|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி > பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' > சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் > 'நற்போக்கும்' 'முற்போக்கும்' > 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் > சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
20th Century Eelam Tamil Literature at Project Madurai
![]() EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam
To view the Tamil text correctly you need to set
up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block
(Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on
your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or
Windows XP). and ii) Use a browser that is capable of handling UTF-8 based
pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as
the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be
downloaded from
here] 1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி 2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' 3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் 4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்' 5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் 6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் 7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் 8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு 4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்' எஸ்.பொன்னுத்துரையை அணுகும்போது புதிய பரம்பரைக்கு மட்டுமே உரிய பல கோணங்கொண்ட ஒரு பேர்வழியைச் சந்திக்கிறோம். பல நிறம் காட்டும் பல கோணங்கள். முந்திய பரம்பரையிலிருந்து இவரை ஒத்தவர் ஒருவரைக் காணவே முடியாது. புதிய பரம்பரையின் முந்திய பரம்பரையிலிருந்து சிருஷ்டி இலக்கிய ரீதியில் வேறுபடுத்துவதற்குப் பெரும்பாலும் இவர் ஒருவரையே எடுத்துக்கொண்டால் போதும் என்று கூடச் சொல்லலாம். அதனால் ஓரளவுக்கு 1956 முதல் 63இன் ஆரம்பம் வரையுள்ள நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி பற்றிய வரலாறு பொன்னுத்துரையின் வரலாறுமாகும். 56க்குப் பின் வந்த பரம்பரையையும் அதன் சாதனைகளையும் நிரந்தரமாக நிலைத்து நிற்கச் செய்யக்கூடிய ஒரு சிலரில் இவர் முக்கியமானவர். ஆனால் அதேசமயம் புதிய பரம்பரையையும் அதன் சாதனைகளையும் பழுதாக்கிவிடக் கூடியவரும் இவரேதான். அதற்குரிய ஓர் வித்தும் இவரது வளர்ச்சியிலே சேர்ந்து நிற்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது. அதோடு பொன்னுத்துரையைப் படிக்கும் போதுதான் 'முற்போக்கு' இலக்கியச் சர்வாதிகாரம் என்பது பெரும்பாலும் வெறும் மேற்பரப்பு விசயம் என்பதும், உள்ளே இலக்கிய சிருஷ்டி ரீதியிலும் தர ரீதியிலும் அந்தச் சர்வாதிகாரத்தின் நிலை மெல்லிதாய் மறைக்கப்பட்ட சூன்யந்தான் என்பதும் தெரியவரும். ஆனால் அதே சூன்யத்தை 'முற்போக்கு'க் கூட்டினர் பொன்னுத்துரையின் செல்வாக்கைப் பிரதிபலிக்கும் சிருஷ்டிகளைக் கொண்டேதான் இப்போ மறைத்து நிரப்ப முயல்கிறார்கள் என்பதை, அடுத்து ஆராயும்போது அது பொன்னுத்துரையின் தரத்திலுள்ள ஓட்டையையும் கூடவே காட்டிவிடும். உண்மையில் பொன்னுத்துரைக்கும் 'முற்போக்கு'க்
கூட்டினருக்கும் அந்தளவு பெரிய வித்தியாசமில்லை. 'நற்போக்கு' என்பது 'முற்போக்கு'க்
கூட்டின் மறுபிறப்புத்தான். பொன்னுத்துரை எழுதியவற்றைத்தான், எழுதிய
மாதிரிதான் 'முற்போக்கு' எழுத்தாளர்கள் இப்போ எழுதுகிறார்கள். 'முற்போக்கு'க்
கூட்டு செய்தவற்றைத்தான் இப்போ பொன்னுத்துரை செய்கிறார். இன்னும்
அதிகமாகச் செய்கிறார். 'முற்போக்கு'ம் சரி, 'நற்போக்கு'ம் சரி அவை
செய்யும் இலக்கியத் திருகுதாளங்களைப் பார்க்கும்போது இரண்டுமே நம்
இலக்கிய வளர்ச்சியில் வீழ்ந்துவிட்ட சாபக்கேடுகளோ என்றுங்கூட சில
சமயங்களில் பயப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த பயம் பின்பு வர
வேண்டியது. ஏழாண்டுகளுக்குப் பின் வந்த இரண்டாண்டுகளுக்குரிய பயம் அது.
அதோடு அதற்கெதிராக நம்பிக்கை ஊட்டுபவையும் இல்லாமலில்லை. முன்பைவிட
அதிகமாகவும் இருக்கின்றன. எனவே அதை விட்டு விட்டு ஆரம்பத்துக்குப்
போகலாம். அவற்றிலிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. அச்சு அச்சாகப் பொருந்திப் பார்க்கவும் கூடாது. இப்போ ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதைத் திருப்பிப் பார்க்கும்போது அந்த உவமை விசித்திரமாகப் படக்கூடும். அது அப்போது சிறீதரன் என்ற பெயரில் பொன்னுத்துரை தன்னைப்பற்றித் தானே எழுதி, தான் ஒரு விமர்சகன் என்று நிரூபிக்க முயன்ற காலத்தை நினைவில் வைத்து எழுதப்பட்டது. பொன்னுத்துரை தனக்குப் பொறுப்பாகக் கைலாசபதியையும், கனக ரத்தினாவையும் சுட்டிக்காட்டிய காலம் அது. ஆனால் சிறீதரனின் கட்டுரைகள் வந்துகொண்டிருக்கும்போது பொன்னுத்துரை தேடிய அதே பொறுப்புகள் தளர்ந்துபோய் விழத் தொடங்கிவிட்டன. இன்று நிலை வேறு. அதோடு தெளிவுங்கூட. முதலில் கைலாசபதியை லெனினாக உவமிக்க முடியாது. அந்தளவுக்கு அவரது திறமை சோபிக்கவில்லை என்றாலும், அதைத்தான் ஏற்றுக்கொண்டாலும், கனக ரத்தினாவை ட்றொட்ஸ்கியோடு ஒப்பிட் முடியாது. கனக ரத்தினாவை சும்மா ஒரு வெளிப் பேர்வழி. இலக்கிய ரீதியில் ஒரு fellow traveller. அவரின் திறமையையும் பெயரையும் 'முற்போக்கு'க் கூட்டினரும் சரி, பொன்னுத்துரையும் சரி, தங்களின் நம்மைக்காகத்தான் அதிகம் பாவித்தனர். பொன்னுத்துரையை ஸ்டாலினுக்கு உவமிக்க முடியாது. காரணம், கடைசியில் அவர்தான் வெளியே துரத்தப்பட்டவர். ஒரு ட்றொட்ஸ்கி. எனவே, உவமை முன்னர் பொருந்திய அளவுக்கு இப்போ பொருந்தாது. ஆனால் அதற்காக அதை உதறிவிடவும் முடியாது. 'விமர்சக விக்கிரகங்கள்'ளில் பொன்னுத்துரையையும் கனக செந்தியையும் நான் முக்கியமாக ஆராய முயன்றேன். இருவரையும் நேரடியாகச் சந்தித்துப் பழகும் முன் அவர்களுடைய எழுத்துகள் மூலமே அவதானித்து விடுபட்ட ஒரு நிலையிலிருந்து எடைபோட்ட ஒரு நிகழ்ச்சி அது. ஆனால் இன்று ஒருவரையும் நேரில் கண்டு பழகிய பின்பும் முன்பு தெரியவரும் ஒவ்வொரு நுணுக்கமும் அவர்களைப்பற்றிய என் பழைய கணக்கீட்டில் கொஞ்சமும் பிசகில்லாமல் பொருந்துவதைப் பார்க்கும்போது முன்பு எப்படி என்னால் அப்படி எடைபோட முடிந்தது என்று ஆச்சரியப்பட வேண்டித்தான் இருக்கிறது. 'விமர்சக விக்கிரகங்க'ளில் கனக செந்தியைப்பற்றிய பகுதி வந்ததுபோல் பொன்னுத்துரையைப்பற்றிய பகுதி பூரணமாகப் பிரசுரிக்கப்படவில்லை. அதற்கிடையில் அவருடைய tactics ஒருவேளை குறுக்கிட்டிருக்க வேண்டும். அவரைப் பற்றி அப்போது நான் சொல்லியவற்றை நிரூபிக்க அதுவே விசயம் தெரிந்தவர்களுக்குப் போதுமாக இருந்திருக்கும். 'முற்போக்கு'க் கூட்டிலிருந்து பொன்னுத்துரை வெளியே துரத்தப்பட்டாலும் - அதாவது அவர்களுடைய அந்தரங்க விசயங்களில் பங்குபற்ற இடமளிக்காமல் மெல் மெல்ல வெளியே ஒதுக்கப்பட்டாலும் - அந்தக் கூட்டில் எவராவது ஒரு ஸ்டாலின் இருந்திருந்தால் அது பொன்னுத்துரையாகத்தான் இருக்கவேண்டும். ஸ்டாலின் மட்டுமல்ல, ஹிட்லருங்கூட! ஸ்டாலின் மெல்ல மெல்ல ஹிட்லராக வீழ்கிறார். அதனால் மற்றவர்களுக்கு ஆபத்துவரக் காத்திருக்கிறது என்று 'விமர்சக விக்கிரகங்க'ளில் நான் கணித்திருந்தேன். அதை அதற்கு முன்பே உணர்ந்து தானோ என்னவோ அவர்கள் தங்கள் கூட்டிலிருந்து அவரை ஒதுக்கிவிட்டனர். எனவே, அதற்குப்பின் பொன்னுத்துரை ஒரு ட்றொட்ஸ்கி. ஸ்டாலின், ட்றொட்ஸ்கி ஆகிவிட்டார். ஆனால் ட்றொட்ஸ்கிக்கு முடியாதது ஸ்டாலினுக்கு முடியும். பொன்னுத்துரை இப்போ சாதித்திருப்பது அதைத்தான். ஓர் இடத்தில் இல்லாவிட்டால், ஒர் இடத்திலிருந்து ஒதுக்கப்பட்டால் இன்னோர் இடத்தில் முந்தியதை விட அதிக அதிகாரத்தோடு ஒதுக்கித் தள்ளியவர்களே தொடைநடுங்கும் விதத்தில் மிகப் பயங்கரமாக, அவர்களை விட மிஞ்சிய மாசேதுங் சாணக்கியத்துடன், ஹிட்லேரியன் அதிகாரத்துடன், கோயபெல்ஸின் பிரசாரத்துடன் தன்னை ஸ்தாபித்துக்கொண்டுள்ளார். புதிய பொன்னுத்துரையிடம், 'நற்போக்கு'
பொன்னுத்துரையிடம், பழைய ஸ்டாலின், ஹிட்லர் தன்மை மட்டுமல்ல புதிய
மாசேதுங்-ட்றொட்ஸ்கி கீற்றுகளும் சேர்ந்திருக்கின்றன.
ஸ்டாலின்+ஹிட்லர்+மாசேதுங்+ட்றொட்ஸ்கி= அதிகாரத்தின் அதி உச்சம் + பல
திசையும் கை நீட்டும் அதன் அதி விரிவு அல்லது இலக்கிய ரீதியில் ஈழத்துத்
தமிழ் இலக்கிய உலகில் 'நற்போக்கு' பொன்னுத்துரை! 'முற்போக்கு'க்
கூட்டினருக்கு இப்போ நித்திரையில்கூட நிம்மதியிருக்காது. நான் எழுத்தாளன் பக்கம். எனவே, மேலே
வந்தவை உயர்வு நவிற்சியாகிப் போய் நிதானம் கெட்டுப் போச்சே என்று தனக்கே
உரிய மலட்டுத்தனத்தோடு யாராவது விமர்சகர் முகத்தைச் சுளித்துக்கொண்டால்
எனக்குக் கவலை இல்லை. கட்சிப் பிரியர்களுக்கு என் அனுதாபங்கள்.
அவர்களுடைய பக்தி கலந்த வார்த்தைப் பிரயோகங்களின்படி மேலே வந்த
பெயர்களுக்கு அர்த்தங்கள் வேறு என்றால் நான் குற்றவாளி அல்ல. அந்த
வார்த்தைச் சுவர்களுக்கு அப்பால் எப்போ அவர்கள் எழுதுகிறார்களோ
அப்போதான் அவர்கள் உண்மையாக இலக்கியத்தை அணுகலாம். பழைய சரித்திரத்தில்
வரும் நெப்போலியன், சீசர் போன்ற பெயர்கள் பேச்சுவழக்கில் என்ன
அர்த்தங்களில் பேசப்படுகின்றனவோ அதேபோல் தான் மேலே வந்த பெயர்கள்
அவற்றுக்கே உரிய சில பொது அர்த்தங்களை இலக்கிய ரீதியில் எடுக்கின்றன.
கேலி கலந்த உயர்வு நவிற்சி. ஓ, பசுவுக்கு நான்கு கால்கள் உண்டு என்று
சொல்வதுபோல் இருக்கின்றன இந்த விளக்கங்கள். Truisms. ஆனால் ஈழத்தில்
அவைகூட சிலருக்கு விளங்காமல் போய்விடுகின்றனவே. நிற்க, 'முற்போக்கு'க்
கூட்டிலிருந்து பொன்னுத்துரை ஏன் வெளியே ஒதுக்கப்பட்டார்? அந்தக்
கேள்விக்குரிய விரிவான பதில் பொன்னுத்துரையை மட்டுமல்ல 'முற்போக்கு'க்
கூட்டினரையும் விளக்கக் கூடியது. இனி அதை ஆராயலாம். அப்படிப் பிறந்திருந்தால் அவை பெரும்பாலும் 'முற்போக்கு'க் கூட்டுக்குச் சொந்தமானவையாக இருக்கவில்லை. இப்படிக் கூறுவது முன்னுக்குப்பின் முரணாகக் கூறுவதாகாது. அதாவது இப்படிக் கூறுவதால் 56க்குப் பின் வந்த புதிய பரம்பரை எப்படிப் பழைய பரம்பரையை விடச் சிறந்ததாகும் என்ற கேள்வி எழத் தேவையில்லை. காரணம், முதலில் 56க்குப் பின் வந்த புதிய பரம்பரையை முற்றாக 'முற்போக்கு'க் கூட்டோடு ஒற்றுமைப்படுத்தி அதுதான் இது, இதுதான் அது என்று பார்க்கக் கூடாது. இரண்டாவது, புதிய பரம்பரையோடு ஒப்பிட்டுக் கூறுவதாக நினைப்பது தவறு. பழைய பரம்பரையின் சிருஷ்டிகளோடு ஒப்பிடும்போது புதியவை பெரும்பாலும் தரமும் சுயஉணர்வும் தனித்தன்மையும் கூடியவையே. ஆனால் அதற்காக, தனியே எடுக்கப்படும்போது அவை தங்களுக்குரிய குறைகளைக் காட்ட மாட்டா என்பதல்ல அர்த்தம். பெரும்பாலும் அவை எப்படிக் காட்டவே செய்கின்றன. அவற்றைத்தான் இங்க நான் குறிப்பிடுகிறேன். கைலாசபதி புதிய பரம்பரையைப் பிரித்துக் காட்டும் நிறைவுகளை உடையவராக இருந்தாலும் தனியாக எடுத்து ஒர் விமர்சகன் என்ற முறையில் அவரை ஆராயும் போது அப்படிப் பல குறைகளை உடையவராகத் தெரிந்தாரோ அப்படி. அதாவது எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலத்துக்கும் செல்லுபடியாகக் கூடிய ஒரு பொதுவான அடிப்படையில் அளப்பதைக் குறிப்பிடுகிறேன். அத்தகைய அடிப்படையில் பார்க்கும்போதுகூடத் தேறிவிடும் சில கதைகள் புதிய பரம்பரைக்குரியவையாய்ப் பிறந்துதான் இருக்கின்றன. ஆனால் அவை பொதுவாக பொன்னத்துரை போன்ற 'முற்போக்கு'க் கூட்டுக்கு அப்பாற்பட்டவர்களிடமிருந்தே பிறந்திருக்கின்றன. எனவே 'முற்போக்கு'க் கூட்டின் பிரபல்யம் அதன் சிருஷ்டி எழுத்தாளர்களின் தரத்தை விட அதிகமான பார்வை ஆழத்தினாலும் அவர்கள் காட்டிய பிரசுர வசதிகளினாலும் தான் அதிகமாக ஏற்பட்டது என்று கூறினால் அதில் முன்னுக்குப் பின் முரணாக எதுவும் இல்லை. டொமினிக் ஜீவாவையும், டானியலையும், செ.கணேசலிங்கத்தையும் மட்டும் நம்பி, பெரும்பாலும் அவர்கள் மூலமே தங்கள் புதிய பார்வைக்கு இலக்கிய உருவம் கொடுக்க நினைத்த எந்தக் கூட்டும் அதிக நாட்கள் நின்று பிடிக்க முடியாது. ஆனால் அவர்கள்தான் 56க்குப் பின்வந்த 'முற்போக்கு'ச் சர்வாதிகாரத்தின் முக்கிய சிருஷ்டி எழுத்தாளர்கள். எனவே, 'முற்போக்கு'க் கூட்டின் சர்வாதிகாரம் பொதுப் பின்னணியின் விழிப்புக்கேற்ற வகையில் இலக்கிய அக்கறையையும் பார்வை ஆழத்தையும் ஓரளவுக்குக் கொடுத்தாலும் அதே அளவுக்கு ஈடான இலக்கியத் தரமுள்ள சிருஷ்டிகளையும் தனது பொது அம்சமாகப் பிறப்பிக்காமல் இருந்ததில் வியப்பொன்றுமில்லை. அதோடு டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் தங்கள் ஆரம்பக் கதைகளின் தோற்றத்துக்கு பொன்னுத் துரைக்குப் பெரிதும் கடமைப்பட்டவர்கள். இங்கு எதையும் ஒளித்து மறைக்க நான் விரும்பவில்லை. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை, பொன்னுத்துரை இப்போ போகுமிடமெல்லாம் பறைசாற்றித் திரியும் ஒன்றை, சிலர் சொல்வதுபோல், 'பொன்னுத்துரை ஓர் காலத்தில் இன்றைய பிரபல்ய எழுத்தாளர்களின் புனைபெயர்களில் கதைகள் எழுதினார்' என்று மறைத்துக் கூற நான் விரும்பவில்லை. அதுவும் ஒருவகை மத்தியதர வர்க்க மரியாதை. அதை நான் விரும்பவில்லை. என் மூலமாகவாவது விசயம் பச்சையாக அச்சில் ஏறி, அம்பலமாகி, ஆட்சேபணைகளைக் கொண்டுவந்து எல்லாக் காலத்துக்கும் செல்லுபடியாகும் வகையில் முடிவு கட்டப்படட்டும். டொமினிக் ஜீவா, டானியல் போன்ற சில 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கு ஆரம்பத்தில் பொன்னுத்துரைதான் கதைகள் எழுதிக் கொடுத்தாராம். அவர்களின் பிரபல்யமான சில கதைகள் உண்மையில் பொன்னுத்துரையினுடையவைதானாம். என்ன 'தானாம்'? ஆமாம், அவை நிச்சயமாக ஆராயப்பட்டு முடிவு கட்டப்படும்வரை 'தானாம்' என்று இழுப்பது அவசியமாகிறது. அதாவது, எந்தளவு தூரம் என்பதை அறியும்வரை. ஆனால் ஒரு சிறிய அளவுக்காவது அது உண்மைதான் என்பது என் எண்ணம். அந்தளவுக்குத் தான் அதை இங்கே இந்தக் கட்டுரையை விளக்க நான் பாவிக்கிறேன். இந்த காரணமாய் அவற்றைப்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிறந்தால் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு நன்மையாய் இருப்பதோடு இனி வரக்கூடிய வேறு புதியவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும். ஆனால், அதற்காக நான் மேற்கூறிய எழுத்தாளர்களைக் கேவலமாகக் கருதுகிறேன் என்று நினைக்கத் தேவையில்லை. இன்று சுயமாக எழுதும் எத்தனையோ பேர்கள் பொன்னுத்துரை போலவே எழுதுவதில் பெருமை கொள்கிறார்கள். வேறு சிலர் பொன்னுத்துரையின் கதைகளையே தங்கள் பெயரில் பிரசுரிக்கிறார்கள். அகஸ்தியரின் 'உணர்வூற்றுச் சித்திரங்கள்' பொன்னுத்துரையினுடையவைதானாம். ஆமாம், 'னாம்.' அந்த 'உணர்வூற்றுச் சித்திரங்கள் 'என்னைப் பொருத்தவரையில், பெரும்பாலும் கீறல் விழுந்த றெக்கோட்டைப்போல் ஒன்றையே திருப்பித் திருப்பி இழுக்கும் அர்த்தமற்ற வெறும் ஒலிக்கூட்டம் நிறைந்த விழல்கள்தான். ஆனால் அவை உண்மையாக யாருடைய விழல்கள் என்பதை முடிவு கட்டுவது அத்தியாவசியமானது. அப்படியிருக்கையில் அன்று கட்சி ஒன்றுமை காரணமாய், இலக்கிய விழிப்பின் ஆரம்பத்தில் சிலர் தவறு செய்ததைப்பற்றி நாம் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அத்துடன், மேற்கூறிய எழுத்தாளர்கள் தாங்களாகவே கதைகளை மறுபிரதி செய்து எழுதினார்கள் என்று சொல்லப்படும்போது இருந்ததைவிட, இப்போ அவர்களின் தரம் நல்லதுங்கூட. அண்மையில் வெளிவந்த ஜீவாவின் 'படுமுடிச்சு' என்ற கதை கனக செந்திநாதனுக்கு ஓர் ஆரம்பகால எழுத்தாளனின் சிருஷ்டியாகப் படுகிறது. 'கறமுறா' என்ற சொற்கள் வர எழுதினால்தான் அது சிறுகதையாகும் என்பது பொன்னுத்துரையின் கண்கொண்டு பார்ப்பதினால் ஏற்படும் தவறு. என்னைப் பொருத்தவரையில் அது ஓர் நல்ல சிறு கதை. சில மேல்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளில் வரும் ஒருவகையான பிடிபடாமல் நழுவிவிடும் கலையம்சத்தைப் பிரதிபலிப்பதோடு, வெளியே தெரியாமல் படுமுடிச்சுப் போட்டு யாழ்ப்பாணத்தவர் பதுக்கிவைக்கும் இரண்டு முக்கிய விஷயங்களை வெளிப்படுத்தி நம்மவரின் வெளி வேசத்தைச் சாடவும் செய்கிறது. வெளியே சமஷ்டியும் தமிழும் கேட்கும் யாழ்ப்பாணம் உள்ளே இரகசியமாய் சிங்களம் படிக்கிறது. வெளியே பத்தினி வேசம் போடும் யாழ்ப்பாணப் பெண்மையும் பண்பாடும் உள்ளே 'சிற்றின்பம்' படிக்கிறது. கிழவி மூலம் பிரதிபலிக்கப்படும் நம் பழைய யாழ்ப்பாணக் கலாச்சாரம் இன்று அதனை அறியாமலேயே எத்தனை ஊழல்களை முடிச்சுப்போட்டு மறைத்து வைத்திருக்கிறது. எனவே, அவர்களை நான் கேவலப்படுத்துகிறேன் என்று நினைக்கத் தோன்றவில்லை. ஆனால் அது வேறு. உண்மை வேறு. அதோடு, அதற்காக உண்மையை மறைத்துவிடவுங் கூடாது, முடியாது. ஏதோ, எப்படியோ பொன்னுத்துரை அவர்களுக்குப் பெரிய எழுத்தாளனாய் அப்போது தெரிந்தார். பொன்னத்துரை புதிய பரம்பரைக்குரிய ஓரு பெரிய எழுத்தாளன்தான். ஆனால் அப்படி ஒரு விமர்சகன் அல்லது தன்னம்பிக்கையுள்ள எழுத்தாளன் சொல்வது வேறு, தன்னம்பிக்கையுள்ள திறமையும் அவ்வளவு இல்லாத இரண்டாந்தரப் பேர்வழிகள் சொல்வது வேறு. இந்த இரண்டாந்தரப் பேர்வழிகளுக்கு பொன்னுத்துரையைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. பொன்னுத்துரைதான் எல்லாம். பொன்னுத்துரைதான் மன்னன். பொன்னுத்துரையின் நடைதான் நடை. மற்றவை எல்லாம் கட்டுரை நடை. கதையென்றால் பொன்னுத்துரையின் கதைதான் கதை! அப்படிச் சிந்திப்பது சுத்த மடத்தனம் மட்டுமல்ல, முழு அடிமை மனப்பான்மையுங்கூட, அல்லது வளரிளம் பருவ அறிவற்ற அபிநயப்போக்கு. ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் துரதிர்ஷ்ட வசமாக 'முற்போக்கு'க் கட்சியில் அதிகமாக இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். ஜீவா போன்றவர்களும் அப்படித்தான் ஆரம்பத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் விசித்திரம் என்னவென்றால் பொன்னுத்துரையை வணங்கின அதே பேர்வழிகள் அவரைத் தங்களோடு ஓரே கட்சியில் வைத்திருக்க விரும்பவில்லை. அதன் உள் விவகாரங்களில் அவருக்கு இடமளிக்க விரும்பவில்லை. இடமளித்திருந்தால் அவர்களுக்கு ஆபத்து. அவர்களுக்கு மரியாதை இருந்திருக்காது. அதோடு இரவல் வாங்கிய அவர்களது பொட்டுக்கேடும் தெரியவந்துவிடும். இன்னுமொன்று. தலைமை தாங்கிய கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் சிருஷ்டி இலக்கியம் எழுதத் தெரியாத விமர்சகர்கள்தான். ஆரம்பகாலத்தில் அப்படிப்பட்டவர்கள் தலைமை தாங்கும்போது பள்ளிக்கூடங்களுக்கும் பல்கலைக் கழகங்களுக்குமுரிய ஒரு மலட்டுச் சூழ்நிலை academic சூழ்நிலை ஏற்படுமே ஒழிய சிருஷ்டித் தரம் நிறைந்த வேகம் பிறக்காது. அதோடு சிருஷ்டித் திறமை கொண்ட உண்மையான ஓர் எழுத்தாளனைக் காணும்போது அந்த மலட்டு வாத்திமாருக்குப் பொறாமை கலந்த எரிச்சல் ஏற்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பக்தி நிறைந்த வழிபாடு அந்த நிலையில் அவர்களுக்குக் கிடைக்காது. மாறாகத் தலைமைப் போட்டிக்குரிய அறிகுறிகள்தான் வளரத் தொடங்கியிருக்கும். எனவே 'முற்போக்கு'க் கூட்டில் பொன்னுத்துரையின் நிலையை கஷ்டமில்லாமல் விளங்கிக்கொள்ளலாம். அதிலிருந்து மற்றவர்கள் எல்லோருக்கும் அவர் ஓர் முள்ளாகத்தான் இருந்திருப்பார். இரவல் வாங்கிய எழுத்தாளர்களுக்கும் சரி, இரு சாராருக்கும் தங்கள் தங்கள் குறைகளை நினைவூட்டிய ஒரு முள். தங்களுக்குள்ளேயே ஒரு வழிபாடு கலந்த ஒரு மருட்சி நிலையை ஏற்படுத்திக்கொண்டு அதன் சௌகரியத்தைப் பொன்னுத்துரை இருக்கும் வரைக்கும் அவர்களால் சுகமாக அனுபவித்திருக்க முடியாது. எனவே, மறைமுகமாக 'முற்போக்கு'க் கூட்டுக்குரிய சாணக்கியத்தின் சாதனையால் அவர் மெல்ல வெளியே ஒதுக்கப்பட்டார். முதல் கூட்டத்தோடேயே அவருடைய கட்சி அங்கத்துவம் முடிந்துவிட்டது. ஒரு உதை. Expelled. அதன்பின் பொன்னுத்துரை வெளியே. Academic, சர்வாதிகாரத்துக்குரிய சரியான சொல். ஆனால் திறமையும் அறிவும் பொன்னுத்துரையை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியதால் மட்டும் பொன்னுத்துரை வெளியே ஒதுக்கப்படவில்லை. ராசதுரை, செல்வராசன், நந்தி, சொக்கன் போன்றவர்களிடமும் நியாயமான அளவுக்கு அவை இருக்கின்றனதானே? இருந்தும் அவர்களால் 'முற்போக்கு'க் கூட்டில் ஒட்டிக்கொள்ள முடிந்ததே? ஏற்கனவே இருந்தவர்களுக்கு அவர்கள் ஆபத்தாகப் படவில்லையே? ஆமாம், சர்வாதிகாரத்துக்கு ஆபத்து, திறமையும் அறிவும் மட்டுமல்ல. அவற்றைப்பற்றி அது அதிகமாகக் கவலைப்படுவதில்லை. பிரச்சாரம் என்ற ஒன்றால் அது அவற்றை நலமெடுத்துவிடும் (எத்தனை திறமான எழுத்தாளர்கள் 'முற்போக்கு'க் கூட்டுக்கு வெளியே இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களை அது எழுத்தாளர்கள் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறதா?) அது பயப்படும் ஒன்றே ஒன்று பலந்தான். பலம், பலம், சர்வாதிகாரம். சிந்திப்பதெல்லாம் அதிகாரத்தின் அடிப்படையில்தான். அது பயப்படுவதும் அதே அடிப்படையில்தான். அதிகாரம், பலம். அடுத்தவர்களிடம் அவை இருந்தால் அதற்கு நடுக்கம். (இப்போ 'நற்போக்கு' வளர்ச்சியில் 'முற்போக்கு'க்கு இருக்கும் பயம் அதைத்தான் அடிப்படையகக் கொண்டுள்ளது.) பொன்னுத்துரையிடம் திறமை மட்டும் இருக்கவில்லை. அவர்களைவிடப் பார்வை ஆழம் மட்டும் இருக்கவில்லை. பலமும் இருந்தது. அதாவது தலைமை வகிக்க வேண்டும் என்று, சர்வாதிகாரம் செய்ய வேண்டும் என்று ஆசையும் இருந்தது. ஸ்டாலினியக் கீற்று விழுந்த ஒரு தணியாத ஆசை. மற்றவர்களைப்போல் கூட்டின் தேவைக்கேற்பக் கூட்டை வளைக்கக் கூடிய ஓர் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு 'முற்போக்கு'க் கூட்டுக்குக்கூடத் தெரியாத மாசேதுங்கிய சாணக்கியமும் பொன்னுத்துரையிடம் இருந்தது; இருக்கிறது. 'முற்போக்கு'க் கூட்டுக்கு வேறு வழி இருக்கவில்லை. அவரை வெளியே ஒதுக்குவரைத் தவிர. ஆனால் வெளியே ஒதுக்கப்பட்டார் என்பது பொன்னுத்துரைக்கே தெரியாத விதத்தில் ஒதுக்கப்பட்டார். அது நேரடியாக உதைத்தெறிவதை விடப் பலம் வாய்ந்தது. அதைப்போல் கெட்ட விளைவுகளையும் கொண்டு வராது. நேரடியாக உதைத்துவிட்டால் பொன்னுத்துரை பல ரகசியங்களை அம்பலமாக்கிவிடுவார். அதோடு புதிய பலம் வாய்ந்த கூட்டை போட்டியாக அமைத்துவிடவும் கூடும். எனவே, மறைமுகமாக ராஜதந்திரமாக உதைக்கப்பட வேண்டும். Tactics வேண்டும். ஒதுக்கப்படுகிறேன் என்பதைப் பொன்னுத்துரையே உணராத வகையில் அவர் ஒதுக்கப்பட வேண்டும். அது முதலாவது. மட்டக்களப்புக்கும் (பொன்னுத்துரையின் இடம்) கொழும்பு ('தினகரன்,' கைலாசபதி, 'முற்போக்கு'க் கூட்டு, கூட்டங்கள் எல்லாம் அங்குதான்) யாழ்ப்பாணம் (ஜீவா, டானியல்) போன்ற மற்ற பகுதிகளுக்கும் இருந்த தூரம் அதை இலகுவாக்கும். பொன்னுத்துரைக்குத் தெரியாமல் எத்தனையோவற்றை அந்த நிலையில் செய்யலாம். இரண்டாவது, பொன்னுத்துரை என்பவர் ஓர் எழுத்தாளர் என்பது யாருக்கும் தெரியாமல் அமுக்கப்பட வேண்டும். இது கட்டாயம் கைலாசபதியினடைய ஆசையாய் இருக்க முடியாது. இருக்கவுமில்லை. மாறாக, இரவல் வாங்கிய மற்ற எழுத்தாளர்களுடையது. கைலாசபதி போன்றவர்கள் மீதும் இந்த எழுத்தாளர்களின் செல்வாக்குத்தான் அதிகமாக இருந்தது. எனவே, கைலாசபதி மீதுள்ள இவர்களின் செல்வாக்கு 'தினகரனை'யும் இவர்களின் சார்பாகப் பாதிக்கக் கூடியதாக இருக்கும்போது இந்த இரண்டாவது ஆசையும் ஓரளவுக்கு நிறைவேறக் கூடியதாய் இருந்திருக்கும். ஆனால் தூரத்தையும் வசதிகளையும் மேவிக்கொண்டு பொன்னுத்துரையின் திறமை போட்டியாக நின்றது. திறமைதான் மறைக்கப்பட்டிருந்தாலுங்கூட அவரின் அதிகார பிரபல்ய ஆசையை ஒரு நாளும் அமுக்கிவிட்டிருக்க முடியாது. மற்றவர்களைக் கருவிகளாக வைத்துத் தான் தலைமை தாங்க வேண்டும் |