியும் விண்ணும் அடைத்திமையோர், வாழுல கங்களை வௌவியவே. | 135 |
| 2533 | காடி யிழந்து கவந்தமதாய், ஆடின வௌ¢ளமும் ஆயிரமா கோடி யதுண்டு குகன்கணையால், வீடின எல்லை விதிக்குநர்யார். | 136 |
| 2534 | வீழுறு மாற்றலர் மெய்க்குருதி, ஆழக ளாகி அகன்புவியில் பூழைக ளோடு புகுந்துபிலம், ஏழுள எல்லையும் ஈண்டியதே. | 137 |
| 2535 | வேறு பாதல எல்லை பரந்திடு சோரி பூதல மீண்டு புகுந்து பராவி ஓத நெடுங்கடல் ஓங்கிய வாபோல் மாதிரம் எங்கும் மறைத்தன அன்றே. | 138 |
| 2536 | மீனுடு வாக விளங்கிய திங்கள் பானு மலா¢ந்திடு பங்கய மாகச் சோனைகொள் மாமுகில் தோணிய தாக வானிமிர் செம்புனல் மாகடல் ஒக்கும். | 139 |
| 2537 | மாசறு கூற்றனும் மற்றுளர் தாமுங் கேசர ராகிய கிங்கரர் யாரும் பாசம லைந்திடு பல்பிணி பற்றா வீசினர் ஆருயிர் மீன்கள் கவர்ந்தார். | 140 |
| 2538 | பாலுறு கின்ற பணிக்கிறை நாப்பண் மாலரு ளில்துயில் மாட்சிமை யென்ன நீலுறு திங்கள் நிணங்கெழு செந்நீர் வேலையின் மீது விளங்கிய தம்மா. | 141 |
| 2539 | மட்டறு செம்புனல் வாரிதி நீந்தி ஒட்டலர் யாக்கையின் ஓங்கல் அறுத்துத் தட்டுறு செங்கதிர் சண்முக மேலோன் விட்டிடு நேமியின் விண்மிசை செல்லும். | 142 |
| 2540 | சிறைப்புற வுக்கருள் செய்திட
மெய்யூன் அறுப்பவன் என்ன அடைந்தனர் விண்ணின் நெறிப்படு வானவர் நேரலர் யாக்கை உறப்படு சோரிமெய் உற்றிடு நீரால். | 143 |
| 2541 | ஆனதொ ரெல்லையில் அண்ட நிறைந்த சேனைகள் வீழ்ந்தன செம்மல் சரத்தால் ஊனுயிர் பூதமொ ழந்தன முக்கண் வானவன் மூரலின் மாய்ந்திடு மாபோல். | 144 |
| 2542 | வேறு அண்டம் ஈங்கிது முற்றொருங் கீண்டிய அவுணர் தண்ட மாய்தலும் ஏனைய அண்டங்கள் தம்மில் கொண்ட தானைகள் பின்னரும் வந்திடக் குமரன் கண்டு மற்றவை தொல்லைத்தனன் செலுத்திடு கணையால். | 145 |
| 2543 | அறுத்து வெம்முமுனத் தானையை யாண்டுசெல்
லனிகம் மறித்தும் வந்துவந் தடைதரும் இவணென மனத்துட் குறித்து வெங்கணை மாரியால் அண்டகோ ளகையின் நெறித்த ரும்பெரு வாயிலை யடைததனன் நிமலன். | 146 |
| 2544 | ஆண்டு சென்னெறி மாற்றியே அண்ணல்வெங்
கணையால் மாண்ட தானைகள் சோரியுங் களேவர மலிவும் நீண்ட பாதலங் கடற்புவி கொண்டுவான் நிமிர்ந்தே ஈண்டு கின்றது கண்டனன் வரைபக எறிந்தோன். | 147 |
| 2545 | நெற்றி நாட்டத்தின் உலகெலாம் அட்டிடு
நிமலன் பெற்ற மாமகன் பன்னிரு விழிகளும் பிறங்கு கற்றை வெஞ்சுடர் வடவைபோல் ஆக்கியக் கணத்தில் உற்று நோக்கினன் நெரிந்தன களேவரத் தோங்கல். | 148 |
| 2546 | வெந்து நுண்டுகள் பட்டன களேவரம்
விசும்பின் உந்து சோ£¤நீர் வறந்தன மூவகை உலகு முந்து போலவே அமைந்தன முளரியான் முகுந்தன் இந்தி ராதியர் ஆர்த்தனர் குமரனை ஏத்தி. | 149 |
| 2547 | பாறு லாவரு களேவரத் தமலையும் படிமேல் வீறு சோணித நீத்தமும் வேவுற விழித்து நீற தாக்கினான் சூரனை அட்டிலன் நின்றான் ஆறு மாமுகன் ஆடலை உன்னினன் ஆங்கொல். | 150 |
| 2548 | ஆகும் எல்லையின் ஒல்லையின் அடுகளத்
தடைந்த சேகு நெஞ்சுடைச் சூரன்இத் திறமெலாந் தெரிந்து மாக நீடுநந் தானையை அலைத்தமாற் றலனை நாகர் தம்மொடு முடிக்குவன் யானென நவின்றான். | 151 |
| 2549 | மாற்றம் இத்திறம் இசைத்திடும் அவுணர்கோன்
மனத்தில் சீற்ற மூண்டிட அமர்வினை குறித்தனன் திகிரிக் காற்றின் ஒல்லைவந் தேற்றலும் மருத்துவன் கடவிப் போற்று தேர்மிசை முருகனுஞ் சென்றெதிர் புகுந்தான். | 152 |
| 2550 | புக்க காலையில் அறுமுகன் தோற்றமும்
புடையின் மிக்க பன்னிரு கரங்களும் வியன்படைக் கலனுந் தொக்க வீரமும் வன்மையும் நோக்கியே தொல்லைத் தக்க னேயென அவுணர்கோன் இன்னன சாற்றும். | 153 |
| 2551 | சிறந்த வான்மதி மிலைச்சினோன் அருள்புரி
செயலால் இறந்தி டேனியான் என்றுமிப் பெற்றியாய் இருப்பேன் மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும் மலைந்தே இறந்து ளார்பலர் உணர்ந்திலை போலுநீ இதுவே. | 154 |
| 2552 | உள்ளம் நொந்துநொந் தென்பணி ஆற்றியே
உலைந்து தள்ளு றுஞ்சுரர் மாழியினைச் சரதமென் றுன்னிப் பிள்ளை மென்மதி யாலிவண் வந்தனை பெரிதும் அள்ள லுற்றுழிப் புகுந்திடுங் கயமுனி யதுபோல். | 155 |
| 2553 | உடைப்பெ ரும்படை செறுத்தனை பாலனென்
றுன்னை விடுப்ப தில்லையால் வெரிநது கொடுக்கினும் விரைவில் படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையுங் கெடுப்ப னென்றனன் தன்பெருங் கிளையுடன் கெடுவான். | 156 |
| 2554 | வெம்பு ரைத்தொழிற் கொருவனாங் கயவநீ
வெறிதே வம்பு ரைத்தனை யாவதொன் றில்லைநின் மார்பஞ் செம்பு ரைப்பட யாம்விடு கின்றதோர் திறல்வாய் அம்பு ரைத்திடு மாறுனக் கென்றனன் அமலன். | 157 |
| 2555 | ஆரும் நேரிலாப் புங்கவன் சேயின தறையச் சூர னாகியே அவுணர்கோன் துண்ணெனச் செயிர்த்து மேரு நேர்வதோர் வா¤சிலை யெடுத்துவிண் ணிழியும் வாரிபோன் றிடு நாணினை ஏற்றியே வளைத்தான். | 158 |
| 2556 | வளைத்த டங்கிரி புரைவதோர் சிலையினை
வயத்தால் வளைத்த செய்கையைக் காண்டலும் பாரிடர் வானோர் வளைத்த டங்கடல் வந்திடு நஞ்சொடு மலைவான் வளைத்த தன்மைபோல் அவுணர்தம் முதல்வனை வளைத்தார். | 159 |
| 2557 | சிலையை வீசினர் கொடுமரம் வீசினர்
செறிமூ விலையை வீசினர் படையெலாம் வீசினர் எதிர்ந்தார் உலைய வீசியே அடல்செயும் மும்மதத் துவாவை வலையை வீசியே பிணித்திட மதித்துளார் என்ன. | 160 |
| 2558 | கண்டு மற்றதை அவுணர்கோன் வில்லுமிழ்
கணையாங் கொண்டால் நுண்துளி சிதறியே கணங்கள்கூட் டறுத்து விண்டு லாவர அரக்கினாற் குயின்றதோ£¢ வெற்பைச் சண்ட வெங்கனல் உடைப்பது போலவே தடிந்தான். | 161 |
| 2559 | வீடி னார்களும் புயங்கரந் துணிந்திட
மெலிந்து வாடி னார்களும் மயங்கிவீழ்ந் தார்களும் வல்லே ஓடி னார்களும் ஓடவும் வெருவிவேற் றுருவங் கூடி னார்களும் ஆயினர் பாரிடக் குழாத்தோர். | 162 |
| 2560 | பூதர் சாய்ந்துழி இலக்கரோ டெண்மரும்
பொருவில் வேத நாயகன் தூதனுஞ் சூழ்ந்துடன் மேவிக் கோதை தூங்கிய கொடுமர மாயின குனித்துச் சோதி வான்கணை மாரிகள் அவுணன்மேற் சொரிந்தார். | 163 |
| 2561 | சொரிந்த வெங்கணை எங்கணும் வருதலுஞ்
சூரன் தெரிந்து வாளிதொட் டறுக்கலன் நின்றதோர் செல்வி விரைந்து வந்தவை ஆங்கவன் மெய்ப்பட விளிந்து பரிந்து போயின செய்ததொன் றில்லைஅப் பகழி. | 164 |
| 2562 | பரப்பின் ஈண்டிய வீரதர்தஞ் சூழச்சியைப்
பாரா உரப்பி ஆவலங் கொட்டியே வெகுளிகொண் டொருதன் பொருப்பு நேர்சிலை குனித்துவெஞ் சிலீமுகம் பொழிந்து திருப்பெ ருந்தடந் தேரொடுஞ் சாரிஆகை திரிந்தான். | 165 |
| 2563 | நூறு கோடிவெஞ் சரமொரு தொடையுற நூக்கிச் சூறை யாமென வட்டணை திரிந்துளான் சூழ்வோர் மாறு தூண்டிய சரங்களைத் தணித்துமற் றவர்கள் ஏறு தேருடன் பிடித்திடு சிலைகளை இறுத்தான். | 166 |
| 2564 | வையம் வில்லுடன் இற்றபின் மற்றவர் மலைவு செய்ய உன்னுமுன் மொய்ம்பினும் உரத்தினுஞ் சிரத்துங் கையி னுங்கணை ஆயிர மாயிரங் கடுந்தீப் பெய்யும் மாரிபோற் செறித்தனன் செம்புனல் பெருக. | 167 |
| 2565 | புரந்த னிற்செறி கறையினா£¢ புலம்புகொள்
மனத்தார் உரந்த ளர்ந்துளார் வில்வலி இழந்துளார் ஒருங்கே இரிந்து நீங்கினர் இலக்கரோ டெண்மரும் இளவல் திருந்த லன்தடந் தேர்மிசைப் பாய்ந்தனன் சினத்தால். | 168 |
| 2566 | பாய்ந்து திண்டிறல் மொய்ம்பினான் பரமன்முன்
னளித்த நாந்த கந்தனை யுரீஇக்கொடு நண்ணலர்க் கிறைவன் ஏந்து வில்லினைத் துணித்தனன் துணித்தலும் எரிபோல் காய்ந்து வெய்யவன் புடைத்தனன் உரத்திலோர் கரத்தால். | 169 |
| 2567 | அங்கை கொண்டுசூர் ஒருபுடை புடைத்தலும்
அகலம் பொங்கு சோணிதம் அலைத்திட வாகையம் புயத்துச் சிங்கம் வீழ்ந்தயர் வுற்றிடத தூதனைச் செகுத்தல் இங்கெ னக்கடா தென்றெடுத் தும்பரின் எறிந்தான். | 170 |
| 2568 | எறிந்த காலையில் விண்ணிடைப் படர்ந்திடும்
ஏந்தல் அறிந்து மீண்டுசென் றாறுமா முகன்புடை அடைந்தான் தறிந்து போகிய சிலையினைத் தரைமிசை யிட்டுச் சிறந்த தோர்தனு எடுத்தனன் தீயரில் தீயோன். | 171 |
| 2569 | அத்த மேல்கிரி உதயமால் வரைத்துணை யான்று நித்த லும்பிறர்க் கிடர்செய்து மேருவின் ஈண்டு கொத்து நீடுபல் குவடுடைத் தாகியே குமரன் சத்தி யாலட நின்றவெற் பனையதத் தனுவே. | 172 |
| 2570 | வனைக ருங்கழல் அவுணனக் கார்முகம்
வளைத்துப் புனலும் அங்கியும் காலுடன் ஒலிப்பது புரைய எனைவ ருந்துளக் குறும்வகை நாணொலி யெடுத்தான் அனைய பெற்றியை அறிந்தனன் அமரரை அளித்தோன். | 173 |
| 2571 | புயலின் மேனியன் புவிநுகர் காலையும்
போதகன் துயிலு மாலையுந் துஞ்சிய தொலையா தியலு மண்டத்தின் அடிமுடி உருவிநின் றிலங்குங் கயிலை போல்வதோர் நெடுஞ்சிலை எடுத்தனன் கந்தன். | 174 |
| 2572 | வாரி யாலுல கழிந்திடும் எல்லையின்
மருங்கின் மேரு வாதியாம் வரைகளுங் கிரிகளும் விசும்பில் காரு மேலுள உலகமும் அமரருங் கயிலைச் சாரல் சூழதல்போல் விரவியார்ப் புடையததத் தனுவே. | 175 |
| 2573 | நீட்ட மிக்கதோர் அப்பெருஞ் சிலையினை
நிமலன் தோட்டு ணைக்கொடு வாங்கியேழ் வகையினால் தோன்றும் ஈட்ட மிக்கபல் லுயிர்களும் வான்உரும் ஏற்றின் கூட்ட மாகிய மார்த்தெனக் குணத்தொலி கொண்டான். | 176 |
| 2574 | குணங்கொள் பேரொலி கோடலும் இரலையூர்
கொற்றத் தணங்கு லாவரு கார்முகங் குழைத்துளை யவதி இணங்க வாங்கியே பத்துநூ றாயிரத் திரட்டி கணங்கொள் வெஞ்சரம் உகைத்தனன் கூற்றினுங் கடியோன். | 177 |
| 2575 | வான்ம றைத்தன மாதிரம் மறைத்தன மதிதோய் மீன்ம றைத்தன கதிர்வெயின் மறைத்தன வேலை தான்ம றைத்தன வசுமதி மறைத்தன தருவார் கான்ம றைத்தன வரைகளை மறைத்தன கணைகள். | 178 |
| 2576 | காற்றிற் செல்வன அங்கியிற் படர்வன
கடுங்கட் கூற்றிற் கொல்வன வேலைவெவ் விடத்தினுங் கொடிய பாற்றுத் தொல்சிறை உள்ளன ப·றலை படைத்த நாற்றிக் கும்புகழ் அவுணர்கோன் ஆணையின் நடப்ப. | 179 |
| 2577 | பருமி தத்தன மேருவைத் துளைப்பன பாங்கர் வரைகி ழிப்பன அண்டமும் பொதுப்பன வான்தோய் உருமி டிக்குலம் பொருவன விடத்தையுண் டுமிழ்வ கருமை பெற்றன சேயன தீயவன் கணைகள். | 180 |
| 2578 | துண்ட வெண்பிறை வாளெயிற் றவுணர்கோன்
துரப்ப மிண்டு வெங்கணை யெங்கணுஞ் செறிந்திட விண்ணோ£¢ கண்டு கண்ணனை அணுகியே கைகுலைத் தைய உண்டு கொல்நமக் கொளிப்பதோர் இடமென உரைத்தார். | 181 |
| 2579 | உரைத்து ளார்க்குமால் மாறுரை வழமுன்
ஔ¢வேல் கரத்தி லேந்திய குமரவேள் இன்னது கண்ணால் தெரித்து வெங்கனல் விடுத்திடும் ஊதைபோற் சிலதன் சரத்தி னாலவன் தூண்டிய கணையெலாந் தடிந்தான். | 182 |
| 2580 | மடிந்தி டும்படி மாற்றலன் சரங்களை
வள்ளல் தடிந்த தன்மைகண் டமரர்கள் உவகையில் தழைத்தார் படர்ந்து நீடிய கங்குலின் பாயிருள் புலர விடிந்த காலையின் எழுங்கதிர் கண்டமே தினிபோல். | 183 |
| 2581 | வேறு அங்க வெல்லை அவுணர்கோன், எங்கள் நாதன் எதிருற மங்குல் போல்வ ரம்பிலாச், செங்கண் வாளி சிதறினான். | 184 |
| 2582 | ஆய காலை அறுமுகன், தீயன் உந்து செறிகணை மாய வாளி மாமழை, ஏயெ னாமுன் ஏவினான். 185 | 185 |
| 2583 | எங்கள் நாதன் ஏவிய, துங்க வாளி சூர்விடும் புங்க வங்க ளைப்புரத், தங்கி போல றுத்தவே. | 186 |
| 2584 | அறுத்த பின்னும் அறனிலான், மறுத்தும் வாளி மாமழை கறுத்த கண்டர் காளைமேல், செறுத்து வல்லை சிந்தினான். | 187 |
| 2585 | சிந்து கின்ற செஞ்சரம், வந்து றாமுன் வந்தெனக் கந்தன் நூறு கணைதொடா, அந்தில் பூழி ஆக்கினான். | 188 |
| 2586 | பூழி செய்து பொள்ளென, ஊழி நாதன் ஒண்சரம் ஏழு நூற தேவினான், சூழு மாயை தோன்றல்மேல். | 189 |
| 2587 |