தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home   > Tamil National ForumArugan - Italy > இன்னும் நீ கற்கவேண்டியது...!!

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM
Selected Writings - அருகன் (இத்தாலி)

இன்னும் நீ கற்கவேண்டியது...!!
2 February 2005

இதோ உங்கள் கைகளின் வெடிப்பில்
கலங்கம் தெரிகின்றதா?
இதோ உங்கள் இதயத்தின் துடிப்பில்
கடினம் தெரிகின்றதா?

உங்கள் பாதத்தின் மிதிப்பில்
பதட்டம் தெரிகின்றதா?
உங்கள் எண்ணத்தின் நினைப்பில்
சீற்றந் தெரிகின்றதா?

இமைகளின் அசைவில் ஆட்டம்
வாழ்வின் வழியில் அச்சம்
முடிவு தெரிகின்றதா?...!

உன்னால் முடியுமென்றா
உலகில் வந்து நின்றாய்
மண்ணாய்ப்போகும் பொன்நாள்
மரணங்காணும் பின்நாள்
மாய்ந்து போகாதே – நீ
மறுபடியுந் தேயாதே


“மலரும்” மலரும் என்றாய்
மனதால் இன்னும் வெந்தாய்
உறவும் பிரிவும் நன்று
ஒருநாள் உலகை வென்று
வாழ்ந்து காட்டாயோ – வருங்
காலத்தை மாற்றாயோ

முடிந்ததெல்லாம் யாராலே
முடியப்போவதும் யாராலே
நடந்தசேதி நாடறியும்
விழுந்த தடத்தை மதியறியும்
மண்டிபோடாதே - எதிலும்
மயங்கித்தான் வீழாதே


உன்னிடம் உள்ளதே திறமை
உலகத்தில் அதுவே பெருமை
உன்னைமட்டுமே நம்பு
உடைந்தால் நொந்து திருந்து
திருக்கரத்தினை ஏந்தாதே – பெருஞ்
சிரசினைத் தாழ்த்தாதே .
 

Mail Us up- truth is a pathless land - Home