|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - பாடல்கள் ( 1 - 330 ) > பாடல்கள் (331-670) > பாடல்கள் (671- 1000) > பாடல்கள் ( 1001- 1326 )

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
மூன்றாம் பாகம், பாடல்கள் (671- 1000)
Acknowledgements:
Etext preparation (Mylai format) : Mr. A.S. Maniam (http://www.kaumaram.com/)
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of Mylai version to Tamil script version as per TSCII encoding.
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாடல் 671 ( விரிஞ்சிபுரம் )
ராகம் - .....;
தாளம் - ..........
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா
பரவி யுனது பொற் கரமு
முகமுமுத்
தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
பதமும் விரவுகுக் குடமு
மயிலுமுட் ...... பரிவாலே
படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
தெவரு
மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ......
படையாதே
சருவி யினியநட் புறவு சொலிமுதற்
பழகு மவரெனப் பதறி யருகினிற்
சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார்
தமது மருகமதக் களப
புளகிதச்
சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
தழுவி யவசமுற் றுருகி
மருளெனத் ...... திரிவேனோ
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
கெருவ
மதமொழித் துடல்கள் துணிபடக்
கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ......
திடுதீரா
கமல அயனுமச் சுதனும் வருணனக்
கினியு நமனுக் கரியு
லுறையுமெய்க்
கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே
இரையு
முததியிற் கடுவை மிடறமைத்
துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
திலகு பெறநடிப்
பவர்மு னருளுமுத் ...... தமவேளே
இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
தவனி தனி லெழிற் கரும முனிவருக்
கினிய கரபுரப் பதியி லறுமுகப் ......
பெருமாளே.
பாடல் 672 ( விரிஞ்சிபுரம் )
ராகம் -
மோஹனம் .
தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை (10 1/2)
(எடுப்பு - /3/3/3 0)
தனன தந்த தான தனன தந்த தான
தனன தந்த தான ...... தனதான
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட ......
அறியாது
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத
...... அடியேனும்
உ ருகி யன்பி னோடு உ னைநி னைந்து நாளும்
உ லக
மென்று பேச ......அறியாத
உ ருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உ பய
துங்க பாத ...... மருள்வாயே
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசி ...... கடையூடே
அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி ...... குருநாதா
திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து
சூரர்
செருவ டங்க வேலை ...... விடுவோனே
செயல மைந்த வேத தொனிமு ழங்கு
வீதி
திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.
பாடல் 673 ( திருவாலங்காடு )
ராகம் - ...;
தாளம் -
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன
...... தனதான
கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே
கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர்
மேல்விழு ...... மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும்
பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ
தனதானந் தானன
தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா
தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி
யார்மகிழ் ...... பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட
னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா
திகழ்வேடங் காளியொ
டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.
பாடல் 674 ( திருவாலங்காடு )
ராகம் - ---;
தாளம் -
தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந்
தாத்தம் தனதன ...... தனதான
பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
பொன்றானென் றாட்டம் பெருகிய ......
புவியூடே
பொங்காவெங் கூற்றம் பொதிதரு
சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல
நின்றானின் றேத்தும்
படிநினை
வுந்தானும் போச்சென் றுயர்வற
நிந்தாகும் பேச்சென் பதுபட ......
நிகழாமுன்
நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
விஞ்சாதென் பாற்சென் றகலிட
நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே
குன்றால்விண்
டாழ்க்குங் குடைகொடு
கன்றாமுன் காத்துங் குவலய
முண்டார்கொண் டாட்டம்
பெருகிய ...... மருகோனே
கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
மின்தாள்சிந்
தாச்சிந் தையில்மயல்
கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே
அன்றாலங் காட்டண் டருமுய
நின்றாடுங் கூத்தன் திருவருள்
அங்காகும்
பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே
அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
பாடல் 675 ( திருவாலங்காடு )
ராகம் - ...;
தாளம் -
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ......
தனதான
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன
மானும் பூட்டி ...... யிடையூடே
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங்
காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்
பவவினை நூறுங் காட்டி
சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்
படிமிசை
போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர்
...... மருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
ஜெகமொடு
வானங் காக்க ...... மயிலேறிக்
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையி
லாலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
பாடல் 676 ( திருவாலங்காடு )
ராகம் - :
தாளம் -
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ......
தனதான
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன்
கோட்டி ...... விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி
யுடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொ
...... டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி
யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
யெதிர்பொரு சூரன் தாக்க
...... வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உ டலிரு கூறன் றாக்கி
யிமையவ
ரேதந் தீர்த்த ...... பெருமாளே.
பாடல் 677 ( திருவாலங்காடு )
ராகம் -
மோஹனம்
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
தனனாத் தானன தானம் தனனாத் தானன
தானம்
தனனாத் தானன தானம் ...... தனதான
தவர்வாட் டோ மர சூலந்
தரியாக் காதிய சூருந்
தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ்
சருகாக்
காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிகூத் தாடிய மாவுந் ......
தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
துணையாத்
தாழ்வற வாழும் ...... பெரியோனே
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப்
பாவிகள் பாலுந்
தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ
பவமாய்த்
தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் ......
படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
பறிகோப்
பாளிகள் யாருங் ...... கழுவேறச்
சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி
சேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி
யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.
பாடல் 678 ( பாக்கம் )
ராகம் - ...; தாளம்
-
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
தாத்தத்த தானதன ...... தனதான
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
காய்த்தொட்டொ ணாதவுரு
...... ஒருகோடி
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்
காட்டத்தி
னீளெரியி ...... லுறவானிற்
கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு
போத்துக்க மானகுறை ...... யுடையேனைக்
கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு
நாமமொழி
கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே
போர்க்கெய்த்தி டாமறலி
போற்குத்தி மேவசுரர்
போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற்
பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
போற்றிச்செய் வார்சிறையை
...... விடுவோனே
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
னாய்ப்பத்தி
கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே
பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு
வேல்கொடுயர்
பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.
பாடல் 679 ( பாக்கம் )
ராகம் - ...; தாளம்
-
தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
தாத்தத் தனந்த தந்த ......
தனதான
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
நோக்கிச்
சுமந்து கொண்டு ...... பதிதோறும்
பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத்
தையுந்தெ ரிந்து
ஏக்கற்று நின்று நின்று ...... தளராதே
வேற்றுப்
புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
வீட்டிற் புகுந்தி ருந்து ......
மகிழ்வேனோ
மாற்றற்ற பொன்து லங்கு வாட்சக்கி ரந்தெ ரிந்து
வாய்ப்புற்ற
மைந்த சங்கு ...... தடிசாப
மாற்பொற்க லந்து லங்க நாட்டச்சு தன்ப ணிந்து
வார்க்கைத்த லங்க ளென்று ...... திரைமோதும்
பாற்சொற்ற டம்பு குந்து
வேற்கட்சி னம்பொ ருந்து
பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த
பாக்கத் தமர்ந்தி
ருந்த ...... பெருமாளே.
பாடல் 680 ( திருவேற்காடு )
ராகம் - ....;
தாளம் -
தானந்தா தனதான தானந்தா தனதான
தானந்தா தனதான ...... தனதான
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
மாளம்போர் செயுமாய ......
விழியாலே
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
ஆடம்பார் குவிநேய ......
முலையாலே
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
வேளங்கார் துடிநீப
...... இடையாலே
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
காலந்தா னொழிவேது
...... உ ரையாயோ
பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
மாதம்பா தருசேய
...... வயலுரா
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின்
...... மருகோனே
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
வீறங்கே
யிருபாலு ...... முறவீறு
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா
டுறைசீல ...... பெருமாளே.
பாடல் 681 ( திருவேற்காடு )
ராகம் -
ஸிம்மேந்திர மத்யமம்
தாளம் - திஸ்ர த்ருபுடை
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன ...... தனதான
கார்ச்சார்குழ லார்விழி யாரயி
லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே
காழ்க்காதல தாமன மேமிக
வார்க்காமுக னாயுறு சாதக
மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே
பார்ப்பாயலை யோவடி யாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரருள்
கூர்ப்பாயலை
யோவுமை யாள்தரு ...... குமரேசா
பார்ப்பாவல ரோதுசொ லால்முது
நீர்ப்பாரினில் மீறிய கீரரை
யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே
வார்ப்பேரரு ளேபொழி காரண
நேர்ப்பாவச காரண மாமத
ஏற்பாடிக ளேயழி
வேயுற ...... அறைகோப
வாக்காசிவ மாமத மேமிக
வூக்காதிப யோகம தேயுறு
மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே
வேர்காடவல் வேடர்கள் மாமக
ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
வேற்காடுறை வேதபு ணசுரர் ...... தருசேயே
வேட்டார்மக வான்மக ளானவ
ளேட்டார்திரு மாமண வாபொனி
னாட்டார்பெரு
வாழ்வென வேவரு ...... பெருமாளே.
பாடல் 682 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் -
மோஹனம் ; தாளம் - அங்கதாளம் (6 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதய்ய தானன தானன
தனதய்ய
தானன தானன
தனதய்ய தானன தானன ...... தனதான
அணிசெவ்வி யார்திரை
சூழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட
அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
மிருளில்லி லேயிடு மோவுன
தருளில்லை யோஇன
மானவை ...... யறியேனே
குணவில்ல தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல
குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத
குடிலில்ல மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி
குணவல் வாசிவ னேசிவ ...... குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
டமர்கள்ளி கானக நாடக
பரமெல்லி யார்பர
மேசுரி ...... தருகோவே
படரல்லி மாமலர் பாணம
துடைவில்லி மாமத னாரனை
பரிசெல்ரவி யார்மரு காசுர ...... முருகேசா
மணமொல்லை யாகி நகாகன
தனவல்லி மோகன மோடமடர்
மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
பொழில் மெல்லி காவன மாடமை
வடமுல்லை வாயிலின்
மேவிய ...... பெருமாளே.
பாடல் 683 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் -
...; தாளம் -
தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன
தான தானன
தானன தந்தன ...... தனதான
சோதி மாமதி போல்முக முங்கிளர்
மேரு
லாவிய மாமுலை யுங்கொடு
தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே
சோலி பேசிமு னாளிலி ணங்கிய
மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
சூதி
னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி
மோதி யேகனி வாயத ரந்தரு
நாளி
லேபொருள் சூறைகள் கொண்டுபின்
மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி
மோச மேதரு தோதக வம்பியர்
மீதி லேமய லாகிம னந்தளர்
மோட னாகிய பாதக
னுங்கதி ...... பெறுவேனோ
ஆதி யேயெனும் வானவர் தம்பகை
யான சூரனை மோதிய
ரும்பொடி
யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா
ஆயர் வாழ்பதி
தோறுமு கந்துர
லேறி யேயுறி மீதளை யுங்கள
வாக வேகொடு போதநு கர்ந்தவன்
...... மருகோனே
வாதி னால்வரு காளியை வென்றிடு
மாதி நாயகர் வீறுத
யங்குகை
வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர்
வாச மாமல ரோனொடு
செந்திரு
மார்பில் வீறிய மாயவ னும்பணி
மாசி லாமணி யிசர்ம கிழ்ந்தருள்
...... பெருமாளே.
பாடல் 684 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் -
...; தாளம் -
தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன
தய்யதன தான
தந்தன ...... தனதான
மின்னிடைக லாப தொங்கலொ
டன்னமயில் நாண விஞ்சிய
மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே
மெள்ளவுமு லாவி யிங்கித
சொல்குயில்கு லாவி நண்பொடு
வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக
கன்னியர்கள் போலி தம்பெறு
மின்னணிக லார கொங்கையர்
கண்ணியில்வி
ழாம லன்பொடு ...... பதஞான
கண்ணியிலு ளாக சுந்தர
பொன்னியல்ப தார
முங்கொடு
கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய்
சென்னியிலு டாடி
ளம்பிறை
வன்னியும ராவு கொன்றையர்
செம்மணிகு லாவு மெந்தையர் ......
குருநாதா
செம்முகஇ ராவ ணன்தலை
விண்ணுறவில் வாளி யுந்தொடு
தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிட
சண்முகம தாகி வன்கிரி
துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே
சொல்லுமுனி வோர்த வம்புரி
முல்லைவட வாயில் வந்தருள்
துல்யபர ஞான
வும்பர்கள் ...... பெருமாளே.
பாடல் 685 ( திருவலிதாயம் )
ராகம் -
ஷண்முகப்ரியா
தாளம் - அங்கதாளம் (8)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2,
தக-1, தகதிமிதக-3
தனதய்ய தானதன ...... தனதான
மருமல்லி
யார்குழலின் ...... மடமாதர்
மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்
இருநல்ல வாகுமுன ...... தடிபேண
இனவல்ல மானமன ...... தருளாயோ
கருநெல்லி மேனியரி ...... மருகோனே
கனவள்ளி யார்கணவ ......
முருகேசா
திருவல்லி தாயமதி ...... லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள்
...... பெருமாளே.
பாடல் 686 ( திருவொற்றியூர் )
ராகம் - ...;
தாளம் -
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின் ...... விழிமாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர
களனமுலை தோய ...... அணையூடே
விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு ...... முலகோர்கள்
விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத ...... புவிமீதே
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச ...... குமரேசா
சிரகர கபாலர் அரிவையொரு பாகர்
திகழ் கநக மேனி ...... யுடையாளர்
திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.
பாடல் 687 ( திருவொற்றியூர் )
ராகம் -
தன்யாஸி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1
தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன ...... தனதானா
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச ......
சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயி
...... றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி
ராகவகை ...... யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர
ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே
குமரப்பிர தாபகுக
சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா
திருவொற்றியு
றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு ......
பெருமாளே.
பாடல் 688 ( திருமயிலை )
ராகம் - ராமப்ரியா
; தாளம் - ஆதி
தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான
அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு ...... மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண ...... அகிலேச
நிமிர
வருள்சரண நிபிட மதெனவுன
நிமிர சமிரமய ...... நியமாய
நிமிட மதனிலுண
வலசி வசுதவர
நினது பதவிதர ...... வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரதஅயில் ...... விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த
திகுர்ததிகு
தரர ரரரரிரி ...... தகுர்தாத
எமர நடனவித மயிலின்
முதுகில்வரு
மிமைய மகள்குமர ...... எமதீச
இயலி னியல்மயிலை நகரி
லினிதுறையு
மெமது பரகுரவ ...... பெருமாளே.
பாடல் 689 ( திருமயிலை )
ராகம் -....;
தாளம் -
தனனத் தனதன ...... தனதான
அயிலொத் தெழுமிரு ......
விழியாலே
அமுதொத் திடுமரு ...... மொழியாலே
சயிலத் தெழுதுணை
...... முலையாலே
தடையுற் றடியனு ...... மடிவேனோ
கயிலைப் பதியரன்
...... முருகோனே
கடலக் கரைதிரை ...... யருகேசூழ்
மயிலைப் பதிதனி
...... லுறைவோனே
மகிமைக் கடியவர் ...... பெருமாளே.
பாடல் 690 ( திருமயிலை )
ராகம் -
பூர்வி கல்யாணி
தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தகதிமி-2, தகதிமிதக-3
தனன தானன தானன தந்தத் ...... தனதான
அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம
னஞ்சற் ...... றிளையாதே
திறகு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே
விறல் சாசரர்
சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ......
புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா
மயிலை
மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
பாடல் 691 ( திருமயிலை )
ராகம் - கீரவாணி
தாளம் - அங்தாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
...... தனதான
இகல வருதிரை பெருகிய சலநிதி
நிலவு முலகினி லிகமுறு
பிறவியி
னினிமை பெறவரு மிடருறு மிருவினை ...... யதுதீர
இசையு முனதிரு
பதமலர் தனைமன
மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
ளிவர வுருகிலி அயர்கிலி
தொழுகிலி ...... உ மைபாகர்
மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
மடமை
குறைகிலி மதியுணர் வறிகிலி
வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ...... மடமாதர்
மயம தடரிட இடருறு மடியனு
மினிமை தருமுன தடியவ ருடனுற
மருவ
அருள்தரு கிருபையின் மலிகுவ ...... தொருநாளே
சிகர தனகிரி குறமக ளினிதுற
சிலத நலமுறு சிலபல வசனமு
திறைய அறைபயி லறுமுக நிறைதரு ...... மருணீத
சிரண புரணவி தரணவி சிரவண
சரணு சரவண பவகுக சயனொளி
திரவ பரவதி
சிரமறை முடிவுறு ...... பொருணீத
அகர உ கரதி மகரதி சிகரதி
யகர அருளதி
தெருளதி வலவல
அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே
அழகு
மிலகிய புலமையு மகிமையும்
வளமு முறைதிரு மயிலையி லநுதின
மமரு மரகர சிவசுத
அடியவர் ...... பெருமாளே.
பாடல் 692 ( திருமயிலை )
ராகம் -....;
தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
இருகுழையின் மீத டர்ந்து
...... அமராடி
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
இருநயனர்
வாரி ணங்கு ...... மதபாரப்
பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
பருவரதி போல வந்த ...... விலைமானார்
பயிலுநடை யாலு ழன்று அவர்களிட
மோக மென்ற
படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ
கணகணென வீர தண்டை
சரணமதி லேவி ளங்க
கலபமயில் மேலு கந்த ...... குமரேசா
கறுவிவரு சூர
னங்க மிருபிளவ தாக விண்டு
கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
மலையவிலி னாய கன்றன் ......
ஓருபாக
மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
மயிலைநகர் வாழ வந்த
...... பெருமாளே.
பாடல் 693 ( திருமயிலை )
ராகம் - ....;
தாளம் -
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
கலகமத வேள்தொ டுத்த ......
கணையாலுங்
கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற
கனலெனவு
லாவு வட்ட ...... மதியாலும்
வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
வனிதை மடல் நாடி நித்த ...... நலியாதே
வரியளியு லாவு துற்ற இருபுயம
ளாவி வெற்றி
மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும்
துளபமணி மார்ப சக்ர
தரனரிமு ராரி சர்ப்ப
துயிலதர னாத ரித்த ...... மருகோனே
சுருதிமறை
வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
துரகதக லாப பச்சை ...... மயில்வீரா
அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
அருள்பரவு பாடல் சொற்ற
...... குமரேசா
அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
அமரர்பதி
வாழ வைத்த ...... பெருமாளே.
பாடல் 694 ( திருமயிலை )
ராகம் - கல்யாண
வஸந்தம்
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2
1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் ......
வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி ......
நெறி பேணாக்
கொடிய னேது மோராது விரக சால ம்முடு
குடிலின் மேவி
யேநாளு ...... மடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை
வாகும் நேர்காண ...... வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு ...... வரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள
வானாடு
பதிய தாக வேலேவு ...... மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப
லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை ...... வயலோடே
மணிசெய் மாட மாமேடை
சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 695 ( திருமயிலை )
ராகம் -
சுபபந்துவராளி
தாளம் - கண்ட ஏகம் (5)
தனனா தனனாதன தனனா தனனாதன
தனனா தனனாதன ...... தனதான
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
திரிவே னுனையோதுதல் ...... திகழாமே
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால்
வரைமா துமையாள் தரு மணியே
குகனேயென
அறையா வடியேனுமு ...... னடியாராய்
வழிபா டுறுவாரொடு அருளா
தரமாயிடு
மகநா ளுளதோசொல ...... அருள்வாயே
இறைவா ரணதேவனு மிமையோ
ரவரேவரு
மிழிவா கிமுனேயிய ...... லிலராகி
இருளா மனதேயுற அசுரே
சர்களேமிக
இடரே செயவேயவ ...... ரிடர்தீர
மறமா வயிலேகொடு வுடலே
யிருகூறெழ
மதமா மிகுசூரனை ...... மடிவாக
வதையே செயுமாவலி யுடையா
யழகாகிய
மயிலா புரிமேவிய ...... பெருமாளே.
பாடல் 696 ( திருமயிலை )
ராகம் -....;
தாளம் -
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன
தாந்த தானன ...... தனதான
நிரைதரு மணியணி யார்ந்த பூரித
ம்ருகமத
களபகில் சாந்து சேரிய
இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே
நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
முகம்வெயர் வெழவிழி பாய்ந்து
வார்குழை
யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர
விரைமலர்
செறிகுழல் சாய்ந்து நூபுர
மிசைதர இலவிதழ் மோந்து வாயமு
தியல்பொடு பருகிய
வாஞ்சை யேதக ...... வியனாடும்
வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது
...... மொருநாளே
பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
யகிலமு மருளரு ளேய்ந்த
கோமளி
பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி
பகவதி யிருசுட
ரேந்து காரணி
மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி
படர்சடை யவனிட நீங்கு
றாதவள் ...... தருகோவே
குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
ளணிகெட நெடுவரை
சாய்ந்து தூளெழ
முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு ...... முருகோனே
குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
மயிலையி லுறைதரு சேந்த சேவக
குகசர
வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 697 ( திருமயிலை )
ராகம் - ....;
தாளம் -
தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன
தானா தானன ...... தனதான
வருமயி லொத்தவ ணவார் மாமுக
மதியென
வைத்தவர் தாவா காமிகள்
வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர்
மயலினி லுற்றவர் மோகா வாரிதி
யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
தருவிய
லுத்தர்கள் மாடா மாமதி ...... மிக்முழ்கி
தருபர வுத்தம வேளே சீருறை
அறுமுக நற்றவ லீலா கூருடை
அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக
சரவண வெற்றிவி நோதா மாமணி
தருமர வைக்கடி நீதா வாமணி
மயிலுறை
வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ......
தொதிதீதோ
தெனவரி மத்தள மீதார் தேமுழ
திடுவென மிக்கியல் வேதா வேதொழு
திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம்
உ ரை செயு முத்தம வீரா
நாரணி
உ மையவ ளுத்தர பூர்வா காரணி
உ றுஜக ரக்ஷணி நீரா வாரணி ......
தருசேயே
உ யர்வர முற்றிய கோவே யாரண
மறைமுடி வித்தக தேவே காரண
ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 698 ( திருவான்மியூர் )
ராகம் -
தர்மவதி
தாளம் - அங்கதாளம் (5)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதான தானதன தனதான தானதன
தனதான தானதன ...... தனதான
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
குடிலான ஆல்வயிறு ......
குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
குழல்கார தானகுண ......
மிலிமாதர்
புசவாசை யால்மனது உ னைநாடி டாதபடி
புலையேனு லாவிமிகு
...... புணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமல
...... ரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
நிகழ்பொத மானபர
...... முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
நிபுணாநி சாசரர்கள்
...... குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
சிவநாத
ராலமயில் ...... அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.
பாடல் 699 ( கோசைநகர் )
ராகம் -....; தாளம்
-
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன ...... கலைலீலை
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய ...... னலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை ...... நலமாக
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள ...... வருவாயே
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில ...... பரமேசர்
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர் ...... குலகாலா
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமுற வீறிவரு ...... குமரேசா
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
வேசமுரு காவமரர் ...... பெருமாளே.
பாடல் 700 ( பெருங்குடி )
ராகம் - ....;
தாளம் -
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனந்தன ...... தனதான
தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ் ......
தசமாதஞ்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர்
...... சிலகாலந்
துலங்கு நலபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி
லுடன்தம ...... க்ருகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ
இலங்கையி லிலங்கிய இலங்களு
ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி
இடுங்கனல் குரங்கொடு
நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே
பெலங்கொடு
விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலுரா
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை
...... பெருமாளே.
பாடல் 701 ( மாடம்பாக்கம் )
ராகம் - ....;
தாளம் -
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா
தானன ...... தனதான
தோடு றுங் குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக
ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே
தூம மென்குழ
லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக
ளாலே கோலிய ...... விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய
ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ
நாட ருஞ்சுடர்
தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு
நாதா ஆறிரு ...... புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள்
வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன்
வாச கம்பிற
வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள்
...... பெருமாளே.
பாடல் 702 ( மாடம்பாக்கம் )
ராகம் - ....;
தாளம் -
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
------ 3 முறை
------ ...... தனதனா தனனா
விலைய றுக்கவு முலைம றைக்கவு
மணந்துன்
றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
விடங்கஞ் சஞ்ச
ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
நிணந்துன் றுஞ்ச லம்பா ......
யுதிரநீ ருடனே
வெளியி னிற்கவும் வலிய முட்டரை
யெதிர்ந்தும் பின்தொ
டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
திரும்பும் பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா
யலின்மேல்
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
நயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தற
முனிந்தங் கொன்று கண்டே
கலக
மிட்டவ ரகல டித்தபின்
வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்
குணங்கண் டுந்து ளங்கா
மனித
னிற்சிறு பொழுது முற்றுற
நினைந்துங் கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு
தற்கறி
விலன் பொங்கும் பெரும்பா ...... தகனையா ளுவையோ
சிலைத னைக்கொடு
மிகஅ டித்திட
மனந்தந் தந்தண ந்தா
மரைம லர்ப்பிர மனைந டுத்தலை
யரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
சிவன்பங்
கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா
செருவி டத்தல கைகள் தெனத்தென
தெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
டிகுண்டிங்
குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி
குண்டீ ...... யெனஇரா வணனீள்
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு
மிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்பட
வெகுண்டம்
பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்
திறந்தங் கம்பி ளந்தே
...... மயிலின்மேல் வருவாய்
வயல்க ளிற்கய லினமி குத்தெழு
வரம்பின்
கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்தில
நிறைந்தெங் குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளைய
நாயகனே.
பாடல் 703 ( கோடைநகர் )
ராகம் - மாயா மாளவ
கெளளை
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1
1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி யி ருந்து
ஆகமல மாகி நின்று ......
புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று
...... விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில்
வேணு மென்று ...... பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழவெளநேரகெய் தாம
லுன்றன்
பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே
சீதைகொடு போகு மந்த
ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.
தேவர்முநி
வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் ...... முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த ......
குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ
வந்த ...... பெருமாளே.
பாடல் 704 ( கோடைநகர் )
ராகம் -
தாளம்
-
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து ......
புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து
...... விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன
மீத ணைந்து ...... பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம
லொன்று
பாதமலர் சேர அன்பு ...... தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை
நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே
ஆனைமடு வாயி லன்று
மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே
கோலமலர் வாவி
யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட ...... குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த ......
பெருமாளே.
பாடல் 705 ( கோடைநகர் )
ராகம் - ...; தாளம்
-
தானா தானா தானா தானா
தானா தானா ...... தனதானா
ஏறா னாலே
நீறாய் மாயா
வேளே வாசக் ...... கணையாலே
ஏயா வேயா மாயா வேயா
லாமே
ழோசைத் ...... தொளையாலே
மாறா யூறா யீறாய் மாலாய்
வாடா மானைக் ......
கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்
வாடா நீபத் ...... தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
சீரார் தோகைக் ...... குமரேசா
தேவா
சாவா மூவா நாதா
தீரா கோடைப் ...... பதியோனே
வேறாய் மாறா யாறா மாசூர்
வேர்போய் வீழப் ...... பொருதோனே
வேதா போதா வேலா பாலா
வீரா வீரப்
...... பெருமாளே.
பாடல் 706 ( கோடைநகர் )
ராகம் - ஹம்ஸாநந்தி
தாளம் - அங்கதாளம் (10)
(மிஸ்ர ஜம்பை /7 யு 0)
தகிட தக திமி-3
1/2, தகிட தக திமி-3 1/2, தகதிமிதக-3
தான தந்த தனத்த தத்த ...... தனதானா
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே
நாளும் வஞ்சி
யருற்று ரைக்கும் ...... வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த
...... ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த
றித்த ...... பெருமாளே.
பாடல் 707 ( கோடைநகர் )
ராகம் - பிருந்தாவன
ஸாரங்கா
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி தகதிமி-4, தகிட தகதிமி-3
1/2
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன
தந்த தந்தன ...... தனதான
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய
நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல்
வாழநி னைந்துவ
ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த
குண்டர்கள் ...... வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி
...... விழுவாரே
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப
ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன்
ஈடழி யும்படி
சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராம சரந்தொடு புங்க வன்திரு
...... மருகோனே
கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலுரா
கோமள அண்டர்கள் தொண்டர்
மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர்
...... பெருமாளே.
பாடல் 708 ( கோடைநகர் )
ராகம் - ...; தாளம்
-
தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதான
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
சூழ்துற் றார்துற் ...... றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்
சூலப் பாசச் ...... சமனாரும்
பாடைக்
கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட் ...... டழியாதே
பாசத் தேனைத்
தேசுற் றார்பொற்
பாதத் தேவைத் ...... தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோ டத்
தோயத்
தாரச் சீறிப் ...... பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத் ...... தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப்
பாடித் ...... திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப்
...... பெருமாளே.
பாடல் 709 ( கோடைநகர் )
ராகம் - ....;
தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த ......
தனதான
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச
மென்று ...... நிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத
லைந்து
ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக
யோகச்ச மாதி கொண்டு
மோகப்ப சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ
வீசப்ப
யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று ......
விழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த
...... சிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ
வந்த ...... பெருமாளே.
பாடல் 710 ( திருப்பேர்ருர் )
ராகம் - ...;
தாளம் -
தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன
தனத்தா
தானன தானா தானன ...... தனதான
அனுத்தே னேர்மொழி யாலே மாமய
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
லடுத்தே தூதுகள் நூறா றானதும் ......
விடுவார்கள்
அழைத்தே வீடினி லேதா னேகுவர்
நகைத்தே மோடிக ளாவார் காதலொ
டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின்
குனித்தே பாகிலை
யீவார் பாதியில்
கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது
குடிப்பார் தேனென நானா
லீலைகள் ...... புரிவார்கள்
குறித்தே மாமய லாலே நீள்பொருள்
பறிப்பா
ராசுகள் சூழ்மா பாதக
குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ...... அருள்வாயே
வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா
மலர்த்தே னோடையி
லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை
மனத்தா லேவிய மாமா லானவர்
...... மருகோனே
சினத்தே சூரர்கள் போராய் மாளவு
மெடுத்தோர் வேல்விடு
தீரா தாரணி
திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே
திருத்தேர்
சூழ்மதி ளேரார் தூபிக
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
திருப்போ ரூருறை தேவா
தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 711 ( திருப்பேர்ருர் )
ராகம் -
....; தாளம் -
தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
தனத்தா தான தந்த
...... தனதான
உ ருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
உ
கப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம்
உ ருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ
ளோதி கொண்ட
லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள்
அருக்கா மாதர்
தங்கள் வரைக்கே யோடி யின்ப
வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
அவத்தா லீன மின்றி ......
யருள்வாயே
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
யினைச்சூ டாதி
நம்பர் ...... புதல்வோனே
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா
செருக்கா லேமி குந்த கடற்சூர்
மாள வென்ற
திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே
தினைக்கோர் காவல்
கொண்ட குறத்தேன் மாது பங்க
திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 712 ( திருப்பேர்ருர் )
ராகம் -
....; தாளம் -
தான தானன தானன தான தானன தானன
தான தானன தானன ......
தனதான
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க லாமதி
...... முகமானார்
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய
கூர்விழி ...... குமிழ்நாசி
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர்
தூவிய
தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே
காரு லாவிய நீள்புன வேடர்
மால்வரை மீதுறை
காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே
காண ஆகம வேதபு
ராண நூல்பல வோதிய
கார ணாகரு ணாகர ...... முருகோனே
போரு லாவிய சூரனை
வாரி சேறெழ வேல்விடு
பூப சேவக மாமயில் ...... மிசையோனே
போதன் மாதவன்
மாதுமை பாதி யாதியு மேதொழு
போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.
பாடல் 713 ( திருப்பேர்ருர் )
ராகம் -
பந்து வராளி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2,
தகதிமி-2
தனன தானன தானன தனன தானன தானன
தனன தானன தானன ...... தனதான
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரிய ......
திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன் ......
மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி
...... தருகோவே
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவர் மாமக
ளாசைகொள் ...... மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன
பாளித ...... பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல
...... பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் ......
முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய ......
பெருமாளே.
பாடல் 714 ( உ த்தரம்ருர் )
ராகம் - காபி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகிட-1 1/2,
தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான
...... தனதான
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவேர்கள்
துகரி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர்
சொலவில் முடிவில்
முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமாரர் சரணர் சதகோடி
அரிய மயனு மொருகொடி ......
யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூர
...... அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர
சலதி அளறாக ...... முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உ திர
நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி
நளின வுபய கரவேலை
முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.
பாடல் 715 ( உ த்தரம்ருர் )
ராகம் -
ஸிந்து பைரவி
தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தான தந்த தான தந்த தான
தந்த தான தந்த
தான தந்த தான தந்த ...... தனதான
தோலெ லும்பு சீந
ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சொரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று
...... துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
னார ணங்க
ளாக மங்கள் ...... புகழ்தாளும்
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு
மங்கை
யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ
வால சந்த்ர சூடி
சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க
...... ளுறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை
யோடி யஞ்ச ...... அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.
பாடல் 716 ( உ த்தரம்ருர் )
ராகம் - ...;:
தாளம் -
தானனத் தனதான தானனத் தனதான
தானனத் தனதான ...... தனதான
நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
நேசமுற் றடியேனு
...... நெறிகெடாய்
நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே
பாழினுக் கிரையாய நாமம்வைத்
தொருகோடி
பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச
பாவியெப் படிவாழ்வ
னேயர்கட் குளதான
பார்வைசற் றருளோடு ...... பணியாயோ
ஆழியிற்
றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
மாகமப் பொருளோரு ...... மனைவோரும்
ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
மாயிரத் திருநூறு ......
மறையோரும்
வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
வாகுசித் திரதோகை ......
மயிலேறி
மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
மான்மகட் குளனான ......
பெருமாளே.
பாடல் 717 ( உ த்தரம்ருர் )
ராகம் - ....;
தாளம் -
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன
தத்தா தத்தன ...... தனதான
மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ......
விழிவேலில்
மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில்
மெய்த்தா மத்தினில்
வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
ஆகி
நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ
ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
ஆயி ரங்கலை கத்தா மத்திப
னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே
சாத னங்கொடு தத்தா மெத்தென
வேந டந்துபொய் பித்தா வுத்தர
மேதெ
னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே
தாழ்வில் சுந்தர னைத்தா
னொற்றிகொள்
நீதி தந்திர நற்சார் புற்றருள்
சால நின்றுச மர்த்தா வெற்றிகொ
...... ளரன்வாழ்வே
வேத முங்கரி யைச்சூழ் நித்தமும்
வேள்வி யும்புவி
யிற்றா பித்தருள்
வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ்
மேரு மங்கையி லத்தா வித்தக
வேலொ டும்படை குத்தா வொற்றிய
வேடர்
மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.
பாடல் 718 ( மதுராந்தகம் )
ராகம் - ....;
தாளம் -
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை ......
வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து
...... சுழலாதே
உ திதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கை
...... விதகீத
உ பயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று
...... தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல்
...... மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின்
...... மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த ......
குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ......
பெருமாளே.
பாடல் 719 ( மதுராந்தகம் )
ராகம் - பூர்வி
கல்யாணி
தாளம் - அங்கதாளம் (15)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1
1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பரிநன் ......
வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர் ...... உ
ரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த ......
வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்கு ......
றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்து
...... சுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்ட
...... முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த
சங்க்ர ...... மவிநோதா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த
மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 720 ( மதுராந்தகம் )
ராகம் - ....;
தாளம் -
தனதாந்தன தானன தந்தன
தனதாந்தன தானன தந்தன
தனதாந்தன தானன
தந்தன ...... தந்ததான
மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான
தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி
மயமாம்பல வான
கணங்குல
மெனப்ராந்தியும் யானென தென்றுறு
வணவாம்பிர மாத குணங்குறி ......
யின்பசார
இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா
இடவார்ந்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடாமங்கன தாளரு ளும்படி ...... யென்றுதானோ
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான
நடம்பயில் ...... எம்பிரானார்
தமதாஞ்சுத தாபர சங்கம
மெனவோம்புறு தாவன
வம்படர்
தகுதாம்பிர சேவித ரஞ்சித ...... வும்பர்வாழ்வே
முனவாம்பத
மூடிக வந்தன
முயல்வான்பிடி மாடிமை யைங்கரர்
முகதாம்பின மேவுறு சம்ப்ரம
...... சங்கணாறு
முககாம்பிர மோடமர் சம்பன
மதுராந்தக மாநக ரந்திகழ்
முருகாந்திர மோடம ரும்பர்கள் ...... தம்பிரானே.
பாடல் 721 ( சேயூர் )
ராகம் - ...; தாளம் -
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன ......
தனதான
முகிலாமெனும் வார்குழ லார்சிலை
புருவார்கயல் வேல்விழி
யார்சசி
முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர்
முலைமாலிணை கோபுர
மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய ......
மயில்போல்வார்
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழ லாவிடு பாவையர்
அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ
ககனார்பதி யோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி
நாகமு நூறிட ...... விடும்வேலா
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட
மேவிய
கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா
மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள் பட வேயயி லேவிய
வளவாபுரி
வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
பாடல் 722 ( திருவக்கரை )
ராகம் -
குந்தலவராளி
தாளம் - ஆதி
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன
...... தனதானா
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி
...... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ......
யிடைவீழா
உ லகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி ......
யடிநாயேன்
உ னதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத ......
மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ......
மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ......
மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ......
யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் ......
பெருமாளே.
பாடல் 723 ( திருவக்கரை )
ராகம் - ....;
தாளம் -
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன
தத்தன தத்தன தத்தன ...... தனதான
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட
...... நினைவோர்கள்
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
யொத்தந கைப்பில்வி
ழிப்பில்ம யக்கிகள்
பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யித்ழுறல்
எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்
இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர்
இச்சையி லிப்படி
நித்தம னத்துயர்
பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
இத்தொழி லிக்குணம்
விட்டிட நற்பத ...... மருள்வாயே
நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்
நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள
...... வணிமார்பர்
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
நட்டர வப்பணி
சுற்றிம தித்துள
நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே
கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா
கொத்தவிழ் பத்மம
லர்ப்பழ னத்தொடு
குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
கொட்புள நற்றிரு வக்கரை
யுற்றுறை ...... பெருமாளே.
பாடல் 724 ( சிறுவை )
ராகம் - ஸிந்து பைரவி
தாளம் - கண்டசாபு (2 1/2)
(எடுப்பு - 3/4 தள்ளி)
தந்ததன தனதான
தந்ததன தனதான
தந்ததன தனதான ...... தனதான
அண்டர்பதி குடியேற
மண்டசுரர் உ ருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ
டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு
முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ......
வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள
...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு
கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறருப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது
குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
பாடல் 725 ( சிறுவை )
ராகம் - கேதாரம்
தாளம் - அங்கதாளம் (8 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகதிமி
தகதிமி-4, தகதகிட-2 1/2, தகதிமி-2
தானன தானன தானான தானன
தானன தானன
தானான தானன
தானன தானன தானான தானன ...... தனதான
சீதள வாரிஜ பாதாந
மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ணதாந மோநம ...... மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம
கீபாந மோநம ...... கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோ
ராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
பார்வதி யாள்தரு
பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம ......
அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில
மேழினு மோலான நாயக ...... வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி
வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
பாடல் 726 ( சிறுவை )
ராகம் - பீம்பளாஸ்
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத
துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்
பெருகு தீய
வினையி னொந்து கதிக டோ று மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை
...... யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன
தாக அடிய னென்று ...... பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத
பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்
பொருவி லாம
லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த ......
முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி
ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி
குந்த
சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.
பாடல் 727 ( சிறுவை )
ராகம் - ...; தாளம் -
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன
...... தனதான
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள்
மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி
வேளை
யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி
லேயுழல் ...... சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர
னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே
வாழ்த ருஞ்சிவ
போகந னூனெறி
யேவி ரும்பி வினாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர்
...... களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி
யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ......
முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.
பாடல் 728 ( திருவாமாத்தூர் )
ராகம் -
....; தாளம் -
தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன ......
தனதான
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி
யாலு மாலெனு ...... மதவேழத்
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந்
துடியிடை யாலும் வாலர்கள