|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி > பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' > சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் > 'நற்போக்கும்' 'முற்போக்கும்' > 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் > சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
20th Century Eelam Tamil Literature at Project Madurai
![]() EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam
To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here] 0. முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் 1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி 2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' 3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் 4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்' 5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் 6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் 7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் 8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு 1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி
மற்றைய ஓட்டங்களைப்போல் அதுவும் ஒரு புதிய ஓட்டம்; இன்னும்
முடியவில்லை; ஓடிக்கொண்டேருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் அது தன்னை
நிச்சயமாகப் பு¡¢ந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓர் ஆரம்ப
சலசலப்பு. அதனால், இன்னும் சிதறலாகவே ஓடுகிறது. அதற்கு¡¢ய கால முத்திரை
பதித்த திசையையும் படுகையையும் இனித்தான் அது கண்டுபிடிக்க எவ்வளவோ
காலம் இருக்கிறது. முடிவு என்பதே ஏற்படுமா? அது வேறு பிரச்சினை,
இப்போதைக்குத் தேவையில்லை. ஆனால், ஆரம்பம் நிச்சயம். அது 1956. இன்னும்
இளமையைக் கூட எட்டவில்லையெனினும் ஏறக்குறைய ஏழாண்டு ஓடிவிட்டிருக்கிறது.
அது முக்கியம். பரவலாகப் பார்த்தால் அவர்கள் தூங்குகிறார்கள்.
நாம்தான் துடித்துக்கொண்டு நிற்கிறோம். இனி, ஓட்டம் நம்முடையதுதான்.
பாரதியும் புதுமைப்பித்தனும் விட்டடத்திலிருந்து நாம்தான் புதுமையையும்,
புரட்சியையும் மரபையும் இனி வர்ப்பவர்கள். மெளனியும் சி.சு.
செல்லப்பாவும் மற்றவர்களுங்கூடனி நம் இயக்கத்தின் நிழலில்தான்
அளக்கப்படுவார்கள். இங்கு எனக்குப் பி¡¢யமான ஒரு உவமையைக் கையாள
விரும்புகிறேன். அல்பிரட் காஸ.¢ன் என்ற அமொ¢க்க விமர்சகர் இப்போக்னர்,
எமிங்வே கால இலக்கியங்களைப் பற்றிக் கூறும்போது ஆண்மையையும் வீரத்தையும்
எதிர்பார்க்கும் ஒரு விரகதாபமுள்ள பெண்ணைப் போல் ஐரோப்பாவும் இனி அமொ¢க்காவை
நோக்கித் தான் புதிய வீரமும் ஆண்மையுமுள்ள இலக்கியத்துக்காக ஏங்கிக்
கிடக்கும் என்று உவமித்தார். தமிழ்நாடும் அப்படியான இலக்கியத்துக்காக
இனி நம்மைத்தான் எதிர்பார்க்கும். அதற்கு அறிகுறியாக 1956க்குப் பின்
வந்த வளர்ச்சியே நிற்கிறது. அன்றுதொட்டு வளர்ந்த அவரது செல்வாக்கு இன்றுவரை நம் இலக்கிய உலகில் பலவித விளைவுகளை உண்டாக்கும் வகையில், நிழல் வி¡¢த்து, சிலசமயம் மிகப் பயங்கரமாகப் பேய் நிழல் வி¡¢த்து நிற்கிறது. 63ன் முடிவில் அவர் இங்கிலாந்துக்குப் போன பின்பும் அது தொடர்ந்து நிற்கவே செய்கிறது. என்றாலும், அவரது தற்காலிகமான பி¡¢வைச் சாட்டாக வைத்து நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியோடு சேர்த்து அவரது செல்வாக்கின் விளைவுகளையும் கணக்கெடுப்பது நியாயமாக்குந்தானே? நான் கைலாசபதியை வழிபடும் ஓர் பேர்வழியல்ல. என்றாலும், நேர்மையான ஒரு இலக்கியக் கணக்கெடுப்பில் நியாயமான இடம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்படவேண்டுமோ அவர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பவனுமல்ல. கைலாசபதி தோற்றுவித்த போக்குக்கும் அவரது இலக்கிய விமர்சனப் பார்வைக்கும், இந்தப் பாரபட்சமற்ற, புறக்கணிக்காத, நியாயமான கணக்கெடுப்பு என்ற என் கொள்கைக்குமிடையே மைல் கணக்கான தூரம் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்காக நாமும் திருப்பி அதே வகையில் ஒரு எதிர்ப்புறக்கணிப்புக் காட்டுவதை நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்த ஏழாண்டு இலக்கியப் போக்கோடு
கைலாசபதியின் செல்வாக்கும்- அது பலரக விளைவுகளை உண்டாக்கினாலும்-
பின்னிக் கிடக்கிறது என்பதே என் எண்ணம். எனவே 1956-63 எல்லைக்
கணக்கெடுப்புக்கு என்னைப் பொருத்த வரையில் இரண்டு வித முக்கியத்துவம்
உண்டு. நம் லக்கியப் பொதுப்போக்கை அளவிடும் அதே சமயம் மறைமுகமாகக்
கைலாசபதியின் செல்வாக்கையும் அதன் விளைவுகளையும் அளவிடும் ஒரு
ரட்டைமுயற்சி. அந்தச் சோம்பலுக்கம் அசிரத்தைக்கும் ஏற்ற வகையில் அவர்கள் தந்த ஜனநாயக முறையும் இருந்தது. சுதந்திரத்துக்காக இரத்தம் சிந்திப் போராடும் நிலை நமக்கு ஏற்படவில்லை. போர்த்துக்கேய அல்லது ஒல்லாந்த ஆட்சி தொடர்ந்து இருந்திருந்தால் நாம் ஆபத்தோடு சதா வாழ்ந்திருப்போம். அதனால் ஆள்பவர்களிடம் சர்வாதிகாரம் இருக்கின்ற அதே சமயத்தில் மக்களிடம் சோம்பலும் அசிரத்தையும் கலவாத ஒரு புரட்சி மனப்பான்மையும் கடைசி அடியோடிய நிலையிலாவது இருந்திருக்கும். ஓர் அங்கோலா அல்லது அல்ஜீ¡¢யாவின் நிலை. ஆனால், ஒல்லாந்தாரோ, போர்த்துக்கேயரோ தொடர்ந்து இருக்கவில்லை. பின்பு வந்த ஆங்கிலேயரும் இந்தியாவில் நடந்து கொண்டதுபோல் இங்கு நடந்துகொள்ளவில்லை. நம்மை அடக்குவதற்குப் பதிலாக அவர்கள் இந்தியர்களை அடக்கினார்கள். நமக்குப் பதிலாக இந்தியர்கள் போ¡¢ட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். அடுத்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு கோல்புரூக்கும், டொனமூரும், சோல்பா¢யும் கேட்காமலே வருபவர்கள் போலவே வந்தார்கள். வாக்கு¡¢மையும் மற்ற உ¡¢மைகளும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்களாகத் தருவன போலவே கிடைத்தன. அதனால், நம்மிடையே ஆபத்தைச் சந்திக்கும் ¨தா¢யம் தூண்டப்படவில்லை. புரட்சிப் போக்கு வளர்க்கப்படவில்லை. காலத்தையுணர்ந்த ஒரு புதிய பார்வை நேரவில்லை. எல்லா இனங்களுக்குமிடையே ஒரு இறுகிய ஒற்றுமை பிறக்கவில்லை. காந்தி படங்களும் நேரு படங்களும் இனவேலியைத் தாண்டி இந்தியாவில் எல்லா வீடுகளிலும் தொங்கியதைப்போல் இங்கு ஒரு ராமநாதனும், ஜயதிலகாவும், அருணாசலமும், செனநாயகாவும் தொங்கவில்லை. தமிழர்களின் வீடுகளில் கூட ராமநாதனின் படம் தொங்கவில்லை. ராஜாஜி, காந்தி, நேரு, சுபாஷ் போன்றவர்கள்தான் தொங்கினார்கள். கடைசியில் புரட்சி மனப்பான்மையையும், ஆபத்தைச் சந்திக்கும் ¨தா¢யத்தையும், உ¡¢மைகளைக் கோரும் உணர்ச்சியையும், அடுத்த நாடான இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு வர்கள் இங்கு சோம்பலையும் அசிரத்தையையும் துரைத்தனத்தையும்தான் வளர்த்தார்கள். படித்ததெல்லாம் உத்தியோகத்துக்காக. பாடுபட்டதெல்லாம்
பொருளீட்டுவதற்காக. அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதனால்
நடந்துகொள்ள விரும்பவில்லை. ஆங்கிலேயரை அபிநயித்த ஓர் துரைத்தனந்தான்
தமிழர்களிடையே அறிவாளி வர்க்கமாக இருந்தது. அதனால், அரசியல் சமூக
கலாச்சார நிலையைப்பற்றி அந்த அறிவாளி வர்க்கத்துக்குக் கவலையில்லை. யார்
ஆண்டால் என்ன? எப்படியோ இருக்கிற நிலைக்கு ஆபத்தில்லாமல் இருந்தால்
போதும். அதோடு எல்லாம் நல்லாக வரும் என்ற சோம்பல் நம்பிக்கை. எனவே
நல்லாகத் தூங்கினார்கள். ஆமாம் அதைத் தூக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சமூகக் கலாச்சாரத் தூக்கம். எப்படி தமிழர்களின் அறிவாளி வர்க்கம் ஆங்கிலேயரை அபிநயித்து அவர்களிடமிருந்து 'சபாஷ்' வாங்கும் துரைத்தனமாக மாறியதோ அப்படியேதான் அரசியலிலும் தமிழர்கள் காலத்தின் நிலையையும் தேவையையும் உணராது வெறும் பேச்சு வன்மையாலும், தோற்றத்தாலும், பழகும் முறையாலும் 'சபாஷ்' வாங்கும் ஒரு தலைவரை வழிபட்டார்கள். அதனால், ஐம்பதுக்கைம்பது கேட்ட தலைவரால் ஐக்கிய தேசியக் கட்சியோடு
இணைய முடிந்தது. பிரஜா உ¡¢மைச் சட்டத்துக்கும் குறுகுறுப்பில்லாமல் கை
உயர்த்த முடிந்தது. அவரை அனுப்பிய மக்களும் அவற்றில் எந்த ஆபத்தையும்
காணவில்லை. செல்வநாயகம் பி¡¢ந்ததும், சமஷ்டிக் கட்சி தோன்றியதுங் கூட
பொதுவாக அவர்களுக்கு ஒரு சினத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும்.
நிம்மதியாகக் தூங்கவிடாமல், பேச்சு வன்மையாலும் தோற்றச் சிறப்பாலும்
தாலாட்டப்பட்டுத் தூங்கிவிடாமல், நிலையை உணர்த்திச் செயலுக்கு அழைக்கும்
குரல் அவர்களுக்கு ஒரு தொந்தரவாகத்தான் பட்டிருக்க வேண்டும். எனவே சினம்.
அம்முறை காங்கேசன்துறையில் செல்வநாயகத்தின் தோல்வி, அதன் அறிகுறி. தமிழகத்தில் நேரடியாக ஒரு பாரதியையும் மறைமுகமாக ஒரு மணிகொடிப்
பரம்பரையையும் தோற்றுவித்ததுபோல் இங்கும் தோற்றுவிக்க, ஒரு சுதந்திரப்
போராட்டம் இங்கு இருக்கவில்லை. எனவே, இங்கு பண்டிதர்கள்தான் இலக்கியப்
பாதுகாவலர்கள். இங்குள்ள இலக்கியத்தை வளர்க்கவிருந்த சுதேச சக்திகள்
அவர்கள் மட்டும்தான். ஆனால், அவையும் தூக்கத்தில் வந்த சில உளறல்கள்தான். சிறுகதை என்பதுவும் அவற்றைப் பற்றிய சீ¡¢ய விமர்சனம் என்பதுவும் நித்திரைக்குப் பின் வேறு எங்கோ வந்துபோன விசயங்கள். இங்கு கேட்கவில்லை. அதனால், அவை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. ஒரு சிலர் எப்படியோ இடையில் விழித்துவிட்டு மூடிக்கொண்டார்கள். எது எப்படி என்று ஒன்றும் தொ¢யாமல் இரண்டொரு புதிய பேர்களை மட்டும் பாடமாக்கிக் கொண்டார்கள். புதுமைப்பித்தன், மெளனி! மற்றபடி பொதுவான நிலை ஒரே தூக்கந்தான். சங்ககாலம் தொட்டு அவிவேக பூரணகுரு வரையும் சிவராத்தி¡¢ விழித்தது போதாதா? ஆமாம், இனி வருபவை மட்டியும் மடையர்களுந்தான். படு, சும்மா உன்
பாட்டில் - அப்படி ஒரு தூக்கம். ஈழகேசா¢ப் பொன்னையாவும் ராஜ அ¡¢ய
இரெத்தினமும் இருந்தார்களாம். பித்தனும் இலங்கையர் கோனும் சம்பந்தனும்
எழுதினார்களாம். ஆனால், அவர்களின் சத்தம் கேட்டு வர்கள், இந்தப்
பண்டிதப் பாதுகாவலர்கள், எழும்பவில்லை. அவர்களும் இவர்களை எழுப்பக்
கூடாது என்ற ஒரே நோக்கத்தோடேயே 'மா¢யாதையாக' இலக்கியம் எழுதினார்கள்.
'மா¢யாதையாகவே' விமர்சனம் செய்தார்கள். பொன்னுத்துரையின் 'வானம் பார்த்த பூமி' இன்னும் வரவில்லை. டொமினிக்
ஜீவா 'கலைச்செல்வி'யில் 'எல்லாரும் இந்நாட்டு மன்னர்' எழுதிக்
குட்டுப்பட்டு ஞானஸ்நானம் பெறுவதற்குக்கூட இன்னும் காலம் எவ்வளவோ
இருந்தது. இளங்கீரனும் டானியலும் இன்னும் தங்களை நன்றாக
உணர்ந்துகொள்ளவில்லை. அதுவரை அறிந்திராத வகையில் கனகசெந்தி 'தினகரனி'ல்
ஒரு முறையான கணக்கெடுப்பு நடத்த இன்னும் மூன்று வருடங்கள் இருந்தன.
அந்தக் காலத்துக்கு¡¢ய ஒரு சில விளைச்சல்கள் என்று சொல்லப்படும்
சம்பந்தனும், பித்தனும், இலங்கையர் கோனுங்கூடன்று அடைந்திருக்கும்
பிரபல்யத்தை அன்று பெற்றிருக்கவில்லை. ஆமாம், ஈழகேசா¢ ஆழமாகச்
செல்லவில்லைதான். ஆனால், அது அந்த அந்தளவுக்குச் சென்றது கூட
அதிசயந்தான். அது காலத்தை எதிர்த்த ஒரு போக்கு. காலம், தூக்கத்தை
வளர்த்த காலம். ஆனால் நல்ல காலம் அது தொடர்ந்து நிரந்தரமாக
நீடித்துவிடவில்லை- எப்படியோ 1956 வந்துவிட்டது. அவற்றோடு, கதாபாத்திரங்களும் இப்போ வேறு. பிக்குகள் மட்டுமல்ல;
தானுண்டு தன் வேலையுண்டு என்று அதுவரை கிடந்த கிராமத்து விவசாயி கூட
முதல் முதலாக அரசியலிலும் அடுத்த விசயங்களிலும் அக்கறை
எடுத்துக்கொண்டான். கிராமத்து வைத்தியன், கிராமத்து வாத்தி, கிராமத்து
விவசாயி அவர்கள்தான் புதிய கதாநாயகர்கள். மானிய முறை அழியாத ஒரு
நாட்டில் அது சமுதாயத்தின் அடித்தளத்தையே தொட்டுவிட்ட ஒரு புரட்சி
என்பது அர்த்தம். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இருபத்தி நான்கு
மணித்தியாலத்துக்குள் சிங்களம் மட்டும் என்ற சுலோகம் நின்றது.
காந்தியும் நேருவும் இந்தியத் தேசியத் தந்தைகள் என்றால் கட்டாயம்
பண்டாரநாயக்காவும் சிங்களவர்களின் தந்தைதான். பழைய தேசியப்பிதா
சேனநாயக்காவின் படத்தில் தூசி படிந்துவிட்டது. இப்போ எங்குமே
பண்டாரநாயக்காவின் படங்கள்தான். தேசியப்பிதா சின்னப்பெயர். பண்டா ஒரு
தியசேன குமாரயா! அவதாரம்! 450 ஆண்டுகளுக்கு மேலாக அந்நிய ஆட்சியின்
காரணமாய் அடிமனதில் அமுக்கி நசுக்கப்பட்டிருந்த ஒரு கலாச்சார ஓட்டம்
திடீரென்று தடைகளை உடைத்துக்கொண்டோடும் வெள்ளமாய் மேலெழுந்து 'கலை'யாடத்
தொடங்கிவிட்டது. பண்டா நிச்சயமாக ஒரு மந்திரவாதிதான். கடைசிவரை,
சிங்களவர்கள் கை கூப்பத்தான் செய்வார்கள். |