|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > மரணத்துள் வாழ்வோம் (31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள்)
20th Century Eelam Tamil Literature at Project Madurai
மரணத்துள் வாழ்வோம்
(31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள்)
Etext Preparation : Mr. Rathina Iyer Padmanabha Iyer, London, UK and Dr. N. Kannan, Kiel, Germany
Proof-reading: K. Ramanitharan & Anshiya S. Ahamad, New Orleans, LA, USA
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland© Project Madurai 1997-2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.Source Acknowledgement: maraNattuL vAzvOm (A collection of 82 poems by 31 Sri Lankan authors,
compiled by: U. Ceran, A. Yesuraja, I. Padmanaba Iyer & Mayilangkoodalur P. Natarajan)
Published by: Vidiyal patippakam, 3, Mariamman Koil Street, Uppilippaalayam, Coimbatore -641 015, India
Copyright : Poets. ---- First Edition : Nov.1985, ------- Second Edition : Dec.1996)
மரணத்துள் வாழ்வோம்
(31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள்,மரணத்துள் வாழ்வோம்
முன்னுரை
எமது நிகழ்காலம் கொடூரமான
இராணுவ அடக்குமுறைகளின் உச்சங்களையும், அவற்றுக்கெதிராக பல்வேறு வடிவங்களிலும்
வெடித்தெழும் போராட்டங்களையும் வரலாறாக்குகிறது.
அநீதி, துயரம், அறிவும்
நியாயமும் கூடச் சுமந்து கொள்ளமுடியாத அளவுக்குப் படுகொலைகள், தங்களுடைய சொந்த
மண்ணிலிருந்து வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாய் வெளியேறுகிற மக்கள்,
எல்லைப்புறங்களில் எ¡¢ந்து கொண்டிருக்கும் எமது வீடுகள், வயல்களிலிருந்து இன்னும்
அடங்காத புகை, இன்னும் அடங்காத நெருப்பு - இவையே 'சூழலின் யதார்த்தம்'.
'மனிதனுக்கு¡¢ய வாழ்க்கை உ¡¢மைகள், மனிதனுக்கு¡¢ய கெளரவம், வாழ்க்கைக்கான
உத்தரவாதம்' - இவற்றை வெறும் வார்த்தைகளாலும் வெற்று ஒப்பந்தங்களாலும் உத்தரவாதம்
செய்ய முடியாது என்ற கசந்துபோன அரசியல் வரலாற்றின் தர்க்கா£தியான வளர்ச்சியில்
இன்று நமது விடுதலைக் குரல்கள் கண்ணி வெடிகளாகவும் கவிதைக் கண்ணிகளாகவும் ஈழம்
பெறுகிற சூழலில் வாழ்கிறோம். இந்தச் சூழல் குறிப்பாக கடந்த பதினைந்து வருடங்களாக
அரும்பி வளர்ந்த ஒரு வேகம் மிக்க அரசியல் நெறிப்பாட்டின் ஓர் உச்சநிலை எனலாம். இது
எமது மக்களை அவர்களின் சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் வாழ்க்கை அனுபவங்கள்
என்ற தளத்திலும் இதுவரை காலம் எதிர்கொண்டிராத வாழ்நிலைகளுக்கு முகங் கொடுக்கப்
பண்ணியுள்ளது. அரச பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் முகங்களைச் சிதைக்க முயன்ற
போதெல்லாம் மரணத்துள் வாழும் உயிர்ப்பின் மூலம் புடமிடப்பட்ட முகங்களை எமது மக்கள்
பெற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் என்ற வகையில் எமது
போராட்டம், தேசத்தை அதனுடைய பெளதீக அம்சங்களில் மட்டுமே மீட்பது என்று பொருள் கொள்ள
முடியாது. மாறாக, எமது மொழி, எமது நிலம், எமது கலைகள், இலக்கியம், கலாச்சாரம்
இவையனைத்தினதும் சுதந்திரமான விகசிப்பை உருவாக்கும் ஒரு போராட்டமாகும். அந்நிய
ஒடுக்குமுறை என்பது எமக்கென்றொரு பலமான பாரம்பா¢ய செழுமைமிக்க கலாச்சார வாழ்வு
இருக்கிறவரை வெற்றி பெறவே முடியாது.
தேசிய ஒடுக்குமுறை என்பது ஒட்டுமொத்தமாக
ஒரு மக்கள் திரளால் உணரப்பட்டு, விடுதலை வேட்கை பரவலாக கிளர்ந்தெழுவதற்கு முன்பாக,
ஒடுக்குமுறையின் ஆரம்ப நிலைகளிலேயே 'அபாயத்தை' இனங்கண்டு கலைஞர்கள் குரலெழுப்பத்
தொடங்கி விடுவதை உலகின் பல்வேறு பகுதிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக,
கவிஞர்கள் வருமுன் சொல்பவர்களாக இருந்துள்ளனர். ரம்பத்திலேயே வெளிக்காட்டப்படும்
இத்தகைய கலாச்சார ¡£தியான எதிர்ப்பே பின்னர் பல்வேறு படிகளூடாக ஆயுதப்போராட்டமாக
பா¢ணாமம் பெறுகிறது. இந்தப் பா¢ணாமத்திலிருந்து மறுபடியும் கலைகளும், இலக்கியமும்
புதிய எதிர்காலத்திற்கு ஒரு முன்மொழிதலை வழங்கும்.
எமது அரசியல், கலை,
இலக்கிய வரலாற்றிலும் இத் தன்மையைக் காணக்கூடியதாயிருக்கிறது. தேசிய
ஒடுக்குமுறையின் ஆரம்பநிலைகளில் தமிழ்மொழிக்கு¡¢ய உ¡¢மைகள், தமிழ்மொழிப் பயன்பாடு
என்பவை மறுக்கப்பட்டபோது அதற்கெதிராக கவிதைக் குரல்கள் நிறையவே எழுந்தன. மஹாகவி,
முருகையன், நீலாவணன் உட்பட ஈழத்தின் அனைத்து முக்கியமான கவிஞர்களும் இவைபற்றி
வலிவுடன் எழுதியுள்ளனர். தமிழ் மொழி மீதான காதல், இனப்பற்று, இனவிடுதலை என்று
'தமிழ்நிலைப்பட்ட' ஒரு வெளிப்பாடாகவே இவை இருந்தன. அந்தவகையில் தமிழகத்தின் திராவிட
இயக்கப் போக்குக்கு¡¢ய உணர்வு, உணர்ச்சி அம்சங்களை இவை கொண்டிருந்தாலும் கூட
வடிவச்செழுமை, சொற்செட்டு, மொழியைக் கையாளும் முறைமை, பேச்சோசைத் தன்மை போன்ற
அம்சங்களில் திராவிட இயக்கப் போக்கை விட முற்றிலும் மாறுபட்ட நல்லியல்புகளில்
சிலவற்றையும் இவை கொண்டிருந்தன. இது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட கருத்து அல்லத்தான்
என்றாலும், இத்தகைய அம்சங்கள் வெளிப்பட்டிருந்தன என்பதைப் பதிவு செய்தல்
அவசியம்.
இனவாதப் பண்புகள் 'கங்கை கொண்ட - கடாரம் வென்ற' மிதப்பில்
கிறங்குதல் போன்ற அம்சங்கள் காணப்பட்டாலும் பாரபட்சம், புறக்கணிப்பு, ஒடுக்குமுறை
என்பவற்றிற்கெதிரான குரல்கள் என்ற வகையில் இவை வரலாற்று முக்கியத்துவம் உடையவை.
மொழிப்பிரச்சினை என்பது தேசிய ஒடுக்குமுறை என்பதாகக் கருத்தமைவு
¡£தியிலும், வாழ்நிலையிலும் குணாம்சமாற்றம் பெற்ற ஓர் இடைக்காலத்தில் இத்தகைய
குணாம்ச மாற்றம் கலை இலக்கியங்களில் கலாபூர்வமாகப் பதியப்படவில்லை. தமிழரசியல்
கட்சி சார்ந்த கவிஞர்கள் மட்டும் 'உணர்ச்சிக்' கவிதைகளாக அடுக்கிக்
கொண்டிருந்தார்கள். இவற்றிலும் வீரம், செங்களம், வாள் (கவனிக்கவும் துப்பாக்கி
அல்ல), குருதி, இறப்பு என்பன இடம்பெற்றாலும், அனுபவம், வீச்சு, உண்மை அற்ற சடங்களாக
இருந்தன.
இந்தத் தொகுதியிலுள்ள கவிஞர்கள் பேசும் குருதியும், போர்க்களமும்,
மரணமும், தியாகமும் உயிர்ப்புள்ளவை; சத்தியமானவை; வாழ்ந்து பெற்றவை. இவற்றிற்
பாசாங்கும், போலித்தனமும், செயற்கையும் இல்லை. இந்தத் தர மாற்றம்தான் நமது கவிதைகளை
புதியதோர் தளத்தில் விட்டுள்ளது. இந்த மாற்றம் குறிப்பாக 1975 இலிருந்தே
நிகழ்கிறது. இடைக்காலத்தில் தமிழ் மொழிப் பிரச்சினை, அரச ஒடுக்குமுறை பற்றி
எழுதுவது தீண்டத்தகாத தாகக் கருதப்பட்டது. அந்தக் காலத்தில் பாரம்பா¢ய இடதுசா¡¢
எழுத்தாளர்கள், விமர்சகர்கள் தேசிய ஜக்கியம் என்ற பெயா¢ல் இவ் வெளிப்பாடுகளை
எல்லாத் தளங்களிலும் புறக்கணித்தனர்.
ஒடுக்குமுறையைக் கலாச்சார ¡£தியாக
எதிர்த்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஒரு முக்கியமான வரலாற்று
நிகழ்வாகும். இதுகூட பாரம்பா¢ய இடதுசா¡¢ கலை இலக்கியகாரரால் கணக்கில்
எடுக்கப்படவில்லை. 'அலை' சஞ்சிகையும் பிறகு 'புதுசு' சஞ்சிகையுமே கவிதையில் இந்தத்
தரமாற்றத்தை அரசியல் ¡£தியாகவும், கலாபூர்வமாகவும் உருவாக்கி
வளர்த்தெடுத்தவை.
தேசிய ஒடுக்குமுறை பல்வேறு வழிகளிலும் ஸ்திரமாகிக் கொண்டு
வருகிறபோது ஒடுக்கப்படும் மக்களுக்கு தமது கலைகள், கலாச்சாரம், நிலம்
எல்லாவற்றிலும் மிகுந்த இறுக்கமான பிணைப்புகள் வலிமையுறுகின்றன. ஒடுக்குமுறைக்கு
எதிராகத் தேசிய விடுதலைப் போராட்டம் கிளர்ந்தெழுகையில் அக் கிளர்ச்சி தேசத்தின்
பல்வேறு அம்சங்களையும் தழுவியதமாகவே இருக்கவேண்டும்.
மேற்குலகின் அடிமைத்
தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்ட பி¡¢க்க நாடுகளின் தேசிய விடுதலைப்
போராட்டங்களும் சா¢, இன்று வெள்ளை நிறவெறித் தென்னாபி¡¢க்க அரசிற்கெதிரான பி¡¢க்க
மக்களின் போராட்டமும் சா¢, லத்தீன் அமொ¢க்க மக்களின் போராட்டமும் சா¢ தமது
விடுதலைப் போராட்டத்தின் பகைப்புலமாக ஒரு தேசிய கலாச்சார விழிப்புணர்வையும், தமது
பாரம்பா¢யச் செழுமை களிலிருந்து பெற்றுப் புதுக்கிய நவீன கலை வெளிப்பாடுகளையும்
கொண்டுள்ளதைப் பார்க்கலாம்.
இவை, அந்நியப் பதிவுகளை எதிர்த்துக் கிளம்புவனளூ
இருப்பிற்கெதிரான சவாலுக்கு¡¢ய எதிர்வினைகள்; ஒடுக்குமுறைக் கெதிராகத் தமது
அடையாளத்தை, தமது வேர்களை, தமது ளுமையை முகத்திலறைந்து பிரகடனம்
செய்வன.
நாங்களும் இத்தகையதொரு வரலாற்றுக் கட்டத்தில்தான் இருக்கிறோம்.
எத்தகைய கொடூரமான ஒடுக்குமுறைக்குள்ளாகவும் நம்பிக்கையினது, வாழ்வை மீட்பதன்
அவசியத்தினது, எதிர்காலத்தினது, போராட்டத்தினது அழைப்புக் குரல்களை நமது கலை
இலக்கியங்கள் வெளியிடுகின்றன. தடைகளையும், துயரங்களையும், தோல்விகளையும்,
இழப்புக்களையும் தாங்கி அப்பாற் செல்லக்கூடிய தார்மீக வலுவை இவை
தருகின்றன.
தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலகட்டம்.
இந்தக் காலகட்டத்தின் பிரதிபலிப்புகளும் தாக்கங்களும் நாடகங்களாக, வீதி நாடகங்களாக,
விடுதலைப் பாடல்களாக, தெருக்கூத்தாக, விவரணத் திரைப்படங்களாக, கவிதா நிகழ்வுகளாக
பல்வேறு கலை ஊடகங்களூடாக வெளிவருகின்றன. எதிர்பார்க்க முடிவதுபோலவே கவிதையில்
இவற்றின் வெளிப்பாடு பல உச்சங்களை எட்டுகிறது. சுவரொட்டிகள், இறந்த போராளிகளுக்கான
அஞ்சலிப் பிரசுரங்கள், துண்டுப் பிரசுரங்கள் அனைத்திலும் இன்று உயிர்த்துடிப்பு
மிக்க கவிதை வா¢கள் இடம்பெறுகின்றன. அரசியல் கவிதைகளின் பரவலை பொதுவாகவே
அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 'அரசியல் கவிதைகள்' எனும் இந்தத் தோற்றப்பாடு
இன்று ஈழத்தில் இருந்து எழுகிறபோது அது நவீன தமிழ்க் கவிதைக்கு புதுவலிமை
சேர்ப்பதாக அமைகிறது.
தேசிய ஒடுக்குமுறையின் இராணுவப் பயங்கரவாதம், யுதப்
போராட்டம், மரணம் இவையான இரத்தம் சிந்தும் அரசியலே இன்று எமது கவிதையின் பிரதான
கூறாக அமைகிறது. இந்தவகையில் இவை தரும் சேதிகள், கிளர்த்தும் அனுபவங்கள்,
தொற்றவைக்கும் உணர்வுகள் தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் புதிய வாழ்நிலைகளைக்
கொண்டுவருகின்றன.
'மரணத்துள் வாழ்வோம்' எனும் இந்தக் கவிதைத் தொகுப்பு எமது
காலத்தை, காலங்களைக் கடந்து பதிவுசெய்கிறது.
ஒருவகையில், அரசியல் கவிதைகள்
என்று நாம் பி¡¢த்துப் பார்ப்பதுகூட காலத்தின் பகைப்புலத்தில், கலை என்ற முழுமையில்
தற்காலிகமான, குறுகிய பி¡¢ப்புத்தான். ஏனெனில் இன்றைய சமூக, அரசியல் நிலைமைகள் நாளை
மாற்றமடைந்துவிடப் போகின்றன. அவை முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கலப்புச் சமூக
அமைப்பில் இருந்து புதிய ஐனநாயகத்திற்காயினும் சா¢, நவ காலனித்துவத்திலிருந்து
சோசலிசத்திற்காயினும் சா¢, வரலாற்று இயக்கத்தில் சமூக, அரசியல் கருத்தமைவுகளும்,
கட்டமைப்புகளும் மாற்றமுற்று விடும். ஆனால் இத்தகைய காலகட்டங்களில் எழுந்த கலைப்
படைப்புக்கள் சமூக, அரசியல் கட்டமைப்பு மாற்றங்களையும் மீறி நிற்கும். அவை
எப்போதும் நிகழ்காலத்திற்கு¡¢யதாகவே இருந்துகொண்டு இறந்தகாலத்துடனும்
எதிர்காலத்துடனும் ஒரு முடிவற்ற உரையாடலைக் கொண்டிருக்கும்.
அரசியலும்,
நிகழ்ச்சிகளும், வரலாற்றுப் புத்தகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் புதைந்துகொள்ள,
கலைப் படைப்புகள் என்றென்றைக் குமாக மக்களோடு இன்றுபோலவே வாழ்ந்து
கொண்டிருக்கும்.
கலை இலக்கியங்கள் ஒரே வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சற்றிச்
சுழன்று கொண்டிருந்தபோது அவற்றை சில புதிய வழிகளுக்கு ஆற்றுப்படுத்துவது என்ற
அம்சத்தில் 'அரசியல் கவிதைகள்' என்ற வற்புறுத்தல் காலத்தின் தேவையென்றே நான்
கருதுகிறேன். 'எமது காலத்து மனிதனின் தலைவிதி அரசியல் மொழியிலேயே எழுதப் படுகிறது'
என்ற தோமஸ் மான் (Thomas Mann) எனும் நாவலாசி¡¢யர் எழுதியிருப்பதை இங்கு
நினைவுகூர்வது பொருத்தமானது.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள முப்பத்தொரு
கவிஞர்களும் ஒரே தரத்தினர் அல்லர். ஈழத்தின் மூத்த கவிஞர் என வழங்கப்படும்
முருகையனிலிருந்து தமது முதலாவது கவிதையை இத் தொகுதியில் எழுதியிருக்கும் மிக இளம்
வயதினரான ஒளவை, கீதப்பி¡¢யன் வரை பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களின் கவிதைகள்
இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஒருவகையில் 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' (க்¡¢யா,
சென்னை, 1984) தொகுதியின் பதினோராவது கவிஞருக்குப் பிறகு சேர்க்கப்படக்கூடிய
கவிஞர்கள் இத் தொகுதியில் உள்ளனர் என்றும் சொல்லலாம்.
இந்தத் தொகுதிக்கு¡¢ய
கவிதைகளைத் தொ¢வுசெய்கையில் ஓர் இறுக்கமான, சீரான கவித் தரத்தைப் பேணுவது என்பது
கடினமானதாகவே இருந்தது. பிரதானமாக ஈழத்துத் தமிழ்க் கவிதையின் அரசியல் பா¢மாணங்களை
இயன்றவரை வெவ்வேறு தலைமுறைக் கவிஞர்களூடாக சித்தா¢க்க விழைந்தமையே இத் தொகுப்பின்
நோக்கம் என்பதில், கவிதைத் தொ¢வுகளைப் பொறுத்து ஓரளவு நெகிழ்ச்சி காட்டவேண்டிய
தேவையும் இருந்தது.
மைத்ரேயி, ஒளவை, துஷ்யந்தன், மா.சித்திவிநாயகம்பிள்ளை,
கீதப்பி¡¢யன், உதயன், செழியன், நிலாந்தன் கியோர் எமது மிகவும் புதிய தலைமுறையின்
ஆரம்பக் கவிஞர்கள். இவர்களனைவரும் வயதில் மிகவும் இளையவர்கள் என்பதையும் மனங்கொள்ள
வேண்டும்.
தமிழ்க் கலாச்சார மரபில் கவிதை எப்பொழுதும் முக்கியமான இடத்தைப்
பெற்றுவந்துள்ளது. குறித்த சில காலகட்டங்களில் கவிதை கலையாக மட்டுமன்றி வாழ்க்கை
முறையாகவும் இருந்துவந்துள்ளது. சங்ககாலக் கவிதைகளிலிருந்து வள்ளுவர், கம்பர்,
இளங்கோ, மணிவாசகர், சித்தர்கள், பாரதி என்று ஒரு செழிப்பான கவிதைப் பாரம்பா¢யம்
ஒன்று இன்றைய கவிதைகளுக்கு அடிநாதமாக உள்ளது. இந்தப் பாரம்பா¢யம் ஈழத்திலும்
தமிழகத்திலும் பின்னர் வெவ்வேறு திசைகளில் கிளைபி¡¢ந்தது என்பது முக்கியமான
அம்சமாகும். (இது குறித்து விளக்கமான கட்டுரைகளுக்குப் பார்க்கவும் : 'மஹாகவியும்
தமிழ்க் கவிதையும்' - சண்முகம் சிவலிங்கம், பின்னுரை, மஹாகவியின் கோடை, 1970;
இருபதாம் நு¡ற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், 1979)
ஈழத்துத் தமிழ்க்
கவிதை மரபின் தனித்துவம், தொடர்ச்சி, இன்றைய அதன் புதிய பா¢மாணங்கள் பற்றி ஏற்கனவே
நு·மான், சண்முகம் சிவலிங்கம், முருகையன், செ.யோகராசா போன்றவர்கள் வி¡¢வாக
எழுதியுள்ளனர். தமிழகத்திலும் ஞானி, எஸ்.வி.ராஜதுரை, தமிழவன் போன்றவர்களால் இவை
பதிவு செய்யப்பட்டுள்ளன. அலங்காரமும் ஆடம்பரமும் அற்று, சொற்செட்டும் இறுக்கமும்
மிக்கதான ஒரு நடையிலும், லயத்திலும் இக் கவிதைகள் வீடற்ற நிலை, நிலத்தின் மீதான
பிணைப்பு, மனிதம், விடுதலை, துணிவு, வீரம் என்பவற்றைப் பேசுகின்றன. உறுதியும்,
மனவெழுச்சியும், கோபமும் விரவிய மொழிநடை இதற்குத் துணைபு¡¢கிறது. இத்தகைய
உணர்வு/உணர்ச்சி நிலைகளில் கவிதை பல சந்தர்ப்பங்களில் ஒத்திசைவையும் பேணுவதை இத்
தொகுப்பில் அவதானிக்கலாம்.
சிந்தனையின் ஆழமும் படைப்பு வீச்சும் ஒருங்கே
இணைந்து வரும் கவிதைகளை உயர்ந்தவை என்றும், ஓசை, உணர்ச்சி சார்ந்துவரும் கவிதைகள்
ஒருபடி இறங்கியவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எங்களுடைய அனுபவம் இது சா¢யல்ல
என்பதையே உணர்த்துகிறது. ஏனெனில் எமது சூழலில் கவிதை மெளன வாசிப்பிற்கும்
புத்திஐ£விகளுக்கும் மட்டும் என்றில்லாமல், சாதாரண மனிதனின் உள்ளத்திற்குமானதாக
வெளிவரவேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் சமூக அமைப்பில் கலைகள், இலக்கியம் இலாப
நோக்கம் கொண்ட வியாபாரக் கலைகளாகவே இடம்பெறுகின்றன. இவை 'படைப்பு' என்பதாக அல்லாமல்
'உற்பத்திகள்' என்ற தரத்திலேயே வழங்கப்படுகின்றன. எனவே, சுதந்திரமான உண்மைக்
கலைப்படைப்புகளுக்கு இச் சமூக அமைப்பு எதிரானது. தன்னை இழந்து
அந்நியமாக்கப்பட்டவனாக இந்தச் சமூக அமைப்பில் மனிதன் வாழ்கிறான். இவனுக்காக
முதலாளித்துவம் மக்கள் ரசனை, ஐனரஞ்சகக் கலை என்ற பெயா¢ல் போலிக் கலை இலக்கியங்களைப்
புனைந்து கொடுக்கிறதுளூ கனவுகளை வியாபாரம் செய்கிறது. அந்நியமாக்கப்பட்ட இத்தகைய
போலிக் கலை இலக்கியங்களைப் புசிக்கின்ற மனிதனுக்கு உண்மையான கலை இலக்கியங்கள்
எட்டுவதில்லை. இந் நிலையில் கவிஞனுக்கும் மக்கள் திரளுக்கும் இடையில் 'விவாகரத்து'
நிகழ்ந்துவிடுகிறது. உண்மையான கவிஞன் தொடர்புகொள்ள முடியாத ஏராளம் மக்கள் இச்
சமூகத்தில் உள்ளனர். இதற்காக ஒரு பகுதியினர் கவிஞனையும், வேறொரு பகுதியினர்
மக்களையும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பிரச்சினை, எவ்வாறு இந்தத் தொடர்புத்
தடையை நீக்குவது என்பதே.
அரசியல் எழுச்சியும் கலாச்சார விழிப்புணர்வும்,
இருக்கிற சூழ்நிலையில் பிரக்ஞைபூர்வமாக கலாச்சாரத் தளத்தில் இயங்குவதன் மூலம் இத்
தொடர்புத் தடையைக் குறைக்கலாம் என்பது எங்களுடைய அனுபவமாக உள்ளது. கவிதையையும்
பாடல்களையும் இணைப்பது, நாடகங்களில் கவிதையை இணைப்பது (இவ் இணைப்புகள் அந்தந்த
ஊடகத்தின் கலைத்துவமும் தனித்துவமும் பாதிக்கப்படா வகையில் இடம்பெறல்) போன்ற
வழிகளில் இது செயல்படும். கவிதைகள் அரங்கில் பின்னணி இசையுடன் நிகழ்த்தப்படுகையில்
அரசியல் சார்ந்து வருவதால் கவிதையின் வாசகர்கள், ரசிகர்கள், கேட்பவர்கள் வட்டம்
அகலிக்கிறது. இவ்வாறு தரமான கலை இலக்கியங்களின் வட்டங்களை அகலிக்கும் ஒரு கலாச்சார
இயக்கமே இங்கு உருவாகியுள்ளது. வாய்மொழி, ஓசை, நாட்டார் வழக்கியலுக்குத்
திரும்புதல் எல்லாம் ஒரு முக்கியமான அம்சமாக இங்கு
இடம்பெறுகிறது.
அறிவுபூர்வமானது, உணர்வுபூர்வமானது என்ற பி¡¢ப்புகளின்றி
எஸ்ரா பவுண்ட் சொல்வதுபோல அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உட்கலந்துவரும்
படிமங்களுடன்' கூடிய கவிதைகளை இத் தொகுப்பில் காணலாம். உதாரணத்திற்கு பின்வரும் கவி
வா¢களைப் பார்க்கலாம்:
இருளின் அமைதியில்
வெளியில் கரைந்தேன்
விழியின்
மணிகளில்
தீப்பொறி ஏந்தினேன்.
- (இளவாலை விஐயேந்திரன் -'பாதியாய் உலகின்
பா¢மாணம்' - பக்.126)
இந்தத் தொகுதியின் முக்கியமான இன்னொரு அம்சம் இதிலுள்ள
பெண் கவிஞர்கள். ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை ஆகிய மூன்று பெண் கவிஞர்கள்
இடம்பெற்றுள்ளனர். எமது வாழ்நிலையின் பெண்நிலைப்பட்ட அனுபவங்கள் உயிர்த்துடிப்புடன்
வருகின்றன. தமிழில் வரப்போகிற முக்கியமான பெண் கவிஞர்களை இத் தொகுதி
இனங்காட்டுகிறது. தேசிய விடுதலைப் போராட்ட உணர்வு அலைகளுடன் இணைந்ததாய்
'பெண்விடுதலை' குரலும், பெண்நிலைவாதமும் வலுவடைந்துவரும் நிலையில் மேலும் பல பெண்
படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.
தேசிய
விடுதலைப் போராட்டத்தினுள் 'போராட்டத்துள் ஒரு போராட்டமாக' விடுதலைப் போ¡¢ன் சில
பிரச்சினைகள் பற்றிய விமர்சனங்களும் இக் கவிதைகள் சிலவற்றில்
வருகின்றன.
சர்வதேச அரசியலுடனும், இந்து சமுத்திரப் பகுதி பூகோள
அரசியலுடனும் நிபந்தனையற்றுப் பிணைக்கப்பட்டுவிட்ட எமது விடுதலைப் போராட்டம்
(இதற்கு நாமும் பங்காளிகள் என்பதை மறந்துவிட முடியாது) அரைகுறைத் தீர்வுகள்மூலம்,
அல்லது வல்லரசுப் பின்னணிகளின் விளைவான சமரசங்கள் மூலம் பின்தள்ளப்படுகிற அபாயம்
இருந்து கொண்டேயிருக்கிறது. இவ்வாறான ஒரு பின்தள்ளல் நிகழ்ந்து விட்டாலும்கூட
இந்தக் கவிதைகள் காலம் காலமாக நின்று எமது துயரங்களையும், சொல்லில் மாளாத இழப்பு
களையும், மரணத்துள் வாழ்ந்த கதையையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக்
கொண்டேயிருக்கும். அந்த அதிர்வுகள், விடுதலைப் போ¡¢ன் எத்தகைய பின்தள்ளல் களையும்
வெறுப்புடன் பார்த்து கவிதா அனல் உமிழ்ந்து கொண்டேயிருக்கும். நமது விடுதலைக்கு
மட்டுமல்ல தென்னாசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை அவை ஒருநாள்
ஏற்றும்.
உ.சேரன்
'நீழல்'
அளவெட்டி
12.10.85
*****#####*****
வாயடைத்துப் போனோம்
'என் நண்பா,
மெளனம் எதற்கு?'
என்று கேட்டிருந்தாய்.
வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு
சொல்லும்.
'திக்' கென்ற மோதல் -
திடுக்கிட்டுப் போனோமே!
பொய் வதந்திக்
கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான
நச்செண்ணெய்
ஊற்றி
அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எ¡¢வு
நடைபெறுமா?
எத்தனை தீய எ¡¢வு -தலையுடைப்பு,
குத்துவெட்டு, பாயும்
குருதிக் குளிப்பாட்டு?
சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்
பேசி
இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
மனங்கூசாமல்
ஓங்கி
விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்
மாறிவிட்ட விந்தை மருமம்
என்ன?
சுர்ரென்று
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
கொள்ளை, திருட்டு,
கொலைகள், கடையுடைப்பு,
பிள்ளை அ¡¢வு, பிடுங்கல், வதை
பு¡¢ந்து
சீறி
எதிர்த்த செயலின் கருத்தென்ன?
ஒன்றும் எமக்குச் சா¢யாய்
விளங்கவில்லை.
'திக்'கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம்.
வாயடைத்துப்
போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.
(1978 / மல்லிகை)
!!!!!
வேலிக்குப் பயிர்கள் மேலே
வெறுப்புத்தான் இருக்கும்
என்றால் -
வேலி ஏன்? காவல் ஏனோ?
காவலோ வேலியாலே? -
முருகையன்
வேலியும் காவலும்
1
வேலிக்குப் பயிர்கள்
மேலே
விருப்பமே இல்லைப் போலும்!
-சோலிக்கு முடிவு காண்பம்!
சுடுவம், என்று
எழும்பிச் சென்று
தீ வைத்து முடித்த வேலி
திருப்தியை அடைந்திருக்கும்
-
கோபத்தைத் தீர்த்திருக்கும்.
குவிந்ததோ - பயி¡¢ன்
சாம்பல்!
2
தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு;
பயிர் பச்சை
நீட்டமாய்
நீண்டு நெருங்கி மதாளித்துச்
சேட்டமாய் நிற்கிறது, செந்தளிர்ப்பாய்.
காய்
கனிகள், பூக்கள் குலுங்கும்
புளுகமுள்ள கொப்புகளைக்
காட்டி நிற்கும்
கண்குளிர, இன்பச் சிறு செடிகள்.
கற்கள் மலிந்த கலட்டித் தரையிலே
புற்கள்
படர்ந்து புலுண்டுவது தான்
இந்தக் காணி நிலத்தின் இயற்கை.
அதை மாற்ற
என்று
தீர்மானஞ் செய்த செயற் - கை வலிமையினால்,
கிண்டிக் கிளறி, கிணறிறைத்து
நீர் பருக்கிக்
கொண்டிருக்கும் செய்கை
கொடுத்த பலன்களினால்
தோட்டமுங்
கொஞ்சம் செழிப்பு, மதாளிப்பு!
நீர் இறைப்புத் தீண்டாமல் நிற்கின்ற
புல்
நுனிகள்
காய்ந்து சருகாய்க் கருகி இருந்தாலும்,
பூச்சி அ¡¢த்துவிட்ட
பூசணியின் சாம்பல் இலை
ஓட்டை பிடித்துத் துவண்டு கிடந்தாலும்,
நோய்பிடித்த
கத்தா¢யின் நு¡றிலையில் தொண்ணு¡று
சூம்பிக் குனிந்தபடி தொய்ந்து
கிடந்தாலும்,
அங்கங்கே நல்ல அழகான பச்சை உண்டு.
கண் குளிர -
இன்பச் சிறு
செடிகள் -
தோட்டம் எங்கும்!
தோட்டமோ கொஞ்சம் செழிப்பு
-
மதாளிப்பு!
3
சுற்றி நின்ற வேலி
சுருக்கென்று
சீறிற்றாம்.
நட்ட நடு இரவில் -
நாலுபேர் காணாத கன்னங்கா¢ இருட்டில்
-
காற்சட்டை போடாமல்,
தோட்டத்துள் வேலி நுழையத்
தொடங்கியதாம்.
வேலி
பயிரை எல்லாம்
மேய என்று போயிற்றாம்.
மேயத் தொடங்கி
விறுக்கென்று சப்பிற்றாம்.
மென்று மென்று தின்றதாம்.
மேல் இருந்த கொப்புகளை
வா¡¢ இழுத்து
வளைத்து, முறித்தெறிந்து,
வேரோடு வாங்கிப் பிடுங்கி
மிதித்ததாம்.
ஓங்கி உதைத்துத் துவைத்துப் பொடியாக்கித்
தீங்கு பரத்திச்
சிதைத்ததாம் தோட்டத்தை.
பற்றாத பச்சைப் பயிர்கள் என்றும் பாராமல்,
பெற்றோலை
ஊற்றி நெருப்பும் கொழுத்திற்றாம்.
வேலி கடித்து மிதித்த பயிர்க் குப்பைகளும்
வெந்து பொசுங்கிப் புதைந்து கா¢யாகி
நொந்து சுருண்டு -
வெறுஞ்
சாம்பலாய்ப் போயினவாம்.
4
வேலை நிறுத்தமொன்றை
வேலை அற்ற
சண்டியர்கள்
ஏவற் பேய் ஆகி இழுத்து விழுத்துதல் போல்
வேலி பயிரை
எல்லாம்
மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
காலிப் பயல்கள் கடையை
உடைப்பதுபோல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டுப்
போயிற்றோ?
காடையர்கள் நு¡லகத்திற் கைவா¢சை காட்டுதல்போல்
வேலி பயிரை
எல்லாம்
மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
கொன்று
தெருவிற் பிணங்கள்
எறிவதுபோல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டுப்
போயிற்றோ?
5
வேலிக்குப் பயிர்கள் மேலே
வெறுப்புத்தான் இருக்கும்
என்றால் -
வேலி ஏன்? காவல் ஏனோ?
காவலோ வேலியாலே?
(1981 / மல்லிகை)
!!!!!
சோ.பத்மநாதன்
'எங்கள் நகரேன் எ¡¢யுண்டு
போகிறது?
உங்களுக்கு - சத்தியமா - ஒன்றுந் தொ¢யாதோ?'
எங்கள் நகர்
ஏன் எ¡¢யுண்டு போகிறது?
"எங்கள் நகரேன் எ¡¢யுண்டு
போகிறது?
உங்களுக்கு - சத்தியமா - ஒன்றுந் தொ¢யாதோ? "
"ஏதுக்கு நீயிந்தப்
பேச்சை எடுக்கின்றாய்? "
காதுக் கருகில்நின்று கத்தித்
தொலைக்கின்றாய்!"
"தீபா வளியா? திருக்கார்த் திகைநாளா?
கோபாவே சத்தில்
கொளுத்தஇது கூடலா?
முற்றுகையுமில்லை மூண்ட பெரும் போ¡¢ல்லை!
எற்றுக்கப்
பாநம் நகரம் எ¡¢கிறது?
நள்ளிரவு வேளை நாட்டிலே தேர்தல்
எனில்
சொல்லிவைத்தாற் போல 'சு¡£ர்'என் றொ¢கிறதே!
பாதுகாப் புக்குப்
படைகள் குவிந்திருக்கும் -
போதுதீப் பற்றும் புதினம் நடக்கிறதே!"
"எங்கள்
நகரேன் எ¡¢யுண்டு போகிறது
உங்களுக்கு - சத்தியமா - ஒன்றுந்
தொ¢யாதோ?"
"தனக்கடாச் சங்கதியில் தலையிடுதல் வீண்; வேலை
மினக்கேடு போடா,
போ! வேலை எனக்கிருக்கு!"
"பாயில் தொடங்கி நு¡லகமும் பற்றி எங்கள்
கோயில்
கடையெல்லாம் கொளுத்தப் படலாச்சே!"
"பற்றி எ¡¢வதுயாழ்ப் பாண நகரமல்ல
பெற்ற
வயிறுந்தான் பேசா திருமகனே!"
!!!!!
மு.பொன்னம்பலம்
ஜந்து துப்பாக்கிக் கொலைஞர்
ஜம்பது பேரைக்
கொல்ல, கழுத்தைக் கொடுத்து நிற்கும்
பலிக்கடாவா மனிதர்? -
மு.பொன்னம்பலம்
வீரத்தைத் தூக்கு
துப்பாக்கி தூக்கியவனைக்
கண்டதும்
தொடை நடுங்காதே!
நீ பிறந்தது, என்றைக்கோ
ஓர்நாள்
சாகத்தான்;
அது நிச்சயம்.
அந்த இடைவெளியில் ஆடும்
ஆசைகளுக்காய்
இன்னும் வாழ ஆசைப்பட்டு,
துப்பாக்கி ஏந்தியவனைக் கண்டதும் -
அவன்
விடுதலைப் பதரானாலும் சா¢
ராணுவக் காட்டுமிராண்டி யானாலும் சா¢
தொடை
நடுங்காதே!
துவக்கினால் தான் உனக்குச் சாவுவரும் என்பது
என்ன
நிச்சயம்?
கொலைஞனின் கையில் இருக்கும் துப்பாக்கி
அவனுக் கெதிராய்
மாறாதென்பது என்ன நிச்சயம்?
துவக்கையும் ஒரு பொருளாய்ப் பார்
உனக்குப்
பழக்கப்பட்ட கத்தி, பொல்லு
போலவே அவையும் குணமற்றிருக்கும்
பொருட்கள்ளூ
நிர்குணிகள்;
அவற்றுக்கு குணமேற்றுபவன் மனிதன்.
கொலைஞன் கையில் இருக்கும்
துவக்கு
மின்வெட்டுத் தாக்குதலில் உன்கை மாறாதா?
கொலைஞா¢ன் துவக்குகள்
விடுதலைக்காய்
வேட்டு வைக்காதா?
குணமேற்றுபவன் நீ!
ஆகவே, துப்பாக்கி
தூக்கியவனைக் கண்டதும்
தொடை நடுங்காதே!
நீ உன் வீரத்தைத் தூக்கு.
உன்
வீரத் தூக்கலில் எதி¡¢ வெடவெடக்கட்டும்
ஜந்து துப்பாக்கிக் கொலைஞர்* ஜம்பது
பேரைக்
கொல்ல, கழுத்தைக் கொடுத்து நிற்கும்
பலிக்கடாவா மனிதர்?
நீ உன்
வீரத்தைத் தூக்கு.
உன்னில் ஒருவன் விழலாம், இருவர்
விழலாம் மூவர் அல்லது
நால்வர் பலியாகலாம்
ஆனால் நீ தூக்கிய வீரத் திரட்சியில்
கொலைஞா¢ன் கை
தொடர்ந்து நீளாமல்
அவர்கள் அனைவரும் பந்தாடப்படலாம்.
உன்னைக் கொல்வது
துப்பாக்கியல்ல
வாழும் ஆசையில் கிடந்தாடும்
கோழைமை
ஆகவே,
ஏய்,
வீரத்தைத் தூக்கு
விடுதலையைச்
சுரண்டவரும்
எத்தகைய துப்பாக்கிப் பதர்களும்
வெட வெடக்கட்டும்
வெட
வெடக்கட்டும்!
10.9.84 இல், கொழும்பிலிருந்து தமிழ்ப் பயணிகளை ஏற்றிவந்த
பஸ் ஒன்று பூவரசங்குளத்தருகே இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு, மக்கள்
கொலைசெய்யப்பட்டதன் எதிரொலி.
!!!!!
முன்னிரவின்
மோகனம்
முன்னிரவு.
மேற்கில் வீழும் பிறை.
வீழும் பிறையோடு
சிலந்திவலைபோல்
இழுபட்டுக் கொண்டோடும் ஒளித்திரள்.
ஒடுங்கும் ஒளித்திரளின்
ஓரக்கசிவில்,
மஞ்சள் அப்பி முகத்தைத் துடைத்துக் கொண்ட
கருமோகினிபோல்
மயலு¡ட்டும் புறஉலகு.
இயற்கையின் மோகனம்.
ஏதோ அதன்பின் இழுபடும்
அரவம்.
யார் மோகினியைத் தொடர்வது?
யார் வருகிறார்?
எந்த
அரக்கன்?
எங்கும் ஓர் இனம்தொ¢யாத துயா¢ன்
எதிர்பார்ப்பு.
எல்லாத்
திசையும் அதன் வாடையின்
அடைவு.
இடைக்கிடை உயிர்த்தெழும் காற்றில்
தலையாட்டும் இருள்பூசிய மரக்கிளைகள்,
திடீரென வடக்கிலிருந்து
மேலெழுந்து,
தெற்குநோக்கி வந்து கொண்டிருக்கும்
சுடலைக்
குருவிகளின்
விட்டு விட்டுக் கேட்கும் அலறல்,
நாயன்றின் தூரத்து ஊளை
-
எல்லாம் அதே துயரை உள்ளலிக்கும் பின்னணி.
இயற்கை எடுத்த மோகனம்
யாரைக்
கொல்லும் ஆயத்தம்?
தொட்டதெல்லாம் நீறாக்க நினைக்கும்
பஸ்மாசுரர்கள் இன்னும்
இருக்கிறார்களா
அழிய?
அப்படியானால்
மேற்கில் வீழும் பிறை?
இன்று
கூத்தன் தலைதவறி வீழினும்
நாளை, மோகினியாய்ப் பொங்கியெழும்
கூர்ப்புடைய
எ¡¢கோள்.
(தமிழ்ப் பகுதிகளில் மாலைவேளைகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகத்
தொடங்கிய காலப் பின்னணியில் எழுந்தது)
!!!!!
அதிகாரம் பு¡¢யாத
சமன்பாடு
ஐ£ப் வண்டிகள் உறும
சப்பாத்துகள் ஒலிக்க
மக்கள்
மத்தியில்
ஏந்திய ஆயுதங்களுடன்
காக்கி உடை ராட்சதர்கள் போல்
அவர்கள்.
அவர்கள் ஏந்தும் ஆயுத முனைகளின் மோப்பங்களுக்கு
முகம்
கொடுக்காது,
மெளனமாய் மக்களோடு மக்களாய் இவர்கள்
நீட்டிய ஆயுதங்களில்
பீதியின் நிழல்.
மெளன ஊடாட்டத்தில் விடுதலை வி¡¢க்கக்
காத்திரக்கும்
உள்வாங்கல்
வீர்யத்தின் ஒளிச்சிதறல்.
அந்த ஒளிச்சிதறலில் கண்ணிமைப்
புருவங்கள் போல்
பேச்சற்று உள்நடுங்கும் ஆயுதப் பா¢வாரங்கள்.
அவர்களின்
காக்கி முகாம்கள் கூடக் கூட
இவர்களின் விடுதலைக் குகைகள் பெருகிக்கொண்டே
இருக்கின்றன.
அவர்களின் ஆயுதம் கக்கிய சன்னங்களில் இருவர் கொலையுண்ண,
நால்வர்
புதிதாக ஐனித்தெழும் இவர்களின் விடுதலை
இனவிருத்தி பற்றி அறியாத
அதிகாரம்.
சர்வாதிகாரம் என்பது விடுதலையை ஒடுக்குவதாகக்
கூறிக்கொண்டு, தன்னை
அறியாமலே அதைப் பிறப்பிக்க
யோனிவாயிலில் காத்திருக்கும்
மருத்துவச்சி.
சர்வாதிகாரம் சமன் விடுதலை.
எத்தனைதரம் சா¢த்திரம் இதைக்
கற்பித்துக் கொடுத்தாலும்
அதிகார அமர்வுகளுக்கு பு¡¢ய முடியாது
போய்விட்ட,
மர்மச் சமன்பாடு.
(மார்க்சியம் இன்று-2)
!!!!!
தமிழ்நிலத்தில் சாவுஒரு மலிந்த சரக்கு
அழிவு ஒரு
விலை குறைந்தபொருள்
கொத்தும், வெட்டும், கொலையும், களவும்
கால் விலைக்குப்
போகுது!
வாருங்கள், வாருங்கள்... -மு.பொன்னம்பலம்
காலன் கடைதிறந்து விட்டான்
எங்கள் பூமியில்
காலன்
கடைதிறந்து விட்டான்!
தமிழ்நிலத்தில் சாவுஒரு மலிந்த சரக்கு
அழிவு ஒரு
விலை குறைந்தபொருள்
கொத்தும், வெட்டும், கொலையும், களவும்
கால் விலைக்குப்
போகுது!
வாருங்கள், வாருங்கள்
காலன் போடும் அங்காடிக் கூச்சல்!
எங்கள்
பூமியின் எல்லைகள் எங்கும்
கொல்லைப்புறங்கள், தோட்டந்துரவு,
பட்டி, தொட்டி
எங்கும்
காலன் கடைதிறந்து விட்டான்!
திருவிழாக் காலங்களில்
திரையாக
வி¡¢யும் பெட்டிக் கடைகள் போல்
எங்கள் எழுச்சிவிழா முன்றலில்
காலனின் கடை
வி¡¢ப்பு
திருப்பணி வேலைக்கு ஒரு ஆள் பத்துசதம்!
திருப்பணி வேலைக்கு
மூன்றாள் ஜந்துசதம்!
திருப்பணி வேலைக்கு ஐந்தாள் மூன்றுசதம்!
காலன் போடும்
அங்காடிக் கூச்சல்.
வல்வெட்டித் துறையில் விலைபோன உயிர்கள்
திருமலை
முல்லை மன்னார் எங்கும்
'மைலாய் வீதியாய்ரு ஓடிய ரத்தம்
காலன் போடும்
அங்காடிக் கூச்சல்.
கடலில் மிதந்தவை
களத்தில் விழுந்தவை
கண்ட கண்ட
இடமெல்லாம்
வெந்தவை, கிடந்தவை, அழுகிச் சிதைந்தவை...
இன்னும் இன்னும்
உயிர்கள் மலிய
எங்கும் அழிவு சில்லறையாக
எங்கள் எழுச்சி
தேரென
எழுமே!
எங்கள் விடுதலை
இலக்கினை அடையுமே!
அதனால்,
காலன் கடை
வி¡¢க்கட்டும்
அது விடுதலை விழாவின்
அர்ச்சனைக் கடை.
(1985 /
அலை-26)
!!!!!
நாங்கள் நடந்த நகரத்
தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் தி¡¢ந்தன.
குண்டுகள்
பொழிந்தன.
உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன... -
எம்.ஏ.நு·மான்
நேற்றைய மாலையும் இன்றைய காலையும்
நேற்று
மாலை
நாங்கள் இங்கிருந்தோம்.
சனங்கள் நிறைந்த யாழ்நகர்த்
தெருவில்
வாகன நொ¢சலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.
பூபால
சிங்கம் புத்தகநிலைய
முன்றலில் நின்றோம்.
பத்தி¡¢கைகளைப் புரட்டிப்
பார்த்தோம்.
பஸ்நிலையத்தில் மக்கள் நொ¢சலைப்
பார்த்தவா
றிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும்
இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.
சந்தைவரையும் நடந்து
சென்றோம்.
திருவள்ளுவர் சிலையைக் கடந்து
தபாற்கந்தோர்ச் சந்தியில்
ஏறி
பண்ணை வெளியில் காற்று வாங்கினோம்.
'றீகலின்' அருகே
பெட்டிக்
கடையில்
தேனீர் அருந்தி - சிகரட் புகைத்தோம்.
ஐ¡க் லண்டனின்
'வனத்தின்
அழைப்பு'
திரைப்படம் பார்த்தோம்.
தலைமுடி கலைந்து பறக்கும்
காற்றில்
சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினோம்.
இன்று காலை
இப்படி
விடிந்தது.
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள்
தி¡¢ந்தன.
குண்டுகள் பொழிந்தன.
உடலைத் துளைத்து
உயிரைக்
குடித்தன.
பஸ்நிலையம் மரணித் திருந்தது.
மனித வாடையை நகரம்
இழந்தது.
கடைகள் எ¡¢ந்து புகைந்து கிடந்தன.
குண்டு விழுந்த கட்டடம் போல
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள் தோறும்
டயர்கள் எ¡¢ந்து கா¢ந்து
கிடந்தன.
இவ்வாறாக
இன்றைய வாழ்வை
நாங்கள் இழந்தோம்.
இன்றை
மாலையை
நாங்கள் இழந்தோம்.
(1977 / அலை-10)
!!!!!
உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே
மனிதனின்
விதியா?
அடக்குமுறைக்கு அடிபணிவதே
அரசியல் அறமா? -
எம்.ஏ.நு·மான்
துப்பாக்கி அரக்கரும்
மனிதனின்
விதியும்
நாளையக் கனவுகள் இன்று கலைந்தன.
நேற்றைய உணர்வுகள் இன்று
சிதைந்தன.
காக்கி உடையில்
துப்பாக்கி அரக்கர்
தாண்டவம்
ஆடினர்.
ஒருபெரும் நகரம் மரணம் அடைந்தது.
வாழ்க்கையின் முடிவே மரணம்
என்போம்
ஆயின் எமக்கோ
மரணமே எமது வாழ்வாய் உள்ளது.
திருவிழாக் காணச்
சென்றுகொண்டிருக்கையில்
படம்பார்க்கச் செல்லும் பாதி வழியில்
பஸ்நிலையத்தின்
வா¢சையில் நிற்கையில்
சந்தையில் இருந்து திரும்பி வருகையில்
எங்களில்
யாரும்
சுடப்பட்டு இறக்கலாம்
எங்களில் யாரும்
அடிபட்டு
விழலாம்.
உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே
மனிதனின் விதியா?
அடக்குமுறைக்கு
அடிபணிவதே
அரசியல் அறமா?
அதை நாம் எதிர்ப்போம்!
அதை நாம்
எதிர்ப்போம்!!
தனிநாடு அல்ல
எங்களின் தேவைளூ
மனிதனுக்கு¡¢ய வாழ்க்கை
உ¡¢மைகள்.
மனிதனுக் கு¡¢ய கெளரவம்
வாழ்க்கைக் கான உத்தரவாதம்.
யார்
இதை எமக்கு மறுத்தல் கூடும்?
மறுப்பவர் யாரும் எம்எதிர் வருக!
காக்கி
உடையில்
துப்பாக்கி அரக்கர்
தாண்டவம் ஆடுக!
போராடுவதே மனிதனின்
விதிஎனில்
போராட்டத்தில்
மரணம் அடைவதும் மகத்துவம் உடையதே.
(1977 /
அலை-10)
!!!!!
மயிலாசனத்தின் அரசியல் அநாதையை
நீ
அறியாயா?
நீங்கள் குருடர்
பிறவிக் குருடர்...-
எம்.ஏ.நு·மான்
வரலாற்றுக் குருடர்
அமுக்கு,
அமுக்கு
இன்னும் சற்றே அதிகம் அமுக்கு
அழுத்தம் அதிகா¢க்கும்!
வெடிப்பு
நிகழும்!
சுடு சுடு
நு¡றுபேர் விழட்டும்
துப்பாக்கியைச் சுழற்றிச்
சுடு
ஆயிரக் கணக்கில் அவர்கள் விழட்டும்
பிறகுதான்
லெட்சம் லெட்சமாய்
அணிகள் திரளும்
துப்பாக்கிகள் நொருங்கிச் சிதறும்.
மயிலாசனத்தின் அரசியல்
அநாதையை
நீ அறியாயா?
நீங்கள் குருடர்
பிறவிக் குருடர்
வரலாறு உமக்குத்
தொ¢வதே இல்லை.
(1980. நன்றி : புதுசு-2)
!!!!!
புத்தா¢ன் படுகொலை
நேற்று என்
கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச
காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நு¡லகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம்
குருதியில் கிடந்தது.
இரவின் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
"எங்கள்
பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?"
என்று
சினந்தனர்.
"இல்லை ஜயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச்
சுடாமல்
ஒரு ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று
எம்மால்
ஆகையினால்தான்...."
என்றனர் அவர்கள்.
"சா¢சா¢
உடனே
மறையுங்கள் பிணத்தை"
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில்
உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணு¡றாயிரம்
புத்தகங்களினால்
புத்தா¢ன் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோகவாத
சூத்திரத்தினைக்*
கொளுத்தி எ¡¢த்தனர்.
புத்தா¢ன் சடலம் அஸ்தியானது
தம்ம
பதமும்தான்ழூ சாம்பரானது.
(1981 / அலை-18)
* - சிகாலோகவாத சூத்திரம்,
தம்மபதம் ஆகியன பெளத்தமத அறநு¡ல்கள்.
!!!!!
சண்முகம் சிவலிங்கம்
எங்களை நீங்கள்
ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால்
அடிக்குக... - சண்முகம் சிவலிங்கம்
இன்று இல்லெங்கிலும்
நாளை
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள்
கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய்
உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.
எங்களை நீங்கள் ஆண்டு
நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால்
அடிக்குக,
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்தூ¢ந்து போகட்டும்.
தாழ்ந்த
புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள்
ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.
அதுவரை
நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.
(1984 /
அலை-24)
!!!!!
பாடாத பாடல்கள்
கன்னி கட்டும் போதே
பூக்கள் உதிர்ந்து விடுகின்றன.
கர்ப்பம் தா¢த்த அடுத்த கணமே
கருச்சிதைவு
நிகழ்கிறது.
முளியாய் சிலவேளை முளைகள் தொ¢ந்தாலும்
திடீரென
துவாலை
இறைத்துக் கட்டி விழுகிறது.
ரணவாடை வீசுகிறது.
முட்டைக்குள் கோழிக்குஞ்சு
சிறகு ரோமங்களுடன் மா¢த்துப் போகிறது.
ஆனாலும், நீ என்னைப் பாடச்
சொல்கிறாய்.
தெருவில் பிணங்கள் நாறுகின்றன.
பூட்டை ரவைகள் உடைக்கும்
பொழுதில்,
வெண் புறாக்கள்
தலை கெழிய வீழ்ந்து
சிறகொடியச் சுருண்டு
துடிக்கின்றன.
பையன்கள் சொல்லாமல் போகிறார்கள்
கடலில் குருதி தெறிப்பதாகச்
சொல்கிறார்கள்
கரையில் பிணங்களைத் தேடச் சொல்கிறார்கள்
கரையில் ஒதுங்கிய
பிணங்கள்
கடலில் கொட்டப்பட்டவை என்றும் சொல்கிறார்கள்.
ஆனாலும்
நீ
என்னைப் பாடச் சொல்கிறாய்.
குருதி உறைந்த பாடல்கள்,
பிணங்கள் அழுகும்
பாடல்கள்
இருள்,
கன்னங் கா¢ய புகையாய்
தலைமேல் கவியும்
பாடல்கள்
கருச்சிதையாமல்
மூளியாய்
துவாலை இறைத்துக் கட்டி
விழாமல்
நெஞ்சைப் பிளந்து
குரல்வளையில் இடறி
நாவில் வெடிக்கின்ற காலம்
ஒன்று வரும்.
அப்போது கேள் -
இப்போது அல்ல.
(மார்க்சியம்
இன்று-3)
!!!!!
தா.இராமலிங்கம்
அய்யோ வாடி
வீடே
நீ
வதைகூடம் ஆனாயே!
-தா.இராமலிங்கம்
சாவிளைச்சல்
குடாநாட்டில்
இப்போது
கொளுத்துகுது கோடைவெயில்!
ஆனையிறவு உப்பளத்தில்
உப்புக்
குவியல்கள்
பளிங்குக் குன்றுகள்!
சா¢த்திரம் காணாத
சாவிளைச்சல்!
சாவிளைச்சல்!!
அய்யோ வாடி வீடே
நீ
வதைகூடம் ஆனாயே!
நகக் கண்கள்
ஊடு
நீட்டூசி மாட்டுகிறாய்
குண்டாந் தடியாலே
குதிக்கால்
பிளக்கின்றாய்
விரலில் இழை இறுக்கி
தலைகீழாய்த் தூக்குகிறாய்
மிளகாய்ப்
புகையினிலே
மூச்செடுக்க வைக்கின்றாய்.
அய்யோ வாடி வீடே
நீ
வதைகூடம் ஆனா¥யே!
குறியின் துவாரத்தில்
சலாகை
இறுக்கு¢றாய்
கதறிக் களைப்புற்று
விடாய் மிக்கு
நீர்
கேட்டால்
வாந்தி எடுத்து
வயிறு வாய் புண்ணாக
கடல் நீர்
பருக்குகிறாய்!
விடுதியென இனி உன்னை
யார் நம்பி
வருவார்கள்?
கதறல் அலறல் எல்லாம்
காற்றில் பதிந்து கடல்கடந்து
கேட்கிறது!
அடக்குமுறை கொந்தளித்துப்
பெருக்கெடுத்துப்
பாய்கிறது!
வளைகுடா யுத்தத்தில்
எண்ணைக் குதங்கள் எல்லாம்
தீப்பற்றி
எ¡¢கிறது!
பாலஸ்தீனத்தை
இஸ்ரேல் விழுங்கிவிட்டு
மூச்செடுக்க
முடியாமல்
முட்டுவைத்து முனகூது!
வெள்ளை இனத்து வெறியர்
ஆட்சியில்
இருண்ட கண்டத்தில்
எழுகின்ற அவல ஒலி
காற்றில் மிதந்து
கடல்கடந்து கேட்கிறது!
அய்யோ வாடி வீடே
நீயும்
கொலைகூடம்
ஆனாயே!
(1983 / புதுசு-8)
!!!!!
நெஞ்சு
பதறுகுது
கல்வீடும் கட்டிக்
கதவுக்கும்
வெளிநாட்டுப்
பூட்டு!
என்றாலும் என்ன?
மா¡¢ மிகுந்து
நிலம் கசிந்து
ஒட்டுகுது
ஓடு கசிந்து சிந்த
ஒளியும் அணைகிறது!
கோழி
குழறுகுதே!!
மரணாய்தான்! மரணாய்தான்!
குழறக் குழறக்
கொண்டுபோகுது!!
கதவைத் திறப்பம் என்றால்
நெஞ்சு
பதறுகுது!
எமதூதர் வந்து
துவக்கு முனையினிலே
கதவைத் திறவென்று
கொண்டேகும் நேரம்
மழை ஓய்ந்து என்ன?
நெஞ்சு
பதறுகுது
திக்கெல்லாம்,
சிதறித் தெறிக்கிறது!
பற்றி எ¡¢கிறது
பனங்கூடல்
காவோலைப் பொறிகள்,
காற்றிலை பறக்கிறது,
காற்று எழுந்து
மோதுகுது
பனை சுழன்று ஆடுகுது!
வீட்டில் விழுந்துவிட்டால்...?
நெஞ்சு
பதறுகுது!
(1982 / அலை-21)
!!!!!
அகால
மரணங்கள்
வெள்ளென வெல்லாம்
வெறிச்சோடிக் கிடந்து
வெறுஞ் சாம்பல்
மேடாய்த்தான்
தா¢சனம் தந்தது.
மதியம் திரும்பியதும்
கட்டை
அடுக்கிவிட்டுக்
காத்துக்டி கிடக்கின்றார்.
நீறு பூத்த குறங் கொள்ளிக்
கட்டைகள்
காற்டிறு ஊத கண் முழித்துப் பார்க்குது!
இப்ப வெல்டிலாம்
அகால மரணந்தானே அதிகம்.
ஒருவேளை
கைகூடாத் திருமணத்தால்
காதலர்
தற்கொலையோ
சாதி மத பேதம் தடுத்த
கொடுமையிதோ!
அதோ பார்!
துண்டுப் பிரசுரம் தெருவெல்லாம் ஒட்டி
தண்டிகை காவிச் சனம் திரண்டு
வருகுது
"குண்டு துளைத்துக்
குருதி குளிப்பாடிச்
சவமாகச்
சாய்ந்தாலும்
சாகாமல் வாழுகிறாய்
விடுதலை வேள்வியிலே
உடல் தீக்கு
ஈந்துவிட்டாய்..."
ஒரு கோடி சிந்தனைகள்
உள்ளத்தில்
அலைமோத
மீதியைநான் படிக்கவில்லை.
இப்பவெல்லாம்
அகால மரணந்தானே
அதிகம்.
(சுவர்-1)
!!!!!
கூறுபட்டுச்
சமுதாயம்
நு¡று குழுத் தோன்றி
மாறுபடச் சிந்தித்தால்
வீழ்ச்சிதான். -
தா.இராமலிங்கம்
கருத்து ஒன்றுபடுவோம்
கூடித்
தொழிற்படுவோம்
வாருங்கள்
மீண்டாலும் வெற்றியுடன் மீள்வோம்
வீழ்ந்தாலும்
வீரமுடன் வீழ்வோம்!
கூறுபட்டுச் சமுதாயம்
நு¡று குழுத் தோன்றி
மாறுபடச் சிந்தித்தால்
வீழ்ச்சிதான்.
பாட்டம்
பாட்டமாய்
மழைகொட்டப் போவதனை
மூடிக்கிடக்கும்
முகிற்கூட்டம்
காட்டுகுது
எமக்கு,
ஓலைக்குடிசை என்றாலும்
ஒதுங்கி இருக்க
இடம்
வேண்டும்
வாருங்கள்
கருத்து ஒன்றுபடுவோம்
கைகோர்த்து
நிற்போம்
பாதுகாப்பு ஏற்பாடு
பலப்படுத்திக் கொள்வோம்.
பூரசம் குளம்,
கொடிய ரத்தக்களம் ஆனகதை
நவரசத்தில் ஒன்றாக
நின்றுவிடக் கூடாது.
அந்தக்
கொலைகாரன் கோரமாய் நின்றான்
அவனது தாடியும் மீசையும் சிங்கத்தின் சாயலைக்
காட்டின
அவனது பார்வையில் சன்னங்கள் சிதறின
அவனது எந்திரத்
துப்பாக்கி
படம் எடுத்து ஆடியது!
காலைப் பிடித்துக்
கதறி
அழுதவரும்
தலைசிதறிச் செத்தார்கள்
உடைமைகளை வை
என்றான்
வைத்தார்கள்
வா¢சையில் நில் என்றான்
நின்றார்கள்
இரத்தப்
பெருக்கில்
ஒவ்வொன்றாய்ச் சாய்ந்துவிழச்
சன்னம் முடியுமட்டும் சன்னதம்
ஆடிநின்றான்.
மடக்கி அவனை மண்கவ்வ
வைப்பதற்கு
துணிந்தெழுந்த
இளைஞனும்
துணை கிடைக்காததினால்
தணிந்துவிட்டான் என்ற
விவகாரம்
எல்லாம்
வெற்றிலை வாயைச்
சிவப்பாகிச் சுவையூட்டும்
சுண்ணாம்பாய்
முடியாது
திட்டமிட்ட வாழ்வுக்குத்
தூண்டுதலாய்
அமையட்டும்.
வாருங்கள்
கருத்து ஒன்றுபடுவோம்
கைகோர்த்து
நிற்போம்
பாதுகாப்பு ஏற்பாடு
பலப்படுத்திக் கொள்வோம்.
10.9.1984
இல் கொழும்பிலிருந்து யாழ்பாணம் வந்து கொண்டிருந்த பஸ் வண்டி திசைதிருப்பப்பட்டு
பூவரசங்குளத்தில் பயணிகள் பயங்கரமாக் கொல்லப்பட்டதனை மையமாகக் கொண்டு
எழுதப்பட்டது.
!!!!!
அம்மா பதறி
மேற்கு உலகு
ஓடிநீ
உயிர்பிழை என்று
நாடியைத் தடவ,
பாரதம் போ நீ
மேலே படி
எனத்
தந்தையார் கூற
அதுவரை என்னுடன்...
-தா.இராமலிங்கம்
கொடியேற்றம்
நேற்றும் கூட இந்தக்
கேணியில்
தெற்குப் பக்கத்து மேற்கட்டிலிருந்து
படிகளினு¡டு பார்வையைச்
செலுத்தி
தீர்த்த நீ¡¢ல் தெறித்துத் தொ¢யும்
சந்திர ஒளியில் ஒன்றி
இருந்தேன்.
இன்றோ கேணி
சிதறிவிட்டது.
இளைஞரை இதனுள்
கொணர்ந்து
நிறுத்தி
குண்டால் தகர்த்துப்
படிக்கட்டு
எல்லாம்
பாறிப்பிளந்தன.
இரத்தப் பெருக்கில்
தீர்த்தம்
சிவந்தது.
அம்மா பதறி
மேற்கு உலகு ஓடிநீ
உயிர்பிழை என்று
நாடியைத்
தடவ,
பாரதம் போ நீ
மேலே படி எனத்
தந்தையார் கூற
அதுவரை
என்னுடன்
கொழும்பில் வந்திரு
ஆள்வோர் தயவில்
ஆபத்து இல்லை
என்றார்
கொழும்பு மாமா.
பதற்றமோ வரவர அதிகா¢த்தது
சிறிது நேரம் அடங்கி
ஓயும்
மறுபடி எழுந்து அடித்துவீசும்
புதிதாய் பூத்த
மலர்களுங்கூட
உதிர்ந்து மண்ணில் சிதறிவீழும்.
இதனால்
அடுத்தஊ¡¢ல்
சிற்றன்னை வீட்டில்
தங்கிவருவாய் சிலதினம் என்று
நொ¢ந்து சனங்கள்
தூங்கிவழிய
அரைந்து வந்த இ.போ.ச வசுவில்
அம்மா என்னை
வழியனுப்பினாள்.
ஆனால் அதுவோ இடைவழியில்
இயங்க மறுத்து
நின்றுவிட்டது.
மக்கள் இறங்கி
மூட்டை முடிச்சுடன்
உள்ளுர் வாகனம் தேடி
அலைய
நான் ஓர் நிழலில் தங்கியிருந்தேன்.
அப்பொழுது அங்கு இளைஞர்கள்
கூடினர்
வேர்த்து வழிய
பாறைகள் தூக்கி லொறியில் ஏற்றினர்
நானும் சேர்ந்து
ஏற்றிக் கொடுத்தேன்
லொறியில் ஏறி அமர்ந்து கொண்டனர்
நானும் அவர்களோடு ஏறி
அமர்ந்தேன்.
எங்கே போகிறோம் தொ¢யுமா என்று
கெள்வியை எழுப்பிச்
சொல்லத்
தொடங்கினார்
அவர்களில் பொ¢யவர்.
போர்த்துக்கேயர்
ஆட்சியிலே
புதைகுழிக்குப் போய்விட்ட
தாயின் திருவுருவம்
தோண்டி எடுத்துத்
தூய்மைப்படுத்தியுள்ளோம்.
எமது உழைப்பில்
எமது மண்ணில்
எமது
மூலவளங்களில்
கோயில் எழுப்பிப்
பிரதிட்டை செய்திட
சிற்பவல்லுநர்
நெறிப்படுத்தலில்
பாறை பிளப்பவர் ஒருபுறம்
ஏற்றிப்பறிப்பவர்
ஒருபுறம்
கட்டியெழுப்புவோர் ஒருபுறம்
இரவுபகலாய்த்
திருப்பணி வேலை
தொடர்ந்து நடக்குது.
போர்ப்படகு எ¡¢ந்து மூழ்க
யுத்தவிமானம் வீழ்ந்து
நொருங்க
பீரங்கி பிளந்து கவிழ
வாயிற்கோபுரம் வளர்ந்து சென்று
உச்சியில்
கொடியுடன் துலங்கும்
என்று முடித்தார்.
லொறி
ஓடிக்கொண்டிருந்தது
பலமாய்க் காற்று வீசிக்கொண்டிருந்தது.
(1985 /
அலை-26)
(09.5.1985 இல் வடமராட்சியில் இடம்பெற்ற இராணுவ அட்டூழியங்களை மையமாகக்
கொண்டது)
!!!!!
சி.சிவசேகரம்
பகுத்தறிவு ஆளுகிற
புதிய
யுகம்
அற்புதங்கள்
ஒருக்கால் நடந்தாலோ
ஒப்பார்கள்
என்பதனால்...
52*
சற்றே விலகி
நந்தி வழி
விட்டதுபோல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இரும்பு நெடுங்கதவும்
தானே
திறக்கும்
அங்கே
காவலர்கள் அறியாமல்
கற்சுவர்கள் சூழ்கின்ற
அறைகட்குள்
கொலை நடக்கும்
பகுத்தறிவு ஆளுகிற
புதிய
யுகம்
அற்புதங்கள்
ஒருக்கால் நடந்தாலோ
ஒப்பார்கள் என்பதனால்
இருகால்
நடந்தேறும்
கண்டு அலுத்த
கற்சுவரோ மெளனிக்கும்.
(1983 / படிகள்-18)
* - 25.7.83, 27.7.83 ஆகிய திகதிகளில் வெலிக்கடை (கொழும்பு) சிறைச்சாலையில்
கொலைசெய்யப்பட்டோர் தொகை.
!!!!!
இன்று இந்த இலங்கை
மண்ணில்
ஹிட்லா¢ன் சொற்கள் உயிர்த்துத் தங்கள்
நிழலுரு நீங்கி நிஐங்களாவன...
-சி.சிவசேகரம்
ஹிட்லர் டயறிகள்
இலங்கை 1983
ஓகஸ்ட்
ஹிட்லர் டயறிகள்
அண்மையில் வந்தவை போலிகள்.
உண்மை,
ஆனால்
ஹிட்லர் டயறிகள்
செயலாய் நிஐமாய்
இன்னுந் தொடர்ந்து
எழுதப்படுவன.
இன்று இந்த இலங்டிகை மண்ணில்
ஹட்லா¢ன் சொற்கள் உயிர்த்துத்
தங்கள்
நிழலுரு நீங்கி நிஐங்களாவன
அக்னி தோய்த்து எழுதிய சொல்லாய்
எ¡¢யும்
கடைகள் வீடுகள் மனிதர்
வெட்டுவாள்களும் வெடித்துவக்குகளும்
வா¢க்குவா¢
கீழ்ச்செங் கோடிடுவன
இந்த மண்ணில்
தமிழர்வாழும் ஒவ்வொரு
தெருவிலும்
வீடு தோட்டம் பள்ளிக்கூடம்
பல்கலைக்கழகம், பணிமனை,
கோயில்
பெருஞ்சிறைக் கூடம் - ஒவ்வோ¡¢டத்தும்
குருதியும் தசையும் நிணமும்
எலும்பும்
தோலும் மயிரும் தாளாய் வி¡¢யும்
வாளும் துவக்கும்
தீவட்டிகளும்
இனவெறி உந்தும் ஆயிரம் கைகள்
ஏந்த அழுத்தி எழுதிச்
செல்லும்
திரையின் மறைவில் இருந்து இயக்கி
எ¡¢கிற வீட்டில் விறகு
பொறுக்கும்
அரசு, முதலைக் கண்ணீர் உகுக்கும்
அல்லது புண்ணில் முள்ளால்
செதுக்கும்.
(1983 / படிகள்-18)
!!!!!
அ.யேசுராசா
துயர்நிறை
நெஞ்சோடும்
மரத்தில்
நாம், ஒரு சின்னமெழுப்பினோம்...
1974 தை
10
கல்லும் அலைகளும்
அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
எங்களது
பெண்கள் குழந்தைகள், முதியோர்
'வேட்டைநாய்களால்' விரட்டப்பட்டனர்
'கைப்பற்றப்
பட்ட பூமியில்
அந்நியப் படைகளாய் அபிநயித்த சக்திகள்'
ஒன்பது உயி¡¢ன் அநியாய
இழப்பு.
ஓ....! அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
துயர்நிறை
நெஞ்சோடும்
மரத்தில்
நாம், ஒரு சின்னமெழுப்பினோம்.
சிந்தப்பட்ட
இரத்தத்
துளிகளாய்ச் சிவந்த 'செவ் விரத்தம் பூக்கள்'
நாள்தோறும் சின்னத்தி
னடியில்,
எதையோ எமக்கு உணர்த்திக் கிடக்கும்.
மறுபடியும் இரவில் கொடுமை
நிகழ்ந்தது
செத்த உடலை
ஓநாய்கள் சிதைப்பதாய்,
மரச் சின்னத்தை
'அவர்கள்'
அழித்தனர்.
மக்கள் வலியவர்கள்
மறுபடி வெளியிடை
எழுப்பினர்
கற்று¡ண்;
தம் நெஞ்சின் வலிய
நினைவுகள் திரண்டதாய்!
மீண்டும் ஓர்முறை
'காக்கியின் நிழல்'
கவிந்து படிந்தது.
'அதிகார சக்திகள்' கற்று¡ணை
விழுத்தினர்
அலைகள் ஓய்வதில்லை.
மறுபடியும் மக்கள் எழுப்பினர்
சின்னம்;
கல்லுகளில் ஒன்பது மெழுகு தி¡¢கள்.
மெழுகு தி¡¢கள் குறியீடாய்
நின்றன;
தியாகச் சுடரைத்
தம்முள் கொண்டதாய்...
கற்களின்
புறத்தில்
மக்கள் தம் சுடுமூச்சு
நாளும் நாளும் பெருகியே வரும்.
அடக்கு
முறைகள் நிகழ நிகழ
உஷ்ணவட்டம் வி¡¢வடை கிறது.
உஷ்ண வட்டம் நிதமும்
தாக்கையில்
கல்லும் உயிருறும், நாட்கள் வரும்;
கல்லும் உயிருறும் நாட்களும்
வரும்!
கற்கள் உயிர்த்துச் சுடரைவீசையில்
அடக்கிய சக்திகள்
தப்பமுடியுமா?
அடக்கியசக்திகள் தப்பமுடியுமா?
சோதிச் சுடா¢ல் தூசிகள்
பொசுங்கல்,
நியதி.
கற்கள் உயிர்த்துச் சுடரைவீசையில்
மக்கள் சும்மா
படுத்துக்கிடப்பரா?
கற்கள் உயிர்க்கையில்... கற்கள்
உயிர்க்கையில்...
மக்களும் அலையாய்த் திரண்டே எழுவர்!
மக்கள் அலையாய்த்
திரண்டு எழுகையில்
பொசுங்கிய தூசிச் சாம்பல்கள் யாவும்
அந்த அலையிற்
கரைந்துபோகும்!
அந்த அலையிற் கரைந்தே போகும்!
(1977 /
அலை-8)
!!!!!
காலநகர்வில்
தாங்காமையில்
வெளிவந்து
சிறுதூரம்,
நடக்கத் தொடங்கினேன்...
சூழலின்
யதார்த்தம்
எனது
முகமும்
ஆன்மாவும்
அழிகின்றன.
ஒருமையென,
மூடுண்ட வட்டத்துள்
ஒடுங்கி
இருக்கக்
கேட்கப் பட்டேன்.
காலநகர்வில்
தாங்காமையில்
வெளிவந்து
சிறுதூரம்,
நடக்கத் தொடங்கினேன்.
தடிகளுடன்
எனைச்சூழ்ந்தனர்;
'கலகக்காரன்' என்றுசொல்லி.
(1980 / அலை-13)
!!!!!
முன்னு¡று ஆண்டுகள் கழிந்தனவாயினும்
நிறந்தான்
மாறியது,
மொழிதான் மாறியது,
நாங்கள் இன்றும்,.. -
அ.யேசுராசா
புதிய சப்பாத்தின் கீழ்...
சமாந்திரமாய்ச்
செல்லும்
கா¢ய தார் றோட்டில்,
நடந்து
செல்கிறேன்.
கண்களில்,
பிரமாண்டமாய் நிலைகொண்டு
கறுத் திருண்ட
டச்சுக்
கற் கோட்டை;
மூலையில்,
முன்னோரைப் பயமுறுத்திய
தூக்குமரமும்
தெளிவாய்.
பரந்த புற்றரை வெளியில்
துவக்குகள் தாங்கிய
காக்கி
வீரர்கள்"
அரசு யந்திரத்தின்
காவற் கருவி.
என்றும் தயாராய்
வினைத்திறன்
பேண
அவர், அணிநடை பயின்றனர்.
சூழ்ந்த காற்றிலும்,
அச்சம்
பரவும்.
முன்னு¡று ஆண்டுகள் கழிந்தனவாயினும்
நிறந்தான்
மாறியது;
மொழிதான் மாறியது;
நாங்கள் இன்றும்,
அடக்கு முறையின்
கீழ்...
(1980 / அலை-13)
!!!!!
திடீரெனத்
துவக்குச் சத்தம் கேட்கும்.
சப்பாத்துகள் விரையும் ஓசையும் தொடரும்.
தெருவில்
செத்து நீ
வீழ்ந்து கிடப்பாய்...
உன்னுடையவும்
கதி
கடற்கரை இருந்து நீ
வீடு திரும்புவாய்
அல்லது,
தியேட்டா¢ல்
நின்றும்
வீடு திரும்பலாம்.
திடீரெனத் துவக்குச் சத்தம்
கேட்கும்.
சப்பாத்துகள் விரையும் ஓசையும் தொடரும்.
தெருவில் செத்து
நீ
வீழ்ந்து கிடப்பாய்.
உனது கரத்தில் கத்தி முளைக்கும்;
துவக்கும்
முளைக்கலாம்!
யுபயங்கரவாதிருயாய்ப்
பட்டமும் பெறுவாய்,
யாரும் ஒன்றுங்
கேட்க ஏலாது.
மெளனம் உறையும்;
ஆனால்
மக்களின் மனங்களில்,
கொதிப்பு
உயர்ந்து வரும்.
(1980 / அலை-14)
!!!!!
நானும்
உணர்கிறேன்
இப்போது,
இது என்னுடைய தில்லை யென...-
அ.யேசுராசா
எனது வீடு
அவர்கள் சொல்லினர்,
இந்த
வீடு
எனக்குச் சொந்தமில்லை யென.
வெறுப்பு வழியும் பார்வையால்,
வீசியெறிந்த
சொல்
நெருப்பினால்
பல முறை சொல்லினர்,
இந்த வீடு
எனக்குச் சொந்தமில்லை
யென.
நானும் உணர்கிறேன்
இப்போது,
இது என்னுடைய தில்லை யென;
நாளை
எனக்கு ஒன்றுமில்லை,
இன்றும் நிச்சயமற்றது.
எனது வீட்டுக்குச்
செல்லவேண்டும்:
நான் போவேன்!
(1982 / புதுசு-5)
!!!!!
நாம் வாழவே
பிறந்தோம்.
மரண தேவதை இயற்கையாய் வந்து
வருக என்னும் வரைக்குமிவ்
வுலகில்
இஷ்டப்படிக்கு
பெண்டு பிள்ளைகள் தோழர்கள் என்று
தனித்தும்
கூடியும் உலகவாழ்வில்
எங்களின் குரலைத் தொனித்து
மூக்கும் முழியுமாய் வாழவே
பிறந்தோம்.
உயிர்த்தெழுந்த நாட்கள்
அமைதிபோல் தோற்றம்
காட்டின எல்லாம்
துயின்று கொண்டிருக்கும் எ¡¢மலைபோல.
மீண்டும் காற்றில் மண்
வாங்கி
மா¡¢ மழைநீர் உண்டு
பறவைகள் சேர்த்த செடிகொடி
வித்துகள்
பூவேலைப்பாட்டுடன் நெய்த
பச்சைக் கம்பள பசுமைகள்
போர்த்து
துயின்று கொண்டிருக்கும் எ¡¢மலை போல
அமைதியாய்த் தோற்றியது கொழும்பு
மாநகரம்.
சித்தன் போக்காய் தென்பாரதத்தில்
தி¡¢தலை விடுத்து மீண்ட
என்னை
'ஆய்போவன்' என வணங்கி
ஆங்கிலத்தில் தம் உள்ளக் கிளர்ச்சியை
மொழி
பெயர்த்தனர் சிங்கள நண்பர்கள்.
கொதிக்கும் தேநீர் ஆறும்
வரைக்கும்
உணவகங்களிலும்
பஸ்தா¢ப்புகளில் காத்திரு பொழுதிலும்
வழி
தெருக்களிலே
கையை அச