|
குமரிப் பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
குமரிப்பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
(குமரிப்)
தென்றல் தங்கையாம் திங்கள் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள்
அவள் உன்னைக் கண்டு உயிர் காதல் கொண்டு தன் உல்ளம் தன்னையே
தருவாள்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிகொள்ள சுகம் மெல்ல மெல்லவே
புரியும் (2)
கை தொடுவாய் தொடாமல் தூக்கம் வருமோ துணையைத் தேடி நீ வரலாம்
(2)
(குமரிப்)
பூவை என்பதோர் பூவை என்னதோர் தேவை தேவை என வருவேன்
இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க அதை உன்னைக் கேட்டு நான்
தருவேன்
கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன ஒரு நாளும் அழகு குறையாது
(2)
அந்த அழகே வராமல் ஆசை வருமோ அமுதும் தேனும் நீ பெறலாம் (2)
(குமரிப்)
|