தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

 Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு >  புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவாபுத்தகம் 7. நீதித்தலைவர்கள்புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14  - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 -  நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்

Holy Bible - Old Testament
Book 12. King -II

விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல்


Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



அதிகாரம் 1.


1.     ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
2.     அப்பொழுது அகசியா சமாரியாவில் தன் மேல் மாடியிலிருந்து பலகணி வழியாய்க் கீழே விழுந்து காயமுற்றான். எனவே அவன் பதரிடம், நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் சென்று, “இக்காயம் எனக்குக் குணமாகுமா?“ என்று கேட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
3.     ஆனால் ஆண்டவரின் பதர் திஸ்பேயைச் சார்ந்த எலியாவிடம், நீ புறப்பட்டுச் சமாரிய அரசனின் பதரைச் சந்தித்து அவர்களிடம், “இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் நீங்கள் குறிகேட்கப்போகிறீர்கள்? எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
4.     நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப் போவாய்: இது உறுதி! என்று சொல் என்றார். அவ்வாறே எலியா புறப்பட்டுப் போனார்.
5.     திரும்பி வந்த பதரை நோக்கி, அரசன், ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்? என்று அவர்களைக் கேட்டான்.
6.     அதற்கு அவர்கள் மறுமொழியாக, வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, “நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப் போவாய்: இது உறுதி! என்று சொல்லுங்கள்“ என்றார் என்று கூறினர்.
7.     அவன் அவர்களிடம், உங்களைச் சந்திக்க வந்து உங்கள்டம் இவற்றை அறிவித்த ஆள் எப்படி இருந்தான்? என்று கேட்டான்.
8.     அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, அவர் மயிரடர்ந்த மனிதர்: இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார் என்றனர். அப்பொழுது அவன், அந்த ஆள் திஸ்பேயைச் சா¡ந்த எலியாதான்! என்றான்.
9.     உடனே அரசன் ஜம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஜம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை! என்றான்.
10.     எலியா ஜம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஜம்பது பேரையும் சுட்டெரிக்கும்! என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஜம்பது பேரையும் சுட்டெரித்தது.
11.     அகசியா மீண்டும் வேறொரு தலைவனை அவனுடைய வீரரோடு அனுப்பினான். அத்தலைவனும் மேலேறிச் சென்று எலியாவிடம், கடவுளின் அடியவரே! விரைவாய் கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை! என்றான்.
12.     எலியா மறுமொழியாக, நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஜம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்! என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஜம்பது பேரையும் சுட்டெரித்தது.
13.     அகசியா மூன்றாம் முறையாகத் தலைவன் ஒருவனை அவனுடைய ஜம்பது வீரரோடு அனுப்பினான். மூன்றாம் தலைவனும் மேலேறிச் சென்று, எலியாவின் முன் முழந்தாளிட்டு, கடவுளின் அடியவரே! என் உயிரையும், உம் அடியாராகிய இந்த ஜம்பதின்மர் உயிரையும் காத்தருளும்!
14.     வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஜம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஜம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்! என்று மன்றாடினான்.
15.     அப்பொழுது ஆண்டவரின் பதர் எலியாவிடம், அவனோடு இறங்கிச் செல். அவனுக்கு அஞ்ச வேண்டாம் என்றார். எனவே எலியா எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிச் சென்றார்.
16.     அவர் அரசனை நோக்கி, ஆண்டவர் கூறுவது இதுவே: இறை உளத்தைத் தெரிந்துகொள்ள இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் பதரை அனுப்பினாய்? எனவே நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப்போவாய்: இது உறுதி! என்றார்.
17.     எனவே எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம் அரசன் ஆனான். இது யூதா அரசன் யோசபாத்தின் மகன் யோராமின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது.
18.     அகசியாவின் ஆட்சியைப் பற்றிய பிற செய்திகளும், அவனுடைய பிற செயல்களும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

அதிகாரம் 2.


1.     ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
2.     எலிசா எலிசாவை நோக்கி, ஆண்டவர் என்னைப் பெத்தேலுக˜கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். எலிசா அவரை நோக்கி, வாழும் ஆண்டவர்மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.
3.     அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர் ஆம், எனக்குத் தெரியும்: அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று கூறினார்.
4.     எலியா அவரை நோக்கி, எலிசா! ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர், வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர்.
5.     அப்பொழுது, எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை அணுகி, ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர், ஆம், எனக்குத் தெரியும்: அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்றார்.
6.     மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர்1வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மைவிட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர்.
7.     அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஜம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.
8.     அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்து கொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர்.
9.     அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல் என்று கேட்டார். அதற்கு எலிசா, உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக! என்றார்.
10.     எலியா அவரை நோக்கி, நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும்போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்: இல்லையெனில் கிடைக்காது என்றார்.
11.     இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்.
12.     எலிசா அதைக் கண்டு, என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே! என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காணமுடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கெண்டார்.
13.     மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார்.
14.     பின்பு அவர், எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்? என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.
15.     எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் தம் கண் முன்னால் நிகழந்தவற்றைக் கண்டு, எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கியுள்ளது! என்று கூறி அவர்கள் அவரிடம் வந்து, அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
16.     மேலும் அவரை நோக்கி, இதோ! உம் அடியார்களிடம் ஜம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் பக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்! என்றனர். அதற்கு அவர், அவர்களை அனுப்ப வேண்டாம் என்றார்.
17.     ஆனால் எலிசா சலிப்படையும் வரை அவர்கள் அவரை வற்புறுத்தினர். இறுதியாக அவர், அனுப்பிவையுங்கள் என்றார். எனவே அவர்கள் ஜம்பது ஆள்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
18.     எனவே அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? என்றார்.
19.     அந்த நகர மக்கள் எலிசாவை நோக்கி, இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது என்பதை எம் தலைவராகிய தாங்கள் அறிவீர். ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை என்றனர்.
20.     அதற்கு அவர் ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றார்.
21.     அவர்கள் அவ்வாறே கொண்டுவர, எலிசா நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, இதோ! ஆண்டவர் கூறுகிறார்: இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது: நிலமும் பயன் தரும் என்றார்.
22.     அன்று முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசாவின் வாக்கிற்கேற்ப நல்லதாக இருக்கின்றது.
23.     அங்கிருந்து எலிசா பெத்தேலுக்கு ஏறிச் சென்றார். அவ்வாறு அவர் செல்லும் வழியில் சில சிறுவர் நகரினின்று வந்து, வழுக்கைத் தலையா, போ! வழுக்கைத் தலையா, போ! என்று ஏளனம் செய்தனர்.
24.     எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து ஆண்டவரின் பெயரால் அவர்களைச் சபித்தார். உடனே காட்டிலிருந்து இரு பெண் கரடிகள் வெளி வந்து சிறுவர்களுள் நாற்பத்திரண்டு பேரைக் குதறிப்போட்டன.
25.     பின்பு எலிசா கர்மேல் மலைக்குச் சென்று, அங்கிருந்து சமாரியாவுக்குத் திரும்பினர்.

அதிகாரம் 3.


1.     யூதாவின் அரசன் யோசபாத்தினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் சமாரியாவில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான்.
2.     அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்த போதிலும், தன் தாய் தந்தையைப் போல் அவ்வளவு தீயவனாய் இல்லை. ஏனெனில், அவன் தன் தந்தை செய்து வைத்திருந்த பாகால் சிலைத்பணை அகற்றி விட்டான்.
3.     எனினும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் தீயவழியில் அவனும் நிலையாய் நின்றான். அதை விட்டு அவன் விலகவில்லை.
4.     இது நிற்க, மோவாபிய மன்னன் மேசா ஏராளமான ஆட்டு மந்தைகளை வளர்த்து வந்தான். அவன் இஸ்ரயேல் அரசனுக்கு ஆண்டுக்கு ஒர் இலட்சம் செம்மறிகளையும் ஓர் இலட்சம் ஆட்டுக்கிடாய்களின் கம்பளி உரோமத்தையும் கப்பமாகக் கொடுத்து வந்தான்.
5.     ஆனால் ஆகாபு இறந்தபின், மோவாபிய மன்னன் இஸ்ரயேல் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
6.     எனவே அரசன் யோராம் உடனே இஸ்ரயேலர் அனைவரையும் சமாரியாவில் ஒன்று திரட்டினான்.
7.     அவ்வாறு அவன் செல்கையில், மோவாபிய மன்னன் எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்கிறான். எனவே, மோவாபுக்கு எதிராய்ப் போரிட என்னோடு வருவீரா? என்று கேட்குமாறு யூதாவின் அரசன் யோசபாத்திடம் ஆளனுப்பினான். அவன் மறுமொழியாக, வருகிறேன். உம்மைப்போலவே நானும் தயார்! உம் மக்களைப் போலவே என் மக்களும்: உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும் என்றான்.
8.     பின்பு அவன், எவ்வழியே சென்று நாம் தாக்கலாம்? என்று கேட்டான். அதற்கு அவன், ஏதோம் பாலைநில வழியாகப் போவோம் என்று பதிலளித்தான்.
9.     அவ்வாறே இஸ்ரயேல் அரசன் யூதாவின் அரசனோடும், ஏதோமின் மன்னனோடும் புறப்பட்டான். அவர்கள் ஏழு நாள் சுற்று வழியில் சென்றபின், படை சீரர்களுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த விலங்கினங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.
10.     அப்பொழுது இஸ்ரயேலின் அரசன், அந்தோ! அரசர்களாகிய நம் மூவரையும் ஆண்டவர் இங்கே கூட்டி வந்தது மோவாபியர் கையில் ஒப்புவிக்கவா? என்றான்.
11.     அப்பொழுது, யோசபாத்து, ஆண்டவரின் விருப்பத்தைத் தெரிவிக்கக் கூடிய இறைவாக்கினர் யாரும் இங்கு இல்லையா? என்று கேட்டான். இஸ்ரயேல் அரசனின் பணியாளன் ஒருவன், சாபாற்றின் மகன் எலிசா இங்கே இருக்கிறார். இவர் எலியா கைகளைக் கழுவும்போது தண்ணீர் ஊற்றி வந்தவர் என்றான்.
12.     யோசபாத்து, ஆம், ஆண்டவரின் வாக்கு அவரிடம் உள்ளது என்றான். எனவே இஸ்ரயேலின் அரசன், யோசபாத்து, ஏதோமின் மன்னன் ஆகிய மூவரும் எலிசாவிடம் சென்றனர்.
13.     எலிசா இஸ்ரயேல் அரசனிடம், உனக்கும் எனக்கும் என்ன உறவு? உன் தந்தையின் இறைவாக்கினரையும், உன் தாயின் இறைவாக்கினரையும் நாடிச் செல்! என்றார். ஆனால், இஸ்ரயேலின் அரசன், இல்லை, ஆண்டவர்தாம் அரசர்களாகிய எங்கள் மூவரையும், மோவாபியர் கையில் ஒப்புவிக்கும்படி இங்கே கூட்டி வந்துள்ளார் என்றான்.
14.     எலிசா அவனை நோக்கி, நான் பணியும் படைகளின் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! யூதாவின் அரசன் யோசபாத்தின் மீது நான் பெருமதிப்புக் கொண்டுள்ளேன். இல்லையேல், உன் முகத்தில் விழித்திருக்கவே மாட்டேன். ஒரு பாணனை அழைத்து வாருங்கள் என்றார்.
15.     அவ்வாறே பாணன் ஒருவன் வந்து யாழிசைக்கவே ஆண்டவரது ஆற்றல் எலிசாவின் மேல் இறங்கியது.
16.     அப்பொழுது அவர், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்தப் பள்ளத்தாக்கு எங்கும் குழிகளை வெட்டுங்கள்.
17.     ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் காற்றையோ மழையையோ காணப்போவதில்லை. ஆயினும் இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். நீங்களும், உங்கள் கால்நடைகளும், விலங்கினங்களும் நீர் அருந்துவீர்கள்.
18.     இது ஆண்டவரது பார்வையில் எளிதான ஒன்று. அவர் மோவாயிரை உங்கள் கையில் ஒப்புவிப்பார்.
19.     நீங்கள் எல்லா அரண்சூழ் நகர்களையும் எல்லா மாநகர்களையும் முறியடிப்பீர்கள். நீங்கள் எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்துவீர்கள். எல்லா நீருற்றுகளையும் பர்த்துவிடுவீர்கள். எல்லா நல்ல வயல்களையும் கல்லால் நிரப்பி விடுவீர்கள் என்றார்.
20.     மறுநாள் காலை, பலி செலுத்தும் நேரத்தில் இதோ! தண்ணீர் ஏதோம் திக்கிலிருந்து ஓடி வந்தது! நாடு தண்ணீரால் நிரம்பியது.
21.     “தங்களோடு போர் புரிய அரசர்கள் வருகிறார்கள்“ என்று மோவாபியர் அனைவரும் கேள்வியுற்று, படைக்கலம் தாங்கக் கூடிய இளையோர், முதியோர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லையில் அணிவகுத்து நின்றனர்.
22.     மோவாபியர் காலையில் எழுந்த பொழுது, கதிரவனின் ஒளி தண்ணீர்மீது ஒளிர்ந்தது. மறுபக்கம் இருந்த அவர்களுக்குத் தண்ணீர் இரத்த வெள்ளமாயத் தோன்றியது.
23.     உடனே அவர்கள், அது இரத்தம்! அந்த அரசர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் மற்றவரை வெட்டி வீழ்த்திவிட்டனர். மோவாபியரே! வாருங்கள்! கொள்ளையடிப்போம்! என்றனர்.
24.     ஆனால் அவர்கள் இஸ்ரயேலின் பாசறைக்குள் நுழைந்தவுடன், இஸ்ரயேலர் எழுந்து மோவாபியரைத் தாக்கினர். இவர்கள் அவர்கள் முன்னிலையிலிருந்து பாய்ந்து தப்பி ஓடினர். ஆயினும், இஸ்ரயேலர் துரத்திச் சென்று மோவாபியரை வெட்டி வீழ்த்தினர்.
25.     பின்னர் அவர்கள் நகர்களைத் தகர்த்து, எல்லா நல்ல நிலங்கள் மீதும் ஆளுக்கு ஒரு கல் வீசி நிரப்பினர். எல்லா நீருற்றுக்களையும் பர்த்து, எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். அரண் சூழ்ந்த கீர் அரசேத்து மட்டும் எஞ்சி நின்றது. அந்நகரையும் கவண் வீசுவோர் வளைத்து அழித்தனர்.
26.     தனக்கு எதிராகப் போரின் முடிவு இருந்ததை அறிந்த மோவாபிய மன்னன், வாளேந்திய எழுமறு வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, ஏதோம் மன்னனை எதிர்க்கச் சென்றான். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
27.     பின்னர், அவன் தனக்குப்பின் அரசாளும் உரிமையுள்ள தன் தலைமகனை இட்டுச் சென்று, மதிலின்மேல் அவனை எரிபலியாக ஒப்புக் கொடுத்தான். இஸ்ரயேலர் தங்களுக்கு எதிராகக் கடுஞ்சினம் மூள்வதைக் கண்டு, அவனை விட்டு அகன்று தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.

அதிகாரம் 4.


1.     அப்பொழுது இறைவாக்கினர் குழுவினரைச் சார்ந்த ஒருவரின் மனைவி எலிசாவிடம் வந்து கதறி அழுது, உம் அடியவனாகிய என் கணவர் இறந்து விட்டார். அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர் என்பது உமக்குத் தெரியும். அவருடைய கடன்காரன் என் இரு பிள்ளைகளையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக் கொள்ள வந்திருக்கிறான் என்றார்.
2.     எலிசா அவரை நோக்கி, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல் என்றார். அதற்கு அவர் உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை என்றார்.
3.     எலிசா, நீ சுற்றிலும் சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டுக் வாங்கிக் கொள்.
4.     நீ உன் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்துவை என்றார்.
5.     அவ்வாறே, அவரும் தம் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக் கொண்டார். அவர்கள் எடுத்துத் தந்த கிண்ணங்களில் அவர் எண்ணெய் ஊற்றினார்.
6.     எல்லாப் பாத்திரங்களும் நிறைந்தபின் அவர் தம் மகன் ஒருவனை நோக்கி, இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றார். அதற்கு அவன், வேறு பாத்திரம் இல்லை என்றான். அத்தோடு எண்ணெய் வருவதும் நின்றுவிட்டது.
7.     கடவுளின் அடியவரிடம் அவர் வந்து அதை அறிவித்தார். அதற்கு அவர், நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் புதல்வரும் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.
8.     ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார்.
9.     அவர் தம் கணவனை நோக்கி, நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன்.
10.     ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும் என்றார்.
11.     ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார்.
12.     பின்பு அவர் தம் பணியாளன் கேகசியை நோக்கி, அந்தச் சூனேம் பெண்ணைக் கூப்பிடு என்றார்.
13.     அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, நீ அவளிடம் “அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?“ என்று கேள் என்றார். அதற்கு அவர், என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன் என்று பதிலளித்தார்.
14.     மீண்டும் எலிசா, வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்? என்று கேட்டார். அதற்குக் கேகசி, அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது என்றான்.
15.     எலிசா, அவளை இங்கு வரச் சொல் என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார்.
16.     எலிசா அவரை நோக்கி, அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான் என்றார். அதற்கு அவர், என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம் என்றார்.
17.     எலிசா, அப்பெண்ணுக்கு முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
18.     குழந்தையும் வளர்ந்தான். ஒரு நாள் அவன் அறுவடை செய்வோருடன் இருந்த தன் தந்தையிடம் சென்றான்.
19.     அவன் தன் தந்தையிடம், ஜயோ! தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது என்று சொன்னான். தந்தையும் தம் வேலையாள் ஒருவனிடம், நீ இவனை இவன் தாயிடம் பக்கிக் கொண்டு போ என்றார்.
20.     அவன் அப்படியே பிள்ளையைத் பக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.
21.     அவரோ கடவுளுடைய அடியவரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினார். பின்னர் கதவைத் பூட்டிவிட்டு வெளியே வந்தார்.
22.     தம் கணவனை அழைத்து அவரிடம், வேலைக்காரன் ஒருவனை ஒரு கழுதையுடன் என்னோடு அனுப்பி வைக்கவும். கடவுளின் அடியவரிடம் நான் உடனே போக வேண்டும். விரைவில் திரும்பி வருகிறேன் என்றார்.
23.     அதற்கு அவருடைய கணவர், நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை: ஓய்வு நாளும் இல்லையே! என்றார். அதற்கு அப்பெண், நல்லதற்குத் தான் என்றார்.
24.     கழுதைக்குச் சேணமிடச் செய்தபின், அவர் தம் வேலையாளை நோக்கி, கழுதையை வேகமாக ஓட்டிச் செல். நான் சொன்னால் ஒழிய, அதன் வேகத்தைக் குறைக்காதே! என்றார்.
25.     அவ்வாறே அவர் புறப்பட்டு, கர்மேல் மலையிலிருந்து அடியவரிடம் வந்து சேர்ந்தார். அவர் தம்மை நோக்கி வருவதைத் தொலையிலிருந்து பார்த்த எலிசா தம் வேலையாள் கேகசியை நோக்கி,
26.     இதோ! சூனேம் பெண் வருகிறாள். அவளைச் சந்திக்க உடனே விரைந்து செல். அவளிடம், “நீ நலமா? உன் கணவர் நலமா? உன் குழந்தை நலமா?“ என்று கோள் என்றார்.
27.     அப்பெண் மறுமொழியாக, ஆம், நலமே என்றார், பிறகு அவர் மலையில் இருந்த கடவுளின் அடியவரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அவரை அப்புறப்படுத்த கேகசி அருகில் வந்தபோது, கடவுளின் அடியவர், அவளை விட்டுவிடு, ஏனெனில் அவளது உள்ளம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ஆண்டவர் அதை எனக்கு அறிக்காமல் மறைத்து விட்டார் என்றார்.
28.     அப்பொழுது அப்பெண் ஜயா! உம்மிடம் நான் மகப்பேறு கேட்டதுண்டா? “என்னை ஏமாற்ற வேண்டாம்“ என்று உமக்கு நான் முன்பே சொல்லவில்லையா? என்றார்.
29.     அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, நீ இடுப்பை வரிந்து கட்டிக் கொண்டு, எனது ஊன்று கோலை உன் கையில் எடுத்துக் கொண்டு போ. வழியில் யாரையாவது கண்டால் வணக்கம் செய்யாதே. உனக்கு யாராவது வணக்கம் செய்தாலும் பதில் வணக்கம் செய்யாதே. என் ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வை என்றார்.
30.     ஆனால், பிள்ளையின் தாய் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர்மேலும் ஆணை! உம்மை நான் விடமாட்டேன் என்றார்.
31.     எனவே எலிசா எழுந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார். கேகசி இவர்களுக்கு முன்பே புறப்பட்டுச் சென்று, ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான். ஆயினும் பிள்ளைக்குப் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. எனவே அவன் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, பிள்ளை கண் திறக்கவில்லை என்று அறிவித்தான்.
32.     எலிசா வீட்டினுள் நுழைந்தபோது, இறந்த பிள்ளை தம் படுக்கையில் கிடப்பதைக் கண்டார்.
33.     உடனே அவர் உள்ளே சென்று, அவர்கள் இருவரும் வெளியே இருக்க, கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.
34.     பின்பு படுக்கையின் மேல் ஏறி வாயோடு வாயும் கண்களோடு கண்களும், கைகளோடு கைகளும் வைத்து பிள்ளையின்மேல் படுத்தார். உடனே பிள்ளையின் உடம்பில் சூடு ஏறியது.
35.     பின்பு கீழிறங்கி, அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின்மேல் ஏறி அவன் மீது படுத்துக் கொண்டார். அப்பொழுது பிள்ளை ஏழுமுறை தும்மிய பின் கண் திறந்தது.
36.     எனவே எலிசா கேகசியைக் கூப்பிட்டு, அந்த சூனேம் பெண்ணை அழைத்து வா என்றார். அவ்வாறே அவன் அழைக்க, அவர் எலிசாவிடம் வந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, உன் மகனைத் பக்கிக்கொள் என்றார்.
37.     அப்பெண் உள்ளே வந்து அவர் காலடியில் தரை மட்டும் வீழ்ந்து வணங்கியபின், தன் மகனைத் பக்கிக்கொண்டு போனார்.
38.     எலிசா கில்காலுக்குத் திரும்பினார். அப்பொழுது நாட்டில் பஞ்சம் நிலவியது. இறைவாக்கினர் குழுவினர் அவர் முன் அமர்ந்திருக்கையில், எலிசா தம் பணியாளன் ஒருவனை நோக்கி, நீ ஒரு பெரிய பானையை எடுத்து அதில் இறைவாக்கினர் குழுவினர்க்குக் கூழ் காய்ச்சு என்றார்.
39.     அப்பொழுது அவர்களுள் ஒருவன் காட்டுக் கீரை பறிப்பதற்காக வயலுக்குச் சென்றான். அங்கே அவன் பேய்க்குமட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களைத் தன் போர்வை நிறையப் பறித்துக் கொண்டு வந்தான். அவை என்னவென்று தெரியாமல், அவற்றை நறுக்கிப் பானையில் போட்டு அவன் வேக வைத்தான்.
40.     பின்பு அவன் அவர்கள் உண்ணுமாறு அதைப் பறிமாறினான். அவர்கள் அந்தக் கூழை உண்ணத் தொடங்கியதும், கடவுளின் அடியவரே! பானையிலே நஞ்சு! என்று அலறினர். அவர்களால் அதை மேலும் உண்ண முடியவில்லை.
41.     அப்பொழுது அவர், கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள் என்றார். அவர் அதை பானையில் போட்டு, இவர்கள் உண்ணும்படி இதைப் பறிமாறுங்கள் என்று சொன்னார். பானையில் இருந்தது அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.
42.     பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, மக்களுக்கு உண்ணக் கொடு என்றார்.
43.     அவருடைய பணியாளன், இந்த மறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்? என்றான். அவரோ, இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் “உண்ட பின்னும் மீதி இருக்கும்“ என்று ஆண்டவர் கூறுகிறார் என்றார்.
44.     அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

அதிகாரம் 5.


1.     சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்: ஆனால் தொழுநோயாளி.
2.     சு¢ரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.
3.     அவள் தன் தலைவியை நோக்கி, என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார் என்றாள்.
4.     எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள் என்று அவனுக்குத் தெரிவித்தார்.
5.     அப்பொழுது சிரியா மன்னர், சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன் என்றார். எனவே நாமான் ஏறத்தாழ நாடீறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார்.
6.     அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழு நோயை நீர் குணமாக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
7.     இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா! என்று கூறினான்.
8.     கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆளனுப்பி, நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும் என்று சொன்னார்.
9.     அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா விட்டு வாயில்முன் வந்து நின்றார்.
10.     எலிசா, நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும் என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார்.
11.     எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று நான் எண்ணியிருந்தேன்.
12.     அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா? என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.
13.     அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம், எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, “மூழ்கி எழும்: நலமடைவீர்“ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன? என்றனர்.
14.     எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது.
15.     பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும் என்றார்.
16.     அதற்கு எலிசா, நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
17.     அப்பொழுது நாமான் அவரை நோக்கி, சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்: இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.
18.     ஆயினும1 ஒரு காரியத்திற்காக உம் அடியானாகிய என்னை ஆண்டவர் மன்னிப்பாராக! என் தலைவன் வழிபடுவதற்காக ரிம்மோன் கோவிலுக்குச் சென்று என் கையில் சாய்ந்து கொண்டு அதனை வணங்குகையில் நானும் அங்குத் வலை வணங்க நேரிட்டால், உம் அடியானாகிய என்னை அச்செயலுக்காக ஆண்டவர் மன்னிப்பாராக! என்றார்.
19.     அதற்கு எலிசா, அமைதியுடன் சென்று வாரும் என்றார். நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சற்றுத் பரம் போனபின்,
20.     கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன் என்று சொல்லிக் கொண்டான்.
21.     எனவே கேகசி நாமான் பின்னே ஓடிவந்தான். அவன் ஓடிவருவதை நாமான் கண்டு தம் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், என்ன, எல்லாம் நலமா? என்று வினவினார்.
22.     அவன் மறுமொழியாக, ஆம், எல்லாம் நலமே! என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, “இறைவாக்கினர் குழுவினரான இரண்டு இளைஞர் எப்ராயிம் மலைநாட்டிலிருந்து இப்பொழுது தான் வந்துள்ளனர். அவர்களுக்கு நாற்பது கிலோ வெள்ளியும் இரண்டு பட்டாடைகளும் கொடுத்து அனுப்பும்“ என்று சொல்லச் சொன்னார் என்றான்.
23.     அதற்கு நாமான், எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம் வையும் என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.
24.     கேகசி மலையை வந்தடைந்ததும் அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் அவர்களை அனுப்பி வைக்க, அவர்களும் திரும்பிச் சென்றனர்.
25.     அவன் தன் தலைவரிடம் வந்து அவர்முன் நின்றான். எலிசா அவனை நோக்கி, கேகசி! நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். அவன், அடியேன் எங்கும் செல்லவில்லை என்றான்.
26.     அதற்கு அவர், அந்த ஆள் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்ததை நான் ஞானத்தால் அறிந்தேன். வெள்ளி, ஆடைகள், ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள்- இவைகளைப் பெற்றுக் கொள்ள இதுவா சமயம்?
27.     எனவே, நாமானின் தொழுநோய் உன்னையும் உன் வழிவந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்! என்றார். அவ்வாறே அவனுக்குத் தொழுநோய் பிடிக்க, அவன் உடம்பெல்லாம் வெண்பனி போலாயிற்று. அவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றான்.

அதிகாரம் 6.


1.     ஒரு நாள் இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை நோக்கி, உம்மோடு நாங்கள் வாழும் இந்த இடம் மிகக் குறுகியதாய் உள்ளது.
2.     எனவே நாங்கள் யோர்தானுக்குச் சென்று ஆளுக்கொரு உத்திரம் கொண்டு வந்து வீடொன்று கட்டி அதில் குடிபுகுவோம் என்றனர். அதற்கு அவர், போய், வாருங்கள் என்றார்.
3.     அவர்களில் ஒருவன், நீரும் உம் அடியாராகிய எம்மோடு வாரும் என்று அழைத்தான். நானும் வருகிறேன் என்று அவர் கூறினார்.
4.     எனவே அவரும் அவர்களுடம் யோர்தானுக்குச் சென்றார்.
5.     அவர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வாறு ஒருவன் உத்திரம் வெட்டிக்கொண்டிருந்தபோது அவனது கோடரி கழன்று தண்ணீரில் விழுந்தது. உடனே அவன் ஜயோ! என் தலைவரே, இது இரவல் பொளாயிற்றே! என்று கத்தினான்.
6.     அப்போது கடவுளின் அடியவர், அது எங்கு வீழ்ந்தது என்று கேட்டார். அவனும் அந்த இடத்தைக் காட்டினான். உடனே எலிசா ஒரு கம்பை வெட்டி அங்கு எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கியது.
7.     அவர் அதை எடுத்துக் கொள் என்று அவனிடம் கூற, அவனும் கை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
8.     சிரியாவின் மன்னன் இஸ்ரயேல் நாட்டின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, இந்த இடத்தில் பாளையம் இறங்குவோம் என்றான்.
9.     அப்பொழுது கடவுளின் அடியவர் இஸ்ரயேல் அரசனிடம் ஆளனுப்பி, அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும், ஏனெனில் அங்கே சிரியர் பதுங்கி இருக்கின்றனர் என்று சொல்லச் சொன்னார்.
10.     இஸ்ரயேல் அரசன் கடவுளின் அடியவர் எச்சரித்துக் குறிப்பிட்ட ஒவ்வோர் இடத்திற்கும் ஆளனுப்பினான். இவ்வாறு அவன் தன்னைக் காத்துக் கொண்டது ஒருமுறை, இருமறை அல்ல.
11.     இதன் பொருட்டுச் சிரியாவின் அரசன், நெஞ்சம் கொதித்துத் தன் பணியாளர்களைக் கூப்பிட்டு, இஸ்ரயேல் அரனுக்கு ஒற்றனாக நம்மிடையே ஒருவன் இருக்கின்றான். அவன் யாரென்று தெரிய வேண்டும் என்றான்.
12.     பணியாளருள் ஒருவன் அவனை நோக்கி, என் தலைவரான அரசே! அப்படி ஒருவனும் இங்கில்லை. ஆனால், இஸ்ரயேலில் இருக்கும் எலிசா என்ற இறைவாக்கினர் தாங்கள் பள்ளியறையில் பேசுவதைக்கூடத் தம் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகிறார் என்றான்.
13.     அதற்கு அரசன், நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். நான் ஆள்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன் என்றான். “அவர் தோத்தானில் இருக்கிறார்“ என்று தெரிவிக்கப்பட்டது.
14.     ஆதலால் அரசன் அங்குக் குதிரைகளையும், தேர்களையும் பெரிய படையையும் அனுப்பினான். அவர்கள் இரவோடு இரவாக வந்து நகரைச் சூழ்ந்து கொண்டனர்.
15.     கடவுளுடைய அடியவரின் வேலைக்காரன் வைகறையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும், குதிரைகளும், தேர்களும் நகரைச் சூழ்ந்திருக்கக் கண்டு, ஜயோ! என் தலைவரே, என்ன செய்வோம்? என்று கதறினான்.
16.     அதற்கு அவர், அஞ்ச வேண்டாம். அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம் என்றார்.
17.     பின்பு எலிசா, ஆண்டவரே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்! என்று வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ! மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான்.
18.     சிரியா நாட்டினர் அவரை நெருங்கி வந்த பொழுது, எலிசா ஆண்டவரை நோக்கி, இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும் என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார்.
19.     அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி, இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார்.
20.     அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்! என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதை இவர்கள் கண்டனர்.
21.     இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டவுடன் எலிசாவை நோக்கி, என் தந்தையே! இவர்களை நான் வெட்டி வீழ்த்தட்டுமா? என்றான்.
22.     அதற்கு அவர், கொல்லாதே! நீ சிறைப்படுத்தியவர்களை நீயே உன் வாளினாலோ அம்பினாலோ கொல்வாயா? எனவே அவர்கள் பசிதாகம் தீர அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்கள் தங்கள் தலைவனிடம் திரும்பிச் செல்லட்டும் என்றார்.
23.     அவ்வாறே அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்தளித்தான். அவர்களும் உண்டு குடித்தனர். பின்னர் அவன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் தங்கள் தலைவனிடம் திரும்பிச் சென்றனர். அதன்பின் சிரியாக் கொள்ளைக் கூட்டத்தினர் இஸ்ரயேல் நாட்டுக்குள் காலெடுத்து வைக்கவில்லை.
24.     பின்னர் சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான்.
25.     எனவே சமாரியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஒரு கழுதைத் தலை, எண்பது வெள்ளிக் காசுக்கும், புறாவின் எச்சம் கால்படி ஜந்து வெள்ளிக் காசுக்கும் விற்கும் அளவுக்கு முற்றுகை கடுமையாய் இருந்தது.
26.     இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண், அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்! என்று கூக்குரலிட்டாள்.
27.     அதற்கு அவன், ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா? என்றான்.
28.     பின்னும் அரசன் அவளிடம், உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அவள், இதோ! ஒரு நாள் இந்தப் பெண் என்னை நோக்கி, “இன்று நாம் உண்பதற்கு உன் மகனைக் கொடு: நாளை என் மகனைத் தின்போம்“ என்றாள்,
29.     அவ்வாறே நாங்கள் என் மகனைச் சமைத்துத் தின்றோம். மறுநாள் நான் அவளிடம், “நாம் உண்ணும்படி என் மகனைக் கொடு!“ என்றேன். ஆனால் அவளோ தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள் என்று சொன்னாள்.
30.     அரசன் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அவன், நகர மதில் வழியாக நடந்து செல்கையில், தன் உடலின்மேல் கோணியாடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.
31.     அரசன், இன்றைக்குள் நான் சாபாற்றின் மகன் எலிசாவின் தலையை வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாராக! என்றான்.
32.     அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்பதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி, இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்பதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா? என்றார்.
33.     இவ்வாறு அவர் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், அரசன் அவரிடம் வந்து சேர்ந்தான். அப்பொழுது அவன், இந்தத் தீமை ஆண்டவரிடமிருந்தே வருகிறது! அப்படியிருக்க ஆண்டவருக்காக நான் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்? என்றான்.

அதிகாரம் 7.


1.     அப்பொழுது எலிசா, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும் என்றார்.
2.     அரசனுக்குப் பக்கபலமாயிருந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்டான். அதற்கு அவர், இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய் என்றார்.
3.     நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளிகள் இருந்தனர். இவர்கள் ஒருவர் ஒருவரிடம், சாவை எதிர்நோக்கி, நாம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும்? நாம் நகருக்குள் செல்வோமாயின், நகரில் பஞ்சம் இருப்பதால், நாம் செத்தப் போவோம்.
4.     இங்கேயே தங்கி இருந்தாலும் சாக வேண்டியதுதான். வாருங்கள்! சிரியாவின் பாசறைக்குச் சென்று தஞ்சம் புகுவோம். அவர்கள் நம்மை வாழவிட்டால், நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால் செத்துப்போவோம் என்று பேசிக் கொண்டனர்.
5.     இருள் கவிழ்ந்த வேளையில் அவர்கள் சிரியரின் பாசறையின் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒருவரும் இல்லை.
6.     ஏனெனில் தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி “தலைவர்“ செய்திருந்தார். எனவே அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்தி அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான் என்று சொல்லிக்கொண்டனர்.
7.     எனவே அவர்கள் இருள் கவிழ்ந்த வேளையில் ஓட்டம்பிடித்தனர். தங்கள் கூடாரங்களையும், கழுதைகளையும், பாசறையையும் அப்படியே விட்டுவிட்டு உயிருக்காகத் தப்பி ஓடினர்.
8.     ஆகவே இந்தத் தொழுநோயாளிகள் பாசறையின் எல்லையை நெருங்கி, ஒரு கூடாரத்தின் உள்ளே நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும் அங்கிருந்த வெள்ளி, பொன், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் திரும்பி வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து அங்கிருந்தவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தனர்.
9.     பிறகு அவர்கள் ஒருவர் ஒருவரிடம், இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை இதை வெளியிடாது மெளனமாய் இருந்தால், நாம் குற்றவாளிகள் ஆவோம். வாருங்கள்! நாம் போய் அரச மாளிகையில் இதை அறிவிப்போம் என்று சொல்லிக்கொண்டனர்.
10.     அவர்கள் சென்று நகர வாயிற் காவலனை அணுகி, நாங்கள் சிரியாவின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன என்று தெரிவித்தனர்.
11.     வாயிற் காவலர் இதை உரத்த குரலில் சொல்ல, அது உள்ளே அரச மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டது.
12.     அரசன் இரவிலேயே எழுந்து தன் பணியாளரை நோக்கி, சிரியர் நமக்கு எதிராகச் செய்துள்ளதைக் கேளுங்கள்: நாம் பட்டினியால் வருந்துவதை அறிந்து, அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, “இஸ்ரயேலர் நகரிலிருந்து வெளியேறுவார் அப்பொழுது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு நகரினுள் நுழையலாம்“ என்று எண்ணி வயல்வெளிகளில் ஒளிந்திருக்கின்றனர் என்றான்.
13.     அவனுடைய பணியாளருள் ஒருவன், இங்கே எஞ்சியுள்ள குதிரைகளுள் ஜந்தினைச் சிலர் ஓட்டிக்கொண்டு செல்லட்டும். இங்கே எஞ்சியுள்ள இஸ்ரயேலர் அனைவருக்கும் நேரிடுவதை அவர்களுக்கும் நேரிடட்டும். ஆம்: ஏற்கெனவே அழிவுக்குள்ளான இஸ்ரயேலர் அனைவரையும்போல் இவர்களும் அழிவுக்கு உள்ளாவர். எனவே அவர்களை அனுப்பிப் பார்ப்போம் என்றான்.
14.     அவ்வாறே இரண்டு குதிரைத் தேர்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் அரசன் சிலரைச் சிரியர் பாசறைக்கு அனுப்பி, சென்று பாருங்கள் என்று கட்டளையிட்டான்.
15.     அவர்களோ சிரியரைத் தேடி யோர்தான்வரை போனார்கள். இதோ! சிரியர் தப்பிஓடிய வேகத்தில் விட்டெறிந்த ஆடைகளும் படைக்கலன்களும் சிதறிக் கிடந்தன. அத்பதர்கள் அரசனிடம் திரும்பிவந்து அதைத் தெரிவித்தனர்.
16.     உடனே மக்கள் புறப்பட்டுச் சென்று சிரியர் பாசறையைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு ஆண்டவரின் வாக்கின்படி ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டன.
17.     அரசன் தனக்குப் பக்க பலமாயிருந்த அதிகாரியிடம1 நகர்வாயிலின் காவல் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். மக்கள் நகர்வாயிலில் அவனை மிதித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு கடவுளின் அடியவர் தம்மிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது.
18.     இங்ஙனம், நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும் என்று கடவுளின் அடியவர் அரசனிடம் கூறியிருந்த வாக்கு நிறைவேறியது.
19.     ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, இதோ! பாரும் ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் எதையும் நீ உண்ணமாட்டாய் என்று கூறியிருந்தார்.
20.     அவ்வாறே அவனுக்கு நேரிட்டது. மக்கள் அவனை நகர வாயிலில் மிதித்துப்போட அவனும் இறந்து போனான்.

அதிகாரம் 8.


1.     எலிசா தாம் உயிர்ப்பித்துக் கொடுத்த சிறுவனின் தாயான பெண்ணை நோக்கி, நீயும் உன் குடும்பத்தினரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான வேறோர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில் ஆண்டவர் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது நாட்டில் ஏழாண்டுகள் நிலைத்திருக்கும் என்றார்.
2.     எனவே அப்பெண் எழுந்து கடவுளின் அடியவர் வாக்கின்படி செய்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் புறப்பட்டுப் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று அங்கு ஏழாண்டுகள் தங்கியிருந்தனர்.
3.     ஏழாண்டுகள் கடந்தபின் அந்தப் பெண் பெலிஸ்தியர் நாட்டினின்று திரும்பி வந்து தம் வீடும் நிலங்களும் தமக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் முறையிடச் சென்றார்.
4.     அப்பொழுது அரசனும் கடவுளின் அடியவர்க்குப் பணிவிடை செய்து வந்த கேகசியிடம், எலிசா புரிந்துள்ள அரும்பெரும் செயல்களையெல்லாம் எனக்குச் சொல்லும் என்று கேட்டு உரையாடிக் கொண்டிருந்தான்.
5.     அவனும் இறந்தவனை எலிசா உயிர்ப்பித்துக் கொடுத்த நிகழ்ச்சியை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொண்டிருந்தான். உயிர்ப்பிக்கப்பட்ட அதே சிறுவனின் தாய் அப்பொழுது அரசன்முன் வந்து, தம் வீட்டையும் நிலங்களையும் முன்னிட்டு அரசனிடம் முறையிட்டார். அப்பொழுது கேகசி, அரசே! என் தலைவரே! இவள்தான் அந்தப் பெண். இவள் மகனாகிய இவனைத்தான் எலிசா உயிர்ப்பித்தார் என்றான்.
6.     அரசன் அந்தப் பெண்ணிடம் அதைப்பற்றி வினவ, அவரும் நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார். அப்பொழுது அரசன் ஓர் அலுவலனை அழைத்து, அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திருப்பிக் கொடுத்து விடு. மேலும் அவள் நாட்டை விட்டுச் சென்ற நாள்முதல் இன்றுவரை அவளுடைய நிலங்களிலிருந்து கிடைத்த வருவாயையும் அவளுக்குக் கொடுத்து விடு என்று கட்டளையிட்டான்.
7.     எலிசா தமஸ்கு நகருக்கு வந்தபோது சிரியாவின் மன்னன் பெனதாது நோயுற்றிருந்தான். “கடவுளின் அடியவர் இங்கு வந்திருக்கிறார்“ என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
8.     அந்த மன்னன் அசாவேலிடம், கையோடு ஓர் அன்பளிப்பு எடுத்துக் கொண்டு கடவுளின் அடியவரைச் சந்திக்கச் செல். “நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா?“ என்று அவர் மூலம் ஆண்டவரிடம் கேட்டறிந்து வா என்றான்.
9.     எனவே அவன் தமஸ்குவில் கிடைக்கக்கூடிய எல்லா விதமான அரும்பொருள்களையும் நாற்பது ஒட்டகச் சுமையளவு கையோடு அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு சென்றான். அவர் முன் வந்து நின்று அவன் அவரை நோக்கி, நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா? என்று கேட்குமாறு சிரியாவின் மன்னனும் உம் புதல்வனுமான பெனதாது உம்மிடம் என்னை அனுப்பியுள்ளார் என்றான்.
10.     எலிசா மறுமொழியாக, நீ போய், “நீர் நலமடைவது உறுதி“ என்று சொல்: ஆனால், “அவன் செத்துப்போவது திண்ணம்“ என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்றார்.
11.     பிறகு கடவுளின் அயடிவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.
12.     அசாவேல் அவரை நோக்கி, என் தலைவரே, நீர் அழுவது ஏன்? என்று கேட்டான். அதற்கு அவர், நீ இஸ்ரயேல் மக்களுக்கு செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன்: அவர்களின் கோட்டைகளைத் தீக்கிரையாக்குவாய்: அவர்களுடைய இளைஞர்களை வாளுக்கு இரையாக்குவாய்: அவர்களுடைய சிறு குழந்தைகளைத் தரையில் மோதிக் கொல்வாய்: அவர்களுடைய கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய் என்றார்.
13.     அசாவேல் அவரை நோக்கி, நாயினும் இழிந்தவன் அடியேன். இவ்வளவு கேவலமான செயலை நான் செய்வேனா? என்றான். அதற்கு எலிசா, நீ சிரியாவின் மன்னனாகப் போகின்றாய் என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார்.
14.     அசாவேல் எலிசாவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவனிடம் திரும்பிச் சென்றான். மன்னன் அவனை நோக்கி, எலிசா உன்னிடம் என்ன சொன்னார் என்று கேட்டான். அதற்கு அசாவேல், நீர் நலமடைவது உறுதி என்று அவர் எனக்குச் சொன்னார் என்றார்.
15.     மறுநாள் அசாவேல் ஒரு போர்வையை எடுத்துத் தண்ணீரில் நனைத்து மன்னன் முகத்தை மூட, அவன் இறந்து போனான். அசாவேல் அவனுக்குப் பதிலாக அரசனானான்.
16.     இஸ்ரயேல் அரசன் ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற ஜந்தாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்தின் மகன் யோராம் யூதா நாட்டின் அரசனானான்.
17.     அவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் அரசனாகி எட்டு ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி புரிந்தான்.
18.     அவன் ஆகாபின் மகளை மணந்தவன்: ஆதலால் ஆகாபின் குடும்பத்தவரைப்போல இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தான்¥¥¥ : ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
19.     ஆயினும் ஆண்டவர் தம் அடியான் தாவீதை முன்னிட்டு யூதாவை அழிக்க விரும்பவில்லை: ஏனெனில் அவர்தம் மைந்தராம் குல விளக்கை எந்நாளும் காப்பதாக அவருக்க வாக்களித்திருந்தார்.
20.     யோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தங்களுக்கென ஓர் அரசனை நியமித்துக் கொண்டனர்.
21.     ஆனால் யோராம் சாயிருக்குத் தன் தேர்ப்படைகள் அனைத்தோடும் சென்றான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படை தலைவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அவன் இரவில் எழுந்து ஏதோமியரை யூதாவின் வெட்டி வீழ்த்தினான். மக்கள் தம்தம் கூடாரத்திற்கு தப்பி ஓடினர்.
22.     எனவே இந்நாள் வரை ஏதோமியர் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அதே காலத்தில் லிப்னாவும் கிளர்ச்சி செய்தது.
23.     யோராமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?
24.     யோராம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் அகசியா அரசனானான்.
25.     இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா அரசாளத் தொடங்கினான்.
26.     தன் இருபத்திரண்டாம் வயதில் அரசனான அகசியா எருசலேமில் இருந்துகொண்டு ஓராண்டு ஆட்சி செலுத்தினான். இஸ்ரயேல் அரசன் ஓம்ரியின் பேத்தியான அத்தலியா என்பவளே அவன் தாய்.
27.     அவன் ஆகாபு வீட்டு மருமகனாதலின், ஆகாபு குடும்பத்தவரைப் போல நடந்து, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்.
28.     மேலும் சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராய்போரிட ஆகாபின் மகன் யோராமுடன் இராமோத்து கிலயாதுக்குப் போனான். ஆனால் அங்குச் சிரியாப் படையினர் யோராமைத் தாக்கினர்.
29.     சிரியாவின் மன்னன் அசாவேலுடன் இராமோத்தில் போரிடுகையில் சிரியரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்தான். அப்பொழுது யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா, ஆகாபின் மகனும் காயமுற்றிருந்தவனுமான யோராமை இஸ்ரயேலில் காணச் சென்றான்.

அதிகாரம் 9.


1.     அப்பொழுது இறைவாக்கினர் எலிசா இறைவாக்கினரின் குழுவைச் சார்ந்த ஒருவனை அழைத்து, உன் இடையை வரிந்துகட்டி உன் கையில் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இராமோத்து கிலயாதுக்குச் செல்.
2.     அங்குச் சென்றதும் நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூவைத் தேடிக் கண்டுபிடி. அவனை அணுகி, அவனுடைய தோழர்களினின்று அவனைத் தனியே கூப்பிட்டு ஓர் உள்ளறைக்கு அழைத்துச் செல்.
3.     அங்கே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து அவனை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்“ என்று சொல்லி, அவன் மேல் எண்ணெய் வார்ப்பாய். அங்கே நில்லாது கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்துவிடு என்றார்.
4.     அவ்வாறே இறைவாக்கினனான அவ்விளைஞன் இராமோத்து கிலயாதுக்குச் சென்றான்.
5.     அவன் அங்கு வந்ததும் படைத்தலைவர்கள் அமர்ந்திருந்ததைக் கண்டான். அவன் தளபதியே! உம்மிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்றான். அதற்கு ஏகூ, எங்களுள் யாரிடம்? என்று கேட்டான். அதற்கு அவன், தளபதியே! உம்மிடம்தான் என்றான்.
6.     எனவே ஏகூ எழுந்து மாளிகைக்குள் சென்றான். இளைஞனோ அவனது தலையின்மேல் எண்ணெய் வார்த்து, இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: “ஆண்டவராகிய நான் என் மக்களாகிய இஸ்ரயேலுக்கு அரசனாக உன்னைத் திருப்பொழிவு செய்கிறேன்.
7.     உன் தலைவன் ஆகாபின் குடும்பத்தை நீ அழிக்க வேண்டும். இங்ஙனம் ஈசபேலால் சிந்தப்பட்ட என் ஊழியரான இறைவாக்கினரின் இரத்தத்திற்கும் ஆண்டவராகிய என் எல்லா அடியவர்களின் இரத்தத்திற்கும் நான் பழிவாங்குவேன்.
8.     இவ்வாறு ஆகாபின் குடும்பம் முழுவதும் அழியும். இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் அனைவரையும், அடிமைகளாகியனும் உரிமை மக்களாயினும், வெட்டி வீழ்த்துவேன்.
9.     இந்த ஆகாபின் குடும்பத்தை நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்தைப் போலும், அகியாவின் மகன் பாசாவின் குடும்பத்தைப் போலும் ஒழித்துக் கட்டுவேன்.
10.     இஸ்ரயேல் நிலப்பகுதியில் ஈசபேலை நாய்கள் தின்னும். அவளைப் புதைக்க யாரும் வரமாட்டார்கள் என்று கூறிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டான்.
11.     பின்பு ஏகூ தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனை நோக்கி, நல்ல செய்திதானா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தது ஏன்? என்று கேட்டனர். அதற்கு அவன், அவன் யாரென்றும் அவன் சொன்னது என்னவென்றும் உங்களுக்குத் தெரியுமோ! என்ற