|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |

Acknowledgments:
Text Input: Sivalingam Ramalingam, Helsinki, Finland
Proof-reading and canti splitting (பதம் பிரிப்பு & பிழை திருத்தம்): Periannan Chandrasekaran, Atlanta, USA
Note:
PatiRRuppattu is one of the ancient works where several verses have been lost and for some few lines are still missing. For available verses, the line numbers are indicated at the end of every five lines.
C: Project Madurai 2000 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
முதற்பத்து (கிடைத்திலது)
இரண்டாம்பத்து
பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாட்டு - 11
வரைமருள் புணா வான்பிசிர் உடைய
வளிபாய்ந்(து) அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்(கு)உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த போசைக் 5
கடுஞ்சின விறல்வேள் களி(று)ஊர்ந் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த *புண்உமிழ் குருதி*யின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண்கொன்று 10
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்(று)எறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரா நறவின் ஆர மார்பின் 15
போர்அடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானைப்
பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே 20
கவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவா
பரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்
ஆயர் துவன்றிய போசை இமயம்
தென்னம் குமாயொ(டு) ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே. 25
பெயர் - புண்ணுமிழ் குருதி (அடி 8)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 12
வயவர் வீழ வாளான் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
தார்அணி எருத்தின் வாரல் வள்உகிர்
அமான் வழங்கும் சாரல் பிறமான் 5
தோடுகொள் இனநிரை நெஞ்(சு)அதிர்ந் தாங்கு
முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் *மறம்வீங்கு பல்புகழ்*
கேட்டற்(கு) இனிதுநின் செல்வம் கேள்தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி 10
வாடாப் பைம்மயிர் இளைய வாடுநடை
அண்ணல் மழகளி(று) அஞிமி(று) ஓப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி
வந்(து)அவண் நிறுத்த இரும்பேர் ஒக்கல்
தொல்பசி உழந்த பழங்கண் வீழ 15
எஃகுபோழ்ந்(து) அறுத்த வாள்நிணக் கொழுங்குறை
மைஊன் பெய்த வெண்நெல் வெண்சோறு
நனைஅமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற(கு) அன்ன
நிலத்தின் சிதாஅர் களைந்த பின்றை 20
நூலாக் கலிங்கம் வால்அரைக் கொளீஇ
வணர்இரும் கதுப்பின் வாங்(கு)அமை மென்தோள்
வசைஇல் மகளிர் வயங்(கு)இழை அணிய
அமர்புமெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்(கு) இனிதுநின் பெரும்கலி மகிழ்வே. 25
பெயர் - மறம்வீங்கு பல்புகழ் (8)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 13
தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் *பூத்த நெய்தல்*
இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின் 5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ்மருதின்
புனல்வாயில் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
நாடுகவின் அழிய நாமம் தோற்றிக் 10
கூற்(று)அடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந்(து) இறுத்த நீர்அழி பாக்கம்
விபூங் கரும்பின் கழனி புல்எனத்
திகாய் விடத்தரொடு காருடை போகிக்
கவைத்தலைப் பேய்மகள் கழு(து)ஊர்ந்(து) இயங்க 15
ஊய நெருஞ்சி நீ(று)ஆடு பறந்தலைத்
தா(து)எரு மறுத்த கலிஅழி மன்றத்(து)
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
காடே கடவுள் மேன புறவே 20
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத்(து) அன்றியும் ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறம் தருநர் பாரம் ஓம்பி
அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25
மழைவேண்டு புலத்து மா நிற்ப
நோயொடு பசிஇகந்(து) ஒணஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே.
பெயர் - பூத்த நெய்தல் (3)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 14
நிலம்நீர் வளிவிசும்(பு) என்ற நான்கின்
அளப்பா யையே
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்
ஐந்(து)ஒருங்கு புணர்ந்த விளக்கத்(து) அனையை
போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு 5
துப்புத்துறை போகிய துணி(வு)உடை யாண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ(டு) அழித்த செருப்புகல் முன்ப
கூற்றுவெகுண்டு வானும் ஆற்றுமாற் றலையே 10
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்புத் தடக்கைச் *சான்றோர் மெய்ம்மறை*
வான்உறை மகளிர் நலன்இகல் கொள்ளும்
வயங்(கு)இழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்(கு)ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ 15
பலகளிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படைஏர் உழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிக்
கடல்அக வரைப்பின்இப் பொழில்முழு(து) ஆண்டநின்
முன்திணை முதல்வர் போல நின்றுநீ 20
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோஇவ் வுலகமோ(டு) உடனே.
பெயர் - சான்றோர் மெய்ம்மறை (12)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
பாட்டு - 15
யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத்(து) இறுத்து
முனைஎ பரப்பிய துன்னரும் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதில்மரம் முருக்கி
நிரை களிறுஒழுகிய *நிரைய வெள்ளம்*
பரந்(து)ஆடு கழங்(கு)அழி மன்மருங்(கு) அறுப்பக் 5
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
அழல்கவர் மருங்கின் உருஅறக் கெடுத்துத்
தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
பீர்இவர்பு பரந்த நீர்அறு நிறைமுதல் 10
சிவந்த காந்தள் முதல்சிதை மூதின்
புலவுவில் உழவின் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பின் புலம்சிதை அரம்பின்
அறியா மையான் மறந்துதுப்(பு) எதிர்ந்தநின்
பகைவர் நாடும் கண்டுவந் திசினே 15
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்நாட்டு
விழ(வு)அறு(பு) அறியா முழ(வு)இமிழ் மூதூர்க்
கொடுநிழல் பட்ட பொன்உடை நியமத்துச்
சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின் 20
வயவர் வேந்தே பாசிலர் வெறுக்கை
தார்அணிந்(து) எழிலிய தொடிசிதை மருப்பின்
போர்வல் யானைச் சேர லாத
நீவா ழியர்இவ் வுலகத் தோர்க்(கு)என
உண்(டு)உரை மாறிய மழலை நாவின் 25
மென்சொல் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துற(வு) அறியாது நந்திய வாழ்க்கைச்
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோ(டு)
ஒன்றுமொழிந்(து) அடங்கிய கொள்கை என்றும்
பதிபிழைப்(பு) அறியாது துய்த்தல் எய்தி 30
நிரையம் ஒணஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறந் தருதலின் நோய்இகந்(து) ஒணஇய
யாணர்நன் நாடுங் கண்டுமதி மருண்டனென்
மண்உடை ஞாலத்து மன்னுயிர்க்(கு) எஞ்சா(து) 35
ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்
புரைவயின் புரைவயின் பொய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்இசை
ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே. 40
பெயர் - நிரைய வெள்ளம் (4)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 16
கோ(டு)உறழ்ந்(து) எடுத்த கொடுங்கண் இஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சுமரக் குழாஅம் துவன்றிப் புனிற்றுமகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல்எழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லு(பு) 5
ஏனம் ஆகிய நுனைமு மருப்பின்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொல் மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை ஆகலின் காண்குவந் திசினே
ஆறிய கற்பின் அடங்கிய சாயல் 10
ஊடினும் இனிய கூறும் இன்நகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உயள்
பாயல் உய்யுமோ தோன்றல் தாவின்று
திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் 15
வயங்குகதிர் வயிரமோ(டு) உறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
புரையோர் உண்கண் *துயிலின் பாயல்*
பாலும் கொளாலும் வல்லோய்நின்
சாயன் மார்பு நனிஅலைத் தன்றே. 20
பெயர் - துயிலின் பாயல் (18)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 17
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பொய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்(பு)அறுத்(து) இயற்றிய *வலம்படு வியன்பணை* 5
ஆடுநர் பெயர்ந்துவந்(து) அரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்உறூஉம் தொடித்தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனம்தலைப் பைஞ்ஞிலம் வருகஇந் நிழல்என
ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின் 10
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
கடும்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே.
பெயர் - வலம்படு வியன்பணை (5)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 18
உண்மின் கள்ளே அடுமின் சோறே
எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலம்கலம் தெளிர்ப்ப
இருள்வணர் ஒலிவரும் புஅவிழ் ஐம்பால்
ஏந்துகோட்(டு) அல்குல் முகிழ்நகை மடவரல் 5
*கூந்தல் விறலியர்* வழங்குக அடுப்பே
பெற்ற(து) உதவுமின் தப்(பு)இன்று பின்னும்
மன்உயிர் அழிய யாண்டுபல துளக்கி
மண்உடை ஞாலம் புர(வு)எதிர் கொண்ட
தண்இயல் எழிலி தலையாது மாறி 10
மா பொய்க்குவ(து) ஆயினும்
சேர லாதன் பொய்யலன் நசையே.
பெயர் - கூந்தல் விறலியர் (6)
துறை - இயன்மொழி வாழ்த்து
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 19
கொள்ளை வல்சிக் கவர்கால் கூளியர்
கல்உடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்ப
ஒண்பொறிக் கழல்கால் மாறா வயவர்
தின்பிணி எஃகம் புலிஉறை கழிப்பச்
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய 5
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசம் கண்பெயர்த்(து) இயவர்
கடிப்(பு)உடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச
வம்புகளை(வு) அறியாச் சுற்றமோ(டு) உடம்புதொந்(து)
அவ்வினை மேவலை ஆகலின் 10
எல்லும் நனிஇருந்(து) எல்லிப் பெற்ற
அதுபெறு பாயல்சிறுமகி ழானும்
கனவினுள் உறையும் பெருஞ்சால்(பு) ஒடுங்கிய
நாணுமலி யாக்கை வாள்நுதல் அவைக்(கு)
யார்கொல் அளியை 15
இனம்தோ(டு) அகல ஊருடன் எழுந்து
நிலம்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்தல் ஈயா *வளன்அறு பைதிரம்*
அன்ன ஆயின பழனம் தோறும்
அழல்மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து 20
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
அநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன்றோர் காலை
நல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக் 25
காணுநர் கைபுடைத்(து) இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே.
பெயர் - வளனறு பைதிரம் (18)
துறை - பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
பாட்டு - 20
நும்கோ யார்என வினவின் எம்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் வாழ்கஅவன் கண்ணி 5
வாய்ப்(பு)அறி யலனே வெயில்துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்(சு)அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்(பு)அறி யலனே
கனவினும், ஒன்னார் தேய ஓங்கி நடந்து 10
படியோர்த் தேய்த்து வடிமணி இரட்டும்
கடாஅ யானைக் கணநிரை அலற
வியல்இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்குபுகழ் நிறீஇ
விஉளை மாவும் களிறும் தேரும் 15
வயியர் கண்ணுளர்க்(கு) ஓம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதில் நிலைஞாயில்
அம்(பு)உடை யார்எயில் உள்அழித்(து) உண்ட
அடாஅ அடுபகை * அட்டுமலர் மார்பன்* 20
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பாசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்உயிர் அழிய யாண்டுபல மாறித்
தண்இயல் எழிலி தலையா(து) ஆயினும் 25
வயிறுபசி கூர ஈயலன்
வயிறும்ஆ(சு) இலீயர்அவன் ஈன்ற தாயே.
பெயர் - அட்டுமலர் மார்பன் (20)
துறை - இயன்மொழி வாழ்த்து
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
(பதிகம்)
மன்னிய பெரும்புகழ் மறுஇல் வாய்மொழி
இன்இசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்
அமைவரல் அருவி இமையம் வில்பொறித்(து)
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் 5
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேர்இசை மரபின் ஆயர் வணக்கி
நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபின் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு 10
பெருவிறல் மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
அமையார்த் தேய்த்த அணங்(கு)உடை நோன்தாள்
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்வீங்கு பல்புகழ், பூத்த நெய்தல்,
சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயிலின் பாயல்,
வலம்படுவியன்பணை, கூந்தல் விறலியர், வளனறு பைதிரம், அட்டுமலர்மார்பன்
இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம்* கொடுத்து
முப்பத்தெட்டுயாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான்.
இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டுயாண்டு வீற்றிருந்தான்.
[*பிரமதாயம் = அந்தணர்களுக்கு விடப்படும் இறையிலி நிலம்]
இரண்டாம் பத்து முற்றிற்று
மூ ன் றா ம் ப த் து
பாடப்பட்டோ ன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாடியவர்: பாலைக் கெளதமனார்
பாட்டு - 21
சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம்என்(று)
ஐந்(து)உடன் போற்றி அவைதுணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை அன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபின் கடவுள் பேணியர் 5
கொண்ட தீயின் சுடர்எழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர்
ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை 10
குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக்
கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை எழுந்த *அடுநெய் ஆவுதி*
இரண்(டு)உடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி 15
ஆர்வளம் பழுனிய ஐயம்தீர் சிறப்பின்
மாஅம் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்(பு)உறு முரசம் கறங்க ஆர்ப்புச்சிறந்து
நன்கலம் தரூஉம் மண்படு மார்ப
முல்லைக் கண்ணிப் பல்ஆன் கோவலர் 20
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பிக்
கல்உயர் கடத்(து)இடைக் கதிர்மணி பெறூஉம்
மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
பல்பயம் தழீஇய பயம்கெழு நெடுங்கோட்டு 25
நீர்அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பாவேட்(பு) அஞ்சாச்
சீர்உடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேர்உயர் நெடுவரை அயிரைப் பொருந
யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து 30
நோயின் மாந்தர்க்(கு) ஊழி ஆக
மண்ணா வாயின் மணம்கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழ்இரும் கூந்தல்
ஒணஇயின போல விரவுமலர் நின்று
திருமுகத்(து) அலமரும் பெருமதர் மழைக்கண் 35
அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து
வேய்உறழ் பணைத்தோள் இவளோ(டு)
ஆயிர வெள்ளம் வாழிய பலவே.
பெயர் - அடுநெய்யாவுதி (13)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 22
சினனே காமம் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்புமிகு வுடைமை
தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து)
அறம்தொ திகிக்கு வழியடை யாகும்
தீதுசேண் இகந்து நன்றுமிகப் புந்து 5
கடலும் கானமும் பலபயம் உதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம்
அமர்துணைப் பியாது பாத்(து)உண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய 10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச்
சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல்
*கயிறுகுறு முகவை* மூயின மொய்க்கும்
ஆகெழு கொங்கர் நா(டு)அகப் படுத்த 15
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப்பொலிந்த மா
இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர்
அமர்க்(கு)எதிர்ந்த புகல்மறவ ரொடு 20
துஞ்சுமரம் துவன்றிய மலர்அகன் பறந்தலை
ஓங்குநிலை வாயிதூங்குபு தகைத்த
வில்லிசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதில் நிரைப்பதணத் 25
தண்ணலம் பெருங்கோட்(டு) அகப்பா எறிந்த
பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்(து)எறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
நீர்த்தரு பூசலின் அம்(பு)அழிக்கு நரும்
ஒலித்தலை விழவின் மலியும் யாணர் 30
நாடுகெழு தண்பனை சீறினை ஆதலின்
குடதிசை மாய்ந்து குணம்முதல் தோன்றிப்
பாய்இருள் அகற்றும் பயம்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பகல் அமயத்துக்
கவலை வெள்நா கூஉம்முறை பயிற்றிக்
கழல்கண் கூகைக் குழறுகுரல் பாணிக்
கருங்கண் பேய்மகள் வழங்கும்
பெரும்பாழ் ஆகுமன் அளிய தாமே.
பெயர் - கயிறுகுறு முகவை (14)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
பாட்டு - 23
அலந்தலை உன்னத்(து) அங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறம் கூர்ந்து
நிலம்பை(து) அற்ற புலம்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும் 5
வயிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனைஇழை ஒலிப்பப் பொ(து)உவந்து
நெஞ்சுமலி உவகையர் உண்டுமலிந்(து) ஆடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ 10
நின்நயந்து வருவேம் கண்டனம் புல்மிக்கு
வழங்குநர் அற்(று)என மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவின் அழிந்த ஆற்ற ஏறுபுணர்ந்(து)
அண்ணல் மரைஆ அமர்ந்(து)இனி(து) உறையும்
விண்உயர் வைப்பின கா(டு)ஆ யினநின் 15
மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த
போர்எதிர் வேந்தர் தார்அழிந்(து) ஒராலின்
மரு(து)இமிழ்ந்(து) ஓங்கிய நளிஇரும் பரப்பின்
மணல்மலி பெருந்துறைத் *ததைந்த காஞ்சி*யொடு
முருக்குத்தாழ்(பு) எழிலிய நெருப்புறழ் அடைகரை 20
நந்து நாரையொடு செவ்வா உகளும்
கழனி வாயிற் பழனப் படப்பை
அழல்மருள் பூவின் தாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணர்அவர் அகன்தலை நாடே. 25
பெயர் - ததைந்த காஞ்சி (19)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 24
நெடுவயின் ஒளிறு மின்னுப்பரந்(து) ஆங்குப்
புலிஉறை கழித்த புலவுவாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன்உயர்த்(து) ஏந்தி
ஆர்அரண் கடந்த தார்அரும் தகைப்பின்
பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவ 5
ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல்என்(று) ஆறுபுந்(து) ஒழுகும்
அறம்பு அந்தணர் வழிமொழிந்(து) ஒழுகி
ஞாலம் நின்வழி ஒழுகப் பாடல்சான்று
நா(டு)உடன் விளங்கும் நாடா நல்லிசைத் 10
திருந்திய இயல்மொழித் திருந்(து)இழை கணவ
குலைஇழி(பு) அறியாச் சாபத்து வயவர்
அம்புகளை(வு) அறியாத் தூங்குதுளங்(கு) இருக்கை
இடாஅ ஏணி இயல்அறைக் குருசில்
நீர்நிலம் தீவளி விசும்போ(டு) ஐந்தும் 15
அளந்துகடை அறியினும் அளப்பரும் குரையைநின்
வளம்வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே
உண்மருந்(து) இன்மரும் வரைகோள் அறியாது
குரைத்தொடி மழுகிய உலக்கை வயின்தோ(று)
அடைச்சேம்(பு) எழுந்த ஆ(டு)று மடாவின் 20
எஃ(கு)உறச் சிவந்த ஊனத்(து) யாவரும்
கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி
வயங்குகதிர் விந்து வான்அகம் சுடர்வர
வறிதுவடக்(கு) இறைஞ்சிய *சீர்கால் வெள்ளி*
பயங்கெழு பொழுதோ(டு) ஆநியம் நிற்பக் 25
கலிழும் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலன்ஏர்(பு) இரங்கும்
கொண்டல் தண்தளிக் கமம்சூல் மாமழை
கார்எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. 30
பெயர் - சீர்கால் வெள்ளி (24)
துறை - இயன்மொழி வாழ்த்து
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 25
மாஆ டியபுலன் நாஞ்சி ல்ஆடா
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம்பரந்த புலம் வளம்பரப்(பு) அறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ, உடன்றோர் மன்எயில் தோட்டி வையா 5
கடுங்கால் ஒற்றலின் சுடர்சிறந்(து) உருத்துப்
பசும்பிசிர் ஒள்அழல் ஆடிய மருங்கின்
ஆண்தலை வழங்கும் *கான்உணங்கு கடுநெறி*
முனைஅகன் பெரும்பாழ் ஆக மன்னிய
உரும்உறழ்(பு) இரங்கும் முரசிற் பெருமலை 10
வரைஇழி அருவியின் ஒளிறுகொடி நுடங்கக்
கடும்பாக் கதழ்சிற(கு) அகைப்பநீ
நெடுந்தேர் ஓட்டியபிறர் அகன்தலை நாடே.
பெயர் - கானுணங்கு கடுநெறி (8)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
பாட்டு - 26
தேஎர் பரந்தபுலம் ஏஎர் பரவா
களி(று)ஆ டியபுலம் நாஞ்சில் ஆடா
மத்(து)உர றியமனை இன்னியம் இமிழா
ஆங்குப், பண்டுநற்(கு) அறியுநர் செழுவளம் நினைப்பின்
நோகோ யானே நோதக வருமே 5
பெயல்மழை புரவின்(று) ஆகிவெய்(து) உற்று
வலம்இன்(று) அம்ம காலையது பண்(பு)எனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்
பீர்இவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் 10
*கா(டு)உறு கடுநெறி* யாக மன்னிய
முரு(கு)உடன்று கறுத்த கலிஅழி மூதூர்
உரும்பில் கூற்றத்(து) அன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.
பெயர் - காடுறு கடுநெறி (11)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
பாட்டு - 27
சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்
*தொடர்ந்த குவளைத்* தூநெறி அடைச்சி
அலர்ந்த ஆம்பல் அகமடி வையர்
சுயல்அம் சென்னிப் பூஞ்செய் கண்ணி
அயல் ஆர்கையர் இனிதுகூ டியவர் 5
துறைநணி மருதம் ஏறித் தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின்
பழனக் காவில் பசுமயில் ஆலும்
பொய்கை வாயில் புனல்பொரு புதவின்
நெய்தல் மரபின் நிரைகள் செறுவின் 10
வல்வாய் உருளி கதும்என மண்ட
அள்ளல் பட்டுத் துள்ளூபு துரப்ப
நல்எருதும் முயலும் அளறுபோகு விழுமத்துச்
சாகாட் டாளர் கம்பலை அல்லது
பூசல் அறியா நன்னாட்(டு) 15
யாணர் அறாஅக் காமரு கவினே.
பெயர் - தொடர்ந்த குவளை (2)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 28
திருவுடைத்(து) அம்ம பெருவிறல் பகைவர்
பைங்கண் யானைப் புணர்நிரை துமிய
உரம்துரந்(து) எறிந்த கறைஅடிக் கழல்கால்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
இளைஇனிது தந்து விளைவுமுட்(டு) உறாது 5
புலம்பா உறையுள் நீணதொழில் ஆற்றலின்
விடுநிலக் கரம்பை விடர்அளை நிறையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
அருவி அற்ற பெருவறல் காலையும்
நிவந்துகரை இழிதரு நனம்தலைப் போயாற்றுச் 10
சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
உவலை சூடி *உருத்துவரு மலிர்நிறைச்*
செந்நீர்ப் பூசல் அல்லது
வெம்மை அதுநின் அகன்தலை நாடே.
பெயர் - உருத்துவரு மலிர்நிறை (12)
துறை - நாடுவாழ்த்து
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 29
அவல்எறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
தடந்தாள் நாரை இய அயிரைக்
கொழுமீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின் 5
*வெண்கை மகளிர்* வெண்குரு(கு) ஓப்பும்
அழியா விழவின் இழியாத் திவவின்
வயிய மாக்கள் பண்அமைத்(து) எழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்
அகன்கண் வைப்பின் ஆடுமன் அளிய 10
விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோள் நேர்இகந்(து) ஆர்எயில் கடக்கும்
பெரும்பல் யானைக் குட்டுவன்
வரம்பில் தானை பரவா ஊங்கே. 15
பெயர் - வெண்கை மகளிர் (6)
துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
பாட்டு - 30
இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாஇதழ் நெய்தல்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வால்இணர்ப் படுசினக் குரு(கு)இறை கொள்ளும்
அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை 5
தாழ்அடும்பு மலைந்த புணாவளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்
தண்கடல் படப்பை மென்பா லனவும்
காந்தள்அங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர்
செங்கோட்(டு) ஆமான் ஊனொடு காட்ட 10
மதன்உடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்உடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
காலம் அன்றியும் கரும்(பு)அறுத்(து) ஒழியா(து)
அகால் அவித்துப் பலபூ விழவின் 15
தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று
வெண்தலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பாய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலின் *புகன்ற ஆயம்*
முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும் 20
செழும்பல் வைப்பி பழனப் பாலும்
ஏனல் உழவர் வரகுமீ(து) இட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய புறஅணி வைப்பும் 25
பல்பூஞ் செம்மல் காடுபயம் மாறி
அரக்கத் தன்ன நுண்மணல் கோடுகொண்(டு)
ஒண்நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்உயர்ந்(து) ஓங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரும் வேளிரும்ஒன்று மொழிந்து 30
கடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்(பு)அடை(பு) அதிரக்
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்(து)
அருந்திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறல் பிண்டம் 35
கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி
எறும்பும் மூசா இறும்பூது மரபின்
கருங்கண் காக்கையொடு பருந்(து)இருந் தார
ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழல்கால் 40
பெரும்சமம் ததைந்த செருப்புகல் மறவர்
உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
பெருஞ்சோ(று) உகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே.
பெயர்: புகன்றவாயம் (19)
துறை: பெருஞ்சோற்றுநிலை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
(பதிகம்)
இமைய வரம்பன் தம்பி அமைவர
உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு
மதிஉறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வகுத்(து) ஈத்துக் 5
கருங்களிற்(று) யானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீணரும் ஒருபகல் ஆடி
அயிரை பரைஇ ஆற்றல்சால் முன்போ(டு)
ஒடுங்கா நல்இசை உயர்ந்த கேள்வி
நெடும்பார தாயனார் முந்(து)உறக் காடுபோந்த 10
*பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கெளதமனார்* பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: அடுநெய்யாவுதி, கயிறு குறுமுகவை, ததைந்தகாஞ்சி,
சீர்சால்வெள்ளி, கானுணங்குகடுநெறி, காடுறுகடுநெறி,
தொடந்தகுவளை, உருத்துவரு மலிர்நிறை, வெண்கைமகளிர், புகன்றாவாயம்.
இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: 'நீர் வெண்டியது கொண்மின்' என 'யானும் என் பார்ப்பனியும்
சுவர்க்கம் புகல் வெண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது
பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும்
காணாராயினார்.
இமயவரம்பன்றம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
மூன்றாம் பத்து முற்றிற்று
நா ன் கா ம் ப த் து
பாடப்பட்டோ ன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்
பாட்டு - 31
குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்
கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்
தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென 5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிக் *கமழ்குரல் துழாஅய்*
அலங்கற் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர 10
மணிநிற மையிருள் அகல நிலாவிபு
கோடுகூடு மதியம் இயல்உற் றாங்குத்
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்(டு)
ஆண்கடன் நிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
கருவி வானம் தண்தளி தலைஇய 15
வடதெற்கு விலங்கி விலகுதலைத்(து) எழிலிய
பனிவார் விண்டு விறல்வரை அற்றே
கடவுள் அஞ்சி வானத்(து) இழைத்த
தூங்(கு)எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉநிவந்(து) அன்ன பரேர்எறுழ் முழவுத்தோள் 20
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல் அறம்சால் கற்பின்
குழைக்குவிளக்(கு) ஆகிய அவ்வாங்(கு) உந்தி 25
விசும்புவழங்கு மகளிர் உள்ளும் சிறந்த
செம்மீன் அனையள்நின் தொல்நகர்ச் செல்வி
நிலன்அதிர்(பு) இரங்கல ஆகி வலன்ஏர்பு
வியன்பணை முழங்கும் வேல்மூ(சு) அழுவத்(து) 30
அடங்கிய புடையல் பொலம்கழல் நோன்தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்(கு)அறக் கடைஇப்
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க்(கு) அரணம் ஆகிப் பகைவர்க்குச்
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை 35
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: கமழ்குரல் துழாய்
பாட்டு - 32
மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்(து)உடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்(கு)எழு கடும்தார் துய்த்தலைச் சென்று
துப்புத்துவர் போகப் பெருங்கிளை உவப்ப 5
ஈத்(து)ஆன்(று) ஆனா விடன்உடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
கொன்ஒன்று மருண்டனென் அடுபோர்க் கொற்றவ
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் 10
பெருமலை யானையொடு புலம்கெட இறுத்துத்
தடந்தாள் நாரை படிந்(து)இரை கவரும்
முடந்தை நெல்லின் *கழைஅமல் கழனிப்*
பிழையா விளையுள் நா(டு)அகப் படுத்து
வையா மாலையர் வசையுநர்க்(கு) அறுத்த 15
பகைவர் தேஎத்(து) ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பொதே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: கழையமல் கழனி
பாட்டு - 33
இறும்பூதால் பொதே கொடித்தேர் அண்ணல்
வடிமணி அனைத்த பனைமருள் நோன்தாள்
கடிமரத்தான் களி(று)அணைத்து
நெடுநீர துறைகலங்க
மூழ்த்(து)இறுத்த வியன்தானையொடு 5
புலம்கெட நொதரும் *வரம்பில் வெள்ளம்*
வாள்மதில் ஆக வேல்மிளை உயர்த்து
வில்இசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்
செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்
கார்இடி உருமின் உரறும் முரசின் 10
கால்வழங்(கு) ஆர்எயில் கருதின்
போர்எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே.
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: வரம்பில் வெள்ளம்
பாட்டு - 34
ஒரூஉப நின்னை ஒருபெரு வேந்தே
ஓடாப் பூட்கை *ஒண்பொறிக் கழல்கால்*
இருநிலம் தோயும் விநூல் அறுவையர்
செவ்உளைய மாஊர்ந்து
நெடும்கொடிய தேர்மிசையும் 5
ஓடை விளங்கும் உருகெழு புகர்நுதல்
பொன்அணி யானை முரண்சேர் எருத்தினும்
மன்நிலத்(து) அமைந்த ..................
மாறா மைந்தர் மாறுநிலை தேய
முரை(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழ 10
அரைசுபடக் கடக்கும் ஆற்றல்
புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே.
துறை: தும்பையரவம்
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: ஒண்பொறிக் கழற்கால்
பாட்டு - 35
புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே
உரைசான் றனவால் பெருமைநின் வென்றி
இரும்களிற்று யானை இலங்குவால் மருப்பொடு
நெடும்தேர்த் திகி தாய வியன்களத்(து)
அள(கு)உடைச் சேவல் கிளைபுகா வாரத் 5
தலைதுமிந்(து) எஞ்சிய *மெய்ஆடு பறந்தலை*
அந்தி மாலை விசும்புகண் டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்துப்
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயி னானே. 10
துறை: வாகைத்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: மெய்யாடு பறந்தலை
பாட்டு - 36
வீயா யாணர் நின்வயி னானே
தாவா(து) ஆகு மலிபெறு வயவே
மல்லல் உள்ளமொடு வம்(பு)அமர்க் கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன் 5
யானை பட்ட *வாள்மயங்கு கடும்தார்*
மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன்புற எருவைப் பெடைபுணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டுகிழக்(கு) இழிய 10
நிலம்இழி நிவப்பின் நீள்நிரை பலசுமந்(து)
உருஎழு கூளியர் உண்டுமகிழ்ந்(து) ஆடக்
குருதிச் செம்புனல் ஒழுகச்
செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே.
துறை: களவழி
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வாண்மயங்கு கடுந்தார்
பாட்டு - 37
வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்
பகைவர் ஆரப் பழங்கண் அருளி
நகைவர் ஆர நன்கலம் சிதறி
ஆன்(று)அவிந்(து) அடங்கிய செயிர்தீர் செம்மல் 5
வான்தோய் நல்இசை உலகமொ(டு) உயிர்ப்பத்
துளங்குடி திருத்திய *வலம்படு வென்றி*யும்
மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்து
மன்எயில் எறிந்து மறவர்த் தாணஇத்
தொல்நிலைச் சிறப்பின் நின்நிழல் வாழ்நர்க்குக் 10
கோ(டு)அற வைத்த கோடாக் கொள்கையும்
நன்றுபொ(து) உடையையால் நீயே
வெந்திறல் வேந்தேஇவ் வுலகத் தோர்க்கே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வலம்படு வென்றி
பாட்டு - 38
உலகத் தோரே பலர்மன் செல்வர்
எல்லா ருள்ளும்நின் நல்இசை மிகுமே
வளம்தலை மயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின் 5
தோட்டி தந்த தொடிமருப்பு யானைச்
செவ்உளைக் கலிமா ஈணகை வான்கழல்
செயல்அமை கண்ணிச் சேரலர் வேந்தே
*பாசிலர் வெறுக்கை* பாணர் நாளவை
வாள்நுதல் கணவ! மள்ளர் ஏறே! 10
மைஅற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ! வான வரம்ப!
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையாத் தாஇல் நெஞ்சத்துப்
பகுத்(து)ஊண் தொகுத்த ஆண்மைப் 15
பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: பரிசிலர் வெறுக்கை
பாட்டு - 39
பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே
எமக்கில்என் னார்நின் மறம்கூறு குழாத்தர்
துப்புத்துறை போகிய வெப்(பு)உடைத் தும்பைக்
கறுத்த தெவ்வர் கடிமுனை அலற
எடுத்(து)எறிந்(து) இரங்கும் *ஏவல் வியன்பனை* 5
உரும்என அதிர்பட்டு முழங்கிச் செருமிக்(கு)
அடங்கார் ஆர்அரண் வாடச் செல்லும்
காலன் அனைய கடும்சின முன்ப
வாலிதின், நூலின்இழையா நுண்மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின் 10
புன்புறப் புறவின் கணநிரை அலற
அலந்தலை வேலத்(து) உலவை அம்சினைச்
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்(து)
அவிர்இழை தைஇ மின்உமிழ்(பு) இலங்கச் 15
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்நின் போர்நிழல் புகன்றே.
துறை: வாகை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: ஏவல் வியன்பணை
-----
பாட்டு - 40
போர்நிழல் புகன்ற சுற்றமொ(டு) ஊர்முகத்(து)
இறாஅ லியரோ பெருமநின் தானை
இன்இசை இமிழ்முர(சு) இயம்பக் கடிப்பிகூஉப்
புண்டோ ள் ஆடவர் போர்முகத்(து) இறுப்பக்
காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் 5
வந்(து)இறை கொண்டன்று தானை அந்தில்
களைநர் யார்இனிப் பிறர்எனப் பேணி
மன்எயில் மறவர் ஒலிஅவிந்(து) அடங்க
ஒன்னார் தேயப் பூமலைந்(து) உரைஇ
வெண்தோடு நிரைஇய வேந்(து)உடை அரும்சமம் 10
கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி
வென்றி ஆடிய தொடித்தோள் மீகை
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
பொன்அம் கண்ணிப் பொலம்தேர் நன்னன்
சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த 15
தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
புன்கால் உன்னம் சாயத் தெள்கண்
வறிதுகூட்(டு) அயல் இரவலர்த் தடுப்பத்
தான்தர உண்ட நனைநறவு மகிழ்ந்து
நீர்இமிழ் சிலம்பின் நோ யோனே 20
செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து
மெல்இயல் மகளிர் எழில்நலம் சிறப்பப்
பாணர் பைம்பூ மலைய இளையர்
இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து 25
நெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ்த்தத்
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண்பொறி பிசிரக்
காடுதலைக் கொண்ட *நாடுகாண் அவிர்சுடர்*
அழல்விடுபு மாணஇய மைந்தின் 30
தொழில்புகல் யானை நல்குவன் பலவே.
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நாடுகாண் அவிர்சுடர்
(பதிகம்)
ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த்(து)
ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின் 5
பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ
உருள் பூங் *கடம்பின் பெருவாயில் நன்னனை*
நிலைச்செருவி னால்தலை யறுத்(து)அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் 10
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: கம்ழகுரற் றுழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடுபறந்தலை, வான்மயங்கு கடுந்தார், வலம்படு வென்றி, பரிசிலர்வெறுக்கை, ஏவல் வியன்பனை, நாடுகானவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: நாற்பதுநூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆளவ்திற் பாகங்கொடுத்தான் அக்கோ.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
நான்காம் பத்து முற்றிற்று
ஐ ந் தா ம் ப த் து
பாடப்பட்டோ ன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பாடியவர்: காசறு செய்யுட் பரணர்
பாட்டு - 41
புணர்பு நரம்பின் தீம்தொடை பழுனிய
வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்அமை முழவும் பதலையும் பிறவும்
கண்அறுத்(து) இயற்றிய தூம்பொடு சுருக்கிக்
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் 5
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்(பு) எழுந்த *சுடர்வீ வேங்கைப்*
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச் 10
சேஎர் உற்ற செல்படை மறவர்
தண்(டு)உடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு
வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
மழைபெயல் மாறிய கழைதிரங்(கு) அத்தம்
ஒன்(று)இரண்(டு) அலபல கழிந்து திண்தேர் 15
வசைஇல் நெடுந்தகை காண்குவந் திசினே
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முர(சு)உடைப் பெருஞ்சமத்(து) அரசுபடக் கடந்து
வெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர் 20
மிள(கு)எறி உலக்கையின் இருந்தலை இடித்து
வை(கு)ஆர்ப்(பு) எழுந்த மைபடு பரப்பின்
எடுத்தே(று) ஏய கடிப்(பு)உடை வியன்கண்
வலம்படு சீர்த்தி ஒருங்(கு)உடன் இயைந்து
கால்உளைக் கடும்பிசிர் உடைய வால்உளைக் 25
கடும்பாப் புரவி ஊர்ந்தநின்
படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே.
துறை: காட்சி வாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: சுடர்வீவேங்கை
செந்துறைப் பாடாண்பாட்டு
பாட்டு - 42
இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்
மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடுஆழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நல்நுதல் கணவ
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ
மைந்(து)உடை நல்அமர்க் கடந்து வலம்தாணஇ
இஞ்சிவீ விராய பைந்தார் சூட்டிச் 10
சாந்துபுறத்(து) எறித்த *தசும்புதுளங்(கு) இருக்கைத்*
தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து
கோடியர் பெரும்கிளை வாழ ஆ(டு)இயல்
உளைஅவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15
மன்பதை மருள அரசுபடக் கடந்து
முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்
ஒளிறுநிலை உயர்மருப்(பு) ஏந்திய களி(று)ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உல(கு)உடன் மூய 20
மாஇருந் தெள்கடல் மலிதிரைப் பெளவத்து
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண்பல வரூஉம் புணாயின் பலவே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: தசும்புதுளங்(கு) இருக்கை
பாட்டு - 43
கவா முச்சிக் கார்வி கூந்தல்
ஊசல் மேவல் சேய்இழை மகளிர்
உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
பெரும்கை மதமாப் புகுதான் அவற்றுள்
விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅக் 5
கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாகத்
தென்னங் குமாயொ(டு) ஆயிடை அரசர்
முர(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த 10
போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
இரும்பணை திரங்கப் பெரும்பயல் ஒளிப்பக்
குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ
அருவிஅற்ற பெருவறல் காலையும்
அருஞ்செலல் பேராற்(று) இருங்கரை உடைத்துக் 15
கடிஏர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்(து)
ஆர்கலி வானம் தளிசொந் தாஅங்(கு)
உறுவர் ஆர ஓம்பா(து) உண்டு
நகைவர் ஆர நன்கலம் சிதறி 20
ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்
பாடு விறலியர் பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி உழிஞை
வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக 25
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும்
இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின் 30
தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே
நிணம்சுடு புகையொடு கனல்சினந்(து) அவிராது
நிரம்(பு)அகல்(பு) அறியா *ஏறா ஏணி*
நிறைந்து நெடி(து)இராத் தசும்பின் வயியர்
உண்(டு)எனத் தவாஅக் கள்ளின் 35
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே.
துறை: இயன்மொழிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: ஏறாவேணி
பாட்டு - 44
நிலம்புடைப்(பு) அன்னஆர்ப் பொடுவிசும்பு துடையூ
வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பொய ஆயினும் அமர்கடந்து பெற்ற
அய என்னா(து) ஓம்பாது வீசிக்
கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும் 5
களை(க)என அறியாக் கச(டு)இல் நெஞ்சத்(து)
ஆடுநடை அண்ணல்நின் பாடுமகள் காணியர்
காணி லியரோநின் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு *நோய்தபு நோன்தொடை*
நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை 10
சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
புலம்பெயர்ந்(து) ஒளித்த களையாப் பூசற்(கு)
அரண்கடா உறீஇ அணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்(து)அவன் வேம்புமுதல் தடிந்து 15
முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை உய்த்த கொழுஇல் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முர(சு)டைத் தாயத்(து) அரசுபல ஓட்டித் 20
துளங்குநீர் வியல்அகம் ஆண்(டு)இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய நாடே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நோய்தபு நோன்தொடை
பாட்டு - 45
பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்(று)அடங்(கு) அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசி(வு)உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களி(று)எறிந்து முந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின் 5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்
குண்டுகண் அகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டும்தாம் உள்அழித்(து) உண்ட
நாடுகெழு தாயத்து நனம்தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணைஎழு அன்ன 10
நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிப்
பிணம்பிறங்(கு) அழுவத்துத் துணங்கை ஆடிச்
சோறுவே(று) என்னா *ஊன்துவை அடிசில்*
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
முள்இடு(பு) அறியா ஏணித் தெவ்வர் 15
சிலைவிசை அடக்கிய மூ வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோநின் முன்னும் இல்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
20 விலங்குவளி கடவும் துளங்(கு)இரும் கமம்சூல் 20
வயங்குமணி இமைப்பின் வேல்இடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: ஊன்துவை அடிசில்
பாட்டு - 46
இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத்
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேர்யாழ் பாலை பண்ணிப் 5
பணியா மரபின் உழிஞை பாட
இனிதுபுறந் தந்(து)அவர்க்(கு) இன்மகிழ் சுரத்தலின்
சுரம்பல கடவும் *கரைவாய்ப் பருதி*
ஊர்பாட்(டு) எண்ணில் பைந்தலை துமியப்
பல்செருக் கடந்த கொல்களிற்(று) யானைக் 10
கோடுநரல் பெளவம் கலங்க வேல்இட்(டு)
உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய
வெல்புகழ்க் குட்டுவன் கண்டோ ர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: கரைவாய்ப் பருதி
பாட்டு - 47
அட்(டு)ஆ னானே குட்டுவன் அடுதொறும்
பெற்(று)ஆ னாரே பாசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்
சொசுரை கவரும் நெய்வழி(பு) உராலின் 5
பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல
*நன்நுதல் விறலியர்* ஆடும்
தொல்நகர் வரைப்பின்அவன் உரைஆ னாவே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நன்நுதல் விறலியர்
பாட்டு - 48
பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி
ஒண்நுதல் விறலியர்க்(கு) ஆரம் பூட்டிக்
கெடல்அரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொ(டு) உழந்த பனித்துறைப் பரதவ
ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்(டு)இவர் 5
கொள்ளாப் பாடற்(கு) எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன்எனத் தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனைசுடு கனைஎ எத்தலின் பொதும் 10
இகழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் *பேர்எழில் வாழ்க்கை* 15
மேவரு சுற்றமோ(டு) உண்(டு)இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே.
துறை: இயன்மொழிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: பேர்எழில் வாழ்க்கை
பாட்டு - 49
யாமும் சேறுக நீயிரும் வம்மின்
துயிலுங் கோதைத் துளங்(கு)இயல் விறலியர்
கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனி(து) உணீஇயர்
களிறுபரந்(து) இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திந்து கொட்ப 5
எஃகுதுரந்(து) எழுதரும் கைகவர் கடும்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட *செங்கை மறவர்* 10
நிறம்படு குருதி நிலம்படர்ந்(து) ஓடி
மழைநாள் புனலின் அவல்பரந்(து) ஒழுகப்
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
வளன்அற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் 15
கருஞ்சினை விறல்வேம்(பு) அறுத்த
பெருஞ்சினைக் குட்டுவன் கண்டனம் வரற்கே.
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: செங்கை மறவர்
பாட்டு - 50
மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கால்மயங்கு கதழ்உறை ஆலியொடு சிதறிக்
கரும்(பு)அமல் கழனிய நாடுவளம் பொழிய
வளம்கெழு சிறப்பின் உலகம் புரைஇச்
செங்குணக்(கு) ஒழுகும் கலுழி மலிர்நிறைக் 5
காவி அன்றியும் பூவி புனலொரு
மூன்றுடன் கூடிய கூடல் அனையை
கொல்களிற்(று), உரவுத்திரை பிறழ அவ்வில் பிசிரப்
புரைதோல் வரைப்பின் எஃகுமன்ண அவிர்தர
விரவுப்பணை முழங்(கு)ஒலி வொணஇய வேந்தர்க்(கு) 10
அரணம் ஆகிய *வெருவரு புனல்தார்*
கல்மிசை யவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர்கடந்(து) உருத்த
ஆள்மலி மருங்கின் நா(டு)அகப் படுத்து
நல்இசை நனந்தலை இய ஒன்னார் 15
உருப்(பு)அற நிரப்பினை ஆதலின் சாந்துபுலர்பு
வண்ணம் நீவி வகைவனப்(பு) உற்ற
வாஞிமி(று) இமிரும் மார்புபிணி மகளிர்
விமென் கூந்தல் மெல்அணை வதிந்து
கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் 20
பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழ
எவன்பல கழியுமோ பெரும பல்நாள்
பகைவெம் மையின் பாசறை மாணஇப்
பா(டு)அரி(து) இயைந்த சிறுதுயில் இயலாது
கோடு முழங்(கு) இமிழ்இசை எடுப்பும் 25
பீடுகெழு செல்வம் மாணஇய கண்ணே.
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: *வெருவரு புனற்றார்*
(பதிகம்)
வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கான்நவில் கானம் கணையின் போகி 5
ஆய அண்ணலை வீட்டிப் போசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி
இனம்தொ பல்ஆன் கன்றொடு கொண்டு
மாறா வல்வில் இடும்பின் புறத்(து)இறுத்(து)
உறுபுலி அன்ன வயவர் வீழச் 10
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
பழையன் காக்கும் கரும்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
வால்இழை கழித்த நறும்பல் பெண்டிர் 15
பல்இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவின் சோழர்குடிக்(கு) உயோர்
ஒன்பதின்மர் வீழ வாயில்புறத்(து) இறுத்து
நிலைச்செருவின் ஆற்றலை அறுத்துக் 20
கெடல் அரும் தானையொடு
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த
காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: சுடர்வீவேங்கை, தசும்புதுளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபுநோன்றொடை, ஊன்றுவையடிசில், கரை வாய்ப்பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில்வாழ்க்கை, செங்கை மறவர், வெருவருபுனற்றார்.
இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும் தன்மகன் குட்டுவன் சேரலையுங் கொடுத்தான் அக்கோ.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.
ஐந்தாம் பத்து முற்றிற்று
ஆ றா ம் ப த் து
பாடப்பட்டோ ன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாட்டு - 51
துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர
விளங்(கு)இரும் புணா உருமென முழங்கும்
கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்
கூவல் துழந்த தடந்தாள் நாரை
குவிஇணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும் 5
வண்(டு)இறை கொண்ட தண்கடல் பரப்பின்
அடும்(பு)அமல் அடைகரை அலவன் ஆடிய
*வடுஅடு நுண்அயிர்* ஊதை உஞற்றும்
தூஇரும் போந்தைப் பொழில்அணிப் பொலிதந்(து)
இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் 10
வெறிஉறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி
அரவழங்கும் பெரும்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பெளவத்துக்
குணகுட கடலோ(டு) ஆயிடை மணந்த 15
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
நனைஉறு நறவின் நா(டு)உடன் கமழச்
சுடர் நுதல் மடநோக்கின்
வாள்நகை இலங்(கு)எயிற்(று) 20
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே
மழைதவழும் பெருங்குன்றத்துச் 25
செயிர்உடைய அர(வு)எறிந்து
கடும்சினத்த மிடல்தபுக்கும்
பெரும்சினப்புயல் ஏ(று)அனையை
தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
எஃ(கு)உடை வலத்தர்நின் படைவழி வாழ்நர் 30
மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்(து) ஊ(று)அளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை
கைவல் இளையர் கையலை அழுங்க
மாற்(று)அரும் சீற்றத்து மாஇரும் கூற்றம் 35
வலைவித் தன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை செருவித் தானே.
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: வடுவடு நுண்ணயிர்
பாட்டு - 52
கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலந் தாணஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசைதிந் தாங்கு
மைஅணிந்(து) எழுதரும் ஆயிரம் பஃறோல்* 5
மெய்புதை அரணம் எண்ணா(து) எஃகுசுமந்து
முன்சமத்(து) எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட
நல்அமர்க் கடந்தநின் செல்உறழ் தடக்கை 10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்(பு)அறி யாஎனக் கேட்டிகும் இனியே
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீ 15
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல்அம் தித்தி
ஈர்இதழ் மழைக்கண் பேர்இயல் அவை
ஒள்இதழ் அவிழ்அகம் கடுக்கும் சீறடிப்
பல்சில கிண்கிணி சிறுபர(டு) அலைப்பக் 20
கொல்புனல் தளின் நடுங்குவனள் நின்றுநின்
எறியர் ஓக்கிய *சிறுசெங் குவளை*
ஈஎன இரப்பவும் ஒல்லாள் நீஎமக்(கு)
யாரை யோஎனப் பெயர்வோள் கைஅதை
கதும்என உருத்த நோக்கமோ(டு) அதுநீ 25
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி
அகல்இரு விசும்பில் பகல்இடம் தாணஇயர்
தெறுகதிர் திகழ்தரும் உழுகெழு ஞாயிற்(று)
உருபுகிளர் வண்ணம் கொண்ட 30
வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே.
*பஃறோல் = பல்தோல்
துறை: குரவைநிலை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: சிறுசெங்குவளை
பாட்டு - 53
வென்றுகலம் தாணஇயர் வேண்டுபுலத்(து) இறுத்தவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை ஆகுமதி எம்என்(று) அருளிக்
கல்பிறங்கு வைப்பின் கட(று)அரை யாத்தநின்
தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின் 5
செம்பொறிச் சிலம்பொ(டு) அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்(பு)உடை வாயில்
கோள்வல் முதலைய *குண்டுகண் அகழி*
வான்உற ஓங்கிய வளைந்துசெய் புசை
ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி 10
நின்னின் தந்த மன்எயில் அல்லது
முன்னும் பின்னும்நின் முன்னோர் ஓம்பிய
எயில்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறி(து)ஆறு செல்மதி சினம்கெழு குருசில்
எழூஉப்புறம் தாணஇப் பொன்பிணிப் பலகைக் 15
குழூஉநிலைப் புதவின் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
மேம்படு வெல்கொடி நுடங்கத் 20
தாங்கல் ஆகா ஆங்குநின் களிறே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: குண்டுகண் அகழி
பாட்டு - 54
வள்ளியை என்றலின் காண்குவந் திசினே
உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
வீங்(கு)இறைத் தடைஅய அமைமருள் பணைத்தோள்
ஏந்(து)எழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்
பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல் 5
மின்இழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண் தீர நாள்தொறும்
உரைசால் நன்கலம் வரை(வு)இல வீசி
அனையை ஆகல் மாறே எனையதூஉம்
உயர்நிலை உலகத்துச் செல்லா(து) இவண்நின்(று) 10
இருநிலம் மருங்கின் நெடிதுமன் னியரோ
நிலந்தப விடூஉம் ஏணிப் புலம்படர்ந்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
ஏவல் வியம்கொண்(டு) இளையரொ(டு) எழுதரும் 15
ஒல்லார் யானை காணின்
*நில்லாத் தானை* இறைகிழ வோயே.
துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நில்லாத்தானை
பாட்டு - 55
ஆன்றோள் கணவ சான்றோர் புரவல
நின்நயந்து வந்தனென் அடுபோர்க் கொற்றவ
இன்இசைப் புணா இரங்கும் பெளவத்து
நன்கல வெறுக்கை *துஞ்சும் பந்தர்க்*
கமழும் தாழைக் கானல்அம் பெருந்துறைத் 5
தண்கடல் படப்பை நல்நாட்டுப் பொருந
செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வால்ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்
வாரார் ஆயினும் இரவலர் வேணடித் 10
தோன் தந்(து)அவர்க்(கு) ஆர்பதம் நல்கும்
நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்
வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறம் தந்து பொங்கல் ஆடி
விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் 15
சென்றா லியரோ பெரும அல்கலும்
நனம்தலை வேந்தர் தார்அழிந்(து) அலற
நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத்
தாங்குநர்த் தகைத்த வொள்வாள் 20
ஓங்கல் உள்ளத்துக் குருசில்நின் நாளே.
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர