|
புதிய
தமிழ் தேசத்தை நிர்மாணித்து வழிநடத்தும் தலைவரை
தமிழினம் பெருமையுடன் வாழ்த்துகின்றது
பேராசிரியர் கலாநிதி பணி. எஸ். ஜே. இம்மானுவேல்
26 November 2004 [see also
Saluting the Leader and Architect
of a New Tamil Nation - Prof. Dr. S. J. Emmanuel, 26 October 2004 and
For Pirabhakaran, Future Begins at
Fifty; a birthday greeting from Sachi Sri Kantha]
"தலைவர்
பிரபாகரன் தமிழ் மக்களின் சார்பாக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக எழுந்து
நிற்பவர் மாத்திரமல்ல, தமிழர்கள் மதிப்போடும், மாண்போடும் வாழ, ஒரு தேசியத்தைக்
கட்டியெழுப்பிய தலைவருமாக இருக்கின்றார். இவரை தமிழினம் பெருமையுடன் வாழ்க
வளர்க என வாழ்த்துகின்றது."
1. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரியவர் பலருக்குச் சவாலுமானவர் பிரபாகரன்
இலங்கை, தமிழீழம் மற்றும் உலகெங்கும் வாழுகின்ற
தமிழர்கள் அனைவரும் 26.11.2004ல் தனது 50வது அகவையை நிறைவு செய்யும் தமிழர்
தலைவரை நெஞ்சம் நிறைந்து நீடூழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
ஏனென்றால் அவர் சிங்கள ஏகாதிபத்திய சக்திகளுக்குச் சவாலாகவும், தமிழ் மக்களின்
விடுதலை வேங்கை நிறை வீரனாகவும் கணிக்கப்படுகிறார். சிங்கள அரசியல் சக்திகளுக்கும்,
அதன் அடக்குமுறையின் கருவியான இராணுவத்துக்கும் அவர் ஒரு சவால் ஆக இருப்பது
மட்டுமல்ல, அடக்குமுறைக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும், ஊக்குவிக்கின்ற சுயநலமிக்க
வல்லரசுகளுக்குத் தடையாகவும் சவாலாகவும் எழுந்து நிற்கின்றார். தன் மக்களைக்
காப்பாற்ற நம்பிக்கையுடைய இராணுவ பலத்தைக் கட்டியெழுப்பி தாயக மண்ணினதும்,
மக்களினதும் ஒற்றுமைக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்.
இவரது தலைமைத்துவத்தை தாயகத்தில் மட்டுமல்ல உலகில் வாழுகின்ற பெரும்பான்மையான
தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு இவரை தங்களுடைய விடுதலையின் வீரனாகவும், உலகிற் ஓர்
தனித்துவ தலைமைத்துவத்தைப் பேணுபவராகவும், கருதுகின்றபடியால் 26.11.2004 நாள்
முக்கியத்துவம் பெறுகின்றது. இவரின் செயற்பாடுகள் உலகின் விடுதலைப் போராட்ட
வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கின்றது.
2. பிரபாகரனுக்கு தோன்றுவதற்கு முந்திய சிங்கள அடக்குமுறைகள்
சமூகவேறுபாடு, பிரதேசவேறுபாடு, சீதனக்கொடுமை, படித்தோர்-படியாதோர் வேற்றுமை, அசையா
சொத்துக்களை மேலாகத் தேடும் போக்கு இப்பேர்ப்பட்ட அடிமைத்தனங்கள் பீடித்திருந்த
தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் தான் இவரது பிறப்பு அமைந்தது. ஏற்கனவே இலங்கை
பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுது சிங்கள அரசியல் தலைவர்கள் முழு
அதிகாரத்தையும் தாமே பெற்று அதைப் பயன்படுத்தி இலங்கை நாட்டை ஒரு முழு பௌத்த நாடாக
மாற்றக் கொண்டிருந்த இரகசியத் திட்டத்தை அன்றைய தமிழ்த் தலைவர்கள் ஓரளவிற்கு
அறிந்திருந்தனர். ஆனாலும் அதற்கெதிராகக் குரல் கொடுத்து போராடத் தயங்கினர். இதன்
காரணமாக தமிழ் மக்ககளின் எதிர்காலம் பறிபோவதற்கு காரணமாகவும், சிங்கள மக்களின்
மேலாண்மை ஓங்குவதற்கும் உந்துசக்தியாகவும் ஒரு வகையில் அமைந்து விட்டார்கள்.
பிரித்தானிய அரசு இலங்கையிலிருந்து வெளியேறியதும் சி;ங்கள அரசு தன்னுடைய
பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜா
உரிமையைப் பறித்தனர், தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் அரசின் உதவியுடன்
சிங்களவர்களை குடியேற்றினர், சிங்கள மொழியை தனி அரச மொழியாகப் பிரகடனம் செய்து,
தமிழ் மக்களினது கல்வியிலும், வேலைவாய்ப்புக்களிலும், அவர்களுடைய முன்னேற்றங்களிலும்
தடைகளையும் ஏற்படுத்தினர். இவைகளின் பாரிய விளைவுகளை தமிழ் பொது மக்கள் வேதனையுடன்
அனுபவித்தனர். ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் தங்களுடைய தொகுதிகளைச் சந்தித்து
வந்த தமிழ்த் தலைவர்கள் இம்மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கஙகளை முழமையாக உணர
முடியவில்லை. அதினால் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் செய்த
போராட்டங்கள் பிசுபிசுத்துப் போயின.
சிங்களக் காடையரும் அரச படைகளின் காடைத்தனமும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும்
உயிர்வாழ்விற்கும் சவாலாக எழுந்த வேளையில், அன்றைய தமிழ் தலைவர்கள் என்ன செய்வது
என்று அறியாது திணைத்தனர். சர்வ தேசம் தமிழ் மக்கள்மேல் அவிழ்த்து விடப்பட்ட
காடைத்தனத்தைக் கண்டு மௌனம் சாதித்தனர். இந் நிலையில் இராணுவ அடக்குமறைக்கும்
காடைத்தனத்திற்கும் சவாலாக எவரும் அன்று இருக்கவில்லை.
3. சிங்கள கொடுமைத்தனத்தின் மத்தியில் அரசிற்கு சவாலாகத் தோன்றிய பிரபாகரன்.
இலங்கை சுதந்திம் பெற்ற பின்பு, இலங்கை அரச பயங்கரவாதம் தமிழ் மக்களை கொன்று
எரித்தும், அவர்களுடைய உடமைகளை சூறையாடிக் கொள்ளையடித்தும் வந்தனர். தமிழ் மக்களின்
பேரறிவின் அடையாளச் சின்னமாக கட்டி எழுப்பப் பட்ட யாழ் பொது நூலகத்தை சிங்கள காடையர்
எரித்தனர், தமிழ் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கினர், தமிழ் மக்களின் மொழி
கலாச்சாரச் சின்னங்களை அழித்தனர். இக்காலகட்டத்தில் தான் பிரபாகரன் தோன்றினார்.
அவரின் கண்களும், காதுகளும், இதயமும் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் கொடூரத்தை
கண்டன, அழுகுரலை கேட்டன. அவர் வளர வளர, மக்களின் அபயக் குரல் அவர் மேல் வளர்ந்தது.
சுpங்கள கொடுமையிலிருந்து தன்மக்களை விடுதலைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்ற உறுதி
மலை போல் அவர் உள்ளத்தில் திரண்டது. ஆனால் அவர் தன்னுடைய நாளுக்காகக் காத்திருந்தார்.
பதுங்குவதில் பலம் தேடினார்.
பலருக்கு வேதனையாகவும், அதிர்ச்சியுமாக அமைந்த தன்னுடைய திட்டங்களை மெதுவாக
நடைமுறைப்படுத்தி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பௌத்த சிங்களக்
கொடூரங்களை நிறுத்தினார்;. நீங்கள் செய்த கொடூரங்கள் இனிப் போதும் என்ற செய்தியை
தென்னிலங்கை சிங்களவருக்கு செய்தியாக அனுப்பினார். சிங்களவர்கள் இதன்பின்குதான்
விழித்தௌத் தொடங்கினர்.
4. மக்கள் மத்தியில் எழுந்து நிற்கும் ஓர் தனித்துவத் தலைவர்
இவர் தன்னுடைய தீர்க்கமான 30 வருடப் போராட்டத்துக்குப்பின் தமிழ் மக்களுடைய,
உயர்ந்த-தாழ்ந்த, செல்வர்;-ஏழைகள், படித்த-படியாத மக்களின் அன்பையும் மதிப்பையும்
வென்றெடுத்தார். இவரை அன்று கடுமையாக விமர்சித்தவர்களும் இன்று இவருடைய
தலைமைத்துவத்தைப் பாராட்டுகிறார்கள். இவருடைய எதிரிகள் இவருடைய பெயரைக்
கொச்சைப்;படுத்தினாலும், இவர் உலகத் தலைவர்களுடைய ஒப்பற்ற கவனத்தை ஈர்ந்துள்ளார்.
இவர் தன்னுடைய நேர்மையான இலட்சியத்திலிருந்து கீழிறங்கி உலகின் சக்திகளுக்கு
அடிமைப்பட்டு விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டவரல்ல. இலட்சியத்தில் நான்
தவறின் என்னையே அழித்துவிடுங்கள் என்று கூறுகின்றார்,
5. தமிழினம் இன்னொரு தலைமைத்துவத்தை தேட ஏன், எப்படி தள்ளப்பட்டது?
பெரும்பான்மை சிங்கள ஜனநாயக அரசினதும், அதனுடைய இராணுவத்தினதும் கொடூரமான
அடக்குமுறையால் கசப்பான அனுபவங்களைப் பெற்ற தமிழ்மக்கள், இவ் அடக்குமுறைக்கு எதிராக
பழைய தலைமைத்துவத்தின் பயனற்ற தன்மையை உணந்தனர். புதிய தலைமைத்துவத்தைத்
தேடத்தொடங்கினார்கள்.
இந்திய தமிழ் நாட்டையும் இலங்கையின் வட-கிழக்குப் பகுதிகளையும் இணைத்து பரந்த தமிழ்
நாடு உருவாகிவிடுமோ என்ற பயம் சிங்கள இனவாதிகள் மனதில் ஆளமாக இருந்தது. அதனால் தமிழ்
மக்கள் தமக்குச் சமமாக வாழுகின்ற அடிப்பட உரிமை கேட்டதைக் கூட அவ்வித கண்ணோட்டத்தில்
தான் பார்த்தனர். தமிழர் தங்களுடைய மொழி, மறை, பண்பாடுகளுடன் தனித்துவத்தோடு
வாழுவதையும் சிங்கள இனவாதிகள் தமது ஆதிக்கத்திற்கு எதிர் சக்தியாக நோக்கினர். இதன்
காரணமாக தமிழ் மக்களின் எல்லா வித போராட்டத்தையும் அடக்குவதற்கு நாடாளுமன்றில் தமது
பெரும் பான்மையை பாவித்து தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் இராணுவ
நடவடிக்கைகளையும் பயன்படுத்தினார்கள்.
அகிம்சையும், ஜனநாயக வழிமுறைகளும் தோற்கடிக்கப்பட்டு தமிழ்மக்கள் அவமானப்படுத்தப்
பட்ட இக்காலகட்டத்தில் தான் பொறுமையிழந்த தமிழ் இளைஞர்கள் இவ்அரச பயங்கரவாதத்துகக்கு
எதிராக வன்முறையை பிரயோகிக்க ஆயத்தமானார்கள். இருள் நிறைந்த எதிர்காலத்தில்
நம்பிக்கை இல்வாதவர்களாக, கல்வி, வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக இருந்த இளைஞர்கள்
பழைய தலைமைத்துவத்தை கைவிட்டு ஒரு புதிய அரசியல் நோக்குடன் ஆயதம் கலந்த
தலைமைத்துவத்தைத் தேடினார்கள்.
6. புதிய தலைமைத்துவத்தைப் பற்றிய தவறான கணிப்பு
யார் புதிய தமிழ் தலைமைத்துவத்தை தோன்றுவிக்க காரண கார்த்தாக்களாக இருந்தார்களோ
அவர்கள் தான் இன்று இப் புரட்சியான தலைமைத்துவத்தைப் பற்றி பல சந்தேகங்களும்
கேள்விகளும் எழுப்புகின்றனர்.
தமிழ் தலைமைத்துவம் அகிம்சை வழியிலும் ஜனநாயகத்திலும் இருந்து எவ்விதம் இப் புதிய
தலைமைத்துவத்தை ஆரபித்தனர் என்ற உண்மையை ஒதுக்கிவிட்டு புதிய தமிழ் தலைமைத்துவம்
சென்ற நோக்குப் பற்றி பல கேள்விகள் பெரும்பான்மை சிங்களவருக்கும் அவர்களது
அரசுக்கும் எழுகின்றது. இப்புதிய தலைமையுடன் எவ்வாறு பேசிக் கையாளுவது என்ற
பிரச்சினையும் எழுந்தது. பல சிங்களவர்களும், ஏன் சில தமிழர்கள் கூட, இந்தத் தலைமையை
இராணுவ பலத்தால் வெற்றி கொள்ள முடியும் என்றும், அப்படி அழிக்கப்படாவிடின் இத்
தீவிரவாதிகளால் தமிழர் விடுதலையடைந்து பிரிந்து போய் விடுவர் என்றும் எண்ணினர்.
சிங்கள அரசும், வல்லரசுகளின் உதவியுடன், இதற்காக பல வழிகளில் கடின முயற்சி செய்து,
பல மறைமுகமான வழிகளில் இந்தத் தலைமைக்குப் பதிலான வேறு தமிழ்த் தலைமையை ஏற்படுத்த
முனைந்தது. அரசு புதிய தலைமையைப் புறம்தள்ளி தங்களுக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய
நாடாளுமன்ற உறுப்பினர்களை கவர்ச்சிகரமான ஆசைகளைக் காட்டித் தன் பக்கம் இழுக்க
முனைந்தது. கடந்த காலத்தில் மிதவாத அரசியல்வாதிகள் என்று பெயர் சூட்டப்பட்ட சில
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் இவ்வலைக்குள் விழுந்தார்கள்.
தமிழனாய்ப் பிறந்தாலும், தமிழ்ப் பேசத் தெரியாத கூலிக்கு அமர்த்தப்பட்ட
வெளிநாட்டமைச்சருடைய செயற்பாடுகள் தமிழ் மக்களையும் அவர்களுடைய தீவிரவாதத்
தலைமைத்துவத்தையும் புறம்தள்ள முயன்றது. ஆனால் பெரும்பான்மையான தமிழர்கள் அவற்றை ஒரு
நய வஞ்ஞக காட்டிக்கொடுப்பாக கணித்து அவரையும் சகாக்களையும் நிராகரித்தார்கள். வரலாறு
இவர்களுக்கு நீதி வழங்கும்.
உண்மையாகவே ஜனநாயகத் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டுமென்று
பெரும்பான்மையான சிங்கள மக்களும் அதன் அரசுகளும் நினைக்குமாக இருந்தால், புதிய
தலைமையைப் புரிந்துகொண்டு அத்தலைமையை தமிழ் மக்களின் உண்மையான தலைமையாக ஏற்று,
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும். இது முன்னெடுக்கப்பட வேண்டுமாக
இருந்தால் சிங்களத் தலைமைத்துவம் ஊழல் நிறைந்த ஜனநாயகத்திலிருந்தும்,
நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியும் நடாத்தும் காடைத்தனத்திலிருந்தும் விடுபட்டு,
புதிய தமிழ் தலைமைத்துவத்தை யதார்த்த முறையில் ஏற்றுக்கொண்டு, தமிழரின் தனி மனித
உரிமைகளையும், இன உரிமைகளைக் மதிக்கவும் காக்கவும் முன்வரவேண்டும்.
7. சிங்கள ஜனநாயகத்தின் ஊழல்தன்மையே புதிய தமிழ்த் தலைமைத்துவத்தைத் தேடத்
தள்ளியது
இலங்கையில் சரி வெளி நாட்டில் சரி ஜனநாயகத்தைப் பற்றியும் தலைமைத்துவத்தைப்
பற்றியும் மிகவும் குறுகிய நோக்கைக் கொணடிருப்பதினாலேயே பல ஜனநாயகவாதிகள் இப் புதிய
தமிழ் தலைமைத்துவத்தைப் புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றார்கள். இவர்;களுடைய
மேற்கத்திய கல்வியும், காலனித்துவம் சார்;பான சிந்தனைகளும் இவர்களுடைய ஒற்றைப்
போக்கு கணணோட்டத்தை தோற்றுவிக்கின்றது.
இவர்கள் தங்கள் ஜனநாயகத்தினுள் நடக்கின்ற ஊழல்கள், அநீதிகளைப் பற்றி பெரிதும்
பேசுவதில்லை. இவர்களின் ஜனநாயகப் போக்கு எத்தனையோ ஊழல்களையும் அநீதிகளையும்
அதிகரித்திருக்கின்றது, மிகவும் பயங்கரமான சர்வாதிகாரிகளை உருவாக்கியிருக்கின்றது,
அதுமட்டுமல்லாது இவர்களுடைய மேற்கத்திய உருவாக்கம், காலனித்துவத்தின்பின் ஏற்பட்ட
வளர்ச்சிகளையும் மூன்றாம் மண்டல நாடுகளின் பிரச்சினைகளையும் திறந்த கணணோட்டத்தில்
ஏறெடுத்துப் பார்க்க மறுக்கின்றது. இவர்கள் எல்லாவற்றையும் தமது பாரம்பரிய சிந்தனைக்
கோட்பாட்டின் ஊடாகச் சிந்திப்பதையும், தம்மை உயர்வாகக் கருதுகின்ற அரக்கத்தனத்துடன்
தூர நிகழ்வுகளையும் நிலைமைகளையும்; பற்றித் தீர்ப்பிடுகின்றார்கள். ஆகவே இலங்கை
அரசாங்கமும் அத்துடன் துணை போகும் மற்றும் வல்லரசுகளும் உண்மையான, நேர்மையான
முயற்சியெடுத்து தோல்வியுற்ற ஜனநாயகத்திலிருந்து எழுகின்ற இந்தப் புதிய
தலைமைத்துவத்தை புரிந்து கொள்ள முன்வரவேண்டும்.
பிரித்தானியரால் விட்டுச்செல்லப்பட்ட பெரும்பான்மை சிங்கள ஜனநாயகம், அடிக்கடி
நாட்டின் சட்ட திட்டங்களை மாற்றி;, அச்சட்டங்கள் எப்பொழுதும் தமக்கு சார்பாக
இருப்பதையும், சிறுபான்மையினரை அடக்குவதையுமே கருத்திற் கொண்டிருந்தது. இதனால்
கடந்த 50 வருடங்களாக நாடாளுமன்றத்தின் வழியாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது
பலன் அளிக்கவில்லை. இது படு தோல்வி கண்டதுடன், அரச பயங்கரவாத சட்டங்கள் மூலம் தம்
சொந்த நாட்டுப் பிரஜைகளான தமிழ் மக்களுக்கு எதிராக போரை முன்னெடுக்கவும்
நீதிப்படுத்தவும் துணை போயிருக்கிறது. இப்பின்னணியில்தான் தமிழ் மக்களின் புதிய
தலைமைத்துவம் உருவாகியிருக்கின்றது.
8. தமிழர் தேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள பாராளுமன்றத்தினால்
இழிவுபடுத்தி நிராகரிக்கப்பட்டனர்.
நாடுகளை ஆளுவதும் வழி நடத்துவதும் உயர் கல்லூரிகளில் படித்தவர்கள் அல்லது உயர்ந்த
சாதியில் உள்ளவர்;களின் பிரத்தியேகமான உரிமை அல்ல. உயர்நிலையினரும்,
கல்விகற்றவர்களும் ஈழத்தமிழர் வரலாற்றில் பாரதூரமான தவறுகளை செய்திருக்கின்றார்கள்.
தமிழ் மக்களின் வரலாற்றிலும் அவர்களுடைய சோகமான போராட்ட அனுபவங்களிலும் சில
கல்விகற்ற உயர்நிலையினர் தமிழ் மக்களின் போராட்டத்தை தங்களுடைய சொந்த விருப்பு
வெறுப்புகளுக்காகக் காட்டிக் கொடுத்தது கோச்சைப் படுத்தியத வேதனைக்குரியது.
அதேவேளையில் நல்ல தமிழ்த் தலைவர்கள் சிங்கள ஜனநாயகத்துக்குள் இழிவுபடுத்தப்பட்டு
நிராகரிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூயெதாக இருக்கின்றது. ஒரு காலத்தில்
பிரித்தானிய கலாசாலைக் கல்வியிலும் நாடாளுமன்ற முறைகளிலும் தகுதிபெற்று,
பன்னாடுகளாலும் மதிக்க்பட்ட தமிழர்கள் வட-கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம்
செய்தனர். இவர்களுக்குள் ஆகக் குறைந்த தராதரம் ஒரு வழக்கறிஞராகவாவது இருந்தது. இவ்
வழக்கறிஞர்கள் தெளிவான, ஆணித்தரமான வாதாடும் திறமையால் தமிழ் மக்களின் உரிமைக்காக
குரல் எழுப்பினாலும் இவர்கள் சிங்கள பேரினவாதிகளால் பேசவிடாது இடைமறித்து கூச்சலுடன்
புறம்தள்ளப்பட்டனர். ஆகவே இப்படியான வாதாடும் ஞானம் கொண்ட தமிழ் நாடாளுமன்ற
உறுப்பினர்களை கொழும்புப் பாராளுமன்றிற்கு அனுப்புவதில் எவ்வித அர்த்தமும் உள்ளதாகத்
தெரியவில்லை. இதே போலவே இன்றும் தெரிவு செய்யப்பட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கீழ் தரமான முறையில் பாராளுமன்றத்தினுள் நடந்து கொள்கின்றனர்.
இன்றைய இளைஞர் சமூகம் எடுத்திருக்கின்ற தலைமைத்துவம் உறுதிய10ட்டுவதாக அமைகின்றது.
ஏனென்றால் கடந்தகால தலைமைத்துவத்தின் கசப்பான அனுபவங்கள் அவர்களுக்கு அறிவூட்டும்
பள்ளியாக அமைந்தது. இவர்களின் சில செயற்பாடுகளை நாம் அவசரப்பட்டு தவறாகக் கணித்துக்
கொள்ளக் கூடாது. வுpறேடமாக தென்னிலங்கையில் குளிரூட்டும் அறைகளில் சாய்வு
நாற்காலியில் பத்திரிகை படித்துக் காலாட்டிக்கொண்டு விமர்சனம் செய்யும் கல்விமான்கள்
தமது விமர்சனங்களை நெறிப்படுத்த வேண்டும். வன்னிக்குச் சென்று பல இடைய10றுகள்
மத்தியிலும் மேற்கொள்ளப்படும் புதிய தலைமைத்துவத்தின் நிர்வாகத்தை சற்று அவதானித்த
பின்பு தமது விமர்சனத்தை மேற்கொள்ளுவது நலம்.
9. சிங்கள அரச நிராகரிப்பும் அதன் பயங்கரவாதமும்; பிறப்பித்த தமிழ்த்
தலைமைத்துவம்
தென்பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளை வடகிழக்கின் கலகக் கும்பல் என நையாண்டி
செய்பவர்கள் தாங்களே அதன் காரணகர்த்தாக்கள் என்பதை மறந்துவிடுகின்றனர்;. இப்
புரட்சிகரமான தலைமைத்துவத்துக்கு வித்திட்டவர் யார்? தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்
கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இவைகளின் அரசியலிலும் பார்க்க கர்;வம், பிடிவாதம்
கொண்ட சிங்கள அரசுகளின் அடக்குமுறையும் அதன் இராணுவத்தின் வன்செயல்களுமே என்பதை
ஒருவரும் மறக்கக் கூடாது.
கடின உழைப்பு, அறிவு, கீழ்ப்படிதல், அகிம்சை இவற்றிற்குப் பெயர் போனவர்கள் தமிழர்கள்.
சிங்கள வெறியர்களின் செயற்பாடுகள் அல்லது அரச வன்செயல்கள் தமிழ் மக்களுக்குத்
தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவர்கள் மகாத்மா காந்தி போதித்த அகிம்சை
வழியைக் நீண்ட காலமாகக் கைவிடவில்லை. ஆனால் இவற்றை தமிழ் மக்களின் பலவீனமாகச்
சிங்கள மக்கள் உதாசீனம் செய்தார்கள். அதன் விளைவாக தமிழ் மக்கள் பாரிய உயிர்
அழிவுகளுக்கும், சொத்து அழிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். தமிழ் மக்களின்
அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும், உயர் தரக் கல்வி தரப்படுத்தல்
படுத்தப்பட்டதும் தமிழ் இளைஞர்களை சீற்றப்படுத்தியது, நம்பிக்கையில்லா இருளக்குள்
தள்ளியது. அதனால் தங்கள் மண்ணையும் மக்களையும் தங்கள் பாரம்பரியத்தையும் அரச
பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க முடிவெடுத்தார்கள்.
தங்களை அடக்குபவர்களுக்கு எதிராக, அடக்கப்படுகின்றவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்
கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தித் திருப்பித் தாக்குவதற்கு உரிமையுண:டு.
பாதிக்கப்பட்டு வீழ்ந்து கிடந்து போராடும் தமிழர்களுக்கு சிங்கள அடக்குமறையினர்;
நீங்கள் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று சொல்வதற்கோ, அவர்களுக்கு எதிராகச்
சட்டங்கள் உருவாக்குவதற்கோ உரிமையில்லை.
தற்போதைய தமிழ் தலைமைத்துவம் ஆரம்ப காலங்களில் மேற்கொண்ட தாக்குதல்கள், ஆயுத
அபகரிப்புகள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக இயலாத்தன்மையில் கையாண்ட வழிகளாகக்
கணிக்க வேண்டும். வடகிழக்கு தமிழ் மக்கள் ஒழுக்கமின்றியோ நோக்கமின்றியோ,
தீர்மானமின்றியோ ஒருபொழுதும் வாழவில்லை. ஆனால் அவர்களுடைய நீண்டகால துன்பவியல்
வரலாறு, அம்மக்களை ஒற்றுமையாகவும் உறுதியான தீர்மானத்துடனும், அடக்குமுறைக்கு
எதிராக சக்தியோடு முகம் கொடுக்க வழிவகுத்தது. இந்த சக்தியினது உருவம்தான்
வடகிழக்குத் தமிழர்களின் புதிய தலைமைத்துவம்.
10. தெளிவான வேட்கைகளில் உறுதி கொண்ட தலைமைத்துவம்
விரும்பியோ விரும்பாமலோ ஒரு உண்மையை எல்லோரும் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதாவது இன்று விடுதலைப் புலிகளே ஈழத் தமிழரின் தலைமைத்துவம். இத் தலைமைத்துவம்
சிங்களவர்கள் பழகிய ஊழல்நிறை தேர்தல்கள் ஊடாகவல்ல, மாறாக தமிழ் மக்களைக் காட்டிக்
கொடுத்தவர்களுக்;கெதிரான ஆயுதப் போராட்டத்தினாலும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான
ஆயதப் போராட்டத்தினாலும் தானாகவே உருவாகியது.
இத் தலைமைத்துவம் பின்வரும் காரணிகளில் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டது.
1. வட-கிழக்கு தமிழ் மக்களின் ஈலட்சியத்தை தொடர்ச்சியாக பிரமாணிக்கத்துடன்
முன்னெடுத்து போராடுகின்ற ஒரேயொரு அமைப்பாக.
2. தமிழ் மக்களுக்கு எதிராக ஏவப்படுகின்ற ஏவுகணைகளிலிருந்தும்
குண்டுத்தாக்குதல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கின்ற அமைப்பாக.
3. தமிழர் விடுதலைக்காக அதிக ஆயிரப் போராளிகளை பலிகொடுத்தவர்களாக
4. வடகிழக்கு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு நிர்வாகக் கட்டமைப்பை (காவல்துறை,
நீதிமன்றம், கல்வி, போக்குவரத்து) ஏற்படுத்தியவர்களாக
5. தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக, தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால்
ஏற்றுக்ககொள்ளப்பட்ட அமைப்பாக
சிங்கள அராஜகத்திலிருந்தும், காடையர்களிலிருந்தும், இராணுவத்தாலும் ஏற்பட்ட நீண்ட
காலத் துன்ப்களும் இறப்புக்களும் தமிழ் மக்களின் வரலாறாக மாறினாலும், சிங்கள
அரசாங்கத்துடன் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டாலும், கொடுக்கப்பட்ட
உறுதிமொழிகளிலிருந்து சிங்கள அரசாங்கங்கள் பின்வாங்கினாலும், தமிழ் மக்களால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தலைமைத்துவம், பெரும்பான்மை சிங்கள மக்களுக்குப் பெரும்
சவாலாகவும், இலகுவில் விலைபோகாத தலைமைத்துவமாகவும் இருக்கின்றது. அண்மைக் காலங்கள்
வரை சிங்கள அரசு அமைச்சர் பதவிகள், சலுகைகளுடன் அல்லது நிறைவேற்றப்பட முடியாத
உறுதிமொழிகள்; உடன்படிக்கைகளுடன் பல போலித் தமிழ் தலைவர்களை விலை கொடுத்து வாங்கினர்.
அப்படி இன்றைய தலைமைத்துவத்துடன் சிங்களவர் காலடிகளில் விழுந்து கிடந்தாலும் செய்ய
முடியாது.
எத்தனை உயிர் இழப்புகளைச் சந்தித்தாலும், இராணுவத் தோல்விகளைச் சந்தித்தாலும்,
விமர்சனங்களை எதிர்கொண்டாலும், உலகின் பல வல்லரசுகளிலிருந்து அச்சுறுத்தல்கள்
வந்தாலும் அல்லது சிங்கள அரசிடமிருந்து பயமுறுத்தல்கள் வந்தாலும் தற்போதைய
தலைமைத்துவம் தன்னுடைய வேட்கையில் இருந்து சற்றேனும் பின்வாங்குவதாக இல்லை. சிங்கள
அரசாங்கங்கள் தன்னுடைய தலைமைகளை மாற்றி தங்களுடைய நகர்வுகளையும் யுக்திகளையும்
தெளிவான தத்துவ உறுதியின்றி மாற்றியிருக்கின்றது ஆனால் விடுதலைப் புலிகளின்
தலைமைத்துவம் எவ்வித மாற்றமுமின்றி தனது குறிக்கோளிலும் செயற்பாட்டிலும் உறுதியாக
செல்லுகின்றது.
இலட்சியத்திலும் வேட்கைகளிலும் உறுதியுடன் திடமாக உரமாக நடப்பதென்பது இவர்கள்
பேச்சவார்த்தை, உரையாடல் அல்லது நீதியான சமாதானமான தீர்வுகளை வெறுக்கின்றார்கள்
அல்லது தவிர்க்கின்றார்கள் என்பதல்ல. மாறாக அப்பேர்ப் பட்ட தீர்வை நோக்கி உறுதியுடன்
நடக்கின்றார்கள் என்பதே உண்மை.
11. நெறிப்படுத்தப்பட்ட தமிழ்த் தலைமைத்துவம்
சிங்கள அரசுகளினால் உறுதிமொழி கொடுக்கப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்படடும்,
வர்த்தமானிப்பிரகடனம் செய்யப்பட்டும் நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் தீர்மானங்கள் பல.
இந்த ஏமாற்று நிலை தமிழ் மக்களின் துன்பகரமான அனுபவமாகும். சிங்கள தீவிரவாதிகளின்
சிறிய எதிர்ப்பு ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு, பாரிய உடன்படிக்கைகளை
கிழித்தெறியும் சிங்கள அரசுகள் எப்படி தமிழர்களுக்கு ஓர் உறுதி மொழி கொடுக்க
முடியும்? அவைகளை எப்படி செயற் படுத்த முடியும்?
அதே வேளையில் பதவி, பணம், சலுகைகள் போன்ற சோதனைக்கு தங்களை உள்ளாக்கி கடைசியில்
ஒன்றுமில்லாத நிலைக்கு உட்படுத்தப்பட்ட பழைய புதிய தமிழ்த் தலைமைகளும் தமிழரின்
அனுபவங்கள். ஆனால் புலிகளின் தலைமைத்துவம் இத்தகைய அனுபவங்களிலிருந்து ஆளமான
பாடங்களைக் கற்றுக் கொண்ட ஒரு தலைமைத்துவமாக, தனக்கென்று ஒரு கொள்கையை
வகுத்திருக்கின்றது. சிங்கள அரசோடு மட்டுமல்ல, தன் சொந்த மக்களின் நலனுக்காக
மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பயன் கொடுக்கும் தீர்வையே அது விரும்புகின்றது.
சிங்கள அரசாங்கங்கள், விடுதலைப் புலிகள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல, அவர்கள்
யுத்தத்தை நோக்கியே செல்கின்றனர் எனக் குற்றம்சாட்டி, அவர்களை முற்றாக அழித்து
அல்லது பலவீனப்படுத்தி, தமிழ் மக்களின் நலனுக்கான ஏதோ செய்யலாம் என்று சிங்கள அரசு
சொல்லி வருகின்றது. இது சிங்களத் தலைமைத்துவத்தின் கடந்தகால மறக்கப்பட்ட தோல்விகளின்
வரலாற்றை மீளவும் நமக்கு வெளிப்படுத்துகின்றது. மேலாக இப்பேர்பட்ட விவாதங்கள்
கொள்கையுடைய நெறிப்படுத்தப்பட்ட தமிழ்த் தலைமைத்துவத்தோடு நேராக நிற்கமுடியாத
நேர்மையாக பேச முடியாத சிங்கள அரசாங்கங்களின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது.
12. அரசியல் இராணுவம் இவைகளை ஒன்றுபடுத்தும் ஒரு தலைமைத்துவம்;
சிங்கள அரசுகள் இனப்பிரச்சினையின் முதல் 30 வருடமும் தன்னுடைய இராணுவத்தை
பயன்படுத்தி தமிழ் ஜனநாயக எதிரணியை அடக்கியது. அதன்பின் இராணுவத்துக்கு மேலதிக
அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தின் (Pவுயு) ஊடாகக் கொடுத்துதவியது. தமிழர்களின்
எதிர்-தீவிரவாதத்துக்கு எதிராக கட்டுப்பாடற்ற இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
இதிலிருந்து இனப்பிரச்சினையில் இராணுவத்தின் தலையீடு பன் மடங்கு அதிகரிக்கத்
தொடங்கியது. அரசாங்கம் இராணுவத்தில் தங்கியிருப்பதானது இனப்பிரச்சினைக்கு அரசியல்
தீர்வு காண்பதற்கு என்றுமே தடையாக இருக்கும். இராணுவம் தங்களுக்கென்று ஒரு திட்டத்தை
வைத்துக்கொண்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று
தமிழர்களுக்கு நன்கு தெரியும். உதாரணமாக 1995ம் ஆண்டு வடகிழக்கிற்கு எதிரான
பொருளாதாரத்தடை நீக்கத்தை அரசாங்கம் வர்த்தமானிக் கட்டளையாகப் பிறப்பித்திரிந்தும்
இராணுவம் அதை செயல் படுத்த பின் வாங்கியது தெரிந்ததே. அரசாங்கத்துக்கும்
இராணுவத்துக்கும் உள்ள அதிகார இழுபறி தமிழ்மக்களின் தீர்வுக்கு எப்பொழுதும் தடையாக
இருக்கும்.
இந்நிலைக்கு எதிராகத்தான்; அரசியல்-இராணுவ நாடாளுமன்ற பலம் அனைத்தையும் ஒன்று
திரட்டி, புலிகளின் ஒரே தலைமைத்துவமாக தோற்றுவித்திருக்கின்றது.
13. யுத்தத்தை நீதிப்படுத்தி நீடிக்கும் அரசின் போக்கு
கூலிக்கு கூத்தாடும் வெளிவிவாகார அமைச்சரால் புலிகளுக்கு எதிராக |