|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்

Holy Bible - Old Testament
Book 3. Leviticus
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 3 - லேவியர்
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அதிகாரம் 1.
1. ஆண்டவர் மோசேயை அழைத்துச் சந்திப்புக் கூடாரத்திலிருந்து அவரோடு பேசினார்.
2. இஸ்ரயேல் மக்களோடு நீ பேசி அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: உங்களில் ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சை செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலிருந்தோ ஆட்டு மந்தையிலிருந்தோ கால்நடையை ஒப்புக்கொடுப்பார்.
3. அவரது நேர்ச்சை எரிபலி எனில், மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட, பழுதற்ற ஒரு காளையை அவர் படைக்கவேண்டும். ஆண்டவர் திருமுன் ஏற்புடையதாகுமாறு, அதைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் அவர் படைக்கட்டும்.
4. அவர் எரிபலியின் தலைமேல் தம் கையை வைப்பார். அது அவருடைய பாவத்திற்கு கழுவாயாக ஏற்றுக்கொள்ளப்படும்.
5. அந்த இளம் காளையை அவர் ஆண்டவர் திருமுன் அடிப்பார். ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைக் கொண்டு வந்து, சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.
6. பின்பு, அவர் எரிபலியைத் தோலுரித்துப் பகுதி பகுதியாகத் துண்டிப்பார்.
7. ஆரோனின் புதல்வராகிய குருக்கள் பலிபீடத்தின்மேல் தழல் இட்டு அந்நெருப்பின்மேல் விறகுக் கட்டைகளை அடுக்குவர்.
8. ஆரோனின் புதல்வராகிய குருக்கள் துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் அடுக்கியிருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பர்.
9. அதன் குடலையும் கால்களையும் தண்ணீரில் கழுவி அவை எல்லாவற்றையும் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவர். நெருப்பாலான இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.
10. எரிபலிக்கான அவரது நேர்ச்சை ஆட்டுமந்தையிலுள்ள செம்மறி அல்லது வெள்ளாடாக இருந்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக் கிடாயைக் கொண்டு வரவேண்டும்.
11. ஆண்டவர்திருமுன் பலிபீடத்தின் வடபுறத்தில் அதை அவர் கொல்ல வேண்டும். ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
12. அவர் அதைப் பகுதிகளாகத் துண்டித்து, துண்டங்களோடு தலையையும் கொழுப்பையும் சேர்த்து வைப்பார். பின்பு, குரு அவற்றைப் பலிபீடத்திலுள்ள நெருப்பின்மேல் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கி வைப்பார்.
13. அதன் குடலும் பின்னந்தொடைகளும் தண்ணீரால் கழுவப்படும். அவை அனைத்தையும் பலிபீடத்தின்மேல் குரு எரியூட்டுவார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.
14. அவர் ஆண்டவருக்குச் செலுத்தும் நேர்ச்சை பறவை எரிபலி எனில், காட்டுப் புறாக்களையாவது மாடப்புறாக்களையாவது நேர்ச்சையாகச் செலுத்த வேண்டும்.
15. அதைக் குரு பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து அதன் தலையைத் திருகி, பலிபீடத்தின் எரித்து விடுவார்: அதன் இரத்தத்தையோ பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த விடுவார்:
16. அதன் இரைப்பையையும் இறகுகளையும் அகற்றி, அவற்றைப் பலிபீடத்திற்கருகில் கிழக்குப்புறமாக சாம்பல் இடுகிற இடத்தில் எறிந்து விடுவார்:
17. அதன் இறக்கைகளைப் பிடித்து இரண்டாக்காமல் அதனைக் கிழிப்பார். அவ்வாறு கிழித்தபின் குரு அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரியூட்டுவார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.அதிகாரம் 2.
1. ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக உணவுப்படையல் செய்ய வந்தால், அவர் படையல் மெல்லிய மாவாய் இருக்கட்டும். அவர் அதன் மேல் எண்ணெய் வார்த்து சாம்பிராணிப் பொடி தூவி,
2. அதை ஆரோனின் புதல்வராகிய குருக்களிடம் கொண்டு வருவார். குரு அந்த எண்ணெய், சாம்பிராணி கலந்த அந்த மாவில் கை நிறைய எடுப்பார். நினைவுப் படையலாக அதைக் குரு பலிபீடத்தின் மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப் பலி ஆகும்.
3. உணவுப் படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்புப்பலிகளில் அது மிகவும் தூயது.
4. நேர்ச்சையாக அடுப்பிலே சுட்ட உணவுப்படையலைச் செலுத்தினால், அது எண்ணெயில் பிசைந்த மெல்லியமாவில் செய்த புளிப்பற்ற அதிரசங்களும், எண்ணெயில் தோய்த்த அடைகளுமாய் இருக்கட்டும்.
5. உனது நேர்ச்சை தட்டையான சட்டியில் சுட்ட உணவுப்படையலாக இருந்தால், அது எண்ணெய் வார்த்த புளிப்பற்ற மெல்லிய மாவால் செய்யப்பட வேண்டும்.
6. அதைத் துண்டுகளாகப் பிட்டு அதன்மேல் எண்ணெய் விட வேண்டும், அது ஓர் உணவுப் படையல்.
7. உனது நேர்ச்சை, சட்டியில் செய்யப்படுகிற உணவுப்படையல் எனில், அது மெல்லிய மாவால் எண்ணெயில் செய்யப்படவேண்டும்.
8. இம்முறையில் செய்யப்பட்டவற்றை ஆண்டவருக்கு உணவுப் படையலாகச் செலுத்துவாயாக. அது குருவிடம் வந்து சேரும்போது அவர் அதைப் பலிபீடத்துக்குக் கொண்டு போவார்.
9. குரு உணவுப் படையலிலிருந்து நினைவுப்படையலைத் தனித்தெடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி.
10. உணவுப்படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்பும் பலிகளில் இது மிகவும் தூயது.
11. ஆண்டவருக்குச் செலுத்தும் உணவுப்படையல் எதுவும் புளிப்பேறியதாய்ச் செய்யப்படலாகாது. புளிக்காரம், தேன் எதையுமே ஆண்டவருக்கு நெருப்புப்பலியாக்க வேண்டாம்.
12. அவற்றை, முதற்பலன் படையலாக ஆண்டவருக்குச் செலுத்தலாம். ஆனால், இவை இனிய நறுமணமாகப் பலிபீடத்தில் எரிக்கப்படலாகாது.
13. நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப் படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக் குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.
14. முதற்பலன்களின் உணவுப் படையலை ஆண்டவருக்கு செலுத்தினால், அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டி உதிர்த்து, உன் முதற்பலன்களின் உணவுப் படையலாகச் செலுத்த வேண்டும்.
15. அதன்மேல் எண்ணெய் ஊற்றிச் சாம்பிராணி போடவேண்டும். இதுவும் ஓர் உணவுப் படையலே.
16. உதிர்க்கப்பட்டவற்றிலும் எண்ணெயிலுமிருந்து நினைவுப் படையலுக்கான பகுதியை குரு எடுத்துச் சாம்பிராணியோடு எரித்து விடுவார். இது ஆண்டவருக்கான நெருப்புப்பலி.அதிகாரம் 3.
1. ஒருவரது நேர்ச்சை நல்லுறவுப் பலியாய் இருந்தால், அது அவரது மாட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்தப்படும். காளையாகவோ பசுவாகவோ இருந்தால், அவர் பழுதற்ற ஒன்றை ஆண்டவருக்கு முன்பாகக் கொண்டு வருவார்.
2. நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்துச் சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் அதனைக் கொல்லவேண்டும். அப்போது ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
3. நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகக் குடல்களைச் செலுத்த வேண்டியது: அவற்றைச் சுற்றிலுமுள்ள கொழுப்பு முழுவதும்
4. இரு சிறுநீரகங்களும் அவற்றின்மேல் சிறு குடல்களிடத்தில் இருக்கும் கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற கல்லும் ஆகும்.
5. ஆரோனின் புதல்வர் அதைப் பலிபீடத்தில் நெருப்பின் மீது உள்ள கட்டைகளில் ஏற்கெனவே வைத்திருக்கும் எரிபலியோடு எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.
6. ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக நல்லுறவுப் பலியைத் தம் ஆட்டு மந்தையிலிருந்து செலுத்தினால், அது பழுதற்ற கிடாயாகவோ ஆடாகவோ இருக்கட்டும்.
7. ஒருவர் நேர்ச்சையாக ஆட்டைச் செலுத்தினால், அதை ஆண்டவர் திருமுன் கொண்டு வந்து,
8. நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்து, சந்திப்புக் கூடாரத்தின் முன்பாக அதனைக் கொல்லவேண்டும். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.
9. நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்துவது, அதன் கொழுப்பும், முதுகெலும்பின் அருகில் வெட்டியெடுத்த கொழுப்பு வாலும் குடல்களை மூடிய கொழுப்பும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,
10. இரு சிறுநீரகங்களும், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பும், சிறுநீரகங்களை அடுத்து கல்லீரலின்மேல் உள்ள சவ்வும் ஆகும்.
11. இவற்றைக் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நெருப்புப்பலி உணவாகும்.
12. நேர்ச்சையாக ஒருவர் வெள்ளாட்டுக் கிடாயைச் செலுத்தினால், அதை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து
13. அதன் தலைமேல் தம் கையை வைத்துச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்வார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.
14. நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்த வேண்டியது: குடல்களை மூடிய கொழுப்பும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,
15. இரு சிறுநீரகங்களும் அவற்றின் மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரல்மேல் இருக்கிற சவ்வும் ஆகும்.
16. குருக்கள் பலிபீடத்தின்மேல் அவற்றை எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி உணவாகும்.
17. கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் உண்ணலாகாது. இது உங்கள் உறைவிடம் எங்கும் தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாக விளங்கும்.அதிகாரம் 4.
1. ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2. நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியது: ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது:
3. அருள்பொழிவு பெற்ற குரு பாவம் செய்து மக்கள்மீது குற்றப்பழி வந்தால், தான் செய்த பாவத்தை முன்னிட்டுப் பழுதற்ற ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்குச் செலுத்துவாராக.
4. சந்திப்புக் கூடார நுழைவாயிலில், ஆண்டவர் திருமுன் அதைக்கொண்டு வந்து, அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆண்டவர் திருமுன் அதைக் கொல்வார்.
5. அருள்பொழிவு பெற்ற குரு அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அதைச் சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து,
6. அந்த இரத்தத்தில் தன் விரலைத் தோய்த்துத் தூயகத்தின் தொங்குதிரைக்கு எதிரே ஆண்டவர் திருமுன் ஏழுமுறை தெளிப்பாராக.
7. குரு அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் நறுமணத்தூப பீடக்கொம்புகளில் பூசுவார். காளையின் எஞ்சிய இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி அடித்தளத்தில் ஊற்றுவார்.
8. பாவம் போக்கும் பலிக்காளையின் எல்லாக் கொழுப்பையும் குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பு முழுவதையும் எடுப்பார்.
9. மேலும் இரு சிறுநீரகங்கள், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பு, சிறுநீரகங்களை அடுத்துக் கல்லீரலின்மேல் உள்ள சவ்வு ஆகியவற்றை
10. நல்லுறவுப் பலிக் காளையிலிருந்து எடுப்பதுபோல எடுத்து, குரு அவற்றை எரிபலிபீடத்தின்மேல் எரிப்பார்.
11. காளையின் தோலையும் அதன் இறைச்சியையும் தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும்
12. காளை முழுவதையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற தூய்மையான இடத்தில் கொண்டுபோய் விறகுக்கட்டைகளிட்டு நெருப்பால் எரிக்க வேண்டும். சாம்பல் கொட்டும் இடத்தில் அனைத்தையும் சுட்டெரிக்க வேண்டும்.
13. இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால்,
14. அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும்.
15. மக்கள் கூட்டமைப்பின் பெரியோர் அனைவரும் ஆண்டவர் திருமுன் தம் கைகளைக் காளையின் தலைமேல் வைப்பார்கள். ஆண்டவர் திருமுன் அந்தக் காளை கொல்லப்படும்.
16. அருள்பொழிவு பெற்ற குரு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவருவார்.
17. குரு அந்த இரத்தத்தில் தம் விரலைத் தோய்த்து ஆண்டவர் திருமுன் தொங்குதிரைக்கு முன்பாகத் தெளிப்பார்.
18. சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடக் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தை எல்லாம் சந்திப்புக்கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
19. காளையின் கொழுப்பு முழுவதையும் எடுத்துப் பலிபீடத்தில் எரிப்பார்.
20. பாவம் போக்கும் பலிக்காளைக்குச் செய்ததுபோல, இந்தக் காளைக்கும் செய்து, குரு அவர்களுக்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அப்பொழுது அவர்கள் மன்னிப்புப் பெறுவர்.
21. முன்னைய காளையை எரித்ததுபோல இதையும் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்ச் சுட்டெரிப்பாராக. இது சபையாருக்கான பாவம்போக்கும் பலி.
22. தலைவன் ஒருவன் தன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப்பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,
23. தான் செய்தது பாவமென்று அவனுக்குத் தெரியவரும்போது, வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு கிடாயைப் பலியாகக் கொண்டு வருவான்.
24. அந்த ஆட்டுக்கிடாயின் தலைமேல் அவன் தன் கையை வைத்து, எரிபலிப்பொருள் வெட்டப்படும் இடத்தில், ஆண்டவருக்குமுன் அந்தக்கிடாயைப் பலிகொடுப்பான்: இது பாவம் போக்கும் பலி.
25. குரு பாவம் போக்கும் பலிஇரத்தத்தில் சிறிது தம்விரலால் எடுத்து எலிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
26. அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார். குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார் : அவன் மன்னிப்புப் பெறுவான்.
27. பொதுமக்களின் ஒருவர் ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப் பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,
28. தாம் செய்தது பாவம் என்று அவருக்குத் தெரியவரும்போது, அவர் செய்த பாவத்தை முன்னிட்டு, பழுதற்ற ஒரு வெள்ளாட்டுப் பெண் குட்டியைப் பலியாகக் கொண்டு வருவார்.
29. பாவம் போக்கும் பலியின் தலைமேல் தம் கையை வைத்து, எரிபலியிடும் இடத்தில் அந்தப் பாவம் போக்கும் பலியாட்டை அடிப்பார்.
30. குரு அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து, எரிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்விவிடுவார்.
31. அதன் கொழுப்பு முழவதையும் நல்லுறவு பலியிலுள்ள கொழுப்பைப் போன்று எடுத்துப் பலிபீடத்தின் மேல் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக குரு எரித்துப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அந்த மனிதரும் மன்னிப்புப் பெறுவார்.
32. பாவக்கழுவாய் பலியாக அவர் ஓர் ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்தால் அது பழுதற்ற பெண் ஆட்டுக் குட்டியாக இருக்கவேண்டும்.
33. அந்தப் பாவம்போக்கும் பலிப்பொருளின் தலைமீது தம் கையை வைத்து எரிபலியை அடிக்க வேண்டும். அதே இடத்தில், இப்பாவம் போக்கும் பலியையும் அடிக்க வேண்டும்.
34. குரு அந்தப் பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து எரிபலிபீடக் கொம்புகளின்மேல் பூசி, எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.
35. அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப் பலிக்கிடாயின் கொழுப்பை எடுப்பது போன்று எடுத்து, எரிபலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கான நெருப்புப்பலி போல எரித்துவிடுவார். இவ்வாறாக அந்த மனிதர் செய்த பாவத்திற்குக் குரு பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்: அவரும் மன்னிப்புப் பெறுவார்.அதிகாரம் 5.
1. ஒருவர் ஒரு காரியத்தைக் கண்டோ கேட்டோ அதற்குச் சாட்சியாளராய் இருந்தும், அதுபற்றிச் சான்று கூறப் பணிக்கும் பொதுக்கட்டளையைக் கேட்டும், அதை அறிவிக்காமல் இருந்து பாவத்திற்கு உட்பட்டால், அவரே இத்தீச்செயலுக்குப் பொறுப்பாவார்.
2. ஒருவர் தீட்டான எதையும்-செத்துத் தீட்டான காட்டு விலங்கையோ, செத்துத் தீட்டான கால்நடையையோ, செத்துத் தீட்டான ஊர்வனவற்றையோ-தெரியாமல் தொட்டுவிட்டாலும் அவர் தீட்டுப்பட்டவரே. அவர் குற்றவாளி ஆவார்.
3. மேலும் எத்தகைய தூய்மைக்கேட்டினாலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதரை ஒருவர் அறியாமலே தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டாலும் அவரும் குற்றவாளியே.
4. தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ, எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர், தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால், இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே.
5. மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு,
6. பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும். ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும். அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.
7. அவர் தம் குற்றப்பழியை அகற்ற, ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால், இரு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும் மற்றொன்றை எரிபலியாகவும் ஆண்டவருக்குச் செலுத்த,
8. அவற்றைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு முதலில் பாவம் போக்கும் பலிக்கு உரியதை எடுத்து அதன் கழுத்தைத் திருகித் தலையைத் துண்டிக்காமல் வைக்க வேண்டும்.
9. பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீட ஓரங்களைச் சுற்றிலும் தெளித்து எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும். இது பாவம் போக்கும் பலி.
10. இரண்டாவதை ஒழுங்குமுறைப்படி அவர் எரிபலிக்கெனச் செலுத்தவேண்டும். அவர் செய்த பாவம் நீங்கக் குரு பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்: அவரும் மன்னிப்புப் பெறுவார்.
11. இரண்டு காட்டுப் புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர இயலாதிருந்தால் குற்றவாளி தாம் செய்த குற்றத்தினிமித்தம் தாம் படைக்கும் காணிக்கைக்கென இருபதுபடி அளவு மிருதுவான மாவில் பத்தில் ஒருபங்கைக் கொண்டுவருவாராக. அதன் மேல் எண்ணெயோ சாம்பிராணியோ இடலாகாது. ஏனெனில் அது பாவம் போக்கும் பலி.
12. அது குருவிடம் கொண்டு வரப்படவேண்டும். குரு நினைவுப்பங்காக ஒரு கைப்பிடி நிறைய எடுத்து ஆண்டவரின் நெருப்புப்பலிகளோடு பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். இது பாவம் போக்கும் பலி.
13. இவ்வாறு, குரு இத்தகைய பாவங்களில் ஒன்றைச் செய்தவருக்காகப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவாராக. அப்போது அவர் மன்னிப்புப்பெறுவார். எஞ்சியது உணவுப் படையலைப்போல குருவைச் சேரும்.
14. ஆண்டவா மோசேயிடம் கூறியது:
15. ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித்தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக. அது திருத்தலச் செக்கேல் கணக்குக்கேற்ப நீ விதிக்குமளவு மதிப்புடையதாய் இருக்கவேண்டும்.
16. அர்ப்பணித்தவற்றில் தவறிழைத்தால், ஈட்டுத் தொகையோடு ஜந்தில் ஒரு பங்கு அதிகமாக்கிக் கொடுக்க வேண்டும். அதைக் குருவிடமே கொடுக்க வேண்டும். குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை அவருக்காகப் பலியிடவேண்டும். அப்பொழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.
17. ஆண்டவரின் கட்டளைகளின்படி, செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட ஒன்றை ஒருவர் செய்து பாவத்திற்கு உள்ளானால், அவர் அறியாமல் செய்தாலும்கூட, அவர் குற்றவாளியே. அத்தீச்செயலுக்கு அவரே பொறுப்பாவார்.
18. அவர் நீ விதிக்கும் மதிப்பிற்கு ஏற்ப, பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆட்டு மந்தையிலிருந்து பிடித்து அதைக் குற்றப்பழி நீக்கும் பலியாகக் குருவிடம் கொண்டு வருவார். அவர் அறியாமல் செய்த பிழைக்காகக் குரு அவருக்கெனக் கறைநீக்கம் செய்வார். அது அவருக்கு மன்னிக்கப்படும்.
19. அது குற்றப்பழி நீக்கும் பலி. அவர் ஆண்டவருக்கு எதிராகவே குற்றம் செய்துள்ளார்.அதிகாரம் 6.
1. ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
2. தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த அல்லது பணையமாய் வைக்கப்பட்டிருந்த பொருளை ஒருவர் தம் இனத்தாரிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டோ, அவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ,
3. காணாமற்போனதைக் கண்டெடுத்தும் அதை மறுத்துப் பொய்யாணையிட்டோ-இவற்றைப் போன்ற பாவத்திற்கு உட்பட்டு, ஆண்டவருக்குத் துரோகம் செய்தால்,
4. அவர் பாவத்திற்கு உட்பட்டு, குற்றப்பழி உடையவராய் இருப்பார். அவர் தாம் திருடிக்கொண்டதையோ, ஒடுக்கிப் பறித்துக்கொண்டதையோ தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த பொருளையோ காணாமற்போய்த் தாம் கண்டெடுத்ததையோ
5. பொய் ஆணையிட்டுப் பெற்றுக்கொண்டதையோ-இவை அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த முதலை முழுமையாகக் கொடுப்பதோடு, அதன் ஜந்தில் ஒருபங்கைசச் சேர்த்துக் குற்றப்பழி நீக்கும் பலிநாளில் உரியவருக்குக் கொடுக்க வேண்டும்.
6. குற்றப்பழி நீக்கும் பலியாக நீ விதிக்கும் மதிப்பிற்குச் சரியாகப் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குச் செலுத்தும்படி குற்றப்பழி நீக்கும் பலியாக குருவிடம் செலுத்தவேண்டும்.
7. அப்பொழுது குரு ஆண்டவருக்கு முன்பாகக் கறை நீக்கம் செய்வார்: இவற்றுள் எதையேனும் செய்து குற்றத்திற்கு உள்ளானால், அது மன்னிக்கப்பெறும்.
8. ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
9. ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ கட் டளையிட்டுச் சொல்லவேண்டியது: எரிபலி பற்றிய சட்டம் இதுவே: இரவு முழுவதும் காலைவரையும் பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.
10. குரு தன் நார்ப்பட்டு அங்கியை அணிந்து தன் நார்ப்பட்டு உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்: பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரித்த எரிபலியின் சாம்பலை எடுத்துப் பலிபீடத்திற்கருகே கொட்டவேண்டும்:
11. பின்னர் தன் உடைகளை மாற்றி வேறு ஆடைகள் அணிந்துகொண்டு அந்தச் சாம்பலைப் பாளையத்திற்கு வெளியே தூய்மையான இடத்தில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.
12. பலிபீடத்தின்மேல் இருக்கிற நெருப்போ அணையாமல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும். காலைதோறும் குரு அதன்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து, அதன்மேல் எரிபலியை அடுக்கி அவற்றின் மீது நல்லுறவுப் பலிகளின் கொழுப்பை இட்டு எரிக்கவேண்டும்:
13. பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது ஒருபோதும் அணைந்துவிடலாகாது.
14. உணவுப் படையல் பற்றிய சட்டம் இதுவே: ஆண்டவரின் திருமுன் அதைப் பலிபீடத்திற்கெதிரே ஆரோனின் புதல்வர் படைக்க வேண்டும்.
15. அவர்கள் உணவுப்படையலின் மிருதுவான மாவிலும் அதன் எண்ணெயிலும் உணவுப்படையலின் மீதுள்ள எல்லாச் சாம்பிராணியிலும் ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, அதை நினைவுப்படையலாகப் பலிபீடத்தின்மேல் எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நினைவுப்பலியாகும்.
16. எஞ்சியதை ஆரோனும் அவன் புதல்வரும் உண்பர். அதைப் புளிப்பற்றதாகப் புனிதத் தலத்தில் உண்பர். சந்திப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை உண்பர்.
17. அதைப் புளிப்பேற்றிச் சுடவேண்டும். எனக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் அதை நான் அவர்கள் பங்காகக் கொடுத்துள்ளேன். அது பாவம் போக்கும் பலிபோலவும் குற்றப்பழி நீக்கும் பலிபோலவும் மிகத் தூயது.
18. ஆரோனின் பிள்ளைகளில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணவேண்டும். இது தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாக நியமமாய் விளங்கும். ஆண்டவருக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் எதையும் தொடுகிறவன் தூயவனாய் இருப்பான்.
19. ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
20. ஆரோனும் அவன் புதல்வரும் அருள்பொழிவு பெறுகின்ற நாளில் அவனும் அவன் புதல்வரும் ஆண்டவருக்குக் கொண்டுவர வேண்டிய படையல் இதுவே. இருபது படி அளவான மிருதுவான மாவில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் காலையில் பாதியும், மாலையில் பாதியுமாக எந்நாளும் உணவுப்படையலாக அளிக்க வேண்டும்.
21. தட்டையான சட்டியில் எண்ணெய் விட்டு அதைச் சுடவேண்டும். சுட்ட பின்னர் அதை எடுத்துப் பத்துத் துண்டுகளாக்கி ஆண்டவருக்கே உகந்த நறுமணமிக்க உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.
22. அவன் புதல்வரில் அவனுக்குப்பின் அருள்பொழிவு பெறும் குரு என்றென்றும் மாறாத நியமமாக இதைப்படைக்க வேண்டும். இது ஆண்டவருக்காக முழுவதும் எரிக்கப்படும்.
23. குருவின் எந்த உணவுப்படையலும் முழுவதும் எரிக்கப்படவேண்டும். அதை உண்ணலாகாது.
24. ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
25. நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியது: பாவம் போக்கும் பலி பற்றிய சட்டம் இதுவே: எரிபலிக்குரியதும் பாவம் போக்கும் பலிக்குரியதும் பலியாக்கப்படுகிற இடத்திலேயே ஆண்டவர் திருமுன் அடிக்கப்படவேண்டும். அது மிகத் தூயது.
26. பாவம் போக்குவதற்கென அதைப் படைக்கும் குரு அதை உண்பார். சந்திப்புக்கூடாரத்தின் முற்றமாகிய தூய தளத்தில் அது உண்ணப்படவேண்டும்.
27. அந்த இறைச்சியில்படுகிற எதுவும் தூய்மையானதே. அதன் இரத்தம் ஒரு துணியில் தெறித்தால், இரத்தம் தெறித்த துணியைத் தூய தளத்தில் துவைக்கவேண்டும்.
28. அதை வேகவைத்த மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். வெண்கலப் பானையில் வேகவைத்தால் அதைத் தேய்த்துத் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும்.
29. குரக்களில் ஆண் மக்கள் யாவரும் அதை உண்ணலாம். அது மிகத் தூயது.
30. கறைநீக்கம் செய்யும்படி சந்திப்புக் கூடாரத்திற்குள் தூயகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரத்தத்திற்குரிய பாவம் போக்கும் பலி உண்ணப்படலாகாது: நெருப்பில் எரிக்கப்படவேண்டும்.அதிகாரம் 7.
1. குற்றப்பழி நீக்கும் பலிபற்றிய கட்டளை இதுவே: அது மிகத்தூயது.
2. எரிபலி அடிக்கப்படும் இடத்திலேயே குற்றப்பழி நீக்கும் பலியும் அடிக்கப்படவேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கவேண்டும்.
3. அதன் கொழுப்பு முழுவதையும், அதன் கொழுப்பு வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும்,
4. இரு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் குடல்களோடு சேர்ந்திருக்கிற கொழுப்பையும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற சவ்வையும் எடுத்து,
5. இவற்றைக் குரு பலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கு நெருப்புப்பலி ஆக்கவேண்டும். அது குற்றப்பழி நீக்கும் பலி.
6. குருக்களில் ஆண்மக்கள் யாவரும் அதை உண்பர். அதைத் தூய தலத்தில் உண்ண வேண்டும். அது மிகத் தூயது.
7. பாவம் போக்கும் பலியைப் போன்றதே குற்றப்பழி நீக்கும் பலியும். அவற்றிற்குரிய சட்டம் ஒன்றே. அது கறை நீக்கம் செய்யும் குருவுக்கே உரியது.
8. ஒருவர் செலுத்தும் எரிபலியின் தோல் அப்பலியைச் செலுத்தும் குருவுக்கே உரியது.
9. அடுப்பில் சுட்டதும், பொரிக்கும் சட்டியிலும் தட்டையான சட்டியிலும் தயாரித்ததுமான உணவுப் படையல் அனைத்தும் அதைச் செலுத்துகிற குருவுக்கே உரியவை.
10. எண்ணெயில் பிசைந்ததும் பிசையாததுமான உணவுப்படையல் அனைத்தும் ஆரோனின் புதல்வர் யாவருக்கும் சரிபங்காகச் சேரும்.
11. ஆண்டவருக்கு ஒருவர் செலுத்தும் நல்லுறவுப் பலிபற்றிய சட்டம் இதுவே:
12. அவர் அதை நன்றிக் கடனாகச் செலுத்தினால் எண்ணெயில் தோய்த்த நெய்யப்பங்கள், எண்ணெய் பூசிய புளிப்பற்ற அடைகள், மெல்லிய மாவினால் எண்ணெயில் நன்கு பிசைந்து செய்த நெய்யப்பங்கள் ஆகியவற்றை நன்றிப் பலியோடு கொண்டுவர வேண்டும்.
13. புளித்த மாவினால் செய்த நெய்யப்பங்களை நன்றிக்கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியைத் தமது நேர்ச்சையாக அவர் கொண்டுவருவார்.
14. ஒவ்வொரு காணிக்கையிலும் ஒன்றை எடுத்து, ஆண்டவருக்குரிய பங்காகப் படைக்க வேண்டும். இப்பொருள்கள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் குருவுக்கே உரியவை.
15. நன்றிக் கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியின் இறைச்சி படைக்கப்படும் நாளில் உண்ணப்படவேண்டும். விடியுமட்டும் அதில் எதையும் மீதி வைக்கலாகாது.
16. அவர் செலுத்தும் நேர்ச்சைப் பலி ஒரு பொருத்தனையாகவோ தன்னார்வப்பலியாகவோ இருந்தால், அதைப் படைக்கும் நாளிலும் எஞ்சியதை மறுநாளிலும் உண்ணலாம்.
17. பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம் மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும்.
18. நல்லுறவுப்பலி இறைச்சியில் எஞ்சியதை மூன்றாம் நாளில் உண்பது உகந்தன்று. அதைச் செலுத்தினவருக்கும் அது பயன் அளிக்காது. அது அருவருப்பானது. அதை உண்பவர் தம் குற்றபழியைச் சுமப்பார்.
19. தீட்டான எந்தப் பொருளிலாவது அந்த இறைச்சி பட நேர்ந்தால் அதை உண்ணலாகாது. அதை நெருப்பில் எரிக்க வேண்டும். மற்ற இறைச்சியையோ தூய்மையாய் இருக்கிறவர் எவரும் உண்ணலாம்.
20. தீட்டுப்பட்ட ஒருவர் ஆண்டவரின் நல்லுறவுப் பலியின் இறைச்சியை உண்பாராகில், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
21. தீட்டான எதையும் தீட்டுப்பட்ட மனிதரையோ கால்நடையையோ, தீட்டான ஊர்வனவற்றையோ ஒருவர் தீண்டியவராக இருந்து ஆண்டவருக்குப் படைக்கும் நல்லுறவுப்பலி இறைச்சியை உண்டால், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
22. ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
23. நீ இஸ்ரயேல் மக்களிடம், மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது.
24. தானாய்ச் செத்ததின் கொழுப்பையும், பீறுண்டதின் கொழுப்பையும் வேறு செயல்களுக்குப் பயன்படுத்தலாமேயன்றி நீங்கள் அதை ஒருபோதும் உண்ணலாகாது.
25. ஏனெனில், ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகப் படைக்கும் கால்நடையின் கொழுப்பை உண்கிற எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
26. உங்கள் குடியிருப்புகள் எங்கும், பறவையின் இரத்தத்தையோ கால்நடைகளின் இரத்தத்தையோ, வேறு எந்த இரத்தத்தையுமோ உண்ணலாகாது.
27. இரத்தத்தை உண்ணும் எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார் என்று சொல்.
28. ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:
29. நீ இஸ்ரயேல் மக்களிடம், ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துபவர், தாம் செலுத்தும் நல்லுறவுப் பலியிலிருந்து ஆண்டவருக்குரிய நேர்ச்சையைக் கொண்டுவர வேண்டும்.
30. ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியை அவரே கொண்டு வரவேண்டும். நெஞ்சுக் கறியையும் அதனோடு அதன் மேலுள்ள கொழுப்பையும் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாகக் கொண்டவர வேண்டும்.
31. குரு அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தில் எரிப்பார். நெஞ்சுக் கறியோ ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் உரியதாகும்.
32. நல்லுறவுப் பலிகளில் வலது பின்னந்தொடையைக் குருவிடம் பங்காகக் கொடுக்க வேண்டும்.
33. ஆரோனின் புதல்வருள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு வலது பின்னந்தொடை பங்காகச் சேரும்.
34. நல்லுறவுப் பலிகளில் ஆரத்திப் பலியாகிய நெஞ்சுக் கறியையும் பங்காகிய பின்னந்தொடையையும் நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து எடுத்து குருவாகிய ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளேன். இது இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெறும் நிலையான பங்காகும் என்று சொல்.
35. ஆரோனும் அவன் புதல்வரும் ஆண்டவர்க்குரிய குருக்களாகும்படி அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து இது ஆண்டவரின் நெருப்புப் பலியிலிருந்து அவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பங்காகும்.
36. ஆண்டவர் அவர்களுக்கு அருள்பொழிவு செய்த நாளில், அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு மாறாத பங்காகக் கொடுக்கக் கட்டளையிட்டார்.
37. எரிபலி, உணவுப் படையல், பாவம் போக்கும் பலி, குற்றப்பழி நீக்கும் பலி, திருநிலைப்படுத்தும் பலி, நல்லுறவுப் பலி ஆகிய பலிகளைப்பற்றிய சட்டம் இதுவே.
38. தமக்குச் செலுத்த வேண்டிய நேர்ச்சைகளைப் பற்றி ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய்ப் பாலைநிலத்தில் கட்டளையிட்ட நாளில் மோசேக்கு அவர் சீனாய் மலையில் இட்ட கட்டளைகள் இவையே.
அதிகாரம் 8.
1. ஆண்டவர் மோசேயிடம்,
2. ””நீ ஆரோனையும் அவனுடன் அவன் புதல்வரையும் வரவழைத்து, உடைகளையும் திருப்பொழிவு எண்ணெயையும், பாவம்போக்கும் பலிக்காக ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் மற்றும் ஒரு கூடையில் புளிப்பற்ற அப்பங்களையும் கொண்டு வரச்செய்.
3. மக்கள் கூட்டமைப்பு முழுவதையும், சந்திப்புக்கூடார நுழைவாயிலின் முன் கூடிவரச்செய்”” என்றார்.
4. மோசே தமக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார். சந்திப்புக் கூடார நுழைவாயில்முன் கூட்டமைப்பு குழுமியபோது,
5. மோசே கூட்டமைப்பிடம், ””இக்காரியத்தைச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்”” என்று கூறி,
6. ஆரோனையும், அவர் புதல்வரையும் வரவழைத்துத் தண்ணீரில் குளிக்கச்செய்தார்.
7. உள்ளங்கியை உடுக்கச் செய்து இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை அணிவித்து, ஏப்போதை அவர்மேல் போட்டு, ஏப்போதின் கைவண்ணப் பட்டையை அவருக்குக் கட்டி,
8. மார்புப் பட்டையை அவருக்கு அணிவித்து, அதில் ஊரிம், தும்மிம் ஆகியவற்றை வைத்து,
9. தலையில் பாகை அணிவித்து, பாகையின்மேல் முன்பக்கம், புனித பொன்முடியான பொற்பட்டத்தைக் கட்டினார்.
10. பின்னர் மோசே, திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் திருப்பொழிவு செய்து புனிதப்படுத்தினார்.
11. திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழு முறை தெளித்து, பலிபீடத்தையும் அதன் அனைத்துக் கருவிகளையும் நீர்த்தொட்டியையும், அதன் தாங்கியையும் புனிதப்படுத்தும்படி திருப்பொழிவு செய்து,
12. ஆரோனின் தலையின்மேல் திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் வார்த்து அவரைத் திருநிலைப்படுத்தும்படி அவருக்கு அருள்பொழிவு செய்தார்.
13. ஆண்டவரது ஆணைப்படி, மோசே ஆரோனின் புதல்வரை வரவழைத்து, அவர்களுக்குக் கோடிட்ட உள்ளாடைகளை உடுத்துவித்து, இடைக்கச்சைகளைக் கட்டித் தலையில் பாகை அணிவித்தார்.
14. பின்னர், பாவம் போக்கும் பலிக்கான காளையை அவர் கொண்டு வந்தார். அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வரும் தங்கள் கைகளை வைத்தனர்.
15. அது வெட்டப்பட்டது, மோசே அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்துப் பலிபீடத்தின் கொம்புகளைச் சுற்றிலும் பூசி, பலிபீடத்தற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றி, கறைநீக்கப்பலி செய்வதற்காக அதைப் புனிதப்படுத்தினார்.
16. ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த சவ்வையும், இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் பலிபீடத்தில் மோசே எரித்தார்.
17. காளையின் தோலையும் இறைச்சியையும் சாணத்தையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிட்டுக் கொளுத்தினார்.
18. பின்னர், அவர் எரிபலிக்கான ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார். அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.
19. அது வெட்டப்பட்டது. மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்தார்.
20. ஆட்டுக்கிடாய் துண்டிக்கப்பட்டது. மோசே அதன் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் எரித்து,
21. குடல்களையும், தொடைகளையும் தண்ணீரால் கழுவிய பின்னர், ஆட்டுக்கிடாய் முழுவதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின்மேல் எரிபலியாக எரித்தார். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.
22. பின்னர், அவர் திருநிலைப்பாட்டுக்குரிய அடுத்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார். அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.
23. அது வெட்டப்பட்டது. மோசே அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஆரோனின் வலக்காதுமடலிலும், வலக்கைப் பெருவிரலிலும், வலக்கால் பெருவிரலிலும் பூசினார்.
24. பின்னர், அவர் ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் சிறிது இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
25. கொழுப்பையும், கொழுப்பு வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது முன்னந்தொடையையும் எடுத்து,
26. ஆண்டவர் திருமுன் வைத்திருக்கும் புளிப்பற்ற அப்பக்கூடையிலுள்ள புளிப்பற்ற நெய்யப்பம் ஒன்றும், எண்ணெயில் தோய்த்த அப்பம் ஒன்றும் அடை ஒன்றும் எடுத்து, அந்தக் கொழுப்பின் மேலும் வலது முன்னந்தொடையின் மேலும் வைத்து,
27. அவற்றையெல்லாம் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவர் புதல்வருடைய உள்ளங்கைகளிலும் வைத்து ஆரத்திப் பலியாக ஆண்டவர் திருமுன் அசைத்து,
28. அவற்றை அவர்கள் உள்ளங் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின் மேல் இருந்த எரிபலியோடு எரித்தார். இது திருநிலைப்பாட்டுப்பலி. இதுவே ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.
29. பின்னர், மோசே நெஞ்சுக்கறியை எடுத்து, அதை ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறு, திருநிலைப்பாட்டுக்கான ஆட்டுக்கிடாயில் அது மோசேயின் பங்காயிற்று.
30. மோசே திருப்பொழிவு எண்ணெயிலும் பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும் அவர்தம் உடைகள்மேலும் ஆரோனின் புதல்வர் மேலும் அவர்கள் உடைகள்மேலும் தெளித்தார்: இவ்வாறு ஆரோனையும் அவர் உடைகளையும் அவர் புதல்வரையும் அவர்கள் உடைகளையும் புனிதப்படுத்தினார்.
31. பின்னர் மோசே ஆரோனையும் அவர் புதல்வரையும் நோக்கி, ””நான் கட்டளையிட்டவாறு அந்த இறைச்சியைச் சந்திப்புக் கூடார நுழைவாயில் முன்பாகச் சமைத்து, அத்துடன் திருநிலைப்பாட்டுக் காணிக்கைக் கூடையிலிருக்கும் அப்பத்தையும் உண்பீர்கள்.
32. இறைச்சியிலும் அப்பத்திலும் எஞ்சியிருப்பதை நெருப்பிலிட்டுக் கொளுத்திவிடுங்கள்.
33. திருநிலைப்பாட்டு நாள்கள் முடியும்வரை ஏழு நாள்கள் சந்தப்புக்கூடார நுழைவாயிலைவிட்டு நீங்காதீர்கள் ஏழு நாள்கள் நீங்கள் புனிதப்படுத்தப்படுவீர்கள்.
34. இன்று செய்யப்பட்டது உங்கள் கறையை நீக்குவதற்காக ஆண்டவர் கட்டளையிட்டதாகும்.
35. நீங்கள் சாகாதபடி ஏழு நாள்கள் இரவும் பகலும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் ஆண்டவருக்காகக் காவல் காப்பீர்கள். இதுவே நான் பெற்ற கட்டளை”” என்றார்.
36. மோசேயின் மூலமாக ஆண்டவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவர் புதல்வரும் செய்தனர்.அதிகாரம் 9.
1. மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார்.
2. அவர் ஆரோனிடம் கூறியது: ””நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆண்டவர் திருமுன் கொண்டு வா. நீ சொல்ல வேண்டியது:
3. இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும்
4. நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள். ஏனெனில் இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்.””
5. அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்ட வந்தார்கள். சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர்.
6. அப்பொழுது மோசே, ””நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே: ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்”” என்றார்.
7. மோசே ஆரோனிடம், ””நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்”” என்றார்.
8. ஆரோன் பலிபீடத்தருகில் தமக்கென்று பாவக்கழுவாய்ப் பலியாகக் காளைக்கன்று ஒன்றை அடித்தார்.
9. ஆரோனின் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் தம் விரலை அதில் தோய்த்து பலிபீடத்தில் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்திற்கு அடியில் ஊற்றினார்.
10. பாவம் போக்கும் பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலிலிருந்து எடுத்த சவ்வையும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து,
11. இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார்.
12. பின்பு அவர் எரிபலிக்கிடாயை அடித்தார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.
13. எரி பலியின் துண்டங்களையும் தலையையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவர் அவைகளைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து,
14. குடல்களையும் தொடைகளையும் கழுவி, இவற்றைப் பலிபீடத்தின் மேல் இருக்கும் எரிபலியோடு சுட்டெரித்தார்.
15. பின்னர், அவர் மக்களுக்கான பலியை, பாவம் போக்கும் பலிக்கிடாயைக் கொண்டுவந்து அதைக்கொன்று, முன்னதைப்போலவே பாவம்போக்கும் பலியாகச் செலுத்தினார்.
16. பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்:
17. உணவுப் படையல்களைக் கொண்டுவந்து தம் கைநிறைய எடுத்து காலையில் செலுத்தும் எரிபலியோடு பலிபீடத்தின்மேல் சுட்டெரித்தார்.
18. பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று, அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர். அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.
19. காளையிலும் கிடாயிலுமிருந்து எடுத்த கொழுப்பு வாலையும் குடல்களையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் கொண்டு வந்து,
20. நெஞ்சுக் கறிகளின்மீது வைத்தார்கள். கொழுப்புப் பகுதிகளைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் சுட்டெரித்தார்.
21. நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும் மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.
22. பின்னர், ஆரோன் மக்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்: தாம் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின் கீழே இறங்கினார்.
23. மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்: பின்னர் வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.
24. ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து, பலிபீடத்தின் மேலிருந்த எரிபலியையும் கொழுப்பையும் விழுங்கியது. மக்கள் அதைக் கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்.அதிகாரம் 10.
1. ஆரோனின் புதல்வர்களான நாதாபும் அபிகூவும் தம் தூபக் கலசத்தை எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் இட்டு ஆண்டவர் கட்டளைக்கு எதிராக நெருப்பைக் கொண்டு சென்றனர்.
2. உடனே, ஆண்டவரிடமிருந்து நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது. அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலேயே மடிந்தனர்.
3. அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி, ”” என்னை அணுகிவருவோர்மூலம் என் தூய்மையை வெளிப்படுத்துவேன். எல்லா மக்களுக்கும் முன்பாக நான் மாட்சியுறுவேன் என ஆண்டவர் உரைத்த தன் பொருள் இதுதான்”” என்றார். ஆரோன் மெளனமாயிருந்தார்.
4. மோசே, ஆரோனின் சிற்றப்பனாகிய உசியேலின் புதல்வராகிய மிசாவேலையும், எல்சாபானையும் அழைத்து, ””நீங்கள் இங்கே வந்து உங்கள் சகோதரரின் சடலங்களைத் தூயகத்தின் முன்னின்று எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போங்கள்”” என்றார்.
5. மோசே சொன்னபடியே அவர்கள் சென்று அவர்கள் சடலங்களை அவர்கள் உடைகளோடும் எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போனார்கள்.
6. மோசே, ஆரோனையும் எலயாசர், இத்தாமர் என்னும் அவர் புதல்வரையும் நோக்கி, ””நீங்கள் உங்கள் தலைமுடியைக் கலைத்துக் கொள்ளவும், ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவும் வேண்டாம். அப்படிச் செய்தால் நீங்கள் சாவீர்கள். மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் எதிராக அவரது சினம் மூளும். உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆண்டவர் மூட்டிய இந்த நெருப்பை முன்னிட்டுப் புலம்புவார்கள்.
7. நீங்கள் அழியாதபடி, சந்திப்புக் கூடார நுழைவாயிலிலிருந்து எங்கும் செல்லாதீர்கள். ஆண்டவரது அருள்பொழிவு உங்கள்மீது இருக்கிறதே!”” என்றார். அவர்கள் மோசேயின் வார்த்தையின்படியே செய்தார்கள்.
8. ஆண்டவர் ஆரோனிடம் கூறியது:
9. ””நீரும் உம்மோடு உம் புதல்வரும் சாகாதிருக்க வேண்டுமெனில், நீங்கள் சந்திப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை இரசத்தையோ மதுவையோ குடிக்க வேண்டாம். இது உங்கள் தலைமுறைதோறும் மாறாத நியமமாக விளங்கும்.
10. தூயதற்கும் தூய்மையற்றதற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டற்றதற்கும் வேறுபாடு தோன்றும்படி,
11. ஆண்டவர் மோசேயைக் கொண்டு இஸ்ரயேல் மக்களுக்குக் கூறி அறிவித்த அவருடைய எல்லாச் சட்டங்களையும் நீங்கள் மக்களுக்குப் போதிக்கும்படி இது என்றுமுள நியமமாக விளங்கும்””.
12. மோசே ஆரோன், அவருடைய எஞ்சிய புதல்வர்களாகிய எலயாசர், இத்தாமர் ஆகியோரிடம் கூறியது: நீங்கள் ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் எஞ்சிய உணவுப் படையலை எடுத்துப் பலிபீடத்தருகில் புளிப்பற்றதாய் உண்ணவேண்டும். அது மிகவும் தூயது.
13. அதைத் தூய இடத்தில் உண்ண வேண்டும். ஏனெனில் அது ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் உமக்கும் உம் புதல்வருக்கும் உரிய பங்காகும். இதுவே நான் பெற்ற கட்டளை.
14. ஆரத்திப் பலியான நெஞ்சுக் கறியையும் உயர்த்திப் படைக்கும் பலியான முன்னந் தொடையையும் நீரும் உம்மோடு உம் புதல்வரும் புதல்வியரும் ஒரு தூய்மையான இடத்தில் வைத்து உண்பீர்கள். இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளில் இவை உமக்கும் உம் புதல்வருக்கும் புதல்வியருக்கும் உரிய பங்காகும்.
15. உயர்த்திப் படைக்கும் பலிப்பொருளான முன்னந்தொடையையும் ஆரத்திப் பலிப்பொருளான நெஞ்சுக்கறியையும் நெருப்புப் பலிப்பொருளான கொழுப்பையும் ஆண்டவர் திருமுன் அவர்கள் கொண்டுவந்து ஆரத்திப் பலியாக அசைவாட்டுவார்கள். அது ஆண்டவரின் கட்டளைப்படியே உமக்கும் உம் புதல்வருக்கும் மாறாத நியமமாக விளங்கும்.””
16. இதற்கிடையில், மோசே பாவம் போக்கும் பலிப்பொருளான ஆட்டுக்கிடாயைத் தேடிப்பார்த்தார். அது எரித்தழிக்கப்பட்டிருந்தது. எனவே மோசே ஆரோனின் எஞ்சியிருந்த புதல்வராகிய எலயாசர், இத்தாமர் மீது கடும் சினமுற்றுச் சொன்னது:
17. நீங்கள் பாவம் போக்கும் பலியைத் தூய தலத்தில் ஏன் உண்ணவில்லை? அது மிகவும் தூயதன்றோ? மக்கள் கூட்டமைப்பின் குற்றப்பழியை ஏற்றுக்கொண்டு நீங்கள் ஆண்டவர் திருமுன் அவர்களுக்குக் கறை நீக்கம் செய்ய ஆண்டவர் அதை உங்களுக்குக் கொடுத்தார்.
18. அதன் இரத்தம் தூயகத்திற்குள் கொண்டுபோகப்படவில்லை. ஆகையால் நீங்கள் அதை நான் கட்டளையிட்டபடி தூயகத்திலேயே உண்டிருக்க வேண்டும்!
19. உடனே ஆரோன், மோசேயை நோக்கி, ””ஆண்டவர் திருமுன் பாவம் போக்கும் பலியும் எரிபலியும் செலுத்தப்பட்ட இன்றுதானே எனக்கு இப்படி நடந்தது! எனக்கு நேரிட்ட துன்பம் உமக்குத் தெரியாதா? நான் பாவம் போக்கும் பலியை இன்று உண்டிருந்தால் அது ஆண்டவரின் பார்வைக்கு உகந்ததாய் இருக்குமோ?”” என்றார்.
20. மோசே இதைக்கேட்டு அமைதியடைந்தார்.அதிகாரம் 11.
1. ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, அவர்களிடம் கூறியது:
2. ””நீங்கள் இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: உலகில் உள்ள உயிரினங்களில் நீங்கள் உண்ணத்தக்கவை இவைகளே.
3. கால்நடைகளில், குளம்புகள், இரண்டாகப் பிரிந்திருக்கிற, விரிசல் குளம்புள்ள, அசைபோடுபவற்றை நீங்கள் உண்ணலாம்.
4. அசைபோடும் கால்நடைக்கு விரிகுளம்பில்லையெனில், அதனை நீங்கள் உண்ணலாகாது. குறிப்பாக ஒட்டகம்: அது அசைபோடும்: ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு.
5. குழிமுயல் அசைபோடும்: ஆனால் அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு.
6. முயல் அசைபோடும்: ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு.
7. பன்றி இரண்டாகப் பிரிந்திருக்கும் விரிகுளம்புடையது: ஆனால், அது அசைபோடாது: எனவே அது உங்களுக்குத் தீட்டு.
8. இவற்றின் இறைச்சியை உண்ணலாகாது. இவற்றின் சடலங்களைத் தொடவும் கூடாது. இவை உங்களுக்குத் தீட்டானவை.
9. நீர்நிலைகளில் இருப்பனவற்றில் நீங்கள் உண்ணத்தக்கவை: கடல்களும், ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் இருப்பனவற்றில் துடுப்பும் செதிலுமுள்ளவை அனைத்தும் நீங்கள் உண்ணத்தக்கவை.
10. ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் செறிந்திருக்கும் உயிரினங்களும், துடுப்பும் செதிலும் அற்றவை உங்களுக்கு அருவருப்பு.
11. அவை உங்களுக்கு அருவருப்பு. அவற்றின் இறைச்சியை உண்ணலாகாது. அவற்றின் சடலங்களை அருவருப்பாகக் கருதுங்கள்.
12. நீர்வாழ்வனவற்றில் துடுப்பும் செதிலும் அற்றவையாவும் உங்களுக்கு அருவருப்பு.
13. பறவைகளிலும் நீங்கள் உண்ணாமல் அருவருக்க வேண்டியவை: கழுகு, கருடன், கடலூராஞ்சி,
14. பருந்து, வல்லூறு, அதன் இனம்,
15. காகம், அதன் இனம்,
16. தீக்கோழி, கூகை, சம்புகம், சிறுகழுகு, அதன் இனம்,
17. ஆந்தை, சகோரம், கோட்டான்,
18. நாரை, கூழக்கடா, குருகு,
19. கொக்கு, இராசாளி, அதன் இனம், புழுக்கொத்தி, வெளவால்.
20. பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் ஊர்வன யாவும் உங்களுக்கு அருவருப்பு.
21. ஆயினும், நான்கு கால்களால் நடமாடியும் தரையில் தத்திப் பாயும்படி நெடிய பின்னங்கால்கள் உடையனவற்றை உண்ணலாம்.
22. நீங்கள் உண்ணக்கூடியவை: தத்துக்கிளி, அதன் இனம்: வெட்டுக்கிளி, அதன் இனம்: மொட்டை வெட்டுக்கிளி, அதன் இனம்: சுவர்க்கோழி, அதன் இனம்.
23. பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பு.
24. அவை உங்களுக்குத் தீட்டு, அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.
25. அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். மாலைவரை அவர் தீட்டுடையவர்.
26. இரண்டாய்ப் பிரிந்த குளம்புகள் இல்லாமலும் அசைபோடாமலும் இருக்கும் அனைத்து உயிரினங்களைத் தொடுகிற எல்லாரும் தீட்டுடையவர்.
27. நான்கு கால் உயிர்களில் உள்ளங்கால் ஊன்றி நடக்கும் அனைத்தும் உங்களுக்குத் தீட்டு.
28. அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். மாலைவரை அவர் தீட்டுடையவர். அவர் உங்களுக்குத் தீட்டு.
29. நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் உங்களுக்குத் தீட்டானவை: எலி, சுண்டெலி, ஆமை இனம்:
30. உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி
31. ஊர்வனவற்றில் இவை உங்களுக்குத் தீட்டு. அவற்றுள் செத்ததைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.
32. அவற்றுள் செத்த ஏதேனும், எதன்மேலாவது விழுந்தால் அது தீட்டுப்படும். அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், கோணிப்பையானாலும், வேலைக்கு உதவும் எந்தக் கருவியானாலும் மாலைவரை அது தண்ணீரில் போடப்பட வேண்டும். மாலைவரை அது தீட்டுப்பட்டது. பின்னால் அது தூய்மையாகும்.
33. அவற்றுள் ஏதேனும் மண் பாண்டத்துக்குள் விழுந்தால் அதனுள் இருக்கும் அனைத்தும் தீட்டுப்பட்டுவிடும். எனவே அது உடைக்கப்பட வேண்டும்.
34. உண்ணத்தக்க எந்த உணவிலும் இப்பாண்டத்துத் தண்ணீரில்பட்டால் அது தீட்டு: அந்தப் பாண்டத்திலிருக்கும் எந்தப் பானமும் தீட்டு.
35. அவற்றின் சடலம் எதன்மீது விழுந்தாலும் அது தீட்டு: அடுப்போ சமையல் பாண்டமோ எனில், அவை உடைக்கப்பட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டு, ஏனெனில் அவை தீட்டுப்பட்டிருக்கும்.
36. நீரூற்றும் மிகுந்த நீருள்ள கிணறும் எனில், அவை தூய்மையாய் இருக்கும்: ஆனால் அவற்றின் சடலம் தொடும்பகுதி தீட்டுப்பட்டது.
37. விதைக்கிற தானியத்தின் மீது அவற்றின் சடலம் விழுந்தால் அது தீட்டன்று.
38. தண்ணீர் விடப்பட்ட விதைமேல் விழுந்தால், அது தீட்டாகும்.
39. உங்கள் உணவுப்பொருளான கால்நடை ஒன்று சாக, அதன் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.
40. அதன் சடலத்தைத் தின்பவர் தம் உடைகளைத் துவைக்கவேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர். மேலும் அதன் சடலத்தை எடுத்துப் போகிறவரும் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர்.
41. தரையில் நகர்ந்து செல்லும் ஊர்வன அனைத்தும் அருவருப்பானவை. அவற்றை உண்ணலாகாது.
42. நிலத்தில் ஊர்வனவற்றையும், வயிற்றால் நகர்வனவற்றையும், நான்கு காலால் ஊர்வனவற்றையும் பல கால்களுள்ள எதனையும் உண்ணலாகாது. அவை அருவருப்பு.
43. நகருகிற எந்த ஊர்வனவும் உங்களையும் தீட்டுப்படுத்தலாகாது. அவற்றால் தீட்டுப்படாமல் இருங்கள். ஏனெனில் அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
44. நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள். எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர். நிலத்தில் ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டுப்படுத்தலாகாது.
45. உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவர்!
46. விலங்கினம், பறவைகள், நீர்வாழும் எல்லா உயிரினங்கள், நிலத்தில் நகரும் உயிரினங்கள் ஆகியவை பற்றிய சட்டம் இதுவே.
47. இதனின்று, தீட்டுடையதற்கும் தீட்டற்றதற்கும், உண்ணத்தகுந்த உயிரினங்களுக்கும் உண்ணத்தகாத உயிரினங்களுக்கும் வேறுபாடு தெரிந்துகொள்க!அதிகாரம் 12.
1. ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2. இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தைபெற்றால் ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே. தீட்டுப்பட்டிருப்பாள்.
3. எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்.
4. தொடர்ந்து வரும் முப்பது நாள்கள், அவள் தன் உதிரத்தீட்டு நாள்கள் முடியும்வரை தூயதான எந்தப் பொருளையும் தொ