|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்
Holy Bible - Old Testament
Book 14. Chronicle - II
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல்
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
1. தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை உறுதியாக நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து அவரை மேன்மை மிக்கவர் ஆக்கினார்.
2. சாலமோன், இஸ்ரயேலர் அனைவரையும்-ஆயிரத்தவர், மற்றுவர் தலைவர்கள், நீதிபதிகள், இஸ்ரயேலரின் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் அனைவரையும்- வரவழைத்துப் பேசினார்.
3. அங்கே இருந்த சபையார் அனைவரும் சாலமோனுடன், கிபயோனிலிருந்த தொழுகை மேட்டுக்குச் சென்றனர். ஏனெனில் ஆண்டவரின் அடியார் மோசே பாலை நிலத்தில் செய்த கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கே இருந்தது.
4. ஆனால் இதற்குமுன் தாவீது கடவுளின் பேழையை கிரியத்து எயாரிமிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அங்கே ஏற்கெனவே தாம் அதற்கென அமைத்திருந்த கூடாரத்தில் வைத்திருந்தார்.
5. இருப்பினும் கூரின் பேரரும் ஊரியின் மகனுமான பெட்சலேல் செய்த வெண்கலப் பலிபீடம் கிபயோனில் ஆண்டவரின் திருஉறைவிடத்திற்குமுன் இருந்தது. சாலமோனும் சபையாரும் அங்கே வழிபாடு நடத்தச் சென்றனர்.
6. சாலமோன் சந்திப்புக்கூடாரத்திற்கு முன்பாக ஆண்டவர் திருமுன் அமைந்திருந்த வெண்கலப் பலிபீடத்திற்கு ஏறிச்சென்று, அதன்மேல் ஆயிரம் எரி பலிகள் செலுத்தினார்.
7. அன்றிரவு கடவுள் சாலமோனுக்குத் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும்: கேள் என்று கூறினார்.
8. அதற்குச் சாலமோன் கடவுளை நோக்கி, என் தந்தை தாவீதுக்கு மாபேரன்பு காட்டினீர்: அவருக்குப் பின் நீர் என்னை அரியணையில் அமர்த்தியிருக்கிறீர்.
9. கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் அளித்த வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்: ஏனெனில், நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு நீர் என்னை அரசனாக்கினீர்:
10. எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்: ஏனெனில் கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்? என்றார்.
11. கடவுள், சாலமோனை நோக்கி, செல்வத்தையோ, சொத்தையோ, புகழையோ, உன்னை வெறுப்பவர்களின் உயிரையோ, நீடிய ஆயுளையோ, நீ கேட்கவில்லை. மாறாக, அரசாளும்படி உன்னிடம் நான் ஒப்படைத்த மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையும் நீ உள்ளார்ந்த விருப்பத்தோடு கேட்டிருக்கிறாய்.
12. எனவே, நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறேன். அத்துடன் உனக்கு முன் இருந்த அரசர்களோ உனக்குப் பின் வரும் அரசர்களோ பெறாத அளவுக்கு செல்வத்தையும், சொத்தையும், புகழையும் நான் உனக்குத் தருவேன் என்றார்.
13. பிறகு சாலமோன் கிபயோனிலிருந்த தொழுகை மேட்டிலிருந்தும் சந்திப்புக் கூடாரத்திலிருந்தும் புறப்பட்டு எருசலேமுக்கு திரும்பி வந்து, தொடர்ந்து இஸ்ரயேலை ஆட்சி செய்தார்.
14. சாலமோன் தேர்ப் படையையும் குதிரைப் படையையும் அமைத்தார். அவருக்கு ஆயிரத்து நாடீறு தேர்கள் இருந்தன: பன்னீராயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். அவர்களைத் தேர்ப்படை நகர்களிலும், அரசராகிய தம்மோடு எருசலேமிலும் நிறுத்தி வைத்தார்.
15. வெள்ளியும் பொன்னும் கற்களைப்போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிப் பகுதிகளில் வளரும் அத்தி மரங்களைப் போன்றும் எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கும்படி அரசர் செய்தார்.
16. சாலமோனின் குதிரைகள் எகிப்திலிருந்தும் கோவேயிலிருந்தும் வந்தவை. அரச வணிகர்கள் சிலிசியாவிலிருந்து குறிப்பிட்ட விலைக்கு வாங்கி வந்தனர்.
17. அவர்கள் தேர் ஒன்றிற்கு அறுமறு செக்கேல் எனவும் எகிப்திலிருந்து விலைக்கு வாங்கினர். அவை அவர்கள் வழியாகவே இத்திய மன்னர், சிரிய மன்னர் அனைவரையும் சென்றடைந்தன.அதிகாரம் 2.
1. சாலமோன் ஆண்டவரின் திருப்பெயருக்கென ஒரு கோவிலையும் தமக்கென ஓர் அரச மாளிகையையும் கட்டியெழுப்ப முடிவு செய்தார்.
2. சுமைசுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலைகளில் கருங்கற்களை வெட்டுவதற்கு எண்பதினாயிரம் பேரையும், அவர்களைக் கண்காணிக்க மூவாயிரத்து அறுமறு பேரையும் நியமித்தார்.
3. தீரின் மன்னன் ஈராமிடம் சாலமோன் பதனுப்பிக் கூறியது: என் தந்தை தாவீது வாழும்படி ஒரு மாளிகை கட்ட நீர் அவருக்குக் கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே! அவருக்குச் செய்ததுபோலவே எனக்கும் செய்தருளும்.
4. நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் பபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.
5. எம் கடவுள் எல்லாத் தெய்வங்களையும் விட மிகப் பெரியவர்! எனவே, நான் கட்டப்போகிற கோவிலும் மிகப் பெரியதாயிருக்கும்.
6. விண்ணும் விண்ணுலகும் அவரைக் கொள்ள இயலாதிருக்க, அவருக்கேற்ற ஒரு கோவில் கட்ட யாரால் முடியும்? அவரது திருமுன் பபம் காட்டவதற்கேயன்றி அவருக்கென ஒரு கோவில் எழுப்ப நான் யார்?
7. ஆகவே, ஒரு திறமைமிக்க கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதா, கருஞ்சிவப்பு, நீலமல் வேலைப்பாட்டிலும், சிற்பம் செதுக்குவதிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்க்பட்டவர்களும், என்னோடு யூதா, எருசலேமில் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்ய வேண்டும்.
8. மேலும், லெபனோலிருந்து கேதுரு மரங்கள், தேவதாரு மரங்கள், வாசனை மரங்கள் ஆகியவற்றை நீர் எனக்கு அனுப்பிவையும். ஏனெனில், உம் பணியாளர் லெபனோனின் மரங்களை வெட்டுவதிலும் திறமைமிக்கவர் என நான் அறிவேன். என் பணியாளரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பர்.
9. அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த கோவில் ஒன்றை நான் கட்டவிருக்கிறேன்.
10. மரங்களை வெட்டும் உம் பணியாளருக்கு நான் இருபதினாயிரம் மரக்கால் பதப்படுத்தப்பட்ட கோதுமையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், இருபதினாயிரம் குடம் திராட்சை இரசமும், இருபதினாயிரம் குடம் எண்ணெயும் கொடுப்பேன்.
11. அதற்கு தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். அதனால், உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.
12. விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவரே ஆண்டவராகிய தமக்கு ஒர் இல்லத்தையும் அரசராகிய உமக்கு ஓர் அரண்மனையையும் கட்டுவதற்கு விவேகமும் அறிவாற்றலுமுடைய ஞானியாம் உம்மைத் தாவீது அரசருக்கு மகனாகத் தந்தருளினார்!
13. எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பிகிறேன்.
14. அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்: அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கருங்கல், மரம் ஆகியவற்றிலும், ஊதா நீலம் கருஞ்சிவப்பு மல், மெல்லிய சணல் வகைகளிலும் வேலை செய்யும் திறன்மிக்கவன். எல்லாவித சித்திர சிற்ப வேலைகளையும் அறிந்தவன்: அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன்: உம் கலைஞரோடும், உம் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.
15. எனவே, என் தலைவரே, நீர் வாக்களித்தபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உம் பணியாளர்களுக்கு அனுப்பும்.
16. நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோவில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யாப்பாவரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்.
17. பிறகு சாலமோன் தம் தந்தை தாவீதைப்போன்று இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அன்னியரைக் கணக்கிட்டார். அவர்கள் எண்ணிக்கை ஓர் இலட்சத்து ஜம்பத்து மூவாயிரத்து அறுமறு.
18. அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல் வெட்டவும், மூவாயிரத்து அறுமறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.அதிகாரம் 3.
1. பின்பு சாலமோன் எருசலேமில் அவர் தந்தை தாவீதுக்கு ஆண்டவர் தோன்றிய மோரியா மலைமேல் எபூசியராகிய ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஒர் இல்லம் எழுப்பத் தொடங்கினார். இந்த இடத்தைத் தாவீது ஏற்கெனவே தயார் செய்திருந்தார்.
2. தம் ஆட்சியின் நான்காம் ஆண்டு, இரண்டாம் மாதம், இரண்டாம் நாள் சாலமோன் வேலை தொடங்கினார்.
3. கடவுளின் இல்லத்தைக் கட்டுமாறு சாலமோன் இட்ட அடித்தளம், அக்கால அளவின்படி, அறுபது முழ நீளமும் இருபது முழ அகலமும் கொண்டதாயிருந்தது.
4. முகப்பில் இருந்த மண்டபம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழ நீளமும், மற்றிருபது முழ உயரமும் கொண்டதாய் இருந்தது. சாலமோன் அதன் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினார்.
5. கோவிலின் மையப் பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும் பொன்னால் பொதிந்தார். அதன் மேல், போ£ச்சை மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன.
6. கோவில் தளத்தை விலை உயர்ந்த கற்களால் அழகுபடுத்தினார்: பர்வாயிமினின்று கொண்டு வரப்பெற்ற பொன்னே பயன்படுத்தப்பட்டது.
7. கோவிலின் உத்திரங்கள், நிலைகள், சுவர்கள், கதவுகள் ஆகியவற்றைப் பொன் தகடுகளால் மூடினார்: சுவர்களில் கெருபுகளைப் பதித்தார்.
8. பிறகு கோவிலின் திருத்பயகத்தைக் கட்டினார். அதன் நீளம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழம்: அதன் அகலமும் இருபது முழம். அதை ஏறக்குறைய இருபத்திநான்கு டன் நிறையுள்ள பொன் தகடுகளால் மூடினார்.
9. ஆணிகள் அறுமற்று எழுபது கிராம் நிறையுள்ள பொன்னால் ஆனவை. மேல் அறைகளையும் அவர் பொன்னால் மூடினார்.
10. திருத்பயகத்தில் இரு கெருபுகளின் உருவங்களைச் செய்துவைத்துப் பொன் தகட்டால் மூடினார்.
11. அவற்றின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஜந்து முழம். அது கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஜந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.
12. அவ்வாறே இரண்டாவது கெருபின் அளவும்: அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஜந்து முழம். அவ்விறக்கை கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையும் ஜந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.
13. இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்த கெருபுகளுடைய இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை கோவிலின் மையப் பகுதியை நோக்கியவண்ணமாய் இருந்தன.
14. சாலமோன், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய மல்களினால் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபுகளின் உருவங்கள் பின்னப்பெற்றிருந்தன.
15. கோவிலுக்கு முன்பாக முப்பதைந்து முழம் உயரமான இரண்டு பண்களைச் செய்தார். அவற்றின் உச்சியில் இருந்த போதிகைகளின் உயரம் ஜந்து முழம்.
16. கழுத்தணி போன்ற சங்கிலிகளைச் செய்து, பண்களின் போதிகைகளின்மேல் பொருத்தி வைத்தார். மேலும் வெண்கலத்தால் மறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சங்கிலிகளில் தொங்க விட்டார்.
17. அந்தத் பண்களைக் கோவில் முன்பாக வலப்பக்கத்திலும் இடப்பக்கதிலுமாக நாட்டினார். வலப்பக்கத் பணுக்கு யாக்கீன் என்றும், இடப்பக்கத் பணுக்குப் போவாசு என்றும் பெயரிட்டார்.அதிகாரம் 4.
1. சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்: அகலம் இருபது முழம்: உயரம் பத்து முழம்.
2. மேலும் கடல் என்னும் வட்டவடிவமான வெண்கலத் தொட்டியை அவர் வார்ப்பித்தார். அதன் விட்டம் பத்து முழம்: உயரம் ஜந்து முழம்: சுற்றளவு முப்பது முழம்.
3. அதன் அடியில் சுற்றிலும் காளை வடிவங்கள் இருந்தன. பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருந்தன. அவை தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.
4. அத்தொட்டி பன்னிரு காளைகளின்மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. காளைகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது.
5. தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப்போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.
6. கழுவுவதற்குப் பத்துக் கொப்பரைகளைச்செய்து, ஜந்தை வலப்பக்கத்திலும், ஜந்தை இடப்பக்கத்திலும் அவர் வைத்தார். எரிபலிக்கான அனைத்தும் அவற்றின் கழுவப்பட்டன. குருக்கள் தங்களைத் பய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் “கடல்“ பயன்படுத்தப்பட்டது.
7. மேலும் அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஜந்தை வலப்புறமும் ஜந்தை இடப்புறமுமாகத் பயகத்தில் வைத்தார்:
8. பத்து மேசைகளைச் செய்து ஜந்தை வலப்புறமும், ஜந்தை இடப்புறமுமாகத் பயகத்தில் வைத்தார்: மறு பொற்கிண்ணங்களையும் செய்தார்:
9. குருக்களின் முற்றத்தையும், பெரிய முற்றத்தையும் அமைத்தார்: முற்றத்தின் வாயில்களை அமைத்து, அவற்றின் கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினார்:
10. கடலை வலப்பக்கம் தென்கிழக்கே நிறுவினார்.
11. ஈராம், பாத்திரங்களையும் சாம்பல் அள்ளுகருவிகளையும் கிண்ணங்களையும் செய்தார். இவ்வாறு அரசர் சாலமோன் கட்டளையிட்டபடி கடவுளின் இல்லத்திற்கான வேலைகளை அவர் செய்து முடித்தார்.
12. அவையாவன: இரு பண்கள், இரு பண்களின் உச்சியில் கிண்ண வடிவம் கொண்ட இரு போதிகைகள், பண்களின் உச்சியிலுள்ள அப்போதிகைகளை மூட இரு வலைப்பின்னல்கள்,
13. அவ்விரு வலைப்பின்னல்களுக்கான நாடீறு மாதுளை வடிவங்கள். அவை ஒவ்வொன்றிலும் மாதுளை வடிவங்கள் இரு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. வலைப்பின்னல்கள் பண்களின் கிண்ண வடிவம் கொண்ட போதிகைகளை மூடியிருந்தன.
14. மேலும் அவன் செய்தவை: கொப்பரைகள், அவற்றுக்கான தள்ளுவண்டிகள்,
15. ஒரு “கடல்“ அதன்கீழ் பன்னிரு காளைகள்,
16. பாத்திரங்கள், அள்ளுகருவிகள், முட்கரண்டிகள், மற்றும் துணைக்கலன்கள், ஈராம்அபி ஆண்டவரின் இல்லத்துக்கு வேண்டிய பாத்திரங்களைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான்.
17. அரசர் சுக்கோத்துக்கும் செரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தான் சமவெளிக் களிமண் பகுதியில் அவற்றை வார்ப்பித்தார்.
18. சாலமோன் செய்த கலன்கள் எல்லாம் கணக்கிலடங்கா: அவற்றுக்கான வெண்கலத்தை நிறுத்து மாளாது.
19. சாலமோன் கடவுளின் இல்லத்திற்கு வேண்டிய கலன்கள் எல்லாவற்றையும், பொற்பலிபீடத்தையும், திருமுன்னிலை மேசைகளையும்,
20. திருத்பயகத்திற்கு முன்பாக முறைப்படி வைக்கவேண்டிய விளக்குத் தண்டுகளையும், ஏற்றவேண்டிய அகல்களையும் பசும் பொன்னால் செய்தார்:
21. அதேபோன்று மலர்களையும், அகல்களையும், அணைப்பான்களையும் பசும்பொன்னால் செய்தார்:
22. கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் பபகலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்: மேலும் கோவில் வாயில்களையும், அதாவது திருத்பயகக் கதவுகளையும் பயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார்.அதிகாரம் 5.
1. இவ்வாறு சாலமோன் செய்து வந்த ஆண்டவரின் இல்லப்பணி முடிவுற்றபோது, அவர்தம் தந்தை தாவீது கடவுளுக்கு அர்ப்பிணத்தவற்றை எல்லாம் கொண்டுவந்து, பொன் வெள்ளியையும் எல்லாவிதக் கலன்களையும் கடவுள் இல்லத்தின் கருவூலங்களில் வைத்தார்.
2. பின்பு, சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சீயோன் என்ற தாவீதின் நகரிலிருந்து கொண்டு வருவதற்காக இஸ்ரயேலின் பெரியோர், எல்லாக் குலத் தலைவர்கள், இஸ்ரயேல் மக்களின் குடும்பத் தலைவர்கள் ஆகியோரை எருசலேமில் ஒன்று கூட்டினார்.
3. அவ்வாறே இஸ்ரயேலின் எல்லா ஆள்களும் ஏழாம் மாதத் திருவிழாவின்போது அரசர்முன் கூடினர்.
4. இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தபின் பேழையை எடுத்து,
5. அதையும் சந்திப்புக்கூடாரத்தையும் அங்கிருந்த புனிதக் கலன்களையும் கொண்டுவந்தனர். லேவியக் குருக்களே அவற்றைக் கொண்டு வந்தனர்.
6. சாலமோன் அரசரும் பேழைக்கு முன்பாகக் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் எண்ணற்ற, கணக்கற்ற கிடாய்களையும் காளைகளையும் பலியிட்டனர்.
7. அவ்வாறே குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவிலின் கருவறையாகிய திருத்பயகத்திற்குக் கொண்டு வந்து, அதற்குரிய இடமாகிய கெருபுகளின் இறக்கைகளுக்குக் கீழே வைத்தனர்.
8. கெருபுகள், பேழை வைக்கப்பட்ட இடத்தின்மேல் தங்கள் இறக்கைகளை விரித்து, பேழையையும் அதன் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.
9. பேழையின் தண்டுகள் நீளமாய் இருந்ததால் அவற்றின் முனைகள் கருவறையில் பேழைக்குமுன் தெரிந்தன: ஆனால் வெளியிலிருந்து காண இயலாது. பேழை இன்றுவரை அவ்விடத்திலேயே இருக்கிறது.
10. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, ஆண்டவர் ஓரேபில் அவர்களோடு உடன்படிக்கை செய்கையில், மோசே இவர்களுக்குக் கொடுத்திருந்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அப்பேழைக்குள் இருக்கவில்லை.
11. குருக்கள் பயகத்திலிருந்து வெளியே வந்தபோது அவர்களது பிரிவின் முறைகளைக் கணிக்காமல் அனைவரும் தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டனர்.
12. லேவியப் பாடகர், அதாவது, ஆசாப், ஏமான், எதுத்பன் என்போரின் புதல்வரும் உறவினரும் மென்துகில் அணிந்து கைத்தாளங்களையும், தம்புருகளையும், யாழ்களையும் இசைத்துப் பலிபீடத்தின் கீழ்த்திசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு மற்றிருபது ஆசாரியர் எக்காளங்களை ஊதிக் கொண்டிருந்தனர்.
13. எக்காளம் ஊதுவோரும் பாடகரும் இணைந்து ஒரே குரலில் ஆண்டவருக்கு மாட்சியும் நன்றியும் செலுத்தினர். அவர்கள் எக்காளம் ஊதி, கைத்தாளம் கொட்டி, இசைக்கருவிகள் மீட்டி, ஆண்டவர் நல்லவர் என்றுமுளது அவர்தம் இரக்கம் என்று ஒரே குரலில் ஆண்டவருக்குப் புகழிசைத்தனர். மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று.
14. மேகத்தை முன்னிட்டு குருக்கள் அங்கு நின்று திருப்பணி புரிய இயலவில்லை: ஏனெனில் ஆண்டவரின் மாட்சி கடவுளின் இல்லத்தை நிரப்பிற்று.அதிகாரம் 6.
1. அப்பொழுது சாலமோன், ஆண்டவரே! “கரிய மேகத்திரளில் வாழ்வேன்“ என்று நீர் கூறியிருக்கிறீர்.
2. நானோ, உமக்கென மேன்மைமிகு இல்லத்தை, நீர் எந்நாளும் உறையும்படி ஒரு தலத்தை எழுப்பியுள்ளேன் என்றார்.
3. பின்னர் அரசர் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசிவழங்கினார். அப்போது அவர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
4. மேலும், அவர் உரைத்தது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! ஏனெனில் அவர் என் தந்தை தாவீதுக்குத் தம் வாயினால் வாக்களித்ததைத் தம் கையினால் நிறைவேற்றினார்.
5. அவ்வாக்குறுதி, “நான் எகிப்து நாட்டிலிருந்து என் மக்களை அழைத்த வந்த நாள் முதல், என் பெயருக்கென ஒரு கோவிலை எழுப்புமாறு நான் இஸ்ரயேலின் வேறொரு குலத்து நகரையும் தேர்ந்துகொள்ளவில்லை. என் மக்கள் இஸ்ரயேலருக்குத் தலைவராக நான் எவரையும் தேர்ந்து கொள்ளவில்லை.
6. ஆனால், இப்பொழுது எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்கள் இஸ்ரயேலை ஆளத் தாவீதையும் தேர்ந்து கொண்டேன்“ என்பதாகும்.
7. மீண்டும் அவர், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் என் தந்தை தாவீதிற்கு இருந்தது.
8. ஆண்டவர் அவரை நோக்கி, “என் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற உன் விருப்பம் போற்றதற்குரியதே!
9. ஆனால் நீ அதைக் கட்டமாட்டாய். உனக்குப் பிறக்கும் உன் மகனே என் பெயருக்கென ஒரு கோவிலைக் கட்டுவான்“ என்றார்.
10. இவ்வாறு தமது வாக்குறுதியை ஆண்டவர் இப்போது நிறைவேற்றியுள்ளார். முன்பே ஆண்டவர் கூறியிருந்ததுபோல் என் தந்தை தாவீதுக்குப் பின், நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவிலைக் கட்டியுள்ளேன்.
11. ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைக் கொண்டுள்ள பேழையையும் இங்கே கொண்டு வந்து வைத்துள்ளேன் என்றார்.
12. பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபிடத்திற்கு முன்பாக இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையிலும் நின்று தம் கைகளை விரித்தார்.
13. சாலமோன் ஜந்து முழ நீளமும், ஜந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான வெண்கலத் திருவுரை மேடை ஒன்று செய்து, அதை முற்றத்தின் நடுவில் வைத்திருந்தார். அதன் மேல் அவர் எறி இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையிலும் முழந்தாளிட்டுத் தம் கைகளை விண்ணை நோக்கி உயர்த்தி,
14. மீண்டும் சொன்னதாவது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணிலும், மண்ணிலும் உமக்கு இணையானகடவுள் இல்லை. ஏனெனில் நீர் முழு இதயத்தோடு உம்மைப் பின்பற்றும் உம் அடியார்கள்மேல் அன்புகூர்ந்து உமது உடன்படிக்கையைக் காத்து வருகிறீர்!
15. ஆதலால் என் தந்தையும் உம் ஊழியனுமான தாவீதுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நீர் நிறைவேற்றியுள்ளீர். உம் வாயினால் வாக்களித்ததை உம் கையினால் இந்நாளில் நிறைவேற்றியுள்ளீர்.
16. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தையும் உம் அடியாருமான தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியருளும். “நீ என் முன்னிலையில் நடந்துவந்தது போல், உன் மைந்தரும் எனது திருச்சட்டத்தின் வழியைப் பின்பற்றி நடப்பார்களாகில், இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க, உன் வழித்தோன்றல் உனக்கு இல்லாது போகான்“ என்று நீர் வாக்களித்துள்ளீர் அன்றோ!
17. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியார் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியருளும்.
18. கடவுள் உண்மையாகவே மனிதரோடு மண்ணில் வாழ்வது நம்பக்கூடியதா? விண்ணும் விண்விரிவும் உம்மைக் கொள்ளாதிருக்க, நான் கட்டியுள்ள இந்தக் கோவில் உம்மை எவ்வாறு கொள்ளக்கூடும்?
19. என் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியானாகிய என் விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டருளும். உம் உழியனாகிய என் கூக்குரலுக்கும் விண்ணப்பத்துக்கும் செவிசாய்த்தருளும்.
20. என் பெயர் விளங்கும் என்று நீர் வாக்களித்திருந்த இந்த இடத்தின்மேல், கோவில்மேல் இரவும் பகலும் உமது அருட்பார்வை இருப்பதாக! உம் அடியானாகிய எனது விண்ணப்பத்தை நீர் இங்கே கேட்டருள்வீராக!
21. உம் அடியானும், உம் மக்களாகிய இஸ்ரயேலரும் இவ்விடம் நோக்கிச்செய்யும் வேண்டுதலைக் கேட்டருளும்: உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு எங்களை மன்னிப்பீராக!
22. ஒருவன் தன்னை அடுத்து வாழ்வோனுக்கு எதிராகப் பாவம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்த கோவிலில் உமது பலிபீடத்திற்குமுன் ஆணையிடுமாறு கொண்டு வரப்பட்டால்,
23. விண்ணகத்திலிருந்து நீர் அதனைக் கேட்டுச் செயல்பட்டு உம் அடியார்களுக்கு தீர்ப்பு வழங்குவீராக! தீயவரின் நடத்தைக்கேற்ற தண்டனை அவர்களின் தலைமேல் விழச்செய்யும்: நேர்மையாளருக்கு அவர்களது நேர்மைக்குத் தக்கவாறு அவர்கள் நேர்மையாளர் எனத் தீர்ப்பளிப்பீராக!
24. உம் மக்களாகிய இஸ்ரயேலர் உமக்கெதிராகப் பாவம் செய்ததனால், எதிரியிடம் தோல்வியுற்றுப் பின் உம்மிடம் திரும்பி வந்து, உமது பெயரைப் போற்றி, இக்கோவிலில் உம்மை நோக்கி வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் செய்தால்,
25. விண்ணகத்திலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் மூதாதையருக்கென நீர் அளித்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வீராக!
26. அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்ததனால், வானம் அடைபட்டு, மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த இடத்தை நோக்கி வேண்டுதல் செய்து உமது பெயரை ஏற்றுக்கொண்டு, நீர் அனுப்பும் துன்பத்தினால் தங்கள் பாவத்திலிருந்து மனம்மாறினால்,
27. விண்ணகத்திலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து உம் அடியாரும் உம் மக்கள் இஸ்ரயேலரும் செய்த பாவங்களை மன்னிப்பீராக! அவர்கள் நடக்க வேண்டிய நன்னெறியை அவர்களுக்குக் காட்டுவீராக! உம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக அவர்களுக்கு அளித்த நாட்டில் மழை பொழியச் செய்வீராக!
28. நாட்டில் பஞ்சம், கொள்ளை நோய் உண்டாகும்போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, தத்துக்கிளி, ஆகியவற்றால் பயிர் அழிவுறும்போதும், நாட்டின் எந்த நகரையாவது எதிரிகள் முற்றுகையிடும்போதும், வாதையோ வேறெந்த நோயோ வரும்போதும்,
29. எந்த ஒரு மனிதரோ உம் மக்கள் இஸ்ரயேலர் அனைவருள்ளும் எவரோ, ஒவ்வொருவரின் வாதையையும் நோயையும் உணர்ந்து, இந்தக் கோவிலை நோக்கித் தம் கைகளை விரித்துச் செய்யும் எல்லா வேண்டுதல்களையும், எழுப்பும் எல்லா விண்ணப்பங்களையும்,
30. உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு மன்னிப்பீராக! ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் அவரவர் செயல்களுக்கேற்ற பயனை அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்!
31. இதனால், தங்கள் மூதாதையர்க்கு நீர் அளித்த நாட்டில் தங்கள் வாழ்நாள் எல்லாம் அவர்கள் உமக்கு அஞ்சி நடப்பார்கள்!
32. மேலும், உம் மக்கள் இஸ்ரயேலைச் சாராத அன்னியர் ஒருவர் மாண்புமிகு உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல்மிகு உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டுத் தொலைநாட்டிலிருந்து வந்து இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால்,
33. உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து நீர் அவருக்குச் செவிசாய்த்து அந்த அன்னியன் கேட்பதை எல்லாம் அருள்வீராக! இதனால், உலகின் மக்கள் எல்லாரும் உம் மக்கள் இஸ்ரயேலைப் போல் உமது பெயரை அறிந்து உமக்கு அஞ்சி வாழ்வார்கள்! மேலும், நான் எழுப்பியுள்ள இக் கோவிலில் உமது பெயர் போற்றப்படுவதை உணர்வார்கள்!
34. உம் மக்கள் தங்கள் பகைவர்களோடு போரிடச் செல்லும்போது, நீர் காட்டும் வழியில் அவர்கள் செல்கையில், நீர் தேர்ந்துகொண்ட இந்நகரையும் உமது பெயருக்கென நான் கட்டியுள்ள இக்கோவிலையும் நோக்கி ஆண்டவராகிய உம்மிடம் வேண்டினால்,
35. விண்ணகத்திலிருந்து நீர் அவர்கள் வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் செவிசாய்த்து அவர்களுக்கு வெற்றி அளிப்பீராக!
36. பாவம் செய்யாத மனிதரே இல்லை! ஆதலால், அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்தால், நீர் அவர்கள் மேல் சினம்கொண்டு அவர்களை எதிரிகளிடம் கையளிக்க, அவர்கள் தொலையிலோ அருகிலோ இருக்கும் எதிரியின் நாட்டுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டு,
37. அப்படி கொண்டு செல்லபட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனமாற்றம் அடைந்து, “நாங்கள் பாவம் செய்தோம்: நெறிதவறினோம்: தீய வழியில் நடந்தோம்“ என்று அவர்கள் விண்ணப்பம் செய்தால்,
38. அதாவது, தங்களைக் கைதிகளாகக் கொண்டு சென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையருக்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும் உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி உம்மிடம் வேண்டுதல் செய்தால்,
39. உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து அவர்கள் வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து, உமக்கெதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னித்து, அவர்களுக்கு வெற்றி வழங்குவீராக!
40. என் கடவுளே, இவ்விடத்தில் வேண்டுதல் செய்வோர் மீது உம் கண்களைத் திருப்பி, அவர்களுக்குச் செவிசாய்ப்பீராக.
41. ஆண்டவராகிய கடவுளே, உமக்கான தங்குமிடத்திற்கு எழுந்தருள்வீராக! உமது பேராற்றல் விளங்கும் பேழையும் எழுந்துவருவதாக! ஆண்டவராகிய கடவுளே! உம் குருக்கள் மீட்பெனும் ஆடையை அணிந்து கொள்வார்களாக! உம் பயவர் நன்மை செய்வதில் மகிழ்வார்களாக!
42. ஆண்டவராகிய கடவுளே! நீர் திருப்பொழிவு செய்த என்னைப் புறக்கணியாதீர்! உமது அடியான் தாவீதுக்கு நீர் காட்டிய பேரன்பை நினைவுகூரும்!அதிகாரம் 7.
1. சாலமோன் தம் மன்றாட்டை முடித்ததும், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி, எரி பலியையும் மற்றப் பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பியது.
2. ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பியிருந்ததால், குருக்கள் ஆண்டவரின் இல்லத்தில் நுழைய முடியவில்லை.
3. நெருப்பு இறங்குவதையும், ஆண்டவரின் மாட்சி கோவிலில் இருப்பதையும் இஸ்ரயேலின் மக்கள் அனைவரும் கண்டபோது, தரையில் முகம் குப்பற வீழ்ந்து வழிபட்டனர். ஆண்டவர் நல்லவர்: அவரது பேரன் பு என்றென்றும் உள்ளது என்று அவருக்கு நன்றி கூறினர்.
4. அரசரும் மக்கள் யாவரும் ஆண்டவர் திருமுன் பலி செலுத்தினர்.
5. அரசர் சாலமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டார்: இவ்வாறு அரசரும் மக்கள் அனைவரும் கடவுளின் இல்லத்தை அர்ப்பணம் செய்தனர்.
6. குருக்கள் தமக்குரிய திருப்பணியைச் செய்தனர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தத் தாவீது உருவாக்கிய இசைக்கருவிகளை லேவியர் இசைத்து, ஏனெனில் அவர் நல்லவர்: அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது என்று புகழ்ந்தனர். அப்போது, அவர்கள் முன்னிலையில் குருக்கள் எக்காளம் ஊதினர். மக்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
7. அப்போது ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த நடுமுற்றத்தைச் சாலமோன் அர்ப்பணம் செய்தார்: எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் அங்கேதான் அவர் செலுத்தினார். ஏனெனில் சாலமோன் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலி, தானியப் படையல், கொழுப்பு ஆகியவற்றைக் கொள்ளவில்லை.
8. இத்திருவிழாவை சாலமோன் ஏழுநாள் தொடர்ந்து கொண்டாடினார்: அவருடன், ஆமாத்து எல்லை முதல் எகிப்து நதிவரை வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.
9. பலிபீட அ¡ப்பணத்தையும், திருவிழாவையும் ஏழு நாள்கள் அவர்கள் கொண்டாடி, எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடத்தினர்.
10. பின்பு, அவர் ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் மக்களை அவர்களின் கூடாரங்களுக்கு அனுப்பினார்: ஆண்டவர் தாவீதுக்கும், சாலமோனுக்கும் தம் மக்களாகிய இஸ்ரயேலுக்கும் செய்துள்ள நன்மைத்தனத்தை நினைத்து அவர்கள் உள்ளத்தில் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சென்றனர்.
11. இவ்வாறு சாலமோன், ஆண்டவரின் இல்லத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தார். ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் அவர் செய்ய விரும்பிய அனைத்தையும் வெற்றியுடன் முடித்தார்.
12. பின்பு ஆண்டவர் சாலமோனுக்கு இரவில் தோன்றி, நான் உன் விண்ணப்பத்தை ஏற்று, இவ்விடத்தை எனக்குப் பலியிடும் கோவிலாகத் தேர்ந்துகொண்டுள்ளேன்.
13. நான் மழை பெய்யாதவாறு வானத்தை அடைத்தாலும், நாட்டை அழிக்க வெட்டுக் கிளிகளுக்குக் கட்டளையிட்டாலும், என் மக்களிடையே கொள்ளை நோயை அனுப்பினாலும்,
14. எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்: அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன்.
15. இவ்விடத்தில் எழுப்பப்படும் வேண்டுதல்களை என் கருணைக் கண் கொண்டு நோக்கிக் கவனத்தோடு செவிகொடுப்பேன்.
16. எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன்: என் கண்ணும் கருத்தும் இதன்மேல் எந்நாளும் இருக்கும்.
17. உன் தந்தை தாவீதுபோல் நீயும் என் திருமுன் நடந்து, என் கட்டளைகளையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் ஏற்று வாழ்ந்தால்,
18. “இஸ்ரயேலை அரசாளும் ஒருவன் உனக்கு இல்லாமல் போகான்“ என்று உன் தந்தை தாவீதுடன் நான் செய்த உடன்படிக்கைக்கு ஏற்ப உனது அரசின் அரியணையை நான் நிலைபெறச் செய்வேன்.
19. ஆனால், நீங்கள் நெறிதவறி, உங்களுக்கு அளித்துள்ள கட்டளைகளையும் நியமங்களையும் புறக்கணித்து, வேற்றுத் தெய்வங்களுக்குப் பணி செய்து அவற்றை வழிபட்டால்,
20. நான் அவர்களுக்கு அளித்துள்ள எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்திவிட்டு, என் பெயருக்கென திருநிலைப்படுத்திய இக்கோவிலை எனது திருமுன்னின்று அகற்றிவிடுவேன்: இதனை எல்லா நாட்டு மக்களினங்கள் நடுவிலும் பழமொழியாகவும் வசைமொழியாகவும் நிலவச் செய்வேன்.
21. அப்பொழுது உயர்ந்து விளங்கிய இக்கோவிலைக் கடந்து செல்வோர் யாவரும் நடுங்கி, “ஆண்டவர் இந்நாட்டிற்கும் இக்கோவிலுக்கும் ஏன் இவ்வாறு செய்துவிட்டார்?“ என்று கேட்பார்கள்.
22. அதற்கு அவர்கள், “தங்கள் முன்னோர்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்து விட்டு, வேற்றுத் தெய்வங்கள்மேல் பற்றுக் கொண்டு அவற்றை வழிபட்டு, அவற்றிற்கு ஊழியம் செய்ததனால், அவர் இத்தகைய தீமை முழுவதையும் அவர்கள்மேல் விழச்செய்தார்“ என்று பதிலளிப்பார் என்று உரைத்தார்.அதிகாரம் 8.
1. சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் தம் அரண்மனை¨யும் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின.
2. அதன்பின், ஈராம் தமக்கு அளித்திருந்த நகர்களைச் சாலமோன் புதுப்பித்து, அங்கே இஸ்ரயேல் மக்களைக் குடியமர்த்தினார்.
3. அடுத்து, சாலமோன் அமத்சோபா சென்று அதனைக் கைப்பற்றினார்:
4. பாலைநிலத்தில் தத்மோர் என்ற நகரையும், ஆமாத்துப் பகுதியின் கிடங்கு நகர்கள் அனைத்தையும் எழுப்பினார்.
5. மேலும், மேலைப் பெத்கோரோன், கீழைப் பெத்கோரோன் என்ற நகர்களை மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்ட அரண்சூழ் நகர்களாக அமைத்தார்.
6. மேலும். பாலத்தையும், தம் கிடங்கு நகர்களையும், தேர் நகர்களையும், குதிரை வீரர் நகர்களையும் சாலமோன் எழுப்பினார்: அவற்றுடன், எருசலேமிலும், லெபனோனிலும், தம் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளிலும் தாம் விரும்பிய எல்லாவற்றையும் கட்டியெழுப்பினார்.
7. இஸ்ரயேலர் அல்லாத இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகிய மக்களினத்தாருள் விடப்பட்ட எல்லாரையும்-
8. இஸ்ரயேல் மக்கள் கொல்லாமல் விட்டுவைத்த அவர்களின் வழிமரபினர் எல்லாரையும்-சாலமோன், இன்றுவரை உள்ளதுபோல், கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்.
9. ஆனால், சாலமோன் இஸ்ரயேல் மக்களுள் எவரையும் கட்டாய வேலைக்கு உட்படுத்தவில்லை. மாறாக அவர்கள் போர்வீரர்களாகவும் தானைத் தலைவர்களாகவும் தேர்ப்படை, குதிரைப்படையின் தலைவர்களாகவுமே இருந்தனர்.
10. அரசர் சாலமோனுடைய அலுவலர்களின் தலைவர்கள் மொத்தம் இருமற்று ஜம்பது பேர்: இவர்களே மக்கள்மேலும் அதிகாரம் செலுத்தினர்.
11. “ஆண்டவரின் பேழை வைக்கப்பட்டிருந்த இடங்கள் புனிதம் பெற்றவை. எனவே இஸ்ரயேல் அரசராம் தாவீதின் அரண்மனையில் என் மனைவி வாழக்கூடாது“ என்று சாலமோன் எண்ணி, பார்வோனின் மகளைத் தாவீதின் நகரிலிருந்து அழைத்துவந்து, அவளுக்கெனத் தாம் கட்டிய அரண்மனையில் குடியமர்த்தினார்.
12. அதன்பின், சாலமோன், மண்டபத்தின் முன் ஆண்டவருக்காகத் தாம் கட்டிய பலிபீடத்தில் அவருக்கு எரிபலிகளைச் செலுத்தினார்.
13. அந்தப் பலிபீடத்தில், மோசேயின் கட்டளைப்படி ஓய்வுநாள், அமாவாசை நாள்களிலும், ஆண்டுதோறும் வரும் புளியாத அப்பத் திருவிழா, வாரங்களின் திருவிழா, கூடாரத் திருவிழா ஆகிய மூன்று விழாக்களிலும், அந்தந்த நாளுக்குரிய பலிகளைச் செலுத்தினார்.
14. சாலமோன், தம் தந்தை தாவீது கட்டளையிட்டவாறு, திருப்பணி செய்யும் குருக்களின் பிரிவுகளையும், ஒவ்வொரு நாளின் சடங்கிற்கு ஏற்ப புகழ்ப்பண் இசைத்து, குருக்களுக்குத் துணைப்பணி செய்யும் லேவியரின் முறைகளையும் ஒவ்வொரு வாயிலிலும் காவல்புரிய வாயிற்காப்போரின் குழுக்களையும் ஏற்படுத்தினார். கடவுளின் மனிதர் தாவீதின் கட்டளை இப்படியிருந்தது.
15. குருக்களும் லேவியரும் கருவூலங்களைக் கண்காணிப்பது உட்பட அனைத்திலும் அரச கட்டளையிலிருந்து சிறிதும் பிறழவில்லை.
16. ஆண்டவரின் இல்லம், அடிக்கல் நாட்டப்பட்டது முதல் முழுமை பெறும் வரை, சாலமோனின் திட்டம் இனிதே நடந்தேறியது. இவ்வாறு ஆண்டவரின் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.
17. பின்பு சாலமோன் ஏதோம் நாட்டின் கடலோரப் பகுதிகளான எட்சியோன்கெபேருக்கும், ஏலோத்துக்கும் சென்றார்.
18. ஈராம், கப்பல்களையும் கடல் வல்லாரையும் தம் பணியாளர் பொறுப்பில் சாலமோனிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் அரசர் சாலமோனின் பணியாளர்களுடன் ஓபீருக்குச் சென்று, அங்கிருந்து பதினெட்டாயிரம் கிலோ கிராம் பொன் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர்.அதிகாரம் 9.
1. சேபாவின் அரசி சாலமோனின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, கடினமான வினாக்களால் அவரைச் சோதிக்க எருசலேம் வந்தார். பெரும் பரிவராத்தோடும், நறுமணப் பொருள்கள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றைச் சுமந்த ஒட்டகங்களோடும் அவர் வந்து சாலமோனைக் கண்டு, தம் மனத்திலிருந்த எல்லாவற்றையும் அவரிடம் கூறினார்.
2. சாலமோன் அவருடைய எல்லா வினாக்களுக்கும் விடையளித்தார்: அவர் அவருக்கு விடுவிக்க இயலாத புதிர் ஒன்றுமில்லை.
3. சேபாவின் அரசி சாலமோனின் ஞானத்தையும் அவர் கட்டியிருந்த அரண்மனையையும் கண்டார்.
4. அத்துடன், அவரது பந்தி உணவுகளையும், அவருடைய அலுவலர்களின் இருக்கைகளையும், அவர்களது பணியின் ஒழுங்குமுறையையும், அவர்களுடைய சீருடைகளையும், அவருடைய பானம் பரிமாறுவோர், அவர்களுடைய சீருடைகள், மற்றும் ஆண்டவர் இல்லத்தில் அவர் செலத்திய எரிபலிகள் ஆகியவற்றையும் கண்டபோது அவர் பேச்சற்றுப் போனார்.
5. அவர் அரசரை நோக்கி, உமது செயல்பற்றியும் உமது ஞானம் பற்றியும் எனது நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே!
6. நான் இங்கு வந்து அவற்றை நேரில் என் கண்களால் காணும்வரை, அவர்கள் சொன்னதை நான் நம்பவில்லை: உம் மிகுந்த ஞானம்பற்றி, அவர்கள் பாதிகூட எனக்குக் கூறவில்லை என உணர்கிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விஞ்சிவிட்டீர்!
7. உம் மனைவியர் பேறுபெற்றோர்! எப்பொழுதும் உம் முன் நின்று உமது ஞானத்தைக் கேட்கிற உம் அலுவலரும் பேறுபெற்றோர்!
8. உம்மீது பரிவுகொண்டு உம்மைத் தம் அரியணையில் ஏற்றி, தமக்காக உம்மை ஓர் அரசராக்கிய உம் கடவுளாம் ஆண்டவர் போற்றி! போற்றி! இஸ்ரயேல் மக்களை என்றென்றும் நிலைநிறுத்த உம் கடவுள் அவர்கள்மேல் கொண்டிருக்கும் அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார் என்று கூறினார்.
9. பின்பு அவர் அரசரிடம் மற்றிருபது தாலந்து பொன், மிகுதியான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அளித்தார். சேபாவின் அரசி அரசர் சாலமோனுக்கு அளித்த நறுமணப் பொருள்களைப் போன்று பிறகு என்றுமே அவருக்குக் கிடைக்கவில்லை.
10. ஓபீரிலிருந்து பொன்னைக் கொண்டு வந்திருந்த ஈராமின் பணியாளரும் சாலமோனின் பணியாளரும் நறுமண மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தனர்.
11. அரசர் அந்த நறுமண மரங்களால் ஆண்டவர் இல்லத்திற்கும் அரச அரண்மனைக்கும் தேவையான படிக்கட்டுகளையும், பாடகர்களுக்கு சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக்கருவிகளையும் செய்தார். யூதா நாட்டில் அத்தகையவை அதற்குமுன் இருந்ததில்லை.
12. அரசர் சாலமோன் சேபாவின் அரசி விரும்பிக் கேட்டவை எல்லாவற்றையும் அவர் அரசருக்குக் கொண்டு வந்ததைவிட, மிகுதியாகவே அளித்தார். பின்பு அவர் தம் அலுவலருடன் தமது நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
13. சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்த பொன்னின் நிறை இருபத்து ஆறாயிரத்து, அறுமற்று நாற்பது கிலோகிராம்.
14. இத்துடன், வியாபரிகளும் வணிகர்களும் கொண்டு வந்ததைத் தவிர, அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள் நாட்டின் ஆளுநர்களும் சாலமோனுக்குப் பொன்னும் வெள்ளியும் கொண்டுவந்தனர்.
15. சாலமோன் அரசர் பொன் தகட்டால் இருமறு பெரிய கேடயங்களைச் செய்தார்: ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏழு கிலோகிராம் பொன் பயன்படுத்தப்பட்டது.
16. அதே போன்று அவர் முந்மறு சிறிய கேடயங்களைப் பொன் தகட்டால் செய்தார்: ஒவ்வொரு கேடயத்திற்கும் மூன்றரை கிலோ கிராம் பொன் பயன்படுத்தப்பட்டது. அரசர் இவற்றை லெபனோனின் வனம் என்ற அரச மாளிகையில் வைத்தார்.
17. பின்பு அரசர் தந்தத்தால் பெரியதோர் அரியணை செய்து, அதனைப் பசும் பொன்னால் மூடினார்.
18. அந்த அரியணைக்குப் பொன்னாலான ஆறுபடிகளும், பொன்னாலான ஒரு கால்மணையும் மற்றும் இருக்கையின் இருமருங்கிலும் கைத்தாங்கிகளும் அக்கைத்தாங்கிகளோடு இணைந்த இருசிங்கங்களும் இருந்தன.
19. அந்த ஆறுபடிகளின் இருமருங்கிலுமாகப் பன்னிரு சிங்கங்கள் நின்றன: இது போன்று வேறு எந்த அரசிலும் செய்யப்படவில்லை.
20. அரசர் சாலமோனின் பானபாத்திரங்கள் அனைத்தும் பொன்னாலானவை: லெபனோன் வனத்தில் இருந்த எல்லாக் கலன்களும் பசும் பொன்னால் ஆனவை. சாலமோனின் காலத்தில் வெள்ளிக்கு எத்தகைய மதிப்பும் இல்லை.
21. அரசரின் கப்பல்கள் இராமின் பணியாளருடன் தர்சீசுக்குச் சென்று வரும்: மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தர்சீசிலிருந்து கப்பல்கள் பொன், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.
22. செல்வத்திலும் ஞானத்திலும் அரசர் சாலமோன் உலகின் மற்ற மன்னர்களைவிடச் சிறந்து விளங்கினார்.
23. கடவுள் சாலமோனின் அறிவுக்கு அருளிய ஞானத்தை நேரில் கேட்க உலகின் எல்லா மன்னர்களும் அவரை நாடி வந்தனர்.
24. அவர்கள் ஆண்டுதோறும் வெள்ளியாலும் பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக்கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்தனர்.
25. சாலமோன் குதிரைகளுக்கும் தேர்களுக்குமாக நாலாயிரம் கொட்டில்களையும், பன்னீராயிரம் குதிரை வீரர்களையும் கொண்டிருந்தார்: தேர்களைத் தேர்ப்படை நகர்களிலும் தம்முடன் எருசலேமிலும் நிறுத்தி வைத்திருந்தார்.
26. அவர் பேராறு முதல் பெலிஸ்தியர் நாடு வரையிலும், எகிப்திய எல்லைமட்டும் இருந்த எல்லா மன்னர்கள்மேலும் அதிகாரம் செலுத்தினார்.
27. எருசலேமில் வெள்ளி கற்களைப் போன்றும், கேதுரு மரங்கள் பள்ளத்தாக்கின் அத்தி மரம் போன்றும் ஏராளமாகக் கிடைக்கும்படி செய்தார்.
28. அவர்கள் எகிப்திலிருந்தும், மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் சாலமோனுக்குக் குதிரைகளைக் கொண்டு வந்தனர்.
29. சாலமோனின் பிற செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, இறைவாக்கினர் நாத்தானின் குறிப்பேட்டிலும், சீலோவியராகிய அகியாவின் இறைவாக்கிலும், நெபாற்றின் மகன் எரொபவாம் பற்றித் திருக்காட்சியாளர் இத்தோ கண்டு எழுதிய காட்சிகளிலும் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
30. சாலமோன் இஸ்ரயேல் முழுமைக்கும் அரசராக எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
31. பின்பு சாலமோன் தம் மூதாதையருடன் துயில்கொண்டார். அவரை அவர் தந்தை தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவருக்குப்பின் அவர் மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தான்.அதிகாரம் 10.
1. இஸ்ரயேலர் எல்லாரும் ரெகபெயாமை அரசனாக்க செக்கேமில் கூடினர்: அதனால் ரெகபெயாமும் அங்கே சென்றான்.
2. அரசர் சாலமோனுக்கு அஞ்சி எகிப்துக்கு ஓடிச்சென்றிருந்த நெபாற்றின் மகன் எரொபவாம் இதனைக் கேட்டு எகிப்திலிருந்து திரும்பி வந்தான்.
3. அவர்கள் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தனர். எரொபவாம் இஸ்ரயேலர் அனைவரோடும் ரெகபெயாமிடம் வந்து,
4. உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார்: இப்பொழுது நீர் உம் தந்தை சுமத்தின கடினமான வேலையையும் பளுவான நுகத்தையும் எளிதாக்கும்: நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம் என்றான்.
5. அதற்கு ரெகபெயாம், இன்னும் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள் என்று பதிலளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.
6. பின்பு தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அவரிடம் பணிபுரிந்த பெரியோர்களை நோக்கி ரெகபெயாம், இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து, என்ன அறிவுரை தருகிறீர்கள்? என்று கேட்டான்.
7. அவர்கள் அவரிடம், நீர் இம்மக்களுக்கு அன்பு காட்டி, அவர்கள் மனம் குளிருமாறு இன்சொல் பேசினால், அவர்கள் உமக்கு எந்நாளும் பணியாளராய் இருப்பர் என்றனர்.
8. ஆனால் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, அவன் தன்னோடு வளர்ந்து தனக்குப் பணிசெய்த இளைஞர்களுடன் கலந்துரையாடினான்.
9. அவன் அவர்களிடம், “உம் தந்தை எங்கள்மேல் சுமத்தின நுகத்தை எளிதாக்கும்“ என்று கேட்கும் இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து என்ன அறிவுரை தருகிறீர்கள்? என்று கேட்டான்.
10. அவனுடன் வளர்ந்த இளைஞர்கள் அவனிடம், “உம் தந்தை எங்கள்மேல் பளுவான நுகத்தைச் சுமத்தினார். நீர் அதனை எளிதாக்கும்“ என்று உம்மிடம் கேட்ட மக்களுக்கு இந்தப் பதில் கொடும்: என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பைவிடப் பெரியது:
11. என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன்: என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்: நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன்“ என்று பதிலளிக்கவும் என்று கூறினர்.
12. “மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்“ என்று அரசன் கட்டளையிட்டபடி மூன்றாம் நாள் எரொபவாமும் எல்லா மக்களும் ரெகபெயாமிடம் வந்தனர்.
13. அரசன் ரெகபெயாம் பெரியோரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு வன்சொல்லால் அவர்களுக்குப் பதிலளித்தான்.
14. இளைஞரின் அறிவுரைக்கு ஏற்ப அவன் அவர்களிடம், என் தந்தை பளுவான நுகத்தை உங்கள்மேல் சுமத்தினா+: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன், என் தந்தை உங்களைச் சாட்டைகளால் அடித்தார்: நானோ உங்களை முட்சாட்டைகளால் அடிப்பேன் என்று கூறினான்.
15. இவ்வாறு அரசன் மக்களுக்குச் செவிகொடுக்கவேயில்லை: ஏனெனில் சீலோவியரான அகியா மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகள் நிறைவேற, இவை யாவும் கடவுளால் நிகழ்ந்தன.
16. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டதைக் கண்டு, எங்களுக்குச் தாவீதிடம் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ரயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்! தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்! என்று கூறிக் கொண்டே தம் கூடாரங்களுக்குத் திரும்பினர்.
17. ஆனால் யூதா நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள்மீது ரெகபெயாமே ஆட்சி செலுத்தினான்.
18. பின்பு அரசன் ரெகபெயாம், கட்டாய வேலைத் திட்டத்தை முன்பு செயல்படுத்தியவனான அதோராமை இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பி வைத்தான். அவர்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர்: அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பியோடி போனான்.
19. தாவீதின் குடும்பத்திற்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.அதிகாரம் 11.
1. ரெகபெயாம் எருசலேமுக்குத் திரும்பியவுடன் யூதா, பென்யமின் குலத்தாரில் ஓர் இலட்சத்து எண்பதாயிரம் போர்வீரர்களைத் திரட்டினான்: ஏனெனில் இஸ்ரயேலுடன் போர்தொடுத்து அரசை மீண்டும் கைப்பற்ற விரும்பினான்.
2. அப்போது கடவுளின் மனிதரான செமாயாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
3. யூதா அரசனும் சாலமோனின் மகனுமான ரெபபெயாமிடமும், யூதாவிலும் பென்யமினிலும் வாழும் இஸ்ரயேலர் அனைவரிடமும் நீ சொல்ல வேண்டியது:
4. “ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் படையெடுத்துச் சென்று, உம் சகோதரருடன் போரிட வேண்டாம். அவரவர் தம் வீட்டுக்குத் திரும்புங்கள்: ஏனெனில் என்னாலேயே இச்செயல் நிகழ்ந்தது. ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள், எரொபவாமுக்கு எதிராகச் செல்வதைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.
5. ரெகபெயாம் எருசலேமில் வாழ்ந்து கொண்டு, யூதாவில் அரண்சூழ் நகர்கள் பல எழுப்பினான். அவையாவன:
6. பெத்லகேம், ஏத்தாம், தெக்கோவா,
7. பெத்சூர், சோக்கொ, அதுல்லாம்,
8. காத்து, மாரேசா, சீபு,
9. அதோரயிம், இலாக்கிசு, அசேக்கா,
10. சோரா, அய்யலோன், எபிரோன்: இவையே யூதாவிலும் பென்யமினிலும் கட்டப்பட்ட அரண்சூழ் நகர்கள்.
11. அவன் நகர்க்கோட்டைகளை வலுப்படுத்தி, அவற்றுக்குத் தளபதிகளை நியமித்தான்: உணவுப் பொருள்கள், எண்ணெய், திராட்சை இரசம் போன்றவற்றுக்கான கிடங்குகளையும் ஏற்படுத்தினான்.
12. அவன் ஈட்டிகளாலும் கேடயங்களாலும் ஒவ்வொரு நகரையும் மிகவும் வலிமைமிக்கதாக்கினான். இவ்வாறு யூதாவும் பென்யமினும் அவன் பக்கமாய் இருந்தன.
13. இஸ்ரயேல் முழுவதிலும் இருந்த குருக்களும் லேவியரும் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்து அவனோடு சேர்ந்து கொண்டனர்.
14. இவர்கள் ஆண்டவருக்குக் குருத்துவப் பணி செய்யாதவாறு எரொபவாமும் அவன் புதல்வரும் இவர்களை விலக்கி வைத்தனர். எனவே, இவர்கள் தங்கள் மேய்ச்சல் நிலத்தையும் உடைமைகளையும் விட்டுவிட்டு, யூதாவுக்கும் எருசலேமுக்கும் திரும்பிச் சென்றனர்.
15. ஏனெனில், எரொபவாம் தன் தொழுகை மேடுகளுக்கும், தான் செய்திருந்த ஆட்டு, கன்றுக்குட்டிச் சிலைகளுக்கும் தானே குருக்களை நியமித்தான்.
16. அந்த லேவியரைத் தொடர்ந்து, இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருதும் தம் கடவுளாம் ஆண்டவரை முழு இதயத்தோடும் வழிபட விரும்பியோர் தம் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்குப் பலி செலுத்த எருசலேமுக்கு வந்தனர்.
17. இவ்வாறு, அவர்கள் யூதா அரசையும் சாலமோன் மகன் ரெகபெயாம் ஆட்சியையும் மூன்றாண்டுகள் உறுதிப்படுத்தினர்: ஏனெனில் அவர்கள் தாவீது, சாலமோன் நடந்த வழயில் மூன்றாண்டுகளே வாழ்ந்தனர்.
18. பின்பு, ரெகபெயாம் தாவீதின் மகன் எரிமோத்துக்கும் ஈசாயின் பேத்தியும் எலியாபின் மகளுமான அபிகயிலுக்கும் பிறந்த மகலாத்து என்பவளை மணந்து கொண்டான்.
19. அவள் அவனுக்கு எயூசு, செமரியா, சாகாம் என்ற புதல்வர்களைப் பெற்றெடுத்தாள்.
20. அடுத்து, அவன் அப்சலோமின் மகள் மாக்காவை மணந்து கொண்டான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித்து ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
21. ரெகபெயாம் பதினெட்டு மனைவியரையும் அறுபது வைப்பாட்டியரையும் கொண்டிருந்தான்: இவர்கள் மூலம் இருபத்தெட்டுப் புதல்வரையும் அறுபது புதல்வியரையும் பெற்றான். ஆனால், மற்ற எல்லா மனைவியர், வைப்பாட்டியரையும் விட அப்சலோம் மகள் மாக்காவிடம் அவன் மிகுதியாக அன்பு பாராட்டினான்.
22. அதனால், ரெகபெயாம் மாக்காவின் மகன் அபியாவை அவன் சகோதரர்களுக்குள் தலைவனாக ஏற்படுத்தியிருந்தான்: இவனையே அரசனாக்கவும் அவன் எண்ணியிருந்தான்.
23. அவன் முன்மதியோடு தன் மற்றெல்லாப் புதல்வரையும், யூதா, பென்யமின் நாடுகள் முழுவதிலுமுள்ள அரண்சூழ் நகர்களுக்குப் பிரித்தனுப்பினான். அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருள்களையும், பல மனைவியரையும் ஏற்பாடு செய்தான்.அதிகாரம் 12.
1. ரெகபெயாம், தனது அரசை உறுதியுடன் நிலைநாட்டி, தன்னையே வலிமைப்படுத்திக் கொண்டபோது, ஆண்டவரின் திருச்சட்டத்தைப் புறக்கணிக்கத் தொடங்கினான். இஸ்ரயேலர் எல்லாருமே அவனைப்போலவே நடந்தனர்.
2. அவர்கள் ஆண்டவருக்கு எதிராகத் துரோகம் செய்ததால் ரெகபெயாம் ஆட்சியின் ஜந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.
3. சீசாக்கின் படையில் ஆயிரத்து இருமறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்: அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள்-லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.
4. அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான்.
5. அப்பொழுது இறைவாக்கினர் செமாயா, ரெகபெயாமிடமும் சீசாக்கின் பொருட்டு எருசலேமில் கூடியிருந்த யூதாவின் தலைவர்களிடமும், வந்து அவர்களை நோக்கி, ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை நீங்கள் புறக்கணித்தால், நீங்கள் சீசாக்கின் கையில் பிடிபடும்படி நானும் உங்களைப் புறக்கணித்துவிட்டேன் என்று கூறினார்.
6. அதைக் கேட்ட இஸ்ரயேல் தலைவர்களும் அரசனும் தங்களையே தாழ்த்தி ஆண்டவர் நீதியுள்ளவர் என்று கூறினர்.
7. அவர்கள் தங்களையே தாழ்த்திக் கொண்டதைக் கண்டு, ஆண்டவர் மீண்டும் செமாயாவிடம், அவர்கள் தங்களையே தாழ்த்திக்கொண்டதால் அவர்களை நான் அழிக்க மாட்டேன். விரைவில் அவர்களுக்கு விடுதலை அளிப்பேன்: என் கடும் சினம் சீசாக்கின் வழியாக எருசலேம்மீது விழாது.
8. ஆயினும், எனக்கு ஊழியம் செய்வதற்கும் மற்ற நாடுகளின் அரசர்களுக்கு ஊழியம் செய்வதற்குமுள்ள வேறுபாட்டை உணரும்வண்ணம், அவர்கள் சீசாக்கின் அடிமைகளாக இருப்பார்கள் என்றார்.
9. அவ்வாறே எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, ஆண்டவரது இல்லத்தின் கருவூலங்கள், அரண்மனைச் செல்வங்கள் அனைத்தையும் சூறையாடினான். மேலும், சாலமோன் செய்திருந்த பொற் கேடயங்களையும் எடுத்துச் சென்றான்.
10. அவற்றிற்குப் பதிலாக அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்கள் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவரிடம் ஒப்படைத்தான்.
11. ஆண்டவரின் இல்லத்திற்குள் அரசன் நுழையும் போதெல்லாம், வாயிற்காப்போர் அக்கேடயங்களை ஏந்தி உடன் செல்வர்: பின்னர் அவற்றைக் காவல் அறையில் வைப்பர்:
12. இவ்வாறு அரசன் தன்னையே தாழ்த்திக்கொண்டதாலும், யூதாவில் நற்செயல்கள் காணப்பட்டதாலும், ஆண்டவர் அவனை முற்றிலும் அழிக்காதவாறு அவரது சினம் அவனைவிட்டு அகன்றது.
13. அரசன் ரெகபெயாம் தன்னையே வலிமைப்படுத்திக்கொண்டு எருசலேமில் ஆட்சி செய்தான். ரெகபெயாம் அரசனானபோது, அவனுக்கு வயது நாற்பத்து ஒன்று. ஆண்டவர் தம் திருப்பெயரை நிலைபெறச் செய்ய இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்துகொண்ட நகரான எருசலேமில் ரெகபெயாம் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அம்மோனியளான நாமா என்பவளே அவன் தாய்.
14. ஆண்டவரை நாடுவதில் அவனது உள்ளம் உறுதியாய் இராததால், அவன் தீயன செய்தான்.
15. ரெகபெயாமின் பிற செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை இறைவாக்கினர் செமாயாவின் குறிப்பேட்டிலும், திருக்காட்சியாளர் இத்தோவின் பதிவேட்டிலும் எழுதப்பட்டுள்ளன அல்லவா? ரெகபெயாமும் எரொபவாமும் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
16. பின்பு ரெகபெயாம் தன் மூதாதையருடன் துயில் கொண்டான்: அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவன் மகன் அபி