|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > தண்டியலங்காரம் (தண்டியாசிரியர்)

Etext input & Proof-reading: Mr. N.D. Logasundaram & his daughter Ms. Selvanayagi, Chennai, Tamilnadu, India web version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu.
© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
மூலம்
1. பொதுவணியியல்
தற்சிறப்புப் பாயிரம்
1. சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி நூல்
செய்யுள்வகை
2. செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின் முத்தகச்செய்யுள்
3. அவற்றுள், குளகச் செய்யுள்
4. குளகம் பலபாட் டொருவினை கொள்ளும்.
தொகைநிலைச் செய்யுள்
5. தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின் தொடர்நிலைச் செய்யுள்
6. பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை
பொருள்தொடர்நிலைச் செய்யுளின் பகுப்பு
7. பெருங்காப் பியமே காப்பிய மென்றாங் பெருங்காப்பியம்
8. அவற்றுள், பெருங்காப்பிய இலக்கணத்திற்கு ஓரு புறநடை
9. கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும் காப்பியம்
10. அறமுத னான்கினுங் குறைபா டுடையது காப்பியங்கட்கோர் இலக்கணம்
11. அவைதாம், சொற்றொடர்நிலைச் செய்யுள்
12. செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே.
செய்யுள்நெறி
13. மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு வைதருப்பநெறி
14. செறிவே தெளிவே சமநிலை யின்பம் கெளடநெறி
15. கெளட மென்பது கருதிய பத்தொடும் 16. செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை.
தெளிவு
17. தெளிவெனப் படுவது பொருள் புலப்பாடே.
சமநிலை
18. விரவத் தொடுப்பது சமநிலை யாகும்.
இன்பம்
19. சொல்லினும் பொருளினும் சுவைபட லின்பம்.
ஒழுகிசை
20. ஒழுகிசை யென்பது வெறுத்திசை யின்மை.
உதாரம்
21. உதார மென்ப தோதிய செய்யுளிற் உய்த்தலில் பொருண்மை
22. கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற் காந்தம்
23. உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம்
வலி
24. வலியெனப் படுவது தொகைமிக வருதல்.
சமாதி
25. உரியபொரு ளின்றி யொப்புடைப் பொருண்மேற் இவ்வியலுக்குப் புறநடை
26. ஏற்ற செய்யுட் கியன்ற வணியெலாம் 2. பொருளணியில்
காப்பு
என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கும் பொருளணிகள்
28. தன்மை யுவமை யுருவகந் தீவகம் தன்மையணி
29. எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்கும் 30. அதுவே, உவமையணி
31. பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின் உவமை வகை
32. அதுவே, 33. அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம் 34. மிகுதலுங் குறைதலுங் தாழ்தலுந் முயர்தலும் 35. போல மான புரையப் பொருவ உருவகவணி
36. உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித் 37. தொகையே விரியே தொகைவிரி யெனாஅ 38. உவமை யேது வேற்றுமை விலக்கே புறநடை
39. உருவக முவமை யெனவிரு திறத்தவும் தீவகவணி
40. குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல் 41. அதுவே, பின்வருநிலையணி
42. முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற் முன்னவிலக்கணி
43. முன்னத்தின் மருப்பினது முன்ன விலக்கே 44. அதுவே, 45. வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி இதுவுமது
46. வேற்றுப்பொருள் சிலேடை யேதுவென் றின்னவை வேற்றுப்பொருள் வைப்பணி
47.முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப் 48. முழுவதுஞ் சேற லொருவழிச் சேறல் வேற்றுமையணி
49.கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள் 50. அதுவே, விபாவனையணி
51.உலகறி காரண மொழித்தொன் றுரைப்புழி ஒட்டணி
52. கருதிய பொருடொத் ததுபுலப் படுத்தற் ஒட்டணி வகை
53. அடையும் பொருளு மயல்பட மொழிதலும் அதிசயவணி
54. மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி அதிசயவணி வகை
55. அதுதான், தற்குறிப்பேற்றவணி
56. பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினும் 57. அன்ன போலெனு மவைமுத லாகிய ஏதுவணி
58. யாதன் திறத்தினு மிதனினிது விளைந்தென் 59. முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியும் ஞாபகவேது
60. அவையல பிறவி னறிவது ஞாபகம்.
அபாவவேது
61. அபாவந் தானு மதன்பாற் படுமெ.
62. என்று மபாவமு மின்மய தபாவமும் சித்திரவேது
63. தூர காரியமு மொருங்குடன் றோற்றமும் நுட்பவணி
64. தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினும் இலேசவணி
65. குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின் இதுவுமது
66. புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் நிரனிறையணி
67. நிரனிருத் தியற்றுத னிரனிறை யணியே.
ஆர்வமொழியணி
68. ஆர்வ மொழிமிகுப்ப தார்வ மொழியே.
சுவையணி
69. உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற 70. அவைதாம், தன்மேம்பாட்டுரையணி
71. தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.
பரியாயவணி
72. கருதியது கிளவா தப்பொரு டோ ன்றற் சமாகிதவணி
73. முந்துதான் முயல்வுறூஉந் தொழிற்பயன் பிறிதொன்று உதாத்தவணி
74. வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும் அவநுதியணி
75. சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை சிலேடையணி
76. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி 77. அதுவே, 78. ஒருவினை பலவினை முரண்வினை நியமம் விசேடவணி
79. குணந்தொழின் முதலிய குறைபடு தன்மையின் ஒப்புமைக்கூட்டவணி
80. கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத் 81. புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே.
விரோதவணி
82. மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை மாறுபடுபுகழ்நிலைவணி
83. கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு புகழாப் புகழ்ச்சியணி
84. பழிப்பது போலும் பான்மையின் மேன்மை நிதரிசனவணி
85. ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப் புணர்நிலையணி
86. வினைபண் பெனவிவை யிருபொருட் கொன்றே பரிவருத்தனையணி
87. பொருள் பரிமாறுதல் பரிவருத் தனையே.
வாழ்த்தணி
88. இன்னார்க் கின்ன தியைக வென்றுதா சங்கீரணவணி
89. மொழியப் பட்ட வணிபல தம்முள் உவமை உருவகங்கட்கு புறநடை
90. ஒப்புமை யில்லது மையமு முவமையிற் பாவிகவணி
91. பாவிக மென்பது காப்பியப் பண்பே.
3. சொல்லணியியல்
92. எழுத்தின் கூட்ட மிடைபிறி தின்றியும் 93. அதுதான், 94. ஆதி யிடைகடை யாதியோ டிடைகடை 95. ஓரடி யொழிந்தன தேருங் காலை 96. அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே.
97. ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப.
சித்திர கவி வறுமாறு
98. கோமூத் திரியே கூட சதுக்கம் வழுக்களின் வகைகள்
99. பிரிபொருட் சொற்றொடர் மாறுபடு பொருண்மொழி பிறன்கோட்கூறி மறுத்தல்
100. மேற்கோ ளேது வெடுத்துக் காட்டென பிரிபொருட் சொற்றொடர்
101. அவற்றுள், இதற்குச் சிறப்பு விதி
102. களியினும் பித்தினுங் கடிவரை யின்றே.
மாறுபடு பொருண் மொழி
103. மாறுபடு பொருண் மொழி முன்மொழிந் ததற்கு சிறப்பு விதி
104. காமமு மச்சமுங் கைம்மிகி னுரித்தே.
மொழிந்தது மொழிவு
105. மொழிந்தது மொழிவே கூறியது கூறி சிறப்பு விதி
106. விரைவினுஞ் சிறப்பிணும் வரைவின் றதுவே.
கவர்படு பொருண்மொழி
107. ஒருபொரு டுணிய வுரைக்க லுற்றசொல் சிறப்பு விதி
108. வழூஉப்பட லில்வழி வரைவின் றதுவே.
நிரனிறை வழு
109. ஒருநிரன் முன்வைத் ததன்பின் வைக்கும் சிறப்பு விதி
110. உய்த்துணர வரும்வழி யவவாறு முரித்தே.
சொல் வழு
111. சொல்வழு வென்பது சொல்லிலக் கணத்தொடு சிறப்பு விதி
112. வழக்கா றாயின் வழுவின் றதுவெ.
யதி வழு
113. யதிவழு வென்ப தோசை யறுவழி சிறப்பு விதி
114. வகையுளி யுரைப்புழி வரைவின் றதுவே.
செய்யுள் வழு
115. செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ சிறப்பு விதி
116. ஆரிடத் துள்ளு மவைபோல் பவற்றுளு சந்தி வழு
117. சந்தி வழுவே யெழுத்திலக் கணத்துச் சிறப்பு விதி
118. இரண்டாம் வேற்றுமைக் கெதிர்மறுத்தும் வருமே.
மலைவு
இடமலைவு
119. இடமென படுபவ மலைநாடி யாறே.
கால மலைவு
120. காலம் பொழுதொடு பருவமென் றிரண்டே.
கலை மலைவு
121. கலையெனப் படுபவை காண்டக விரிப்பிற் உலக மலைவு
122. உலகெனப் படுவதீண் டொழிக்கின் மேற்றே.
நியாய மலைவு
123. நியாய மென்பது நெறியுறக் கிளக்கின் ஆகம மலைவு
124. ஆகம மென்பன மநுமுத லாகிய இடமலைவு முதலியவற்றிற்கு சிறப்பு விதி
125. கூறிய நெறியி னாறுவகை மலைவு
நாடக வழக்கி னாட்டுதற் குரிய.
புறநடை
126. மெய்பெற விரித்த செய்யுட் டிறனு
சிந்தைவைத் தியம்புவல் செய்யுட்
கணியே.
முத்தகங் குளகந் தொகைதொடர்
நிலையென
எத்திறத் தனவு மீரிண் டாகும்.
முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்.
ஒருவ ருரைத்தவும் பல்லோர்
பகர்ந்தவும்
பொருளிடங் காலந் தொழிலென நான்கினும்
பாட்டினு மளவினுங்
கூட்டிய வாகும்.
கிரண்டா யியலும் பொருள்தொடர்
நிலையே.
பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம்
வருபொரு ளிவற்றினொன்
றேற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள்
பயக்கு நடைநெறித் தாகித் - 5
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்ததாய்
மலைகட
னாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமேன் றினையன புனைந்து
நன்மணம்
புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல் - 10
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற்
களித்தலென்
றின்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரத் தூது செலவிகல்
வென்றி
சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம் - 15
பரிசசேத மென்னும்
பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர்
புனையும் பெற்றிய தென்ப.
வேறுபா டின்றென விளம்பினர்
புலவர்.
காப்பிய மென்று கருதப் படுமே.
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையம்
பாடையும் விரவியும் வருமே.
வைதருப் பம்மே கெளட
மென்றாங்
கெய்திய நெறிதா மிருவகைப் படுமே.
ஒழுகிசை யுதார முய்த்தலில் பொருண்மை
காந்தம் வலியே சமாதி யென்றாங்
காய்ந்த வீரைங் குணனு முயிரா
வாய்ந்த
வென்ப வைதருப் பம்மே.
கூடா தியலுங் கொள்கைத் தென்ப.
குறிப்பி னொருபொரு ணெறிப்படத் தோன்றல்
குரியசொல் லுடைய துய்த்தலில்
பொருண்மை.
றரும்வினைப் புணர்ப்பது
சமாதியாகும்.
முற்ற வுணர்த்தும் பெற்றிய
தருமையிற்
காட்டிய நடைநெறி கடைபிடித் திவற்றொடு
கூட்டி யுணர்த
லான்றோர் கடனே.
அன்னை யுடைய வடித்தளிர்கள்
- இன்னளிசூழ்
மென்மலர்க்கே கன்று மெனவுரைப்பர் மெய்யிலா
வன்மனத்தே
தங்குமோ வந்து.
பின்வரு நிலையே முன்ன
விலக்கே
வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை
ஒட்டே யதிசயந்
தற்குறிப் பேற்றம்
ஏது நுட்ப மிலேச நிரனிரை
ஆர்வ மொழிசுவை தன்மேம்
பாட்டுரை
பரியா யம்மே சமாயித முதாத்தம்
அரிதுண ரவநுதி சிலேடை
விசேடம்
ஒப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோதம்
மாறுபடு புகழ்நிலை புகழாப்
புகழ்ச்சி
நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே
வாழ்த்தொடு சங்கீ ரணம்பா
விகமிவை
ஏற்ற செய்யுட் கணியே ழைந்தே.
சொன்முறை தொடுப்பது தன்மை
யாகும்.
பொருள்குணஞ் சாதி தொழிலொடு புலனாம்.
ஒன்றும் பலவும் பொருளொடு
பொருள்புணர்த்
தொப்புமை தோன்றச் செப்புவ துவமை.
விரியே தொகையே யிதர விதரம்
உரைபெரு சமுச்சய முண்மை
மறுபொருள்
புகழ்த னிந்தை நியம மநியமம்
ஐயந் தெரிதரு தேற்ற மின்சொல்
எய்திய விபரீத மியம்புதல் வேட்கை
பலபொருள் விகார மோக
மபூதம்
பலவயிற் போலி யொருவயிற் போலி
கூடா வுவமை பொதுநீங்
குவமை
மாலை யென்னும் பால தாகும்.
ஒப்புமைக் கூட்டந் தற்குறிப்
பேற்றம்
விலக்கே யேதுவென வேண்டவும் படுமே.
பான்மாறு படுதலும்
பாகுபா டுடைய.
நேரக் கடுப்ப நகர நகர்ப்ப
ஏர வேய மலைய
வியைய
ஒப்ப வெள்ள வுறழ வேர்ப்ப
அன்ன வனைய வமர வாங்க
என்ன விகல விழைய
வெதிரத்
துணைதூக் காண்டாங்கு மிகுதகை வீழ
இணைசிவண் கேழற்றுச் செத்தொடு
பிறவு
நவைதீர் பான்மை யுவமைச் சொல்லே.
தொன்றன மாட்டினஃ துருவக
மாகும்.
இயைபே யியைபிலி வியநிலை
யெனாஅச்
சிறப்பே விரூபகஞ் சமாதா னமெனாஅ
உருவக மேக மநேகாங்
கமெனாஅ
முற்றே யவயவ மவயவி யெனாஅச்
சொற்றவைம் மூன்று மற்றதன் விரியே.
அவநுதி சிலேடையென் றவற்றொடும் வருமே.
நிறம்ப வுணர்த்தும் வரம்புதமக்
கின்மையிற்
கூறிய நெறியின் வேறுபட வருபவை
தேறினர் கோடல் தெள்ளியோர்
கடனே.
ஒருவயி னின்றும் பலவயிற்
பொருடரிற்
றீவகஞ் செய்யுண் மூவிடத் தியலும்.
மாலை விருத்த மொருபொருள் சிலேடையென
நால்வகை யானு
நடைபெறு மென்ப.
பின்வரு மென்னிற் பின்வரு
நிலையே.
மூவகை காலமு மேவிய தாகும்.
பொருள்குணங் காரணங் காரியம் புணரும்.
துணைசெயல் முயற்சி பரவச
முபாயம்
கையற லுடன்படல் வெகுளி யிரங்கல்
ஐய மென்றாங் கறிந்தனர் கொளலே.
மேற்கூ றியற்கையின்
விளங்கித் தோன்றும.
பின்னொரு பொருளை யுலகறி
பெற்றி
ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே.
முரணித் தோன்றல் சிலேடையின்
முடித்தல்
கூடா வியற்கை கூடு மியற்கை
இருமை யியற்கை விபரீதப்
படுத்தலென்
றின்னவை யெட்டு மதன தியல்பே.
வேற்றுமைப் படவரின்
வேற்றுமை யதுவே.
குணம்பொருள் சாதி தொழிலொடும் புணரும்.
வேறொரு காரண மியல்பு குறிப்பின்
வெளிப்பட உரைப்பது விபாவனை யாகும்.
கொத்ததொன் றுரைப்பினஃ தொட்டென
மொழிப.
அடைபொது வாக்கி யாங்ஙன
மொழிதலும்
விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்
எனநால் வகையினு
மியலு மென்ப.
உலகுவரம் பிறவா நிலைமைத்
தாகி
ஆன்றோர் வியப்ப தோன்றுவ ததிசயம்.
பொருள்குணந் தொழிலைந் துணிவே திரிபெனத்
தெருளுறத்
தோன்று நிலைமைய தென்ப.
இயல்பின் விளைதிற னன்றி
யயலொன்று
தான்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம்.
சொன்னிலை விளக்குந் தோற்றமு முடைத்தே.
றேதுவிதந் துரைப்ப தேது
வதுதான்
காரக ஞாபக மெனவிரு திறப்படும்.
ஏற்பது நீக்கமு மெனவிவை
காரகம்.
ஒன்றினொன் றபாவமு முள்ளத னபாவமும்
அழிவுபாட் டபாவமு மெனவைந் தபாவம்.
காரண முந்துறூஉங் காரிய
நிலையும்
யுத்தமு மயுத்தமு முத்தையோ டியலும்.
அரிதுணர் வினைத்திற
நுட்ப மாகும்.
மறைத்துரை யாட லிலேச
மாகும்.
பழிப்பது போலப் புகழ்புலப்
படுத்தலும்
அவையு மன்னதென் றறைகுந ருளரே.
எண்வகை மெய்ப்பாட்டி னியல்வது
சுவையே.
வீர மச்ச மிழிப்பொடு வியப்பே
காம மவல முருத்திர
நகையே.
பிரிதொன் றுரைப்பது பரியா யம்மே.
தந்ததா முடிப்பது
சமாகித மாகும்.
உயர்ச்சிபுனைந் துரைப்ப
துதாத்த மாகும்.
மறுத்துப் பிறிதுரைப்ப
தவநுதி யாகும்.
தெரிதர வருவது சிலேடை யாகும்.
செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.
நியம விலக்கு விரோத
மவிரோதம்
எனவெழு வகையினு மியலு மென்ப.
மேம்பட வொருபொருள்
விளம்புதல் விசேடம்.
தொருபொரு ளுரைப்ப தொப்புமைக்
கூட்டம்.
விளைவுதர வுரைப்பது விரோத
மாகும்.
வேறொன்று புகழ்வது மாறுபடு
புகழ்நிலை.
புலப்பட மொழிவது புகழாப்
புகழ்ச்சி.
புகழ்மை தீமை யென்றிவை
புலப்பட
நிகழ்வ தாயி னிதரிசன மதுவே.
புணர மொழிவது புணர்நிலை யாகும்.
முன்னியது கிளத்தல் வாழ்தென
மொழிய.
டழுவ வுரைப்பது சங்கீ ரணமே.
செப்பிய திறமு முவமை
யுருவகமும்
உருவகத் தடக்கலு முணர்ந்தனர் கொளலே.
பெயர்த்தும்வேறு பொருடரின்
மடக்கெனும் பெயர்த்தே.
ஓரடி முதலா நான்கடி காறும்
சேரு மென்ப தெளிந்திசி
னோரே.
இடையொடு கடைமுழு தெனவெழு வகைத்தே.
இணைமுதல் விகற்ப மேழு
நான்கும்
அடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும்.
மாலை மாற்றே யெழுத்து வருத்தனம்
நாக
பந்தம் வினாவுத் தரமே
காதை கரப்பே கரந்துரைச் செய்யுள்
சக்கரஞ்
சுழிகுளஞ் சருப்பதோ பத்திரம்
அக்கரச் சுதகமு மவற்றின் பால.
மொழிந்தது மொழிவே கவர்படு
பொருண்மொழி
நிரனிறை வழுவே சொல்வழு யதிவழு
செய்யுள் வழுவொடு சந்தி
வழுவென
வெய்திய வொன்பது மிடனே காலம்
கலையே யுலக நியாய
மாகம
மலைவுமுள் ளுறுத்தவும் வரைந்தனர் புலவர்.
ஆற்றுளிக் கிளக்கு மவற்றது
வழுநிலை
நிரம்ப வுணர்த்த வரம்பில வென்ப.
பிரிபொருட் சொற்றொடர் செய்யுண் முழுவதும்
ஒருபொருள்
பயவா தொரீஇத் தோன்றும்.
மாறுபடத் தோன்றி வருமொழித்
தாகும்.
வேறுபட வொருபொருள் விளங்கா
தாகும்.
இருபொருட் கியைவது கவர்படு
பொருண்மொழி.
நிரனிறை பிறழ்வது நிரனிறை
வழுவே.
புல்லா தாகிய புகர்படு
மொழியே.
நெறிப்பட வாரா நிலைமைய தென்ப.
டெய்த லில்லா வியல்பிற் றாகும்.
நேரு மென்ப நெறியுணர்ந் தோரே.
சந்தியொடு முடியாத் தன்மைத்
தாகும்.
காமமும் பொருளு மேமுறத்
தழுவி
மறுவறக் கிளத்த வறுபத்து நான்கே.
அளவயிற் றெளிக்கும்
விளைபொருட் டிறமே.
அறனொடு புணர்ந்த திறனறி நூலே.
மெய்திய நெறியு மீரைங்
குணனும்
ஐயெழு வகையி னறிவுறு மணிய
மடியினுஞ் சொல்லினு மெழுத்தினு
மியன்று
முடிய வந்த மூவகை மடக்கும்
கோமூத் திரிமுதற் குன்றா மரபி
னேமுற மொழிமிறைக் கவியீ ராறு
மிவ்வகை யியற்றுதல் குற்ற
மிவ்வகை
யெய்த வியம்புத லியல்பென மொழிந்த
வைவகை முத்திறத் தாங்கவை
யுளப்பட
மொழிந்த நெறியி னொழிந்தவுங் கோட
லான்ற காட்சிச் சான்றோர் கடனே.