| 650 | மாறரு நெடுவரை மக்க மாநகர்த் தேறல ரினையன நிகழ்த்துஞ் செய்கையைக் கூறரும் பெரும்புகழ் கொண்டன் மானபி வீறுடைத் திருச்செவி விளையக் கேட்டனர்.
| 3.14.1 |
651 | அரிகடஞ் செய்கைக ளனைத்துங் கேட்டருள் பெருகிய மனத்தினிற் பிரிய முற்றெழில் வரிசைமன் னவர்களை யழைத்து வம்மென வுரைசெயத் தூதுவ ரோடி யோதினார்.
| 3.14.2
| 653 | விற்கர வலியபூ பக்கர் வெற்றிசேர் மற்புய ருமறுது மானல் வாளலி சொற்பெருந் தோழருந் தூதென் றோதுவோர் முற்படு நபிதிரு முன்ன முன்னினார்.
| 3.14.3
| 653 | மனனுறை யறிவென விருக்கு மன்னவ ரனைவரு மடுத்துறைந் திருப்ப வாரணத் தனிநிலை யுள்ளகந் ததும்ப நன்னபி யினியன மொழிகொடுத் தியம்பு வாரரோ.
| 3.14.4
| 654 | கொலைமனத் தபூஜகல் குழுவு மந்நகர்ச் சிலைவய வீரருந் திரண்டு தீனவர் மலைவுறப் பேரமர் வளர்க்க வேண்டுமென் றிலைமலி வேலினீ ரிருக்கின் றார்களால்.
| 3.14.5
| 655 | மாவிசும் பமரருக் கிறையவ ரிம்மதி னாவினிற் போயமர் நடத்த வேண்டுமென் றேவின னிறையென விசைத்த மாற்றமும் போவதென் றிகல்கெடப் புரிதல் வேண்டுமால்.
| 3.14.6
| 656 | வல்லவன் ஜிபுறயீ லுரைத்த வாய்மையிற் செல்லவுந் தீனெறி விசயஞ் செய்யவும் நல்லவை நமக்கிவை யன்றி நாட்டமொன் றில்லையென் றிசைநபி யிசைத்திட் டாரரோ.
| 3.14.7
| 657 | நாயகன் மறைவழி நடத்து நன்னபி வாயகத் துதித்தசொன் மாற லின்றியே சேயென நடப்பது திறமைத் தாமெனத் தூயவ ரியாவருந் துணிவுற் றார்களால்.
| 3.14.8
| 658 | போற்றிநின் றனைவரும் புந்தி யாமெனத் தேற்றமுற் றியல்புடன் செப்ப நன்னபி மாற்றல ரெனுங்குபிர் மாய்க்கும் பீசபீற் கேற்றவை யாவையு மியற்று மென்றனர்.
| 3.14.9
| 659 | கொற்றவெண் கவிகையுங் கோல மார்துகில் சுற்றிய வட்டமுந் தூங்கு குஞ்சமுங் கற்றையங் கவரியுங் கதிர்செய் மாமணி வெற்றிவெண் டுவசத்தின் பேத வீக்கமும்.
| 3.14.10
| 660 | தடமுறு பதலையுந் தவிலுந் தாளமு மிடியென முழங்குபே ரிகையு மோர்புறத் திடிமனுந் தகுணிதஞ் சிறந்த பீலியும் வடிவுடைக் காளமும் வயிருஞ் சின்னமும்.
| 3.14.10
| 661 | வட்டணந் தட்டிநீள் வள்ளித் தண்டைதோல் கட்டிய தோற்பரங் கவசங் கீசகம் புட்டில்கைக் சோடிணை தாக்குப் போர்வைவெண் பட்டினிற் பஞ்சுவைத் தடைக்குப் பாயமும்.
| 3.14.12
| 662 | பட்டையந் தோமரம் பரசு கப்பணஞ் சொட்டைவா ளயிறனுச் சுரிகை முப்பிடி நெட்டிலைச் சூலங்கோல் பால நேமிசூழ் கட்டுபத் திரஞ்சரஞ் சுழற்று கைக்கண்.
| 3.14.13
| 663 | ஆடலம் பரிபரிக் கணிக ளியாவையுந் தேடின ரியற்றினர் சேனை காக்குதற் கீடுடை யவரிவ ரென்ன நன்னபி கூடிய பெயரினிற் குறித்துக் காட்டினார்.
| 3.14.14
| 664 | அரண்டு கடகரி யனைய நால்வரு முரணரி பொருவுமு ஹாஜி ரீன்களுந் தரியல ருயிருணன் சாரி மார்களு நரபதி நபியுட னிருக்கு நாளினில்.
| 3.14.15
| 665 | செறுநர்வத் தானெனுந் தலத்திற் சேர்கிலாக் குறைஷிகள் பலருங்க னானிக் கூட்டமு மறமுடன் றிரண்டன ரென்னும் வாசக மிறையவன் றிருநபிக் கெடுத்துக் கூறினார்.
| 3.14.16
| 666 | மாற்றலர் முதற்படை திரண்டு வைகிய கூற்றினை யுணர்வொடுங் குறித்தசு காபிகள் சீற்றமுற் றவ்வயின் செல்கு வோமெனச் சாற்றலு முகம்மதுந் தகுமென் றோதினார்.
| 3.14.17
| 667 | நீட்டிய செழும்படைச் சேனை வீரரை வீட்டிவெங் களத்திடைப் பருந்துக் கேவிருந் தூட்டிய வேற்கையு பாத செய்தவங் கூட்டிய தெனவுரு வெடுத்த கோலத்தார்.
| 3.14.18
| 668 | காதலுற் றிரப்பவர் கருத்துத் தேக்குற வீதலுக் கிசைந்தெடுத் தளிக்குஞ் செங்கையார் போதமும் வீரமும் புகழுந் தூங்கிய சாதன சகுதெனுந் தரும வேந்தரே.
| 3.14.19
| 669 | அன்னவர் தமைமதி னாவிற் காதியா மன்னபி முகம்மதங் கிருத்தி வைத்ததாள் பின்னிடா தடுஞ்சரம் பெய்யும் வீரர்க டுன்னிட வெழுந்தனர் துதிக்க யாவுமே.
| 3.14.20
| 670 | குடைகளுந் துவசமுங் குழுமி யோங்கிடக் கடுவிசைப் பரிக்குழாங் கலந்து முன்செலக் சுடர்விடு படைக்கலஞ் சுமந்த கொற்றவர் புடையெழத் திருநகர்ப் புறத்திற் றோன்றினார்.
| 3.14.21
| 671 | படியிடத் தெழுந்துகள் புயலிற் பம்பவா னிடியென முரசுபல் லியங்க றங்கக்கூர் வடிநெடுங் கதிரயின் மலிந்து மின்னிடக் கொடியவர் திசையினைக் குறுகி னாரரோ.
| 3.14.22
| 672 | சேனையும் வாசியுஞ் செருமிச் சூழ்தரு கானர ணனைத்தையுங் கடந்து சென்றுக னானியர் குறைஷிக ணடுந டுங்கவத் தானெனும் பெயருடைத் தலத்தைச் சுற்றினார்.
| 3.14.23
| 673 | ககனவெங் கதிரவன் கரங்க டூளியிற் புகவிட மிலையெனப் பொருந்து மன்னவர் தொகுதியும் வாசியுஞ் சுற்றுஞ் சேனையு மகுசிகண் டுளத்திடை மலைந்திட் டானரோ.
| 3.14.24
| 674 | வருவதும் நிகழ்வதும் வகுத்துப் புந்தியிற் பெருகிய தலைவருக் கெடுத்துப் பேசிநல் லுரையினும் வழக்கினு மொத்த சூழ்ச்சியின் புரவல னொருவனைத் தூது போக்கினான்.
| 3.14.25
| 675 | சந்தென விடவருந் தலைமை மன்னவன் வந்துநன் னபிபதம் வழுத்தி யூன்றிய கந்தடு கடகளி றனைய காட்சியான் சிந்தைகண் மகிழ்தர வெடுத்துச் செப்புவான்.
| 3.14.26
| 676 | இறையவன் றிருநபி யுலகுக் கின்புறு மறைவழி யொழுகியவ் வணக்க வாசக முறைமையி னடத்தியா முழுது மிவ்வயி னுறைகுவ தலதுவே றுறுதி வேண்டுமோ.
| 3.14.27
| 678 | மகுசியென் றோதும்வத் தானி னேந்தலு மிகுபடைத் தலைவரும் வேறு றாதொரு தகைமையிற் பணிவது சரத மின்றுநீ ரிகன்மறுத் தணிநகர்க் கெழுக வென்றனன்.
| 3.14.28
| 678 | உற்றுறைந் தவனிவ ணுரைத்த வாசகம் வெற்றியென் றியனபி போரின் வேட்கையிற் சுற்றிய திறற்படைச் சூர ரியாரையு மிற்றையி னெழுகவென் றேவி னாரரோ.
| 3.14.29
| 679 | இங்கிதத் தொடும்பணிந் திசைத்த தூதுவ னங்கலுழ் நபிமல ரடியி னிற்கரப் பங்கயங் குவித்தரும் பதியிற் போயினன் றிங்களங் குடையொடு மெழுந்த சேனையே.
| 3.14.30
| 680 | ஒட்டிய செழுமுகிற் கவிகை யூடுற நீட்டிய வெண்கொடி நிலவு கான்றிடத் தீட்டிய படைக்கலஞ் செறியச் சென்றொரு காட்டினி லிறங்கினர் கார ணீகரே.
| 3.14.31
| 681 | இறங்கிய பாசறை யிருந்து வாரிபோற் கறங்கிய சேனைமு ஹாஜி ரீன்களின் மறங்கிள ரெண்பது பெயரை வாளொடு நிறங்கிள ரயிலொடு நீக்கி னாரரோ.
| 3.14.32
| 682 | கந்தமுங் கதிரும றாத காட்சியர் கொந்தலர் புயத்துபை தாவைக் கூவிநற் சிந்தையின் மகிழ்வுற விருத்தித் தேறிய மந்திர மொழிசில வகுத்துப் பின்னரும்.
| 3.14.33
| 683 | கூடுமெண் பதுபெய ருடனுங் கோதற நாடிநீர் மக்கமா நகரைச் சூழ்தரு பாடிக ளனைத்தும்பாழ் படுத்துஞ் சூறைக ளாடியிங் கடைகென வறைந்திட் டாரரோ.
| 3.14.34
| 684 | கரியினு மதர்த்தமு ஹாஜி ரீன்களை மருமலர்ப் புயத்துபை தாவை மன்னபி திருநய னங்களா னோக்கிச் சிந்தைவைத் திருளறும் வெற்றி வெண் கொடியு மீந்தனர்.
| 3.14.35
| 685 | கருதல ருறைபதி களைந்திட் டொல்லையின் வருகென வினைஞரை விடுத்து வள்ளல்பாய் துரகதக் குழுவொடுஞ் சேனை சூழ்தர நரலையின் வளமதீ னாவை நண்ணினார்.
| 3.14.36
| 686 | எண்ணொரு பதின்மரு மிலங்கு நீடொடை வண்ணவொண் புயத்துபை தாவு மாறிலா தண்ணறன் பதமலர் போற்றி யன்பொடும் விண்ணெடுங் கடுவிசைப் புரவிமேற் கொண்டார்.
| 3.14.37
| 687 | எதிரமர் தொறுந்தெழும் பிருந்த மெய்யினர் கதிரயில் வாண்மற வாத கையினர் விதியவன் மறைமுறை விளக்கும் வாயினர் புதியவெம் பகைப்பதி யடுப்பப் போயினார்.
| 3.14.38
| 688 | வெற்றிவெண் கொடியொடும் வேக வாம்பரிக் கொற்றவர் குழுமிவந் தடருங் கொள்கையைப் பற்றல ரறிந்துசீ றூரிற் பல்பல தெற்றறக் குடியொடுஞ் சிதறிப் போயினார்.
| 3.14.39
| 689 | இவுளியும் படையுமு ஹாஜி ரீன்களுந் தவிசுறை யரசுபை தாவும் வந்தவை யபுஜகல் மகனறிந் தரிய வேகத்தாற் குவிதரும் படைக்கெதிர் கொண்டு நேர்ந்தனன்.
| 3.14.40
| 690 | மதிவர வழைத்தவர் விடுத்த மன்னருஞ் சதியபு ஜகல்தரு புதல்வன் றானையுங் கதிபரி யொடுபடைக் கலத்தின் கையொடு மெதிருமக் கெமக்கென விருக்குங் காலையில்.
| 3.14.41
| 691 | சதிவைத்த கருதலர்த் தளத்தி னூடிருந் திதமித்த நபிகலி மாவுக் கின்புறு மதிவத்தி யெனுமிகு தாதும் வாம்பரி யுதபத்தும் வந்துபை தாவைக் கூடினார்.
| 3.14.420
| 692 | மாதவ ரிருவரும் வந்த போழ்தினி லாதரம் விடுத்தம ரரிக டுன்புறப் பூதலம் புகழுமுக் காசு புத்திரர் காதகல் சகுதொரு கணைதொட் டாரரோ.
| 3.14.43
| 693 | அடுத்துநின் றவரிசு லாமி லாயது மெடுத்தொரம் பெய்தவ ரிருந்த வேகமுங் கடுத்தலை யெடுத்தவர் கருத்துங் கண்டமர் தடுத்தபூ ஜகல்மகன் றளம்பின் வாங்கினான்.
| 3.14.44
| 694 | வெட்டுக்குத் தெனுமொழி விளம்பி லாதொரு மட்டினின் றவர்கள்பின் வாங்கி னாரினித் தொட்டமர் விளைத்திடல் சூழ்ச்சித் தன்றெனத் தட்டல கயிலுபை தாவு நீங்கினார்.
| 3.14.45
| 695 | மருவல ருடனிருந் திருவர் வந்ததும் பொருசகு துக்கெதி ராது போயதும் விருதுகொண் டிகலிடும் வெற்றிப் போரினும்
பெரிதெனக் குழுவொடும் பிரியத் தேகினார்.
| 3.14.46
| 696 | மிகல்பெறும் வெற்றியின் பீச பீலுக்கா யிகன்முதற் சரமுமொன் றெய்து மன்னவர் முகிறவழ் கொடிசெலத் தானை மொய்த்திட நகர்புகுந் தகுமது பதத்தை நண்ணினார்.
| 3.14.40
|
| 697 | திங்கள்வந் திறைஞ்சிப் போற்றி செகதிர் பேசப் பேசு மங்குலங் கவிகை வள்ளல் வளம்பெறு மதீனாத் தன்னிற் பொங்குதீன் விளங்க நாளுங் காரணப் புதுமை யோங்கி யெங்கணும் படரச் செங்கோ னெறியர சியற்று நாளில்.
| 3.15.1 |
698 | விதியவன் மொழிம றாது விண்ணவர்க் கரசர் கூறும் புதுமறை யவர்கள் போற்றப் பொருவில்வா னவர்கள் வாழ்த்தக் கதுவகிற் கரிய கூந்தற் காரிகை பாத்தி மாதம் வதுவையின் வரலா றெல்லாம் வகுத்தினி துரைக்க லுற்றாம்.
| 3.15.2
| 699 | ஆதிநா யகன்றன் றூதர்க் கன்புறுங் கதீஜா வீன்ற பேதையர் நால்வர் தம்முட் பெற்றபே றனைத்து மொன்றாய்க் கோதறத் திரண்டு சோதிக் கொடியென வுருக்கொண் டோ ங்கி மாதர்க டிலத மென்ன மாநிலத் துதித்த பாவை.
| 3.15.3
| 700 | அதிர்த்திரைக் கடற்பா ரெங்கு மமுதத்தீன் றிவலை சிந்தி யுதித்தெழு முகம்ம தென்னுந் திங்களி லுதயஞ் செய்து பதித்தலத் துவக்கு மாதர் பவக்கடற் றிமிர மோட்டுங் கதிர்த்தடத் தீப மென்னக் கட்டழ கெறிக்குஞ் சோதி.
| 3.15.4
| 701 | ஆதிநா ளொளிவு வாய்ந்த வழகெலாந் திரட்டிச் சேர்த்த பாதியிற் பாதி நூற்றோர் பங்கினிற் செம்பொன் னாட்டின் மாதரை வகுத்திம் மாததைத் திரட்டிய வண்ண மெல்லாந் தூதுயிர்ப் புதல்வி யென்னப் படைத்தனன் சுருதி யோனே.
| 3.15.5
| 702 | சுற்றிளம் பருதி வெய்யோன் சுவட்டடிச் சேப்புக் கேயப் பெற்றனன் மடந்தை துண்டத் தழகினிற் பெற்றி லேனென் றுற்றுள மொடுங்கக் கூனி யந்தரத் துலவி நாணி மற்றுள கலையுந் தேய்ந்து நாட்குநாண் மறுகுந் திங்கள்.
| 3.15.6
| 703 | எண்ணருந் தவமுங் கற்பும் புகழுநின் றிறைஞ்சி யேத்தும் பண்ணரும் வேத வாய்மைப் படிதவ றாத வாக்கு நண்ணருந் தரும மியாவுஞ் சொற்படி நடக்கு நாளுங் கண்ணகன் புவியிற் பாவைக் கற்பெனு மரசுக் கன்றே.
| 3.15.7
| 704 | சேணுல கிமையா நாட்டத் தெரிவையர் தமக்கு மிம்பர்ப் பூண்முலை யவர்க்கு மேக நாயகி யென்னப் பூவிற் காணுதற் கரியோன் செய்தா னென்னிலிக் கவின்கொண் டோ ங்கு மாணிழை மடந்தைக் குற்ற பெற்றியார் வகுக்க வல்லார் ?
| 3.15.8
| 705 | எல்லையி லழகு வாய்ந்த வேந்திழை கதீஜா வீன்ற நல்லியற் கனக நாட்டி னாரியர் திலத மன்னார்க் கல்லடர் கரிய வாட்க ணகத்திடை வரிக ளோடிப் பல்லவம் பசப்புற் றென்னப் பருவம்வந் திறுத்த தன்றே.
| 3.15.9
| 706 | வடிவுறுஞ் செம்பொற் பூவில் வாசம்வந் துறைந்த போலுங் கொடிமல ரதனிற் சேர்ந்த கொழுநறா நிறைந்த போலுங் கடிநெடுங் கழையிற் செவ்விக் கதிர்மணி தரித்தல் போலு மடிகடம் புதல்விக் கின்பப் பருவம்வந் தடைந்த தன்றே.
| 3.15.10
| 707 | வரிசையும் பேறும் வேத வாய்மையு முளர தன்றி யரசருக் கரசர் செல்வத் தரும்பொரு ளனைய செல்வி பெரியவ னருளால் வந்த பெண்ணினை வரைத லியானென் றுரைகொடுப் பவரியா ரென்ன வுள்ளநெக் குருகு வாரும்.
| 3.15.11
| 708 | தரியலர்ச் செகுக்கும் வெள்வேற் சதுமறைத் தலைவ ரீன்ற வரிவிழிக் கரிய கூந்தன் மங்கைதம் வதுவை வேட்டுப் புரிமுறுக் கவிழுந் தொங்கற் புயவரை யரசர் கூடி யொருவருக் கொருவ ருள்ளிட் டுரைவெளிப் படித்து வாரும்.
| 3.15.12
| 709 | வடிவமு மொழுங்கு நீதி வணக்கமு மறிவும் பூத்த கொடிமட மயிலைச் சோதிக் குலக்கொழுந் தனைய கற்பைப் பிடிபடு மணத்திற் சேர்ந்து பேருல கனைத்தும் வாழ்த்தப் படுமவ ரெவரோ வென்னப் பற்பல்காற் பகரு வாரும்.
| 3.15.13
| 710 | பிறநக ரரசர் செல்வின் பெண்கனி வதுவை வேண்டி யறைதிரைப் பரவை யாடை யம்புவி முழுதுங் காத்து முறைசெயுங் கார ணீகர் திருமுன மொழிமி னென்றன் றுறவின ரிடத்திற் றீட்டு மோலைக ளனுப்பு வாரும்.
| 3.15.14
| 711 | எரிமணிக் கனகப் பூணு மிளநிலா வொழுகு முத்தப் பெருமணி வடமு மெண்ணில் வெறுக்கையும் பெரிது முன்னர்த் தருகுவம் வதுவை யெம்பா லளித்திடி லென்னத் தாழ்ந்து கருதல ரரியே றன்னார் காதினி லோது வாரும்.
| 3.15.15
| 712 | உரைபல ரினைய வண்ண முலகவ ரியம்ப யாணர் மரைமலர் வதன வள்ளன் மங்கைதம் வதுவை வல்லோன் றிருவுளப் படிய தன்றிச் செய்வதின் றென்னச் செவ்வி தருமனத் திருத்தி யாருஞ் சாற்றுதல் பொருந்தி லாரால்.
| 3.15.16
| 713 | இவ்வித நிகழா நிற்ப வியைதரு விதியின் பண்பான் மவ்வலங் குழலார் வாழ்க்கைத் துணைவரு நயத்தை நோக்கித் தெவ்வடர்த் தெறியும் வெள்வேற் சிங்கவே றனைய காளைச் செவ்விய லலியார் காதல் சிந்தையி னாளும் பூத்தார்.
| 3.15.17
| 714 | நகரவ ருரையுஞ் சூழ்ந்த நாட்டவர் விடுக்குந் தூதர் பகருநன் மொழியு மற்றோர் தீட்டுபா சுரத்தின் கூறும் நிகரரும் வள்ள லுள்ளத் திருத்திய நினைவு மோர்ந்து வகையுறா தீற்றி னெண்ணத் தாலுளம் வருந்தி னாரால்.
| 3.15.18
| 715 | மின்னுருக் கொண்ட கன்னி விளங்கிழை நலத்தை நாடி மன்னர்க ளுளந்தே றாது வதுவையின் மயக்குற் றாரேற் பன்னெடு நாளிற் காம மனத்தினுட் படுத்திப் பாவை தன்னைவைத் திருக்கும் வேந்தர் கருத்தையார் சாற்ற வல்லார் ?
| 3.15.19
| 716 | சூனிசிலைப் புருவ வாட்கட் கொடியிடைக் கரிய கூந்தற் கனியிதழ்ச் சிறுவெண் மூரற் காரிகை நலத்தை நாடி நினைவுதித் திரையும் போக்கி நீடொடு குழியி னார்ந்த நனிமதக் களிறு போன்று வேட்கையி னடுங்கி னாரால்.
| 3.15.20
| 717 | குயினுறை சிகர மேருக் குலவரை யனைத்தும் வென்று வயிரவொண் வரையின் மீறு மாணெழிற் புயங்கள் சேந்த கயிரவ மனைய செவ்வாய்க் காரிகை மம்மர் நோயால் வெயில்படு மலரின் வாடி மென்மையின் மெலிந்த வன்றே.
| 3.15.21
| 718 | விண்கணி னமரர் கோமான் மேதினிக் குரைத்த வேதப் பண்கனிந் தொழுகுஞ் செவ்வாய்ப் பாத்திமா வென்னு மந்தப் பெண்கனி யுருவத் தார்ந்த பேரெழிற் கடலி லாழ்ந்து கண்களின் மறுத்துத் தோன்று முருவன்றிக் காண்கி லாரே.
| 3.15.22
| 719 | கலிதடுத் துலகங் காக்குங் காவல ரினிதி னீன்ற வொலிகட லமிர்த மொவ்வா வொண்டொடி முகத்தின் வாய்ந்து மலிதருங் கருமை யுண்ட வரிவிழிக் கயல்கள் பாய வலியெனும் வலிய வீர ரகக்கடல் கலங்கிற் றன்றே.
| 3.15.23
| 720 | பற்றல ருடலந் தேய்த்துப் பஃறலைக் குருதி யூற்றும் வெற்றிவா ளலியென் றோதும் வீரவெண் மடங்க னாளூ மிற்றசின் மருங்குல் பாத்தி மாவெனு மிளமான் றன்னால் வற்றுறா வலியும் போக்கி மயக்குண்டு கிடந்த தன்றே.
| 3.15.24
| 721 | செறிகடற் பாரிற் றூண்டா மணியினுஞ் செவ்வி வாய்ந்து நிறைதருங் கற்பி னல்லா ரிடத்தினி னிதமு மாறா வறிவெனுந் தூது தன்னோ டகமெனுந் துணையும் போக்கி வறியரிற் றமிய ராகி வாளலி மவுல லுற்றார்.
| 3.15.25
| 722 | கனிந்தினி தொழுகும் பெண்மைக் கரும்பைத்தேன் கனியை வாசம் புனைந்தபூங் கதுப்பிற் றுஞ்சும் வண்டெனப் பொருகண் ணாரை மனந்தனிற் குடிகொண் டுற்ற வாழ்வையென் னிருகண் ணீங்கா வனந்தனை யிறைவா வென்பா லளித்தியென் றுரைத்து நின்றார்.
| 3.15.26
| 723 | வனைகழற் செருவாள் வள்ளன் மனத்துறுங் காமத் தன்பும் பனிமலர்ச் செருகுங் கூந்தற் பாவைதம் மெழிலுஞ் சூட்ட நனைதரும் வதுவை வேண்டி நாடொறுங் கெஞ்சிக் கெஞ்சித் தனியெனுக் குரைத்தா ரல்லாற் பிறர்க்குரை சாற்றி லாரே.
| 3.15.27
| 724 | அரிந்துவெங் குபிரை யோது மாதிநூற் கலிமா வித்தி விரிந்ததீன் பயிரை யேற்றும் விறற்படை யலியாம் வேங்கை பரிந்திரு கரங்க ளேந்திப் பற்பல்கா லிறையோன் றன்பாற் கரைந்துநின் றிரந்த வெல்லா முறக்கபூ லாய தன்றே.
| 3.15.28
| 725 | மூதிருட் படலஞ் சீக்கு முச்சுடர்க் கதிரு மொவ்வா பாதலம் விசும்பு தூர்க்கும் படர்சிறைக் சுருணைச் செங்க ணாதரம் பெருக வாதி யருளின்வா னிழிந்து மெய்மைத் தூதரி னிடத்தில் வந்தார் துணையெனுஞ் ஜிபுற யீலே.
| 3.15.29
| 726 | வந்தடுத் துறைந்து வண்மை முகம்மதே சலாமென் றோதிப் பைந்தொடி கரிய கூந்தற் பாத்திமா பொருட்டால் வானி லந்தமி லவன்றன் பாலி னிகழ்ந்தவை யனைத்துந் தேறும் புந்தியின் மகிழ்வு பூப்பப் படிப்படி புகல லுற்றார்.
| 3.15.30
| 727 | அரியவன் றிருமெய்த் தூதே யண்ணலே யிறையோன் சோதிக் குருமணி யினத்தாற் போதாற் கொழுந்துகி லதனாற் செம்பொற் றிருநகர் மனைக டோ றுஞ் சிறப்பிக்க வருளிச் செய்தா னுரையருட் படியே வானோ ரும்பரின் விளக்கஞ் செய்தார்.
| 3.15.31
| 728 | பொன்னகர் விளக்கிப் பின்னர் புகழ்தர மகரு நாட்டி யென்னுட னிசுறா பீல்மிக் காயிலுஞ் சாட்சி யேயப் பன்னரு மலியார்க் கின்பப் பாத்திமா தமைநிக் காகு முன்னிய தருத்தூ பாவின் முடித்தன னிறைவ னன்றே.
| 3.15.32
| 729 | இந்தநன் மொழியை நும்பா லியம்பென விறைவ னேவ வந்தன னென்னப் போற்றி வானவர்க் கரசர் கூறச் சந்தன கதம்ப மாறாத் தடவரைப் புயங்கள் விம்மக் கந்தடு களிற்றின் மீறி முகம்மது களிப்புற் றாரால்.
| 3.15.33
| 730 | அடலபூ பக்கர் வெற்றி யரியும றுதுமா னொன்னா ரிடரற வருமு ஹாஜி ரீன்களன் சாரி மார்க ளுடனுறை முதியோர்க் கும்ப ருற்றசோ பனத்தைச் செந்தேன் வடிமலர்த் தொங்கற் றிண்டோ ண் முகம்மது வழங்கினாரால்.
| 3.15.34
| 731 | கனகநா டதனி னுற்ற காரண வமுதந் தேக்கி யனைவருங் களிப்பு வெள்ளத் தானந்தக் கடலின் மூழ்கி யினையன நினைத்தோ மியாங்க ணினைத்தவை யிறையோன் செய்தான் வனைகழ லலிதம் பேறின் மகிமையார் வகுக்க வல்லார்.
| 3.15.35
| 732 | என்னுநன் மொழிகண் மிக்கோ ரினியன மகிழ்விற் கூறப் பன்னகம் பேசப் பேசும் பார்த்திவ ரிறசூ லுல்லா தன்னகத் திருந்த வண்ண முடித்தனன் ரனியோ னென்ன மன்னபித் தாலி பீன்ற மணியினைக் கொணர்மி னென்றார்.
| 3.15.36
| 733 | மருவலர் மதங்க டேய்க்கு மன்னவ ருரைத்த மாற்ற மிருவர்கள் சென்னி மேற்கொண் டெழுந்தலி தம்மை முன்னிப் பரிவின் சலாமுங் கூறிப் பாவலர் வறியோர் வாழச் சொரிதருஞ் செங்கை வேந்தே சோபனம் வருக வென்றார்.
| 3.15.37
| 734 | மதுமைகன் னவர்கள் கூறுஞ் சோபன வசனந் தன்னா னிதயத்தி னிருந்த வண்ண முடிந்ததோ வென்ன வெண்ணிக் கொதிநுனைப் பகுவாள் வள்ள லெழுந்திரு குவவுத் திண்டோ ட் புதுநறாத் துளிக்குந் தொங்கல் புரடர விரைவின் வந்தார்.
| 3.15.38
| 735 | ஆரண முழங்கும் பள்ளி வாயிற னவையி னண்ணிக் காரணக் குரிசிற் கின்பக் கட்டுரை சலாமுங் கூறி யூரவ ருடனு மோர்பா லுறைந்தன ருயர்ந்த வெற்றி யேரணிந் திலங்கும் பைம்பூ ணிளஞ்சிங்க மிருந்த தொத்தே.
| 3.15.39
| 736 | தமனியப் பதியிற் றூபாத் தருவயி னடந்த பேறு மமரருக் கரசர் கூற நபியக மகிழ்ந்த வாறுந் திமிரவெங் குபிரை யோட்டுந் தினகர னென்னுந் தூயோர் கமைதரு சீற்ற வேங்கை யலிகயங் களிப்பச் சொன்னார்.
| 3.15.40
| 737 | வானவர்க் கரசர் சொன்ன வாய்மையின் முதியோர் கூறுந் தேனெனு மணத்தின் றீஞ்சொற் செவிவழி புகுத லோடுங் கானமர் வேங்கை வள்ளல் கதிர்மணிப் புயமு நெஞ்சுத் தானவ னருளீ தென்னத் தடப்பெரும் புளகம் பூத்த.
| 3.15.41
| 738 | திருத்திய கனகப் பைம்பூண் சேயிழை வதுவை வேட்டு வருத்தமுற் றுணர்வு போக்கி நாடொறும் வருந்து நெஞ்சிற் பொருத்துற நினைத்த வண்ண முடிந்ததென் றுரைபுக் காலக் கருத்தினிற் பெருகா னந்தக் களிப்பையார் கணிக்க வல்லார்?
| 3.15.42
| 739 | அகலிடம் விளங்கு மைந்நூ றிரசிதத் தரிய காசு மகரென வலிக்க னாதி வதுவையை முடித்தா னென்னப் பகரருங் கற்பின் மிக்க பாத்திமா செவியிற் சாற்ற விகலுறும் வேத வாய்மை முகம்மதங் கிசைத்தா ரன்றே.
| 3.15.43
| 740 | அருமறை முதியோ ரேகி யிறையவ னலியார்க் கின்பத் திருமண முடித்தா னென்ன ஜிபுறயீ லுரைத்த வாறு மருமலர் வாகைத் திண்டோ ண் முகம்மது மகிழ்ந்த வாறும் புரிகுழ னவ்வி பாத்தி மாமுனம் புகன்றிட் டாரால்.
| 3.15.44
| 741 | மறையவ ருரைத்த மாற்ற மதிநுதன் மடந்தை கேட்டின் றிறையவன் முடித்த வாறு மியனபி மகிழ்ந்த வாறு முறையெனத் தலைமேற் கொண்டேன் முன்னர்நூன் முழுதும் வல்லீ ரறைவதொன் றுளது கேண்மி னெனுமுரை யருளிச் சொல்வார்.
| 3.15.45
| 742 | சினவுவே லபித்தா லீபு சேயெனும் புலிக்கி யானே மனையினிற் குரிய ளானேன் மகரிர சிதமைந் நூறென் றுனைமொழி பொருத்த மில்லே னென்னுளத் துறைந்த வண்ண மினிதுற வருள வேண்டு மெனுமுரை விளங்கச் சொன்னார்.
| 3.15.46
| 743 | மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம் படர்ந்தகேள் வியர்கள் வந்து நபிமுனம் பகரக் கேட்டுக் கடந்தசெங் கதிர்வே லேந்துங் காவல ரெவரு முள்ளத் திடந்தனி மலைவு தோன்றி யிருந்தனர் பெரிதின் மன்னோ.
| 3.15.47
| 744 | அவ்வயி னிமையா நாட்டத் தமரருக் கரச ராதி செவ்விய மொழியி னோடுஞ் செகதலத் திழிந்து கூறா நவ்விமுன் னெதிர்ந்து பேசு நாயக சலாமென் றோதிக் கவ்வையங் கடலின் மிக்காங் களிப்புறக் கருதிச் சொல்வார்.
| 3.15.48
| 745 | பொறைவளை கடற்பா ரெங்கும் போற்றுநும் புதல்வி யுள்ளத் துறைகின்ற மகரைக் கேட்டு வருகவென் றும்பர் போற்று மிறையவ னருளிச் செய்தா னென்றுரைத் தனரம் மாற்ற முறைவழி விளக்கத் தூதர் மொழிந்தனர் பாவைக் கன்றே.
| 3.15.49
| 746 | மேலவன் வரிசைப் பேறாய் விளம்பிய மாற்றங் கேட்டு நூலெனு மருங்குற் பேதை நுவலரு முவகை யெய்தி ஞாலமும் விண்ணு நிற்க நாட்டிய தம்ப மென்னச் சீலமுற் றறிவினோடு மொருமொழி செப்ப லுற்றார்.
| 3.15.50
| 747 | இறுதியிற் பவத்தின் மாத ரென்ஷபா அத்தீ டேற்றம் பெறமன்றாட் டருள வேண்டிப் பேரருட் கபூல்செய் தானேல் உறுதிநன் மகர்பெற் றேனென் றுரைத்தன ருரைத்த மாற்றஞ் சிறைகுலாம் வள்ளலாதி திருமுன்விண் ணப்பஞ் செய்தார்.
| 3.15.51
| 748 | நபியைமான் பாத்தி மாவை நரர்புலி யலியை யெந்தப் புவியினு முவந்தோர் செய்யும் பிழைபொறுத் திடுவ தாக வவியும்பிற் கால மன்றாட் டருளுவ னென்ன வாதி கவினுறச் சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார்.
| 3.15.52
| 749 | வானிழிந் தரிய வேத முகம்மதுக் குரைப்ப வன்னோர் தேனிமி ரலங்கற் கூந்தற் சேயிழைக் குரைப்பச் செய்தார் பானலங் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்திவ் வண்ணந் தான்வரைந் தளித்தல் வேண்டு மெற்கெனச் சாற்றி னாரால்.
| 3.15.53
| 750 | கோதைய ருரைத்த மாற்ற மிஃதெனக் கொண்டல் கூற மாதவர்க் குதவி கூறுஞ் ஜிபுறயீல் மகிழ்வி னேகிப் பூதலத் துறைந்த யாக்கை யுயிர்தொறும் பொருந்தி வாழு மாதிமுன் னுரைத்து நின்றா ரருட்கடை நோக்கி யன்றே.
| 3.15.54
| 751 | பாவைய ருரைத்த வண்ணம் பச்சையங் கடுதா சின்கண் மேவரக் கனக மையால் வரிபட விளங்கத் தீட்டிச் சேவையி னினைவு மாறாச் செவ்விய ஜிபுற யீல்பா லீவதீ தென்ன வோதி யிறையவ னளித்திட் டானால்.
| 3.15.55
| 752 | வரைந்தபா சுரத்தை யேந்தி வானிழிந் தமரர் கோமான் கருந்தடங் கண்ணார்க் கென்ன நபிதருக் சுரத்தில் வைத்தார் விரிந்தபூங் கமல மன்ன மென்முகஞ் சேர்த்தி முத்திப் பரிந்தொரு துணைவர்க கீந்து பாசுரம் விளக்கென் றாரால்.
| 3.15.56
| 753 | கொடுத்தபதி திரத்தை வாங்கிக் கொழுமலர்க் கண்ணி லொத்தி விடுத்ததை விரித்துப் பைம்பொன் வரிமுறை விளங்க நோக்கி யடுத்தவர் பிறர்மற் றுள்ளோ ரியாவரு மறிய வல்லே தொடுத்தொரு மொழிவ ழாது வாசகஞ் சொல்ல லுற்றார்.
| 3.15.57
| 754 | என்னடி யவரின் மிக்கா முகம்மதி னினிதி னீன்ற பொன்னிழை தனக்கு மென்ற னலியெனும் புலிக்கு மின்ப மன்னிய வதுவைக் கான மகரென விசுலா முற்ற பன்னிகள் பவத்தி னுற்றோர் பல்லர்க்குங் குறைக டீர.
| 3.15.58
| 755 | இறுதிநா ளினின்மன் றாடித் தன்ஷபா அத்திலீ டேற்ற மறைதொறும் விளங்கச் சொல்லு முகம்மதுஞ் ஜிபுற யீலு மறநெறி மீக்கா யீலுஞ் சாட்சிய தாக நானே மறுவறக் கபூல்செய் தேனென் றிருந்ததை வாசித் தாரால்.
| 3.15.59
| 756 | பாரினின் முதலோன் வாய்மைப் பத்திரம் வரவ ளாகப் பேருல கினிலிப் பேறு பெற்றவ ருளரோ வென்ன வீரவெண் மடங்க லன்ன விறலுடை வள்ள லோடுஞ் சீர்பெறு முதியோ ரியாருஞ் சிலிர்த்தன ருடல மன்றே.
| 3.15.60
| 757 | செவியகங் குளிரப் பொன்னாற் றீட்டுபத் திரத்தை யேந்தி யவையகம் விடுத்துப் பாத்தி மாவணி மனையை நண்ணிக் கவினுறு மயிலே யென்ன வாசித்துக் காண்பித் தன்பி னவமிவை யென்னப் போற்றிச் சிலமொழி நவில லுற்றார்.
| 3.15.61
| 758 | வரத்தினி லுயர்ந்த பேறே மகுசறு வெளியி லென்றன் கரத்தினி லளிக்க வேண்டுங் காரண மதனா லீதை யொருத்தருந் தீண்டா வண்ண முயிரென வோம்பி யோர்பா லிருத்துமென் றிறசூ லுல்லா விளந்தளிர்க் கையி லீந்தார்.
| 3.15.62
| 759 | அந்தநன் மாற்றங் கேட்ட வரிவையர்க் கமுத மன்னார் செந்தளிர்க் சுரத்தி னேந்திக் சென்னிமேல் விழிமேற் கொண்டு மந்திரப் பொருளைச் செம்பொன் மணிச்செப்பி னடைத்துக் கிட்டாப் புந்தியு முயிரு மென்னப் போற்றுதல் பொருந்தி னாரால்.
| 3.15.63
| 760 | பரம்பொருள் விருப்பி னீந்த பத்திர மகள்கைக் கீந்து வரம்பெறும் வள்ளல் பள்ளி வாயிலி னைவையி னண்ணி யரம்பொருந் திலங்கும் வெள்வே லபூபக்கர் முதலா யுள்ள தரம்பெறுந் தோழர்க் கெல்லா மினியவை சாற்று வாரால்.
| 3.15.64
| 761 | மதுரமென் கனிக்குஞ் சீர்த்தி வாளலி தமக்கு மேன்மை முதலவன் மணநிக் காகு முடித்தன னதனை யெந்தப் பதியினுஞ் சிறப்பு வாய்ப்பப் பற்றல ரொடுங்க மேலு மிதமுற வியற்றற் கேற்ற யாவையு மியற்று மென்றார்.
| 3.15.65
| 762 | பேறுய ராதி யாலி லாஞ்சனை பெற்ற சிங்கங் கூறிய வசனங் கேட்டுக் கொற்றவ ருவகை யெய்தி மாறிலா வளமை யோங்கு மதீனமா நகரை யின்னே வீறுயர் சிறப்புச் செய்ய முறையனை விளிமி னென்றார்.
| 3.15.66
| 763 |
வேறு குழுவின் மன்னவர் விளித்தன ரெனக்குறித் தெழுந்து தொழுது நின்றெவை பணியென வலிமணந் துலங்க முழுது மிந்நக ரறிந்திட மணமுர சறைக வெழுக வென்றலு மெழுந்தனர் கடிமுர சினரே.
| 3.15.67
| 764 | கடிகொள் வெண்சுதை சோகங்கள் கவினுறத் தடவி நெடிய சுந்தரத் தினின்மலர் மாலைக ணிரப்பி யிடியின் மிக்கதிர் முரசுக ளெடுத்தெடுத் தேற்றிப் படிய ளந்திடுந் தெருத்தலை தொறுந்தொறும் படர்ந்தார்.
| 3.15.68
| 765 | எடுத்த பேரொலி முரசொடு மொட்டகத் திருந்து பிடித்த நன்மறைத் தீனொடு பெருந்துனி யாவு முடித்த நல்வழித் தொழுகையின் விழிவழி முயன்று தொடுத்து நாடொறும் வாழ்கவென் றினையன துதித்தே.
| 3.15.69
| 766 | இறைய வன்றிருப் புலிக்குநந் நபியிளங் கொடிக்கு மறுவி லாத்திரு மங்கலச் சோபன வசனஞ் செறியும் பேரெழி றதும்பிய திருநகர் மதீனத் தறிவ ராடவ ரியாவரு மறிகவென் றறைவார்.
| 3.15.70
| 767 | கனந்த ருங்கொடை முகம்மதைக் கவினலிப் புலியைச் சினந்த வேல்விழி பாத்திமா வெனுஞ்செழுங் குயிலை நினைந்த கவ்வைக ளெவ்வையுந் தனிநிறை வேற மனந்த னிற்றினம் புகழொடு முவப்புவைத் திடுமின்.
| 3.15.71
| 768 | சுருதி நேர்தவ றின்றியஞ் சொகுத்தினுந் தொழுமின் வரிசை நன்னினை வொடும்சதக் காவழங் கிடுமின் பெருகு நல்லறி வினர்துஆப் பேறுகள் பெறுமின் றரையின் மீதுற வாழ்ந்துச லாமத்தும் பெறுமின்.
| 3.15.72
| 769 | அருவி நன்னதி யாடிநல் லாடைக ளுடுமின் புரிகு ழற்ககில் புகைத்துவெண் புதுமலர் புனைமின் சொரிக திர்ப்பணி பலகளத் திடைசுமத் திடுமின் விரைசெய் சந்தனங் குங்குமக் கலவைமெய்க் கிடுமின்.
| 3.15.73
| 770 | இலங்க முன்றில்க டொறுஞ்செழும் பூம்பந்த ரிடுமி னலங்கொ ளாடைவி மானங்க டோ ரண நடுமின் விலங்கன் மாடங்கள் வயின்வயின் கொடிவிசித் திடுமின் பொலன்கொ ணன்னகர்ச் சுவர்தொறுங் கோலங்கள் புனைமின்.
| 3.15.74
| 771 | மதுர முக்கனி தேனெய்பா றயிரொடும் வழங்கிப் புதுவி ருந்தினர்க கிடுமின்க ளெனப்பல போற்றி முதிரு நன்னகர்த் தெருத்தொறு முகிலிடை முழங்கி யதிரும் பேரொலி யிடியெனக் கடிமுர சறைந்தார்.
| 3.15.75
| 772 | முரச றைந்துவள் ளுவர்தெருத் தலைதொறு மொழிந்த வுரைசெ விப்புக நகரவர் பலருமுள் ளுவந்து வரைசெய் மாடமுங் கூடமு மனைகளு மறுகும் விரைசெ யும்படி புதுக்கிடத் துணிந்தனர் விரைவின். | 3.15.76
| 773 | பொழிந்த பொற்பொறிச் சுணங்கலர் பூண்முலைக் கணிந்து வழிந்த சந்தமுங் கூந்தலிற் கழித்தெறி மலரு மழுந்து கூடலி லூடலிற் களைந்தபொன் னணியு மெழுந்து கட்பட லந்தர வாரிநின் றெறிவார்.
| 3.15.77
| 774 | சிறுது ளைக்கதிர்ப் பொற்பல கணிநிரை செறிந்து பிறையு மங்குலு முடுக்களுஞ் செருகிடப் பிணங்கி நிறையு நெற்றிய மாடமு நிவந்தமே னிலையுந் துறும வூட்டகிற் பழம்புகைக் களங்கறத் துடைப்பார்.
| 3.15.78
| 775 | தெரிந்த வெண்மணி நீற்றினைக் கரைத்தறத் தெளித்துப் பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்றுப் பதைப்ப விரிந்த பூங்குழ லார்கள்கண் ணாடியின் விளங்க விருந்த வாய்தொறு முருத்தெரி தரமெழுக் கிடுவார்.
| 3.15.79
| 776 | மறங்கி டந்தசெங் கதிரவன் கதிர்களு மதியின் பிறங்கி நீடரு கலைகளு மோரிடம் பிரியா தறங்கி டந்தநன் னகர்மதி டொறுமணி யணியா யிறங்கி யெங்கணும் வழிந்தெனக் கோலங்க ளிடுவார்.
| 3.15.80
| 777 | நெருங்கிச் சேந்தமென் விரலெனத் தளிர்களு நீண்ட கருங்கண் போற்செழுங் குவளையு முககம லழும்போன் றொருங்கு பூத்தசெவ் வாயென வாம்பலு மொசியு மருங்குல் போற்சிறு கொடிகளு மெழுதுவர் மடவார்.
| 3.15.81
| 778 | சந்த னத்திர டருக்களை கவையுறத் தறித்துப் பந்தி பந்தியி னிறுவியொள் ளகில்வளை பரப்பிச் சிந்து வெண்கதி ரிரசிதக் கிடுகுகள் செறித்து மந்த மாருத முலவிடக் காவணம் வகுப்பார்.
| 3.15.82
| 779 | கழிக ளிற்பொதிந் தகுமது நபிதிருக் கலிமா வெழுது சித்திரப் பொற்கொடி யணிநிரைத் திடுவார் வழுவி லாதபொன் மலையின்வி மானங்கள் வகுப்பார் பொழுது போம்வழி யில்லெனத் தோரணம் புனைவார்.
| 3.15.83
| 780 | கதிர்ம ணிக்கரும் பிளங்கமு கருங்கனிக் கதலி பதிக மாதளை தாழைமுட் புறக்கனிப் பனசம் விதிரு மென்றளிர் மாச்செழும் பழக்கொழு விஞ்சி மதுர மூறிய கனியொடுந் தூண்டொறும் வனைவார்.
| 3.15.84
| 781 | பிரச மூறிய பன்மலர்த் தொகுதியின் பிறங்கி
விரிக திர்ப்பல திரண்மணி வடத்தினும் விலையி னரிய பொன்னிழைத் துகிலுனும் பல்பல வணியாய்த் திருந கர்ப்புற மெங்கணு மியற்றினர் சிறப்ப.
| 3.15.85
| 782 | பூந்து ணர்ப்பசுங் காயொடும் பழத்தினைப் பூகஞ் சேர்ந்த பந்தரிற் றென்றலி னுதிர்ப்பன திரட்டி வாய்ந்த பொன்னையு மரகத மணியையும் வாரி யீந்த மேலவர் போன்றன வீதிக ளெங்கும்.
| 3.15.86
| 783 | அரத்த வாடையின் பசியமென் றுகிறொடுத் தணியா நிரைத்தி ருப்பது மாமணித் தூண்டொறு நெடுவான் றரித்த கொண்டலி னிடம்விடுத் திந்திர சாபம் விரித்த பந்தரிற் புகுந்திருந் தெனப்பல விளங்கும்.
| 3.15.87
| 784 | வெடித்த தாமரை மலரொடும் விரிந்தவெண் டாழைத் தொடுத்துப் பந்தரிற் றுயல்வரத் தூக்கிய தோற்றம் வடித்த நன்னறை யல்லியை யிதழொடும் வாயி
னெடுத்து மென்சிறை யெகினங்கள் படர்ந்தென விருந்த.
| 3.15.88
| 785 | வேரி யஞ்செழு மலர்களுந் தளிர்களும் விளங்கச் சாரு நன்கதிர்ப் பன்மணிக் குலங்களுந் தயங்கக் கூரு மாந்தர்தம் மனத்தினி னினைத்தவை கொடுப்பப் பாரிற் கற்பக வனைத்தையொத் திருந்தன பந்தர்.
| 3.15.89
| 786 | தரள மாமணி யரும்பின மீன்றுதா ரணியின் பரிவு பெற்றிடும் பொன்னிதழ்ப் பன்மலர் பூத்து மரக தச்செழு மணித்திரட் காய்க்குலை வளர்த்துப் புருட ராகங்கள் பழுத்தன போன்றன பந்தர்.
| 3.15.90
| 787 |
வேறு காத்திர முசல நீள்கைக் கடகரிக் குலமு மாவும் பூத்துணர் பொதுளு மாந்தர்த் தொகுதியு மெதிரிற் போதலல் வாய்த்தமெல் லிழையார் தீற்று மணியொளி மறுகு தோறுஞ் சூத்திரப் பாவை போன்றும் வயின்வயின் றுலங்கு மன்றே.
| 3.15.91
| 788 | புதுமலர்த் தார்க ணாற்றிப் பூந்துகிற் கொடிகள் சேர்த்திக் கதிர்மணி குயிற்றிக் கும்பக் கனகமா மகுடஞ் சூட்டி விதிரிள நிலவு கான்ற மேனிலை மாட மியாவும் வதுவையின் புதுமை நோக்க மலைகள்வந் திருந்த தொத்த.
| 3.15.92
| 789 | சீதசந் திந்து காந்த நீரினிற் றேய்வை பன்னீ ராதிமான் மதங்கற் பூர மளறெழக் கலக்கி வாரி வீதியு மதிளு மாட வாயிலுந் தெளித்து வீசக் கோதறுங் குளிர்ச்சி யெய்தி நடுங்கின கொடிக ளெல்லாம்.
| 3.15.93
| 790 |
வேறு சொரிந்த பூங்குழன் மதிநுதற் கயல்விழித் துவர்வாய் முரிந்த தோவெனு மருங்கினர் முருகுகொப் பிளிப்ப விரிந்த சந்தகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கிப் பரந்து போர்வையின் மூடின நீள்பெரும் பதியை.
| 3.15.94
| 791 | அங்க ராகமும் வரியளி மலரிடை யறுகாற் றங்கி வீழ்தரு துகளுங்குங் குமச்செழுந் தாது மெங்க ணும்பரந் திருநிலந் தெரிகிலா திருத்தல் பொங்கு பொன்னிலம் வதுவையிற் சமைத்தன போலும்.
| 3.15.95
| 792 | குதித்த தேன்குழன் மடந்தைய ராடவர் குழுமிப்
பதித்தெ ருத்தொறுங் கலவையிற் சேறுகள் படுத்தி விதித்த காரண வதுவையின் மணவிதை விதைத்து மதித்தி டும்பெருஞ் சிறப்பெனும் பயிரினை வளர்த்தார்.
| 3.15.96
| 793 | சிந்து செங்கதிர் மணிதெளித் தொழுதுசித் திரத்தின் கந்த மான்மதங் கமழ்தலின் கதலிகை வனத்தின் விந்தை விந்தைசெய் தோரணத் தொகுதியின் வியப்பி னந்த மானக ரல்லன போன்றிருந் ததுவே.
| 3.15.97
| 794 | மின்னி னந்திரு வில்லொடு முகிலொடும் விரைவிற் பொன்னந் தாமரை வாவியிற் புகுந்தெனப் புகுந்து மன்னு விற்புரு வக்கருங் குழற்கொடி மருங்கா ரின்ன லந்தர மூழ்குவ ராடுவ ரெங்கும்.
| 3.15.98
| 795 | இலகு பொன்னொடு வெள்ளிவெண் பானைக ளேற்றி நிலவு கான்றெனும் பாலினில் வாலரி நிறைத்திவ் வுலகி னூன்முறை யடுதொழிற் புதுமண மூட்டி யலகி லாப்பெரு நகர்தொறு மமலைக ளடுவார்.
| 3.15.99
| 796 | கனியி னுஞ்செழுங் காயினும் பூவினுங் கலவாப் புனித நெய்யினில் வெண்மலர்க் கரியபூங் குழலார் சுனித மாகிநற் பாகொடு மறுசுவை தூங்க வினிமை கூர்தர மணத்தொடுங் கறிசமைத் திடுவார்.
| 3.15.100
| 797 | தேன வாந்தொடை மடந்தையர் குழலினுஞ் செருகி நான மார்புய மாந்தர்க ணாசியு மமட்டித் தான மானக மேனிலை யாவையுந் தடவி வான மீதினுங் கமழ்த்தின பொரிக்கறி வாசம்.
| 3.15.101
| 798 | நனிவி ருந்தினர்க் கன்புட னெதிர்நடந் தழைத்துப் பனிம லர்ச்செழும் பாயலி னிருத்திமெய் பணிந்து மினுமி னென்றமுப் பழத்தினைத் தேனொடும் விரவி யினிதி னூட்டுவர் வலிதினி லடிக்கடி யெவரும்.
| 3.15.102
| 799 | உலவு பூம்புகை பொற்குடங் கமழ்தர வூட்டிச் சொலவ ருந்தடத் தெளிதரு புதுப்புனல் சொரிந்து பொலனி றத்தகுங் குமமுதன் முடிந்ததிற் புகட்டி யிலகு வீதியின் முன்றில்க டொறுநிரைத் திடுவார்.
| 3.15.103
| 800 | மருங்குன் மின்னுக்கு மின்னுபொன் னிழைத்துகில் வனைவார் நெருங்கு பூண்முலை மலையின் மலைவுற நிரைப்பார் கருங்கு ழற்கருங் குங்குமக் கண்ணிகள் புனைவா ரருங்க ரங்களி லரங்கொளுங் குருகெடுத் தணிவார்.
| 3.15.104
| 801 | மாவ ருக்கையிக் கரம்பைபூங் கமுகுடன் வனைந்த காவ கத்திடை மயிலெனக் குயின்மொழிக் கனிவாய்ப் பூவை யன்னவர் கலவையும் பரிமளப் பொடியுந் தாவ வெற்றுவ ரொருவருக் கொருவரைச் சருவி.
| 3.15.105
| 802 | விரிசி கைக்கதிர் மணிவெயி லெறித்திட விடுபூச் சொருகு கூந்தலின் மாலைக டுயல்வரத் துடிபோ லருகு நுண்ணிடை யொடிந்திடு மெனும்படிக் கசையத் திருகு ரும்பைக ளாடுவர் வயின்வயின் சிறப்ப.
| 3.15.106
| 803 | பாடு வார்சிலர் குயிலெனப் பாடலுக் கெதிரி னாடு வார்சிலர் மயிலென வாடலுக் கழகாய்க் கூடு வார்சிலர் கிளியெனக் கூடலின் குறிகண் மூடு வார்சிலர் விரிதருங் கமலமென் முகத்தார்.
| 3.15.107
| 804 | பூசு வார்சிலர் கலவையிற் புதுவிரை கலக்கி வீசு வார்சிலர் வீசலின் மெய்வழி வழியக் கூசு வார்சிலர் கூசுவ தென்னெனக் குழைந்து பேசு வார்சிலர் சிறுநுதற் பெரியகண் மடவார்.
| 3.15.108
| 805 | பொருவி லாநக ராடவ ரரிவையர் போற்ற மரும லர்ப்புய முகம்மதை யலிதமை வாழ்த்திக் கருத லர்க்கரி யேறெனுங் காளையர் கூடித் தெருவெ லாமணப் பைத்துகள் சொலிச்சொலித் திரிவார்.
| 3.15.109
| 806 | புகரி னன்னிரி யாசங்கண் முதலிய புகைத்துப் பகரு நன்மறை முதியவர் பலபல திரளா நகர மெங்கணும் வேதங்க ளோதிய நாத மகர வாருதி திரையொலிக் கலிப்பினை மலைக்கும்.
| 3.15.110
| 807 | கலிக்கு மாமறை முதல்வனிக் காகினைக் கருதி யலிக்கும் பாவைக்கு முடித்திட வகுமது மகிழச் சிலைக்கை வீரர்க ணகரத்தி னியற்றிய சிறப்பை யொலிக்கு மாகடற் புவியினி லெவரெடுத் துரைப்பார்?
| 3.15.111
| 808 |
வேறு
மரைமல ரெகின மிரவியின் சிரசின்
மதிவதிந் தெனத்தனி வயங்கத் திரைமணி கொழிக்கும் வாவிசூழ் மதீனத்
திருநகர் சிறப்பியற் றியபின் றருவெனு நபியு மூவரும் பெருகு
சதுமறைத் தலைவருந் திரண்டு வரியளி முரலுஞ் செழுந்தொடைத் திரடோ ண்
மன்னவ ரலிமனை புகுந்தார்.
| 3.15.112
| 809 | எரிகதிர் வனச மணிபதித் திழைத்த
விரணியக் கடத்தினி லெடுத்து முருகலர் நறையூற் றிருந்தண் ணீரை
மறையிய முழக்கொடு முதியோர் மரகதப் பலகை நடுவுறை வயிர
மடங்கலே றலிதமை வாழ்த்திச் செருகிய நீலக் கதிர்குடி யிருந்த
சென்னியிற் சொரிந்தன ரன்றே.
| 3.15.113
| 810 | வெள்ளைமென் றுகிலாற் சிரசிடம் புலர்த்தி
வில்லுமிழ் மெய்யினும் விளக்கித் தெள்ளிய மதியின் கதிரினை நூற்றுக்
செய்தெனுந் துகிலிடைக் சேர்த்திக் கொள்ளைவெண் டரளங் குவித்தென வீரம்
புகழொடுங் குடியிருந் தென்ன வொள்ளிய சவிக டிரண்டெனச் சருவந்
தொளிதரச் சென்னியிற் றரித்தார்.
| 3.15.114
| 811 | பேரெழிற் பயிரில் வனமுலை மடவார்
கண்ணெனு மானினப் பெருக்கம் பாரினிற் புகுதா வேலியி னமைத்த
படிகொலோ மரைமலர்ச் செழுங்கண் வீரவெண் மடங்கன் மரகத வளையுட்
புகுந்ததோ வெனத்திறல் வியப்ப வேரணிந் திலங்கும் பசியகுப் பாய
மெடுத்தினி தணிந்திடுஞ் சிறப்பே.
| 3.15.115
| 812 | மண்ணினிற் குபிரர் குலங்கரு வறுத்து
வருமுயிர்ச் சுவையினை யறிய வெண்ணிலா விடப்பன் னாகத்தி னாப்போ
லியற்றிய விருபகுப் புடைவா ளண்ணலார் மருங்கி லெழிறர விருத்தி
யணிமணி யுதரபந் தனமும் விண்ணிலாக் கதிரின் கச்சின்மேற் படுத்தி
விசித்தனர் திறல்வய வீரர்.
| 3.15.116
| 813 | மரகத வரையிற் சந்தொடு மருவி
வந்ததோ வளைந்தபைங் கடலிற் றிரைகொலோ வணிந்த சருவந்து கான்ற
செவ்விகள் வழிந்தொழு கியதோ பொருவிலா வரிசைப் புலியலி மணத்திற்
போர்த்திடும் பசியகஞ் சுகியிற் றரளவெண் மணியி னிரைநிரை வடங்க
டயங்கொளி தரவணிந் ததுவே.
| 3.15.117
| 814 | வண்ணவொண் புயப்பைங் கஞ்சுகி யிடத்தின்
வான்மணித் தரளமா லிகையின் வெண்ணறை மலர்மா லிகைபு னைந்தரிய
மான்மதம் விதிர்த்திடுந் தோற்றந் தண்ணறும் பசுங்கற் பகமல ரிடையிற்
சாலிக டுளித்திடத் ததைந்து பண்ணிசை மிழற்று ஞிமிறின மிருந்த
பான்மையொத் திருந்தன மாதோ.
| 3.15.118
| 815 | அம்புய மலரிற் சேந்துசெவ் வரியார்ந்
தருளுடை கிடந்தகட் கடையின் வம்பவிழ் சுறுமா வுரைத்தமை யெழுதி
மணிவடங் கிடந்தபொன் மார்பிற் கொம்பலர் மரவஞ் சந்தொடுங் குழைத்துக்
குளிர்தரத் திமிர்ந்துகை விரலிற் பம்பிய திரைவா ருதியினிற் பிறந்த
பருமணி யாழியுஞ் செறித்தார்.
| 3.15.119
| 816 | அலங்கரித் தயினி சுழற்றிநூ லவர்கட்
கருநிதி மணியொடும் வழங்கி யிலங்கிழை மடவா ரடைப்பைக்கோ டிகஞ்சாந்
திருமருங் கினுமெடுத் தேந்தத் துலங்கிய கவரி வெண்ணிலா வெறியச்
சுருதிவல் லவர்துஆ விரப்ப நலங்கிளர் தீன்தீன் முகம்மதென் றேத்த
நார்புலி யலியெழுந் தனரால்.
| 3.15.120
| 817 | மலரணைப் படுத்த துகிலின்மே னடந்து
வானவர் மகளிரேத் தெடுப்பச் சிலைவல ரபித்தா லிபுமனைக் குரிய
திருநபி தமைவளர்த் துவந்து பலனுறும் பாத்தி மாவெனு மடமா
னிருவிழிப் பாவைகண் களிப்ப விலகிய மடவார் குரவைக ளியம்ப
வெழிலலி வாசிமேற் கொண்டார்.
| 3.15.121
| 818 | பேரிகை திமிலைக் குடப்பறை தடாரிப்
பீலியார் திண்டிம முரசோர் பாரிசப் பதலை யிடக்கைதட் டியநீள்
பண்வம்வா ரணிதட மொந்தை பூரிகை நவுரி காகளஞ் சின்னம்
போர்வயிர் கொம்புகைத் தாளம் வாரியு மலைப்பப் பேரிடி மயங்க
மண்ணதிர் தரமுழங் கினவால்.
| 3.15.122
| 819 | பரிதியின் கதிரான் மதியையேந் தினபோற்
பவளக்கால் வெண்குடை நிழற்றத் திரடருந் துவசம் வெளியறச் செருகச்
செம்மணித் துகில்செயா லவட்ட மிருபுற நெருங்க விசிறிசாந் தாற்றி
யிரைகடற் ரிரையென மலிய வருபடை நாப்ப ணெறிந்தபா வாடை
வானமின் னெனத்திசை மலிய.
| 3.15.123
| 820 | வரையிழி யருவி யெனக்கவுட் கரட
மதங்கரைத் திருபுறம் வழிய வெரிமணி வயிரக் கிம்புரிப் பெருங்கோ
டிணைவளைப் பிறையினு மிலங்கத் திரள்பனை நெடுங்கைத் துளைவழித் திவலை
தெருத்திசை மழையெனச் சிதறக் கருவுடை மயிர்வாய்ப் பிடிக்கணந் தழுவிக்
கடகரிக் குலநெருங் கினவால்.
| 3.15.124
| 821 | மாருத மலைக்கும் விசையின விருபான்
மலிந்தபக் கரையின வதிரப் பாரினை யுடைக்குங் குளம்பின பொற்பூப்
பலநிரை கேசபந் தியின போரடர் சீரா வணியின பாகர்
புந்தியி னமைந்தன பதினெண் சாரிகை நடனப் புரவியின் கணங்க
ளெண்ணில தலைமயங் கினவே.
| 3.15.125
| 822 | மணிக்கண நிரைத்து வைத்திடுங் குடுமி
வானகத் திரவியின் மிளிரப் பிணித்தபொற் காந்தி யுமிழ்தருங் கொடிகள்
பெருந்துகட் படலங்க டுடைப்பப் பணித்தலை நெளியத் தரைத்தலங் குழியப்
பரியொடுந் திசைபறப் பனபோற் கணித்துரைக் கடங்காத் தெருத்தலை நெருங்கக்
கலித்தகோ லாரிவண் டில்களே.
| 3.15.126
| 823 | பத்தியி னெடும்பொற் சட்டக மமைத்துப்
பருவயி ரம்பல பதித்து முத்தணி நிரைத்துத் துகிர்மணிச் சிறுகான்
முறைபட நிறுவிப்பைங் கதிரார் சித்திரப் படமேல் விரித்தணி யலர்கள்
செறிதர மாலைக ணாற்றி வைத்தபொற் சிவிகை பலபல மருங்குஞ்
சிறந்திட வீதியி |