|
Papanasam Sivan - Songs
2.1. ராகம் தன்யாஸி தாளம் ஆதி
பல்லவி
நீ இந்த மாயம் செய்தால் ந்யாயம் தானோ தயாநிதியே
அனுபல்லவி
பாயும் மாரன் அம்பினாலே புண்படு பாவையைக் கண்ணால் பாராமல்
இன்னும் (நீ இந்த)
சிட்டைஸவர ஸாஹித்யம்
நீயல்லால் துணையில்லை புவிதனிலே தயைபுரிவையே நிஜமிதுவனஜநயன
நினதுபய சரணம் கனவிலும் மறவா எனது தாபமற வந்தருள் இறைவா
முரளி கான குளிர் நிறைமதி வதனனே முரஹரமுனிவர் தொழும் கமல சரணனே
ராதை மணவாளா துயரமினி தாளேன் முகில் நிகர் தயாளா யது பதியே (நீ
இந்த)
சரணம்
ஆயர்குல தீபமே அருள் தாராய்
(சரணத்தின் ஸவர ஸாஹித்யங்கள்)
ஸவாமி நீ கண் பார் ஸத்யபாமா லோலா கோபாலா (ஆயர்)
ஸாரஸ தளவிலோசன பரம பாவன ஸாமஜவரத மதுரை வளர் (ஆயர்)
தருணமிது நினைந்து நினைந்துள்ளம் வருந்தினேன்
கருணைநிதியே மனது கனிந்தருள் விரைந்து (ஆயர்)
பாராய் புன்னகையொடென்னருகில் வாராய் நீ மனமிரங்கியெனை
பரிவுடனே எனதுயிருடனொன்றென அன்று கலந்தேன் எனை இன்று மறந்தாய்
பனி நிலாவில் தவழ் இனியதென்றலிலும் எனது மேனியெழில் மெழுகு
போலுருக
பகலிரா துயிலுறா திருவிழிகளும் பாராமுகமும் தகுமோ மனமும்
சிலையோ (ஆயர்)
2.2. ராகம் ஸ்ரீரஞ்ஜனி தாளம் ஆதி
பல்லவி
ஸவாமி நீ மனமிரங்கி அருள்தா
மாதயைநிதியே முருக குஹ
பூமேல் வாழ்வே வேம்பென நினைந்தாள்
பூவை மனம் நொந்தாள் நீ
அனுபல்லவி
தாமதம் செய்தால் மனம் வருந்த நேருமே மனமொடிந்து
மா மயல் வெயில் புழுவாய்த் துடித்தாள் திரு-
மால்மருகா ஷண்முகா பரிவுடனே
சிட்டைஸவர ஸாஹித்யம்
வாவா விகஸித புனித மயிலின் மிசை வாவா வரதனே பத தரிசனம் தர
தேவ குஞ்ஜரி யுடன் குற மகளுஞ் சீருடனே மருவும் ஸ¤குமாரனே
(ஸவாமி)
சரணம்
வாத நோய் கொண்டாள விரைந்து மருந்து தா இவள்பெரும் பிடி (வாத)
ஸவர ஸாஹித்யங்கள்
மாதுமை மகனே தயாகரனே கனவிலும் உன்னை நம்பி (வாத)
மாதவன் மலர்க் கண்ணண் மால் மருகனே இந்த பேதை நிதம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுருகி (வாத)
உனது நினைவில் அனை தந்தையை மனையை விளை-
யாடலை பாடலை மறந்துடல் தளர்ந்து ஒவ் (வாத)
யாருமில் தனியிடந்தனில் கண்ணீர் வழிந்திடும் விழியுடன்
சிறிதும் இரங்கவில்லை பாராமுகமுடன் இனியும் நீ இவளை பரிசோதனை
செய்தால்
தருமமோ வருமமோ உயர்ந்த தோர் மந்த்ரம் சுரருலக மருந்து
நய பயமொடு தந்த்ரம் புரிந்ததிலும் குணம் சிறிதும் இல்லை ஸரஸ
(வாத)
2.3. ராகம் ஆரபி தாளம் ஆதி 2 களை
பல்லவி
ஸவாமி உன்னை ஸதா நினைந்திராப் பகல் வருந்துமென்
சஞ்சலம் தீர அருள்தர தாமதம் தகாதையா தயானிதியே
அனுபல்லவி
தாமோதரனே ராதா ரமணா
தஞ்சம் வேறின்றி நெஞ்சம் நொந்தலையுமேழை
சரணம்
பாதமே துணை பதும மலர்ப் (பாதமே)
2.
கணபதி கீர்த்தனங்கள்
4. ராகம் சுத்தஸாவேரி தாளம் ஆதி
பல்லவி
ஸதாசிவகுமாரா கண்பாராய்
ஸகலலோகாதாரா ஸ்ரீ கெளரி (ஸதா)
அனுபல்லவி
பதாரவிந்தனே ஸ¤ரமுனிவர் பணியும்
ப்ரணவஸவருப கஜானன நீதுணை (ஸதா)
சரணம்
அடியார் நினைத்த வரம் அருள்வாய் கவலையுடன்
இடையூறெல்லாம் சிதறடிப்பாய் உனது
கடைக்கண் பார்வை இருந்தால் கரைகாணாத
கடலும் சிற்றோடையாகாதோ கணபதியே (ஸதா)
2.5. ராகம் ஹம்ஸத்வனி தாளம் ஆதி
பல்லவி
முலாதார முர்த்தி கஜமுகனே சரணம் உனது உபய சரணம் (முலாதார)
அனுபல்லவி
வேலாயுத குஹன் தனக்கு முன் தோன்றிய
விமலா உமையாள் தரு மகனே
அமலா எமையாள் முனிவர் தொழும் (முலாதாரா)
சரணம்
அன்புடன் தும்பை யருகம் புல்லை எடுத்-
தருச்சனை செய்தாலும் போதும் - அன்பர்
துன்பம் துடைத்துப் பேரின்பம் தரும் வரதா
துணை புரி ப்ரணவா கார கணபதியே
2.6. ராகம் ஸ்ரீரஞ்ஜனி தாளம் ஆதி
பல்லவி
கஜ வதன கருணா ஸதன சங்-
கர பாலா லம்போதரஸ¤ந்தர (கஜவதன)
அனுபல்லவி
அஜனமரேந்த்ரனும் முனிவரும் பணி பங்-
கஜ சரணம் சரணம் சரணம் ஸ்ரீ (கஜவதன)
சரணம்
நீயே முவுலகிற்காதாரம் நீயே சிவகாம மந்த்ரஸாரம்
நீயே வாழ்விலென் ஜீவாதாரம் நீயருள்வாய் ஸ¤முகா ஓங்கார (கஜவதன)
2.7. ராகம் திலங் தாளம் ஆதி 1 களை
பல்லவி
ஸ்ரீ கணேச சரணம் கஜானன
தேவர் முனிவர் பணியும் தயாகர (ஸ்ரீ கணேச)
அனுபல்லவி
நாகாபரணனே நான் மறை போற்றும்
நாமனே ப்ரணவ ருபனே ஜய (ஸ்ரீ கணேச)
பாதம் நம்பும் ராமதாஸ வரதனே
மோதகப் ப்ரியனே கெளரீ ஸ¤தனே
ஆதி தேவன் உனதின்னருள் இல்லையேல்
வேதனும் மாலும்செய் தொழில் உண்டோ (ஸ்ரீ கணேச)
2.8. ராகம் பேகட தாளம் ஆதி 2 களை
பல்லவி
கை கொடுத்தாளையா கதி யாரைய்யா நின்
கழலினை சரண் ஐயா கருணையொடித்தருணம் மனங்கனிந்து (கை கொடுத்)
அனுபல்லவி
பொய் கிளர் மாய மண் வாழ்வெனும் இருளில்
புகுந்து வருந்த மனம் இணங்காததையுன் திருவுள்ள மறியாதா (கை
கொடுத்)
சரணம்
அயன் முதல் வானவரும் உனதருளால்
ஐந் தொழில் புரிகின்றார் - மறை புகழும்
ஆதி தெய்வம் நீயென நம்பினேன் இனி
சோதனை போது மையா
புயலில் சிக்குண்ட வாழை போலும் சுழன்
றுள்ளம் திகைக்குதையா - முப்
பழமும் பொரியவலருந்தும் மெய்யன்பர் ஸஹாயா
புகலிலேன் யானை முகனே பேதை என்னை (கை கொடுத்)
2.9. ராகம் ஸரஸவதி தாளம் ஆதி 1 களை
பல்லவி
அருள் புரி ஐங்கரனே-மதம் பொழியும்
ஆனைமுகனே கருணா கரனே திரு (அருள்)
அனுபல்லவி
இருள் மயமாம் புவி வாழ்வினிலே-உன
திணையடியலதொரு துணை யறியேன் திரு
சரணம்
ஓங்கார ருபா கண நாயகா
உமை மகிழ் மகனே விநாயகா
நீங்காதெனது நெஞ்ச ஆலயத்திலே
நீ என்றும் துணைநின்று இன்பந்தந்தே-திரு (அருள்)
2.10. ராகம் சிவரஞ்சனி தாளம் ருபகம் 1 களை
பல்லவி
தருணமிதையா தயை புரி துதிக்கையா உரிய (தருணம்)
அனுபல்லவி
சரணம் என்றுன் மலரடி பணி தமியனை தவிக்க விடாமல் (தருணம்)
சரணம்
உன்னருளல தோர் துணை இனி உலகில் இல்லையே
எந்தன் முன்னவனே யானை முகனே முருகனுக்கருளும் துதிக்கையானே
(ம-காலம்)
முக்கட் பரன் மகனே விக்ன விநாயகனே
முக்கனி மோதக ப்ரியனே அபய மபயம் விரைந்து வந்தருள் (தருணம்)
2.ஷண்முகன் கீர்த்தனைகள்
11. ராகம் தோடி தாளம் கண்டசாப்பு
பல்லவி
தணிகைவளர் சரவணபவா நின் தாள் சரணம்
தருணமிது கருணை புரிவாய் தண் சோலை (தணிகை)
அனுபல்லவி
அணியும் நவமணி பணிகள் தகதகென நிறைமதி நேர்
அறுமுகமும் இளநகை வெண்ணிலவுமிழ உலகு புகழ் (தணிகை)
சரணம்
துள்ளி விளையாடி வரும் தோகை மயில் மேலே
வள்ளியுடன் பெய்வளை தெய்வானை இருபாலே
அள்ளியிருகண் பருகும் அன்பர் புகழ்வேளே
வெள்ளிமலை நாதன் தருவேல்கொள் பெருமாளே (தணிகை)
2.12. ராகம் சுத்ததன்யாஸி தாளம் ஆதி 1 களை
பல்லவி
ஜய ஜய குஹா சரணம் ஷண்முகா
தருணம் ஈதையா பன்னிரு கையா (ஜய)
அனுபல்லவி
தயை புரிய வா சரவண பவா
சரணம் மறவா அடிமைக் கருள்வாய் (ஜய)
சரணம்
இறைவனுன்னையே பணியுமடியேன்
முறையிடுவதுன் உள்ளமறியுமே
குறையிரந்திட பிறரையணுகேன்
குறுநகை தவழ் குமரகுருவே (ஜய)
2.13. ராகம் ஸாவேரி தாளம் ஆதி 1 களை
பல்லவி
முருகா முழுமதி பழிக்கும்
அறுமுகா முகுந்தன் மருகா (முருகா)
அனுபல்லவி
ஒருகால் சரவண பவா என்றோதும் - மெய்
யன்பரை யாள வலிய வரும் வேல் (முருகா)
சரணம்
உன் பெருமை புகலும் தரமோ - ஹர
னுமை பாலா பரம தயாளா - குற
மின் கலந்த குமரா குஹா - தீன
சரண்யா ஸ¤ப்ரமண்யா வேல் (முருகா)
2.14. ராகம் அடாணா தாளம் ஆதி 1 களை
பல்லவி
உலக வாழ்விலும் நின்னருளின்றி
ஓரடி வைப்பதும் எளிதோ ஏழை (உலக)
அனுபல்லவி
கலியி லுன்னை மறந்தால் கிட்டுமோ
கைவல்யம் மறுமையில் மட்டுமோ (உலக)
சரணம்
த்யான யோக ஜபதபங்களறியேன்
ஸத்ஜன ஸங்கம் இணங்கியு மறியேன்
கான சாஸத்ரமும் கற்றறியேன்-மனம்
கனிவிலேன்-முருகனே-குருடனேன் (உலக)
2.15. ராகம் ஸிம்மேந்திர மத்யமம் தாளம் ஆதி களை
பல்லவி
பழனியப்பன் நின் பதம் மறவேன்-எப்
பதவி வந்தாலும் கந்தா குருபரா (பழனி)
அனுபல்லவி
மழை நிகர் பைங்குழல் வள்ளி குஞ்சரி-ம
ணாள இவ் வேழை பங்காள தயாள தென் (பழனி)
சரணம்
இன்ப துன்பம் எதிலும் நீ துணையிருந்
தெம்மைக் காத்தருள வேண்டும்
அன்புடன் ஆண்டவனே உன்னை மறவா
தடியிணை பணிய வரம் தருவாய் தென் (பழனி)
2.16. ராகம் வஸந்தா தாளம் ஆதி 1 களை
பல்லவி
மால் மருகா ஷண்முகா முருகா குஹா (மால்)
அனுபல்லவி
நான் மறை ஸார ஓங்கார ஸவருபா
மாமயில் வாஹனே ஸவாமி ப்ரதாபா (மால்)
சரணம்
வெள்ளிமலை நாதன் கெளரீ பாலா
வேறு துணை காணேன் வந்தெனையாளாய்
வள்ளி தெய்வானை மணாளா தயாளா
வணங்கும் ராம தாஸன் தலையணி தாளா (மால்)
2.17. ராகம் தேவமனோஹரி தாளம் ஆதி
பல்லவி
வந்தருள்வாய் முருகா பரமசுகம்
தந்தருள் மால் மருகா (வந்தருள்)
அனுபல்லவி
சொந்தமுடன் உனை நினைந்திடும் அன்பர்-த-
யாள என் இன்ப மணாள மனமிரங்கி (வந்தருள்)
சரணம்
பாலினும் தேனினும் கனியினும் இனிக்கும்
பார்வதி பாலனே சரவண பவனே
நீலமயிலில் வரும் கருணாகரனே-எந்
நேரமும் என்னுடன் நீ விளையாடவே (வந்தருள்)
2.18. ராகம் கன்னடா தாளம் ஆதி 1 களை
பல்லவி
சரவண பவ குஹனே-ஷண்முகனே
சரணமருள் விசாகனே-ஸ¤முகனே (சரவண)
அனுபல்லவி
அரவணி ஹரன் உமை மனமகிழ் மகனே
அரவணை துயில் ஹரி அருமை மருகனே (சரவண)
சரணம்
எனக்குனை யலதொரு துணையிலை துய்யா
இரக்கமிலையோ வடிவேல் முருகையா
வனக் குற மகள் புனர் பன்னிரு கையா
வணங்கும் ராமதாஸனுன் அடைக்கலமையா (சரவண)
2.19. ராகம் ஷண்முகப்ரியா தாளம் ஆதி 1 களை
பல்லவி
சரவண பவ எனும் திரு மந்திரம் தனை
ஸதா ஜபி என் நாவே-ஓம் (சரவண)
அனுபல்லவி
புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த
போதஸவருபன் பொற் பாதம் தனைப் பணிந்து (சரவண)
சரணம்
மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
மாயை யகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்
தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு மிழும்
ஷண்முக ப்ரிய ஷடா க்ஷர பாவன (சரவண)
2.20. ராகம் வஸந்தா தாளம் ஆதி 2 களை
பல்லவி
மாதயை நிதியெனும் நீ தயை புரிந்தருள் மாதவன் மருகனே
முருகனே குஹனே மலை மகள் மகனே (மாதயை)
அனுபல்லவி
போதயன் பணி மலர்ப் பாதனே மறைமுகன்
புகலரும் ப்ரணவ மஹிமை மெய்ப் பொருளை
புகழ் தாதை காதில் ஓதும் குருநாத (மாதயை)
சரணம்
கந்தனே கலியுகந்தனில்-இருகண்
கண்ட தெய்வமென-எண்டிசை புகழும்
செந்திலாதிப சிறந்த வேலணியும்-
சேவல அமரர் காவல்-ஷண்முக (மாதயை)
2.21. ராகம் ஸஹானா தாளம் னாமிச்ர சாபு
பல்லவி
சித்தம் இரங்கா தேனையா செந்தில் வேலையா நின்
சித்தம் இரங்கா தேனையா சிறியேனிடம் அறு மாமுக சிறிதேனும் நின்
அனுபல்லவி
சித்தம் இரங்கா தேனையா சிறியேனிடம் அறு மாமுக சிறிதேனும் நின்
(சித்தம்)
பக்தர்க் கிரங்கும் தீன பந்து என்றுன்னை நம்பி
சரணம்
பகலிரவும் பணிந்து பாடி பஜிக்கும் என்பால் நின் (சித்தம்)
தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்
றுலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே
மலையோ என் வினை உந்தன் கருணைத்துளி இருந்தால்
வையம் வியக்க ராம தாஸன் தன்னை ரக்ஷ¢க்க நின் (சித்தம்)
அனுபல்லவி போல்
மலையோ என் வினை உந்தன் கருணைத் துளி இருந்தால்
வையம் வியக்க ராமதாஸன் தன்னை வந்தாள நின் (சித்தம்)
2.22. ராகம் நடபைரவி தாளம் ஆதி 1 களை
பல்லவி
ஸ்ரீவல்லீ தேவ ஸேனாபதே ஸ்ரீ ஸ¤ப்ரமண்யா நமோஸதுதே (ஸ்ரீவல்லீ)
அனுபல்லவி
தேவதா ஸார்வ பெளம ஜய ஜய
தவிஷட்புஜ கார்த்திகேயா மேயா (ஸ்ரீவல்லீ)
சரணம்
மா ம வ ஸ தா சிவகுமாரா-வி
மானீக்ருத சித்ர மயூரா-ச்ரித
காமித பல தாயக கதசூர
கருணா ஜலதர ஜகதாதார (ஸ்ரீவல்லீ)
அனுபல்லவி போல்
காமித பல தாயக ஹத சூர
கருணா ஜல தர ஜகதா தாரா (ஸ்ரீவல்லீ)
2.23. ராகம் ஆபேரி தாளம் ஆதி
பல்லவி
கந்தா வந்தருள் தரலாகாதா கதிவேறேது (கந்தா)
அனுபல்லவி
செந்தூர் வளர் குஹா அடிமையின்
சிந்தா குலம் தீர நீ வலிய
வந்தா லுந்தன் மஹிமை குறையுமோ
வள்ளி மண வாளா புள்ளி மயில் ஏறும் (கந்தா)
சரணம்
பச்சிளங் குழவியைப் பெற்ற தாய்
பரிந்தணைப்பது கடனன் றோ
பரம தயா கரன் என்று பேர் புகழ்
படைத்தவன் நீ யன் றோ
ஸச்சிதானந்த முர்த்தி-சரவணோத்
பவ குஹனே சங்கரன் மகனே
தயவுடனே திருமால் மருகா-மன
மிரங்கி உனதடிமை என்னிடம் பரிந்து (கந்தா)
2.24. ராகம் காம்போஜி தாளம் திஸர த்ரிபுட
பல்லவி
கதிர் காம கந்தன் பூங் கழலினை பணி மனமே உந்தன்
கவலை பிணி கலியு மற அனு தினமும் (கதிர்)
அனுபல்லவி
முதிர் ஞானம் அலையும் மன அமைதி அரிய
முடிவி லின்பம் முதலியன பரிவொடுதர வரும் கருணையன்
சரணம்
நீ எங் கிருந்தாலும் உனது கஞ்ஜ பதமென் நெஞ்சம் மறவேன்
நீயும் ஏனைக்கை விடலாகாது கோலமயில் வாஹன குஹா
தீய அஸ¤ரர் குலம் மாள விடு பன்னிருதோளா வள்ளி
குஞ்சரி மணாள-தீனதயாளா-அருளா ளா என்றன்போடு (கதிர்)
2.25. ராகம் ஆபோகி தாளம்ஆதி
பல்லவி
நெக்குருகி உன்னைப் பணியாக்-கல்
நெஞ்சனெக் கருள் வாய்-முருகா (நெக்குருகி)
அனுபல்லவி
திக்கு வேறில்லை தீனசரண்யா
தேவர் முனிவர் பணி ஸ¤ப்ரம் மண்யா (நெக்குருகி)
சரணம்
முக் கண்ணன் உமை ஈன்ற மகனே-ஷண்
முகனே மாயோன் மருகனே-
சிக்கல் சிங்கார வேல குஹனே-வள்ளி
தெய்வயானை மணவாளா உன்னை நினைந்து (நெக்குருகி)
2.26. ராகம் காபி தாளம் ஆதி 1 களை
பல்லவி
சோதனைச் சுமைக்கிவ் வேழை ஆளா
ஸ¤ப்ரம் மண்ய தாளாச் (சோதனை)
சரணம்
பாத கமலம் மறவாத அடிமை என்
பாத கமலம் அகலாதா வாதா (சோதனை)
உனதருளினும் என் வினைவலி பெரிதோ
உனக்கிரக்க மில்லையோ கந்தா வந்தாள் (சோதனை)
காம ஸம்ஹார சிவகுமர குருபரா
ராம தாஸன் பணியும் பாலா வேலா (சோதனை)
2.27. ராகம் ஜோன்புரி தாளம் ஆதி 1 களை
பல்லவி
முருகனைப் பஜி மனமே-திருமால்
மருகனைப் பஜி மனமே
(திச்ரம்) முக்கண்ணண் மகனை அறுமுகனைக் குஹனைப் பன்னிருகை
(முருகனை)
அனுபல்லவி
உருகாத நெஞ்சத்தில் ஒருகாலும் எட்டாத
உத்தமத் திருத்தணிக் கருத்தனைக் கருத்தில் வைத்து (முருகனை)
சரணம்
செந்தில் நாதனை அரவிந்த பாதனை
சிக்கல் சிங்கார வேலனை சிவ பாலனை (முருகனை)
எள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்-குற
வள்ளி அன்பிற்குள்ளம் பறிகொடுத்த விருத்த வேடத்தனை (முருகனை)
பழந்தமிழ்த் தெய்வக் கந்தனருள் இழந்தறங்காதே-துயில்
எழுந்து அடியர் மனதில் தவழ்ந்து விளையாடும் குழந்தை (முருகனை)
2.28. ராகம் கமாஸ தாளம் திச்ர ஆதி
கண்ணிகள்
செந்தில் வளர் சேவலனே கந்த ஸ¤ரர் காவலனே
வந்தருள் தயாகரனே வள்ளி மண வாளா வா வா (செந்தில்)
ஆறுமுக வேலவனே வானவர்க்கு மேலவனே
சீறி வரும் தாரக ஸம்ஹாரா சிங்கார குமாரா (செந்தில்)
பன்னிருகை பாலகனே-பச்சை மயில் வாஹனனே
பக்த பரி பாலகனே பரனே கடைக்கண் பார் பார் பார் (செந்தில்)
2.29. ராகம் சங்கராபரணம் தாளம் சாபு
பல்லவி
கொஞ்சம் தயை புரிய லாகாதா குஹ ஷண்முகனே
அனுபல்லவி
நெஞ்சம் தாமரை இலை நீர்போல் தத்தளிக்குதே
தஞ்சம் வேறில்லை உந்தன் திருவுள்ளம் அறியாதா
மத்யம காலம்
தந்தையும் அருமைத் தாயும் நீயென
சந்ததம் உனை நினைந்த சேயெனை
அந்தி பகலும் வருந்த விடுவது
அழகிதோ பழனி யாண்டவ முருகனே (கொஞ்சம்)
சரணம்
மாயை உலக வாழ்வென்றறிந்தும் இதை விட்டோட
வழியும் தெரியவில்லை மனதில் துணிவுமில்லை
நீயும் அடிமையை அஞ்சேல் அருளாயாகில்
நீதி இதுவோ தயை நிதியே எவர் கதியே (கொஞ்சம்)
மத்திய காலம்
நிதமும் உன் கமலப்பத மலரிணையை
நினைந்துருகி மனம் கனிந்து பஜிக்கும் என்
இதயம் கவலை இல்லாத நிலையடைய
இரங்கிலாய் திரு அரங்கன் மருக ஏழைக்கு (கொஞ்சம்)
2.30. ராகம் ராகமாலிகை தாளம் ஆதி 2 களை
ராகம் கீரவாணி
பல்லவி
மாலை சூட்டுவேன் வேலவா வரந்தருவாய் (மாலை)
வந்தருள் கந்த - மலர் (மாலை)
கருணையுடன் அணிசொல் - மலர் (மாலை)
அனுதினமும் அனுராக (மாலை)
உனக் குகந்தப் - பா (மாலை)
மலரடி தனில் அடிமை யின்துதி (மாலை)
அனுபல்லவி
சோலை சூழும் ஸவாமி மலை மேல் கருணை
சுரந்து எழுந்தருள் ஸவாமி நின் திரு நாம (மாலை)
சரணம்
எங்கும் நிறைந்தருள் ஐங்கரனுக் கிளைய
இறைவனே அறுமுகனே முருகனே
சங்கரனுக் குபதேசம் செய்த குருபரா
க்ருபாகர குமரா ஸ¤ஸவர (மாலை)
சங்கராபரணம்
பாதாம்புஜம் ஒரு கணமும் மற
வாத என்னையுன் திரு வுள்ளம் அறி-
யாதா வள்ளி தெய் வானைக்கு
நாதா இன்னும் வாதா அனுராக (மாலை)
வராளி
பாரில் உனைப் பிரிந்தேழை படாத-
பாடு பட்டது போதாதோ-கதி
யாரையா-கடைக்கண்-பாரையா-இரங்கிக்
காரையா என்றகம் கரைந்துருகி-மண (மாலை)
பிலஹரி
தாதை திருச் செவியில் ப்ரணவப் பொருளுரைத்த
ஸவாமி தாரகன் முதல் கொடிய அஸ¤ரர்களின் (மாலை)
வாதை தீரச் சரவணப் பொய்கை தனில் வந்த
வரதா பால ஸ¤ப்ரமண்யா என்றும்-வாடாத (மாலை)
கேதார கெளளம்
துள்ளு மஹங்கார சூர ஸம்ஹார
ஜோதி ஸவருப மயில் வாஹனனே
கள்ளமில்லா அன்பருள்ளக் கோயிலில்
காக்ஷ¢ யளிக்கும் ஜகன் மோஹனனே மண (மாலை)
2.31. ராகம் நாட்டை தாளம் ஆதி 1 களை
பல்லவி
அடித்தாலும் உனை விட்டடிமை எங்கு செல்வேன்
அறுமா முகனே மயில் வாஹனனே குஹனே முருகனே (அடி)
அனுபல்லவி
எடுத்தாள்வை என்றுன்றன் அடித்தாமரை மலரை
இளமை தொட்டெளியேன் என் உளத்தில் வைத்தேன் ஐயா (அடி)
சரணம்
தாயடித்துப் பிள்ளை முடமாகுமோ என்பார்
நீயடித்தால் தாங்க எனக்கு வலிமை ஏது
தாயடித்தாலும் காலைச் சுற்றிச் சுற்றி வருமே
தயவிலையோ ஏழை செய் பிழை பொறுக்காமல் (அடி)
2.32. ராகம் முகாரி தாளம் ஆதி 1 களை
பல்லவி
சிவ காம ஸ¤ந்தரி-ஜக
தம்ப வந்தருள் தந்தருள் (சிவ)
அனுபல்லவி
பவ ரோக மற வேறு மருந்தேது
பழ வினைகள் தொடராமல் உனைப்பஜிக்க (சிவ)
சரணம்
கேளாயோ என் முறைகள்-உயர்
ஸாம கீத வினோதினி போதுமுன் சோதனை
தாளேனே அகதி நானே-ராம
தாஸன் பணியும் அபிராமி-வாமி (சிவ)
2.33. ராகம் பெளளி தாளம் திச்ரத்ருபுட 1 களை
பல்லவி
கருணாநிதியே தாயே
கடைக்கண் பார்த் தருள்வாயே (கருணா)
அனுபல்லவி
அருணோதயம் கண்டால் அகலும் பனி இருள்போல்
அன்னை யுந்தன் அருளிருந்தால் அகன்றிடுமே
புன்பவ நோய் என் பரம (கருணா)
சரணம்
உனை மறந்து என் வாழ் நாளில்
ஒரு கணமும் இருந்தறியேனே
அனை மறந்திளம் சிசு உண்டோ
அவ்வணம் உனை நம்பினேன் நானே
மனம் நினைந்த அன்பரையாள
மயிலை வந்த கல்பகம் நீயே
எனது பிழை பொறுத்தருளாயேல்
இனி ஏது துணை மேதினியில் மாதுமையே (கருணா)
2.34. ராகம் ஹரிகாம்போஜி தாளம் சாபு
பல்லவி
பாதமலர் துணையே-பரதேவதே-உனது (பாத)
அனுபல்லவி
சீத மதியணி சங்கரி ஆதி புரிவளர் த்ரிபுரஸ¤ந்தரி (பாத)
சரணம்
பஞ்ச-நதமெனும் தென் கயிலைவளர் பார்வதி கருணாநிதி மனச்
சஞ்சலம் அகல அருள்வையே ராமதாஸன் பணிதர்ம-ஸம் வர்த்தனி (பாத)
2.35. ராகம் ஆனந்தபைரவி தாளம் ஆதி 1 களை
பல்லவி
ஆனந்த பைரவி அனையுன் திருவடி மலரிணை துணையே சங்கரி சி(வானந்த)
அனுபல்லவி
மீனம் தன்னை நிகர் நீள் கருணை விழியால் நோக்கி வினை
நீக்கியருள் பர(மானந்த)
சரணம்
அனைத்துயிரையும் ஈன்ற ஜகன் மாதா-இளங்
குமரி கெளரி வரை
அரசனரும் புதல்வி ஹரிஸோதரி அபார க்ருபா கரி
உனைத் தொழு மெனது வினைத் திரளகல
உள்ளன்போடு கடைக் கண்பாராய்
உன் கருணைத்துளி இல்லையேல்-ஏழைக்
குலகில் வேறு ஆதாரம் ஏது அம்ப (ஆனந்த)
2.36. ராகம் பியாகடை தாளம் ருபகம் 1 களை
பல்லவி
புவனேஸவரி பாதம் நினைந்து
பூஜை செய் மனமே (புவ)
அனுபல்லவி
பவபயமற அருள்புரிபவள்
பர மதயா நிதியாகிய (புவ)
சரணம்
விடைவாகன் ஒருபாகம்
உடையாள் தளர் நடையாள்
கடைக் கண் பார்வையினாலே
கலிதீர்க்கும் பரதெய்வம் (புவ)
2.37. ராகம் மணிரங்கு தாளம் தேசாதி 1 களை
பல்லவி
புவனேஸவரி புகலுனது பாதம்
புரஹர மனோஹாரிணி பூரணி (புவ)
அனுபல்லவி
அவனிதனிலே பணியு மடியார்க்
கானந்த போக வாழ்வருளும் அம்பா (புவ)
சரணம்
கருணாகரீ சங்கரீ ஸர்வலோக
காரணி பவ நிவாரணி ஜனனீ
சரணா கதி நின் சரணாம் புஜம்
சக்தி ஸவருபிணி தாயே மாயே (புவ)
2.38. ராகம் தோடி தாளம் ஆதி 1 களை
பல்லவி
மங்கள நாயகி மாதா மலர்ப் பதம்
மறவா தவர் இனிப்பிறவார் திண்ணம் ஜய (மங்கள)
அனுபல்லவி
மங்கள தாயகி வணங்கும் அன்பர்க்குவேண்டும்
வரமும் இஹ பர ஸ¤கமும் பரிவொடு
தரவருவாள் திருவருள் வடிவாகிய (மங்கள)
சரணம்
தெய்வ நதிக் காவிரிக் கரையிலே
திருக்குடந்தை நகரிலே-ஸகல
தெய்வ நாயகன் அனாதிகும்பேசன்
சீரிடம் அமரும் பராசக்தி
பொய் வளர் வையக வாழ்வு சதமென்று
புகுந்து புண்ணாய் புலம்பாமல் அவள்
புகழ் பாடி அடியாருடன் கூடி ஞான
போத ஸாது ஜன உறவாடி ஸ்ரீ (மங்கள)
2.39. ராகம் கானடா தாளம் ஆதி
பல்லவி
உள்ளமிரங்குவ துன் கடனே
உன் பதமே புகலென்ற டைந்தேன் உன்திரு (உள்ளம்)
அனுபல்லவி
பிள்ளைமனம் கல்லெனினும்-உலகில்
பெற்றமனம் புற்றென் பார்
பேரருட் கடலன்னையே அடிமை
பேதமையால் விதியால் பிழைபுரிந்தாலும் (உள்ளம்)
சரணம்
மலயத்வஜன் மகளாய் அவதரித்த
மாதவ ஸோதரி மாமதுரை
மஹா ராக்ஞ மஹாதேவன் பங்கிலுறை
மாதா சிவே ராஜ ராஜேஸவரி (உள்ளம்)
கலைமாதும் திருமங்கையும் வணங்கக்
கொலு வீற்றிருக்கும் அனையே
கருணாநிதியே சரணாகதி தாயே
கருணைக் கண் பார்த்துக் காத்தருள் மீனாக்ஷ¢ (உள்ளம்)
2.40. ராகம் கீரவாணி தாளம் ஆதி 1 களை
பல்லவி
தேவி நீயே துணை-தென் மதுரை
வாழ் மீன லோசனி (தேவி)
அனுபல்லவி
தேவாதி தேவன் ஸ¤ந்தரேசன்
சித்தம் கவர் புவன ஸ¤ந்தரி அம்ப (தேவி)
சரணம்
மலயத்வஜன் மாதவமே காஞ்சன
மாலை புதல்வி மஹா ராக்ஞ
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)
2.41. ராகம் ஹம்ஸத்வனி தாளம் ஆதி
பல்லவி
பராசக்தி ஜனனி எமைப்
பரிபாலனை புரி பர்வத குமாரி (பரா)
அனுபல்லவி
ஸ¤ரா ஸ¤ரைபணி ஸரோஜ சரண
ஸ¤ந்தரி நின்சரணாம்புஜம் நம்பினோம் (பரா)
சரணம்
சங்கரி க்ருபாகரி வராபய கரே எமை
யாதரி ஹரி ஸோதரி (பரா)
தாயே பரசிவ ஜாயே மனவிருள்
மாயை யகல அருள்வாயே மாயே (பரா)
கோரமஹிஷ ஸம்ஹாரிணி ஸயாமள
ருபிணி ஸிம்ம வாஹினி மகேஸவரி (பரா)
2.42. ராகம் கரஹரப்ரியா தாளம் தேசாதி 1 களை
பல்லவி
தர்மாம்பிகே தஞ்சம் நீயே பதாரவிந்தம் துணை (தர்)
அனுபல்லவி
கர்மாšபந்தம் தீர உந்தன் கருணாகடாக்ஷம் தந்தே காத்தருள் (தர்)
சரணம்
மாதா நீயே ப்ரணதார்த்தி ஹரனென் தாதையன்றோ தயவில்லையோ-
யாதா யாதமாய் பிறவிக்கடலில் இன்னும் எத்தனை நாள் வருந்தி
உழல்வேன் (தர்)
2.43. ராகம் அடானா தாளம் ஆதி 1 களை
பல்லவி
திருவருள் தரக் கன விசாரமா
தீனனான நான் ஒரு பாரமா அம்பா (திரு)
அனுபல்லவி
திருவடியலதொரு துணையறியாப் பேதை
தினம் ஒருகணம் உன்னை மறந்ததுண்டோ (திரு)
மத்யம காலம்
சிந்தை நொந்துழல விடுவதும் தர்மமா அம்மா வர்மமா
சுந்தரேசன் மகிழ் மதுரை மீனாக்ஷ¢ தொல்லைதீர இரங்கிக்
கடாக்ஷ¢த்துத் (திரு)
சரணம்
கவலைகள் அலையாய் அடிமையைத் தாக்க
கலங்கினேனே வேறெவர் கைதூக்க
திவலை அருள் தர-தீருமென் ஏக்கம்
தயைநிதியே இரங்கி வந்தென்னைக் காக்க (திரு)
2.44. ராகம் சங்கராபரணம் தாளம் தேசாதி 1 களை
பல்லவி
அம்ப உனையே நம்பினேன் த்ரிஜக
தம்ப கடைக்கண் பார்த்தருள் கல்ப (காம்ப)
அனுபல்லவி
வெம்பவமெனும் கடல் நடுவிலே
வீழ்ந்துடல் கை கால் சோர்ந்தனவே கல்ப (காம்ப)
சரணம்
எல்லையில்லாக் கவலை நோய்கள்
இரவு பகல் என்னை வறுத்தெடுக்கு-தே
தொல்லையற்ற அன்பர்க்கின்பமருளும்
ஜோதி கபாலியின் பாதி உடல் வளர் (அம்பா)
2.45. ராகம் பந்துவராளி தாளம் ஆதி 1 களை
பல்லவி
அம்பா மனங் கனிந்துனது கடைக்
கண்பார் திருவடியிணை துணை யென (தம்ப)
அனுபல்லவி
வெம்பவ நோயற அன்பர் தமக்கருள் - க
தம்பவனக் குயிலே - சங்கரி - ஜக (தம்ப)
சரணம்
பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப் பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி-அறுபகைவர்
வசமாய் அழியாமல் அருள் பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸவரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி யென் (அம்பா)
2.46. ராகம் ஸாவேரி தாளம் ஆதி 2 களை
பல்லவி
உனைத் தினம் பணிந்ததும் வீணோ தேவி
உமையே ஜகதம்பா என் குழவிப் பருவ முதல் (உனை)
அனுபல்லவி
அனைத்துலகும் படைத்தளிக்கும் பராசக்தி
அனையே அனையே என்றுன்றனையே நினைந்து அந்தி பகல் (உனை)
சரணம்
எத்தனை சோதனை செய்திடினும் உனதடி மலரிணை விடுவேனோ
ஈஸவரி நின் அருளிருக்க என்மனம் சஞ்சலப்படுவேனோ
சித்தமிரங்காதோ என் சிந்தாகுலம் நீங்காதோ-நானுன்
சேயன்றோ எவ்வுயிர்க்கும் நீயே தாயன்றோ புவனஸ¤ந்தரி நான் (உனை)
2.47. ராகம் குந்தலவராளி தாளம் ஆதி 1 களை
பஜன்
அமலே அமரர்கள் பணியும் அனகே
விமலே காளி பராசக்தி
அருவே அடியவர்க் கருள் மெய்யுருவே
அபயம் தந்தருள் என் தாயே
அனையுன் பெருமையை அறியாப் பேதை
உனை யென்னென்று புகழ்வேன் தேவி
ஜகதம்பா ஓ ஜகதம்பா
ஜகதம்பா ஓ ஜகதம்பா
2.48. ராகம் கானடா தாளம் ஆதி 1 களை
பல்லவி
மாதா துணை புரிவாய் ஸ்ரீ ஜகன் (மாதா)
அனுபல்லவி
மாதவ ஸோதரி மலையரசன் குமாரி
பாதம் நம்பினேன் அம்ப பார்வதி சங்கரி (மாதா)
சரணம்
எத்தனை துன்பங்கள் வந்தாலும் நின்
இன்பத் திருநாமம் சொல்லித் துதிக்கவும்
எத்தனை இன்பங்கள் நேர்ந்தாலும் என்
ஹருதயம் உன் பூஜையை மறவாதிருக்கவும் (மாதா)
2.49. ராகம் பைரவி தாளம் ஆதி 1 களை
பல்லவி
தாயே நீயே தஞ்சமருள் வாயே தயை புரிந்தென் அருமை (தாயே)
அனுபல்லவி
மாயா இன்பமும் துன்பமும் நீயென
மனம் நினைத்துனைத் தினம் தொழும் எனது (தாயே)
சரணம்
நன்மையும் தீமையும் நின்னருள் தானே
நன்றெது தீதெது என்றறியேனே
கன்மம் ஜன்மமும் வேரற நின்னருள்
கடைக் கண் நோக்கி என் இடுக்கண் தீர்த்தருளும் (தாயே)
2.50. ராகம் பேகடா தாளம் ஆதி 1 களை
பல்லவி
சங்கரி தயா கரீ-சரணம் நின் சரணம் அம்பா சிவ (சங்கரி)
அனுபல்லவி
எங்கும் நிறை பரி |