|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > கந்த புராணம் - Kantha Puranam > பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) > உற்பத்திக் காண்டம் (726- 1328) > உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) > யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967)

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி
4. யுத்த
காண்டம் / படலம் 12 (1923 - 2397)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
(verses 1923 -
2397)
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2008.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
| 1923 | என்னுலும் ஒற்றர் கேளா இறைவனை இறைஞ்சி
ஏகி உன்னுறு நினைப்பின் முந்தி உத்தரத் தளக்கர் நண்ணி மன்னகர் புகுந்து ஞௌ¢ளல் கடந்துமந் திரத்துட் புக்குச் சென்னியா யிரங்கொண் டுள்ள சிங்கமா முகவற் கண்டார். | 1 |
| 1924 | களித்தனர் மகிழ்ந்து தூதர் கான்முறை வணங்கி
நிற்ப அளித்திடும் அரசின் வைகும் அரிமுகன் வந்த தென்னை கிளத்திடு வீர்கள் என்னக் கேடிலா அவுணர் மேலோன் விளித்தனன் ஐய நின்னை விரைந்தனை வருக வென்றார். | 2 |
| 1925 | வேறு சரத்தினுங் கடியவர் இனைய சாற்றலும் அரித்திறல் முகத்தவன் வினவி ஆயிடை விருத்தமுண் டேலது விளம்பு வீரெனா உரைத்தனன் நன்றென ஒற்றர் கூறுவார். | 3 |
| 1926 | நும்பிஆ வரையாடு நுதிகொள் வேலினால் அம்புலி வரைப்பில்வந் தட்ட கந்தவேள் நம்பதி முன்னவன் நகர்வந் தெய்தினான் செம்பது மன்முதல் தேவர் சூழவே. | 4 |
| 1927 | வந்திடும் எல்லைபோய் மலைந்து
பைப்பயப் புந்திகொள் அமைச்சருஞ் சிறாரும் பொன்றினார் உய்ந்தனன் இரணியன் உததி ஓடினான் எந்தையங் கிருந்தனன் புதுமை ஈதென்றார். | 5 |
| 1928 | தொழுந்துஆ¨கி கையுடைத் தூதர்
இன்னணம் மொழிந்தது வினவலும் முனிவும் மானமும் அழுந்திடு துயரமும் ஆகம் போழ்ந்திட எழுந்தனன் அவுணரோ டேகல் மேயினான். | 6 |
| 1929 | முன்புறு கடையுறா மொய்த்த தூதரை என்பெருஞ் சேனையைக் கொணர்திர் ஈண்டெனத் தென்புலக் கோமகன் ஒற்றிற் செப்பலும் மன்பெருந் தானைகள் வல்லை வந்தவே. | 7 |
| 1930 | தூசிகொள் நாற்படை துவன்றிச் சேர்தலும் ஆசுறும் அரிமுகத் தண்ணல் கண்ணுறீஇப் பாசன மன்னவர் பாங்கர் சுற்றிடத் தேசுடை மணிநெடுந் தேரொன் றேறினான். | 8 |
| 1931 | தாரொலி செய்தன தாள்வ யப்பரி பேரொலி செய்தன பிறங்கு பூட்கைசேர் காரொலி செய்தன கண்டை ஆர்த்தன தேரொலி செய்தன தெழித்த சில்லியே. | 9 |
| 1932 | முரட்டுடி சல்லிகை முரசங் காகளம் உருட்டுறு சுரிமுகம் உடுக்கை துந்துபி திரட்டுறு தண்ணுமை திமிலை யாதிகள் இரட்டிய கேதனம் எங்கும் ஈண்டிற்றே. | 10 |
| 1933 | தழங்குரன் மால்கரி புரவி தானவர் அழுங்குறு தேர்நிரை அனிகம் வானமே வழங்குறு நெறியதா வலிதிற் சென்றன முழங்கில பெயர்கில முகில்கள் அஞ்சியே. | 11 |
| 1934 | ஏயிது தன்மையின் ஈண்டு தானைகள் பாயின சென்றிடப் பா¤தி போலொளிர் ஆயிர மவுலியன் அவுணர் நாயகன் சேயுயர் விசும்பினில் எழுந்து சென்றனன். | 12 |
| 1935 | கன்னலொன் றளவையில் ககனத் தாற்றினால் சென்னிகள் பலவுடைச் சீய மாமுகன் மன்னவன் உறைதரு மகேந்தி ரப்புரந் துன்னினன் வெருவியே சுரர்கள் ஓடவே. | 13 |
| 1936 | அடைத்தலை நீங்கிய அம்பொற் கோநகர்க் கடைத்தலை வந்தனன் கனகத் தேரொரீஇப் படைத்தலை மன்னவர் பரவ உள்புகாக் கிடைத்தலை மேயினன் செழுமு சூரவை. | 14 |
| 1937 | அரசியல் புரிந்திடும் அவையை நண்ணிய முரணுறு சிங்கமா முகத்தன் முன்னவன் திருவடி மலர்களில் சென்னி தீண்டுறப் பரிவொடு வணங்கினன் தொழுத பாணியான். | 15 |
| 1938 | வணங்கிய தம்பியை மலர்க்கை தொட்டெடா இணங்கிய மார்புறுத் திறுகப் புல்லலும் நிணங்கவர் வேலினாய் நினது செம்முகம் உணங்கிய துற்றதென் உரைத்தியால் என்றான். | 16 |
| 1939 | என்னலும் அவுணர்கோன் இளைய வன்றனை முன்னுற இருத்தியே முரணின் மேலையோய் என்னிடை யுற்றன இசைப்பன் கேளெனா அன்னவன் உணர்வகை அறைதல் மேயினான். | 17 |
| 1940 | அன்றுநீ போந்தபின் அயில்கொள்
வேலினாற் குன்றினை எறிந்திடு குமரன் என்பவன் தன்றுணைச் சேனையுந் தானும் இந்நகர் சென்றனன் பாசறை சேர்ந்து வைகினான். | 18 |
| 1941 | மற்றவன் சேனைகள் மலைய மைந்தர்கள் இற்றனர் அமைச்சனும் இறந்து போயினான் அற்றன தானையும் ஆட கப்பெயர் உற்றவன் இரிந்தனன் உததி ஓடினான். | 19 |
| 1942 | பொங்குளை அரிமுக புகுதி இன்னதால் சங்கையில் படையொடு சமரின் ஏகியே அஙகவன் வலியினை யடர்த்து மீளுதி இங்குனை விளித்தனன் இதனுக்கா வென்றான். | 20 |
| 1943 | எஞ்சலில் சூரன்மற் றிதனைச் செப்பலும் வெஞ்சின அரிமுக வீரன் தேர்வுறா நெஞ்சினில் ஆகுலம நிகழ முன்னவன் செஞ்சரண் வீழ்ந்துநின் றிதனைச் செப்புவான். | 21 |
| 1944 | மல்லலம் புயமுடை மைந்தர் தங்களைத் தொல்லையில் அமைச்சரைச் சுற்றத் தோர்களை எல்லவர் தம்மையும் இழந்து வைகினாய் புல்லிது புல்லிதுன் புந்தி எண்ணமே. | 22 |
| 1945 | மூலமும் முடிவுமில் லாத மூர்த்தியைப் பாலனென் றெண்ணினை படுவ தோர்ந்திலை ஆலம தானதே ஐய என்மொழி மேலையின் விதியையார் வெல்லும் நீரினார். | 23 |
| 1946 | சென்றிடு புனலினைச் சிறைசெய் தாவதென் இன்றினி ஏகியே எண்ண லாரெனத் துன்றிய குழுவெலாந் துடைத்து நுங்கியே நின்றிடு கின்றனன் நீயுங் காண்டியால். | 24 |
| 1947 | கந்தனாம் ஒருவனைக் கடக்கப்
பெற்றிடின் வந்துனைக் காண்பனால் மற்ற தில்லையேல் அந்தம தடைவரால் ஆரும் ஐயநீ புந்தியின் நினைந்தன புரிதியா லென்றான். | 25 |
| 1948 | என்றுகை தொழுதுபின் இறையும் அவ்விடை நின்றிலன் விடைகொடு நிருதன் ஏகியே துன்றிய தானைகள் சூழ மற்றவண் ஒன்றுதன் மந்திரத் துறையுள் எய்தினான். | 26 |
| 1949 | போனக மேருவும் புடையில் சூழ்வரும் ஊனெனும் வரைகளும் உலப்பில சோரிநீர் தேனொடு பால்தயிர் தேற லாதிகள் ஆனபல் கடல்களும் அயிறல் மேயினான். | 27 |
| 1950 | வாசநீர் தேய்ந்திடு நரந்த மான்மதம் பூசினன் பாளித மிசையு னைந்தனன் வீசுபன் மதுமலர் மிலைச்சு கின்றனன் காசினி வரைப்பெலாங் கந்தஞ் சூழ்தர. | 28 |
| 1951 | களைந்தனன் பழையன கவினப் பூண்டனன் வளந்தரு கின்றதோர் யாணர் மாண்கலன் மிளிர்ந்திடு தினகரர் புணரி வீழந்துழி ஔ¤ர்ந்துடன் பலகதிர் உதிக்கு மாறுபோல். | 29 |
| 1952 | படிதவிர் பருப்பதம் பத்து
நூற்றினின் முடிதொறும் இளம்பிறை முளைத்த வாறுபோல் நெடுமைகொள் அரிமுகன் நெற்றி தோறும்வெண் பொடிதனை உணிந்தனன் புனித மாயினான். | 30 |
| 1953 | தண்டமும் நேமியுஞ் சங்க ரன்தரக் கொண்டதோர் சூலமுங் குலிச மேமுதல் அண்டர்தம் படைகளும் அன்னை ஈந்திடு திண்டிறற் பாசமுஞ் செங்கை பற்றினான். | 31 |
| 1954 | கைத்தலம் யாவையுங் கதிர்கள் கான்றிட எத்திறப் படைகளும் பின்னர் ஏந்துறாப் பத்துநூ றாயிரம் பரிகள் பூண்டதோர் சித்திர மணிநெடுந் தேரில் ஏறினான். | 32 |
| 1955 | தந்திரத் லைவருந் தனயர் யாவருஞ் சிந்துரத் தொகுதியுந் தேரும் மாக்களும் இந்திரப் பெருவளம் யாவுஞ் சூழ்தர மந்திரத் திருநகர் வயில் எய்தினான். | 33 |
| 1956 | வேறு மேற்படு கேசரி வெம்முக வீரன் மாற்படு கோநகர் வாய்தலின் மேவ நாற்படை யானவும் நண்ணின வெம்போர் ஏற்புடை வௌ¢ளமி லக்கம தன்றே. | 34 |
| 1957 | வானவர் ஏற்றமும் **மண்ணவா¢ வாழவும் தானவர் இன்னலும் நீக்கிய தக்கோர் ஊனமில் செய்கையோர் ஔ¢ளெரி உண்ணுங் கானமெ னப்பொலி காட்சியின் மிக்கோர். ( ** பா-ம் - அன்னவர்) | 35 |
| 1958 | கார்பயில் கின்ற கருத்தினர் காமன் கூர்பயில் கின்ற கொடுங்கணை யுண்ணுந் தார்பயில் தோளர் சமர்த்தொழில் செய்தே மார்பக மன்றி வடுப்புனை யாதோர். | 36 |
| 1959 | எண்ணமில் தொல்லுயிர் யாவும் அலைக்கும் அண்ணலை அன்னவர் ஆரழல் காலுங் கண்ணினர் வார்கழல் கட்டிய தாளார் விண்ணினை யேனும் விழுங்கவும் வல்லோ£¢. | 37 |
| 1960 | நேருதிர் என்றெதிர் நேர்ந்தவ ராகங் கூர்நுதி வேல்கொடு கூறுப டுத்துப் பேருதி ரந்தசை செய்துநி ரம்பா வாரிதி யென்ன வகுத்திடும் வாயார். | 38 |
| 1961 | தண்ட மழுப்படை தட்டை முசுண்டி விண்டுயா¢ கொல்சிலை வேலெழு நாஞ்சில் எண்டகு பல்படை யாவையும் ஏந்தி அண்டமு டைந்த திரும்படி ஆர்த்தார். | 39 |
| 1962 | அந்தர மாமுகி லாமென ஆர்க்குந் தந்திகள் வீழ்த்துறு தானம தோடி உந்திக ளாயுல வைக்கதி கொண்டு முந்திய தூசியின் முன்னுறு கின்ற. | 40 |
| 1963 | வேலைய தன்னவி லாழிய வன்னிக் கோலம தான குரங்கொள் பதத்த கால்விசை கொண்டன கந்துக ராசி மாலுறு பூழியின் வான்புவி செய்வ. | 41 |
| 1964 | சூழ்வரு தேரிடை துன்றுப தாகைக் காழ்வரு கோனுமதி கார்முகி லுந்தி போழ்வன வாடுறு பூந்துகில் அங்கண் ஆழ்வரு பூழைய டைத்தன அன்றே. | 42 |
| 1965 | வரங்கெழு சூர்துணை மாய்ந்திடும்
என்றே உரங்கொடு முன்னம் உணர்ந்தன கொலோ துரங்கம ழுங்கின தோல்புலம் புற்ற இரங்கின பல்லியம் ஏங்கின தேர்கள். | 43 |
| 1966 | கட்புலன் நாசிக வின்செவி துன்னப் பட்டன பூழிப தாகையும் அற்றே ஒட்டலர் விண்செல ஒட்டல ரென்னா விட்டனர் தூக்கம் விரைந்தனர் வெய்யோ£¢. | 44 |
| 1967 | தேரினர் ஓர்பலர் திண்டிறல் வாசி ஊருநர் ஓர்பலர் ஓங்கிய வேழம் பேருநா¢ ஓர்பலர் பேரடல் கொண்டு பாரினா¢ ஓர்ப ராற்படை மள்ளர். | 45 |
| 1968 | துங்கமில் சூர்துணை தொல்படை மன்னன் அங்கவன் என்ன அரித்தலை கொண்டான் மங்கல மாயவள் மாமகன் ஆடற் சிங்கன் எனப்படு சீர்ப்பெய ருள்ளான். | 46 |
| 1969 | போர்ப்படை கொண்டு புறப்டர் கின்ற தேர்ப்படை காற்படை சிந்துரம் வாசித் தார்ப்படை கொண்டு தடங்கட லென்ன ஆர்ப்படை நெற்றிய னாகி அகன்றான். | 47 |
| 1970 | நீள்வயிர் பேரி நிசாளம் உடுக்கை தாளம் வழிப்படு தண்ணுமை தக்கை காளம் வலம்புரி கைத்துடி யாதி யாளி முகன்முன் அளப்பில ஆர்ப்ப. | 48 |
| 1971 | ஆகிய தால்அமர் ஐதென யாமும் ஏகுதும் உண்டி எமக்குள தென்னா மாக நெருங்கின வன்கழு கீட்டங் காகம் வருந்திய காளிகள் கூளி. | 49 |
| 1972 | வேறு ஆழியை யொத்துய ரம்பொற் றேர்களில் ஆழியை உண்டெழு புயல்வந் தார்த்தன ஆழிய நிலத்துருண் டழுதி யோவெனா ஆழியை வினவியே அமர்தல் போலுமால். | 50 |
| 1973 | இவ்வகை சேனைகள் யாவும் ஏழ்பெரும் பவ்வமும் ஒருவழி படர்ந்த தேயென அவ்வயிற் போந்திட அமரை முன்னியே தெவ்வடும் அரிமுகன் சேறல் மேயினான். | 51 |
| 1974 | வேறு சேரலா ஆவிகொள் சீயமு கத்தோன் பேரனி கத்தொடு பேர்ந்திடல் காணூஉ வாரிச மேலவன் வாசவன் வானோர் ஆரும்வெ ரீஇயினர் அச்சம் அடைந்தா£¢. | 52 |
| 1975 | செய்ய கரத்தினர் சிந்தை வியர்த்தே மெய்யல சுற்றிட மேற்றுகில் சோர ஐயுறும் எல்லையில் ஆகம் இரைப்ப ஒய்யென யாவரும் ஓடினர் போனார். | 53 |
| 1976 | ஆவதொர் பாசறை ஆலய வைப்பில் தேவர்கள் ஈண்டுறு சிற்சபை தன்னில் மேவரு வேற்படை விண்ணவன் முன்போய்ப் பூவடி தாழ்ந்து புகன்றிடு கின்றார். | 54 |
| 1977 | ஆயிர மான அகன்றலை கொண்டான் ஆயிரம் ஆயிரம் அங்கை படைத்தான் ஆயிர மேற்படும் அண்மும் வென்றான் ஆயிரம் யோசனை யாவுயர் மெய்யான். | 55 |
| 1978 | நெஞ்சில் எவர்க்கும் நினைப்பரி
தாகும் வஞ்சமும் மாயையின் வன்மையும் வல்லோன் எஞ்சலில் வன்மையன் இவ்வுல கெல்லாந் துஞ்சினும் ஆருயிர் துஞ்சுத லில்லோன். | 56 |
| 1979 | ஓங்கல் இனங்கள் உவாத்தொகை நாகம் பாங்கம ராமை பரித்திடல் மாற்றி ஈங்குல கங்கள் எவற்றையும் ஓர்நாள் ஆங்கொரு செங்கையில் ஆற்றிய தொல்லோன். | 57 |
| 1980 | பாந்தள் புனைநத பராபர மூர்த்தி ஈந்தது மாற்றலர் எல்லையி லோரைக் காய்ந்துயி ருண்டு கறைப்பெரு நீத்தந் தோய்ந்திடு கின்றதொர் சூலம் எடுத்தான். | 58 |
| 1981 | எண்டிசை மேதினி ஏழ்பில மேனை விண்டல மன்னதன் மேற்படும் எல்லை அண்டம னைத்தும் ஒரங்கையில் வாரி உண்டுமிழ் கின்றதொர் வன்மையும் உள்ளோன். | 59 |
| 1982 | தூக்ªª£ரு பால்வலி தூங்குற ஓர்பால் மேக்குயர் கோலென மேதினிப் பாங்கர் தேக்கெறி வேலைகள் சிந்தி விசும்பில் தாக்குற வேநடை தந்திடு தாளான். | 60 |
| 1983 | தண்ட மிதென்று தருக்கின் எடுத்தே அண்ட கடாகம் அதன்புடை மோத நுண்டுகள் ஆதலும் நொய்திது வென்றே விண்டொடு மேருவை மீளவும் வைத்தோன். | 61 |
| 1984 | மாசறு நேமி வடாது புலத்தின் ஆசுரம் என்னும் அகன்பதி வாழ்வோன் வீசிடின் எவ்வுல கத்தையும் வீக்கும் பாசம் இரண்டு பரித்திடு கையான். | 62 |
| 1985 | துங்கம தாகிய சூர்துணை யானோன் அங்கவ னற்பெரி தாற்றல் படைத்தோன் ரூங்களின் நங்களை நாளும் நலித்தொன் சிங்கமு காசுர னாகிய தீயோன். | 63 |
| 1986 | அந்தமி லாவனி கக்கடல் சூழ வெந்திற லோடு வியன்சமர் ஆற்ற வந்தனன் மற்றவன் மன்னுயிர் மாற்றி எந்தை அளித்தருள் எங்களை யென்றார். | 64 |
| 1987 | அன்னதை ஓர்தலும் ஆறு முகேசன் தன்னயல் நின்றிடு தாவறும் ஓதை மன்னனை நோக்கிநம் வாலிய தேரை முன்னிவண் முய்க்குதி யென்று மொழிந்தான். | 65 |
| 1988 | தீட்டிய வேற்படை செங்கை படைத்தோன் மாட்டுற நின்ற வயம்புனை மொய்ம்பன் கேட்டனன் எந்தை கெழீஇயின முன்போய்த் தாட்டுணை வீழ்ந்திது சாற்றுதல் உற்றான். | 66 |
| 1989 | தந்நிகர் அற்ற சயம்புனை வீரர் முன்னுறு தானைகள் மொய்த்திட யான்போய் ஒன்னலன் ஆவியை உண்டிவண் மீள்வன் என்னை விடுக்குதி எந்தையை யென்றான். | 67 |
| 1990 | ஆண்டகை மூரலொ டம்மொழி கேளா மாண்டிட வந்திடு மாற்றலன் வெம்போர் வேண்டினை நன்று விடுத்தனம் முன்நீ ஈண்டுள தானையொ டேகுதி யென்றான். | 68 |
| 1991 | என்றலும் வீரன் எழுந்துகை கூப்பி வென்றிகொள் சாரதர் மெய்க்கிளை சூழ மன்றம கன்று மணிக்கடை நண்ணி ஒன்றுதன் மாளிகை யூடு புகுந்தான். | 69 |
| 1992 | நேர்முக மான நிசாசரர் தம்மேல் கூர்முக வாளி குணிப்பில கோடி ஓர்முக மாயுல வாதுமிழ் நீரால் கார்முக மாயதொர் கார்முகங் கொண்டான். | 70 |
| 1993 | போதுறழ் அங்குலி புட்டில்செ றித்தான் கோதைய தொன்று கொடுங்கை பிணித்தான் ஏதமில் சாலிகை யாக்கையின் இட்டான் மேதகு தூணி வெரிந்புடை யாத்தான். | 71 |
| 1994 | மிக்குறு தெய்வ வியன்படை முற்றும் தொக்குற வேகொடு தும்பை தரித்துச் செக்கரின் விஞ்சிய செய்யதொர் வையம் புக்கனன் வல்லை புறங்கடை வந்தான். | 72 |
| 1995 | எண்மர் இலக்கர்கள் இச்செயல் காணா வண்மை தருமபடை மாட்சிமை எய்தித் திண்மை யுறுந்தம தேர்களி லேறி அண்மினர் வீரனை ஆர்ப்பொடு சூழ்ந்தார். | 73 |
| 1996 | மேனிக ழாயிர வௌ¢ளம தாகுஞ் சேனை யெழுந்து செறிந்து பிறங்கல் வானுயர் தாரு வயப்படை பற்றித் தானவர் கேசரி தன்புடை வந்த. | 74 |
| 1997 | எறிந்தன பல்லியம் ஈண்டிய தானை செறிந்தன மாண்கொடி செற்றின பூழி அறந்தலை நின்றவன் அன்னது நோக்கிப் பறந்தலை ஒல்லை படர்ந்திட லுற்றான். | 75 |
| 1998 | ஆரும்வி யப்புறும் ஆயிர வௌ¢ளம் பாரிடர் தானை படைக்கிறை யானோர் சாருறு கேளிர்கள் தன்னொடு செல்ல வீரன டைந்தனன் வெஞ்சமர் எல்லை. | 76 |
| 1999 | ஆனதொர் ககலையில் ஆளரி வெய்யோன் சேனையும் வந்து செறிந்தது பூதர் தானையும் அங்கெதிர் சார்ந்தது கங்கை வானதி சேர்தரும் வாரிதி யேபோல். | 77 |
| 2000 | கோடு புலம்பின கொக்கரை ஆர்த்த மோடுகொள் பேரி முழங்கின பீலிக் காடு தழங்கின கண்டை கலித்த ஆடுப தாகைகள் ஆர்த்தன அன்றே. | 78 |
| 2001 | தேரொலி செய்தன திண்டிறல் மாவின் தாரொலி செய்தன தந்தியின் ஈட்டம் பேரொலி செய்த பெருங்கட லோடும் காரொலி செய்திடு காட்சிய தென்ன. | 79 |
| 2002 | வேறு அந்த வேலையின் முருகவேள் தானையோர் அணுகி முந்து வெஞ்சமர் முயன்றனர் அதுகண்டு முனிந்து சுந்த ரந்திகழ் சிங்கமா முகன்படைத் தொல்லோர் தந்தி தேர்பரி யணியொடும் போ£¢செயச் சார்ந்தார். | 80 |
| 2003 | தண்டம் ஓச்சினர் கணிச்சிகள் ஓச்சினர்
தடக்கைப் பிண்டி பாலங்கள் வீசினர் தோமரம் பெய்தார் கொண்ட லாமெனத் தனித்னி வார்சிலை குனித்துத் துண்ட வெங்கணை துரந்தனர் தானவத் தொகையோர். | 81 |
| 2004 | விரைகள் வீசிய மலர்த்தரு வீசிய
விண்டோர் வரைகள் வீசிய தண்டெழு வீசிய மழுவின் நிரைகள் வீசிய நேமியின் நிரந்தபல் வளனும் திரைகள் வீசிய தாமெனப் பூதர்தஞ் சேனை. | 82 |
| 2005 | வரங்கள் சிந்தினர் வன்மைகள் சிந்தினர்
வயத்தாள் கரங்கள் சிந்தினர் புயமலை சிந்தினர் கலன்சேர் உரங்கள் சிந்தினர் மணிமுடி சிந்தினர் உருளுஞ் சிரங்கள் சிந்தினர் அவுணரும் பூதரிற் சிலரும். | 83 |
| 2006 | வருதி நீயெனத் தனித்தனி இகல்செயும்
மறவோர் கருதி யேயடுங் களத்தினில் அவருடல் காலும் குருதி யோடியே எங்கணும் பரத்தலில் கொடுந்தேர்ப் பரிதி யோடிய குடதிசை நிகர்த்தது படியே. | 84 |
| 2007 | கொலைசெ றிந்திடும் பூதரும அவுணரும்
கொடும்போர் நிலைசெ றிந்திடு களத்திடை நீடுசெந் நீரின் அலைசெ றிந்தவூன் செறிந்தன அடுகளே வரத்து மலைசெ றிந்தன செறிந்தன கழுகுடன் மண்ணை. | 85 |
| 2008 | வேறு வெற்புறழ் தகுவர் சேனை வௌ¢ளமுங் கணத்து ளருந் தற்பமொ டெதிர்ந்திவ் வாறு சமர்புரிந் திட்ட எல்லை வற்புடன் அவுணன் தானை மள்ளர்வந் தடர்ப்ப மாய்ந்து முற்படு கின்ற தூசிப் பூதர்கள் முரிய லுற்றார். | 86 |
| 2009 | செல்லுறழ் பகுவாய் வீரர் சிதைந்துழிப் பூதர்
தம்முட் கல்லுறழ் மொய்ம்பிற் சிங்கன் கனன்றொரு தண்ட மேந்திப் பல்லுறு தலைகள் சிந்தப் படிமிசை வீட்டிப் பானாள் அல்லுறு மதிபோல் நேரும் அவுணரை யடாத்துச் சென்றான். | 87 |
| 2010 | அங்கவன் செல்லும் வேலை அவுணரில் ஒருவன்
நேமி சங்கொடு தரித்தோன் அன்னான் தசமுக னென்னும் பேரோன் எங்குநீ போதி நில்லென் றெதிருறச் சென்று வாகைச் செங்கைவா£¢ சிலையைக் கோட்டித் திருந்துநாண் ஒலிசெய் திட்டான். | 88 |
| 2011 | வேறு விட்டனன் மழையென விசிகம் ஆங்கவை பட்டிடத் தண்டினாற் படியில் வீட்டியே அட்டுபூந் தாரினான் அடியொன் றாலவன் இட்டதோர் கவசமும் இறுத்து நீக்கவே. | 89 |
| 2012 | கூற்றுறழ் தசமுகன் கொடியன் ஆவியை மாற்றுவன் இவணென வலிதின் ஓர்கதை ஆற்றலின் விடுத்தலும் அரியின் பேரினான் எற்றனன் மார்புதண் டிற்று வீழ்ந்ததே. | 90 |
| 2013 | வீண்டது நோக்கியே வீர வீரனும் ஈண்டிவ னேகொலென் றெண்ணி யாமினிக் காண்டகும் வல்லையேற் காத்தி யீதெனா ஆண்டொரு கணிச்சியை அவுணன் ஓச்சினான். | 91 |
| 2014 | மாலொடு கடவுளர் மறுகத தீயழற் காலொடு போந்திடுங் கடுவின் வெம்மைபோல் மேலுறு கணிச்சியை வீரன் செங்கையின் பாலுறு தண்டினாற் படியில் வீட்டினான். | 92 |
| 2015 | நீக்கினன் கணிச்சியை நெடிய தோர்கதை போக்கினன் தன்னொடு போர்செய் கின்றவன் தாக்கணங் கமர்சிலை தன்னைச் சின்னமே ஆக்கினன் அவுணர்கள் அலக்கண் எய்தினார். | 93 |
| 2016 | சீலமில் தசமுகன் செயிர்த்துக் காய்கனற் கோலம தாகிய குந்தம் ஒன்றினை ஆலம தெனவிட அரியின் பேரினான் மேலுற வருவதை விரைந்து நோக்கினான். | 94 |
| 2017 | பூங்கழல் புனைகழற் பூத நாயகன் ஆங்கது காலைஓர் ஆழி மாப்படை ஓங்கிய பரிதிபோல் உருட்டி னானரோ பாங்குறு சாரதர் பலரும் போற்றவே. | 95 |
| 2018 | விடுத்திடு கின்றதோர் வஅலை
யாழிபோய்ப் படுத்தது தசமுகப் பதகன் தண்டமொன் றெடுத்தது வீசலும் இமைப்பில் எய்தியே அடற்புனை கழலினான் ஆகத் துற்றதே. | 96 |
| 2019 | ஆகமேல் அடைதலும் அரியின் பேரினான் சோகமேல் கொண்டுசெஞ் சோரி சேர்தர மாகமேற் செம்புனல் மாரி கான்றி மேகமே யாமென விளங்கி னானரோ. | 97 |
| 2020 | பரந்திழி குருதிநீர் பருப்ப
தத்திடைப் பிரிந்திடு நதியெனப் பெருக ஓடியே அருந்திறல் சதமுக னாகத் தோர்கையால் விரைந்தனன் புடைத்தலும் வீழ்ந்து பொன்றினான். | 98 |
| 2021 | ஐந்திரு தலையுடை அவுணன் மாய்தலுந் தந்திர அவுணர்தந் தானை யாவையும் கந்த தோளுடைக் கணங்கள் மேற்செலா முந்துறு பேரமர் முயல்வ தாயினார். | 99 |
| 2022 | அவ்வழி இலக்கரில் அநகன் என்பவன் மைவழி சிந்தையன் மடிதத வாயினன் கைவழி வில்லினன் கடியன் சேனையை எவ்வழி போதிரென் றெதிர்ந்து தாக்கினான். | 100 |
| 2023 | வெலற்கரும் வில்லுமிழ் வெங்கண்
வாளியால் அலைக்குந ராகியே அடல்செய் மள்ளர்தந் தலைக்குவை சிந்தியே தரையில் வீட்டியே கலக்கினன் திரைக்கடல் கடைந்த மாலென. | 101 |
| 2024 | ஆடியல் தானையான் அநகன் என்பவன் சாடினன் திரிதலுந் தகுவர் யாவரும் ஓடினர் அன்னதை உருத்து நோக்கினான் பீடுறு துன்முகன் என்னும் பேரினான். | 102 |
| 2025 | வேறு தன்முன் ஓடிய அவுணரை நோக்கிநீர் தளரேல் மின்மி னிக்குலங் கதிரினை வெல்லுமோ வெகுளின் என்முன் நிற்பரோ பூதர்கள் செருத்தொழில் இழந்தார் நின்மின் நின்மினென் றுரைக்கவும் இறையநின் றிலரால். | 103 |
| 2026 | தானை பட்டன நோக்கினன் துன்முகன்
தழல்மேல் ஆனெய் பட்டென முனிந்தனன் பூதர்கள் அந்தோ சேனை பட்டதென் றலமரக் குனித்தனன் சிலையைச் சோனை பட்டன வாமென வடிக்ணை சொரிந்தான். | 104 |
| 2027 | சொரிந்த காலையிற் பூதரும் பேரமர்
தொடங்கி விரிந்த வெற்பொடு தருக்களும் படைகளும் விடுப்ப எரிந்து போயின சிற்சில இற்றவுஞ் சிலவால் நெரிந்து போயின சிற்சில எதிரெதிர் நெருக்க. | 105 |
| 2028 | ஈறு செய்தில கணைமழை இவரொடும் யானே மாறு கொள்வதுந் தனிமையில் அரிதென வலியோன் ஊறு சேர்தரு மாயையால் ஒவ்வொர்பூ தர்க்கும் நூறு நூறுருக் கொண்டுதாக் குற்றனன் நொடிப்பில். | 106 |
| 2029 | ஆய காலையில் துன்முகன் வடிவமும் அடருந் தீயென னக்கிளா¢ சாரத ரொடுசெருச் செய்யும் ஏய கொற்றமும் நோக்கினன் விம்மினன் வெகுண்டான் மாயை கொல்லென உன்னினன் வாகையங் கதிரோன். | 107 |
| 2030 | மாற்று கின்றதெப் படைக்கல மோவென
மதியாத் தேற்று கின்றதோர் போதகப் பெரும்படை செலுத்தக் காற்றின் முன்னுறு பூளையின் உருவெலாங் கரப்பக் கூற்ற மன்னதோர் துன்முகன் ஒருவனாய்க் கொதித்தான். | 108 |
| 2031 | கொதித்த துன்முகன் தன்பெருஞ் சிலையினைக்
கோட்டி நுதித்த னிக்கணை ஆயிரம் ஒருதொடை நூக்க மதித்து வீரன்றன் ஒருபெருஞ் சிலையினை வாங்கிக் கதித்த நோன்கணை ஆயிரஞ் சிதறினன் கடிதில். | 109 |
| 2032 | ஆயி ரஞ்சரத் தாலவன் விட்டகோல் அறுத்துத் தீய வன்னிச் சிலையை யேழ் வாளியாற் சிந்தி மேய சாலிகை தன்னையோர் பகழயால் வீட்டிக் காயம் எங்கணும் அழுத்தினன் அளவைதீர் கணைகள். | 110 |
| 2033 | வேறு அழுந்திடு வடிக்கணை யாகம் போழ்தலும் எழுந்திடு குருதிநீர் இரைத்துச் சென்றிடக் கொழுந்தழல் புரைவதோர் கொடிய துன்முகன் விழுந்தனன் மயங்கினன் விளிந்து ளானென. | 111 |
| 2034 | ஊறிய குருதியன் உறுகண் எய்துவான் தேறினன் ஒல்லையிற் செருவில் நேர்துமேல் ஈறினி வந்திடும் இரிந்திட் டுய்வதே ஆறென உன்னினன் அமருக் கஞ்சுவான். | 112 |
| 2035 | சிந்தையின் வழபடல் செய்து மாயையின் மந்திரம் ஒன்றினை மரப்பின் உன்னுறா எந்திரத் தேரினும் எழுந்து துன்முகன் அந்தரத் தாற்றினால் அருவில் போயினான். | 113 |
| 2036 | ஆயின காலையில் அடல்வெம் பூதரில் தீயினை முருக்குறுஞ் சீற்றத் தோர்சிலர் மாயையின் வலியினன் வஞ்சன் வல்லையிற் போயினன் பற்றுதும் போதுவீர் என்றார். | 114 |
| 2037 | ஆங்கது கேட்டிடும் ஆடல் வெய்யவன் ஈங்கிது தவிருதிர் இகலுக் கஞ்சியே நீங்கினன் ஒருவனை நெருக்கி ஆருயிர் வாங்குதல் புகழதோ வலியின் பாலதோ. | 115 |
| 2038 | ஓடினர் தம்மையும் உற்றுத் தாள்மலர் சூடினர் தம்மையும் தொழுத கையராய் வாடினர் தம்மையும் வலியி லோரையுஞ் சாடினர் அல்லரோ நவைக்கட் டங்குவார். | 116 |
| 2039 | வீரரை அல்லரை வெகுள லீரெனப் பேரடல் வெய்யவன் பேச அன்னது காரிய மேயெனக் கருத்தில் உன்னியே சாரதர் தொடர்ந்திடுந் தன்மை நீங்கினார். | 117 |
| 2040 | வேறு அந்நேர் காணா ஆளரி மாமுக அடல்வெய்யோன் இன்னே நந்தந் தானைகள் எல்லாம் இரிவாகும் பின்னே நிற்ற லாவதெ னென்னாப் பெயர்குற்றே முன்னே சென்றான் பூதரை நோக்கி முனிகின்றான். | 118 |
| 2041 | நந்தா ஆற்றற் சிங்கமு கத்தோன்
அவன்நம்முன் வந்தான் யாமே மாற்றுதும் அன்னான் வலியென்னாக் கொந்தார் தாருச் சூழலும் வெற்புங் கொண்டேகி முந்தா நின்ற பூதர்கள் வெம்போர் முயல்கின்றார். | 119 |
| 2042 | மட்டார் தொங்கற் சிங்கமு கன்மேல்
மதிதோய்வான் எட்டா நின்ற வெற்புள யாவும் எறிகின்றார் விட்டார் தாருச் சூழல் கணிச்சி வீசுற்றார் தொட்டார் சூலந் தண்டெழு நாஞ்சில் சொரிகின்றார். | 120 |
| 2043 | சொரியுங் காலைத் தீயெழ நோக்கிச்
சுடர்வேலோன் எரியுங் காலுங் கால வுயிர்ப்ப எதிர்செல்லாக் கரியுந் தீயும் பூழிய தாகுங் ககனத்தே திரியும் மீளும் மப்படை செய்யுஞ் செயலீதால். | 121 |
| 2044 | அன்னோ அன்னோ நம்படை எல்லாம் அடல்வீரன் முன்னோ செல்லா தீய வுயிர்ப்பின் முடிவாமால் பின்னே செய்வ தொன்றிலை யாம்பே ரமர்செய்வ தென்னோ என்னோ யாரினு மேலான இவனென்றா£¢. | 122 |
| 2045 | என்றார் பூதர் சீற்றம் விளைத்தார்
யாரும்போய்க் குன்றாய் அங்க ணுற்றன யாவுங் குழுவுற்ற வன்றா ருக்க ளானவும் மாண்கைக் கொடுதொட்டுச் சென்றார் ஆர்த்தார் சீயமு கன்மேற் செலவுய்த்தார். | 123 |
| 2046 | வேறு கைக்கொடு சாரத கணங்கள் ஆர்த்துடன் உய்க்குறு வரையெலாம் ஒருங்கு சென்றிடாத் திக்குள வரைப்பெலாஞ் செறிந்து ஞாயிறு மெய்க்கதிர் வழங்குறும் விசும்பு தூர்த்தவே. | 124 |
| 2047 | கல்லகத் தொகுதிகள் ககனந் தூர்த்துழி எல்லுடைச் செங்கதிர் இரவி மாய்ந்திட ஒல்லெனத் திமிரம்வந் துறலும் நோக்கியே அல்லெனக் குடம்பையுள் அடைவ புள்ளேலாம். | 125 |
| 2048 | வெற்பின நிரத்தலு மறைய வெய்யவன் எற்படு முன்னரே இரவி ஓடினான் அற்புதம் அற்புதம் அடைந்த தம்புயன் கற்பமென் றறிஞருங் கலக்கம் எய்தினார். | 126 |
| 2049 | போற்றலன் தன்மிசைப் பூதர் தூண்டிய மாற்றரும் பதலைகள் மலிந்து வான்படா¢ ஆற்றினை அடைத்தலும் அஞ்சி நின்றனன் காற்றினும் விரைந்துசெல் கதிரியின் பண்ணவன். | 127 |
| 2050 | இன்று றவுணரால் இடரு ழந்தனம் அன்றியும் பூதரீண் டடுககல் வீசினார் நின்றிடின் வருந்துதும் நிகழ்ச்சி தேரலாஞ் சென்றிடல் துணிவெனத் தேவர் ஓடினார். | 128 |
| 2051 | செருவலி வீரர்கள் செலுத்தச் சேண்படா¢ பருவரை யிடையிடை பயின்று சுற்றிய கருமுகில் உண்டநீர் கான்று தம்வயின் உருமிடி எங்கணும் உகுத்து வீழ்ந்தவே. | 129 |
| 2052 | வெதிர்படு சிலம்பினும் வழுக்கி
வீழ்ந்திடும் அதிர்குரல் அரியினம்அண்டச் செற்றின எதிருறு தகுவனை இனமென் றுன்னியே முதிர்தரு காதலான் முன்னுற் றாலென. | 130 |
| 2053 | மைம்மலை யிடைவிராய் வதிந்த மோட்டுடைக் கைம்மலை அரற்றியே கவிழ்வ காசிபன் செம்மலை அரியென நோக்கித் தேம்பியே விம்மலை யெய்தியே வீழவ தென்னவே. | 131 |
| 2054 | பொற்றையின் மரங்களிற் பொதிந்த
கேசரம் வெற்றிகொள் அரிமுகன் தொடையின் மேவின விற்றவர் தம்மை விட்டேதி லார்தமைப் பற்றொடு கலந்திடு பரத்தை மாதர்போல். | 132 |
| 2055 | எறிந்திடு வரைகள்தந் தம்மில்
எற்றிடச் செறிந்திடு தீங்கனல் சென்ற திக்கெலாம் பொறிந்தன புகைந்தன பொரித லுற்றன மறிந்தன உலந்தன மன்னு யிர்த்தொகை. | 133 |
| 2056 | ஆயின பல்லியல் அடையப் பூதர்கள் ஏயின குன்றமுந் தருவும் ஏகியே சீயமா முகமுடைச் செல்வற் சேர்ந்தனன் தூயவன் கயிலைச் சூழ்ந்த கொண்டல்போல். | 134 |
| 2057 | செடித்தலை எயினரில் திகழும் ஆயிரம் முடித்தலை யான்மிசைப் பட்ட மொய்வரை பொடித்தில இற்றில பூழி யாய்த்தில படித்தலம் வீழ்ந்தன நொய்ய பான்மையால். | 135 |
| 2058 | வேறு துன்னற் பட்ட குன்றெவை யுஞ்சூர் துணையானோன் மின்னற் பட்ட மெய்யிடை பட்டே வெற்பின்கட் பன்னற் பட்ட தாமென வீழ்கின் றதுபாரா இன்னற் பட்டார் பூதர்கள் வானோர் ஏங்குற்றார். | 136 |
| 2059 | சீலம் புக்க பா£¤டர் வெம்போர் செயல்கா
ணூஉக் கோலம் புக்க தேரிடை நின்றான் குப்புற்று ஞாலம் புக்கான் பூதர்கள் தம்மை நலிதற்கோர் ஆலம் புக்கா லென்ன நடந்தான் அடல்செய்வான். | 137 |
| 2060 | பார்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மைப்
பகைவிண்ணோ£¢ ஊர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மை உயர்பானுத் தேர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மைத் திரைசேர்முந் நீர்மேல் எற்றுஞ் சிற்சிலர் தம்மை நெடிதோச்சும். | 138 |
| 2061 | பற்றா நிற்குஞ் சிலவரை மூரற் பகுவாயிற்
குற்றா நிற்குஞ் சிலவரை வாரிக் குழுவோடுஞ் சுற்றா நிற்குஞ் சிலவரை அண்டச் சுவரின்கண் எற்றா நிற்குஞ் சிலவரை அள்ளி எறிகிற்கும். | 139 |
| 2062 | புண்டரி கன்கட் சிலவரை வீசும்
பொருசெங்கைத் தண்டத ரன்கட் சிலவரை வீசுஞ் சதவேள்வி அண்டம தன்கட் சலவரை வீசும் அகிலஞ்சூழ் எண்டிசை யின்கட் சிலவரை வீசும் இகல்பேசும். | 140 |
| 2063 | மாலெரி வைப்பிற் பலர்தமை வீசும்
வானத்தில் காலெறி வைப்பிற் பலர்தமை வீசும் கரைதீர்ந்த வேலைகள் முற்றும் பலர்தமை வீசும் வியன்மிக்க ஞாலம் அனைத்தும் பலர்தமை வீசும் நனிதூர்க்கும். | 141 |
| 2064 | சிங்கங் கொண்ட மாமுகன் வீசுஞ்
செறிவாலே துங்கங் கொண்ட பார்முதல் விண்ணின் துணையுந்தான் எங்கும் பூத மாயின அம்ம இதுகொண்டோ அங்கங் கெல்லாம் பூதம தென்றார் அறிவுள்ளார். | 142 |
| 2065 | மிதித்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மை
மிசையுந்திப் பதத்திற் கொல்லுஞ் சிற்சிலர் தம்மைப் படிவத்தைச் சிதைத்துக் கொல்லுஞ் சிற்சிலர் தம்மைச் செல்லென்ன உதைத்துக் கொல்லுஞ் சிற்சிலா¢ தம்மை உலவுற்றே. | 143 |
| 2066 | விள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி
விரல்மேலால் தள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி தாமுற்றக் கிள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி கிளையோடு மள்ளா நிற்குஞ் சிற்சிலர் சென்னி அடுகிற்கும். | 144 |
| 2067 | தாக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மைத்
தடிகின்ற ஊக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை யுருமொத்த வாக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை மருளுற்ற நோக்கிற் கொல்லும் ஒருசிலர் தம்மை நொடிதன்னில். | 145 |
| 2068 | வாரா நிற்கும் பாரிட ராசியை வாரிப்பின் சேரா நிற்கும் வாய்தொறும் ஈண்டச் சேர்த்திட்டே ஆரா நிற்கும் ஆர்ந்தபி னாக அகல்மோடடைத் தூரா நிற்குந் தூர்த்தபின் ஆடல் தொழில்செய்யும். | 146 |
| 2069 | எழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை
எரிகூர்வாய் மழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை வயநாஞ்சில் கொழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மை கூர்சூலக் கழுவிற் கொல்லும் ஒருசிலர் தம்மைக் கடிதோடி. | 147 |
| 2070 | கரத்திற் கொல்லுஞ் சிலவரை நோன்கார்
முகமுய்க்குஞ் சரத்திற் கொல்லுஞ் சிலவரை அம்பொற் றண்டத்தின் உரத்திற் கொல்லுஞ் சிலவரை அங்கண் ஒசிக்கின்ற மரத்திற் கொல்லுஞ் சிலவரை மண்மீ தினில்வீட்டும். | 148 |
| 2071 | தேர்மே லானோ விண்ணுல கானோ திசையானோ பார்மே லானோ வார்கட லானோ பதுமத்தோன் ஊர்மே லானோ மேருவி னானோ உயர்பூதர் போர்மே லானோ தீயவன் என்றார் புலவோ£¢கள். | 149 |
| 2072 | அற்றார் தாள்கள் கைகள் இழந்தார்
அடுதிண்டோன் இற்றார் சென்னி சிந்தினா¢ துண்ட மிலரானார் பெற்றார் மார்பம் விண்டனர் வீழ்ந்து புரள்கின்றார் செற்றார் தம்மை அட்டிடு பூதத் திறல்வீரர். | 150 |
| 2073 | சொரியா நின்ற சோரியர் ஆற்றத்
துயர்மேலார் மரியா நின்றார் எண்ணில ரால்மற் றவர்தம்முட் பிரியா நின்ற சென்னியர் பல்லோர் பெயர்வெய்தித் திரியா நின்றா¢ ஆடுறு கின்ற செயல்கொண்டார். | 151 |
| 2074 | கருவந் தெய்தும் ஆருயிர் முற்றுங்
கவிழ்கின்ற பருவந் தன்னில் தீயவன் உண்ணும் படியேபோற் செருவந் துற்ற சீயமு கத்துத் திறல்மேலோன் ஒருவன் தானே நின்றடு கின்றான் உலவாதான். | 152 |
| 2075 | அந்நீ ராகிப் பூதரை வெய்யோன்
அடுகாலைச் செந்நீர் நீத்தம் ஆயிடை தோறுஞ் சென்றீண்டித் தொன்னீர் வேலை புக்குவர் நீக்கித் துவராக்கி முந்நீ ரென்னுந் தொன்மையை வேறாய் முடிவித்த. | 153 |
| 2076 | ஆடா நின்றான் இத்திறம் வெய்யோன்
அளவில்லா£¢ வீடா நின்றார் கண்டனர் வெம்பூ தர்க்கெல்லாங் கேடா நின்றான் இங்கிவ னென்னாக் கிளையோடும் ஓடா நின்றா£¢ வானவ ரெல்லாம் உலைவுற்றார். | 154 |
| 2077 | துன்னா நின்ற தொன்மரம் வெற்பின்
தொகைவீசி முன்னா குற்ற பூதர்கள் யாரும் முடிகாகக் கொன்னார் சிங்க மாமுகன் அட்டே குலவுற்று மின்னார் செம்பொன் மேருவெ னுந்தேர் மிசைபுக்கான். | 155 |
| 2078 | வேறு அவ்வேலை யன்னான் அமர்செய்விளை யாடல் பாரா மைவேலை போல்வான் அழற்கண்ணன் மனங்க னன்று செவ்வே யெதிர்புக் கரிமாமுகற் சீறி வெய்யோய் இவ்வேலை உன்னை முடிப்பன்இகல் முற்றி என்றான். | 156 |
| 2079 | என்றங்குரை செய்திடு பூதனை ஏந்தல்
நோக்கி ஒன்றுஞ்சிறி துன்னலை அச்சமும் முற்றி லாதாய் நின்றிங்கிது கூறினை என்னின் நினக்கு நேரார் நன்றுன்வலி என்றுந கைத்தனன் நாகர் அஞ்ச. | 157 |
| 2080 | அன்னான்நகை செய்தது காண்டலும் ஆழி
நாப்பட் கொன்னார்தழ லென்னவெ குண்டனன் கூளி வேந்தன் நின்னாடலை நீக்குவன் காணுதி நீயு மென்றோர் மின்னார்கழு முட்படை ஆங்கவன் மீது விட்டான். | 158 |
| 2081 | கூற்றானவன் ஏவவ ரும்படைக் கொள்கை
நோக்கி மாற்றானவ னோர்படை யும்வழங் காது நின்றான் தோற்றானென வானவர் ஆர்த்தனர் சூல மார்பின் ஏற்றான்வரை மேற்படு கண்டகத் திற்ற தன்றே. | 159 |
| 2082 | உறுகின்றசூ லப்படை ஊற்றமும் ஓங்கல்
மார்பத் திறுகின்றதும் அங்கவன நின்றதும் யாவும் நோக்கிப் பெறுகின் றவரில் இவன்பெற்றது பேற தென்னா மறுகின்ற நெஞ்சன் ஒருதண்டினை வல்லை உய்த்தான். | 160 |
| 2083 | வேறு உய்த்தலும் அனையதண் டுருமுற் றாலென அத்தலை அரிமுகத் தவுணன் சாரதி மெய்த்தலை கோடலும் வெகுண்டு நோக்கியே கைத்தல மிருந்ததோர் கதையை ஏவினான். | 161 |
| 2084 | மாவலி சேர்தரு மடங்கல் மாமுகன் ஏவிய வெங்கதை இமைப்பிற் பூதர்கள் காவலன் அகலமேற் கலந்து தாக்கிற்றால் ஓவென அனையனும் உளம்வ ருந்தவே. | 162 |
| 2085 | செயிரறத் திருத்திய செம்பொற்
குன்றின்மேல் வயிரமெய்ப் படையது வந்தற் றாதலும் அயிருறப் புனைகலன் ஆகங் கீண்டிட உயிரினுக் கவ்வழி யுலைவு மிக்கதே. | 163 |
| 2086 | தாக்கிய வேலையில் தழலின்
நாட்டத்தான் மூக்கினின் மார்பினின் முழங்கு வாயினிற் தேக்கிய குருதிநீர் சிந்து கின்றது மேக்குயர் கனல்மழை விரித்த தாரைபோல். | 164 |
| 2087 | மறந்தனன் தொல்லுணர் வெனினும்
வன்றிறல் துறந்திலன் வெவ்வழல் சொரியுங் கண்ணினான் சிறந்திடும் ஊசலில் திரிந்த தன்னுயிர் இறந்திலன் அவற்கொரு கூற்றம் இன்மையால். | 165 |
| 2088 | ஆரழன் முகத்தவன் அயர்வுற் றவ்வழிச் சோர்வொடு நிற்றலுஞ் சூரன் பின்வரும் வீரம துடையவன் வேறொர் பாகனைத் தேரிடை நிறுவினன் சேறல் மேயினான். | 166 |
| 2089 | வேறு மூண்டமர் இயற்றச் சீய முகத்தவன் வரலும் நோக்கித் தூண்டிய வெகுளி மேலோன் சுமாலியென் றுரைக்குந் தொல்லோன் நீண்டிடு மேரு வென்ன நிவந்ததோர் அடுக்கல் தன்னைக் கீண்டரி முகன்மேற் செல்லக் கிளர்ந்தனன் வீசி ஆர்த்தான். | 167 |
| 2090 | மற்றவன் விடுத்த குன்றை வாளரி முகத்து
வீரன் பற்றினன் ஒருதன் கையால் பந்தென மீட்டும் உந்தப் பொற்றட மார்பில் தாக்கப் புலம்பியே சுமாலி என்பான் செற்றமும் தானு மாகச் செயலற்று நிலத்தன் ஆனான். | 168 |
| 2091 | நிலந்தனில் சுமாலி வீ£ நெடுஞ்சினம் திருகி
அங்கைத் தலந்தனில் கரையொன் றேந்தித் தண்டிபோய் அவுணன் தோ¤ல் கலந்தவன் உரத்தில் செல்லப் புடைத்தலும் காமந் தன்னில் புலந்தவன் தனக்குக் காட்டும் உணர்வெனப் பொடித்த தன்றே. | 169 |
| 2092 | பொடித்தலும் வயிரத் தண்டம் பூதரின் முதல்வன்
பொங்கிக் கொடித்தடந் தேர்மேல் நின்ற கோளரி முகத்தன் தன்மேல் இடித்தெனக் கையால் எற்ற எரியெழ நகைத்துத் தன்னோர் அடித்தலங் கொண்டு தள்ளி அமரர்கள் வெருவ ஆர்த்தான். | 170 |
| 2093 | தாளினால் உந்தி விட்ட தண்டிசேண் எழுந்து
மெல்ல மீளுவான் அடுவ னென்னும் வெகுளியான் உயிர்ப்பு வீங்கி யாளிசேர் வதனத் தண்ணல் ஆடக வயிரக் குன்றத் தோளின்மேல் குப்புற் றேதன் னடிகொடு துகைக்கல் உற்றான். | 172 |
| 2094 | ஆடியல் தானை மன்னன் ஆயிரத் திரட்டி
தோளும் ஓடினன் துகைத்துத் தாளும் ஓய்ந்தனன் அவற்றை நோக்கி நாடினன் திரியா நின்றான் நாகநீள் குடுமிக் குன்றில் கோடுயர் பொதும்பர் தன்னிற் பாய்ந்திடும் குரங்கு போல்வான். | 172 |
| 2095 | குரங்குளைக் குடுமிச் சூட்டுக் கோளரி முகத்து
வெய்யோன் கரங்களிற் பாயும் அங்கட் கலந்திடு படையிற் பாயுஞ் சிரங்களிற் பாயும் மீளச செவிதொறும் பாயும் பூந்தண் மரங்களிற் பாய்ந்து செல்லும் மணிச்சிறை வண்டும் போன்றான். | 173 |
| 2096 | செறிந்திடு கரமுந் தோளுஞ் சென்னியும் பூதன்
செல்வ தறிந்திலன் சிறியன் போலும் அரிமுகத் தவுணன் நம்மேல் எறிந்துல வுற்றுச் சூழும் ஈகொலென் றொருதன் கையால் சொறிந்தனன் சிறிது பின்னர்த் தண்டியைத் துடைத்து விட்டான். | 174 |
| 2097 | ஒருதனிக் கரத்தால் தீயோன் உருட்டினன் துடைப்பத்
தண்டி பெரிதுநொந் தாற்றல் போகிப் பின்றினன் பெயர்ந்து போனான் தெரிதரு பூதர் அஞ்சித் சிந்திச் செயலொன் றில்லார் அரிதுசெய் தவமே அல்லால் ஆற்றல்பெற் றிடுவ துண்டோ. | 175 |
| 2098 | பூதர்கள் இரிவு நோக்கிப் பொருதிறல் இலக்கத்
தெட்டு மேதகு வீரர் யாரும் வெய்யதேர் கடாவிச் சென்று தீதறு சிலைகள் வாங்கிச் சீயமா முகவற் சுற்றித் தாதவிழ் மலர்பெய் தென்னச் சரமழை பொழிதல் உற்றார். | 176 |
| 2099 | பொழிந்திடு பகழி யெல்லாம் புகுந்திடு சுவடின்
நாகி அழிந்ததும் இன்றி முன்போல் அவன்புடை வீழ நோக்கி ஒழிந்ததெம் மாற்ற லென்னா உட்கினர் ஒருதன் தேரின் இழிந்தனன் அவுணர் கோமான் இடிபடத தெழித்துச் சென்றான். | 177 |
| 2100 | எடுத்தனன் சிலவர் தேரை எறிந்தனன் ஒன்றொ
டொன்றின் அடித்தனன் சிலவர் தேரை அள்ளினன் அங்கை தன்னால் ஒடித்தனன் சிலவர் தேரை உரைத்தனன் சிலவர் தேரைப் பொடித்தனன் சிலவர் தேரைப் புதைத்தனன் சிலவர் தேரை. | 178 |
| 2101 | இத்திற மடங்கல் வீரன் அடுதலும் இலக்கத்
தெண்மர் தத்தம துயிரே தாங்கித் தனுவொடு படைகள் மானம் மெய்த்திறல் சிந்திச் சாய்ந்தார் மேவலன் தேர்மேற் புக்கான் அத்தலை நின்ற வீர வாகுமற் றதனைக் கண்டான். | 179 |
| 2102 | ஆளரி அனைய வீரன் அதுகண்டு பூதர் தம்முட் கோளரி முகத்து வெய்யோன் கொன்றதோர் பாதி உண்டால் தாளுடை வில்லி னாருஞ் சமரிடத் தழிந்தார் இந்த நாளினின் முடியும் போலும் நம்பெரும் படையு மென்றான். | 180 |
| 2103 | அடல்பெறு புயத்து வள்ளல் ஆடக வரைபோ
லுள்ள கோடுமர மான தொன்றைக் கோட்டினன் சினமேற் கொண்டான் விடமுறு தறுகட் கேது விரைந்தொரு பாங்கா¢ புக்கு நடுவெலாங் கவரத் தோன்று நாகிளங் கதிரே போல. | 181 |
| 2104 | வாங்கிய சிலையிற் பூட்டி வடிக்கணை அநந்த
கோடி தூங்கலின் மழைகான் றென்ன உலப்புறான் சொரிந்து நிற்ப ஆங்கெதிர் அடர்த்துப் போர்செய் அவுணர்தந் தலைகள் பாறத் தாங்கிய படைகள் சிந்தித் தரைமிசைத் துணிந்து வீழ்ந்தார். | 182 |
| 2105 | பரித்தொகை முழுதும் பட்ட பாழியந் தோ¢கள் பட்ட
ஒருத்தலும் பிடியும் பட்ட உலப்பிலா அவுணர் பட்டார் பெருத்தன பிணத்தின் குன்றம் பிறங்கின பேய்கள் மொய்த்த திரைத்தெழு சோரி நீத்தந் தெண்டிரை மடுத்த தம்மா. | 183 |
| 2106 | தேரெனப் பட்ட வீரர் திறமெனப் பட்ட
மாவின் பேரெனப் பட்ட யானைப் பெருக்கெனப் பட்ட தம்முட் பேரிடைப் படாத எல்லாம் பொருதிரைக் குருதி வாரி வீரனுக் குதவி யாக வேலையுள் உய்த்த தன்றே. | 184 |
| 2107 | பேரியின் ஒலியும் தீய அவுணர்கள் பிடித்த
வில்லின் நாரியின் ஒலியும் சூழும் நாற்படை ஒலியும் மாண்ட காரியின் ஒலியும் மோட்டுக் கணங்களின் ஒலியுஞ் செந்நீ£¢ வாரியின் ஒலியு மாகி அடுகளம் மலிந்த அன்றே. | 185 |
| 2108 | மலைகளை அறுக்கும் வேலை வாள்களை அறுக்குஞ்
செங்கைச் சிலைகளை அறுக்கும் வெய்யோர் திண்டிறல் கொண்ட தோளின் நிலைகளை அறுக்கும் மார்பின் நிரைகளை அறுக்குங் கோடி தலைகளை அறுக்கும் அம்மா இளையவன் சரம தொன்றே. | 186 |
| 2109 | காழுறும் அவுணர் சென்னி கரதல நெடுந்தோள்
மார்பகம் வாழிய முருகன் தூதன் வாளிகள் வௌவி ஏகி ஏழுள கடலும் நீங்கி எண்டிசைக் கிரிகள் தாவி ஆழியங் கிரிபோழந் தப்பால் அண்டமும் பிளந்து செல்லும். | 187 |
| 2110 | கரண்டம தான செந்நீர் ஆற்றிடைக் கவிழ்ந்து
மூழ்கித் திரண்டவூன் வௌவி மீண்டு சிறகரை உதறு கின்ற முரண்டகு வீரர் சென்னி மூளைபுக் களைந்து வாரிக் குரண்டமீ தென்ன லான கருநிறக் கொடிக ளெல்லாம். 188 | 188 |
| 2111 | இவ்வஆஆ அவுணர் தானை இறந்திட வீர வாகு அவ்வயின் நின்று சென்றாங் கடுதலும் அதனைக் கண்டார் தெவ்வரை முருக்கும் வைவேற் சீயமா முகத்தன் மைந்தர் ஐவரை வெல்லும் ஆற்றல் ஐம்பதிற் றிருவா¢ என்பார். | 189 |
| 2112 | சினத்தனர் இதழைப் பல்லால் தின்றனர் நம்முன்
வெம்போர் வினைத்தொழில் இயற்று வானை வெய்தென அடுது மென்னா இனத்தொடு தேர்க டாவி ஏகியே வீரன் தன்மேல் தனித்தனி வார்விற் கோட்டிச் சரமழை சிதற லுற்றார். | 190 |
| 2113 | நூற்றுவர் ஒருங்கு நேர்ந்து நோன்றலைச் சிலைகள்
வாங்கி மேற்றிகழ் முகில்கான் றென்ன வீசிய விசிகந் தன்னை ஆற்றல்சேர் வீரன் காணா அயிற்கணை அநந்த கோடி காற்றெனத் துரந்து மாற்றிக் கடவுளர் புகழ ஆர்த்தான். | 191 |
| 2114 | தொலைவுறும் அவுணன் மைந்தா¢ துண்ணெனக் கனன்று
பின்னுங் கொலையுடை நெடுங்கூர் வாளி கோடிகோ டிகள்நின் றுய்ப்ப வலியுடை வீர வாகு மற்றவை மாற்றி அன்னோர் சிலையொடு தேர்கள் தம்மைச் செஞ்சரந் தூண்டி வீழ்த்தான். | 192 |
| 2115 | தேரொடு சிலைகள் மாயச் சீயமா முகத்தன்
மைந்தர் வீரனை எதிர்ந்து வில்லால் வென்றிடல் அரிது போலுங் கூருடை நுதிவாட் போரிற் கொல்லுதும் இவனை என்னாப் பாரிடை வந்தோர் சூழ்ச்சி வகையினாற் பகர்த லுற்றார். | 193 |
| 2116 | காட்புடைச் சிலையின் விஞ்சை கற்றதே அன்றி
எம்போல் வாட்படை பயின்றி லாய்கொல் வல்லையேல் அப்போர் செய்யச் சேட்படை யன்றி எம்முன் சேர்தியால் வீர என்னாத் தோட்புடை கொட்டி ஆர்த்தார் கூற்றனுந் துளக்கம் எய்த. | 194 |
| 2117 | வன்றிறல் அவுணன் மைந்தர் |