| 877
|
இரவிவந் துற்றுழி எழுந்து சூர்மகன் மரபுளி
நாட்கடன் வழாமல் ஆற்றியே செருவினில் உடைந்திடு சிறுமை
சிந்தியாய் பொருவரு மாயையைப் போற்றல் மேயினான்.
| 1 |
| 878
|
போற்றினன் முன்னுறு பொழுதின்
மாயவள் கோற்றொழில் கன்றிய குமரன் முன்னரே தோற்றினள் நிற்றலுந் தொழுத
கையினன் பேற்றினை முன்னியே இனைய பேசுவான்.
| 2 |
| 879
|
தாதைதன் அவ்வைகேள் சண்முக கத்தவன் தூதுவ
னோடுபோ£¢த் தொழிலை ஆற்றினேன் ஏதமில் மானமும் இழந்து சாலவும் நோதக
உழந்தனன் நோன்மை நீங்கினேன்.
| 3 |
| 880
|
துன்னல ரோடுபோர் தொடங்கி ஈற்றினில் பின்னிடு
வார்பெறும் பிழையும் பெற்றனன் என்னினி வரும்பழி இதற்கு
மேலென்றான் அன்னது மாயைகேட் டறைதல் மேயினாள்.
| 4 |
| 881
|
மறைநெறி விலக்கினை வானு ளோர்தமைச் சிறையிடை
வைத்தனை தேவர் கோமகன் முறையினை அழித்தனை முனிவர் செய்தவங் குறையுறு
வித்தனை கொடுமை பேணினாய்.
| 5 |
| 882
|
ஓவருந் தன்மையால் உயிர்கள் போற்றிடும் மூவரும்
பகையெனின் முனிவர் தம்மொடு தேவரும் பகையெனின் சேணில்
உற்றுளோர் ஏவரும் பகையெனின் எங்ஙன் வாழ்தியால்.
| 6 |
| 883
|
பிழைத்திடு கொடுநெறி பெரிதுஞ்
செய்தலாற் பழித்திறம் பூண்டனை பகைவர் இந்நகர் அழித்தமர் இயற்றிட
அவர்க்குத் தோற்றனை இழைத்திடும் விதியினை யாவர் நீங்கினார்.
| 7 |
| 884
|
நூற்றிவண் பற்பல நுவலின் ஆவதென் மாற்றருந்
திறலுடை மன்னன் மைந்தநீ சாற்றுதி வேண்டுவ தருவன் என்றலும் ஆற்றவும்
மகிழ்சிறந் தனையன் கூறுவான்.
| 8 |
| 885
|
நின்றமர் இயற்றியே நென்னல் என்றனை வென்றனன்
ஏகிய வீர வாகுவை இன்றனி கத்தொடும் ஈறு செய்திட ஒன்றொரு படையினை உதவு
வாயென்றான்.
| 9 |
| 886
|
அடல்வலி பிழைத்திடும் அவுணன் சொற்றன கெடலரும்
மாயவள் கேட்டுத் தன்னொரு படையினை விதித்தவன் பாணி நல்கியே கடிதினில்
ஒருமொழி கழறல் மேயினாள்.
| 10 |
| 887
|
மற்றிது விடுத்தியால் மறையில்
கந்தவேள் ஒற்றனைப் பிறர்தமை உணர்வை வீட்டியே சுற்றிடும் வாயுவின்
தொழிலுஞ் செய்யுமால் இற்றையிற் சயமுன தேகு வாயென்றாள்.
| 11 |
| 888
|
உரைத்திவை மாயவள் உம்பர் போந்துழி வரத்தினிற்
கொண்டிடு மாய மாப்படை பரித்தவன் நெருநலிற் பழியை
நீங்கியே பெருந்திடும் பெருமிதப் பெற்றி கூடினான்.
| 12 |
| 889
|
கூர்ப்புறு பல்லவங் கொண்ட
தூணியைச் சீர்ப்புறத் திறுக்கிமெய் செறித்துச் சாலிகை கார்ப்பெருங்
கொடுமரங் கரங்கொண் டின்னதோர் போர்ப்பெருங் கருவிகள் புனைந்து
தோன்றினான்.
| 13 |
| 890
|
காற்படை அழற்படை காலன் தொல்படை பாற்படு
மதிப்படை பரிதி யோன்படை மாற்படை அரன்படை மலர யன்படை மேற்படு சூர்மகன்
எடுத்தல் மேயினான்.
| 14 |
| 891
|
மேனவப் படைமதில் விரவு சாலையுள் வானவப்
படைகொடு வாய்தல் போந்தனன் ஆனவப் படைதரும் ஆடல் வில்லினான் தானவப்
படைஞர்கள் தொழுது தாழ்ந்திட.
| 15 |
| 892
|
சயந்தனைப் பொருதிடுந் தார்பெய் தோளினான்
சயந்தனைப் பொருதநாட் சமரிற் கொண்டதோர் சயந்தனத் தேறினன் தகுவர்
யாவருஞ் சயந்தனைப் பெறுகென ஆசி சாற்றவே.
| 16 |
| 893
|
ஒப்பறு செறுநர்மேல் உருத்துப்
போர்செயத் துப்புறு சூர்மகன் தொடர்கின் றானெனச் செப்புறும் ஒற்றர்கள்
தெரிந்து போமென எப்புறத் தானையும் எழுந்து போந்தவே.
| 17
|
| 894
|
பரிபதி னாயிர வௌ¢ளம் பாய்மத கரிபதி னாயிர
வௌ¢ளங் காமர்தேர் ஒருபதி னாயிர வௌ¢ளம் ஒப்பிலா இருபதி னாயிர வௌ¢ளம்
ஏனையோர்.
| 18 |
| 895
|
நாற்படை இவ்வகை நடந்து கோமகன் பாற்பட விரவின
பரவு பூழிகள் மாற்படு புணரிநீர் வறப்பச் சூழ்ந்ததால் மேற்படு
முகிலினம் மிசைய வந்தென.
| 19 |
| 896
|
திண்டிறல் அனிகமீச் சென்ற பூழிகள் மண்டல
முழுவதும் வரைகள் யாவையும் அண்டமும் விழுங்கியே அவைகள்
அற்றிட உண்டலின் அடைந்தன உவரி முற்றுமே.
| 20 |
| 897
|
முரசொடு துடிகுட முழவஞ் சல்லரி கரடிகை தண்ணுமை
உடுக்கை காகளம் இரலைக ளாதியாம் இயங்கள் ஆர்த்தன திருநகர் அழியுமென்
றரற்றுஞ் செய்கைபோல்.
| 21 |
| 898
|
உழையுடைக் கற்பினர் உரையிற்
சென்றிடா தழையுடைப் பிடிக்குநீர் தணிக்கும் வேட்கையால் புழையுடைத்
தனிக்கரம் போக்கிப் பொங்குசூல் மழையுடைத் திடுவன மதங்கொள் யானையே.
| 22 |
| 899
|
கார்மிசைப் பாய்வன கதிர வன்தனித் தோ¢மிசைப்
பாய்வன சிலையிற் பாய்வன பார்மிசைப் பாய்வன பாரி டத்தவர் போர்மிசைப்
பாய்வன புரவி வௌ¢ளமே.
| 23 |
| 900
|
அருளில ராகிய அவுணர் மாண்டுழித் தெருளுறும்
அவ்வவர் தெரிவை மாதர்கள் மருளொரு துன்புறும் வண்ணங்
காட்டல்போல் உருளுவ இரங்குவ உலப்பில் தேர்களே.
| 24 |
| 901
|
கரிந்திடு மேனியுங் கணிப்பில்
தானவர் தெரிந்திடு மாலைசூழ் செய்ய பங்கியும் விரிந்திடு நஞ்சுபல்
லுருவ மேவுறீஇ எரிந்திடும் அங்கிகான் றென்னத் தோன்றுமே.
| 25 |
| 902
|
வேறு பொங்கு வெங்கதிர் போன்றொளிர்
பூணினர் திங்கள் வாளெயிற் றார்முடி செய்யவர் துங்க அற்புதர்
பொன்புகர் தூங்குவேல் அங்கை யாளர் அசனியின் ஆர்த்துளார்.
| 26 |
| 903
|
நீள மர்க்கு நெருநலில் போந்துபின் மீளு
தற்குடைந் தார்தமை வீட்டுதும் வாளி னுக்கிரை யாவென்று
வாய்மையால் சூளி சைத்துத் தொடர்ந்தனர் வீரரே.
| 27 |
| 904
|
ஓடு தேரின்உ வாக்களின் மானவர் நீடு கையின்நி
வந்துறு கேதனம் ஆடி விண்ணை அளாவுவ தாருவைக் கூடி வேகொல் கொடியெனுந்
தன்மையால்.
| 28 |
| 905
|
கோலின் ஓங்கு கொடியுங் கவிகையுந் தோலும்
ஈண்டலிற் சூழிரு ளாயின மாலை சூழ்குஞ்சி மானவர் வன்கையில் வேலும்
வாளும் பிறவும்வில் வீசுமே.
| 29 |
| 906
|
இன்ன தன்மை இயன்றிடத் தானைகள் துன்னு
பாங்கரிற் சூழ்ந்து படர்ந்திட மன்னன் மாமகன் மாநகர் நீங்கியே பொன்ன
வாம்புரி சைப்புறம் போயினான்.
| 30 |
| 907
|
போய காலைப் புறந்தனில் வந்திடும் வேயி
னோர்களின் வெம்பரி மாமுகம் ஆயி ரங்கொள் அவுணனை நோக்கியே தீய சூர்மகன்
இன்னன செப்புவான்.
| 31 |
| 908
|
ஈசன் விட்ட குமரன் இருந்திடும் பாச றைக்களந்
தன்னிற் படர்ந்துநீ மாசி லாவிறல் வாகுவைக் கண்ணுறீஇப் பேச லாற்றுதி
இன்னன பெற்றியே.
| 32 |
| 909
|
மன்னன் ஆணையின் மண்டமர் ஆற்றியே தன்னை இன்று
தடிந்திசை பெற்றிட உன்னி வந்தனன் ஒல்லையின் ஏகுதி முன்னை வைகலிற்
போரென்றும் உன்னலாய்.
| 33 |
| 910
|
என்ற மாற்றம் எனதுரை யாகவே வென்றி யோடு
புகன்றனை மீள்கென நின்ற தூதனை நீசன் விடுத்தலும் நன்றி தென்று
நடந்துமுன் போயினான்.
| 34 |
| 911
|
ஏம கூட மெனப்பெய ராகிய காமர் பாசறைக் கண்ணகல்
வைப்புறீஇ நாம வேற்படை நம்பிக் கிளவலாம் தாம மார்பனைக் கண்டிவை
சாற்றுவான்.
| 35 |
| 912
|
எல்லை தன்னை இருஞ்சிறை வீட்டிய மல்லல் அங்கழல்
மன்னவன் மாமகன் ஒல்லை இப்பகல் உன்னுயிர் மாற்றுவான் செல்லு கின்றனன்
செப்பிய சூளினான்.
| 36 |
| 913
|
ஏவி னான்எனை இத்திறங் கூறியே கூவி நின்னைக்
கொடுவரு வாயென மேவ லாள விரைந்தமர்க் கேகுதி நாவ லோயென வேநவின் றானரோ.
| 37 |
| 914
|
தூதன் இவ்வகை சொற்றெதிர் நிற்றலும் மூத
குந்திறல் மொய்ம்பன் நகைத்தியான் ஆத வன்புகை ஆருயிர் உண்டிடப் போது
கின்றனன் போய்ப்புகல் வாயென்றான்.
| 38 |
| 915
|
ஒற்றன் இத்திறம் ஓர்ந்துடன் மீடலுஞ் செற்ற
மிக்க திறல்கெழு மொய்ம்பினான் சுற்ற மோடு தலைவர்கள்
சூழ்ந்திடக் கொற்ற வேற்கைக் குமரன்முன் நண்ணினான்.
| 39 |
| 916
|
எங்கு மாகி இருந்திடு நாயகன் பங்க யப்பொற்
பதத்தினைத் தாழ்ந்தெழீஇச் செங்கை கூப்பிமுன் நிற்றலுஞ்
செவ்வியோன் அங்க ணுற்ற தறிந்திவை கூறுவான்.
| | 0
| 917
|
நென்னல் ஓடும் நிருதன் தனிமகன் உன்னை முன்னி
உரனொடு போந்துளான் துன்னு தானைத் துணைவர்கள் தம்மொடு முன்னை வைகலின்
ஏகுதி மொய்ம்பினோய்.
| | 1
| 918
|
போயெ திர்ந்து பொருதி படைகளாய் ஏய வற்றிற்
கெதிரெதிர் தூண்டுதி மாயை வஞ்சன் புரிந்திடின் வந்துநந் தூய வேற்படை
துண்ணென நீக்குமால்.
| | 2
| 919
|
போதி என்று புகன்றிட அப்பணி மீது கொண்டு
விடைகொண்டு புங்கவன் பாதம் வந்தனை செய்து படர்ந்தனன் தூது போய்அமர்
ஆற்றிய தொன்மையோன்.
| | 3
| 920
|
துணையு ளார்களுஞ் சுற்றமுள் ளார்களுங் கணவர்
தங்களிற் காவலர் யாவரும் அணிகொள் தேர்புக ஆடலந் தோளினான் இணையி
லாத்தன் இரதத்தி லேறினான்.
| | 4
| 921
|
கூறும் எல்லையில் இச்செயல் நோக்கியே ஊறில்
பூதரொ ராயிர வௌ¢ளமும் மாறி லாதவ ரையும் மரங்களும் பாறு லாவு
படையுங்கொண் டேய்தினார்.
| | 5
| 922
|
சார தங்கெழு தானைகள் ஈண்டியே காரி னங்களிற்
கல்லென ஆர்ப்புற வீர மொய்ம்பின் விடலையைச் சூழ்ந்தனர் ஆரும் விண்ணவர்
ஆசி புகன்றிட.
| | 6
| 923
|
மேன காலை விசயங்கொள் மொய்ம்பினான் தானை
யானவுந் தம்பியர் யாவரும் ஏனை யோ£¢களும் ஈண்டச்சென் றெய்தினான் பானு
கோபன் படரும் பறந்தலை.
| | 7
| 924
|
வேறு தேர்த்திடும் பாரிடஞ் செறியும்
வௌ¢ளமும் கார்த்திடு தானவக் கடலும் நேர்புறீஇ ஆர்த்தனர் இகலினர்
ஆற்றல் கூறியே போர்த்தொழில் முறையினைப் புரிதல் மேயினார்.
| | 8
| 925
|
கோடுகள் முழங்கின குறுங்கண் ஆகுளி பீடுற
இரட்டின பேரி ஆர்த்தன மூடின வலகைகள் மொய்த்த புள்ளினம் ஆடினன்
நடுவனும் அமரர் நோக்கவே.
| | 9
| 926
|
இலையயில் தோமரம் எழுத்தண் டொண்மழு வலமொடு
வச்சிரம் ஆழி மாப்படை தொலைவறு முத்தலைச் சூல மாதிய சிலைபொதி கணையுடன்
அவுணர் சிந்தினார்.
| 50 |
| 927
|
முத்தலைக் கழுவொடு முசலம் வெங்கதை கைத்தலத்
திருந்திடு கணிச்சி நேமிகள் மைத்தலைப் பருப்பதம் மரங்க
ளாதிய அத்தலைப் பூதரும் ஆர்த்து வீசினார்.
| 51 |
| 928
|
பணிச்சுடர் வாளினால் பாணி
சென்னிதோள் துணித்தனர் குற்றினர் சுரிகை ஆதியால் குணிப்பறும்
எழுக்கதை கொண்டு தாக்கினார் கணப்படை யொடுபொரும் அவுணர் காளையர்.
| 52 |
| 929
|
பிடித்தனர் அவுணரைப் பிறங்கு
கைகளால் அடித்தனர் கிழித்தனர் அணிய கந்தரம் ஒடித்தனர் மிதித்தனர்
உருட்டு கின்றனர் புடைத்தனர் எழுக்களால் பூத வீரரே.
| 53 |
| 930
|
வாசியும் வயவரும் மாயச் சாரதர் ஆசறு கரங்களால்
அள்ளி அள்ளியே காய்சின இபங்களில் கணிப்பில் தேர்களில் வீசிநின்
றெற்றினர் அவையும் வீழவே.
| 54 |
| 931
|
ஓதவெங் கடல்களும் ஊழி வன்னியும் மேதகு வலிகொடு
வெகுளி வீங்கியே ஆதியின் மாறுகொண் டமர்செய் தாலெனப் பூதரும் அவுணரும்
பொருதிட் டாரரோ.
| 55 |
| 932
|
குழகியல் அவுணரும் கொடிய பூதரும் கழகெனும்
உரைபெறு களத்தில் போர்செய ஒழுகிய சோரியா றூனை வேட்டுலாய் முழுகிய
கரண்டம்விண் மொய்த்த புள்ளெலாம்.
| 56 |
| 933
|
துணிந்தன கைத்தலம் துணிந்த தோட்டுணை துணிந்தன
சென்னிகள் துணிந்த வாலுரம் துணிந்தன கழலடி துணிந்த
மெய்யெலாம் துணிந்தன வலிசில பூதர் துஞ்சினா£¢.
| 57 |
| 934
|
முடித்தொகை அற்றனர் மொய்ம்பும்
அற்றனர் அடித்துணை அற்றனர் அங்கை அற்றனர் வடித்திடு கற்பொடு வலியும்
அற்றனர் துடித்தனர் அவுணரும் அநேகர் துஞ்சினார்.
| 58 |
| 935
|
வசையுறும் அவுணரின் மன்னர் யாவரும் இசைபெறு
பூதரின் இறைவ ருங்கெழீஇத் திசையொடு திசையெதிர் செய்கை போலவே அசைவில
ராகிநின் றமர தாற்றினார்.
| 59 |
| 936
|
மால்கிளர் தீயவர் மலைகொள் சென்னியைக் கால்கொடு
தள்ளினர் களேவ ரந்தனைப் பால்கிளர் பிலத்தினுட் படுத்துச் சென்றனர்
தோல்களை உரித்தனர் சூல பாணிபோல்.
| 60 |
| 937
|
அரித்திறல் அடக்கினா அவுண வீரர்தம் வரத்தினை
ஒழித்தனர் மாய நூறியே புரத்தினை அழித்தனர் போரின் மாதொடு நிருத்தம
தியற்றினர் நிமலன் போலவே.
| 61 |
| 9389
|
கங்குலின் மேனியர் ஆழிக் கையினர் துங்கமொ
டவுணரைத் தொலைத்துத் துண்ணெனச் சங்கம திசைத்தனர் தண்டந்
தாங்குவார் செங்கண்மால் பொருவினர் சிலவெம் பூதரே.
| 62 |
| 939
|
அயர்ப்புறு மால்கரி அரற்ற
வேசுலாய்க் குயிற்றிய மணிநெடுங் கோடு வாங்குவார் உயற்படு கற்பம்அங்
கொன்றில் ஏனத்தின் எயிற்றினைப் பறித்திடுங் குமரன் எனனவே.
| 63 |
| 940
|
கொலைபயில் கரிமுகங் கொண்டு பூதர்தம் மலையிடை
மறைந்தனர் மறித்துந் தோன்றியே அலமரு சமர்புரிந் தவுண வீரரில்
சிலர்சிலர் தாரகன் செயற்கை மேயினார்.
| 64 |
| 941
|
மாலொடு பொருதனர் மலர யன்றனைச் சாலவும்
வருத்தினர் சலதி வேலையின் பாலர்கள் அவுணரிற் பலர்ச லந்தரன் போலுடல்
கிழிந்தனர் பூதர் நேமியால்.
| 65 |
| 942
|
போன்றவர் பிறரிலாப் பூத நாயகர் மூன்றிலைப்
படைகளின் மூழ்கித் தீமைபோய் வான்றிகழ் கதியும்வா லுணர்வும்
எய்தியே தோன்றினர் அந்தகா சுரனைப் போற்சிலர்.
| 66 |
| 943
|
வேறு இலக்க வீரரும் எண்மரும்
அத்துணை விலக்கில் வில்லுமிழ் வெங்கணை மாரிதூய் ஒலிக்கொள் சூறையின்
ஒல்லையிற் சுற்றியே கலக்கி னார்கள் அவுணக் கடலினை.
| 67 |
| 944
|
வேறு மிடைந்தகண வீரர்களும் மேலவரு
மாக அடைந்தமர் இயற்றிஅவு ணப்படைகள் மாயத் தடிந்தனர் ஒழிந்தன
தடம்புனல் குடங்கர் உடைந்தவழி சிந்தியென ஓடியன அன்றே.
| 68 |
| 945
|
ஓடியது கண்டனன் உயர்த்துநகை
செய்தான் காடுகிளர் வன்னியென வேகனலு கின்றான் ஆடல்செய முன்னியொ
ரடற்சிலை எடுத்தான் தோடுசெறி வாகைபுனை சூரனருள் மைந்தன்.
| 69 |
| 946
|
வாகுபெறு தேர்வலவ னைக்கடிது நோக்கி ஏகவிடு
கென்றிரவி தன்பகை இயம்பபப் பாகவினி தென்றுபரி பூண்டஇர தத்தை வேகமொடு
பூதர்படை மீதுசெல விட்டான்.
| 70 |
| 947
|
பா£¤டர்கள் சேனையிடை பானுவைமு
னிந்தோன் சேருதலும் ஆங்கது தெரிந்துதிறல் வாகு சாருறு பெருந்துணைவா¢
தம்மொடு விரைந்தே நேரெதிர் புகுந்தொரு நெடுஞ்சிலை எடுத்தான்.
| 71 |
| 948
|
எடுத்திடும்வில் வீரனை எதிர்ந்தவுணன்
மைந்தன் வடித்திடு தடக்கைதனில் வார்சிலை வளைத்துத் தடித்தன குணத்தொலி
தனைப்புரிய அண்டம் வெடித்தன முடித்தலை துளக்கினர்கள் விண்ணோர்கள்.
| 72 |
| 949
|
எண்ணில்பல கோடிஉரும் ஏறுருவம்
ஒன்றாய் வண்ணமிகு மின்னிடை மறைந்தொலிசெய் தென்ன விண்ணுற நிவந்தவியன்
மொய்ம்புடைய வீரன் நண்ணலர் துணுக்கமுற நாணிசை எடுத்தான்.
| 73 |
| 950
|
நாணொலி செவித்துணையின் நஞ்சமென
எய்தத் தூணிகலும் வாகுடைய சூ£¢மதலை சீறி வாணிலவு கான்றபிறை வாளியுல
வாமற் சேணுநில னுந்திசைக ளுஞ்செறிய விட்டான்.
| 74 |
| 951
|
மாமுருக வேள்இளவன் மற்றது தெரிந்தே காமர்பிறை
போன்றுகதி ரென்னவெயில் கான்று தீமுகம தாம்அளவில் செய்யசர
மாரி தூமுகிலும் நாணமுற வேநெடிது தூர்த்தான்.
| 75 |
| 952
|
ஐயன்விடு வெஞ்சரமும் ஆதவனும்
அஞ்சும் வெய்யன்விடு வெஞ்சரமும் மேவியெதிர் கவ்வி மொய்யுடைஅ ராவினமு
னிந்திகலி வெம்போர் செய்வதென மாறுகொடு சிந்துவன தம்மில்.
| 76 |
| 953
|
வேறு கரிந்திடு மாமுகில் கடந்தன
வானவர் புரிந்திடு சேண்நெறி புகுந்தன மாலயன் இருந்திடும் ஊரையும்
இகந்தன போயின திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே.
| 77 |
| 954
|
தெண்டிரை நேமிகள் சென்றன சூழ்வன எண்டிசை
மாநகர் எங்கணும் ஏகுவ மணடல மால்வரை மண்டியு லாவுவ அண்டமு லாவுவ
அங்கவர் தேர்களே.
| 78 |
| 955
|
மங்குலின் மேலதோ மண்டல மார்வதோ செங்கணன ஊரதோ
தெண்டிரை சேர்வதோ இங்குளர் ஏறுதேர் எங்குள வோவெனாச் சங்கையின்
நாடினார் தங்களில் வானுளோ£¢.
| 79 |
| 956
|
மன்னிய மாமுகில் வண்ணம தாயினர் அன்னதொல்
வீரர்கள் அண்மிய தேரவை மின்னுவின் மேவுவ வெம்மையில் வீசிய துன்னிய
வாளிகள் தொன்மழை போல்வவே.
| 80 |
| 957
|
ஆங்கவர் தேர்களில் ஆண்டுறு பாகர்கள் தூங்கலில்
வாசிகள் சேண்புடை சூழ்வுற தீங்கதிர் வாளிகள் சேண்புடை
சூழ்வுற ஏங்கினர் ஓடினர் ஈண்டிய வானுளோர்.
| 81 |
| 958
|
வேறு பூசல் இவ்வகை புரிந்திடு கின்றுழிப்
புரைதீர் வாச வன்மகன் தனைச்சிறை செய்திடும் வலியோன் ஆசு கங்களில்
ஆசுக மாயிரந் தூண்டி ஈசன் மாமகன் சேனைநா யகன்நிறத் தெய்தான்.
| 82 |
| 959
|
ஆக மீதிலோ ராயிரம் பகழிபுக் கழுந்த ஏக வீரனாம்
இளவலும் முனிவுகொண் டேவி வாகை வெங்கணை பத்துநூ றவுணர்கோன் மதலை பாகு
மாக்களும் இரதமும் ஒருங்குறப் படுத்தான்.
| 83 |
| 960
|
படுக்க வெய்யவன் வேறொரு வையமேற்
பாய்ந்து தடக்கை வில்லினை வளைக்குமுன் ஆயிரஞ் சரத்தைத் தொடுக்க
மற்றவன் உரந்தனைப் போழ்தலுந் துளங்கி இடுக்கண் எய்தினன் ஆர்த்தனர்
பூதர்கள் எவரும்.
| 84 |
| 961
|
பூத ரார்த்திடு துழனியைக் கேட்டலும்
பொருமிக் காதில் வெவ்விடம் உய்த்திடு திறனெனக் கனன்றே ஏத மில்லதோர்
பண்ணவப் படைகளால் இமைப்பில் தூதன் ஆற்றலைத் தொலைக்குவன் யானெனத்
துணிந்தான்.
| 85 |
| 962
|
இணையில் சூர்மகன் வாருணப் படைக்கலம்
எடுத்துப் பணிவு கொண்டகார் முகந்தனில் பூட்டிநீ படா¢ந்து கணிதம்
இல்லதோர் நீத்தமாய்ச் சாரதர் கணத்தைத் துணைவர் தங்களைத் தூதனை
முடிக்கெனத் தொடுத்தான்.
| 86 |
| 963
|
தொடைப்பெ ரும்படை கடைமுறை உலகெலாந்
தொலைக்கும் அடற்பெ ருங்கடல் *ஏழினும் பரந்துபோய் ஆன்று தடப்பெ
ரும்புனல் நீத்தமாய் விசும்பினைத் தடவி இடிப்பெ ருங்குரல் காட்டியே ஏகிய
திமைப்பில். ( * பா-ம் - ஏழினின்.)
| 87 |
| 964
|
கண்ட வானவா¢ துளங்கினர் பூதருங்
கலக்கங் கொண்டு நின்றனர் உணர்ந்திலர் துணைவருங் குலைந்தார் அண்டர்
நாயகற் கிளையவன் நோக்கியே அகிலம் உண்டு லாவரும் அங்கிமாப் பெரும்படை
உய்த்தான்.
| 88 |
| 965
|
புகையெ ழுந்தன வெம்மையும் எழுந்தன
புலிங்கத் தொகையெ ழுந்தன ஞெகிழிகள் எழுந்தன சுடரின் வகையெ ழுந்தன
பேரொலி எழுந்தன வன்னிச் சிகையெ ழுந்தன செறிந்தன வானமுந் திசையும்.
| 89 |
| 966
|
முடிக்க லுற்றதீப் பெரும்படை செறியமூ
தண்டம் வெடிக்க லுற்றன வற்றின கங்கைமீன் தொகுதி துடிக்க லுற்றன
சுருங்கின அளக்கர்தொல் கிரிகள் பொடிக்க லுற்றன தளர்ந்துமெய் பிளந்தனள்
புவியும்.
| 90 |
| 967
|
தீர்த்தன் ஏவலோன் விடுபடை இன்னணஞ்
சென்று மூர்த்த மொன்றினில் வாருணப் படையினை முருக்கி நீர்த்தி
ரைப்பெரு நீத்தமும் உண்டுமேல் நிமிர்ந்து போர்த்த தாமெனச் சுற்றிய
தவுணர்கோன் புறத்தில்.
| 91 |
| 968
|
சுற்று கின்றஅப் படையினைக் கண்டுசூர்
புதல்வன் செற்ற மேற்கொண்டு மாருதப் பெரும்படை செலுத்த மற்ற தூழிவெங்
காலுருக் கொண்டுமன் னுயிர்கள் முற்றும் அண்டமுந் துளங்குறச் சென்றது
முழங்கி.
| 92 |
| 969
|
மாரு தப்படை சென்றுதீப் படையினை மாற்றிச் சார
தப்படை மேலட வருதலுந் தடந்தோள் வீரன் மற்றது கண்டுவெம் பணிப்படை
விடுத்தான் சூரி யத்தனிக் கடவுளுந் தன்னுளந் துளங்க.
| 93 |
| 970
|
ஆயி ரம்பதி னாயிரம் இலக்கமோ டநந்தந் தீய
ப·றலைப் பன்னகத் தொகுதியாய்ச் செறிந்து காயம் எங்கணும் நிமிர்ந்துசெந்
தீவிடங் கான்று பாயி ருஞ்சுடர்க் கதிரையும் மறைத்தது படத்தால்.
| 94 |
| 971
|
வெங்கண் நாகங்கள் உமிழ்கின்ற அங்கியும்
விடமும் மங்குல் வானமுந் திசைகளும் மாநில வரைப்பும் எங்கும் ஈண்டிய
இரவினிற் புவியுளோர் யாண்டும் பொங்கு தீச்சுடர் அளப்பில மாட்டுதல் போல.
| 95 |
| 972
|
உலவை மாப்படை உண்டிடும் அங்கியை ஒருங்கே வலவை
நீர்மையால் தம்முழை வரும்படி வாங்கி அலகில் வெம்பணி விடுத்தென அன்னவை
உமிழ்தீக் குலவு கின்றன புகையெனக் கொடுவிடங் குழும.
| 96 |
| 973
|
இனைய கொள்கையாற் பன்னகப் பெரும்படை ஏகி முனமெ
திர்ந்திடு மாருதப் படையினை முனிந்து துனைய வுண்டுதன் மீமிசைச் சேறலுந்
தொன்னாட் கனலி யைத்தளை பூட்டிய கண்டகன் கண்டான்.
| 97 |
| 974
|
இன்ன தேயிதற் கெதிரென அவுணர்கோன்
எண்ணிப் பொன்னி ருஞ்சிறைக் கலுழன்மாப் படையினைப் போக்க அன்ன தேகலும்
வெருவியே ஆற்றலின் றாகிப் பன்ன கப்படை இரிந்தது கதிர்கண்ட பனிபோல்.
| 98 |
| 975
|
ஆல வெம்பணிப் படைமுரிந் திடுதலும்
ஆர்த்துக் கால வேகத்தின் உவணமாப் பெரும்படை கலுழன் கோலம் எண்ணில
புரிந்துநேர் வந்திடக் குரிசில் மேலை நந்தியந் தேவன்மாப் படையினை
விடுத்தான்.
| 99 |
| 976
|
சீற்ற மாய்அண்ணல் நந்திதன் பெரும்படை
செலுத்த நூற்று நூற்றுநூ றாயிர கோடிநோன் கழற்கால் ஏற்றின் மேனிகொண்
டுலகெலாம் ஒருங்குற ஈண்டி ஆற்ற செய்துயிர்த் தார்த்தது மூதண்டம் அதிர.
| 100 |
| 977
|
களனெ னப்படு நூபுரங் கழலிடை கலிப்ப அளவில்
கிங்கிணித் தாமங்கள் கந்தரத் தார்ப்ப ஔ¤று பேரிமில் அண்டகோ ளகையினை
உரிஞ்ச வளரு நீண்மருப் புலகெலாம் அலைப்பவந் ததுவே.
| 101 |
| 978
|
திரையெ றிந்திடும் அளக்கர்உண் டுலவுசேண்
முகிலின் நிரையெ றிந்தது பரிதிதேர் எறிந்தது நெடிதாந் தரையெ றிநதது
திசைக்கரி எறிந்தது தடம்பொன் வரையெ றிந்தது குலகிரி எறிந்தது மருப்பால்.
| 102 |
| 979
|
நந்தி மாப்படை இன்னணம் ஏகியே நணுகி வந்த
காருடப் படையினை விழுங்கிமாற் றலனைச் சிந்து கின்றனன் என்றுசென்
றிடுதலுந் தெரியா அந்த கன்படை தொடுத்தனன் அவுணர்கட் கரசன்.
| 103 |
| 980
|
தொடுத்த அந்தகப் படையையும் விடைப்படை
துரந்து படுத்து வீட்டிய தன்னதன் மிடலினைப் பாராக் கடித்து மெல்லிதழ்
அதுக்கியே அயன்படைக் கலத்தை எடுத்து வீசினன் இந்திரன் பதிகனற் கீந்தோன்.
| 104 |
| 981
|
வீசுநான்முகப் படைக்கலம் வெகுண்டுவிண்
ணெறிபோய் ஈசன் ஊர்திதன் படையினைக் காண்டலும் இடைந்து நீசன் ஏவலின்
வந்தனன் நின்வர வுணரேன காய்சி னங்கொளேல் எனத்தொழு துடைந்தது கடிதின்.
| 105 |
| 982
|
நூன்மு கத்தினில் விதித்திடு நூற்றிதழ்
இருக்கை நான்மு கப்படை பழுதுபட் டோடலும் நகைத்து வான்மு கத்தவர்
ஆர்த்தனர் அதுகண்டு மைந்தன் சூன்மு கக்கொண்டல் மேனியன் பெரும்படை
தொடுத்தான்.
| 106 |
| 983
|
ஊழி நாளினும் முடிகிலா தவன்மகன் உந்தும் ஆழி
யான்படை ஆண்டுமால் உருவமாய் அமைந்து கேழில் ஐம்படை தாங்கிமா யத்தொடுங்
கெழுமி வாழி நந்திதன் படையெதிர் மலைந்தது மன்னோ.
| 107 |
| 984
|
நார ணன்படை நந்திதன் படைக்கெதிர் நணுகிப் போரி
யற்றியே நிற்புழி அதுகண்டு புனிதன் சூர ரித்திறல் சிந்திடச்
சிம்புளாய்த் தோன்றும் வீர பத்திரப் படையினைத் தொழுதனன் விடுத்தான்.
| 108 |
| 985
|
ஏய தாகிய வீரபத் திரப்படை எழுந்து போய
காலையின் நந்திதன் படையெதிர் பொருத மாய வன்படை தொலைந்தது மதியொடு
திகழ்மீன் ஆயி ரங்கதி ரோன்வரக் கரந்தவா றதுபோல்.
| 109 |
| 986
|
செங்கண் நாயகன் படைதொலைந் திடுதலுந்
தெரிவான் அங்கண் ஆய்வுறா இமைப்பினில் அகிலமும் அழிக்கும் எங்கள்
நாயகன் படையினைத் தூண்டுதற் கெடுத்தான் வெங்கண் ஆயிரங் கதிரினைச்
செயிர்த்திடும் வெய்யோன்.
| 110 |
| 987
|
எஞ்சல் இல்லதோர் எம்பிரான் தொல்படை
எடுத்து மஞ்ச னங்கந்தந் தூபினை மணிவிளக் கமுதம் நெஞ்சி னிற்கடி
துய்த்தனன் பூசனை நிரப்பி விஞ்சும் அன்பினால் வழுத்தியே தொழுதனன்
விடுத்தான்.
| 111 |
| 988
|
தாதை யாயவன் படைக்கலம் விடுத்திடுந்
தன்மை காதன் மாமகன் கண்டனன் தானுமக் கணத்தில் ஆதி நாயகன் படைதனை
எடுத்தனன் அளியால் போத நீடுதன் புந்தியால் அருச்சனை புரிந்தான்.
| 112 |
| 989
|
வழிப டுந்தொழில் முற்றிய பின்னுற மதலை அழித
தன்மகன் விடுத்திடு படைக்குமா றாகி விழுமி தாயிவண் மீளுதி யாலென
வேண்டித் தொழுதி யாவர்க்கும் மேலவன் படையினைத் தொடுத்தான்.
| 113 |
| 990
|
தூயன் விட்டிடு சிவன்படை எழுதலுந்
தொல்லைத் தீயன் விட்டிடு பரன்படை யெதிர்ந்துநேர் சென்ற தாய அப்படை
இரண்டுமா றாகிய வழிக்கு நாய கத்தனி உருத்திர வடிவமாய் நண்ணி.
| 114 |
| 991
|
ஊழிக் காலினை ஒருபுடை உமிழ்ந்தன உலவாச் குழிப்
பாய்புகை ஒருபுடை உமிழ்ந்தன தொலைக்கும் பாழிப் பேரழல் ஒருபுடை உமிழ்ந்தன
பலவாம் ஆழித் தீவிடம் ஒருபுடை உமிழ்ந்தன அவையே.
| 115 |
| 992
|
கூளி மேலவர் தொகையினை அளித்தன கொடிதாங் காளி
மேலவர் தொகையினை அளித்தன கடுங்கண் ஞாளி மேலவர் தொகையினை அளித்தன
நவைதீர் ஆளி மேலவர் தொகையினை அளித்தன அயலில்.
| 116 |
| 993
|
பேயி னங்களை ஒருபுடை உமிழ்ந்தன பிறங்கி மூய
தொல்லிருள் ஒருபுடை உமிழ்ந்தன முழங்கு மாயை தன்கணம் ஒருபுடை உமிழ்ந்தன
மறலித் தீயர் தங்குழு ஒருபுடை உமிழ்ந்தன செறிய.
| 117 |
| 994
|
எண்ட ருங்கடல் அளப்பில கான்றன எரிகால் கொண்ட
லின்தொகை அளப்பில கான்றன கொலைசெய் சண்ட வெம்பணி அளப்பில கான்றன
தபன மண்ட லங்களோர் அளப்பில கான்றன மருங்கில்.
| 118 |
| 995
|
அனந்த கோடியர் புட்கலை இறைவரை அளித்த அனந்த
கோடியர் கரிமுகத் தவர்தமை அளித்த அனந்த கோடியர் அ£¤முகத் தவர்தமை
அளித்த அனந்த கோடியர் சிம்புள்மே னியர்தமை அளித்த.
| 119 |
| 996
|
ஏறு வெம்பரி வயப்புலி வல்லியம் யாளி சீறு
மால்கரி தேரொடு மானமேற் சேர்ந்து மாறில் பல்படை சிந்தியே முனிந்துமேல்
வருவான் வேறு வேறெங்கும் உருத்திர கணங்களை விதித்த.
| 120 |
| 997
|
ஆர ணன்படை அளப்பில தந்தன ஐவர் சார ணன்படை
அளப்பில தந்தன தந்த வார ணன்படை அளப்பில தந்தன வளத்தின் கார ணன்படை
அளப்பில தந்தன கடிதின்.
| 121 |
| 998
|
வாயு வின்படை எண்ணில புரிந்தன மறலி ஆய வன்படை
எண்ணில புரிந்தன அளக்கர் நாய கன்படை எண்ணில புரிந்தன நகைசேர் தீய
வன்படை எண்ணில புரிந்தன செறிய.
| 122 |
| 999
|
கற்பொ ழிந்தன ஞெகிழிகள் பொழிந்தன
கணக்கில் செற்பொ ழிந்தன கணிச்சிகள் பொழிந்தன திகிரி எற்பொ ழிந்த
சூலம்வேல் பொழிந்தன ஈண்டும் விற்பொ ழிந்தன சரமழை பொழிந்தன விரைவில்.
| 123 |
| 1000
|
வேறு இம்முறை உருவ நல்கி எம்பிரான் படையி
ரண்டும் மைம்மலி கடலும் வானும் மாதிர வரைப்பும் பாரும் கொம்மென
விழுங்கி அண்ட கோளகை பிளந்து மேல்போய்த் தம்மின்மா றாகி நின்று
சமர்த்தொழில் புரிந்த அன்றே.
| 124 |
| 1001
|
வற்றிய அளக்கர் ஏழும் வறந்தன வான்றோய்
கங்கை முற்றிய புறத்தில் ஆழி முடிந்ததவ் வண்டத் தப்பால் சுற்றிய
பெருநீர் நீத்தம் தொலைந்தன ஆண்டை வைப்பில் பற்றிய உயிர்கள் யாவும்
பதைபதைத் திறந்த அம்மா.
| 125 |
| 1002
|
எரிந்தன நிலனும் வானும் இடிந்தன முடிந்து
மேருப் பொரிந்தன அடுவின் சூழல் பொடிந்தன இரவி தேர்கள் நெரிந்தன
அண்டம் யாவும் நிமிர்ந்தன புகையின் ஈட்டம் கரிந்தன கிரிகள் ஏழும்
கவிழ்ந்தன திசையில் யானை.
| 126 |
| 1003
|
அலைந்தன சூறை வெங்கால் அவிந்தன வடவைச்
செந்தீக் குலைந்தன பிலங்கள் ஏழும் குலுங்கின அண்டப் பித்தி உலைந்தன
உயிர்கள் யாவும் உடைந்தனர் தெரிந்த வானோர் தொந்தன கமட நாகம் சுருண்டன
புரண்ட மேகம்.
| 127 |
| 1004
|
பூமகள் புவியின் மங்கை பொருமியே துளங்கி
ஏங்கித் தாமரைக் கண்ணன் தன்னைத் தழுவினர் இருவ ரோடு நாமகள் வெருவி
யோடி நான்முகற் புல்லிக் கொண்டாள் காமனை இறுகப் புல்லி இரதியும் கலக்க
முற்றாள்.
| 128 |
| 1005
|
மற்றுள முனிவர் தேவர் மடந்தையர் தம்மைப்
புல்லி நிற்றலும் ஆற்றார் உய்யும் நெறியுமொன் றில்லா ராயும்
உற்றிடும் அச்சந் தன்னால் ஓடினா¢ வனத்தீச் சூழப் பெற்றிடும்
பறழ்வாய் கவ்விப் பெயர்ந்திடும் பிணாக்க ளேபோல்.
| 129 |
| 1006
|
திண்டிடு பூத வீரர் தியங்கினர் இலக்க
ரானோ£¢ மருண்டனர் துணைவர் தாமும் மயங்கினர் வீரற்
சூழ்ந்தார் புரண்டனர் அவுணர் யாரும் பொடிந்தன படாந்த தேர்கள் உருண்டன
களிறு மாவும் ஒருவனே அவுணன் நின்றான்.
| 130 |
| 1007
|
ஆழிசூழ் மகேந்தி ரத்தில் அமர்தரும் அவுணர்
முற்றுஞ் சூழுமித் தீமை நோக்கித் துண்ணென வெருவி மாழ்கி ஏழிரு திறத்த
வான உலகங்க ளியாவும் மாயும் ஊழிநாள் இதுகொ லோவென் றுலைந்தனர் குலைந்த
மெய்யார்.
| 131 |
| 1008
|
பேரொலி பிறந்த தண்டம் பிளந்தன வளைந்த
சூறை ஆரழல் பரவிற் றம்மா ஆதவன் விளிந்தான் நந்தம் ஊருறை சனங்கள்
யாவும் உலைந்தன புகுந்த தென்னோ தேருதி£¢ என்று சூரன் ஒற்றரைத் தெரிய
விட்டான்.
| 132 |
| 1009
|
விட்டிடு கின்ற ஒற்றர் செல்லுமுன் விரைந்து
போரில் பட்டது தெரிந்து தூதர் ஒருசிலர் பனிக்கு நெஞ்சர் நெட்டிரு
விசும்பின் நீந்து நெறியினர் இறைவன்தன்னைக் கிட்டினர் வணங்கி நின்றாங்
கினையன கிளத்த லுற்றார்.
| 133 |
| 1010
|
ஐயகேள் உனது மைந்தன் அலரிதன் பகைஞன்
நென்னல் எய்திய தூத னோடும் இருஞ்சமர் விளைத்துப் பின்னர்த் தெய்வதப்
படைகள் உய்த்துச் செகமெலாம் அழிக்கு மேலோன் வெய்யதோர் படையைத் தூண்ட
அவனுமப் படையை விட்டான்.
| 134 |
| 1011
|
அப்படை இரண்டு மாகி அகிலமும் ஒருங்கே
உண்ணும் ஒப்பில்பல் லுருவம் எய்தி உருகெழு செலவிற் றாகித் துப்புடன்
அண்ட முற்றும் தொலைத்தமர் புரிந்த மாதோ இப்பரி கணர்ந்த தென்றா£¢ இறையவன்
வினவிச் சொல்வான்.
| 135 |
| 1012
|
இரவியை முனிந்தோன் முக்கண் இறையவன் படையை
யாரும் வெருவர விடுத்து மின்னும் வென்றிலன் ஒற்றன் தன்னை நெருநலில்
சிறிய னாக நினைந்தனம் அவனை அந்தோ உருவுகண் டௌ¢ளா தாற்றல் உணர்வதே
யுணர்ச்சி என்றான்.
| 136 |
| 1013
|
வெருவரும் இனைய பான்மை விளைந்திட எம்பி
ரான்தன் பொருவரும் படைகள் தம்மிற் பொருதன ஆடல் உன்னி ஒருவரும்
நிகர்கா ணாத ஊழியின் முதல்வன் தானே இருபெரு வடிவ மாகி இருஞ்சமா¢ புரிந்த
தேபோல்.
| 137 |
| 1014
|
இவ்வகை சிறிது வேலை எந்தைதன் படைக்க
லங்கள் அவ்விரு வோருங் காண ஆடலால அமர தாற்றி வெவ்வுரு வாகத் தம்பால்
மேவர விதித்த எல்லாஞ் செவ்விதின் மீட்டும் வல்லே திரும்பிய திறலோர்
தம்பால்.
| 138 |
| 1015
|
திரும்பிய படைகள் தங்கள் செய்கையால் திரிந்த
அண்டம் பெரும்புவி அகல்வான் நேமி பிலம்வரை பிறவுந் தொல்லை வரம்புறு
மாறு நல்கி மாற்றலர் பக்கம் அல்லா அரும்பெறல் உயிர்கள் முற்றும்
அருள்செய்து போன அன்றே.
| 139 |
| 1016
|
திண்டிறல் மொய்ம்பன் விட்ட சிவன்படை மீட
லோடும் அண்டலன் விடுத்த தொல்லைப் படையுமாங் கவனை நண்ணக் கண்டனர்
அமரர் ஆர்த்தார் கைதவன் இதினும் வெற்றி கொண்டிலன் முடிவன் இன்னே
குறைந்ததெம் மிடரும் என்றார்.
| 140 |
| 1017
|
பாங்கரின் இபங்கள் காணான் பாய்பரித் தொகுதி
காணான் தாங்கெழில் தேர்கள் காணான் தானவப் படையுங் காணான் ஆங்கவை
முடியத் தானே ஆயின தன்மை கண்டான் ஏங்கினன் அவுணன் மைந்தன் இரங்கிமற்
றினைய சொல்வான்.
| 141 |
| 1018
|
மூண்டொரு கணத்தின் எல்லாம் முடிப்பவன் படையும்
நேர்போய் மீண்டுள தென்னின் அம்மா விடுத்திட மேலொன் றுண்டோ மாண்டன
அனிக முற்றும் வறியனாய்த் தமியன் நின்றேன் ஈண்டினிச் செய்வ தென்னென்
றெண்ணியோர் சூழ்ச்சி கொண்டான்.
| 142 |
| 1019
|
மாயத்தான் எய்தும் நிற்கின் மலைவதுஞ் செயலன்
றென்னா மாயத்தான் அருவங் கொண்டு வல்விரைந் தெழுந்து சென்று காயத்தான்
ஆகி நிற்பக் கைதவன் வெருவித் தோன்றாக் காயத்தான் உடைந்தான் என்றே
ஆர்த்தன கணங்க ளெல்லாம்.
| 143 |
| 1020
|
விடலைவிண் ணெழுந்த காலை மேவலர் தொகையை
எல்லாம் முடிவுசெய் கென்று வஞ்ச முரட்படை அவுணன் தூண்டின் அடுமது
நமையும் என்னா அதற்குமுன் அளக்கர் ஆற்றைக் கடிதினிற் கடந்தான் போலக்
கதிரவன் கரந்து போனான்.
| 144 |
| 1021
|
மைப்புயல் மேனித் தீயோன் மறைந்தது வள்ளல்
காணா இப்பகல் தானுங் கள்வன் இறந்திலன் இரிந்து வல்லே தப்பினன்
இனியான் செய்யத் தகுவதென் னுரைத்தி ரென்ன ஒப்பருந் துணைவர் கேளா
ஒருங்குடன் தொழுது கொல்வா£¢.
| 145 |
| 1022
|
வந்தெதிர் அவுணர் தானை மாண்டன தமியன்
நின்றான் சிந்தினன் கரந்து போனான் இனிவருந் திறலோர் இல்லை அந்தியும்
அணுகிற் றம்மா அனிகமு மியாமும் மீண்டு கந்தனை இறைஞ்சிக் காலை வருவதே
கடமைத் தென்றார்.
| 146 |
| 1023
|
வேறு இனிய தன்றுணைவர் இன்னன கூற வினவி
னோன்முருக வேள்அடி காணும் நினைவு கொண்டிடலும் விண்ணிடை நின்ற தினகரன்
பகைஞன் இன்ன தெரிந்தான்.
| 147 |
| 1024
|
முன்னை வைகலின் முரிந்தனன் என்றே பன்னு
மோர்வசை பரந்ததும் அன்றிப் பின்னும் இப்பகல் பிழைத்தனன்
என்றால் என்னை யாவர்களும் எள்ளுவர் மாதோ.
| 148 |
| 1025
|
தொக்க போரில்வெரு வித்தொலை வோரை தக்கதோர்
துணைவர் தந்தையர் தாயர் மக்கள் பெண்டிரும் மறப்பர்கள்
என்னின் மிக்குளார் இகழ்தல் வேண்டுவ தன்றே.
| 149 |
| 1026
|
இன்று நென்னலின் இரிந்துளன் என்றால் வென்றி
மன்எனை வெகுண்டு துறக்குந் துன்று பல்கதி ரினைச்சுளி
தொல்சீர் பொன்றும் எந்தைபுக ழுந்தொலை வாமால்.
| 150 |
| 1027
|
யாதொர் துன்னலர் எதிர்ந்திடின் இன்று காதலே
வலிக டந்திடு சூழ்ச்சி நீதி அன்றதுவும் நேர்ந்தில தென்னில் சாதலே
தகுதி சாயந்திடல் நன்றோ.
| 151 |
| 1028
|
வருந்தி நின்றெதிர் மலைந்தனன் இன்றும் இரிந்து
ளான்இவன் எனும்பழி கோடல் பொருந்தல் அன்றுபுணர் வென்னினும்
ஆற்றி விரைந்து மாற்றலரை வென்றிடல் வேண்டும்.
| 152 |
| 1029
|
முன்னம் நின்றொரு முரட்படை தன்னை இன்னல்
எய்தும்வகை ஏவுதும் என்னின் அன்ன தற்கெதிர் அடும்படை தூண்டிச் சின்ன
மாகவது சிந்துவன் வீரன்.
| 153 |
| 1030
|
இறந்த னன்பொரு திரிந்தன னென்னாப் பறந்த
லைச்செறுநர் பன்னுற இன்னே மறைந்து நின்றொரு வயப்படை தூண்டிச் சிறந்த
வென்றிகொடு சென்றிடல் வேண்டும்.
| 154 |
| 1031
|
தெய்வ தப்படை செலுத்துவன் என்னின் அவ்வ
னைத்தும்அம ராற்றலர் தம்பாற் செவ்வி துற்றுயிர் செகுத்திட
லின்றே வெவ்வு ருக்கள்கொடு மீளுவ தல்லால்.
| 155 |
| 1032
|
பண்ண வப்படை படைத்திடு கோலம் எண்ண லன்தெரியின்
ஏற்றன தூண்டித் துண்ணெ னத்தொலைவு சூழ்ந்திடும் யானும் விண்ண கத்துறல்
வௌ¤ப்படு மாதோ.
| 156 |
| 1033
|
வௌ¤ப்படிற் செறுநர் விண்ணினும்
வந்தே வளைத்திகற் புரிவர் மாறமர் செய்தே இளைத்தனன் பொரவும் இன்னினி
*ஒல்லா தொளித்து முற்பகலின் ஓடரி தாமால். ( * பா-ம் - ஏலா.)
| 157 |
| 1034
|
ஏயெனச் செறுநர் ஈண்டுழி நண்ணி ஆய தொல்லுணர்
வனைத்தையும் வீட்டி வீயும் ஈற்றினை விளைத்திடு கின்ற மாய மாப்படை
விடுத்திடல் மாட்சி.
| 158 |
| 1035
|
என்று சிந்தைதனில் இன்னன உன்னி அன்று மாயவள்
அளித்திடு கின்ற வன்றிறற் படையை வல்லை எடுத்தே புன்றொழிற் குரிசில்
பூசனை செய்தான்.
| 159 |
| 1036
|
நெறிகொள் முப்புலனில் நெஞ்சினில்
யாரும் அறிவரும் பரிசின் அண்டலர் தம்பாற் குறுகிமெய் யுணர்வு
கொண்டுயிர் மாற்றி எறிபுனற் கடலுள் என்று விடுத்தான்.
| 160 |
| 1037
|
விடுதலுங் கொடிய வெம்படை தானவந்¢ தடையும்
வண்ணமறி தற்கரி தாகிக் கடிது பாரிடை கலந்து கணத்தின் படையை எய்தியது
பாவம தென்ன.
| 161 |
| 1038
|
இருங்க ணத்தரை யிலக்கரை ஔ¢வாள் மருங்கு
சேர்த்திய வயத்துணை வோரை நெருங்கு தார்ப்புய நெடுந்திற லோனை ஒருங்கு
சூழ்ந்துணர் வொழித்தது மன்னோ.
| 162 |
| 1039
|
ஆன்ற பொன்நகரில் அண்டர்கள் அஞ்ச ஊன்றும்
வில்லிடை உறங்கிய மால்போல் தோன்று மாயைபடை தொல்லறி வுண்ண மான்றி
யாவரும் மறிந்து கிடந்தா£¢.
| 163 |
| 1040
|
மறிந்து ளார்தமது மன்னுயிர் வவ்விச் சிறந்த
தன்வலி செயற்கரி தாக அறிந்து மாயைபடை ஆகுல மூழ்கி எறிந்து நேமியிட
எண்ணிய தன்றே.
| 164 |
| 1041
|
ஓல மிட்டுலக முட்கிட ஊழிக் காலின் வெவ்வுருவு
கைக்கொடு மாயக் கோல வெம்படை கொடுந்தொழில் கொண்ட ஆல காலமென ஆன்றுள
தன்றே.
| 165 |
| 1042
|
வேறு வௌ¢ளமா யிரம தென்னும் வியனுரை படைத்த
பூத மள்ளரைத் தலைவர் தம்மை வயங்கெழு துணையி னோரை நள்ளலர்க் கடந்த
துப்பின் நம்பியை உம்பர் ஆற்றால் பொள்ளென எடுத்து படைக்கலம் போயிற்
றம்மா.
| 166 |
| 1043
|
போயது சூரன் மைந்தன் புந்தியிற் கதிமேற்
கொண்டு மாயிரு நேமி ஆறும் வல்லையில் தப்பி அப்பால் தூயதெண் புனலாய்
ஆன்ற தொல்கடல் அழுவம் நண்ணி ஆயவர் தொகையை இட்டே அகன்றிடா தோம்பிற்
றன்றே.
| 167 |
| 1044
|
நின்றிடு சூரன் மைந்தன் நிலைமைமற் றிதனை
நோக்கிப் பொன்றினன் வீர வாகு பூதரும் பிறரும் வீந்தார் குன்றம
தன்றால் மீளக் குரைபுனல் வேலை ஆழ்ந்தார் நன்றுநஞ் சூழ்ச்சி என்னா நகைஎயி
றிலங்க நக்கான்.
| 168 |
| 1045
|
அண்டருங் களிப்பின் மேலோன் அவ்விடை அகன்று வல்லை
விண்டொடர் நெறியிற் சென்று வியன்மகேந் திரத்தின் எய்தி எண்டிசை
உலகம் போற்ற இறைபுரி தாதை தன்னைக் கண்டனன் இறைஞ்சி நின்றாங் கினையன கழற
லுற்றான்.
| 169 |
| 1046
|
இன்றியான் சென்று பல்வே றிருஞ்சமா¢ இயற்றிப்
பின்னர் வன்றொழில் புரிந்தவீர வாகுவை அவன்பா லோரை அன்றியும் பூத
வௌ¢ளை மாயிரந் தன்னை யெல்லாம் வென்றுயிர் குடித்தி யாக்கை வியன்புனற்
கடலுள் உய்த்தேன்.
| 170 |
| 1047
|
சிறிதுநீ கவலை கொள்ளேல் சேனையும் யானும
ஏகி மறிகட லெறியுங் கால்போல் வளைந்துபா சறையைச் சிந்தி அறுமுகன்
தனையும் வென்றே அரியய னோடும் விண்ணோர் இறைவனைப் பற்றி நாளை ஈண்டுதந்
திடுவன் என்றான்.
| 171 |
| 1048
|
வேறு என்னும் வேலையில் எழுந்தன உவகையாப்
புடைய பொன்னின் அங்கத மூட்டற நிமிர்ந்தன புயங்கள் மின்னு மாமணிக்
கடகங்கள் நெரிந்து வீழ்கின்ற துன்னு மாமயிர் பொடித்தன முறுவல்
தோன்றியதே.
| 172 |
| 1049
|
எழுந்து நின்றிடும் இரவிதன் பகைஞனை
இமைப்பில் அழுந்த மார்புறத் தழீஇக்கொடு மடங்லே றாற்றுஞ் செழுந்த
னிப்பெருந் தவிசிடை ஏற்றி அச்சேயைக் குழந்தை நாளெனத் தன்னயல் இருத்தினன்
கொண்டான்.
| 173 |
| 1050
|
தந்தை யாயினோர் இனிதுவீற் றிருப்பதும்
தமது மைந்தர் தங்குடி பரித்தபின் அன்றிமற் றுண்டோ எந்தை வந்துநந்
தொன்முறை போற்றலால் யானுஞ் சிந்தை தன்னிலோர் எண்ணமும் இன்றியே
சிறந்தேன்.
| 174 |
| 1051
|
அன்று நோற்றதும் பறபகல் உண்டரோ
அதற்காக் கொன்றை வேணியன் கொடுத்தனன் என்பது கொள்ளாச் சென்ற
வார்த்தைகள் நிற்கஇவ் வரசும்இத் திருவும் இன்று நீதரப் பெற்றனன் ஐயயான்
என்றான்.
| 175 |
| 1052
|
என்று பற்பல நயமொழி கூறிமுன் னிட்ட வென்றி
சேர்அணி மாற்றியே புதுவதா விளித்துத் துன்று பொன்முடி ஆதியா வார்கழற்
றுணையும் நன்று தான்புனைந் தொருமொழி பின்னரும் நவில்வான்.
| 176 |
| 1053
|
முன்னம் நீசொற்ற தன்மையே மூவிரு
முகத்தோன் தன்னை வென்றுவெஞ் சாரதப் படையினைத் தடிந்து பின்னர்
நின்றிடும் அமரரைச் சிறையிடைப் பிணித்தே என்னு டைப்பகை முடிக்குதி
காலையே என்றான்.
| 177 |
| 1054
|
என்ன அன்னது செய்குவன் அத்தஎன் றிசைப்ப மன்னர்
மன்னவன் சமரிடை நொந்தனை மைந்த பொன்னு லாயநின் திருமனைக் கேகெனப்
புகலப் பன்னெ டுங்கதிர் மாற்றலன் விடைகொண்டு படர்ந்தான்.
| 178 |
| 1055
|
சூழி யானைதேர் வருபரி அவுணர்கள் சுற்ற நாழி
யொன்றின்முன் சென்றுதன் கோநகர் நண்ணி வாழ்வின் வைகினன் இதுநிற்க
வன்புனற் கடலுள் ஆழும் வீரர்கள் தேறியே எழுந்தவா றறைவாம்.
| 179 |
| 1056
|
வடபெ ருங்கிரி சூழபவன் தொல்பகை மாயப் படைவி
டுத்ததும் பூதரும் துணைவர்கள் பலரும் தொடையல் வாகுடை வீரனும் மயக்குறத்
தூநீர்க் கடலுள் இட்டதும் ஆங்ஙனஞ் சுரரெலாம் கண்டார்.
| 180 |
| 1057
|
அண்டர் அங்கது நோக்கியே வெய்துயி£¢த்
தரந்தை கொண்டு ளம்பதைத் தாவலித் தரற்றிமெய் குலைந்து கண்டு ளித்திடக்
கலுழ்ந்துநா வுலர்ந்துகைம் மறித்து விண்டி டும்படி முகம்புடைத் தலமந்து
வியர்ந்தார்.
| 181 |
| 1058
|
இன்னல் இத்திற மாகியே அமரர்கள் இரிந்து சென்னி
யாறுடைப் பண்ணவற் குரைத்திடச் சென்றார் அன்ன தாகிய பரிசெலாம் நாடியே
அவர்க்கு முன்னம் ஓடினன் முறைதெரி நாரத முனிவன்.
| 182 |
| 1059
|
அம்பெ னும்படி கால்விசை கொண்டுபோய்
அறிவன் இம்ப ராகிய பாசறைக் கண்ணுறும் எந்தை செம்ப தங்களை வணங்கிநின்
றஞ்சலி செய்தே உம்பர் கோமகன் தன்மனம் துளங்குற உரைப்பான்.
| 183 |
| 1060
|
சூரன் மாமகன் கரந்துமா யப்படை துரந்து வீர
வாகுவும் துணைவரும் வெங்கணத் தவரும் ஆரும் மால்கொள வீட்டியே அன்னதால்
அவரை வாரி நீர்க்கடல் உய்த்தனன் சூழச்சியின் வலியால்.
| 184 |
| 1061
|
என்று நாதர முனிவரன் புகறலும் இமையோர் சென்று
சென்றுவேள் பதங்களை இறைஞ்சியே திருமுன் நின்று வீரர்கள் அழிந்திடு
செயல்முறை நிகழ்த்த வென்றி வேலினை நோக்கியே எம்பிரான் விளம்பும்.
| 185 |
| 1062
|
கங்கை அன்னதோர் வாலிதா கியபுனற்
கடற்போய் அங்கண் வைகிய மாயமாப் படையினை அழித்து வெங்கண் வீரர்மால்
அகற்றியே அனையவர் விரைவில் இங்கு வந்திடத் தந்துநீ செல்கென இசைத்தான்.
| 186 |
| 1063
|
செய்ய வேலினுக் கின்னதோர் பரிசினைச்
செப்பி ஐயன் அவ்விடை விடுத்தலும் நன்றென அகன்று வெய்ய தீங்கதிர் ஆயிர
கோடியின் விரிந்து வைய மேலிருள் முழுதுண்டு வல்விரைந் ததுவே.
| 187 |
| 1064
|
அரவு மிழ்ந்தது கொடுவிடம் உமிழ்ந்ததால்
அடுகூற் றுருவு மிழ்ந்தது செல்லினம் உமிழ்ந்ததெவ் வுலகும் வெருவு
பல்படைக் கலங்களும் உமிழ்ந்தது மிகவும் கருநெ டும்புகை உமிழ்ந்ததங்
குமிழ்ந்தது கனலே.
| 188 |
| 1065
|
மின்னல் பட்டன முகிலிருள் பட்டன
விசும்பில் துன்னல் பட்டன காரிருள் பட்டன துன்னார் இன்னல் பட்டிடு
மெய்யிருள் பட்டன வெரிமுன் பன்னல் பட்டன நேமிசூழ் தனியிருட படலம்.
| 189 |
| 1066
|
எரிக டுங்கிய தனிலமும் நடுங்கிய தெண்பாற் கரிந
டுங்கிய அளக்கரு நடுங்கிய கனக கிரிந டுங்கிய தரவினம் நடுங்கிய
கிளர்தேர் அரிந டுங்கிய திந்துவும் நடுங்கிய தம்மா.
| 190 |
| 1067
|
அங்கி தன்படை கூற்றுவன் தன்படை அனிலன் துங்க
வெம்படை அளக்கர்கோன் தன்படை சோமன் செங்கை வெம்படை மகபதி பெரும்படை
திருமால் பங்க யன்படை யாவையும் பொழுதுடன் படர.
| 191 |
| 1068
|
அடிகள் விட்டிடும் வேற்படை எனப்படும்
அலரி கடிது சேறலும் வானவர் வதனமாங் கமலம் நெடிது மாமகிழ் வெயதியே
மலர்ந்தன நெறிதீர் கொடிய தானவா¢ முகமெனுங் கருவிளங் குவிய.
| 192 |
| 1069
|
இரிந்த தானவர் நாளையாம இறத்துமென்
றிருக்கை பொருந்தி மாதரை முயங்கினர் கங்குலும் புலர விரைந்து ஞாயிறு
வந்ததென் றேங்கமின் னாரைப் பிரிந்த வானவர் யாவருஞ் சிறந்தனர் பெரிதும்.
| 193 |
| 1070
|
இத்தி றத்தினால் அயிற்படை முப்புரத்
திறைவன் உய்த்த தீநகை போலவே வல்விரைந் தோடி முத்தி றத்திரு நேமியும
பிற்பட முந்திச் சுத்த நீர்க்கடல் புகுந்தது விண்ணுளோர் துதிப்ப.
| 194 |
| 1071
|
செய்ய வேற்படை ஆயிடை புகுதலுந் தெரிந்து வெய்ய
மாயவள் படைக்கலம் ஆற்றவும் வெருவி மையல் வீரரை நீங்கியே தொலைந்துபோய்
மறிந்து மொய்யி ழந்தது தன்செயல் இழந்தது முடிந்ததே.
| 195 |
| 1072
|
ஆய காலையில் எந்தைதன் படைக்கெதிர் அடைந்து தூய
தெண்கடல் இறையவன் வெருவியே தொழுது நேய நீர்மையான் மும்முறை வணங்கிமுன்
நின்று காய முற்றவும் வியா¢ப்பெழ ஒருமொழி கழறும்.
| 196 |
| 1073
|
வேறு அமைந்த மில்வரம் அடைந்திடு
சூரன் மைந்தன் மாயவள் வயப்படை தூண்டி நந்தம் வீரர்கண நாதரை
யெல்லாம் புந்தி மேன்மயல் புணர்த்தினன் அம்மா.
| 197 |
| 1074
|
முன்னு ணர்ச்சிமுடி வோர்தமை மற்றென் றன்னி
டத்திலிடு தன்மை புரிந்தான் அன்ன தத்துணையில் அப்பணி ஆற்றி என்னி
டத்தினில் இருந்துள தன்றே.
| 198 |
| 1075
|
இருந்த மாயைபடை எம்பெரு மான்நீ மருந்து
போல்இவண் வழிப்படல் காணூஉ அரந்தை எய்திஅடல் வீரரை நீங்கி முரிந்து
வீழ்ந்திவண் முடிந்தது மன்னோ.
| 199 |