|
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!... (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் தான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!... (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!... (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!... (கட்டி)
|