|
அகர முதல
எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. |
1 |
|
கற்றதனால் ஆய
பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
|
2 |
|
மலர்மிசை ஏகினான்
மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். |
3 |
|
வேண்டுதல்
வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
|
4 |
|
இருள்சேர்
இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார்
மாட்டு. |
5 |
|
பொறிவாயில்
ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
|
6 |
|
தனக்குவமை
இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல்
அரிது. |
7 |
|
அறவாழி அந்தணன்
தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. |
8 |
|
கோளில் பொறியின்
குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
|
9 |
|
பிறவிப்
பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
|
10 |
|
|
|
|
1.1.2 வான்சிறப்பு |
|
|
|
|
|
வான்நின்று உலகம்
வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. |
11 |
|
துப்பார்க்குத்
துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
|
12 |
|
விண்இன்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
|
13 |
|
ஏரின் உழாஅர்
உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
|
14 |
|
கெடுப்பதூஉம்
கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம்
மழை.
|
15 |
|
விசும்பின்
துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
|
16 |
|
நெடுங்கடலும்
தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.
|
17 |
|
சிறப்பொடு பூசனை
செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
|
18 |
|
தானம்
தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். |
19 |
|
நீர்இன்று
அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது
ஒழுக்கு.
|
20 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஒழுக்கத்து
நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. |
21 |
|
துறந்தார் பெருமை
துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. |
22 |
|
இருமை
வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. |
23 |
|
உரனென்னும்
தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர்
வித்து.
|
24 |
|
ஐந்தவித்தான்
ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
|
25 |
|
செயற்கரிய
செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். |
26 |
|
சுவைஒளி ஊறுஓசை
நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. |
27 |
|
நிறைமொழி மாந்தர்
பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். |
28 |
|
குணமென்னும்
குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. |
29 |
|
அந்தணர் என்போர்
அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். |
30 |
|
சிறப்பு ஈனும்
செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. |
31 |
|
அறத்தினூஉங்கு
ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. |
32 |
|
ஒல்லும் வகையான்
அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். |
33 |
|
மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. |
34 |
|
அழுக்காறு
அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். |
35 |
|
அன்றறிவாம்
என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. |
36 |
|
அறத்தாறு இதுவென
வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. |
37 |
|
வீழ்நாள் படாஅமை
நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். |
38 |
|
அறத்தான் வருவதே
இன்பம் மற் றெல்லாம் புறத்த புகழும் இல. |
39 |
|
செயற்பால தோரும்
அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. |
40 |
|
இல்வாழ்வான்
என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. |
41 |
|
துறந்தார்க்கும்
துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. |
42 |
|
தென்புலத்தார்
தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல்
தலை. |
43 |
|
பழியஞ்சிப்
பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். |
44 |
|
அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. |
45 |
|
அறத்தாற்றின்
இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்? |
46 |
|
இயல்பினான்
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. |
47 |
|
ஆற்றின் ஒழுக்கி
அறனிழுக்கா இல்வாழ் க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. |
48 |
|
அறன் எனப் பட்டதே
இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. |
49 |
|
வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப்
படும். |
50 |
|
மனைக்தக்க
மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்
துணை. |
51 |
|
மனைமாட்சி
இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். |
52 |
|
இல்லதென் இல்லவள்
மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? |
53 |
|
பெண்ணின்
பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். |
54 |
|
தெய்வம் தொழாஅள்
கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. |
55 |
|
தற்காத்துத்
தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். |
56 |
|
சிறைகாக்கும்
காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. |
57 |
|
பெற்றாற்
பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும்
உலகு. |
58 |
|
புகழ்புரிந்த
இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. |
59 |
|
மங்கலம் என்ப
மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. |
60 |
|
பெறுமவற்றுள்
யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. |
61 |
|
எழுபிறப்பும்
தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். |
62 |
|
தம்பொருள்
என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்.
|
63 |
|
அமிழ்தினும் ஆற்ற
இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.
|
64 |
|
மக்கள்மெய்
தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம்
செவிக்கு. |
65 |
|
குழல் இனிது
யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். |
66 |
|
தந்தை மகற்காற்று
நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். |
67 |
|
தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. |
68 |
|
ஈன்ற பொழுதின்
பெரிதவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். |
69 |
|
மகன்தந்தைக்கு
ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல். |
70 |
|
அன்பிற்கும்
உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். |
71 |
|
அன்பிலார்
எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. |
71 |
|
அன்போடு இயைந்த
வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. |
73 |
|
அன்பு ஈனும்
ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. |
74 |
|
அன்புற்று
அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. |
75 |
|
அறத்திற்கே
அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. |
76 |
|
என்பி லதனை
வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். |
77 |
|
அன்பகத் தில்லா
உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. |
78 |
|
புறத்துறுப்
பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை அகத்துறுப்பு அன்பி
லவர்க்கு. |
79 |
|
அன்பின் வழியது
உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. |
80 |
|
இருந்தோம்பி
இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. |
81 |
|
விருந்து
புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண் டற்பாற்
றன்று. |
82 |
|
வருவிருந்து
வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. |
83 |
|
அகனமர்ந்து
செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். |
84 |
|
வித்தும்
இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். |
85 |
|
செல்விருந்து
ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத்
தவர்க்கு. |
86 |
|
இனைத்துணைத்
தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். |
87 |
|
பரிந்தோம்பிப்
பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். |
88 |
|
உடைமையுள் இன்மை
விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. |
89 |
|
மோப்பக் குழையும்
அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து. |
90 |
|
|
|
இன்சொலால் ஈரம்
அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். |
91 |
|
அகன்அமர்ந்து
ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். |
92 |
|
முகத்தான் அமர்ந்
துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். |
93 |
|
துன்புறூஉம்
துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ
லவர்க்கு. |
94 |
|
பணிவுடையன்
இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. |
95 |
|
அல்லவை தேய
அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் |
96 |
|
நயன் ஈன்று நன்றி
பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். |
97 |
|
சிறுமையுவு
நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். |
98 |
|
இன்சொல்
இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது? |
99 |
|
இனிய உளவாக
இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. |
100 |
|
செய்யாமல் செய்த
உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. |
101 |
|
காலத்தி
னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. |
102 |
|
பயன்தூக்கார்
செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. |
103 |
|
தினைத்துணை நன்றி
செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். |
104 |
|
உதவி வரைத்தன்று
உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
105 |
|
மறவற்க மாசற்றார்
கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. |
106 |
|
எழுமை
எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. |
107 |
|
நன்றி மறப்பது
நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. |
108 |
|
கொன்றன்ன இன்னா
செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். |
109 |
|
எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற
மகற்கு. |
110 |
|
தகுதி எனவொன்று
நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
|
111 |
|
செப்பம் உடையவன்
ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. |
112 |
|
நன்றே தரினும்
நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். |
113 |
|
தக்கார் தகவிலர்
என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். |
114 |
|
கேடும்
பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. |
115 |
|
கெடுவல்யான்
என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். |
116 |
|
கெடுவாக வையாது
உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. |
117 |
|
சமன்செய்து
சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்
கணி. |
118 |
|
சொற்கோட்டம்
இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். |
119 |
|
வாணிகம்
செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். |
120 |
|
அடக்கம் அமரருள்
உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். |
121 |
|
காக்க பொருளா
அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. |
122 |
|
செறிவறிந்து
சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். |
123 |
|
நிலையின்
திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. |
124 |
|
எல்லார்க்கும்
நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. |
125 |
|
ஒருநம்யுள்
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுநம்யும் ஏமாப் புடைத்து. |
126 |
|
யாகாவா ராயினும்
நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. |
127 |
|
ஒன்றானுந்
தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். |
128 |
|
தீயினாற்
சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. |
129 |
|
கதங்காத்துக்
கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின்
நுழைந்து. |
130 |
|
ஒழுக்கம்
விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். |
131 |
|
பரிந்தோம்பிக்
காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. |
132 |
|
ஒழுக்கம் உடைமை
குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். |
133 |
|
மறப்பினும்
ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக்
கெடும். |
134 |
|
அழுக்கா
றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. |
135 |
|
ஒழுக்கத்தின்
ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.
|
136 |
|
ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. |
137 |
|
நன்றிக்கு
வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை
தரும்.
|
138 |
|
ஒழுக்க
முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். |
139 |
|
உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் |
140 |
|
பிறன்பொருளாள்
பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
|
141 |
|
அறன்கடை
நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். |
142 |
|
விளிந்தாரின்
வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகு வார். |
143 |
|
எனைத்துணையர்
ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். |
144 |
|
எளிதென
இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. |
145 |
|
பகைபாவம் அச்சம்
பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
|
146 |
|
அறனியலான்
இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். |
147 |
|
பிறன்மனை நோக்காத
பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. |
148 |
|
நலக்குரியார்
யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார். |
149 |
|
அறன்வரையான் அல்ல
செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. |
150 |
|
அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
|
151 |
|
பொறுத்தல்
இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.
|
152 |
|
இன்நம்யுள் இன்மை
விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. |
153 |
|
நிறையுடைமை
நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். |
154 |
|
ஒறுத்தாரை ஒன்றாக
வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. |
155 |
|
ஒறுத்தார்க்கு
ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். |
156 |
|
திறனல்ல தற்பிறர்
செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.
|
157 |
|
மிகுதியான்
மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். |
158 |
|
துறந்தாரின்
தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். |
159 |
|
உண்ணாது நோற்பார்
பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். |
160 |
|
ஒழுக்காறாக்
கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. |
161 |
|
விழுப்பேற்றின்
அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். |
162 |
|
அறன்ஆக்கம்
வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். |
163 |
|
அழுக்காற்றின்
அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. |
164 |
|
அழுக்காறு
உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது. |
165 |
|
கொடுப்பது
அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக்
கெடும். |
166 |
|
அவ்வித்து
அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். |
167 |
|
அழுக்காறு எனஒரு
பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்.
|
168 |
|
அவ்விய
நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். |
169 |
|
அழுக்கற்று
அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும்
இல். |
170 |
|
நடுவின்றி
நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். |
171 |
|
படுபயன் வெஃகிப்
பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். |
172 |
|
சிற்றின்பம்
வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். |
173 |
|
இலமென்று
வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
|
174 |
|
அஃகி அகன்ற
அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். |
175 |
|
அருள்வெஃகி
ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். |
176 |
|
வேண்டற்க
வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். |
177 |
|
அஃகாமை
செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். |
178 |
|
அறனறிந்து வெஃகா
அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. |
179 |
|
இறலீனும் எண்ணாது
வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. |
180 |
|
அறங்கூறான் அல்ல
செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. |
181 |
|
அறனழீஇ அல்லவை
செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. |
182 |
|
புறங்கூறிப்
பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும். |
183 |
|
கண்ணின்று
கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல். |
184 |
|
அறஞ்சொல்லும்
நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். |
185 |
|
பிறன்பழி
கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். |
186 |
|
பகச்சொல்லிக்
கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். |
187 |
|
துன்னியார்
குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.
|
188 |
|
அறன்நோக்கி
ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. |
189 |
|
ஏதிலார்
குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும்
உயிர்க்கு. |
190 |
|
பல்லார் முனியப்
பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். |
191 |
|
பயனில
பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. |
192 |
|
நயனிலன் என்பது
சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. |
193 |
|
நயன்சாரா
நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. |
194 |
|
சீர்மை சிறப்பொடு
நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். |
195 |
|
பயனில் சொல்
பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். |
196 |
|
நயனில சொல்லினுஞ்
சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. |
197 |
|
அரும்பயன் ஆயும்
அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். |
198 |
|
பொருள்தீர்ந்த
பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். |
199 |
|
சொல்லுக சொல்லிற்
பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். |
200 |
|
தீவினையார்
அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. |
201 |
|
தீயவை தீய
பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். |
202 |
|
அறிவினுள்
எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். |
203 |
|
மறந்தும்
பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. |
204 |
|
இலன் என்று தீயவை
செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. |
205 |
|
தீப்பால
தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். |
206 |
|
எனைப்பகை
யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். |
207 |
|
தீயவை செய்தார்
கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. |
208 |
|
தன்னைத்தான் காதல
னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். |
209 |
|
அருங்கேடன்
என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். |
210 |
|
கைம்மாறு வேண்டா
கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு. |
211 |
|
தாளாற்றித் தந்த
பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. |
212 |
|
புத்தே
ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. |
213 |
|
ஒத்த தறவோன்
உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். |
214 |
|
ஊருணி நீர்நிறைந்
தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. |
215 |
|
பயன்மரம்
உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். |
216 |
|
மருந்தாகித்
தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். |
217 |
|
இடனில்
பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். |
218 |
|
நயனுடையான்
நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. |
219 |
|
ஒப்புரவி
னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. |
220 |
|
|
|
வறியார்க்கொன்று
ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. |
221 |
|
நல்லாறு எனினும்
கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. |
222 |
|
இலனென்னும்
எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. |
223 |
|
இன்னாது இரக்கப்
படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. |
224 |
|
ஆற்றுவார் ஆற்றல்
பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். |
225 |
|
அற்றார் அழிபசி
தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. |
226 |
|
பாத்தூண் மரீஇ
யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. |
227 |
|
ஈத்துவக்கும்
இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். |
228 |
|
இரத்தலின்
இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். |
229 |
|
சாதலின் இன்னாத
தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. |
230 |
|
ஈதல் இசைபட
வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
|
231 |
|
உரைப்பார்
உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும்
புகழ்.
|
232 |
|
ஒன்றா உலகத்து
உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.
|
233 |
|
நிலவரை நீள்புகழ்
ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.
|
234 |
|
நத்தம்போல்
கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.
|
235 |
|
தோன்றின் புகழொடு
தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
|
236 |
|
புகழ்பட வாழாதார்
தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?
|
237 |
|
வசையென்ப
வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.
|
238 |
|
வசையிலா வண்பயன்
குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.
|
239 |
|
வசையொழிய
வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.
|
240 |
|
அருட்செல்வம்
செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
|
241 |
|
நல்லாற்றாள் நாடி
அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.
|
242 |
|
அருள்சேர்ந்த
நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.
|
243 |
|
மன்னுயிர் ஓம்பி
அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
|
244 |
|
அல்லல்
அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.
|
245 |
|
பொருள்நீங்கிப்
பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.
|
246 |
|
அருளில்ார்க்கு
அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி
யாங்கு.
|
247 |
|
பொருளற்றார்
பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.
|
248 |
|
தெருளாதான்
மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.
|
249 |
|
வலியார்முன்
தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து.
|
250 |
|
தன்னூன்
பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?
|
251 |
|
பொருளாட்சி
போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின்
பவர்க்கு.
|
252 |
|
படைகொண்டார்
நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.
|
253 |
|
ருளல்லது
யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்.
|
254 |
|
உண்ணாமை உள்ளது
உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு.
|
255 |
|
தினற்பொருட்டால்
கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
|
256 |
|
உண்ணாமை வேண்டும்
புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.
|
257 |
|
செயிரின்
தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். |
258 |
|
அவிசொரிந்
தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
|
259 |
|
கொல்லான் புலாலை
மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். |
260 |
|
உற்றநோய் நோன்றல்
உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.
|
261 |
|
தவமும்
தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது.
|
262 |
|
துறந்தார்க்குத்
துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
|
263 |
|
ஒன்னார்த்
தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
|
264 |
|
வேண்டிய
வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.
|
265 |
|
தவஞ் செய்வார்
தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
|
266 |
|
சுடச்சுடரும்
பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
|
267 |
|
தன்னுயிர்
தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.
|
268 |
|
கூற்றம்
குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்
டவர்க்குல்.
|
269 |
|
இலர்பல ராகிய
காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
|
270 |
|
வஞ்ச மனத்தான்
படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
|
271 |
|
வானுயர் தோற்றம்
எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்.
|
272 |
|
வலியில்
நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந்
தற்று.
|
273 |
|
தவமறைந்து அல்லவை
செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
|
274 |
|
பற்றற்றேம்
என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்.
|
275 |
|
நெஞ்சின் துறவார்
துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.
|
276 |
|
புறங்குன்றி
கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து.
|
277 |
|
மனத்தது மாசாக
மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.
|
278 |
|
கணைகொடிது
யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்.
|
279 |
|
மழித்தலும்
நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். |
280 |
|
எள்ளாமை
வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
|
281 |
|
உள்ளத்தால்
உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
|
282 |
|
களவினால் ஆகிய
ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
|
283 |
|
களவின்கண் கன்றிய
காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.
|
284 |
|
அருள்கருதி
அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண்
இல்.
|
285 |
|
அளவின்கண்
நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.
|
286 |
|
களவென்னும் காரறி
வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
|
287 |
|
அளவறந்தார்
நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.
|
288 |
|
அளவல்ல
செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.
|
289 |
|
கள்வார்க்குத்
தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.
|
290 |
|
வாய்மை
எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
|
291 |
|
பொய்மையும்
வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
|
292 |
|
தன்நெஞ் சறிவது
பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
|
293 |
|
உள்ளத்தாற்
பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
|
294 |
|
மனத்தொடு வாய்மை
மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.
|
295 |
|
பொய்யாமை அன்ன
புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.
|
296 |
|
பொய்யாமை
பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
|
297 |
|
புறள்தூய்மை
நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.
|
298 |
|
எல்லா விளக்கும்
விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
|
299 |
|
யாமெய்யாக்
கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.
|
300 |
|
செல்லிடத்துக்
காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என்
காவாக்கால் என்?
|
301 |
|
செல்லா இடத்துச்
சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற.
|
302 |
|
மறத்தல் வெகுளியை
யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.
|
303 |
|
நகையும் உவகையும்
கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.
|
304 |
|
தன்னைத்தான்
காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.
|
305 |
|
சினமென்னும்
சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.
|
306 |
|
சினத்தைப்
பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
|
307 |
|
இணர்எரி தோய்வன்ன
இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.
|
308 |
|
உள்ளிய தெல்லாம்
உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.
|
309 |
|
இறந்தார்
இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.
|
310 |
|
சிறப்பீனும்
செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள்.
|
311 |
|
கறுத்துஇன்னா
செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.
|
312 |
|
செய்யாமல்
செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.
|
313 |
|
இன்னாசெய் தாரை
ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.
|
314 |
|
அறிவினான் ஆகுவ
துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.
|
315 |
|
இன்னா எனத்தான்
உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல்.
|
316 |
|
எனைத்தானும்
எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.
|
317 |
|
தன்னுயிர்ககு
ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்.
|
318 |
|
பிறர்க்கின்னா
முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.
|
319 |
|
நோயெல்லாம்
நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.
|
320 |
|
அறவினை யாதெனின்
கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.
|
321 |
|
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
|
322 |
|
ஒன்றாக நல்லது
கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.
|
323 |
|
நல்லாறு
எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.
|
324 |
|
நிலைஅஞ்சி
நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.
|
325 |
|
கொல்லாமை
மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங்
கூற்று.
|
326 |
|
தன்னுயிர்
நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.
|
327 |
|
நன்றாகும் ஆக்கம்
பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை.
|
328 |
|
கொலைவினைய ராகிய
மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.
|
329 |
|
உயிர் உடம்பின்
நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
|
330 |
|
நில்லாத வற்றை
நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.
|
331 |
|
கூத்தாட்டு அவைக்
குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.
|
332 |
|
அற்கா
இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அ்குப ஆங்கே செயல்.
|
333 |
|
நாளென ஒன்றுபோற்
காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.
|
334 |
|
நாச்செற்று
விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்
|
335 |
|
நெருநல்
உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.
|
336 |
|
ஒருபொழுதும்
வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
|
337 |
|
குடம்பை தனித்து
ஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.
|
338 |
|
உறங்கு வதுபோலுஞ்
சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
|
339 |
|
புக்கில்
அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.
|
340 |
|
யாதனின் யாதனின்
நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
|
341 |
|
வேண்டின் உண்
டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல.
|
342 |
|
அடல்வேண்டும்
ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
|
343 |
|
இயல்பாகும்
நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து.
|
344 |
|
மற்றும்
தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும்
மிகை.
|
345 |
|
யான் எனது
என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம்
புகும்.
|
346 |
|
பற்றி விடாஅ
இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு.
|
347 |
|
தலைப்பட்டார்
தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.
|
348 |
|
பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.
|
349 |
|
பற்றுக
பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
|
350 |
|
பொருளல்ல வற்றைப்
பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.
|
351 |
|
இருள்நீங்கி
இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.
|
352 |
|
ஐயத்தின்
நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து.
|
353 |
|
ஐயுணர்வு
எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
|
354 |
|
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
|
355 |
|
கற்றீண்டு
மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.
|
356 |
|
ஓர்த்துள்ளம்
உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
|
357 |
|
பிறப்பென்னும்
பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு.
|
358 |
|
சார்புணர்ந்து
சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.
|
359 |
|
காமம் வெகுளி
மயக்கம் இவ்முன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.
|
360 |
|
அவாஎன்ப எல்லா
உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.
|
361 |
|
வேண்டுங்கால்
வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்.
|
362 |
|
வேண்டாமை அன்ன
விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்.
|
363 |
|
தூஉய்மை என்பது
அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்.
|
364 |
|
அற்றவர் என்பார்
அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்.
|
365 |
|
அஞ்சுவ தோரும்
அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. |
366 |
|
அவாவினை ஆற்ற
அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும்.
|
367 |
|
அவாஇல்லார்க்
கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.
|
368 |
|
இன்பம் இடையறா
தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
|
369 |
|
ஆரா இயற்கை
அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.
|
370 |
|
ஆகூழால் தோன்றும்
அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.
|
371 |
|
பேதைப் படுக்கும்
இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை.
|
372 |
|
நுண்ணிய நூல்பல
கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.
|
373 |
|
இருவேறு உலகத்து
இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.
|
374 |
|
நல்லவை எல்லாஅந்
தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.
|
375 |
|
பரியினும்
ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.
|
376 |
|
வகுத்தான் வகுத்
வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
|
377 |
|
துறப்பார்மன்
துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.
|
378 |
|
நன்றாங்கால்
நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?
|
379 |
|
ஊழிற் பெருவலி
யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.
|
380 |