|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - பாடல்கள் ( 1 - 330 ) > பாடல்கள் (331-670) > பாடல்கள் (671- 1000) > பாடல்கள் ( 1001- 1326 )

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
நான்காம் பகுதி, பாடல்கள் ( 1001- 1326 )
Acknowledgements:
Etext preparation (Mylai format) : Mr. A.S. Maniam (http://www.kaumaram.com/)
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of Mylai version to Tamil script version as per TSCII encoding.
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாடல் 1001 ( பொதுப்பாடல்கள் )
ராகம் - .....;
தாளம் - ..........
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன
தனதன தனதன ...... தனதான
இலகி யிருகுழை கிழிகயல் விழியினு
மிசையி
னசைதரு மொழியினு மருவமர்
இருள்செய் குழலினு மிடையினு நடையினு ...... மநுராக
இனிமை தருமொரு இதழினு நகையினு
மிளைய ம்ருகமத தனகுவ டழகினு
மியலு
மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே
குலவி விரகெனு மளறிடை முழுகிய
கொடிய நடலைய னடமிட வருபிணி
குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ......
கொடுபோநாள்
குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்
குதறு முதுபிண மெடுமென
வொருபறை
குணலை யிடஅடு சுடலையில் நடவுத ...... லினிதோதான்
மலையில்
நிகரில தொருமலை தனையுடல்
மறுகி யலமர அறவுர முடுகிய
வலிய பெலமிக வுடையவ
னடையவு ...... மதிகாய
மவுலி யொருபது மிருபது கரமுடன்
மடிய வொருசரம்
விடுபவபன் மதகரி
மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ...... மதியாதே
அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய
அதுல னிருபத மதுதனி லெழுபுவி
யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே
அவுண ருடலம தலமர அலைகட
லறவு மறுகிட வடகுவ டனகிரி
யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே.
பாடல் 1002 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன
தனதன தனதன ...... தனதான
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
சுகியன்
வடைகனல் கதலியி னமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான
குடகு வயிறினி
லடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருகசண் முகவென
குவிய இருகர மலர்விழி
புனலொடு ...... பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை
சிறுமையி னலைவுட னரிவையர்
குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ......
யொழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
மறலி வெருவுற ரவிமதி பயமுற
நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான
நிசிசர் கொடுமுடி
சடசட சடவென
பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
நிகரிலயில்வெயி லெழுபசு மையநிற
...... முளதான
நடன மிடுபரிதுரகத மயிலது
முடுகி கடுமையி லுலகதை
வலம்வரு
நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும்
நறிய மலர்கொடு
ஹரஹர ஹரவென
அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
நணியெ சரவண மதில்வள ரழகிய
...... பெருமாளே.
பாடல் 1003 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன
தனதன தனதன ...... தனதான)
கமல குமிளித முலைமிசை துகிலிடு
விகட
கெருவிக ளசடிகள் கபடிகள்
கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ...... ளிளைஞோர்கள்
கனலி லிடுமெழு கெனநகை யருளிகள்
அநெக விதமொடு தனியென நடவிகள்
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி
அமுத மொழிகொடு
தவநிலை யருளிய
பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை
அடைவு நடைபடி பயிலவு முயலவு
...... மறியாத
அசட னறிவிலி யிழிகுல னிவனென
இனமு மனிதரு ளனைவரு
முரைசெய
அடிய னிதுபட அரிதினி யொருபொரு ...... ளருள்வாயே
திமித
திமிதிமி டமடம டமவென
சிகர கரதல டமருக மடிபட
தெனன தெனதென தெனவென நடைபட
...... முநிவோர்கள்
சிவமி லுருகியு மரகர வெனவதி
பரத பரிபுர மலரடி
தொழஅநு
தினமு நடமிடு பவரிட முறைபவள் ...... தருசேயே
குமர சரவண பவதிற
லுதவிய
தரும நிகரொடு புலமையு மழகிய
குழக குருபர னெனவொரு மயில்மிசை ......
வருவோனே
குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை
மலையு மரையொடு பசலைகொள்
வளர்முலை
குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே.
பாடல் 1004 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
பாகேஸ்ரீ
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2,
தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன
தனதன ...... தனதான
தசையு முதிரமு நிணமொடு செருமிய
கரும கிருமிக
ளொழுகிய பழகிய
சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ...... குடில்பேணுஞ்
சகல கருமிகள் சருவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
சவலை யறிவினர் நெறியினை விடஇனி ...... யடியேனுக்
கிசைய இதுபொரு
ளெனஅறி வுறவொரு
வசன முறஇரு வினையற மலமற
இரவு பகலற எனதற நினதற ......
அநுபூதி
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
இறுதி யறுதியி டவரிய
பெறுதியை
இருமை யொருமையில் பெருமையை வெளிபட ...... மொழிவாயே
அசல
குலபதி தருமொரு திருமகள்
அமலை விமலைக ளெழுவரும் வழிபட
அருளி அருணையி
லுறைதரு மிறையவ ...... ளபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை
அதல
முதலெழு தலமிவை முறைமுறை
அடைய அருளிய பழையவ ளருளிய ...... சிறியோனே
வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி
மவுன மருளிய மகிமையு மிமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ...... வடிவேலும்
மயிலு மியலறி
புலமையு முபநிட
மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவு மிளமையும் வளமையு
மழகிய ...... பெருமாளே.
பாடல் 1005 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
காம்போதி
தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
நெடிய
வடகுவ டிடியவு மெழுகிரி
நெறுநெ றெனநெரியவுமுது பணிபதி
நிபிட முடிகிழி
யவுநில மதிரவும் ...... விளையாடும்
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
நினது கருணையு முறைதரு பெருமையும்
நிறமு மிளமையும் வளமையு மிருசர ......
ணமும்நீப
முடியு மபிநவ வனசரர் கொடியிடை
தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தனகிரிதழுவிய ...... திரடோ ளும்
மொகுமொ கெனமது கரமுரல்
குரவணி
முருக னறுமுக னெனவரு வனபெயர்
முழுது மியல்கொடு பழுதற மொழிவது
...... மொருநாளே
கொடிய படுகொலை நிசிசர ருரமொடு
குமுகு மெனவிசை
யுடனிசை பெறமிகு
குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக்
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர
மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்
குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா
இடியு முனைமலி
குலிசமு மிலகிடு
கவள தவளவி கடதட கனகட
இபமு மிரணிய தரணியு முடையதொர்
...... தனியானைக்
கிறைவ குருபர சரவண வெகுமுக
ககன புனிதையும் வனிதைய
ரறுவரும்
எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே.
பாடல் 1006 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
ஸஹானா
தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகிட-1
1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன
தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
பகிர நினைவொரு தினையள
விலுமிலி
கருணை யிலியுன தருணையொ டுதணியல்
பழநி மலைகுரு மலைபணி மலைபல
...... மலைபாடிப்
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்
பழகி யழகிலி
குலமிலி நலமிலி
பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ...... லிகுலாலன்
திகிரிவருமொரு செலவிநி லெழுபது
செலவு வருமன பவுரிகொ டலமரு
திருக
னுருகுத லழுகுதல் தொழுகுதல் ...... நினையாத
திமிர னியல்பிலி யருளிலி
பொருளிலி
திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலி லுணர்விலி சிவபத மடைவது
...... மொருநாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன்
மகுட மொருபது மிருபது
திரள்புய
வரையு மறவொரு கணைதெரிபுயல்குரு ...... ந்ருபதூதன்
மடுவில்
மதகரிமுதலென வுதவிய
வரத னிருதிறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின்
மறைமொழி யிகழிர ...... ணியனாகம்
உ கிரினுதிகொடு வகிருமொ
ரடலரி
திகிரிதரமர கதகிரியெரியுமிழ்
உ ரக சுடிகையில் நடநவி லரிதிரு ......
மருகோனே
உ ருகு மடியவ ரிருவினை யிருள்பொரு
முதய தினகர இமகரன்
வலம்வரும்
உ லக முழுதொரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே.
பாடல் 1007 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழ லவிழ்தர முகமதி
முடிய
வெயர்வர முதுதிரை யமுதன
மொழிகள் பதறிட வளைகல கலவென ...... அணைபோக
முலையின் மிசையிடு வடமுடி யறஇடை
முறியு மெனஇரு பரிபுர மலறிட
முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ...... பருகாநின்
றுருகி யுளமுட லுடலொடு
செருகிட
வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய்
துதவு மடமக ளிர்களொடு மமளியி
...... லநுராக
உ ததி யதனிடை விழுகினு மெழுகினும்
உ ழலு கினுமுன
தடியிணை எனதுயி
ருதவி யெனவுனை நினைவது மொழிவது ...... மறவேனே
எருவை
யொடுகொடி கெருடனும் வெளிசிறி
திடமு மிலையென வுலவிட அலகையின்
இனமும்
நிணமுண எழுகுறள் களுமிய ...... லிசைபாட
இகலி முதுகள மினமிசை யொடுதனி
யிரண பயிரவி பதயுக மிகுநட
மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு ......
விருகாலும்
வரிசை யதனுடன் வளைதர வொருபது
மகுட மிருபது புயமுடன் மடிபட
வலியி னொருகணை விடுகர முதலரி...... நெடுமாயன்
மருக குருபர சரவண
மதில்வரு
மகிப சுரபதி பதிபெற அவுணர்கள்
மடிய இயல்கொளு மயில்மிசை வரவல
...... பெருமாளே.
பாடல் 1008 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன
தனதன தனதன ...... தனதான
இலகு வேலெனு மிருவினை விழிகளும்
எழுதொ
ணாதெனு மிருதன கிரிகளும்
இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ...... மெதிர்வேகொண்
டெதிரிலாவதி பலமுடை யிளைஞரெ
னினிய மாவினை யிருளெனும் வலைகொடு
இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம்
கலவி மால்கொடு கலைகளு
மறிவொடு
கருதொ ணாதென முனிவுற மருள்கொடு
கரையி லாவிதி யெனுமொரு கடலிடை
...... கவிழாதே
கருணை வானவர் தொழுதெழு மயிலுறை
குமர கானவர் சிறுமியொ
டுருகிய
கமல தாளிணை கனவிலு நினைவுற ...... அருள்தாராய்
பலகை யோடொரு
பதுசிர மறஎறி
பகழி யானர வணைமிசை துயில்தரு
பரமன் மால்படி யளவிடு மரிதிரு
...... மருகோனே
பழுதி லாமன முடையவர் மலர்கொடு
பரவ மால்விடை மிசையுறை
பவரொடு
பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ...... பெரியோனே
அலகை காளிகள்
நடமிட அலைகட
லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை
அசுரர் மார்பக மளறது படவிடு
...... மயில்வேலா
அரிய பாவல ருரைசெய அருள்புரி
முருக ஆறிரு புயஇய
லிசையுடன்
அழகு மாண்மையு மிலகிய சரவண ...... பெருமாளே.
பாடல் 1009 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன
தனதன தனதன ...... தனதான
முருகு லாவிய குழலினு நிழலினும்
அருவ
மாகிய இடையினு நடையினு
முளரிபோலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர்
முனிவி லாநகை வலையினு நிலையினும்
இறுக வாரிடு மலையெனு முலையினு
முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி
நரகி லேவிழு மவலனை
யசடனை
வழிப டாதவொர் திருடனை மருடனை
நலமி லாவக கபடனை விகடனை ......
வினையேனை
நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ
லதனில் மூழ்கிய மறவனை யிறவனை
நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே
வரிய ராவினின் முடிமிசை
நடமிடு
பரத மாயவ னெழுபுவி யளவிடு
வரதன் மாதவ னிரணிய னுடலிரு ......
பிளவாக
வகிரு மாலரிதிகிரிய னலையெறி
தமர வாரிதி முறையிட நிசிசரன்
மகுட மானவை யொருபதும் விழவொரு ...... கணையேவுங்
கரிய மேனியன் மருதொடு
பொருதவன்
இனிய பாவல னுரையினி லொழுகிய
கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு
...... மபிராமன்
கருணை நாரண னரபதி சுரபதி
மருக கானக மதனிடை யுறைதரு
கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே.
பாடல் 1010 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன
தனதன தந்த தானன ...... தனதான
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத
கலசமு
மதனுய ரம்பொன் மாமுடி
யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி
அடைபடு குடயுக ளங்க ளாமென
ம்ருகமத களபம ணிந்த சீதள
அபிநவ கனதன
மங்கை மாருடன் ...... விளையாடி
இரவொடு பகலொழி வின்றி மால்தரு
மலைகட
லளறுப டிந்து வாயமு
தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி
இருவரு மருவிய ணைந்து பாழ்படு
மருவினை யறவும றந்து னீள்தரு
மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே
சுரர்குல பதிவிதி
விண்டு தோலுரி
யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர்
துதிசெய எதிர்பொர வந்த தானவ
...... ரடிமாள
தொலைவறு மலகையி னங்க ளானவை
நடமிட நிணமலை துன்ற வேயதில்
துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால்
பருகுத லரியது
கந்த தீதிது
உ ளதென குறளிகள் தின்று மெதகு
பசிகெட வொருதனி வென்ற சேவக
...... மயில்வீரா
பகிரதி சிறுவலி லங்க லுடுறு
குறமகள் கொழுநப
டர்ந்து மேலெழு
பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே.
பாடல் 1011 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன
தனதன தந்த தானன ...... தந்ததான
உ ரைதரு பரசம யங்க ளோதுவ
துருவென
அருவென வொன்றி லாததொ
ரொளியென வெளியென வும்ப ராமென ...... இம்பராநின்
றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென
வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ
டுணர்வுற வுணர்வொடி ருந்ந நாளும ...... ழிந்திடாதே
பரகதி பெறுவதொ
ழிந்தி டார்வன
பரிசன தெரிசன கந்த வோசைகள்
பலநல விதமுள துன்ப மாகிம ......
யங்கிடாதே
பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர
படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக ...... னென்றுதீர்வேன்
அரகர சிவசுத கந்த
னேநின
தபயம பயமென நின்று வானவர்
அலறிட வொழிகினி யஞ்சி டாதென ......
அஞ்சல்கூறி
அடல்தரு நிருதர நந்த வாகினி
யமபுர மடையஅ டர்ந்து
போர்புரி
அசுரன தகலமி டந்து போகவ ...... கிர்ந்தவேகம்
விரிகடல் துகளெழ
வென்ற வேலவ
மரகத கலபசி கண்டி வாகன
விரகுள சரவண முந்தை நான்மறை ......
யந்தமோதும்
விரைதரு மலரிலி ருந்த வேதனும்
விடவர வமளிது யின்ற மாயனும்
விமலைகொள் சடையர னும்ப ராவிய ...... தம்பிரானே.
பாடல் 1012 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
இமகிரிமத்திற் புயங்க
வெம்பணி
கயிறது சுற்றித் தரங்க வொண்கடல்
இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு
...... நஞ்சுபோலே
இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு
குமிழையு மெற்றிக்
கரும்பெ னுஞ்சிலை
ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் ...... விஞ்சிநீடு
சமரமி குத்துப் பரந்த செங்கயல்
விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய
தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி ...... கொங்கைமீதே
தனிமனம் வைத்துத்
தளர்ந்து வண்டமர்
குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ
சததளம் வைத்துச்
சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ
அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ
எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி
யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர்
...... முந்துபோரில்
அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல்
இருபது
கொற்றப் புயங்கள் சிந்திட
அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது ...... மொன்றுமாளக்
கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்
மருமக மட்டுக் கொன்றை யந்தொடை
கறையற வொப்பற்ற தும்பை யம்புலி ...... கங்கைசூடுங்
கடவுளர் பக்கத்
தணங்கு தந்தருள்
குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள்
கடினத னத்திற் கலந்தி
லங்கிய ...... தம்பிரானே.
பாடல் 1013 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகமுமி னுக்கிப்
பெருங்க ருங்குழல்
முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக
முடியநி றைத்துத்
ததும்பி வந்தடி ...... முன்பினாக
முலையைய சைத்துத் திருந்த
முன்தரி
கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக
முறுவல்வி ளைத்துத் துணிந்து
தந்தெரு ...... முன்றிலுடே
மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்
மதனனு
நிற்கக் கொளுந்து வெண்பிறை
வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை ...... வண்டுபாட
மலயநி லத்துப் பிறந்த தென்றலு
நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய
மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம ...... லங்கலாமோ
பகலவன் மட்கப்
புகுந்து கந்தர
ககனமு கட்டைப் பிளந்து மந்தர
பருவரை யொக்கச் சுழன்று
பின்புப ...... றந்துபோகப்
பணமணி பட்சத் துரங்க முந்தனி
முடுகின
டத்திக் கிழிந்து விந்தெழு
பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப ...... யந்துவாடக்
குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய
மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு
குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை ...... வென்றவேளே
குழைசயை யொப்பற்
றிருந்த சங்கரி
கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில்
குணவமு துய்க்கத்
தெளிந்து கொண்டருள் ...... தம்பிரானே.
பாடல் 1014 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன
...... தந்ததான
படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு
பக்கத் திற்பல
கத்திட் டுத்துயர் ...... கொண்டுபாவப்
பணைமர விறகுடை யழலிடை யுடலது
பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ...... யொன்றியேகக்
கடிசம
னுயிர்தனை யிருவிழி யனலது
கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு ......
டன்றுபோமுன்
கதிதரு முருகனு மெனநினை நினைபவர்
கற்பிற் புக்கறி
வொக்கக் கற்பது ...... தந்திடாயோ
வடகிரிதொளைபட அலைகடல் சுவறிட
மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் ......வென்றிவாய
வலியுட
னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட
மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம ......
லைந்தவீரா
அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை
அத்தர்க் குப்பொருள்
கற்பித் துப்புகழ் ...... கொண்டவாழ்வே
அடியுக முடியினும் வடிவுட னெழுமவு
னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே.
பாடல் 1015 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத்
தத்தன ...... தந்ததான
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும்
விரகுடை
வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில்
இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு
...... ழன்றுவாடும்
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே
நரகதில்
விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி
முத்திக் குட்படு நித்யத் தத்துவம்
...... வந்திடாதோ
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய
மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி
எரியெழ முடுகிய
சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்
பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ......
மிந்த்ரலோகா
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
மைக்கட்
பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன்
மணிமுடி சிதறிட அலகைகள்
பலவுடன் வயிரவர் நடமிட
முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே.
பாடல் 1016 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
பெஹாக்
தாளம் - அங்கதாளம்
(எடுப்பு 1 /2 அக்ஷரம் தள்ளி)
தகதகிட-2
1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தந்த
தனதனன
தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த ...... தனதான
குகையில்நவ நாத
ருஞ்சி றந்த
முகைவனச சாத னுந்த யங்கு
குணமுமசு ரேச ருந்த ரங்க ......
முரல்வேதக்
குரகதபு ராரியும்ப்ர சண்ட
மரகதமு ராரியுஞ்செ யங்கொள்
குலிசகைவ லாரியுங்கொ டுங்க ...... ணறநூலும்
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
சகலகலை நூல்க ளும்ப ரந்த
அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத
அறிவுமறி யாமை யுங்க டந்த
அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ
பகைகொள்துரியோத னன்பி றந்து
படைபொருத பார தந்தெ ரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே
பழுதறவி யாச னன்றி யம்ப
எழுதியவி நாய கன்சி வந்த
பவளமத யானை
பின்பு வந்த ...... முருகோனே
மிகுதமர சாக ரங்க லங்க
எழுசிகர பூத
ரங்கு லுங்க
விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி
விபுதர்குல வேழ
மங்கை துங்க
பரிமளப டீர கும்ப விம்ப
ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ......
பெருமாளே.
பாடல் 1017 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த
தனதனன
தான தந்த தந்த ...... தனதான
மழையளக பார முங்கு லைந்து
வரிபரவு
நீல முஞ்சி வந்து
மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ...... அணைமீதே
மகுடதன பார முங்கு லுங்க
மணிகலைக ளேற வுந்தி ரைந்து
வசமழிய வேபு
ணர்ந்த ணைந்து ...... மகிழ்வாகிக்
குழையஇத ழூற லுண்ட ழுந்தி
குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச
குமுதபதி போக பொங்கு கங்கை ......
குதிபாயக்
குழியிலிழி யாவி தங்க ளொங்கு
மதனகலை யாக மங்கள் விஞ்சி
குமரியர்க ளோடு ழன்று நைந்து ...... விடலாமோ
எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச
இரணகள மாக அன்று சென்று
எழுசிகர மாநி லங்கு லுங்க ...... விசையூடே
எழுகடலு மேரு வுங்க லங்க
விழிபடர்வு தோகை கொண்ட துங்க
இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ...... வடிவேலா
பொழுதளவு நீடு குன்று
சென்று
குறவர்மகள் காலி னும்ப ணிந்து
புளிஞரறி யாம லுந்தி ரிந்து ......
புனமீதே
புதியமட லேற வுந்து ணிந்த
அரியபரிதாப முந்த ணிந்து
புளகிதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.
பாடல் 1018 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான
கற்பார்மெய்ப் பாட்டைத்
தவறிய
சொற்பாகைக் காட்டிப் புழுகொடு
கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ......
இளநீரைக்
கட்சேலைக் காட்டிக் குழலழ
கைத்தோளைக் காட்டித் தரகொடு
கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே
நிற்பாருக் காட்பட்
டுயரிய
வித்தாரப் பூக்கட் டிலின்மிசை
நெட்டூரக் கூட்டத் தநவர ......
தமுமாயும்
நெட்டாசைப் பாட்டைத் துரிசற
விட்டேறிப் போய்ப்பத் தியருடன்
நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ
வெற்பால்மத் தாக்கிக்
கடல்கடை
மைச்சாவிக் காக்கைக் கடவுளை
விட்டார்முக் கோட்டைக்
கொருகிரி...... யிருகாலும்
விற்போலக் கோட்டிப் பிறகொரு
சற்றேபற்
காட்டித் தழலெழு
வித்தார்தத் வார்த்தக் குருபர ...... னெனவோதும்
பொற்பாபற் றாக்கைப் புதுமலர்
பெட்டேயப் பாற்பட் டுயரிய
பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ...... யெனமாலாய்ப்
புட்கானத்
தோச்சிக் கிரிமிசை
பச்சேனற் காத்துத் திரிதரு
பொற்பூவைப் பேச்சுக்
குருகிய ...... பெருமாளே.
பாடல் 1019 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான
சிற்றாயக் கூட்டத் தெரிவையர்
வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி
சற்றேறப் பார்த்துச் சிலபணி ......
விடையேவிச்
சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு
பித்தேறிக் கூப்பிட்
டவர்பரி
செட்டாமற் றுர்த்தத் தலைபடு ...... சிறுகாலை
உ ற்றார்பெற்
றார்க்குப் பெரிதொரு
பற்றாயப் பூட்டுக் கயிறுகொ
டுச்சாயத் தாக்கைத்
தொழிலொடு ...... தடுமாறி
உ க்காரித் தேக்கற் றுயிர்நழு
விக்காயத்
தீப்பட் டெரியுட
லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ...... மொருநாளே
வற்றாமுற் றாப்பச் சிளமுலை
யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு
மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா
மத்தோசைப் போக்கிற்
றயிருறி
நெய்பாலுக் காயச்சிக் கிருபதம்
வைத்தாடிக் காட்டிப் பருகரி......
மருகோனே
கற்றாவிற் காட்டிக் கரைதுறை
நற்றாயிற் காட்டிப் புகழ்கலை
கற்றார் சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே
கைச்சூலக் கூற்றைக்
கணைமத
னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி
கர்த்தாவுக் கேற்கப் பொருளருள்
...... பெருமாளே.
பாடல் 1020 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
இருட்குழலைக் குலைத்துமுடித்
தெழிற்கலையைத் திருத்தியுடுத்
திணைக்கயலைப் புரட்டிவிழித் ...... ததிபார
இழைக்களபப் பொருப்பணிகச்
செடுத்துமறைத் தழைத்துவளைத்
திருத்தியகப் படுத்திநகைத் ...... துறவாடி
பொருட்குமிகத்
துதித்திளகிப்
புலப்படுசித் திரக்கரணப்
புணர்ச்சிவிளைத் துருக்குபரத்
...... தையர்மோகப்
புழுத்தொளையிற் றிளைத்ததனைப்
பொறுத்தருளிச்
சடக்கெனஅப்
புறத்திலழைத் திருத்தியளித் ...... திடுவாயே
உ
ருத்திரரைப் பழித்துலகுக்
குகக்கடையப் பெனக்ககனத்
துடுத்தகரப்
படுத்துகிரித் ...... தலமேழும்
உ டுத்தபொலப் பொருப்புவெடித்
தொலிப்பமருத் திளைப்பநெருப்
பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ...... சுரரோடித்
திரைக்கடலுட் படச்சுழலச்
செகத்ரையமிப் படிக்கலையச்
சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ...... திடுபாவி
செருக்கழியத்
தெழித்துதிரத்
திரைக்கடலிற் சுழித்தலையிற்
றிளைத்தஅயிற் கரக்குமரப்
...... பெருமாளே.
பாடல் 1021 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
வினைத்திரளுக் கிருப்பெனவித்
தகப்படவிற் சலப்பிலமிட்
டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய
விளைப்பகுதிப் பயப்பளவுற்
றமைத்ததெனக் கருத்தமைவிற்
சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே
எனக்கெதிரொப்
பிசைப்பவரெத்
தளத்துளரெச் சமர்த்தரெனப்
புறத்துரையிட் டிகழ்ச்சியினுற்
...... றிளையாதுன்
எழிற்கமலத் திணைக்கழலைத்
தமிழ்ச்சுவையிட்
டிறப்பறஎய்த்
திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே
சினத்தைமிகுத் தனைத்துலகத்
திசைக்கருதிக் கடற்பரவித்
திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன்
சிரத்துடன்மற்
புயத்தகலத்
தினிற்குருதிக் கடற்பெருகச்
சிறப்புமிகத் திறத்தொடுகைத்
...... திடும்வேலா
கனத்தமருப் பினக்கரிநற்
கலைத்திரள்கற்
புடைக்கிளியுட்
கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி
கனிக்குதலைச் சிறுக்குயிலைக்
கதித்தமறக் குலப்பதியிற்
களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.
பாடல் 1022 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தான
தத்த
தனதனன தானத் தானத் ...... தனதான
முத்து மணிபணிக ளாரத் தாலு
மொய்த்த மலைமுலைகொ டேவித் தார
முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் ......
பொருமாதர்
முற்று மதிமுகமும் வானிற் காரு
மொத்த குழல்விழியும்
வேய்நற் றோளு
முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் ...... கிநட்முழ்கிப்
புத்தி கரவடமு லாவிச் சால
மெத்த மிகஅறிவி லாரைத் தேறி
பொற்கை
புகழ்பெரிய ராகப் பாடிப் ...... புவியூடே
பொய்க்கு ளொழுகியய ராமற் போது
மொய்த்த கமலஇரு தாளைப் பூண
பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் ......
புகல்வாயே
பத்து முடியுமத னோடத் தோளிர்
பத்து மிறையவொரு வாளிக்
கேசெய்
பச்சை முகில்சதுர வேதத் தோடுற் ...... றயனாரும்
பற்ற வரியநட
மாடத் தாளில்
பத்தி மிகவினிய ஞானப் பாடல்
பற்று மரபுநிலை யாகப் பாடித்
...... திரிவோனே
மெத்த அலைகடலும் வாய்விட் டோ ட
வெற்றி மயில்மிசைகொ
டேகிச் சூரர்
மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக் ...... கெறிவோனே
வெற்றி
மிகுசிலையி னால்மிக் கோர்தம்
வித்து விளைபுனமும் வேய்முத் தீனும்
வெற்பு
முறையுமயில் வேளைக் காரப் ...... பெருமாளே.
பாடல் 1023 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தான
தத்த
தனதனன தானத் தானத் ...... தனதான
விட்ட புழுகுபனி நீர்கத்
தூரி
மொய்த்த பரிமளப டீரச் சேறு
மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ......
களவேதான்
மெத்த விரியுமலர் சேர்கற் பூர
மெத்தை மிசைகலவி யாசைப் பாடு
விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ...... குழையோடே
முட்டி யிலகுகுமிழ்
தாவிக் காமன்
விட்ட பகழிதனை யோடிச் சாடி
மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக்
...... கயல்மீனை
முக்கி யமனையட மீறிச் சீறு
மைக்கண் விழிவலையி லேபட்
டோ டி
முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ...... கடவேனோ
செட்டி
யெனுமொர்திரு நாமக் கார
வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார
திக்கை யுலகைவல
மாகப் போகிக் ...... கணமீளுஞ்
சித்ர குலகலப வாசிக் கார
தத்து மகரசல
கோபக் கார
செச்சை புனையுமண வாளக் கோலத் ...... திருமார்பா
துட்ட
நிருதர்பதி சூறைக் கார
செப்பு மமரர்பதி காவற் கார
துப்பு முகபடக போலத்
தானக் ...... களிறுரும்
சொர்க்க கனதளவி நோதக் கார
முத்தி விதரணவு
தாரக் கார
சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே.
பாடல் 1024 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
மேவதுப ழிக்கும் ...... விழியாலே
ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
லேமருவி மெத்த ...... மருளாகி
நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
நாரியர்கள் சுற்ற ...... மிவைபேணா
ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்
நாடிநர கத்தில் ...... விழலாமோ
ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
யாடுமொரு பச்சை ...... மயில்வீரா
ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
ஆருமுய நிற்கு ...... முருகோனே
வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
மேவியகு றத்தி ...... மணவாளா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பாடல் 1025 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
பீம்பளாஸ்
தாளம் - ஆதி
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ......
தனதான
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
மானபிணி சுற்றி ......
யுடலுடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
தீதுவிளை விக்க ......
வருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம தற்கு ......
ளழியாமுன்
தாரணி தனக்கு ளாரண முரைத்த
தாள்தர நினைத்து ......
வரவேணும்
மாதர்மய லுற்று வாடவடி வுற்று
மாமயிலில் நித்தம் ......
வருவோனே
மாலுமய னொப்பி லாதபடி பற்றி
மாலுழலு மற்ற ...... மறையோர்முன்
வேதமொழி வித்தை யோதியறி வித்த
நாதவிறல் மிக்க ...... இகல்வேலா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பாடல் 1026( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற
தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம்
தோள்வலி மனத்து வாள்வலி யுழக்கு
தோகையர் மயக்கி ...... லுழலாதே
பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி
யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே
பாவவினை யற்று னாமநினை புத்தி
பாரிலருள் கைக்கு ...... வரவேணும்
ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி
ஆண்மையுட னிற்கு ...... முருகோனே
ஆதியர னுக்கு வேதமொழி முற்றி
யார்வம்விளை வித்த ...... அறிவோனே
வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு
வேளையென நிற்கும் ...... விறல்வீரா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பாடல் 1027 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய்
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்ட ...... மவைதீரா
வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபணி சற்று ...... மணுகாதே
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
வாழமிக வைத்து ...... அருள்வாயே
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த
கானககு றத்தி ...... மணவாளா
காசினிய னைத்து மோடியள விட்ட
கால்நெடிய பச்சை ...... மயில்வீரா
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
வேதனைத விர்க்கு ...... முருகோனே
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பாடல் 1028 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
சங்கராபரணம்
தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான
காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங்
காசு தேடி
யீயாமல் வாழப் ...... பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ......
குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே
நாத ரூப
மாநாத ராகத் ...... துறைவோனே
நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப்
...... பெருமாளே.
பாடல் 1029 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தான தான தானான தானத் ...... தனதான
கூறு மார
வேளார வாரக் ...... கடலாலே
கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே
மாது போத மாலாகி
வாடத் ...... தகுமோதான்
ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே
சீறு சூரர் நீறாக
மோதிப் ...... பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பாடல் 1030( பொதுப்பாடல்கள் )
ராகம் -
ஹிந்தோளம்
தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான
பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே
பேதை மாத ராரோடு
கூடிப் ...... பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன்
ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க்
...... கெளிவாயா
தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா
தீர
தீர தீராதி தீரப் ...... பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பாடல் 1031 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம்
...... தனதான
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்
கான
யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர்
காணொ ணாத இடைக்கும் பூணு லாவு
முலைக்குங்
காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய
கோதி லாத கருப்பஞ்
சாறு போல ருசிக்குங்
கோவை வாயமு துக்குந் ...... தணியாமல்
கூருவே
னொரு வர்க்குந் தேடொ ணாததொ ரர்த்தங்
கூடு மாறொரு சற்றுங் ...... கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும்
போத தேசிக சக்ரந் ......
தவறாதே
போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்
போத ஆதர வைக்கும்
...... புயவீரா
சோதி வேலை யெடுத்தன் றோத வேலையில் நிற்குஞ்
சூத
தாருவும் வெற்பும் ...... பொருகோவே
சூரர் சேனை யனைத்துந் தூளி யாக
நடிக்குந்
தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
பாடல் 1032 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம்
...... தனதான
காரு லாவு குழற்குங் கூரிதான விழிக்குங்
காதல் பேணு
நுதற்குங் ...... கதிர்போலுங்
காவி சேர்பவ ளத்தின் கோவை வாயித ழுக்குங்
காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா
நேரிதான இடைக்குஞ் சீத வார
நகைக்கும்
நேரிலாத தொடைக்குஞ் ...... சதிபாடும்
நீத மான அடிக்கும்
மாலு றாத படிக்குன்
னேய மோடு துதிக்கும் ...... படிபாராய்
பார மேரு
வளைக்கும் பாணி யார்சடை யிற்செம்
பாதி சோம னெருக்கும் ...... புனைவார்தம்
பால காஎன நித்தம் பாடு நாவலர் துக்கம்
பாவ நாச மறுத்தின் ......
பதமீவாய்
சோரிவாரியிடச்சென் றேறி யோடி யழற்கண்
சூல காளி நடிக்கும்
...... படிவேலாற்
சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்
தோகை வாசி
நடத்தும் ...... பெருமாளே.
பாடல் 1033 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ......
தனதான
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
தோய்மைக்க ணால்மிக்க
...... நுதலாலே
தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்
சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம்
ஊடற்கு ளேபுக்கு வாடிக்க
லாமிக்க
ஓசைக்கு நேசித்து ...... உ ழலாதே
ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற
தாள்பற்றி
யோதற்கு நீசற்று ...... முணர்வாயே
வேடர்க்கு நீள்சொர்க்கம்
வாழ்விக்க வோர்வெற்பின்
மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா
வேழத்தி
னாபத்தை மீள்வித்த மாலொக்க
வேதத்தி லேநிற்கு ...... மயனாருந்
தேடற்கொ
ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த
சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ......
பெருமாளே.
பாடல் 1034 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
சுருட்டி
தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை (20)
நடை- தகதகிட
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ...... தனதான
தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
தோளுக்கை காலுற்ற ......
குடிலுடே
சொர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
வேதித்த சூலத்த
...... னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
டேபட்டு
வீழ்வித்த ...... கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு
வானத்த
ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே
ஆலித்து மூலத்தொ
டேயுட்கொ ளாதிக்கு
மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே
சேலொத்த
வேலொத்த நீலத்து மேலிட்ட
தோதக்கண் மானுக்கு ...... மணவாளா
தீதற்ற
நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
பாடல் 1035 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
ஸிந்துபைரவி
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன
...... தனதான
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
யூருங் கருவழி ......
யொருகோடி
ஓதும் பலகலை கீதஞ் சகலமு
மோரும் படியுன ...... தருள்பாடி
நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில் ...... மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள் ...... புரிவாயே
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
காலங் களுநடை ...... யுடையோனுங்
காருங் கடல்வரை நீருந் தருகயி
லாயன் கழல்தொழு ...... மிமையோரும்
வானிந் திரனெடு மாலும் பிரமனும்
வாழும் படிவிடும் ...... வடிவேலா
மாயம் பலபுரிசூரன் பொடிபட
வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
பாடல் 1036 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
தீயும் பவனமு நீருந் தரணியும்
வானுஞ் செறிதரு ...... பசுபாசத்
தேகந் தனைநிலை யேயொன் றிருவினை
தீருந் திறல்வினை ...... யறியாதே
ஓயும் படியறு நூறும் பதினுறழ்
நூறும் பதினிரு ...... பதுநூறும்
ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல
யோகம் புரிவது ...... கிடையாதோ
வேயுங் கணியும்வி ளாவும் படுபுன
மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா
மீனம் படுகட லேழுந் தழல்பட
வேதங் கதறிய ...... வொருநாலு
வாயுங் குலகிரிபாலுந் தளைபட
மாகந் தரமதில் ...... மறைசூரன்
மார்புந் துணையுறு தோளுந் துணிபட
வாள்கொண் டமர்செய்த ......
பெருமாளே.
பாடல் 1037( பொதுப்பாடல்கள் )
ராகம் -
பெஹாக்
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ......
தனதான
வாதந் தலைவலி சூலம் பெருவயி
றாகும் பிணியிவை ......
யணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழி ...... மருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியி ...... லுழலாதே
ஓதும் பலஅடி யாருங் கதிபெற
யானுன் கழலிணை ...... பெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர ...... மொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படியவ
ரோடுங் கெழுமுத ...... லுடையோனே
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை ...... விறல்வீரா
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட
வேல்கொண் டமர்செய்த ......
பெருமாளே.
பாடல் 1038 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
ஊனே தானா யோயா நோயா
லுசா டூசற் ...... குடில்பேணா
ஓதா
மோதா வாதா காதே
லோகா சாரத் ...... துளம்வேறாய்
நானே நீயாய் நீயே
நானாய்
நானா வேதப் ...... பொருளாலும்
நாடா வீடா யீடே றாதே
நாயேன்
மாயக் ...... கடவேனோ
வானே காலே தீயே நீரே
பாரே பாருக் ......
குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் ...... கொடியோனே
தேனே தேனீள் கானா றாய்வீழ்
தேசார் சாரற் ...... கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1039 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சாவா மூவா வேளே போல்வாய்
தாளா வேனுக் ...... கருள்கூருந்
தாதா வேஞா தாவே கோவே
சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே
போல்வா யீதற் ...... கெனையாள்கொண்
டேயா பாடா வாழ்வோர் பாலே
யான்வீ ணேகத் ...... திடலாமோ
பாவா
நாவாய் வாணீ சார்வார்
பாரா வாரத் ...... துரகேசப்
பாய்மீ தேசாய்
வார்கா ணாதே
பாதா ளாழத் ...... துறுபாதச்
சேவா மாவூர் கோமான் வாழ்வே
சீமா னேசெச் ...... சையமார்பா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்
...... பெருமாளே.
பாடல் 1040( பொதுப்பாடல்கள் )
ராகம் -
மலஹரி
தாளம் - ஆதி - 2 களை
தானா தானா தானா தானா
தானா தானத் ......
தனதான
நாரா லேதோல் நீரா லேயாம்
நானா வாசற் ...... குடிலுடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானே
சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய்
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
பாவார்வேதத் ...... தயனாரும்
பர்ழு டேவா னூடே பர்ரு
டேயூர் பாதத் ...... தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
சேவூர் வார்பொற் ...... சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1041 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
மாதா வோடே மாமா னானோர்
மாதோ டேமைத் ...... துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடே
மாயா மோகக் ...... குடில்போடாப்
போதா நீரு டேபோய் மூழ்கா
வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
போதார் பாதத் ...... தருள்தாராய்
வேதா வோடே மாலா னார்மேல்
வானோர் மேனிப் ...... பயமீள
வேதா
னோர்மே லாகா தேயோர்
வேலால் வேதித் ...... திடும்வீரா
தீதார் தீயார்
தீயு ட்முள்
சேரா சேதித் ...... திடுவோர்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1042 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் ...... துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச் ...... சுடர்தானின்
றாரா
யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப் ...... பொருள்காணென்
றாள்வாய் நீதா
னாதா பார்மீ
தார்வே றாள்கைக் ...... குரியார்தாம்
தோரா வானோர் சேனா
தாரா
சூரா சாரற் ...... புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச் ...... சிறுதாரைச்
சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித்
...... திடும்வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 1043 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
அரிய மோன மேகோயி ......
லெனமேவி
அசைய வேக்ரியாபீட மிசைபு காம காஞான
அறிவி னாத ராமோத ......
மலர்தூவிச்
சகல வேத னாதீத சகல வாச காதீத
சகல மாக்ரியாதீத ......
சிவ்ருப
சகல சாத காதீத சகல வாச னாதீத
தனுவை நாடி மாபூசை ......
புரிவேனே
விகட தார சூதான நிகள பாத போதூள
விரக ராக போதார ......
சுரர்கால
விபுத மாலி காநீல முகப டாக மாயூர
விமல வ்யாப காசீல ......
கவிநோத
ககன கூட பாடீர தவள சோபி தாளான
கவன பூத ரர்ருட ...... சதகோடி
களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர
கருணை மேரு வேதேவர் ......
பெருமாளே.
பாடல் 1044 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
அடைப டாது நாடோ றும் இடைவிடாது போம்வாயு
அடைய மீளில்
வீடாகு ...... மெனநாடி
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்
அவனி
மீதி லோயாது ...... தடுமாறும்
உ டலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
உ தறி வாச காதீத ...... அடியூடே
உ ருகி ஆரியாசார பரம யோகி யாமாறுன்
உ பய பாத ராசீக ...... மருள்வாயே
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
மகர வாரியோரேழு ...... மமுதாக
மகுட வாள ராநோவ மதிய நோவ வாணச
வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக்
கடையு மாதி கோபாலன் மருக சூலி
காபாலி
புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே
கனக லோக பூபால சகல லோக
ஆதார
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1045 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
யமுனா கல்யாணி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2,
தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
அமுத பான ம்முல ......
அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
அரிச தான சோபான ......
மதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக ......
வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத
...... மருள்வாயே
விமலை தோடி மீதொடு யமுனை போல வோரேழு
விபுத மேக
மேபோல ...... வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
வெகுவி
தாமு காகாய ...... பதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
கலப நீல
மாயூர ...... இளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரியேயீறில்
கருணை மேரு
வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1046 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரிதாயீச
ரமுத ளாவு மாவேச
...... மதுபோல
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி
னளவு மோடி நீடோ
தி ...... நிழலாறித்
துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத
துறவ ரான
பேர்யாரு ...... மடலேறத்
துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு
துவளு
வேனை யீடேறு ...... நெறிபாராய்
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான
பவதி யாம ளாவாமை ...... அபிராமி
பரிபு ரார பாதார சரணி சாம ளாகார
பரம யோகி னீமோகி ...... மகமாயி
கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி
கனத னாச லாபார ...... அமுதூறல்
கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1047 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
இனிய போக வாராழி
...... யதில்மூழ்கி
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
மினிய
மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ்
சரச மோக மாவேத சரியை யோக்ரியாஞான
சமுக மோத ராபூத ...... முதலான
சகள மோச டாதார முகுள மோநி ராதார
தரணி யோநி ராகார ...... வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரம
யோகி மாதேசி ...... மிகுஞான
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
பதும சேக ராவேலை ...... மறவாத
கரத லாவி சாகாச கலக லாத ராபோத
கமுக
மூஷி கர்ருட ...... மததாரைக்
கடவுள் தாதை சூழ்போதில் உ லக மேழு சூழ்போது
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1048 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவி
...... விடுகாலன்
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ
டேகோலி ...... யெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே
பழுது றா பாவாண ரெழுதொ ணாத
தோள்வீர
பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய்
மருது நீற தாய்வீழ
வலிசெய் மாயன் வேயூதி
மடுவி லானை தான்மூல ...... மெனவோடி
வருமு
ராரிகோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசன மோம றாகேசன் ...... மருகோனே
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
கடிய பேயி னோடாடி ......
கருதார்வெங்
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
கருணை மேரு
வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1049 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
துரிய மீது சாராது
...... எவராலுந்
தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத
சுகம கோத தீயாகி
...... யொழியாது
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
பவனம்
வீசில் வீழாது ...... சலியாது
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தநமுள
நிபிட தாரு காபூமி ...... குடியேற
நிகர பார நீகார சிகர மீது வேலேவு
நிருப வேத ஆசாரி...... யனுமாலும்
கருது மாக மாசாரிகனக கார்மு
காசாரி
ககன சாரிபூசாரி...... வெகுசாரி
கயிலை நாட காசாரிசகல சாரிவாழ்வான
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1050( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறு வாராலு
...... மெதிர்கூறத்**
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
துரிய மாகி
வேறாகி ...... யறிவாகி
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரியான
தூதாளி
நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ
அடல்கெ டாத சூர்கோடி
மடிய வாகை வேலேவி
யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே
அழகி னோடு
மானீனு மரிவை காவ லாவேதன்
அரியும் வாழ வானாளு ...... மதிரேகா
கடுவி
டாக ளர்ருப நடவி நோத தாடாளர்
கருதி டார்கள் தநமுள ...... முதல்நாடுங்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
கருணை மேரு வேதேவர் ......
பெருமாளே.
பாடல் 1051 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
நிலவில் மார னேறுதை யசைய வீசு மாராம
நிழலில் மாட மாமாளி
...... கையின்மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு
நியதி
யாக வாயார ...... வயிறார
இலவி லுறு தேனூறல் பருகி யார வாமீறி
யிளகி
யேறு பாடீர ...... தனபாரம்
எனது மார்பி ல்முழ்க இறுக மேவி மால்கூரு
கினுமு னீப சீர்பாத ...... மறவேனே
குலவி யோம பாகீர திமிலை நாதர்
மாதேவர்
குழைய மாலி காநாக ...... மொடுதாவிக்
குடில கோம ளாகார சடில
மோலி மீதேறு
குமர வேட மாதோடு ...... பிரியாது
கலவி கூரு மீராறு கனக
வாகு வேசூரர்
கடக வாரிதூளாக ...... அமராடுங்
கடக போல மால்யானை வனிதை
பாக வேல்வீர
கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பாடல் 1052 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
திலங்
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2
1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
மனக பாட பாடீர தனத ராத ரர்ருப
மதன ராச ராசீப ...... சரகோப
வருண பாத காலோக தருண சோபி தாகார
மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக்
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
குறைய னேனை நாயேனை ......
வினையேனைக்
கொடிய னேனை யொதாத குதலை யேனை நாடாத
குருட னேனை நீயாள்வ
...... தொருநாளே
அநக வாம னாகார முநி ராக மால்தேட
அரிய தாதை தானேவ
...... மதுரேசன்
அரிய சார தாபீட மதனி லேறி யீடேற
அகில நாலு மாராயு
...... மிளையோனே
கனக பாவ னாகார பவள கோம ளாகார
கலப சாம ளாகார ......
மயிலேறுங்
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார
கருணை மேரு வேதேவர்
...... பெருமாளே.
பாடல் 1053 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
பிருந்தாவன சாரங்கா
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1
1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ......
அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள
...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட
...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி
...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத
லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கேர்டுதி ...... அலைமோதும்
உ ததி மீதி லேசாயு முலக மூடு
சீர்பாத
உ வண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உ தய தாம மார்பான ப்ரபுட
தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 1054 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ......
தனதான
குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
குடிசை கோழை மாசூறு
...... குழிநீர்மேற்
குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
குறடு பாறு
நாய்கூளி ...... பலகாகம்
பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்
படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப்
பரவு நாட காசார கிரியை
யாளர் காணாத
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
எரியின் மேனி நீறாடு
பரமர் பாலில் வாழ்வான
இமய மாது மாசூலி ...... தருபாலா
எழுமை யீறு
காணாதர் முநிவ ரோடு வானாடர்
இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே
அரவி
னோடு மாமேரு மகர வாரிபூலோக
மதிர நாக மோரேழு ...... பொடியாக
அலகை பூத
மாகாளி சமர பூமி மீதாட
அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே.
பாடல் 1055 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன
...... தனதான
சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி
தணிகை
பொருடி ராப்பகல் ...... தடுமாறுஞ்
சகல சமய தார்க்கிகர் கலக மொழிய
நாக்கொடு
சரண கமல மேத்திய ...... வழிபாடுற்
றரிய துரிய மேற்படு கருவி
கரண நீத்ததொ
ரறிவின் வடிவ மாய்ப்புள ...... கிதமாகி
அவச கவச மூச்சற
அமரு மமலர் மேற்சில
ரதிப திவிடு பூக்கணை ...... படுமோதான்
விரியு
முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ
மிடையு மலகில் தேர்ப்படை ...... யொடுசூழும்
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்
விசைய னொருவ னாற்பட ......
வொருதூது
திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி
சிறுவ தறுகண்
வேட்டுவர் ...... கொடிகோவே
திமிர யுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு
சிகரிதகர வீக்கிய ...... பெருமாளே.
பாடல் 1056 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன
...... தனதான
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்
மறுகி புறமு மார்த்திட ...... வுடலுடே
மருவு முயிரை நோக்கமு மெரியை
யுமிழ ஆர்ப்பவ
ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன்
உ கமு முடிவு
மாச்செலு முதய மதியி னோட்டமு
முளது மிலது மாச்சென ...... வுறைவோரும்
உ ருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு
உ னது கழல்கள் போற்றிட
...... அருள்தாராய்
புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக
ழுடைய
திருத ராட்டிர ...... புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை
மாய்த்துயர்
புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே
மிகவு மலையு
மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன்
விரைசெய் நெடிய தோட்கன அடலுமுருவ வேற்படை
விசைய முறவும் வீக்கிய
...... பெருமாளே.
பாடல் 1057 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ...... தந்ததான
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
குறைவி லாப்பல ......
என்பினாலுங்
கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய
குடிலி லேற்றுயி ......
ரென்றுகூறும்
வடிவி லாப்புல மதனை நாட்டிடு
மறலி யாட்பொர ......
வந்திடாமுன்
மதியு மூத்துன தடிக ளேத்திட
மறுவிலாப் பொருள் ......
தந்திடாதோ
கடிய காட்டக முறையும் வேட்டுவர்
கருதொ ணாக்கணி ......
வெங்கையாகிக்
கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
களவி னாற்புணர் ......
கந்தவேளே
முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ
முடிய வேற்கொடு ......
வென்றவீரா
முடிய லாத்திரு வடிவை நோக்கிய
முதிய மூர்த்திகள் ......
தம்பிரானே.
பாடல் 1058 ( பொதுப்பாடல்கள் )
ராகம் -
ஹம்ஸத்வனி
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிடதகதிமி-3 1/2
தனன
தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ...... தந்ததான
பொதுவ தாய்த்தனி
முதல தாய்ப்பகல்
இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப்
பொருள
தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில்
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
கமுத மாய்ப்புல ...... னைந்த